Relax Please: FB page daily Posts |
- :) Relaxplzz
- அருமையான முப்பரிமாண ஓவியம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- :) Relaxplzz
- இந்த பசுமை சூழலை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y) இடம்: குமரி மாவட்டம்
- பித்தப்பை கற்களை நாமாகவே அகற்றலாம் புற்றுநோய்க்கு அடிகோலும் பித்தப்பை கற்களை, ந...
- இந்தியாவின் பூர்வீக குடிகள் தமிழர்களே!!! பாரத பெரும் தேசத்தின் பழங்குடியினர் நம...
- :) Relaxplzz
- வாத்தியார். இங்க ஒருத்தன் கரடியா கத்திட்டு இருக்கேன் அது காதில விழல அங்க என்னடா...
- விளம்பரத்தில் வராத உணவு பொருள் நீங்கசாப்பிடுறீங்களா?? பெரும்பாலும் ஆரோக்கியமான...
- சோப்பினில் உலக கோப்பை உருவாக்கிய நண்பருக்கு பாராட்டுகள் (y) (y)
- :) Relaxplzz
- ;-) Relaxplzz
- :P புரிந்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து...
- சாதித்துக் காட்டிய கெஜ்ரிவால்.. வாழ்த்துக்கள்..! துடைப்பம்தான் எங்கள் கட்சியின...
- கொடுத்து வைத்தவர் யார் ? தாத்தாவா அல்லது பேராக்குழந்தாயா ?
- பொண்டாட்டி கூட சண்ட, ஆம்பிள்ள நான் அழுதுட்டு அம்மா வீட்டுக்கு போன நல்லாவா இருக்க...
- பாதாம் கீர் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- (y) Relaxplzz
- அப்படியா :P
- ஆட்கள் தேவை:- வருகிற பிப்ரவரி மாதம் 14 ந்தேதி காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு ஒரு...
- வீடு வீடாகப் பொருட்களை வினியோகிக்கும் அந்தச் சிறுவனுக்கு ரொம்பப் பசித்தது. எதையா...
- கன்னம் சுருங்க நீயும், மீசை நரைத்திட நானும், வாழ்வின் கரைகளைக் காணும் காலம் வரை...
- :) Relaxplzz
- ஜெல் பேனாவால் புள்ளிகள் வைத்தே வரையப்பட்ட ஓவியம் கிட்டத்தட்ட 8 மாதம் பிடித்ததாம்...
- :) Relaxplzz
- :) Relaxplzz
- குழந்தையா இருக்கும் போது எழுத்துக்கள் எழுதினேன்........... மாணவனா ஆனதுக்கு அப்ப...
Posted: 11 Feb 2015 09:45 AM PST |
Posted: 11 Feb 2015 09:38 AM PST |
Posted: 11 Feb 2015 09:30 AM PST |
Posted: 11 Feb 2015 09:20 AM PST |
Posted: 11 Feb 2015 09:12 AM PST பித்தப்பை கற்களை நாமாகவே அகற்றலாம் புற்றுநோய்க்கு அடிகோலும் பித்தப்பை கற்களை, நாமே இயற்கை வழியில் அகற்றலாம். மேலும் இந்த வழிமுறை, வலுவிழந்த நமது கல்லீரலை, புத்துணர்வு பெறவும் உதவுகிறது. ஐந்து நாட்களுக்கு, தொடர்ந்து 4 கிளாஸ் ஆப்பிள் ஜூசையோ அல்லது தினமும் 4 அல்லது 5 ஆப்பிள்களை உண்டுவரவும். பித்தப்பையில் உள்ள கற்களை மிருதுவாக்க, ஆப்பிள் ஜூஸ் உதவும். ஆறாம் நாளில், மாலை 6 மணி மற்றும் இரவு 8 மணிக்கு சுடுநீரில் எப்சம் உப்பை (மெக்னீசியம் சல்பேட்) கலந்து குடிக்கவும். எப்சம் உப்பு, பித்தப்பை குழாய் திறப்பை எளிதாக்கும். இரவு 10 மணிக்கு, அரை கோப்பை ஆலிவ் எண்ணெய் அல்லது எள்ளு எண்ணெயை, அதே சம அளவுள்ள எலுமிச்சை சாறுடன் நன்கு கலக்கி குடிக்கவும். இது பித்தப்பை குழாய் வழியே, கற்கள் வெளியேற வழிவகுக்கும். அன்றைய தினத்தில், இரவு நேர உணவை தவிர்க்க வேண்டும். மறுநாள் காலை, இயற்கை உபாதையில், பச்சை நிற பித்தப்பை கற்கள் வெளியேறி இருப்பதை காணலாம். /வைகைவாசி/ Relaxplzz |
Posted: 11 Feb 2015 09:00 AM PST இந்தியாவின் பூர்வீக குடிகள் தமிழர்களே!!! பாரத பெரும் தேசத்தின் பழங்குடியினர் நம் தமிழரே. இன்று நம்மை ஆண்டு கொண்டிருக்கும் இனக்கள் எல்லாம் நமக்கு பின்னர் பஞ்சம் பிழைக்க வந்தவர்களே..,! கண்டிப்பாக பகிரவும்.. கடந்த 26-9-2009இல் மலேசிய நாளிகைகளில் வெளிவந்த செய்தி இது. 'நேச்சர்' என்ற ஆங்கில ஏட்டில் வெளிவந்த இந்தச் செய்தியைத் தமிழ் நாளிகைகளும் வெளியிட்டுள்ளன. இந்தியா என்று இன்று சொல்லப்படுகின்ற நாட்டின் ஆதி(பூர்வீக) குடிமக்கள் தென்னிந்தியர்களே அதாவது தமிழர்களே என்றும், இன்றைக்கு இந்தியாவை ஆதிக்கம் செய்யும் வட இந்திய இனம் பிற்காலத்தில் இந்தியாவில் குடியேறியவர்கள் என்றும் இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இப்படியொரு உண்மையை ஒரு தமிழன் கண்டறிந்து சொல்லியிருந்தால் இப்படி நாளிதழ் செய்தியாக வந்திருக்காது. காலங்காலமாக தமிழரை வல்லாதிக்கம் செய்துவருபவர்கள் இந்தச் செய்தியைகூட இந்நேரம் இருட்டடிப்புச் செய்திருப்பார்கள். எவனோ இருட்டடிப்புச் செய்வது இருக்கட்டும். வரலாற்று அறிவும் அறிவாராச்சிப் பார்வையும் கெட்டுப்போய்விட்ட தமிழர்களே இந்த ஆராய்ச்சி உண்மையை நம்ப மறுத்திருப்பார்கள்; மறுதளித்திருப்பார்கள். காலந்தோறும் காலத்தோறும் தமிழன் செய்து வந்திருக்கும் வரலாற்றுப் பிழையை இப்போதும் செய்திருப்பார்கள். ஆனால், இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு இந்த உண்மையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பவர்கள் தமிழர்கள் அல்லர். ஐதராபாத்தில் உள்ள மூலக்கூறு, மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையம், அமெரிக்காவின் ஆர்வர்டு பொது சுகாதார கல்லூரி, ஆர்வர்டு பிராட் கழகம், மாசசூசட்டு தொழில்நுட்பக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து இப்படியொரு ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வின் முடிவுகளை ஐதராபாத் மையத்தின் முன்னாள் இயக்குநரும், இந்த ஆய்வறிக்கையின் ஆசிரியருமான லால்ஜி சிங் என்பவரும் அதே மையத்தின் மூத்த அறிவியலாளர் குமாரசாமி தங்கராஜன் என்பவரும் மேற்கண்ட வகையில் ஆராய்ச்சி உண்மையை அறிவித்துள்ளனர். இவர்களின் ஆய்வின்படி, இந்தியாவின் தொன்மை இனங்களாக வட இந்தியரும் தென் இந்தியரும் (தமிழரும்) தான் என்பது தெளிவாகிறது. ஆனால், இந்த இரு தொன்மையான இந்தியர்களில், வடவர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மக்களிடனும் ஐரோப்பிய மக்களுடனும் மரபியல் அடிப்படையில் 40 முதல் 80 விழுக்காடு வரை ஒத்து இருக்கிறார்கள். அதாவது, அன்னியர்களின் மரபியல் கூறுகளோடு அதிகம் ஒத்துப் போகிறார்கள். அனால், தென்னவர்கள் உலகின் எந்த இன மக்களோடும் மரபியல் அடிப்படையில் தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். அதாவது, அன்னியரின் கலப்படம் அறவே இல்லாமல் (தூய்மையாக) இருக்கிறார்கள். இதன்மூலம், தென்னக மக்கள்தான், இந்திய நாட்டின் ஆதிமக்கள் அல்லது முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது. இந்திய நாட்டின் தொன்மையான இனம் எது? என்பது மீதான ஆய்விக் கிடைக்கப் பெற்றிருக்கும் இந்தப் புதிய முடிவுகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. காரணம், இதுவரை எழுதப்பட்டுள்ள வரலாற்றை மாற்றி எழுதக்கூடிய அளவுக்குச் சான்றுகள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த ஆய்வு முக்கியமான ஒன்றாகவும் அறிஞர்களின் விவாதத்திற்குரிய ஆய்வுப் பொருளாகவும் ஆகியிருக்கிறது. Relaxplzz ![]() |
Posted: 11 Feb 2015 08:56 AM PST |
Posted: 11 Feb 2015 08:52 AM PST |
Posted: 11 Feb 2015 08:50 AM PST வாத்தியார். இங்க ஒருத்தன் கரடியா கத்திட்டு இருக்கேன் அது காதில விழல அங்க என்னடா பேச்சு மாணவன். சாரி சார் எனக்கு கரடி பாஷை தெரியாது அதான் கிட்ட கேட்டுகிட்டுருந்தேன் ங்ஙே :P :P |
Posted: 11 Feb 2015 08:45 AM PST |
Posted: 11 Feb 2015 08:37 AM PST |
Posted: 11 Feb 2015 08:31 AM PST |
Posted: 11 Feb 2015 08:25 AM PST |
Posted: 11 Feb 2015 08:20 AM PST |
Posted: 11 Feb 2015 08:10 AM PST ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!. வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையல் அறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்த படி அமர்ந்திருந்தார். இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார். மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று, இதமாகக் கையைப் பிடித்து, "என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?" என்று கேட்டார். கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே? மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது. கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே? மனைவி: ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்) கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து "மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா..? இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?" என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா? மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன? கணவன் கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்!!! இதுக்கு அப்புறம் விழுந்த அடி, கேக்கவா வேணும்...!!! :P :P Relaxplzz |
Posted: 11 Feb 2015 08:00 AM PST சாதித்துக் காட்டிய கெஜ்ரிவால்.. வாழ்த்துக்கள்..! துடைப்பம்தான் எங்கள் கட்சியின் சின்னம். அரசியலில் நிறைந்துள்ள ஊழலை இந்த துடைப்பத்தை கொண்டு சுத்தம் செய்ய முடியும் என நம்புகிறேன்!' -2012ம் ஆண்டு இறுதியில் கட்சியை துவங்கி, 2013ம் ஆண்டு முதன் முதலாக டெல்லி சட்டமன்ற தேர்தலை சந்தித்த ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இப்படி அறிவித்த போது, பலரும் இதை கிண்டலடித்தனர். துடைப்பத்தை கூட கெஜ்ரிவால் விடவில்லையா? என தற்போதைய பிரதமர் நரேந்திரமோடி வெளிப்படையாகவே கிண்டல் அடித்தார். ஆனால் அந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில், வெற்றி பெற்று, டெல்லியின் முதல்வரானார் கெஜ்ரிவால். இப்போது மீண்டும் கெஜ்ரிவாலின் எழுச்சியும், துடைப்பத்தின் வெற்றியும் விஸ்வரூபம் எடுத்து தொடர.. இரண்டாவது முறை முதல்வராக இருக்கிறார் கெஜ்ரிவால். அரியானா மாநிலம், பிவானி மாவட்டத்தில் உள்ள சிவானி எனும் ஊரில் பிறந்த அரவிந்த் கெஜ்ரிவால், காரக்பூர் ஐ.ஐ.டி.யில் இயந்திரவியல் பொறியியல் பட்டதாரி. இந்திய குடியுரிமை பணிகளில் ஒன்றான ஐ.ஆர்.எஸ். எனும் இந்திய வருவாய்துறை பணியில் சேர்ந்து, டெல்லியில் வருமான வரி ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றினார். அந்த பணியின் போதே ஊழலுக்கு எதிரான போராட்டங்களை அவர் மேற்கொண்டதாக சொல்கின்றனர். அரசு பணியில் இருந்து கொண்டே போராடுவதில் உள்ள சிக்கலால், 2000ம் ஆண்டில் தனது பணியில் இருந்து தற்காலிகமாக விலகிய கெஜ்ரிவால், டெல்லியில் குடிமக்கள் இயக்கம் எனும் அமைப்பை துவக்கினார். நியாயமான, ஒளிவுமறைவற்ற அரசு அமைய வேண்டும் என போராடிய அவர், 2006ம் ஆண்டு தனது பணியில் இருந்து முழுமையாக விலகினார். அதன் பின்னர் தகவல் பெறும் உரிமைக்கான போராட்டத்திலும் பங்கேற்ற இவர், அந்த சட்டத்தை பற்றிய விழிப்புணர்வு பிரசாரங்களிலும் தன்னை ஈடுபடுத்தி வந்தார். இது போன்ற நடவடிக்கைகளால் பிரபல தனியார் தொலைக்காட்சியான சி என் என் -ஐபிஎன் தொலைக்காட்சி இவருக்கு 2006ம் ஆண்டு சிறந்த இந்தியருக்கான பட்டத்தை வழங்கியது. இந்த சூழலில்தான் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தலைமையில், ஊழல் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டார் கெஜ்ரிவால். பின்னர் அவரிடம் இருந்து பிரிந்து, 2012ம் ஆண்டு இறுதியில் ஆம் ஆத்மி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். தேர்தல் அரசியலுக்கு வந்த பின்னர் இவரது நடவடிக்கைகள் எல்லாம் மக்களை திரும்பி பார்க்க வைத்தது. 2013ம் ஆண்டு நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில், அரசியல் பின்னணி இல்லாதவர்களை வேட்பாளர்களாக போட்டியிடச் செய்தது அதில் மிக முக்கியமான ஒன்று. தேர்தலில் போட்டி என அறிவித்த போது அரசியல் கட்சிகள், ஆம் ஆத்மியை அலட்சியமாகத்தான் பார்த்தது. டெல்லி தேர்தலில் அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரசுக்கும், பி.ஜே.பி.க்குமிடையேதான் போட்டி இருக்கும் என்ற கருத்து நிலவியது. இந்த சூழலில் வெளியான கருத்து கணிப்புகள் எப்படியும் 15 முதல் 20 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெல்லும் என சொல்ல அதிர்ந்து போனது காங்கிரசும், பி.ஜே.பி.யும். ஆனால் அதை விட அதிக இடத்தில், அதாவது மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 28 தொகுதிகளில் வென்றது ஆம் ஆத்மி. 15 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை பல ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார் கெஜ்ரிவால். பி.ஜே.பி. 31 தொகுதியில் வென்ற போதும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைக்க முடியவில்லை. ஆம் ஆத்மிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தர காங்கிரஸ் முன்வர, அதையேற்று டெல்லியில் ஆட்சி அமைத்தது ஆம் ஆத்மி. முதல்வராக பதவியேற்றார் கெஜ்ரிவால். பதவியேற்ற முதல் நாளிலேயே நிதி, மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய கெஜ்ரிவால், அதிரடி மின்கட்டண குறைப்பு, இலவச குடிநீர் திட்டம், வீடு இல்லாதவர்கள் பயன்படுத்த பழுதடைந்த பஸ்கள், ஊழலை ஒழிக்க கடுமையான நடவடிக்கை என இவரது நடவடிக்கைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டெல்லி காவல்துறையை கண்டித்து, கெஜ்ரிவால் போராட்டம் நடத்த அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸை கோபப்படுத்தியது. இந்த சூழலில் டெல்லி சட்டமன்றத்தில் ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முயன்றார் கெஜ்ரிவால். மொத்தமுள்ளா 60 பேரில், 47 பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, போதிய ஆதரவு கிடைக்காமல், தீர்மானம் தோல்வியை தழுவியது. இதையடுத்து ஜன்லோக்பால் மசோதாவை காரணம் காட்டியே, ஆட்சி அமைத்து 49 நாட்களில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால். தொடர்ந்து, 2014ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், வாரணாசி தொகுதியில், பி.ஜே.பி.யின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட்ட கெஜ்ரிவால் அங்கு தோல்வியை தழுவினார். டெல்லியில் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததையடுத்து, யாரும் ஆட்சி அமைக்க முன்வரவில்லை. இதையடுத்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. டெல்லியில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க மறுக்கவே, சட்டசபையை கலைத்து விட்டு மீண்டும் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆம் ஆத்மியின் சார்பில் இந்த தேர்தலில் மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் அரவிந்த் கெஜ்ரிவால். நாடாளுமன்ற தேர்தல், சில மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களில் வென்ற தன்னம்பிக்கையில், மோடி அலை, மோடி மேஜிக் என களமிறங்கிய பி.ஜே.பி, முதல்வர் வேட்பாளராக ஆம் ஆத்மியில் இருந்து விலகிய, முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண் பேடியை அறிவித்தது. தேர்தலில் ஆம் ஆத்மி - பி.ஜே.பி.யிடையே கடும் போட்டி நிலவும் என்பன போன்ற கருத்துகள்தான் கருத்து கணிப்பில் வெளியானது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், மோடி... மோடி... என வாய் வலிக்க வலிக்கப் பேசிய பி.ஜே.பி.யினருக்கு சரியான அடி கொடுத்துள்ளனர் டெல்லி மக்கள். காங்கிரஸ், பி.ஜே.பி.யின் முதல்வர் வேட்பாளர்கள் உட்பட அனைவரும் தோற்க, போட்டியிட்ட 70 இடங்களில், 67 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. கிரண்பேடி உட்பட முக்கிய நிர்வாகிகள் பலரும் தோல்வியை தழுவ, வெறும் 3 பேர் மட்டுமே பி.ஜே.பியின் தரப்பில் வெற்றி பெற்றுள்ளனர். மறுபுறம் காங்கிரசை முழுமையாக துடைத்தெறிந்து விட்டனர் டெல்லி மக்கள். 95 சதவீத இடங்களில், வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகிறார் கெஜ்ரிவால். நிச்சயம் இது வரலாறு காணாத தேர்தல் வெற்றிதான். 49 நாட்களில் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தபோது, அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தனக்கு வாக்களித்த மக்களைப்பற்றி கவலைப்படாமல் இருப்பதா? என பெரும் கேள்வியும் எழுந்தது. ஆனால் இவற்றை எல்லாம் மீறி 95 சதவீத இடங்களை ஆம் ஆத்மிக்கு வழங்கி, கெஜ்ரிவாலை மீண்டும் முதல்வராக்கியுள்ளனர் டெல்லி மக்கள். அதுவும் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு அனுப்பியுள்ளது என்பது மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. இளம் முதல்வர் என அடையாளத்துடனும், பெருமையுடனும் இரண்டாவது முறை டெல்லியின் முதல்வராக பதவியேற்கும் கெஜ்ரிவால், தேர்தலுக்கு பின்னால் பல முக்கிய சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. மக்களை பற்றி கவலைப்படாமல் ராஜினாமா செய்தவர் என்ற இமேஜை உடைக்க 5 ஆண்டுகள் அவர் எந்த சிக்கலும் இல்லாமல் பதவியை தொடர வேண்டியது அவசியம். "மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை மக்கள் ஏற்படுத்தித் தந்தால், தொடர்ந்து 5 ஆண்டுகள் பதவியில் இருப்பேன், இடையில் ஓட மாட்டேன்' என சத்தியம் செய்யாத குறையாக அரவிந்த் கெஜ்ரிவால் சொன்னதை, அப்படியே நடத்தி காட்ட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அடுத்து ஜன்லோக்பால் சட்டத்தை நிறைவேற்றுவது, மின் கட்டணத்தை குறைப்பது, இலவச தண்ணீர் போன்ற ஏற்கனவே கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளை செயல்படுத்த வேண்டிய கட்டாயமும், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர வேண்டிய கட்டாயமும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உள்ளது. மக்கள் கெஜ்ரிவாலிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள் என்பது 95 சதவீத இடங்களில் வெற்றி பெற வைத்ததன் மூலம் மக்கள் உணர்த்தி விட்டார்கள். இனி மக்களின் ஆதரவை நிலை நிறுத்திக்கொள்ள அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய மிகப்பெரிய சவால் கெஜ்ரிவாலின் முன் இருக்கிறது. -ச.ஜெ.ரவி Relaxplzz ![]() |
Posted: 11 Feb 2015 07:52 AM PST |
Posted: 11 Feb 2015 07:45 AM PST பொண்டாட்டி கூட சண்ட, ஆம்பிள்ள நான் அழுதுட்டு அம்மா வீட்டுக்கு போன நல்லாவா இருக்கும் அதான் அம்மா கடைக்கு வந்துட்டேன். - kundu kuzhanthai |
Posted: 11 Feb 2015 07:38 AM PST |
Posted: 11 Feb 2015 07:30 AM PST |
அப்படியா :P Posted: 11 Feb 2015 07:20 AM PST |
Posted: 11 Feb 2015 07:10 AM PST ஆட்கள் தேவை:- வருகிற பிப்ரவரி மாதம் 14 ந்தேதி காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு ஒரு காதலி தேவை.., அதற்காக இப்போதே,காதலி தேர்வு செய்யப் பட உள்ளது, விரும்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்....!! குறிப்பு; 1.அனுபவம் இல்லாதவர் விரும்பத்தக்கது.., 2.அடக்கமான பொண்ணாக இருத்தல் அவசியம்..., 3.மேக்கப் போட கூடாது.., 4.வேலைக்கு போக கூடாது.., 5.மாடர்ன் ட்ரஸ் பண்ணக்கூடாது...., 6.கொஞ்சம் அழகு இருத்தல் வேண்டும்.., 7.அடிக்கடி மெளன விரதம் இருக்கனும்.., 8.நிறைய தோழிகள் இருத்தல் வேண்டும்.., 9.அப்பா செல்லமாக இருத்தல் வேண்டும்.., 10.முக்கிய குறிப்பு.., வங்கி கணக்கு ஒரு லட்சத்திற்கு மேல் இருத்தல் நலம்..!! இந்த தகுதிகள் உள்ள அனைத்து பொண்ணுங்களும் விண்ணப்பிக்கலாம்...., விண்ணப்ப கடைசி தேதி.,13.02.2015 இப்படிக்கு, காதலிக்காக ஏங்கும் ஒரு பாவம் பையன் ;-) ;-) Relaxplzz |
Posted: 11 Feb 2015 07:02 AM PST வீடு வீடாகப் பொருட்களை வினியோகிக்கும் அந்தச் சிறுவனுக்கு ரொம்பப் பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் அவனிடம் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிடக் கேட்கலாம் என நினைத்தான். கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். அவனுக்கோ சாப்பாடு கேட்க ரொம்பக் கூச்சம்.'கொ… கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?' தயக்கத்துடன் கேட்டான். அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியைக் கவனித்தாள். உள்ளே போய் ஒரு கப் பால் கொண்டு வந்து கொடுத்தாள்.பாலைக் குடித்துப் பசியாற்றிய சிறுவன் கேட்டான், `நான் எவ்வளவு கடன்பட்டிருக்கேன்?'`கடனா? அப்படியொன்றுமில்லை. அன்பான செயலுக்கு விலை இல்லை என அம்மா சொல்லியிருக்கிறார்…', அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள்.' ரொம்ப ரொம்ப நன்றி…' சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான். ஆண்டுகள் கழிந்தன. அந்த சிறுவன் நகரிலேயே பெரிய டாக்டர் ஆனான். அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது. அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனை வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்தப் பெண்ணின் ஊரைப் படித்ததும் அவருக்குள் சின்ன மின்னல். விரைவாக அறைக்குப் போய் அந்தப் பெண்ணைப் பார்த்தார். அவளேதான். தனது பசியாற்றிய நல்ல உள்ளம் படைத்தவள். அன்று முதல் தனது அத்தனை உழைப்பையும் செலுத்தி அவளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்குப் பின் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்தப் பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படிக் கட்டப் போகிறேனோ எனும் பதற்றத்துடன் அதைப் பிரித்த அவள் திகைத்துப் போனாள். அந்த பில்லின் கடைசியில் எழுதப்பட்டிருந்தது, `ஒரு கப் பாலில் உங்கள் கடன் எல்லாம் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்.' அவளுடைய கண்கள் கசிந்தன. மனிதனுக்கு இருக்க வேண்டிய மகத்தான குணாதிசயங்களில் ஒன்று நன்றி.... :) :) Relaxplzz ![]() # படித்ததில் பிடித்தது # - 5 |
Posted: 11 Feb 2015 06:52 AM PST கன்னம் சுருங்க நீயும், மீசை நரைத்திட நானும், வாழ்வின் கரைகளைக் காணும் காலம் வரை தொடர்வதுதான் காதல். வரையறைக்குள் கொண்டுவர முடியாது. நான்கு வரிகளுக்குள் அடக்கிவிட முடியாதது . - மதன் கார்க்கி ![]() எழுத்தாளர் வரிகள் சில |
Posted: 11 Feb 2015 06:47 AM PST |
Posted: 11 Feb 2015 06:39 AM PST ஜெல் பேனாவால் புள்ளிகள் வைத்தே வரையப்பட்ட ஓவியம் கிட்டத்தட்ட 8 மாதம் பிடித்ததாம் இந்த ஓவியருக்கு இதனை உருவாக்குவதற்கு . வரைந்தவர்-விஜய் ஹெக்டே.. ![]() ஓவியங்கள் - 2 |
Posted: 11 Feb 2015 06:31 AM PST |
Posted: 11 Feb 2015 06:22 AM PST |
Posted: 11 Feb 2015 06:11 AM PST குழந்தையா இருக்கும் போது எழுத்துக்கள் எழுதினேன்........... மாணவனா ஆனதுக்கு அப்புறம் ஹோம் ஒர்க் எழுதினேன்........... கல்லூரிக்கு போனதுக்கு அப்புறம் கவிதைனு கண்டபடி எழுதினேன்............ அலுவலகத்துக்கு போனதுக்கு அப்புறம் ரிஜிஸ்டர்ல எழுதினேன்.......... கல்யாணத்துக்குஅப்புறம் மளிகை லிஸ்ட் எழுதறேன்.......... குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் அதோட ஹோம் ஒர்க் எழுதறேன்......... இப்படி பல காலமா நான் எழுதிகிட்டு இருந்தாலும் யாரும் என்னை எழுத்தாளர்னு ஒத்துக்கவே மாட்டேங்கிறாங்களே.......... என்ன உலகம்டா இது............ :O :O - Ravi Swaminathan. |
Posted: 11 Feb 2015 06:07 AM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment