Relax Please: FB page daily Posts |
- ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில். முட்டை மதிப்பெண் கிடைத்ததால் பெரும் அதிர்ச்சி ஆன...
- பழந்தமிழரின் கடல் மேலாண்மை ’ஒரிசா பாலு’ என்னும் கடல்சார் ஆராய்ச்சியாளரின் கடல்...
- # படித்ததில் பிடித்தது # அம்மா சொன்ன 'சுரீர்' வார்த்தை? அவன் அன்றைக்கும் குடித...
- COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா? நாம் எத்தனையோ ஆண்டுகளாக COMPUTER...
- :) Relaxplzz
- குடும்ப தொப்பை ;-)
- 2050 தமிழகம் ஒரு கற்பனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 100-வது வயதை முன்னிட்டு...
- அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்? படிச்சா செம கடுப்பாகிவிடுவீ...
- நம் உடலைப் பற்றிய உண்மைகள்: குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள்...
- வில்லேஜ் விஞ்ஞானி ;-)
- :) Relaxplzz
- தமிழ்நாடு போலீஸ் மாதிரி வருமா.. ;-) ;-)
- :) Relaxplzz
- # நாத்து நடுறப்ப வித நெல்லு அங்கங்க செதறி வீணாப் போயிருது. # நாத்தப் புடுங்கி ந...
- இந்தியாவின் தலை எமுத்து இப்படிதான்னா யாரால மாத்த முடியும்
- பிறப்பு ஒரு முறை இறப்பு ஒரு முறை காதல் ஒரு முறை (But) ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞...
- மூளைச்சாவு அடைந்த மதுராந்தகம் வாலிபரின் இதயம் மும்பை பெண்ணுக்கு பொருத்தப்பட்டது...
- " வெற்றி பெறுபவர்கள் வித்தியாசமான பல செயல்களில் ஈடுபட மாட்டார்கள். ஆனால் ஒரு செய...
- அருமையான ஓவியம்
- :) Relaxplzz
- ரயிலில் இரவு நேரத்தில் எல்லாரும் தூங்கியபின்னும் இரண்டு இளம் கல்லூரி மாணவிகள் சத...
- மன உறுதி !!! ஒரு விவசாயி ஒரு குதிரையையும், ஒரு ஆட்டையும் வளர்த்து வந்தான். அந்த...
- இதில் எந்த வரிசையில் எட்டு இருக்கிறது என்பதை சரியாக சொன்னால் கிட்டு மாமா கையால ல...
- :) Relaxplzz
- ஆண்கள் தான் 'பெஸ்ட்' 1. பொண்ணுங்க எனி ஹெல்ப்னு (உதவி) கேட்டாக்கூட பரவாயில்லன்னு...
- அட ஒன்னுமில்லீங்க... நம்ம எர்வோ-மேட்டின தலையிலதடவும்போது ஒருசொட்டு தவறிப்போயி ம...
- ஏழைகளின் பெயரை அரிசியிலும்... பணக்காரர்களின் பெயரை அரிசி மூட்டையிலும் எழுதிவிடுக...
- (y) Relaxplzz
- கவுண்டமணி வீட்டு வாசலில் செந்தில் நிற்பதாக நினைத்துக் கொள்ளுங்கள் .... செந்தில்...
- உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்..... எத்தனையோ வரலாற்று உண...
Posted: 02 Jan 2015 09:10 AM PST ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில். முட்டை மதிப்பெண் கிடைத்ததால் பெரும் அதிர்ச்சி ஆனான்..! காரணம் அவன் அனைத்து கேள்விகளுக்கும்.. சரியாக பதிலளித்திருப்பதாகவே நம்பினான்..! சரியான பதிலை எழுதியதாகவே.. அந்த மாணவன் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம்.. வாதாடினான்..! சரி.. அப்படி என்ன தான் கேள்விகளுக்கு பதில் அளித்தான்.. என பார்ப்போம்..! கேள்வி;- எந்த போரில் திப்பு சுல்தான் உயிரிழந்தார்..? பதில்;- அவரது கடைசி போரில்..! கேள்வி;- இந்திய சுதந்திரத்திற்கான பிரமாணம் எங்கே கையெழுத்திடப்பட்டது..? பதில்;- காகிதத்தின் அடிப் பகுதியில்..! கேள்வி;- சுப நிகழ்ச்சிகளில் வாழை மரங்கள் எதற்காக கட்டப்படுகிறது..? பதில்;- அவைகள் கீழே விழாமல் இருப்பதற்காக.. கட்டப்படுகிறது..! கேள்வி;- விவாகரத்திற்கான முக்கிய காரணம் என்ன..? பதில்;- திருமணம் தான்..! கேள்வி;- இரவு- பகல் எவ்வாறு ஏற்படுகிறது..? பதில்;- கிழக்கே உதித்த சூரியன் மேற்கில் மறைவதாலும்.. மேற்கில் மறைந்த சூரியன் மீண்டும் கிழக்கில் உதிப்பதாலும் இரவு- பகல் ஏற்படுகிறது..! கேள்வி;- மகாத்மா காந்தி எப்போது பிறந்தார்..? பதில்;- அவரது பிறந்த நாளன்று..! கேள்வி;- திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா..? பதில்;- இல்லை.. திருமணங்கள் செய்யும் அவரவர் வீட்டில் கேள்வி;- தாஜ்மகால் யாருக்காக யார் கட்டினார்..? பதில்;- சுற்றுலா பயணிகளுக்காககொத்தனார்களால் கட்டப்பட்டது..! கேள்வி;- 8மாம்பழங்களை 6 பேருக்கு எப்படி சரியாக பிரித்து கொடுப்பது..? பதில்;- ஜூஸ் போட்டு.. 6 டம்ளர்களில் சரியான அளவாக ஊற்றி கொடுக்கலாம்..! மாணவன் சரியாக தானே பதிலளித்துள்ளான்..??? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்......... :P :P Relaxplzz |
Posted: 02 Jan 2015 09:00 AM PST பழந்தமிழரின் கடல் மேலாண்மை 'ஒரிசா பாலு' என்னும் கடல்சார் ஆராய்ச்சியாளரின் கடல் ஆமைகள் பற்றிய ஆய்வில் தமிழர்கள் பற்றிய பல அறிய உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அவருடைய ஆய்வறிக்கை "தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்" நடத்திய "பழந்தமிழரின் கடல் மேலாண்மை" கருத்தாய்வு கூட்டத்தில் விளக்கப் பட்டது. அந்த ஆய்வறிக்கையின் சாராம்சம் பின்வருமாறு- கடல் வாழ் உயிரனமான ஆமைகள் கூட்டம் கூட்டமாக முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக வருடா வருடம் பல்லாயிரம் மையில்கள் கடந்து தமிழகம் மற்றும் ஒடிசா மாநில கடற்கரைகளில் தஞ்சம் புகுவது பலர் அறிந்த விஷயம். இந்த ஆமைகள் பற்றிய ஆய்வில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரிய வந்திருக்கிறது. சராசரியாக ஒரு கடல் ஆமையால் ஒரு நாளைக்கு 85கி.மி தூரமே நீந்தி கடக்க முடியும் ஆனால் இவ்வாமைகள் கடந்து வந்ததோ பல்லாயிரம் மையில்கள்! அதுவும் குறுகிய காலத்தில்!! எவ்வாறு என்று சில புதிய தொழில் நுட்பங்களின்(RFID-செயர்கைக்கோள் சாதனம்) RFIDஉதவியுடன் ஆராய்ந்த போது ஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாயும் நீரோட்டங்களின் உதவியுடன் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீந்தாமல் மிதந்து கொண்டு பயணிக்கும் விஷயம் தெரிய வந்திருக்கிறது. இப்படி பயணம் செய்யும் ஆமைகளை செயர்கைகோளின் மூலம் பின்தொடர்ந்த போது மியான்மர்(பர்மா), மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள், ரஷ்யா, மெக்சிகோ, ஐஸ்லேண்ட், ஆப்ரிக்கா என பல உலக நாடுகளின் கடற்கரைகளுக்கு ஆராய்ச்சியாளர்களை இட்டு சென்றுள்ளன. அப்படி அவை கடந்த கடற்கரைகளை ஆராய்ந்த கலிங்க பாலுவிற்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்த்து. ஆமைகள் தொட்டுச் சென்ற பல கடற்கரைகளில் துறைமுகங்களும் அவற்றில் 53 இடங்களின் பெயர்களும், அதன் மக்களும், பண்பாடும், மொழியும் ஏதாவது ஒரு வகையில் தமிழின் தாக்கத்தோடு இருந்திருக்கிறது. அந்த கடற்கரைகளில் உள்ள ஊர்கள் சிலவற்றின் பெயர்கள் உங்கள் பார்வைக்கு: ஊர் பெயர்களும் அந்த நாடுகளும்: தமிழா-மியான்மர் சபா சந்தகன் – மலேசியா கூழன், சோழவன், ஊரு, வான்கரை, ஓட்டன்கரை, குமரா- ஆஸ்திரேலியா கடாலன் – ஸ்பெயின் நான்மாடல், குமரி,- பசிபிக் கடல் சோழா, தமிழி பாஸ் –மெக்சிகோ திங் வெளிர்- ஐஸ்லாந்து கோமுட்டி-ஆப்ரிக்கா இப்படி அந்த ஆமைகள் சென்ற கடற்கரை நகரங்களின் பெயர்களும் ஒரு சில பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினத்தினரின் மொழி, பண்பாடு ஆகியன தமிழோடு தொடர்புள்ளதாக இன்றளவும் இருக்கின்றன. இன்னொரு சுவாரஸ்யிமான விஷயம். 'சர்க்கரை வள்ளிக்கிழங்கு'(sweet potato) என்பது தமிழ் நாட்டில் விளையும் கிழங்கு வகை. நம் மீனவர்கள் கடலோடும்போது பல நாள் பசி தாங்க இவற்றையே உணவாக கொள்ளும் வழக்கம் இன்றளவும் உள்ளது. இதே வழக்கத்தை தமிழுடன் தொடர்புடையதாக கருதப்படும் பல பழங்குடியின மக்கள் பின்பற்றுகின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் மியானமர், இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவின் சில பகுதி என பல இடங்களில் நம் சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பெயர் 'குமரா'!! பிசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவில் வாழும் ஒரு குறிப்பிட்ட இனமக்கள் உபயோகப்படுத்தும் படகின் பெயர் 'திரி மரம்'. அதில் உள்ள நடு பாகத்தின் பெயர் 'அம்மா' வலது பாகம் 'அக்கா' இடது பாகம் 'வக்கா'. அடி பாகம் 'கீழ்'. நியுசிலாந்து பகுதியில் 1836ஆம் வருடம் ஒரு பழங்குடியினர் குடியிருப்பில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட இரும்பாலான மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல் விக்கிபிடியாவில் உள்ளது. அதை படிக்க http://en.wikipedia.org/ wiki/Tamil_bell சொடுக்கவும். இப்படி தமிழுடன் தொடர்புடைய பல விஷயங்களை விஷயங்களை மேலும் பல வருடங்கள் ஆராய்ந்த கலிங்க பாலு அவர்களின் ஆராய்ச்சி முடிவில் பழந்தமிழர்கள் தம்முடைய கடல் பயணங்களுக்கும் படையெடுப்புகளுக்கும் ஆமைகளை வழிகாட்டிகளாக (Navigators) பயன்படுத்தி பல்லாயிரம் மைல்கள் கடந்து பல நாடுகளில் கோளோச்சிருப்பது ஆதாரப் பூரவமாக நிரூபனமாகியிருக்கிறது. இது பற்றி அவர் பல ஆதாரங்களை முன் வைத்திருக்கிறார். அடுத்த மாதம் இது பற்றிய புத்தகம் அவர் வெளியிட இருப்பதால் நான் பல விஷயங்களை இங்கே பகிர இயலாது. கலிங்க பாலு அவர்கள் எந்த ஒரு அரசு உதவியுமில்லாமல் இத்தனை ஆண்டுகள் இந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இப்போது தான் ஒரு நிறுவனம் நிறுவி அவருடைய ஆராய்ச்சியை தொடர்ந்து வருகிறார். இது பற்றிய ஆர்வமுள்ளவர்கள் அவருக்கு உதவலாம். அவருடைய இமெயில் முகவரி -kaling...@yahoo.co.in நான் கலந்துகொண்ட அந்நிகழ்ச்சியில் என்னை வருத்தப் பட வைத்த விஷயம், அரங்கம் நிறைய தமிழ் ஆர்வலர்கள் குழுமியிருந்தனர். ஆனால் பெரும்பாலும் நரைமுடிகளையே காண முடிந்த்து. மொத்தமே 10 இளைஞர்களே என் கண்ணில் பட்டனர். அதிலும் மூவர் ஒலி ஒளி அமைப்பாளர்கள். நண்பர்களே நான் அந்நிகழ்ச்சி முடிந்ததும் அதன் ஒருங்கினைப்பாளர்களிடமும் கலிங்க பாலுவிடமும் தனிப்பட்ட முறையில் உரையாடிய போது Facebookகில் நம் சங்கத்தை பற்றியும் நம்முடைய தமிழார்வத்தை பற்றியும் விளக்கி நம்மால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்வதாக சொன்னேன். அதற்கு அவர்கள் சந்தோஷப் பட்டு ஒரே ஒரு உதவி மட்டுமே கேட்டனர். இளைஞர்களிடம் அதுவும் குறிப்பாக தமிழில் பேசுவதையே இழுக்காக கருதும் இளைஞர்களிடம் இந்த தகவல்களை கொண்டு செல்ல உதவ வேண்டும் என்றார்கள். நம்மால் முடிந்தவரை இந்த தகவலை பகிர்ந்து நம்முடைய வரலாற்றை பலருக்கு கொண்டு செல்லுவோம். நன்றி. Relaxplzz ![]() |
Posted: 02 Jan 2015 08:50 AM PST # படித்ததில் பிடித்தது # அம்மா சொன்ன 'சுரீர்' வார்த்தை? அவன் அன்றைக்கும் குடித்து விட்டுத்தான் வீட்டுக்கு வந்தான். ஆனால் வழக்கமாக இல்லாமல் நிரம்ப குடித்திருந்தான். இரண்டு கண்களும் சிவந்து, உடம்பு முழுக்க வியர்வை வழிய, வாயின் இரண்டு ஓரங்களிலும் வாந்தி எடுத்த தடத்துடன், கொஞ்சம் தள்ளாடி தள்ளாடி இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தான். வாயிலிருந்து வெளிப்பட்ட குப்பென்ற மதுவாடை மதுவை விரும்பி குடித்த அவனுக்கே பிடிக்கவில்லை தான் போலும்... அந்த வாடை அவனுக்கு கொஞ்சம் கோபத்தையும், எரிச்சலையும் தந்தது. வீட்டு கதவை தொட்டு தடவி வலது பக்கத்தில் இருந்த காலிங்பெல்லை வேகமாக அழுத்தினான். வீட்டுக்குள் விளக்கு எரிந்தது. கதவை திறந்து கொண்டு அவனுடைய வயதான அம்மா நின்று கொண்டிருந்தாள். "ஏம்பா...இவ்ளோ லேட்டு..?" என்று வீட்டின் முன்பக்கத்தில் இருந்த கடிகாரத்தை பார்த்தபடியே மகனை உள்ளே கூட்டிக்கொண்டு போனாள். கடிகாரம் மணி நள்ளிரவு பனிரெண்டரை என்று காட்டியது. இல்லமா...கொஞ்சம் வேலை அதிகம் என்று அவன் சொல்லி சமாளித்தாலும் அவன் கூடவே சேர்ந்து வரும் மதுவின் வாடை அவன் தாமதமாக வந்த காரணத்தை அவளுக்கு உணர்த்தியது. அவள் எதையும் அவனிடம் கேட்டுக்கொள்ளவில்லை. அவன் கைப்பையை வாங்கி ஒரு மூலையில் வைத்து விட்டு அவனை கிணற்றடிக்கு அழைத்து சென்று அவன் ஆடைகளை களைந்து விட்டு, அவன் உடல் முழுவதுமாய் நனையும் படி தண்ணீரை வாரி இரைத்து ஊற்றினாள். நடு இரவு என்பதால் நீர் வழக்கத்தை விட அதிகமாக குளிரும் தான். ஆனால் அவன் இருக்கும் மனநிலையில் அதை அவனால் உணர முடியவில்லை. மகனை வீட்டுக்குள் கூட்டிச்சென்று நாற்காலியில் உட்கார வைத்து ஈரம் படிந்த அவன் தலையை நன்றாக துடைத்தெடுத்து அதிகபட்ச வேகத்தில் மின்விசிறியை ஓட விட்டு அவனுக்கு வேறு உடை மாற்றி விட்டாள். அவன் சாப்பிடுவதற்கு சாப்பாடு எடுத்து வந்து அவனை சாப்பிடச் செய்தாள். கூடவே எப்போதும் இரவில் மகனுடன் சேர்ந்து சாப்பிடும் அவள் அவனுடன் சேர்ந்து சாபிட்டாள். பின்பு மகனை ஒரு கட்டிலில் படுக்க வைத்து, உடம்பை முழுவதுமாக மூடும்படி உள்ள ஒரு போர்வையை அவன் மேல் போர்த்தி விட்டு அந்த கட்டிலின் பக்கத்தில் விரிக்கப்பட்டிருந்த தனக்கான பாயில் படுத்துக்கொண்டாள். காலை விடிந்தது... அம்மா வாசலில் மாட்டுசாணம் தெளிப்பது, கோலம் போடுவது, குடிப்பதற்கு தண்ணீர் எடுப்பது, காலை சிற்றுண்டி தயாரிப்பது என்று அவளுடைய வழக்கமான வேலைகளை செய்து கொண்டிருந்தாள்.. இவன் பல் துலக்குவது, காபி குடிப்பது, பேப்பர் படிப்பது, சிறுது தூரம் நடைபயிற்சி பழகுவது என்று வழக்கமான தனது வேலைகளை செய்து கொண்டிருந்தான். இவற்றையெல்லாம் முடித்து விட்டு குளித்து வேலைக்கு கிளம்ப தயாராகும் தன் மகனுக்கு உணவை ஒரு கிண்ணத்தில் அடைத்து தயாராக வைத்திருந்த அம்மாவிடம் அதை வாங்கிக்கொண்டு தனது இரண்டு சக்கர வாகனத்தை உதைத்து கிளம்பும் போது "அம்மா நான் போயிட்டு வர்றேன்" என்று அவன் விடைபெற, அதற்கு அம்மா "சரிப்பா பத்திரமா போயிட்டு வா... ஆனா நேத்து நைட்டு வந்த மாதிரி வராதப்பா... அத அம்மாவால தாங்கிக்க முடியாதுப்பா" என்று சொன்னாள். "நாகரீகம்" என்று வார்த்தையைகூட எழுத தெரியாத அம்மாவின் அந்த ஒரு வார்த்தை அவனுக்கு "சுரீர்" என்றிருந்தது. Relaxplzz ![]() |
Posted: 02 Jan 2015 08:40 AM PST COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா? நாம் எத்தனையோ ஆண்டுகளாக COMPUTER பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இன்னும் சிலருக்கு COMPUTER 'ன் முழு பெயர் தெரியவில்லை. அவர்களுக்காக இதை எழுதுகிறேன். C - Common O - Oriented M - Machine P - Particularly U - Used for T - Trade E - Education and R - Research COMPUTER - Common Oriented Machine Particularly Used for Trade Education and Research Palani @ Relaxplzz |
Posted: 02 Jan 2015 08:30 AM PST |
குடும்ப தொப்பை ;-) Posted: 02 Jan 2015 08:20 AM PST |
Posted: 02 Jan 2015 08:10 AM PST 2050 தமிழகம் ஒரு கற்பனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 100-வது வயதை முன்னிட்டு பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி அரசியலுக்கு வருவது பற்றி தெளிவான ஒரு முடிவு எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையை ஆறு மாத காலத்திற்குள் சுமூகமாக தீர்த்து வைக்க மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. 35 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன மலேசிய விமானத்தை 'கேப்டன்' விஜயகாந்த் கண்டுப்பிடித்தார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான சாந்தனு, பேரறிவாளன், முருகன் ஆகியோரது தீர்ப்பு வழக்கு ஒத்திவைப்பு. உலகிலேயே அதிக மக்கள் தொகை உள்ள முதல் நாடான சீனாவின் சாதனையை இந்திய முறியடித்தது. நாளை முதல் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவிப்பு. 10,000, 20,000, 50,000 ரூபாய் மட்டுமே செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பால் விலை லிட்டருக்கு 800 ரூபாய் குறைப்பு. தாய்மார்கள் மகிழ்ச்சி. எந்த நிலையிலும் மருதநாயகம் படம் வெளியாகும். கமலஹாசன் தனது பேரனின் திருமண விழாவில் அறிவித்தார். இலங்கை கடற்படையினரால் 11 மீனவர்கள் சிறைப்பிடிப்பு. தமிழக கடலோரப் பகுதிகளில் பதட்டம் நீட்டிப்பு. வைகோ, நெடுமாறன் கண்டனம். அரசு வழங்கி வரும் மாணவ, மாணவிகளுக்கான இலவச கார் வழங்கும் திட்டத்தில், ஊழல் நடந்துள்ளதாக எதிர் கட்சியினர் வெளி நடப்பு. தாது மணல் விவகாரம் குறித்து 'சகாயம்' ஐ.ஏ.எஸ் அறிக்கையின் மீதுள்ள விசாரணை ஒத்திவைப்பு. தஞ்சாவூர் மாவட்டத்தில் வாழ்ந்த ஒரு விவசாயம் குடும்பம் கண்டுப்பிடிப்பு. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு 2g spectrum வழக்கில் கருனாநிதிக்கும் பங்கிருப்பதாக cbi சந்தேகம் Relaxplzz |
Posted: 02 Jan 2015 08:00 AM PST அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்? படிச்சா செம கடுப்பாகிவிடுவீர்கள்! உலக அளவில் 'கல்வியின் மெக்கா' என அழைக்கப்படுவது பின்லாந்து். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் எவ்வளவு மேம்பட்ட நிலையில் இருந்தாலும், அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான டாலர் என்ற மந்திரித்த தாயத்து வைத்திருந்தாலும், அவர்களால் கல்வியில் பின்லாந்துடன் போட்டிபோட முடியவில்லை. 'பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு' (OCED- organisation for economic co-operation and development) என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில், தங்கள் நாட்டு மாணவர்களின் கல்வித் திறன் குறித்த ஆய்வு அவ்வப்போது நடைபெறும். இதற்கு PISA-Programme for international students assessment என்று பெயர். மற்ற நாடுகள் விருப்பப்பட்டால், இதில் சேர்ந்துகொள்ளலாம். இந்த ஆய்வில் உலகின் மற்ற நாடுகள் பின்வரிசையில் இருக்க… பின்லாந்து எப்போதும் முன்வரிசையிலேயே இடம் பிடிக்கிறது. அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்? பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது. ஒன்றரை வயதில் ப்ளே சுகூல், இரண்டரை வயதில் ப்ரீ-கே .சி., மூன்று வயதில் எல்.கே.சி., நான்கு வயதில் யு.கே.சி என்ற சித்ரவதை அங்கே இல்லை. கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை. எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான். இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள் நடுவதால், அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் என எண்ணுவது மூடநம்பிக்கை. ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை. ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவுதான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் ஆய கலைகள் ௬௪ (64) க்கும் முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம். முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது; பிராக்ரசு ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது. தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம். ௧. கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை. ௨. சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை. ௩. இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை. ௪. மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம். ௫. ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார். ௬. ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது. ௭. முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம். கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும்… அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும். 'என் பொண்ணு இன்டர்நேசுனல் சுகூல்ல படிக்கிறா' என சீன் போட முடியாது. அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி அங்கு உத்தரவாதப்படுத்தப்பட்டு உள்ளது. அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர். ௮. அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர். 'டியூஷன்' என்ற அருவருப்பான கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை. ௯. தேர்வுகளை அடிப்படையாகக்கொள்ளாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர். இது எப்படி என்பது கல்வியாளர்களுக்கே புரியாத புதிர். அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்தது. உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது. மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை. பின்லாந்து கல்விமுறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர். உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர். நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது. ஆனால், இப்படி தங்களை நோக்கி வீசப்படும் புகழ்மாலைகளை பின்லாந்தின் கல்வியாளர்களும் அமைச்சர்களும் ஓடோடி வந்து ஏந்திக்கொள்வது இல்லை. 'பின்லாந்து கல்விமுறைதான் (Finnish Education system) உலகிலேயே சிறந்தது எனச் சொல்ல முடியாது. றிமிசிகி ஆய்வில் எல்லா நாடுகளும் பங்கேற்காத நிலையில் இப்படி ஒரு முடிவை வந்தடைய முடியாது. எங்களைவிட சிறந்த கல்விமுறையும் இருக்க முடியும்' என்கிறார்கள். இல்லாத நாற்காலியைத் தேடி எடுத்து ஏறி அமர்ந்து, தனக்குத்தானே முடிசூட்டிக்கொள்ளும் தற்பெருமையாளர்கள் நிறைந்த உலகத்தில் இது பண்புமிக்க பார்வை; மதிக்கத்தக்க மனநிலை. கல்வியில் இருந்து நாம் பெறவேண்டிய சாராம்சம் இதுதான். இத்தகைய சிறந்த கல்விமுறையை உருவாக்கியதிலும், பராமரிப்பதிலும் பின்லாந்தின் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. சொல்லப்போனால் பின்லாந்து ஆசிரியர்கள்தான் இதற்கு முழுமுதல் காரணம். பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, நம் ஊர் ஐ.ஏ.எசு., ஐ.பி.எசு போல மிகுந்த சமூகக் கௌரவம் உடையது. அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ் நாள் லட்சியம். அதே நேரம் அங்கு ஆசிரியர் ஆவது அத்தனை சுலபம் அல்ல! மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களில் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும். பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி. ஒரு வருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி. ஏதாவது ஒரு பாடத்தில் புராசெக்ட், குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது, நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ், தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று… என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும். இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம் இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது! பாடம் படிப்போம் தாய்மொழி வழிக் கல்விப் பயிலும் பின்லாந்து போராளிகளிடம்… -சே.க. அருண் குமார் Relaxplzz ![]() "சமுக கட்டுரைகள்" - 1 |
Posted: 02 Jan 2015 07:50 AM PST நம் உடலைப் பற்றிய உண்மைகள்: குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும். நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது. நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது. நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது. பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன. நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம். நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம். நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு. நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு. முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது. மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது. ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது. இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது. மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன. ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன. நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது. நமது மூளை 80% நீரால் ஆனது. நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும். நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான். மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும். பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது. மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது. மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம், கண்கள் 31 நிமிடங்கள் | மூளை 10 நிமிடங்கள் | கால்கள் 4 மணி நேரம் | தசைகள் 5 நாட்கள் | இதயம் சில நிமிடங்கள் Relaxplzz ![]() தகவல் துணுக்குகள் |
Posted: 02 Jan 2015 07:47 AM PST |
Posted: 02 Jan 2015 07:40 AM PST |
Posted: 02 Jan 2015 07:35 AM PST |
Posted: 02 Jan 2015 07:30 AM PST |
Posted: 02 Jan 2015 07:26 AM PST # நாத்து நடுறப்ப வித நெல்லு அங்கங்க செதறி வீணாப் போயிருது. # நாத்தப் புடுங்கி நடும் போது கொஞ்சம் நாத்து நடவுல சிக்காம காணாப் போயிருது. # நட்ட நாத்து கள புடுங்குறப்ப சேந்து போயிருது. # வெளஞ்சு வந்தும் காத்தடிச்சதுல கொஞ்சம், பறவைக கொஞ்சம்னு நெல்லு கதிர விட்டுப் போயிருது. # அறுவடையில கொஞ்சம், கதிரடைக்கயில கொஞ்சம்னு சிந்தி கைக்கு வாராம போயிருது. # நெல்லவிச்சு அரிசியாக்கும் போது கொஞ்சம், மூடை கட்டி வீட்டுக்கு வரும் போது கொஞ்சம்னு மண்ணோட போயிருது. இப்படி எல்லா எடத்துலையும் தப்பிச்சு, நம்ம உசுரக் காப்பாத்த, நம்ம தட்டுல வந்து காத்திருக்குற சோற நாம எம்புட்டு கவனமா எடுத்து வீணாக்காம சாப்புடணும்? செய்யிறோமா? ஒரு பருக்கைச் சோறு ஒரு மனுசனோட ஒரு துளி வேர்வை. - மந்தை Relaxplzz ![]() "மனம் தொட்ட வரிகள்" - 2 |
Posted: 02 Jan 2015 07:20 AM PST |
Posted: 02 Jan 2015 07:15 AM PST பிறப்பு ஒரு முறை இறப்பு ஒரு முறை காதல் ஒரு முறை (But) ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ சாப்பாடு மட்டும் Daily 3 முறை »»»»»so enjoy பண்ணுங்க««««« நமக்கு சோறு தான் முக்கியம :P :P Relaxplzz |
Posted: 02 Jan 2015 07:00 AM PST மூளைச்சாவு அடைந்த மதுராந்தகம் வாலிபரின் இதயம் மும்பை பெண்ணுக்கு பொருத்தப்பட்டது சென்னை : மூளைச்சாவு அடைந்த மதுராந்தகம் வாலிபரின் இதயம், மும்பையைச் சேர்ந்த பெண்ணுக்கு வெற்றிகரமாக பொறுத்தப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் பழையனூர் யாதவர் தெருவை சேர்ந்த வர். லோகநாதன் (27). இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். வீட்டில் பெற்றோருக்கு பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக, தனியார் வாகனத்தில் டிரைவராக வேலை பார்த்துள்ளார். இந்நிலையில், கடந்த 11ம் தேதி இரு சக்கர வாகனத்தில் அவர் சென்றபோது எதிரே வந்த கன்டெய்னர் லாரி பயங்கரமாக மோதியது. இதில் லோகநாதன் பலத்த காயமடைந்தார்.இதனால் அவர் உடனடியாக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு என்று மருத்துவர்கள் பரிந்துரைத்ததால், அவர் உடனடியாக சென்னை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஜூன் 12ம் தேதி கொண்டு செல்லப்பட்டார். அங்கே அவரது நிலைமை மிகவும் மோசமானது. மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இந்நிலையில் லோகாநாதன் மூளையின் செயல்பாடு முற்றிலும் செயல் இழந்துவிட்டது. அதே சமயம், உடம்பில் சுவாசம் மற்றும் மற்ற பாகங்கள் இயங்கின. எனவே, லோகநாதனை நன்றாக பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமுறைப்படி, அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்று காலை 6.55 மணிக்கு அறிவித்தனர். இனி அவர் உயிர் பிழைக்கவும் முடியாது என்று தெரிவித்தனர்.குறிப்பாக, லோகநாதனின் அம்மா ராஜலட்சுமியை அழைத்த மருத்துவர்கள் இந்த தகவலை தெரிவித்தனர். ராஜலட்சுமி நர்சாக பணியாற்றி வருகிறார்.என் மகன் இந்த உலகில் இல்லையென்றாலும் பரவாயில்லை. அவன் உருவில் நான் மற்றவர்களை பார்த்து கொள்கிறேன் என்று கதறி அழுதபடி கூறியுள்ளார். அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் அவரை தேற்றினர். உடனே ராஜலட்சுமி தன் மகனின் இதயம், கண்கள் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக மருத்துவர்களிடம் தெரிவித்தார். என் மகன் உயிருடன் இருந்தால் என் குடும்பம் மட்டும்தான் பயன்பெறும். ஆனால், அவனின் உடலை தானம் செய்வதின் மூலம் நிறையபேருக்கு அவர்களின் ஆயுட் காலம் முழுவதும் உபயோகமாக இருக்கும் என்று கூறினார்.இதையடுத்து சென்னையில் இதயம் மற்ற உறுப்புகள் கோரி பதிவு செய்தவர்களின் விவரங்களை சேகரித்தனர்.அப்போது, மும்பையை சேர்ந்த ஓய்வுபெற்ற மரைன் இன்ஜினியர் ஆஸ்பி பி மினோசெரோஜியன் 21 வயதான ஒரே மகள் ஹவோபி, கடந்த 4 ஆண்டுகளாக இதய கோளாறில் அவதிப்பட்டு வந்தார். இதற்காக இவரது பெற்றோர் பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை. இதனால், அவரை அமெரிக்கா கொண்டு செல்ல முடிவு செய்தனர்.அமெரிக்க டாக்டர்களை தொடர்பு கொண்டபோது, இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அமெரிக்காவில் இதய மாற்று சிகிச்சை அளிக்க முடியாத அளவுக்கு நிலைமை உள்ளது என்று கைவிரித்துவிட்டனர். ஹவோபிக்கு இதய மாற்று சிகிச்சை அளிக்கா விட்டால் இன்னும் 3 அல்லது 4 மாதங்கள் மட்டுமே உயிருடன் இருப்பார் என்று மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். இதனால், ஹவோபி பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.எனினும் மனம் தளராத மினோசெரோஜி தனது மகளை அடையாரில் உள்ள போர்ட்டிஸ் மலர் மருத்துவ மனையில் ஒரு மாதத்திற்கு முன்பு சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்த விவரங்கள் சென்னை அரசு மருத்துவமனையில் உள்ள லோகநாதனின் அம்மா மற்றும் மருத்துவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும், மினோசெரோஜிக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக லோகநாதனின் பெற்றோரிடம் பேசினார். மருத்துவர்களிடமும் தெரிவித்தார்.தன் இறுதி நாளை எண்ணிக் கொண்டிருக்கும் ஹவோபியை தன் மகனின் இதயத்தைக் கொடுத்து காப்பாற்ற லோகநாதனின் பெற்றோர் கனத்த இதயத்துடன் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லோகநாதன் இதயத்தை அடையார் மலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹவோபிக்கு பொருத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.இதயத்தை ஆபரேஷன் செய்து அகற்றுவது. அதை குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்ப்பது, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போலீஸ் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினர். சென்னை அரசு பொது மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த லோகநாதனின் உடலில் இருந்து ஆபரேசன் மூலம் இதயம் உள்பட உடல்பாகங்களை வெட்டி எடுக்க மருத்துவர்கள் குழு ஒன்று தயாராக இருந்தது.அதே நேரத்தில் மலர் மருத்துவமனையில் மற்றொரு மருத்துவர்கள் குழு, இதயம் பொருத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளுடன், லோகநாதனின் இதயத்துக்காக ஆபரேஷன் அரங்கில் தயாராக இருந்தது. இறந்தும் உதவுகிறான்... இதய தானம் செய்த லோகநாதனின் தாயார் ராஜலட்சுமி. வந்தவாசி அருகே உள்ள ஓசூர் என்னும் பகுதியில் கிராம சுகாதார நர்சாக உள்ளார். இவர் தனது மகனின் இதயம் அறுவை சிகிச்சை மூலம் எடுத்து ஆம்புலன்ஸ்சில் வைக்கப்பட்டபோது கதறி துடித்தார். அப்போது, கண்ணீர் வடிந்த நிலையில், அவர் கூறியதாவது:எனது ஒரே மகன்தான் லோகநாதன். இன்ஜினியரிங் முடித்துள்ளான். ரயில்வேயில் வேலை செய்ய வேண்டும் என்று ஆர்வமாக இருந்தான். அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டிருந்தான். இந்த நிலையில்தான் கடந்த 11ம் தேதி அருகில் உள்ள கடைக்கு சென்று குளிர்பானம் வாங்க பைக்கில் புறப்பட்டான். அப்போது, கண்டெய்னர் லாரி எமன் உருவத்தில் வந்து எனது மகனின் மேல் மோதி விட்டது. இந்த தகவலை அறிந்து துடிதுடித்து விட்டேன். மகனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று போராடினேன். ஆனால், அனைத்து முயற்சிகளும் கை மீறி போய் விட்டது. இறுதியில், சாகும் நிலையிலாவது எனது மகன் யாருக்காவது உதவட்டும் என்ற நிலையில்தான் உறுப்பு தானம் செய்ய முடிவு செய்தேன் என்றார். அந்த 13 நிமிடங்கள்... காலை 10 மணி...சென்னை அரசு பொது மருத்துவமனையில் இருந்து அடையாருக்கு எப்படி எடுத்து செல்வது என்பது குறித்து மருத்துவர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ்க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் குறித்த நேரத்தில் இதயத்தை எந்த சிக்கலும் இல்லாமல் எடுத்து செல்ல தேவையான அனைத்து ஒத்துழைப்பும் தருவதாக கூறினார். மேலும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும்படி போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மதியம் 3 மணி...சென்னை அரசு பொது மருத்துவமனையில் சரியாக 3 மணிக்கு ஆபரேஷன் அரங்கிற்கு மூளைச்சாவு அடைந்த லோகநாதனின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதல் கட்டமாக கிட்னி அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது. பின்னர், அது பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர், கல்லீரல், கண் ஆகியவை அடுத்து அடுத்து எடுக்கப்பட்டு, மற்றவர்களுக்கு பொருத்தும் பணிகள் தொடங்கின. இறுதியாக, லோகநாதனின் இதயம் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது. இதயத்தை பிரத்யேகமான குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டது. 4.00: இந்நிலையில் சென்னை அரசு பொது மருத்துவமனையில் இருந்து மலர் மருத்துவமனைக்கு வரும் வழிகளில் உள்ள சிக்னல்கள் நிறுத்தப்பட்டது. சாலை மற்றும் தெருக்களின் சந்திப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். ஆம்புலன்ஸ் வேகம் தடைபடாமலும், குறுக்கே வராமலும் இருக்க போலீசார் நேரடியாக போக்குவரத்தை சரி செய்யும் பணியில் இறங்கினர். எனினும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் வாகனங்களை ஒழுங்குபடுத்தினர். 6.30: மருத்துவமனையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் மருத்துவர்கள் குழு ஒன்று லோகநாதனின் இதயம் இருந்த பெட்டியுடன் அறுவை சிகிச்சை அரங்கைவிட்டு வெளியே வந்தனர். அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்சில் ஏறினர். அவர்களுக்கு முன்பாக ஒரு போலீஸ் கார் தயாராக இருந்தது. இதையடுத்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. சாலைகள் அனைத்தும் வேலை நிறுத்தம் செய்வதுபோல சாலைகள் காலியாக இருந்தன. 6.45: இதயம் ஆம்புலன்சை ஏற்றப்பட்டது குறித்து போக்குவரத்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அனைத்து சிக்னல்களையும் தற்காலிகமாக நிறுத்தினார். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போக்குவரத்து போலீஸ் வாகனம் முன்னால் லோகநாதனின் இதயம் உள்ள ஆம்புலன்ஸ் வாகனம் முன்பாக சீறி பாய்ந்து செல்ல ஆரம்பித்தது. போலீஸ் சென்ற பைலட் வாகனத்தை தலைமை காவலர் பாலாஜி என்பவர் ஓட்டினார். இதயம் இருந்த ஆம்புலன்சை வேனை கதிர் என்ற டிரைவர் ஓட்டினார்.அரசு மருத்துவமனையில் அமரர் அறை உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக வலது புறம் திரும்பி முத்து சாமி பாலம் வழியாக கொடி மரச்சாலை வழியாக ஆம்புலன்ஸ் புறப்பட்டது. அப்போது, நேரம் 6.47. வளைவான பகுதி என்பதால் டிரைவர் மிகவும் லாவகமாக ஆம்புலன்சை ஓட்டினார். 6.49: 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்ல அவரால் முடியவில்லை. தொடர்ந்து கொடி மரச்சாலை வழியாக போர் நினைவு சின்ன வளைவு வழியாக காமராஜர் சாலைக்கு செல்லும்போது 6.49 மணி ஆனது. மெரினா காமராஜர் சாலை நடுவில் இருபுறமும் வாகனம் நிறுத்தப்பட்டது. 6.54: அடையார் பாலத்தின் கீழ் பகுதியில் யூ டர்ன் அடித்த ஆம்புலன்ஸ் வேன், அடையார் மருத்துவமனைக்குள் சரியாக 13 நிமிடம் 22 விநாடிகளில் நுழைந்தது. அங்கிருந்த எமர்ஜென்சி நுழைவு வாயில் வழியாக சென்றது.அதற்கு முன்னதாக அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும் அடையாறு பகுதியில் இருந்து மெரினா நோக்கி செல்லும் வாகனங்கள் 500 மீட்டர் முன்பே தடுத்து நிறுத்தப்பட்டது. 6.55:டாக்டர் தினகரன் சாலைக்கு வந்தது. தொடர்ந்து அடையார் திருவிக பாலத்திற்கு தொடர்ந்து மெரினா காமராஜர் சாலை வேகத்திற்கு உகந்தவகையில் இருந்ததால் 100 கிலோ மீட்டர் வேகத்தில் ஆம்புலன்ஸ் மின்னல் வேகத்தில் பாய்ந்து மருத்துவமனையை அடைந்தது. 6.58: லிப்டில் மருத்துவர்களின் உதவியுடன் இதயம் எடுத்து செல்லப்பட்டது. அங்கு அறுவை சிகிச்சை அரங்கில் இருந்த மருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக, ஹவோபிக்கு இதய அறுவை சிகிச்சையை துவக்கினர். சில மணிநேர ஆபரேஷனுக்கு பிறகு ஹவோபிக்கு லோகநாதனின் இதயம் பொருத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.இந்த செய்தியை கேட்ட ஹவோபியின் பெற்றோர் மற்றும் லோகநாதனின் பெற்றோர் கண்ணீர் விட்டு அழுதனர். Thanks Dinakaran. Relaxplzz ![]() |
Posted: 02 Jan 2015 06:53 AM PST " வெற்றி பெறுபவர்கள் வித்தியாசமான பல செயல்களில் ஈடுபட மாட்டார்கள். ஆனால் ஒரு செயலை வித்தியாசமான முறையில் செய்வார்கள் " #சேகுவேரா ![]() "இவர்கள் சொன்னவை" |
அருமையான ஓவியம் Posted: 02 Jan 2015 06:45 AM PST |
Posted: 02 Jan 2015 06:30 AM PST |
Posted: 02 Jan 2015 06:15 AM PST ரயிலில் இரவு நேரத்தில் எல்லாரும் தூங்கியபின்னும் இரண்டு இளம் கல்லூரி மாணவிகள் சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தனர். க. பெ 1: உனக்கு எந்த மாதிரி சாம்பாதிக்கும் கணவன் வேண்டும்? க. பெ. 2: மாதம் 2 லட்சமாவது சம்பாதிக்க வேண்டும். 1: அது கிடைக்கவில்லை என்றால்? 2: 1 லட்சமாவது.... 1: இல்லையன்றால் 2 : 50 ஆயிரமாவது... கடுப்பான நம் நண்பர் மேல் பர்த்திலிருந்து " 8000 த்துக்கு வந்ததும் சொல்லுங்கள் ... என் பையன் அடுத்த மேல் பர்த்தில் படுத்திருக்கிறான்" இரண்டு காலேஜ் பெண்களும் "ச்சுப் " :P :P Relaxplzz |
Posted: 02 Jan 2015 06:03 AM PST மன உறுதி !!! ஒரு விவசாயி ஒரு குதிரையையும், ஒரு ஆட்டையும் வளர்த்து வந்தான். அந்தக் குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்களாக இருந்தன. ஒரு நாள் அந்தக் குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது. அதனால், அந்த விவசாயி குதிரைக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து வந்தான்.. மருத்துவர் அந்த குதிரையின் நிலையைப் பார்த்து, "நான் மூன்று நாட்கள் வந்து மருந்து தருகிறேன். அந்த மருந்தைக் குதிரைக்குச் சாப்பிடக் கொடுங்கள். அதைச் சாப்பிட்ட குதிரை எழுந்து நடந்தால் சரி, இல்லையெனில் அதனைக் கொன்றுவிட வேண்டியது தான்" என்று சொல்லியபடி குதிரைக்கான மருந்தைக் கொடுத்துச் சென்றார். இவர்களது உரையாடலை அந்த ஆடு கேட்டுக் கொண்டிருந்தது. விவசாயியும் அந்தக் குதிரைக்கு மருத்துவர் கொடுத்த மருந்தைக் கொடுத்தான். மறுநாள் வந்த மருத்துவர், குதிரையைப் பார்த்து விட்டு, அன்றைய மருந்தைக் கொடுத்துச் சென்றார். அந்த மருந்தையும் குதிரைக்குக் கொடுத்தான் , அந்த விவசாயி.பின்பு சிறிது நேரம் கழித்து,அங்கு வந்த ஆடு, அந்தக் குதிரையிடம், "நண்பா, நீ எழுந்து நடக்க முயற்சி செய். நீ நடக்கா விட்டால் அவர்கள் உன்னைக் கொன்று விடுவார்கள்" என்று அந்த குதிரையை ஊக்குவித்தது. மூன்றாம் நாளும் மருத்துவரும் வந்தார். அவர் குதிரைக்கு மருந்து கொடுத்து விட்டு, அந்த விவசாயிடம் "நாளை குதிரை நடக்கவில்லையெனில், அதனைக் கொன்றுவிட வேண்டும். இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி, மற்றவர்களுக்கும் பரவிவிடும்." என்று சொல்லிச் சென்றார். இதைக் கேட்ட ஆடு, அந்த மருத்துவர் சென்றதும், குதிரையிடம் வந்து, "நண்பா! எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய். நீ நடக்க முடியாமல் போனால் உன்னைக் கொன்று விடுவார்கள்" என்று சொல்லியது. அந்தக் குதிரையும் முயற்சி செய்து மெதுவாக எழுந்து நடக்கத் தொடங்கியது. தற்செயலாக அந்தப் பக்கமாக வந்த விவசாயி அசந்து போகும்படியாக குதிரை ஓடியது. மறுநாள் அந்த விவசாயி மருத்துவரை அழைத்து வந்து குதிரையைக் காண்பித்தான். அவன் மருத்துவரிடம், "என் குதிரை நன்றாகக் குணமடைந்து விட்டது. அது நன்றாக ஓடத் தொடங்கி விட்டது. இதற்கு நீங்கள் கொடுத்த மருந்துதான் காரணம். என் குதிரையைப் பிழைக்க வைத்த உங்களுக்கு நல்ல விருந்து ஒன்று கொடுக்க வேண்டும். இந்த ஆட்டை வெட்டிப் பிரியாணி செய்து கொண்டாடி விடுவோம்" என்றான். குதிரை ஆட்டின் ஊக்கத்தால் எழுந்து நடந்தாலும் மருத்துவர் கொடுத்த மருந்தால்தான் குதிரை குணமடைந்ததாகத்தான் விவசாயி நினைத்தான்.... இப்படித்தான் இந்த உலகில் யாரால் நன்மை கிடைத்தது என்பதை உணராமல், பலரும் உண்மையைப் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். Relaxplzz ![]() "குட்டிக்கதைகள் - 2" |
Posted: 02 Jan 2015 05:48 AM PST இதில் எந்த வரிசையில் எட்டு இருக்கிறது என்பதை சரியாக சொன்னால் கிட்டு மாமா கையால லட்டு வாங்கி தர்றேன் ![]() சும்மா... சும்மா... 5 |
Posted: 02 Jan 2015 05:30 AM PST |
Posted: 02 Jan 2015 05:19 AM PST ஆண்கள் தான் 'பெஸ்ட்' 1. பொண்ணுங்க எனி ஹெல்ப்னு (உதவி) கேட்டாக்கூட பரவாயில்லன்னு உதவி செய்வோம். 2. ஐ லவ் யூ சொன்னா வாட்? நான்சென்ஸ்னு என்னைக்கும் சொன்னதில்லை.. 3. நீயும் மத்த ஆம்பிளைங்க மாதிரி தான். நான் மத்த பொண்ணுங்க மாதிரி இல்ல, ரெண்டையும் சொல்றது பொண்ணுங்க தான். 4. குஸ்காவில் சின்ன பீஸ் வந்தாலும் குதுகளிக்கும் குழந்தை மனசுக்காரன். 5. மனைவி எவ்வளவு அடித்தாலும் வெளியே சொல்லி புலம்பாமல் இருப்பதால்.. 6. என் பொண்டாட்டி, பக்கத்துக்கு வீட்டுக்காரன் பொண்டாட்டின்னு பிரிச்சு பார்க்க மாட்டோம் 7. தங்கைகளுக்கு மணமாகும் வரை நாற்பது வயதானாலும் காத்திருப்போம்.. 8. சுமாரா இருக்குற பொண்ண கூட தங்கச்சின்னு சொல்லி அசிங்கப்படுத்த மாட்டோம்.. 9. துணிக்கடைக்கு போன 'உடனே' டிரஸ் எடுத்திட்டு வந்துடுவோம், ஜவுளிக் கடைல வேலை பாக்குற பொண்ணுங்கள பாடாய் படுத்தமாட்டோம். 10. கஸ்டமர் கேர் பொண்ணாவே இருந்தாலும், சாப்டிங்களான்னு விசாரிப்போம்.. 11. பொண்ணுங்க சைக்கிள் பஞ்சர் ஆனதும், எங்க சைக்கிள்ல காத்த இறக்கி விட்டு நடந்து வருவோம்... 12. வீட்டு வருமானத்து உழைக்கிறோம். நாட்டு வருமானத்துக்கு குடிக்கிறோம். 13. முக்கியமா. ரி.வி சீரியல். பார்த்து நாசமா போகமாட்டோம்... # பிடிச்சா லைக் பண்ணுங்கள்... Relaxplzz |
Posted: 02 Jan 2015 05:02 AM PST |
Posted: 02 Jan 2015 04:45 AM PST |
Posted: 02 Jan 2015 04:30 AM PST |
Posted: 02 Jan 2015 04:15 AM PST கவுண்டமணி வீட்டு வாசலில் செந்தில் நிற்பதாக நினைத்துக் கொள்ளுங்கள் .... செந்தில்: அய்யா... வீட்டுல யாருங்க அய்யா.... கவுண்டமணி: (ஜன்னல் வழியா பார்த்துக் கொண்டே இருக்கிறார்)... செந்தில்: அம்மா... வீட்டுல யாருங்கம்மா..... கவுண்டமணி: (ஜன்னல் வழியா பார்த்துக் கொண்டே இருக்கிறார்)... செந்தில்: அய்யா.. அம்மா.. பிச்சை போடுங்க அம்மா.............. கவுண்டமணி: (ஜன்னல் வழியா பார்த்துக் கொண்டே இருக்கிறார்)... செந்தில்: என்ன சொல்லியும் வெளியே வரலையே.. சரி இப்படி சொல்லி பார்ப்போம்.. அய்யா.. அம்மா.. வாய் பேச முடியாத ஊமைக்கு ஒரு வாய் சோறு போடுங்கம்மா... கவுண்டமணி:.. தம்பீ... பக்கத்துல வீட்டுல போய் கேளு ராசா.. இங்க எனக்கு காது கேட்காதய்யா........ (செந்தில் என்ன செய்திருப்பார்.. கவுண்டர் என்ன நக்கல் பார்வை பார்த்திருப்பார் யோசியுங்கள்) ;-) ;-) Relaxplzz |
Posted: 02 Jan 2015 04:00 AM PST உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்..... எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளை கேட்பார் அற்றதால் விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு. உலக சர்வாதிகாரியான ஹிட்லரையே மன்னிப்பு கோரச்செய்தவன் அடி பணியவைத்தவன் ஒருவன் உள்ளான் என்றால் நம்புவீர்களா ? அதுவும் அவன் ஒரு தமிழன் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள் ? ஆம் தோழர்களே !அந்த வீரன் வேறுயாருமில்லை அவன் தான் மாவீரன் செண்பகராமன். மாவீரன் செண்பகராமனை எத்தனை பேர் அறிவீர்கள்? ஒரு வேடிக்கையான விடயம். தமிழக அரசே 2009 ஆம் ஆண்டு தான் மாவீரன் செண்பகராமனை இனங்கண்டு கொண்டு அவரை கெளரவித்து சிலை ஒன்றை நிறுவியது. இந்தியக் குடியரசின் உயிர் மூச்சாகத் திகழும் "ஜெய்ஹிந்த்" என்னும் தாரக மந்திரத்தை, முதன் முதலில் உச்சரித்தவர் வங்காளச் சிங்கம் சுபாஸ் சந்திரபோஸ் என்று தான் பலர் கருதுகின்றனர். அவர் நிறுவிய இந்திய தேசிய இராணுவத்தின் போர் முழக்கம் "ஜெய்ஹிந்த்" என்பது உண்மையே. ஆனால் அவருக்கு முன்பே "ஜெய்ஹிந்த்" மந்திரத்தை உச்சரித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய பெருமை செண்பகராமன் என்ற ஒரு தமிழனுக்குத்தான் உரியதென்றால், ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? யார் அந்த செண்பகராமன் என்று பார்ப்போம். பாரத மாதாவின் அடிமை விலங்குகளை அடித்து நொறுக்கிவிட வேண்டும் என இந்திய மக்கள் அத்தனைபேரும் ஆக்ரோஷத்தால் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்த காலம் அது. பால்மணம் மாறாத பள்ளி மாணவர்கள் கூட, போராட்டத்தில் குதித்து விட்டனர். பாரதத்தைக் காக்கப் புறப்பட்ட பல்லாயிரக் கணக்கான பள்ளி மாணவர்களுக்கு, ஒரு தலைவனாய் விளங்கினான் ஒரு பதினைந்து வயது சிறுவன். அவன் தான் நாஞ்சில் மண் பெற்றெடுத்த நாயகன் செண்பகராமன். இவனது திறமைகளையும் ஆற்றலையும் கண்டு வெள்ளையர்கள் வியந்து போனார்கள். சிறிது காலம் தலைமறைவாக வாழவேண்டிய நிற்பந்தம்; அதனால் ஜேர்மனிக்கு பயணமானான். ஆங்கிலேயர்களுக்கே அதிர்ச்சி இந்த சிறுவனால் இது எப்படி சாத்தியம்? வியந்தார்கள். ஜேர்மனியிலே உயர்கல்விகளையெல்லாம் முடித்து கலாநிதி பட்டம் பெற்றுக்கொண்டார். அறிவிலே சிறந்து மிளிரத்தொடங்கினார். ஜெர்மனியச் சக்கரவர்த்தியாக அப்போதிருந்த கெய்சர் மன்னன், தன் அந்தரங்க நண்பனாக செண்பகராமனை ஏற்றுக்கொண்டார் என்றால், மேலும் விளக்கம் தேவையில்லையல்லவா? டாக்டர் செண்பகராமன் கலந்து கொள்ளாத ராஜாங்க வைபவமோ, விருந்தோ ஜெர்மனியில் கிடையாதென்ற நிலைமை உருவாகியது. தாயகத்தை விட்டு வெளியேறியதன் நோக்கமே, இனிமேற்தானே நிறைவேற வேண்டும் என்று உழைக்க ஆரம்பித்தான். இந்திய தேசியப் போராட்டத்தைப் பற்றி ஜெர்மனில் நிகழ்ந்த சரமாரியான சொற்பொழிவுகளைத் தொடர்ந்து, இவற்றின் எதிரொலியாக அங்கு "இந்திய ஆதரவு சர்வதேசக் கமிட்டி" ஒன்று நிறுவப்பட்டது. டாக்டர் செண்பகராமனே இதற்கும் தலைமை தாங்கினார். இந்தக் கமிட்டியின் உதவியோடு, ஐரோப்பிய நாடுகளிடையே, இந்தியாவைப் பற்றி நிலவிய தவறான அபிப்பிராயங்களை தவிடுபொடியாக்கிய செண்பகராமன், இந்திய நலனுக்கு அக் கமிட்டியை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார். தனது எண்ணங்களை ஐரோப்பிய நாடுகளுக்குத் தெளிவாக எடுத்துக் கூறுவதற்காக டாக்டர் செண்பகராமன் நடத்திய "புரோ இந்தியா" ( PRO INDIA ) எனும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியாவை நிர்மாணிக்கப் போகும் புரட்சிக் குரலாகியது. ஹிட்லர் மன்னிப்பு கோரல் ஒருநாள் டாக்டர் செண்பகராமனும், ஹிட்லரும் அவருடைய சகாக்களும் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அகங்காரம் பிடித்த ஹிட்லர், ஆணவத்தோடு இந்தியாவையும், இந்தியத் தலைவர்களையும் பற்றி இழிவாகப் பேசினார். 'சுதந்திரம் பெறக்கூடிய யோக்கியதை இந்தியர்களுக்கு கிடையாது" என்றாராம் ஹிட்லர். இதைக் கேட்டதும் கொதித்தெழுந்து, சிங்கம் போல் கர்ஜித்தார் செண்பகராமன். இந்தியாவின் பாரம்பரிய பெருமை பற்றியும் இந்தியத் தலைவர்களின் மேதா விலாசம் பற்றியும் ஆணித்தரமான வாதங்களை எடுத்து ஹிட்லர் முன் விளக்கினார். டாக்டரின் கர்ஜனையைக் கேட்ட ஹிட்லர் உண்மையிலேயே ஸ்தம்பித்து விட்டார். டாக்டர் செண்பகராமனின் மனோசக்தி முன், தன்னால் நிற்க முடியாது அடங்கியதோடு, தாம் செய்த பிழையையும் உணர்ந்து உடனே செண்பகராமனிடம் மன்னிப்புக் கோரினார். வார்த்தையளவில் மன்னிப்புக் கேட்டால் போதாது எழுத்திலும்; மன்னிப்பைத் தரவேண்டும் என்று வாதாடினார் பிடிவாதக்காரரான டாக்டர் செண்பகராமன். அதன்படியே, எழுத்தில் மன்னிப்புக் கோரினார். முதலாம் உலகப்போர் பிரிட்டனுக்கும் ஜெர்மனுக்குமிடைய ஆரம்பமாகியது. உடனடியாக டாக்டர் செண்பகராமன் ஐரோப்பிய நாடுகளில் அப்போது சிதறிக் கிடந்த இந்தியர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி ஒரு ராணுவ சக்தியாக உருவாக்கினார். போரில் தனக்குச் சாதகமாக இந்தியர்களைப் பயன்படுத்த ஜெர்மனி முயற்சித்தது. அக்கட்டத்தில் ஐரோப்பாவில் வாழ்ந்த இந்தியர்களின் மனோபாவத்தை, போரினால் எழும் இந்த நெருக்கடியை இந்தியாவின் விடுதலைக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர்கள் தீர்மானம் செய்து உள்ளனர். ஜெர்மனியர் லாபத்திற்காக மட்டும் பாடுபட வேண்டும் என்பது அவர்கள் நோக்கமல்ல என நேருஜி தனது சுயசரிதையில் தெளிவாக எடுத்து விளக்கி இருந்தார். இவ்விதம் பாரதத்தின் நலன் கருதி செண்பகராமன் உருவாக்கிய போராட்ட அணிக்கு "இந்திய தேசியத் தொண்டர்படை" என்று பெயர் கொடுக்கப்பட்டது. ஜெர்மனி கேட்டுக் கொண்டபடி, சில நிபந்தனைகளோடு போரில், ஜெர்மனிக்கு உதவ ஐ. என். வி. எனும் இந்தியப்படை ஒப்புக் கொண்டது. செண்பகராமனின் திட்டங்கள் அனைத்தையும் ஜெர்மனின் கெய்ஸர் மன்னர் ஏற்றுக் கொண்டார். இந்தச் சந்தர்ப்பத்திலேதான், செண்பகராமனின் மதிநுட்பத்தைப் பாராட்டி, "சுதந்திர பாரதத்தின் முதல் ஜனாதிபதியாக வீரன் செண்பகராமன் நியமிக்கப்பட வேண்டும்" என்று கெய்ஸர் மன்னர் தனது அந்தரங்க ஆவலை வெளியிட்டார். யுத்த காலத்தில், ஹம்டன் என்ற பிரசித்தி பெற்ற நீர் முழ்கிக் கப்பலின் பெயரைக் கேட்டாலே, அன்று பிரிட்டிஷார் கதி கலங்கினர் அந்தக் கப்பலைச் செலுத்தி. 1914 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி சென்னையிலுள்ள சென்ட் ஜோர்ஜ் கோட்டையைத் தாக்கி, பிரிட்டிஷ் அரசை கலங்கடித்த வீரன் வேறு யாரென்று நினைக்கிறீர்கள்? "ஹம்டன்" எனும் பிரமாண்டமான நீர் மூழ்கியின் பொறியியலாளரும், இரண்டாவது கமாண்டருமான டாக்டர் செண்பகராமன்தான். சென்ட் ஜோர்ஜ் கோட்டை தகர்ந்ததற்கும், பிரிட்டிஷார் நடுங்கியதற்கும் காரணபூதர்! ஹம்டன் குண்டு வீச்சு சம்பவத்தைப் பற்றிய வரலாறு, கோட்டைச் சுவற்றில் பதிக்கப்பட்டிருப்பதை இப்போதும், சென்னையிலுள்ள இதே கோட்டையில் காணலாம். இது நடந்தது செண்பகராமனின் இருபத்தி மூன்றாவது வயதில்! இத்தனை இளம் பருவத்தில் செண்பகராமன் மேற்கொண்ட சாதனைகளை கண்டு ஆங்கிலேயர்கள் வியந்தார்கள். அவர் வழி நடத்திய ஐ. என். வி. யின் ஆற்றலைக் கண்டு வெள்ளையர் அடைந்த பீதிக்கு அளவே கிடையாதென வரலாறு கூறுகிறது. இந்தனை வீரசாகசங்களை புரிந்து ஆங்கிலேயர்களை துவசம் செய்த மாவீரன் நாசிப்படைகளின் நயவஞ்சகமான சூழ்ச்சியால் கொல்லப்படுகின்றார். தன் இறுதி லட்சியத்தை மனைவியிடம் கூறுகிறார் செண்பகராமன். இந்திய சுதந்திரத்தை கண்ணால் காணாமல். என் உயிர் பிரியத்தான் போகிறது.எனினும் நான் இறந்த பின், எனது அஸ்தியை பத்திரமாக எடுத்துச் சென்று, நான்பிறந்த தமிழ் நாட்டில், என் அன்னையின் அஸ்தி சங்கமமான கரமனை ஆற்றில்கரைத்துவிட்டு, மறுபகுதியை நாஞ்சில் நாட்டடின் வளமிக்க வயல்களில் தூவிவிடு.அதோடு என் உயிர் பிரிந்தபின்னும், என் போராட்டத்தை தொடர்ந்து நீ, நடத்தவேண்டும். நெஞ்சை உருக்கும் வண்ணம் மேற் கண்ட வேண்டுகோளை விடுத்தசெண்பகராமனின் உயிர் 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி இவ்வுலகத்தைவிட்டு நீங்கி அமரத்துவம் அடைந்தது Relaxplzz ![]() |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment