Monday, 19 January 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


முட்டையை கொடுத்து, காசு வாங்குகிறவன் வியாபாரி. காசை கொடுத்து, முட்டையை வாங்குகி...

Posted: 19 Jan 2015 10:08 AM PST

முட்டையை கொடுத்து,
காசு வாங்குகிறவன் வியாபாரி.

காசை கொடுத்து,
முட்டையை வாங்குகிறவன் சம்சாரி.

எதையும் கொடுக்காமல்,
எல்லாம் வாங்குபவன் அரசியல்வாதி.

-கவிஞர் கண்ணதாசன்


"இவர்கள் சொன்னவை"

நம்மூரில் சாமியார்கள் கைகளில் திருவோடு வைத்திருப்பதை பார்த்திருப் பீர்கள், அதில்...

Posted: 19 Jan 2015 07:35 AM PST

நம்மூரில் சாமியார்கள் கைகளில் திருவோடு வைத்திருப்பதை பார்த்திருப் பீர்கள், அதில் அவர்கள் யாசகம் பெற்று உயிர் வாழ்வார்கள். இந்த திருவோடு ஒரு மரத்தின் விதை என்றால் நம்ப முடி கிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால், அதுதான் உண்மை.

இந்த திருவோடு உலகத்திலேயே மிகப் பெரிய விதையான கடல் தேங்காயின் ஓடு. கடல் தேங்காய்க்கு நிறைய பெயர்கள் உண்டு. திருவோட்டுக்காய், இரட்டைத் தேங்காய், கடல் பனை, மாலத்தீவுத் தேங்காய் என்று. இதன் விதைகளை பாதியாக அறுத்து சுத்தம் செய்து திருவோடாக மாற்றுகிறார்கள்.

திருவோட்டுக்காய் பார்ப்பதற்கு பெரிய சைஸ் தேங்காய் போலவே இருக்கும். மரமோ பனை மரம் போல இருக்கும். இதன் பிறப்பிடம் 'சிசெல்ஸ்' தீவுகள். இவை எல்லா இடங்களிலும் வளர்வது இல்லை. இந்தியப் பெருங்கடலில் பிரஸ்லின் என்ற தீவில்தான் அதிகமாக வளர்கிறது.

இதிலும் பனை மரத்தை போலவே ஆணும், பெண்ணும் உண்டு. ஆண் மரங்கள் 6 அடி நீளம் கொண்ட பூக்களை மலர்விக்கின்றன. பெண் மரங்கள் முளைக்கத் தொடங்கி 100 வருடங்கள் கழித்தே பூக்கத் தொடங்குகின்றன. பூ மலர்ந்து காயாக மாறி முற்றுவதற்கு 10 வருடங்கள் ஆகும்.

காய் பெரிய தேங்காய் மாதிரி இருக்கும். நார் அடர்த்தியாக இருக்கும். ஓட்டுக்குள் உள்ள கனிப் பகுதி முதலில் பனை நுங்கு போல் இருக்கும். முற்றிய பின் தேங்காய் போல சுவைக்கும். முற்றிய காய் உதிர்ந்து கடலில் மிதந்து கரையில் ஒதுங்கும். மாலத்தீவில் ஏகப்பட்ட காய்கள் கரை ஒதுங்குகின்றன. கடல் நீரோட்டத்தின் மூலமே விதை பரவுகிறது.

விதை முளைக்கத் தொடங்கி முதல் இலை தோன்றுவதற்கு மூன்று ஆண்டுகள் ஆகின்றன. 90 அடி உயரம் வளர்கிறது. இதன் சுற்றளவு 12 அடி. இலைகள் விசிறி வடிவில் பனை இலை மாதிரியே இருக்கும். ஆனால், ஒரு இலை 21 அடி நீளமும், 12 அடி அகலமும் கொண்டதாக இருக்கும்.

இதன் விதை ஒன்றின் எடை 7 கிலோ முதல் 23 கிலோ வரை இருக்கும். இந்த விதை தானாக முளைத்தால்தான் உண்டு. தோட்டங்களில் முளைக்க வைக்க எவ்வளவோ முயன்றார்கள். ஒன்று கூட முளைக்க வில்லை. அப்படியே தப்பி தவறி முளைத்தாலும் வெகு சீக்கிரமே அழிந்துவிடும். திருவோடு இத்தனை சிறப்பு பெற்றது.

Relaxplzz


"சில அதிசயங்கள் - தகவல்கள்" - 1

அடுத்த அப்துல்கலாம்...!!! பக்கத்து வீட்டு பையன் பரிட்சைக்கு படித்துக் கொண்டிருந...

Posted: 19 Jan 2015 07:21 AM PST

அடுத்த அப்துல்கலாம்...!!!

பக்கத்து வீட்டு பையன் பரிட்சைக்கு படித்துக் கொண்டிருந்தான்.

"தம்பி ... உனக்கு பரிட்சை எப்படி எழுதணும்னு தெரியுமா?"ன்னு கேட்டேன் நான்.

"சொல்லுங்க அங்கிள் ... தெரிஞ்சிக்கிறேன்"

"தம்பி, பரிட்சைக்கு மொத்தம் 3 மணி நேரம் கொடுப்பாங்க ..." "ம்ம்ம்ம்" "முதல் 1 மணி நேரத்துல 10 மார்க் கேள்விய எழுதணும்"

"ம்ம்ம்" "இரண்டாவது 1 மணி நேரத்துல 5 மார்க் கேள்விய எழுதணும்" "ம்ம்ம்" "அப்புறம் அரை மணி நேரத்துல் 2 மார்க் கேள்விய எழுதணும்" "ம்ம்ம்" "கடைசி அரை மணி நேரத்துல 1 மார்க் கேள்விய எழுதணும் ...
இதுல ஏதாவது உனக்கு சந்தேகம் இருந்தா கேளு"

"ஒரே ஒரு சந்தேகம் தான் இருக்கு"

"என்ன?" . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

"மூணு மணி நேரமும் கேள்வியையே எழுதிகிட்டிருந்தா பதில் எப்போ எழுதுறது??" (நமக்குன்னு எங்க இருந்துதான் வந்து சேருதுங்களோ)

Relaxplzz

இஞ்சி லேகியம்! தேவையான பொருள்கள்: இஞ்சி - 100 கிராம் வெல்லம் - 200 கிராம் மிளகு...

Posted: 19 Jan 2015 07:02 AM PST

இஞ்சி லேகியம்!

தேவையான பொருள்கள்:
இஞ்சி - 100 கிராம்
வெல்லம் - 200 கிராம்
மிளகு, திப்பிலி, சீரகம், தனியா, ஓமம், ஒவ்வொன்றிலும் - 10 கிராம்
நெய் - தேவையான அளவு.

செய்முறை:

இஞ்சியை பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு சாறு எடுத்து வடித்து வைக்கவும். சிறிது நேரம் கழித்து தெளிந்து இருக்கும். அந்த தெளிந்ததை மட்டும் எடுத்து, வெல்லத்தை மண் போக வடிகட்டி சுத்தம் செய்து இஞ்சி சாறை கலந்து கெட்டி பாகு வரும் வரை காய்ச்சவும். மற்ற பொருள்களை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து பாகில் போட்டு நெய் ஊற்றி கிளறவும். வயிறு பொருமலாக இருக்கும்போதும் சாப்பிடலாம்.

மாத்திரை மருந்தை தேடி அலையாமல் இயற்கை நமக்கு கொடுத்த வரங்களை பயன்படுத்தலாமே??

Relaxplzz


இயற்கை வைத்தியம்

சுசீந்தரம்! (பழைய படம்!)

Posted: 19 Jan 2015 06:56 AM PST

சுசீந்தரம்! (பழைய படம்!)


"காலச் சுவடுகள்"

யாருக்கெல்லாம் அம்மா செஞ்ச கூழ் வத்தல் ( வடகம் ) பிடிக்கும் ? பிடித்தவர்கள் லைக...

Posted: 19 Jan 2015 06:47 AM PST

யாருக்கெல்லாம் அம்மா செஞ்ச கூழ் வத்தல் ( வடகம் ) பிடிக்கும் ?

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


பிடிக்குமா..?

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு.

Posted: 19 Jan 2015 06:40 AM PST

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.


:) Relaxplzz

Posted: 19 Jan 2015 06:35 AM PST

செம உண்மை

Posted: 19 Jan 2015 06:30 AM PST

செம உண்மை


அருமையான புகைப்படம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 19 Jan 2015 06:20 AM PST

அருமையான புகைப்படம்

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


சாராயக் கடையில் நல்ல கூட்டம்.ஒரே சப்தம். அப்போது ஒரு குடிகாரன் திடீரென உரத்த கு...

Posted: 19 Jan 2015 06:10 AM PST

சாராயக் கடையில் நல்ல கூட்டம்.ஒரே சப்தம்.

அப்போது ஒரு குடிகாரன் திடீரென உரத்த குரலில்,''எல்லோருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்,''என்று கத்தினான்.

உடனே ஒருவன் கேட்டான்,
''ஏனப்பா இன்று புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்கிறாய்?புத்தாண்டு பிறந்து இருபது நாட்கள் ஆகி விட்டனவே!''..

குடிகாரனுக்கு ஒரே குழப்பம்.பலரும் இதேபோல சொல்ல அவன் கூவினான்,

'' ஐயையோஇதுவரை நான் இவ்வளவு தாமதமாக வீட்டுக்குப் போனதில்லையே.என் மனைவி என்னைக் கொன்று விடுவாளே!''.

:D :D

Relaxplzz

உங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்னவென்று தெரியுமா? தெரிந்து கொள்ள...

Posted: 19 Jan 2015 06:05 AM PST

உங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும்
ரகசியம் என்னவென்று தெரியுமா?
தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

a
A என்பது குறிப்பிடத்தக்க எழுத்தாகும்.
உங்கள் பெயர் A என்ற எழுத்தில்
தொடங்கினால், நீங்கள் உறுதியான
ஒரு நபராக இருப்பீர்கள். அதிகார
தோரணையுடன்
பிறரை வழி நடத்துவீர்கள். மேலும்
தீரச்செயல் புரிந்திட
தொடர்ந்து முயற்சிப்பீர்கள். வாழ்க்கையின்
மீது வலுவான ஈடுபாடு இருக்கும்.
அதே போல் யாரையும் சாராமல்
இருப்பீர்கள். உங்களின் துணிவு,
நேர்மை மற்றும் உடல் அம்சம் ஈர்க்கும்
வகையில் அமையும்.

b
உங்கள் பெயர் B என்ற எழுத்தில்
தொடங்கினால், நீங்கள்
உணர்சிபூர்வமானவர்களாக இருப்பீர்கள்.
நீங்கள் தைரியசாலியாகவும்,
அன்பு உள்ளவராகவும் இருப்பீர்கள்.
உங்கள் காதலரின் அன்பின்
வெளிப்பாடாக கிடைக்கும்
பரிசுகளை சந்தோஷத்துடன் பெற்றுக்
கொள்வீர்கள். உங்களை மற்றவர்கள்
செல்லம் கொஞ்ச வேண்டும் என
நினைப்பீர்கள். அதே போல் உங்கள்
துணையை எப்படி கொஞ்சுவது என்பதும்
உங்களுக்கு தெரிந்திருக்கும்.

c
உங்கள் பெயர் C என்ற எழுத்தில்
தொடங்கினால், பல்துறை அறிவு வாய்ந்த,
தகுதி வாய்ந்த, திறமைசாலியாக
இருப்பீர்கள். மென்மையானவராக
இருந்தாலும், பணத்தை தண்ணீராக
செலவழிப்பீர்கள். இயற்கை மற்றும்
பிறவி பேச்சாளாராக இருக்கும் நீங்கள்,
சொல்வன்மை பேச்சாற்றலுடன்
விளங்குவீர்கள்.

d
உங்கள் பெயர் D என்ற எழுத்தில்
தொடங்கினால், அளவுக்கு அதிகமான
மனத் திண்மை, வணிகம் புரியும்
அறிவு, ஆளுமை போன்ற
குணங்களை கொண்டிருப்பீர்கள். தொழில்
புரிய பிறந்தவர் நீங்கள். சுத்தத்தின்
மீது அதிகமாக கவனம் செலுத்துவீர்கள்.
நம்பிக்கை மிக்கவராக விளங்கும் நீங்கள்
பிறருக்கு உதவிடும்
குணத்தை கொண்டிருப்பீர்கள்.

e
உங்கள் பெயர் E என்ற எழுத்தில்
தொடங்கினால், பிறரிடம்
தொடர்பு கொள்வதில் வலிமை மிக்கவராக
இருப்பீர்கள். மென்மை மிக்கவரான நீங்கள்
உங்கள் சுதந்திரத்தை விரும்புவீர்கள்.
காந்த பெர்சனாலிட்டியை கொண்டவரான
நீங்கள் நண்பர்களை சுலபமாக
பெறுவீர்கள். காதல் என்று வரும்
போது நீங்கள் அவ்வளவு உண்மையாக
இருப்பதில்லை.

f
உங்கள் பெயர் F என்ற எழுத்தில்
தொடங்கினால், திட்டமிடுவதில் நீங்கள்
சிறந்தவராகவும்,
நம்பிக்கை மிக்கவராகும் விளங்குவீர்கள்.
பிறரின் மீது அக்கறை கொள்வதிலும்,
உங்களை சுற்றியுள்ளவர்களை சந்தோஷமாக
வைத்திருப்பதிலும், நீங்கள் வல்லவராக
இருப்பீர்கள். நன்னம்பிக்கையாளரான
நீங்கள் சிறந்த நகைச்சுவை உணர்வுடன்
விளங்குவீர்கள்.

g
உங்கள் பெயர் G என்ற எழுத்தில்
தொடங்கினால், நோக்கத்துடனான நபராக
இருப்பீர்கள் நீங்கள். புதுமை,
இயல்பு மற்றும் தத்துவம் மிக்கவராக
இருப்பீர்கள். வரலாற்றை படிக்கவும்,
பயணம் செய்யவும் விரும்புவீர்கள்.
மதத்தின் மீது அதிக ஈர்ப்புடன்
இருப்பீர்கள். உங்கள் போக்கில்
வாழவே விரும்புவீர்கள். உங்கள்
விஷயத்தில் அடுத்தவர்களின்
அறிவுரைகள் மற்றும் தலையீட்டை நீங்கள்
விரும்ப மாட்டீர்கள்.

h
உங்கள் பெயர் H என்ற எழுத்தில்
தொடங்கினால், நீங்கள்
பணத்தை சேர்ப்பவராக இருப்பீர்கள்.
புதுமையான சக்தியை குறிக்கும் இந்த
எழுத்து. சுயமாக
ஊக்குவித்து பிறரை சிறப்பான
முறையில் கட்டுப்படுத்துவீர்கள்.

i
உங்கள் பெயர் I என்ற எழுத்தில்
தொடங்கினால், நல்லது எதுவோ அதற்காக
வாழ்பவர் நீங்கள். மேலும்
தைரியசாலியாக திகழ்வீர்கள்.
அழகு மற்றும் நேர்த்தியுடன் இருப்பீர்கள்.
ஃபேஷன் துறையில் மற்றும் இதர
புதுமையான துறையில் சிறந்த
எதிர்காலம் அமையும்.

j
J என்ற எழுத்து மிகப்பெரிய
லட்சியத்தை குறிக்கும். உங்கள் பெயர் J
என்ற எழுத்தில் தொடங்கினால்,
உங்களுக்கு தேவையானவற்றை அடையும்
வரை எதற்காகவும் விட்டு கொடுக்காமல்,
அதை அடைய ஓடுவீர்கள்.
உங்களுக்கு ஏற்ற வகையிலான
அல்லது உங்களை விட ஒசத்தியான
ஒரு வாழ்க்கை துணையை தான் நீங்கள்
தேர்ந்தெடுப்பீர்கள்.

k
உங்கள் பெயர் K என்ற எழுத்தில்
தொடங்கினால், ஒளிவு மறைவுடன்
வெட்கப்படும் குணத்தை கொண்டவர்
நீங்கள். நீங்கள் திடமானவராக
இருந்தாலும், உணர்ச்சிபூர்வமானவராக
இருப்பீர்கள்.
சூழ்நிலைக்கு தகுந்தவாறு சுய
உறுதி கூறும் நபராகவும்,
பொறுப்பை கையில் எடுக்கும் நபராகவும்
விளங்குவீர்கள். வாழ்க்கையில்
அர்த்தமுள்ளதாக எதையாவது செய்ய
வேண்டும் என நினைப்பீர்கள். நீங்கள்
விரும்பியவர்களை அன்புடன் பார்த்துக்
கொள்வீர்கள்.

l
உங்கள் பெயர் I என்ற எழுத்தில்
தொடங்கினால், வாழ்க்கையில்
நிலை கொள்ள அதிகமாக துடிப்பீர்கள்.
அடிக்கடி உறவுகளை மாற்றும் நீங்கள்
யாருடனும் ஆழமான
காதலை கொண்டிருக்க மாட்டீர்கள். தொழில்
ரீதியாக அதிகமாக சம்பாதிக்கும்
உங்களுக்கு நல்ல விதமான தொழில்/
வேலை அமையும்.
m

M என்ற எழுத்து தைரியம்,
அறிவு மற்றும் கடின
உழைப்பை குறிக்கும். உண்மையான
நட்பை உங்களால் கண்டுபிடிக்க
முடியாது. M என்ற எழுத்தில் உங்கள்
பெயர் தொடங்கினால் நீங்கள்
உண்மையுள்ள நண்பனாக இருப்பீர்கள்.
அறிவுரை வழங்குவதில் வல்லவராக
இருக்கும் உங்களுக்கு நம்பத்தகுந்த
துணை கிடைக்கும். உறவுமுறையில்
ஈடுபடும் போது, தன்னை முழுவதுமாக
அதில் அர்பணித்துக் கொள்வார்கள்.

n
N என்ற எழுத்து ஓவிய
திறனை குறிக்கும். துடிப்பு மற்றும்
முயற்சி வேட்கையுடைய
பண்பை கொண்டவரான உங்களை பிறரிடம்
இருந்து விலக்கியே வைக்கும்.
அனைத்திலும்
முழுமையை எதிர்ப்பார்க்கும் நீங்கள்,
உங்கள் துணையை தேர்ந்தெடுப்பதில்
மிகவும் அக்கறை கொள்வீர்கள்.

o
அனைத்தையும் விட அறிவு மற்றும்
கல்விக்கே முக்கியத்துவம் அளிப்பீர்கள்.
உங்கள் பெயர் O என்ற எழுத்தில்
தொடங்கினால், நீங்கள் ஆசிரியராகவோ,
எழுத்தாளராகவோ வருவீர்கள்.
ஒழுக்கத்துடன் இருக்கும் நீங்கள்
எது நல்லதோ, அதன் பக்கமே நிற்பீர்கள்.
உங்கள் துணையிடமும்
அதே குணங்களை தான்
எதிர்ப்பார்ப்பீர்கள்.

p
உங்கள் பெயர் P என்ற எழுத்தில்
தொடங்கினால், நீங்கள் திறமைசாலியாக,
அறிவுக் கூர்மை மிக்கவராக,
புதுமை மிக்கவராக இருப்பீர்கள்.
படபடவென பேசும்
உங்களுக்கு எப்படி குதூகலமாக
இருப்பது என்பது தெரியும். உடல்
தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும்
நீங்கள், நல்ல அழகான துணையை தான்
தேடுவீர்கள்.

q
Q என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள்
நல்ல எழுத்தாளராகவும், பேச்சாளராகவும்
இருப்பீர்கள். பலரும் நாடக
ஆசிரியர்களாகவும்,
இசையமைப்பாளாராகவும்,
நடிகர்களாகவும் இருப்பார்கள்.
அவர்களுக்கு திடமான கருத்துகள்
இருக்கும். அவர்களுக்கு தனித்துவமான
பெர்சனாலிட்டி இருக்கும்.
ட்ரெண்டை பின்பற்றாமல் புதிதாக
உருவாக்குவார்கள்.

r
உங்கள் பெயர் R என்ற எழுத்தில்
தொடங்கினால், உண்மையான,
கருணையான மற்றும் அன்புமிக்க
மனிதராக இருப்பீர்கள். சவால்கள் என்றால்
உங்களுக்கு பிடிக்கும். அதே போல்
அனைத்தையும் சுலபமாக எடுத்துக்
கொள்வீர்கள். அமைதியுடன் வாழ
விரும்பும் நீங்கள், உங்களுக்கேற்ற நல்ல
துணையை தேடுவீர்கள்.

s
S என்பது பாலுணர்வு, கவர்ச்சி மற்றும்
கொடை உணர்வை குறிக்கும்.
உங்களுக்கு கவர்ச்சி என்றால் பிடிக்கும்.
அனைவரின் கவனத்தையும்
ஈர்க்கவே விரும்புவீர்கள். புதிய
ஐடியாக்கள், நிகழ்வுகள்
போன்றவைகளை உருவாக்கி,
அதனை வெற்றி பெற வைக்க கடினமாக
உழைப்பீர்கள். இந்திரிய சம்பந்தமான,
கனவு காணும் நபராக, நேர்மையாக,
மனக்கிளர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
அதே போல் காதலில் விழாமலும் இருக்க
முடியாது. சிறந்த அரசியல்வாதி, நடிகன்
அல்லது மாடலாகலாம்.

t
உங்கள் பெயர் T என்ற எழுத்தில்
தொடங்கினால், எப்போதும் சுறுசுறுப்பாக
இருப்பீர்கள். சில நேரம் அளவு கடந்த
சுறுசுறுப்பால் உங்களால்
உறவுகளை பராமரிக்க முடியாது. உங்கள்
தொழிலில் கவனம் செலுத்த விரும்பும்
உங்களுக்கு,
நினைத்தபடி வேலை நடைபெறவில்லை என்றால்
மன வலி உண்டாகும். மனதளவில்
திடமானவராக விளங்கும் நீங்கள்
வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள்.

u
உங்கள் பெயர் U என்ற எழுத்தில்
தொடங்கினால், அறிவுமிக்க
தனித்துவமான இந்த நபர்கள் சிறந்த
ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர்களாக
விளங்குவார்கள். எதையும் ஒழுங்கற்ற
முறையில் பராமரிக்காமல்
செயல்படுவார்கள். அதனால் இவர்களுடன்
வாழ்வது சற்று கடினமாக விளங்கும்.
ஒருத்தரை திருமணம் செய்வதற்கு பதில்
பல பேருடன் உறவில் ஈடுபடும் அனுபவம்
கிட்டும்.

v
உங்கள் பெயர் V என்ற எழுத்தில்
தொடங்கினால், நீங்கள்
ஒரு நடைமுறைவாதியாக திகழ்வீர்கள்.
உண்மையுள்ள, காதல் உள்ளம் கொண்ட,
மென்மையான இதயம் உள்ளவராக
விளங்குவீர்கள். ஆற்றல் வாய்ந்த
குணத்துடன் இருப்பதால், வாழ்க்கையில்
பலவற்றை சாதிப்பீர்கள். இருப்பினும்
காதல் என்று வந்து விட்டால், மிகவும்
பொஸசிவ் குணம் உடையவாராக
இருப்பீர்கள்.

w
உங்கள் பெயர் W என்ற எழுத்தில்
தொடங்கினால், கொடை உள்ளத்துடன்
இருப்பீர்கள். ஃபேஷனுடன், பாசமிக்க,
சிறந்த காதல் உள்ளம் கொண்டவாராக
இருப்பீர்கள்.
அவர்களை புரிந்து கொள்வது கடினமாக
இருந்தாலும்,
தெரிந்து கொள்வது உத்தமமாகும்.
வாழ்க்கையின் எந்த ரகசியத்தையும்
அவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்.
மனதில் பட்டதை பேசும் அவர்கள்
தெரிந்தே எதையும் மறைப்பதில்லை.

x
உங்கள் பெயர் X என்ற எழுத்தில்
தொடங்கினால், சொகுசை விரும்பும்
உங்களை சுலபமாக வழி நடத்தலாம்.
ஆனால் ஒப்பிய பொறுப்பில் ஈடுபடுத்திக்
கொள்ள விரும்ப மாட்டார்கள்.
வாழ்க்கையில் சொகுசையும்,
சுகத்தையும் எதிர்ப்பார்ப்பீர்கள்.
இயற்கையாகவே வலிய போய் எதிர்
பாலினரிடம் அதிகமாக வலிவீர்கள்.

y
சுதந்திரத்தை குறிக்கும் Y என்ற
எழுத்து. Y என்ற எழுத்தில் பெயர்
தொடங்கினால் நீங்கள் ஒரு துணிச்சல்
மிக்க தொழிலதிபராக இருப்பீர்கள். எந்த
ஒரு இடர்பாட்டை எடுக்கவும் தயங்க
மாட்டீர்கள். செயல்திட்ட
முன்னேற்றமுடைய யோசிப்பாளரான
நீங்கள் பிறரை ஈர்ப்பீர்கள். சுத்தரிக்கப்பட்ட
இவர்கள், வாழ்க்கையில் நடக்கும்
நல்லதை பார்த்து மகிழ்வார்கள்.

z
உங்கள் பெயர் Z என்ற எழுத்தில்
தொடங்கினால், இந்த எழுத்தை உடைய
பெயரை பார்ப்பது அரிது.
இவர்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம்
இருக்க வேண்டும். இவர்கள் ஒரு சிறந்த
கவுன்செலராக இருப்பார்கள்.
பிறரை பற்றி நன்கு புரிந்து கொள்வார்கள்.

Relaxplzz


"சில அதிசயங்கள் - தகவல்கள்" - 2

பெற்ற தாயின் அருமை வளரும் போது தெரியாது...உன் பிள்ளையை நீ வளர்க்கும் போது தான் த...

Posted: 19 Jan 2015 05:54 AM PST

பெற்ற தாயின் அருமை வளரும் போது தெரியாது...உன் பிள்ளையை நீ வளர்க்கும் போது தான் தெரியும்.....


ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 1

ஆரோக்கியத்தோடு சேர்த்து நாம் மறந்து போன விசயங்களில் ஒன்று இந்த அம்மி...

Posted: 19 Jan 2015 05:40 AM PST

ஆரோக்கியத்தோடு சேர்த்து நாம் மறந்து போன விசயங்களில் ஒன்று இந்த அம்மி...


அந்தக் காலத்தில

:) Relaxplzz

Posted: 19 Jan 2015 05:30 AM PST

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒ...

Posted: 19 Jan 2015 05:15 AM PST

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.

Relaxplzz

சிறு வயதிலிருந்து தொடரும் நட்பு, அம்மாவின் சமையல், மனதில் ஊடுருவிச் சென்ற திரையி...

Posted: 19 Jan 2015 05:00 AM PST

சிறு வயதிலிருந்து தொடரும் நட்பு, அம்மாவின் சமையல், மனதில் ஊடுருவிச் சென்ற திரையிசை பாடல்கள், பூர்வீக ஊர், சிறு வயதில் விளையாடிய வீதிகள், படித்த பள்ளிக்கூடம் இவற்றோடு சேர்ந்து என்றும் என் நினைவுகளில் இருந்து நீங்க மறப்பது தென்கச்சி. கோ. சுவாமிநாதன் ஐயாவின் குரல்.

தினமும் காலை அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகும் அவரது 'இன்று ஒரு தகவல்' கேட்க காத்துக் கிடந்த அந்த நாட்கள் மிக இனிமையானவை. மறைந்தது அவரது உடல் மட்டும் தான். அவரது ஆன்மா நம்மிடம் விட்டுச் சென்ற நல்ல சிந்தனைகளில் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.

அவர் கூறியவற்றில் என் மனதில் என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் வார்த்தைகள்-

"எவ்வளவு தூரம் 'நான்', 'என்னிடம்' இருந்து விலகி இருக்கிறீர்களோ, அவ்வளவு தூரம் கடவுளிடம் நெருங்கியிருக்கிறீர்கள்"..

- நல்லதோர் வீணை செய்தே


உன்னை ரசிக்கும் போதெல்லாம் உன் முகத்தை மறைத்து உன்மேல் தான் கொண்ட காதலை என்னிடம்...

Posted: 19 Jan 2015 04:45 AM PST

உன்னை ரசிக்கும் போதெல்லாம் உன் முகத்தை மறைத்து உன்மேல் தான் கொண்ட காதலை என்னிடம் நிருபிக்கப் பார்க்கிறது உன் கைகள்.

#நந்தமீனாள்


இந்த இளைஞர்கள் கண் இமைக்காமல் கணிணியை பார்த்துக்கொண்டிருப்பது கணிணி கல்வி கற்பதற...

Posted: 19 Jan 2015 04:30 AM PST

இந்த இளைஞர்கள் கண் இமைக்காமல் கணிணியை பார்த்துக்கொண்டிருப்பது கணிணி கல்வி கற்பதற்காக அல்ல....

பலகோடி ருபாய் சம்பளம் வாங்கி நடித்து இன்னும் ஏழைகளாக இருக்கும் நடிகர்களின் படத்திற்கு பேனர் வைத்து பால் அபிஷேகம் செய்வதற்காக ஒரு பிளக்ஸ் அடிக்கும் இடத்தில் அமர்ந்திருக்கும் காட்சியே இது....

எங்கு போய் கொண்டிருக்கிறோம்....


முயலின் தன்னம்பிக்கை: ஒரு முயல் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தது. அதற்கு காரண...

Posted: 19 Jan 2015 04:15 AM PST

முயலின் தன்னம்பிக்கை:

ஒரு முயல்
தற்கொலை செய்து கொள்ள
முடிவெடுத்தது. அதற்கு காரணம்.
ஒருபக்கம் வேடன் விரட்டுகிறான்.
இன்னொரு பக்கம் நாய்.... மறுபக்கம்
புலி..

என எந்தப்பக்கம் திரும்பினாலும்
முயலுக்கு எதிரிகள்.
சரி நாம் வாழத்தகுதியற்ற
விலங்கு என்று முடிவெடுத்தது.
எப்படியெல்லாம்
தற்கொலை செய்யலாம்
என்று சிந்தித்துப்பார்த்தது.

இறுதியாக..
குளத்தில்
குதித்து தற்கொலை செய்துகொள்வோம்
என்று சென்றது முயல்.

அப்போது முயலின் வருகைக்கு அஞ்சி அங்கு குளத்தின்
கரையில் இருந்த தவளைகள் குளத்துக்குள் தாவின.
முயல் சிந்தித்தது...

அட!! நம்மையும் பார்த்து பயப்பட இந்த உலகில்
உயிரினங்கள் உள்ளனவா??
என்று தன்
தற்கொலை முடிவை மாற்றிக்கொண்டு தன்னம்பிக்கையோட
ு வாழ்ந்ததாம்.....

"தற்கொலை செய்து கொள்வதற்கு
வலிமையான மனம் வேண்டும்,
அவ்வளவு வலிமையான மனமிருந்தால் நீ ஏன்
சாகிறாய்?

வாழ்ந்துதான் பாரேன்.."

(y) (y)

Relaxplzz

:) Relaxplzz

Posted: 19 Jan 2015 04:00 AM PST

தாம்பிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது. ஏன்? தாம்பிரம் என்னும் செம்பு,...

Posted: 19 Jan 2015 03:45 AM PST

தாம்பிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது. ஏன்?

தாம்பிரம் என்னும் செம்பு, பஞ்ச பூதத்திலே ஒன்றான தீக்கூறு உலோகமாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் கண் தீக்கூறாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

தாம்பிர பாத்திரத்தில் ஊறிய நீரில் கண்கள் கழுவி வரும் பழக்கம் சங்ககால முதல் தமிழகத்தில் வழக்கில் உள்ளது. சித்த மருத்துவத்தில் கண் நோய்களுக்கு செய்யப்படும் அனைத்து மருந்து வகைகளில் செம்பு ஒரு பொருளாக சேர்க்கப்படுவதும், பழக்கிராம்பு பக்குவ எண்ணெய் போன்ற கண் மருந்துகளும்,செப்பு பாத்திரத்தில் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதும் உண்மை.

தாம்பிர பாத்திரத்தில் ஊறிய நீரில் கண்கள் கழுவி வரும் போது,கண் பகுதியில் கிருமிகள் அழிக்கப்பட்டு, கண்ணுக்கு பலனளிப்பதாக நவீன ஆராய்ச்சிகள் உரைக்கின்றன.

- Renuka

Relaxplzz


யாருக்கும் தெரியாம ரெண்டு ஸ்பூன் ஹார்லிக்ஸை அள்ளி வாயில போடுறதெல்லாம், அவ்வளவு...

Posted: 19 Jan 2015 03:30 AM PST

யாருக்கும் தெரியாம ரெண்டு ஸ்பூன் ஹார்லிக்ஸை அள்ளி வாயில போடுறதெல்லாம்,

அவ்வளவு ஈஸியான காரியமல்ல..

- சுஜாதா தேவி


:) Relaxplzz

Posted: 19 Jan 2015 03:15 AM PST

தமிழ் சினிமா கண்ட மாபெரும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு, தங்களின் "ஐ...

Posted: 19 Jan 2015 03:00 AM PST

தமிழ் சினிமா கண்ட மாபெரும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு,

தங்களின் "ஐ"(ய்யே) காவியம் கண்டேன். விக்ரம் போன்ற வித்தியாச நடிப்பு வெறி கொண்டவர்களும், ஆஸ்கர் ரவிச்சந்திரன் போன்ற தயாரிப்பாளர்களின் பணவெறிக்கும், கோடிக்கணக்கான ரசிகர்களின், ரசிக மனோபாவத்திற்கு பின்னுள்ள பெண்களின் மீதான பாலியல் வெறிகளுக்கும், ஹீரோயிசம் எனும் பொறிக்கித்தனங்களுக்கும், நாயகவழிபாட்டிற்கெல்லாம் தஞசம் தரும் ஆலயம, "a Shankar film" தான் என்பதை அறியாதார் யார்?!

நியாயமான ஒரு படைப்பை புரிதலின்றி மததுவேசமாக சித்தரித்து அப்படைப்பையும், படைப்பாளியையும் பின்வாங்க செய்யும் அதேவேளையில் தான் உங்களின் படைப்புச் சுதந்திரத்தின் வெற்றியையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இதே மத துவேசத்தை காரணம் காட்டி "'டாவின்சி கோட்'' தடை செய்யப்பட்ட நாட்டில், இதே மத துவேசத்தை காரணம் காட்டி தற்காலிக தடை செய்யப்பட்டு, அதுவே பெரும் விளம்பரமுமாகி வணிக வெற்றியும் அடைந்த ''விஸ்வரூபம்'' படம் வெளியானதும் இங்கேதானே..

ஆனால், தாய்நாட்டு அகதிகளான, பாலியல் வெறியர்களான, அருவெருப்பான சமூக விரோதிகளான எங்களை எப்படியும் சித்தரிக்ககூடிய அருகதை கொண்ட தங்களைப் போன்ற மகா கலைஞர்களை மட்டும் யாரும் எதுவும் கூறப்போதில்லை.

சமீபகாலமாக வலைதளங்களில் திரைப்படங்களை துவைத்து, கிழித்து தொங்கபோடும் வலைதள விமர்சகர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானவர்களுக்குகூட இந்த 'ஐ' படம் அவர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றவில்லை என்ற ஆதங்கம் தான். இம்மொக்கை கதை, திரைக்கதையை கலாய்த்த அளவிற்கு ஒன்பதுகளை காயப்படுத்தியதைப் பற்றி கண்டுகொள்ளவில்லை. இன்னும் கூடுதலாக ஒரு விமர்சகர் '' இதில் ஒரு 'நயன்'தாரா வேறு வில்லன்..!!'' என்று எழுதியிருக்கிறார். குறைந்தபட்சம் இந்த ஆபத்தான ரசனையை வளப்படுத்திய விதத்தில் நீங்கள் உள்ளம் குளிர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

பிரம்மாண்டம், பிரம்மாண்டமான செட், பிரம்மாண்டமான கலைஞர்கள், அதிபிரம்மாண்டமான பட்ஜெட் தாண்டி ''அதற்கும் மேல''யும் சில விசயங்கள் இருப்பதை தங்களின் பிரம்மாண்ட மூளைக்கு முன் பகிர்ந்து கொள்ள இச்சிறுமதியாள் விரும்புகிறேன்.

"சிவாஜி" படத்தில் போகிற போக்கில் திருநங்கைகள் மீது காறி உமிழ்ந்ததை நினைத்துப் பார்க்கிறேன். சின்ன கலைவாணர் அவர்கள் ''இப்பத்தான் ஆப்பரேசன் பண்ணிட்டு வந்திருக்கு'' என்று ஏளனமாக கூறியதும் ''சீ..சீ…'' என்று அருவெறுப்புடன் எங்கள் சூப்பர் ஸ்டார் விலகிச் சென்றதை தூசி தட்டி தற்போது ''அதற்கும் மேல'' ப்ரம்மாண்டமாய் காறி துப்பியதைத் தான் பேச விரும்புகிறேன்.

வழக்கமான நாயகன் போலவே இதிலும் விக்ரம் அவர்கள் மிக ஆண்மையுடன் வில்லனை பார்த்து, முதல் பத்து நிமிடங்களிலேயே ''டே… பொட்ட..'" என்கிறார். நான் அதிர்ச்சியடையவில்லை, நானும் என்னை போன்ற பொட்டை பிறவிகளும் தமிழ் சினிமாவின இத்தகைய தொடர் பதிவுகளால் இவற்றிக்கு நன்கு பழகியிருக்கிறோம். விக்ரம் அவர்களுக்கும் கூட இந்த வசனம் ஒன்றும் புதிதல்ல, தனக்கு மிகப்பெரிய ப்ரேக் கொடுத்த பாலா அவர்களின் ''சேது'' படத்தில் கூட "டே.. இப்பிடி பண்ணி பண்ணியே ஒருநாள் நீ அஜக்காவே மாறப்போற…" என்று சொன்னவர்தான். அதற்கு பிறகு இச்சொல்லாடலை அவர் பயன்படுத்தாத படங்களின் எண்ணிக்கைதான் குறைவாக இருகக்கூடும்.

''சதுரங்க வேட்டை'' என்னும் சமூக அக்கறை கொண்ட படமியக்கிய திரு.வினோத் அவர்களே ''பொட்ட'' என்று சொல்லாடலை எளிதாக பயன்படுத்துகையில்,, அதனை பிரபல திரைவிமர்சகர்களான கேபிள்சங்கர்களும் சப்பைக்கட்டு கட்டும் போது, உங்களிடம் மட்டும் அந்த கரிசனத்தை நாங்கள் எதிர்பார்க்கவா முடியும்.

அதுசரி உங்களால் ''பொட்டை'' என்று அறியப்படும் நாங்கள் உங்கள் ஆண்மை பராக்கிரமத்திற்கு முன் அப்படி என்னதான் குறைந்து விட்டோம்?! உள்ளம் முழுதும் பெண்மை குடியிருப்பதை அறிந்து எம்பாலினத்திற்கு நேர்மையாக இருக்கிறோமே ''அதற்கும் மேல''வா உங்கள் பராக்கிரமம் சிறந்தது? திருநங்கையாக குடும்பத்தையும், அது தரும் அரவணைப்பையும், பாதுகாப்பையும் விட்டு வெளிவர துணிச்சல் இருக்கிறதே ''அதற்கும் மேல''வா உங்கள் பராக்கிரமம் சிறந்தது? இந்திய பிரஜைக்குரிய சகல உரிமைகளும் மறுக்கப்பட்டு தாய்நாட்டு அகதிகளாவோம் என்பதை அறிந்தும் திருநங்கையாக குடும்பத்தை விட்டு வெளியேறுகிறோமே ''அதற்கும் மேல''வா உங்கள் பராக்கிரமம் சிறந்தது? பெற்றோர்களின் சொத்துசுகம் எதுவிமில்லாமல் சூன்யத்திலிருந்து எங்கள் வாழ்க்கையை நிர்கதியாக துவங்கி அடுத்தவர்களை சாராமல் வாழ்கிறோமே ''அதற்கும் மேல''வா உங்கள் பராக்கிரம்ம் சிறந்த்து? தெருவிலும், வெள்ளித்திரையிலும் உங்கள் ஆண்பராக்கரசாளிகள் சொல்லாலும், செயலாலும் எங்கள் மீது நிகழ்த்தும் வன்முறைகளை துணிவோடு எதிர்கொண்டு தொடர்ந்து செல்கிறொமே ''அதற்கும் மேல''வா உங்கள் ஆண்மை பராக்கிரமம் வாய்ந்தது? அல்லது 'பொட்டைகள்' சோத்தில் உப்பு போட்டு தின்பதில்லை என்பது உங்களின் திண்ணமான எண்ணமா??

"ஐ" என்ற தலைப்பிற்கேற்ப ஐந்து வில்லன்கள் வேண்டுமென்று யோசித்தது சரி. அதற்கும் மேலே, கதைக்களத்திற்கேற்ப அதே துறைசார்ந்த வில்லன்களாக வைத்த உங்களின் மெனக்கெடலை பாராட்டுகிறேன்.. அதற்கும் மேல, பிரம்மாண்டமாக, ரிச் லுக்குடன், அதேசமயத்தில் வித்தியாசமான, காமடியான, வில்லன் வேண்டுமென, ஒரு ஸ்டைலிஸ்டாக திருநங்கையை வைத்த்தையும், அதுவும் ஆதண்டிக்காக இருக்க வேண்டுமென்பதற்காக உலக அழகியையே, அழகாக காட்டிய நிஜ ஸ்டைலிஸ்ட் ஓஜாஸ் ரஜினியையே ( எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராயை அழகாய் காட்டியவர் இவர்தான்.. மொழி தெரியாத அவருக்கு என்ன கதை சொல்லி நடிக்க வைத்தீர்கள் என்பது தங்களுக்கே வெளிச்சம்.) நடிக்கவைத்ததில் நிஜமாகவே நான் மெரசலாகிட்டேன். ஆனால், அந்த கீழ்த்தரமான பாத்திரத்திற்கும் அவரது நிஜபேரான ஓஜாஸ்'யையே வைத்ததன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் இயக்குநரே?

தான் வியக்கும், விரும்பும் அழகியாலயே இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்டைலிஸ்ட் என்று அறிமுகப்படுத்தப்பட்ட போதும், ஓஜஸ் மீது நாயகனுக்கும், நண்பனுக்கும் அவ்வளவு கீழ்த்தரமான பார்வையேன் வருகிறது. எல்லா இன்னல்களையும் கடந்து பல திருநங்கைகள் பல துறைகளில் சாதித்து வருகிறார்கள் தான். ஆனாலும், அவர்கள் ஏளனத்திற்குரியவர்கள், என்பதை பார்க்கும் ரசிகர்கள் மனதில் உறுதியாக விதைக்கத்தானே?!. தமிழ் ரசிகர்களே திருநங்கைகளை கலாய்க்க, ''காஞ்சனா'' (திருநங்கைகளை சற்று கண்ணியமாகிய படம் என்றாலும், இறுதியில் அதையும் கலாய்க்க பயன்படுத்தும் ரசிகர்களை எண்ணி வியக்கேன்..!!) என்று அழைக்க அப்டேட் ஆகியிருக்கும் நிலையில் ''ஊரோரம் புளியமரம்.." என்று பாடுவது எதனால்? நீங்கள் எதிர்பார்த்ததை போலவே அந்த காட்சியில் ரசிகசிகாமனிகள் அரங்கம் அதிர சிரித்தார்கள்தான். என்ன அந்த அருவெறுப்பான சிரிப்பை மீறி, முதல்வன் படத்தில் வரும் புகழின் அம்மாவைப்போல என்னைப் போன்ற 'பொட்டை'களை பெற்ற அம்மாக்களின் கேவல்கள் உங்கள் காதை எட்டியிருக்காது.

அதெப்படி, வெறும் திரையிலும், பொஸ்டர்களிலும் மட்டுமே கண்ட ஒரு அழகியை, அவள் அழகி என்பதால் மட்டுமே ஒரு ஆணழகன் காதலித்துவிடமுடியும், அதுவும் உண்மையான, நியாயமான, கல்மிஷம் இல்லாத காதலாகிறது., குற்றவுணர்வாலும், பரிதாபத்தாலும் ஒரு அழகியால், ஆணழகனை பரிசுத்தமாக காதலிக்கு முடிகிறது. ஆனால், ஒரு திருநங்கையின் காதல் உணர்வு மட்டும் எப்படி தங்களுக்கு அவ்வளவு நாராசமானதாகிறது. அவள் காதல், நாயகனால் மட்டுமல்ல, நண்பனாலும், நாயகியாலும், படத்தில் வரும் விளம்பர பட இயக்குநராலும் அருவெறுப்பாகவே பார்க்கப்படுகிறது. அதாவது இப்படத்தின் இயக்குநராகிய நீங்கள் வெறுப்பதைதான் சூசகமாக கூறுகிறீர்கள் இல்லையா?

அவரை ரிச்-திருநங்கையாக, காட்ட ஆரம்பத்தில் அழகான கேமரா ஆங்கிளை பயன்படுத்திய நீங்கள். அவரது காதல் புறக்கணிக்கப்படும் கணம் முதல் அவரை அசிங்கமாக மட்டுமே காட்ட பயன்படுத்திய காமிரா ஆங்கிளில் அசிங்கமாக தெரிந்தது ஓஜஸ் மட்டும் இல்லை நீங்களும்தான் என்பதை உணர்ந்தீர்களா?

இவ்வளவு வரைக்குமே உங்களிடம் நாகரீமாகத்தான் கோவம் கொள்ள நினைத்திருந்தேன். ஆனால், "9'" என்ற அறையெண்ணை காட்டி பின் ஓஜாஸை காட்டிய உங்கள் அரதபழசான, அருவெறுப்பான விளையாட்டை எண்ணி என்னால் கெட்டவார்த்தைகளால் வசைபாடாமல் இருக்கமுடியல்லை. ஏனெனில், இதே ''9'' என்ற சொல்தான், என் பள்ளிகாலம் முழுதும் முள்ளாக குத்தி, கண்ணீர் சூழ சக மாணவர்களிடமிருந்து என்னை தனிமைப்படுத்தியது. இதே ''9'' என்ற சொல்தான், இப்போதுவரையிலும் எந்த அற்பனும் என்னை சிறுமைபடுத்த பேராயுதமாக பயன்படுத்துகிறான். அவற்றோடு கூடுதலாக சமூகம் கற்றுக்கொடுத்த கெட்டவார்த்தைகள்தான் இப்போது என் கைவசம் இருப்பவை.

இருந்தாலும், கேபிள்சங்கர் போன்ற விமர்சனசிகாமனிகள் எனக்கு 'நாகரீக வகுப்பு' எடுப்பார்களே என்று அஞ்சி நானாகவே நாகரீகமாகவே தொடர்கிறேன்.

''இப்படத்தில் எந்த மிருகங்களும் துன்புறுத்தப்படவில்லை'' என்ற டிஸ்க்லைமருடன் துவங்கும் இப்படத்தில் தான், கிடைக்கும் ஒரு வாய்ப்பை கூட விடாமல் பாலியல் சிறுபான்மையினர் முதல், மாற்றுத்திறனாளிகள் வரை காயப்படுத்த தங்களுக்கு கட்டற்ற சுதந்திரம் அளித்திருக்கிறது நமது சென்சார் போர்ட். அதன் தாராள மனதை கண்டிக்காமல் உங்களை மட்டும் கேள்வி கேட்டு என்ன பயன்?

ஒரேயொரு படத்திற்காக இத்தனை மெனக்கெடலையும், கடின உழைப்பையும், தனது நேரத்தையும் கொடுத்து மகாகலைஞனாக உயர்ந்து நிற்கும் விக்ரமிடம் இதுபோன்ற அற்பகாட்சிகளின் நடிக்க வேண்டாமென என்னால் வேண்டுகோள் கூட வைக்கமுடியவில்லை. ஏனெனில், அடுத்த உலகநாயகனாக வேண்டுமென துடிக்கும் அவரது ஆதர்ச நாயகனான கமலும் கூட, வாசிப்பும், பகுத்தறிவும் கொண்ட நடிகரென நவீன இலக்கியவாதிகள் ஈசிக்கொள்ளும் அதே கமல்ஹாசன் அவர்களும்தான் 'பொட்டை'என்னும் சொல்லாடலை தொடர்ந்து தமது படங்களிலும், "அதற்கும் மேல" ''வேட்டையாடு, விளையாடு'' படத்தில் திருநங்கைகளையும், சமபால் ஈர்ப்பினரையும் தனது பங்கிற்கு சிறப்பாக மலினப்படுத்தியிருக்கிறாரே…

உங்கள் இருவருக்கும் மட்டுமன்றி, அனைத்து நடிகர்கள், காமடியன்கள், இயக்குநர்களுக்கும், ஒரேயொரு தகவல்.. நீங்கள் கொண்டாடும் ஆண்பராக்கிரமசாளிகள் மட்டுமே உங்கள் ரசிகர்கள் அல்ல. உங்களால் ஏலியனாக கருதப்பட்டு, மலினப்படுத்தப்படும் நாங்களும் உங்களின் ரசிகர்கள்தான். எங்கள் வீட்டிலும் டிவி பெட்டி உண்டு. நாங்களும் படங்கள் பார்க்கிறோம். ரசிக்கிறோம், சிரிக்கிறோம், அதுமட்டுமல்ல தவறாமல் சோற்றிலும் உப்பு போட்டுதான் சாப்பிடுகிறோம் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

P.s. உடன்படும் தோழர்கள் இப்பதிவை பகிர்ந்தால் உதவியாக இருக்கும். நன்றி..

https://www.facebook.com/livsmile/posts/10203409440813251

- Living smile Vidya.

Relaxplzz

எர்வாமேட்டின் ஏமாற்றும் ரகசியம்...! --------------------------------------------...

Posted: 19 Jan 2015 02:45 AM PST

எர்வாமேட்டின் ஏமாற்றும் ரகசியம்...!
----------------------------------------------------------
இந்த ஆயில் செய்ய தேவையான
மூலிகையை அமேசான் காட்டுல இருந்தும்
கொண்டும் வரல, முதுமலை காட்டிலிருந்தும்
கொண்டு வரல.
நம்ம கிராமங்களில் கிடைக்கும் "பீக்களா செடி"
என்னும்
கிரிமி நாசினி செடியிலிருந்து செய்யபடுவது தான்
இந்த ஆயில்.
இது பயங்கர நாற்றம் அடிக்கும் செடி,
இதை அறைச்சி தலையில்
தடவி குளிச்சாலே தலையில் இருக்கும்
கிருமிகள் அழிந்து, முடி வளர உதவும், இந்த
செடியை கர்நாடகாவில் 5000 ஏக்கர் பரப்பளவில் பயிர்
செய்யபட்டு ஏற்றுமதி ஆகி, அங்கிருந்து ஆயிலாக
இங்க வருகிறது,
உங்க ஊரில் இருந்தால் நீங்களும்
டிரை பண்ணி பாருங்க.

Relaxplzz


தயவுசெய்து இதனை SHARE செய்யுங்கள்.. 2025ல் இந்தியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம்...

Posted: 19 Jan 2015 02:30 AM PST

தயவுசெய்து இதனை SHARE செய்யுங்கள்..

2025ல் இந்தியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் வரும் எச்சரிக்கை ரிப்போர்ட்

தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்ட அளவு குறைந்து கொண்டே செல்கிறது. குளங்கள் வற்றுவதால் சூழ்நிலை சீர்கேடு, தண்ணீருக்கான சண்டைகள் அதிகரித்து வருகிறது. இப்படியே போனால் 2070 ல் தமிழ்நாடு பாலைவனமாக மாறும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கின்றனர்.

தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் 2025ம் ஆண்டு இந்தியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள் தண்ணீரின் பொருட்டு உலக அளவில் எழும் பிரச்னைகளை ஆய்வு செய்து அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் இந்தாண்டை (2013) சர்வதேச தண்ணீர் ஒத்துழைப்பு ஆண்டாக ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்துள்ளது.

நீரின்றி அமையாது உலகு... இது வள்ளுவர் வாக்கு. இன்னொரு உலகப் போர் மூண்டால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அந்த அளவிற்கு தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் 2030ல் தண்ணீர் தேவை 6900 பில்லியன் கன மீட்டராக அதிகரிக்கும் என ஐ.நா.வின் நீர்வள ஆதார மையம் கணித்துள்ளது.

பருவநிலை மாற்றம், வெப்பமடைந்து வரும் பூமி, அதிகரித்து வரும் மக்கள் தொகை, போன்ற காரணங்களால் உலகின் பல்வேறு நாடுகளில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உலகநாடுகளிடையே தண்ணீர் பகிர்வில் ஒருமித்த கருத்துணர்வு, ஒற்றுமையை உருவாக்கும் முயற்சியை ஐ.நா மன்றம் மேற்கொண்டுள்ளது ..

Relaxplzz


:) Relaxplzz

Posted: 19 Jan 2015 02:15 AM PST

தமிழ் நாகரிகத்தின் உச்சங்கள் ============================= 1. உலகின் முதன் முதல...

Posted: 19 Jan 2015 02:01 AM PST

தமிழ் நாகரிகத்தின் உச்சங்கள்
=============================

1. உலகின் முதன் முதலில் சித்திர எழுத்தைக் கண்டவன் தமிழன். அதிலிருந்து வட்ட எழுத்து, கோட்டு எழுத்து, நகர்ப்புற நகரி எழுத்து என்று பல்வேறு காலச்சூழலில் பல்வேறு எழுத்துகளைப் படைத்தவனும் தமிழன். படைத்ததோடு மட்டுமின்றி உலகெங்கும் அவற்றைப் பரப்பியவனும் தமிழன்.

2. சங்கங்கள் அமைத்து, மொழியை வளர்த்தவனும் தமிழன்தான். ஏறத்தாழ 10,000 ஆண்டுகளாய் இந்நிலை இருந்து வந்தது.

3. சாதி, சமயம் சிற்சில விதிவிலக்குகளைத் தவிர - சங்க இலக்கியங்களில் இல்லை, இல்லவே இல்லை. ஆனால் உரோமபுரி, கிரேக்கம், சீனம், எபிரேயம்(பிப்ரு) போன்ற எந்த மொழியின் தொடக்க கால இலக்கியங்கள் யாவும் சமயம் சார்பாகவும், மந்திர தந்திர வித்தைகளைக் கொண்டுள்ளதாகவும் இருக்கக் காண்கிறோம்.

4. தத்துவங்கள், வேதாந்தங்கள் யாவுமே தமிழனுக்கு மட்டும் சொந்தமாய் இருந்தன. தமிழன் இவற்றைக் காப்பாற்றாததால், பிறர் பிற எழுத்துகளில் பொதிந்து வைத்திருக்கின்றனர்.

5. அறநூல்களிலும் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கோட்பாட்டிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவன் தமிழன். திருக்குறளைக் காட்டிலும் வேறு என்ன வாழ்வியல் நூல் வேண்டும்?

6. 10,000 ஆண்டுகளுக்கு முன்பே சிந்துவெளி - ஹரப்பா நாகரிகங்களை உருவாக்கியவன் தமிழன். அதன் தொடர்ச்சியாக லோத்தல் முதல் ஆந்திர பொட்டி புரலுவரை கொண்டு சென்றவன் தமிழன். இம்மட்டோ? பத்தாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஈஸ்டர் தீவில் குடியேறி அங்கும் அவ்வெழுத்துகளைப் பொறித்தவன் தமிழன்.

7. பிற நாடுகளில் கற்கால நாகரிகமும் செம்பு நாகரிகமும் நிறைவேறாத காலத்திலேயே இரும்பை வடிக்கவும் வார்க்கவும், உருக்கு செய்யவும் கற்றுக் கொண்டவன் தமிழன். ரோமாபுரி வீதிகளிலும், கிரேக்க நாட்டுச் சிற்றூர்களிலும் தமிழன் வடித்த வேலும், வாளும், ஈட்டியுமே நிறைந்திருந்தன.

8. மருத்துவத் துறையிலும், அறுவை மருத்துவத்திலும் தமிழர்கள் தன்னிகரற்று விளங்கினர். மருத்துவ சேவைக்குச் சென்றனர். முன்னாளில் உலகப் பெரும் விஞ்ஞானியராகத் தமிழரே திகழ்ந்தனர். இயற்கை வளமும், மூலிகைத் தளமும் இதற்கு உதவின.

9. கல்வி கற்பதிலும், தமிழர்கள் திகழ்ந்தனர். சீனமொழி எழுத்தைத் திருத்தியவர்கள் தமிழர்கள். கொரிய மொழிக்கு தமிழை ஒட்டிய எழுத்து முறையைத் தந்தவர்கள் தமிழர்கள். சப்பான் மொழியையும் எழுத்தையும் செப்பம் செய்தவர்கள் தமிழர்கள்.

10. உலகில் அதிக அளவில் பருத்தி விளைவித்து ஆடையாக ஆக்கியவர்கள் தமிழர்கள். சாயமிடக் கற்றுக் கொண்டவர்களும் தமிழர்களே.

தமிழ் இலக்கியம்
=================

தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் மொழியில் மரபுரீதியாக 96 இலக்கிய நூல் வகைகள் உண்டு. இன்று தமிழ் மொழியில் பல புது இலக்கிய வகைகள் உருவாக்கப்பட்டு தமிழ் இலக்கியம் விரிந்து செல்கின்றது.

பண்டைக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்கள் என்றும் அழியாத தமிழ் இலக்கியங்களை இயற்றி பல நல்ல கருத்துகளை வெளியிட்டுள்ளனர். தமிழில் உள்ள இலக்கியங்களில் மிகவும் பழமையானவை சங்க இலக்கியங்கள் ஆகும்.

மு. வரதராசனின் தமிழ் இலக்கியம் என்னும் நூலில் தரப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய கால வகைப்பாடு பின்வருமாறு.

பழங்காலம்
சங்க இலக்கியம் (கிமு 300 - கிபி 300)
நீதி இலக்கியம் (கிபி 300 - கிபி 500)
இடைக்காலம்
பக்தி இலக்கியம் (கிபி 700 - கிபி 900)
காப்பிய இலக்கியம் (கிபி 900 கிபி 1200)
உரைநூல்கள் (கிபி 1200 - கிபி 1500)
புராண இலக்கியம் (கிபி 1500 - கிபி 1800)
புராணங்கள், தலபுராணங்கள்
இஸ்லாமிய தமிழ் இலக்கியம்
இக்காலம்
பத்தொன்பதாம் நூற்றாண்டு
கிறிஸ்தவ தமிழ் இலக்கியம்
புதினம்
இருபதாம் நூற்றாண்டு
கட்டுரை
சிறுகதை
புதுக்கவிதை
ஆராய்ச்சிக் கட்டுரை

நீட்டலளவு
===========

10 கோன் – 1 நுண்ணணு
10 நுண்ணணு – 1 அணு
8 அணு – 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் – 1 துசும்பு
8 துசும்பு – 1 மயிர்நுணி
8 மயிர்நுணி – 1 நுண்மணல்
8 நுண்மணல் – 1 சிறுகடுகு
8 சிறுகடுகு – 1 எள்
8 எள் – 1 நெல்
8 நெல் – 1 விரல்
12 விரல் – 1 சாண்
2 சாண் – 1 முழம்
4 முழம் – 1 பாகம்
6000 பாகம் – 1 காதம்(1200 கெசம்)
4 காதம் – 1 யோசனை


"தமிழ் - தமிழர் பெருமை" - 1

0 comments:

Post a Comment