Relax Please: FB page daily Posts |
- பெண் அப்பா நான் லவ் பண்ணறேன்.. அப்பா : பையன் எந்த ஊரு.. பெண்: UK ல இருக்கான்.....
- :) Relaxplzz
- சிட்டி பெண்களின் அட்டகாசமான கிராமத்து பொங்கல் சென்னை அண்ணாநகர் வள்ளியம்மாள் கல்...
- தொலைத்த கைத்தொலைபேசி இருக்கும் இடத்தை கண்டு பிடிப்பது Track செய்வது எப்படி ? இந...
- 111 பழங்களின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில்.... 111 பழங்களின் பெயர்கள் இங்க...
- (y) Relaxplzz
- ஒருவருடைய கண்களில் இருந்து கண்ணீர் வரும் போது, இன்னொருவருடைய கண்களில் இருந்து கண...
- :O @relaxplz
- அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- #கஸ்டமர்: இந்தக் கண்ணாடிக்கு கியாரண்டி உண்டா..? ஓ! இந்தக் கண்ணாடிய 100 அடி உய...
- :) Relaxplzz
- உங்களுக்கு தெரியுமா...? ;-)
- இதுவும் தொட்டால் சினுங்கிதான் தொடாமல் பார்ககும் வரை!! ;-)
- :) Relaxplzz
- #வெற்றிலை!!! மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன்பாட்டில் இருந்த...
- நம் நாட்டுக்காக ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்வீர்களா...? .......PLEASE SHARE...
- என்னை இஷ்டம் போல திட்டிவிட்டு கடைசியாக உன்னை ரொம்ப பிடிக்கும் என்பாள்! அதுதான் அ...
- பொதுவாக அவசர உதவிக்கு நாம் அழைப்பது ஆம்புலன்ஸ் வண்டிகளைத் தான். ஆனால், சற்றுப் ப...
- எதுவுமே ப்ளான் பண்ணிதான் செய்யனும் ;-)
- :) Relaxplzz
- இந்த காரட் விண்வெளி போகுதோ ;-)
- தெரிந்து கொள்வோம் :)
- "ஹலோ, பேஸ்புக் ஓனரா? எப்ப சார் கடைய(Facebook) மூடுவீங்க. உங்களால எங்க நிம்மதி ப...
- குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள். 1. குழந்தையிடம் நீங்கள் உண்மையே...
- :) Relaxplzz
- தமிழன் சாதித்த கட்டிடக்கலை!! இடம் : கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம்
- தீபாவளிக்கு ட்ரெஸ் எடுத்த அதே இடத்துலயே பொங்கலுக்கும் ட்ரெஸ் எடுக்கலாம்னு இருக்க...
- வாழைப்பழ சிப்ஸ் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- :) Relaxplzz
- :P Relaxplzz
Posted: 14 Jan 2015 09:38 AM PST பெண் அப்பா நான் லவ் பண்ணறேன்.. அப்பா : பையன் எந்த ஊரு.. பெண்: UK ல இருக்கான்... அப்பா : நீ இங்க இருக்க, அவன் அங்கே.. எப்படி? பெண் : FACE BOOK மூலமா நண்பர்கள் ஆனோம் ... WEBSITE மூலமா நானும் அவனும் டேட்டிங் கூட போய் இருக்கோம் ...... WHATSAPP ல ரெம்ப நாளா சாட் பண்ணறோம்... நாங்க லவ் I ஷேர் பண்ணினது SKYPE ல, அப்புறும் VIBER மூலமா கணவன் மனைவியா வாழறோம் ... அப்பா, எங்களுக்கு உங்க ஆசிர்வாதம் வேண்டும் ... அப்பா : நிஜமாவா!!!! அப்பறம் என்ன TWITTER மூலமா கல்யாணம் பண்ணிக்கோங்க... ONLINEல ஜாலியா இருங்க... E - BAY 2 ல குழந்தைகளை வாங்கிக்கோங்க... G MAIL மூலமா அவனுக்கு அனுப்பு... எப்போ வாழ்க்கை பிடிக்கலையோ, அப்போ குழந்தைகளை OLX மூலமா வித்துடு.... அவ்வுளவுதான்.... பெண் : !!!!! செம காமடி!!! வெளிய போய் சிரிங்க! வெளிய போய் சிரிங்க (Sema Comedy) :P :P Relaxplzz |
Posted: 14 Jan 2015 09:35 AM PST |
Posted: 14 Jan 2015 09:20 AM PST |
Posted: 14 Jan 2015 09:10 AM PST தொலைத்த கைத்தொலைபேசி இருக்கும் இடத்தை கண்டு பிடிப்பது Track செய்வது எப்படி ? இந்த நவீன யுகத்தில் அனைவரும் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்ககளை பயன்படுத்துகின்றனர். அனைவரின் கைகளிலும் தற்போது புகுந்து விளையாடுவது Samsung ஸ்மார்ட் போன்கள் தான். உங்கள் விலை உயர்ந்த சாம்சங் தொலைபேசி தொலைந்து போகும்பொது உங்கள் மனநிலையை மிகவும் பாதிக்கும். அத்தோடு சேர்ந்து உங்கள் விலை மதிப்பற்ற தகவல்களும் தொலைந்து போதுவதும் பெரும் இழப்பை தங்களுக்கு ஏற்படுத்தும். வரு முன் காப்போம் Samsung Smart Phone கள் தொலைந்து போனால் அதை எப்படி கண்டு பிடித்தப்து அதை எவ்வாறு இருக்கும் இடத்திலிருந்தே இயக்குவது உள்ள விபரங்களை இங்கே வழங்கியுள்ளோம். இதற்கு உங்கள் தொலைபேசி ஒரு ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போனாக இருக்க வேண்டும். முதலில் உங்கள் தொலைபேசியை எதிர்கால நன்மை கருதி முன்னேற்பாடக தயார்படுத்த வேண்டும். அதற்கு பின்வரும் ஆப்சனை உங்கள் போனில் பயன்படுத்தவும். remote-setting 1. Settings-> Location & Settings ->அங்கே Remote Controls என்பதில் Tick செய்யவும். 2. அப்போது உங்கள் Samsung Account Username & Password என்பவற்றை உட்செலுத்த கேட்கும். ஏற்கனவே உங்களுக்கு Samsung பயனர் கணக்கு இல்லை எனில் புதிதாக ஒன்றை ஆரம்பிக்கவும். 3.இப்போது விதிமுறைகள் (Conditions Agreement) பற்றிய பக்கம் காண்பிக்கப்படும். அதில் I agree என்பதை சொடுக்கவும். அவ்வளவு தான் இப்போது உங்கள் தொலைபேசி தயாராகி விட்டது. இப்போது உங்கள் தொலைபேசி தொலைந்தாலோ அல்லது உங்கள் வாழ்க்கை துணை , பிள்ளைகள் பயன்படுத்தினாலோ அது இருக்கும் இடம், பயணம் செய்த பாதை, அதன் அழைப்பு விபர பட்டியல் (call Logs) மற்றும் ஏராளமான விசயங்களை Track செய்ய செய்து கொள்ளலாம். Relaxplzz |
Posted: 14 Jan 2015 09:00 AM PST 111 பழங்களின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில்.... 111 பழங்களின் பெயர்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. சில பழங்களுக்கு அதன் தமிழ்ப் பெயர் தெரியாதபடியால் ஆங்கிலப் பெயர்கள் பாவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தப் பட்டியலில் இடம்பெறாத ஈச்சம்பழம், இலந்தைப்பழம், பாலைப்பழம் போன்ற பல பழங்களிற்கு அவற்றிற்கு ஈடான ஆங்கிலப் பெயர்கள் தெரியாதபடியால் இணைக்கப்படவில்லை. தெரிஞ்சா சொல்லுங்கப்பா.. #A Ambarella ------ அம்பிரலங்காய் Apple ------ அரத்திப்பழம், குமளிப்பழம், சீமையிலந்தப்பழம் Apricot ------ சருக்கரை பாதாமி Annona ------ சீத்தாப்பழம் Annona muricata ------ முற்சீத்தாப்பழம் Avocado ------ வெண்ணைப்பழம் #B Banana ------ வாழைப்பழம் Batoko Plum ------ 'லொவிப்'பழம் Bell Fruit ------ பஞ்சலிப்பழம், சம்பு Bilberry ------ அவுரிநெல்லி Bitter Watermelon ------ கெச்சி Blackberry ------ நாகப்பழம் Black currant ------ கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி Blueberry ------ அவுரிநெல்லி Breadfruit ------ சீமைப்பலா, ஈரப்பலா, கொட்டைப்பலா Butter fruit ------ ஆனைக்கொய்யா #C Cantaloupe ------ மஞ்சள் முலாம்பழம் Cashew Fruit ------ முந்திரிப்பழம் Carambola ------ விளிம்பிப்பழம், தமரத்தங்காய் Cherry ------ சேலா(ப்பழம்) Cherimoya ------ சீத்தாப்பழம் Chickoo ------ சீமையிலுப்பை Citron ------ கடாரநாரத்தை Citrus Aurantifolia ------ நாரத்தை Citrus Aurantium ------ கிச்சலிப்பழம் Citrus medica ------ கடரநாரத்தை Citrus sinensis ------ சாத்துக்கொடி Citrus reticulata ------ கமலாப்பழம் Clementine ------ நாரந்தை Cocoa fruit ------ கோக்கோ பழம் Coccinea cordifolia ------ கொவ்வைப்பழம் Cranberry ------ குருதிநெல்லி Cucumus trigonus ------ கெச்சி Cucumber ------ வெள்ளரிப்பழம் Custard apple, sugar apple(Annona Squanosa), SWEET SOP ------ அன்னமுன்னா பழம் #D Damson ------ ஒரு வித நாவல் நிறப்பழம் Date fruit ------ பேரீச்சம் பழம் Devilfig ------ பேயத்தி Dragon fruit ------ தறுகண்பழம், அகிப்பழம், விருத்திரப்பழம் (தறுகண், அகி, விருத்திரம் - dragon) Duku ------ 'டுக்கு' Durian ------ முள்நாரிப்பழம், #E Eugenia Rubicunda ------ சிறுநாவல், சிறு நாவற்பழம் Emblica ------ நெல்லி #F Feijoi / Pinealle guava ------ புளிக்கொய்யா Fig ------ அத்திப்பழம் G Gooseberry ------ நெல்லிக்காய் Grape ------ கொடிமுந்திரி, திராட்சைப்பழம் Guava ------ கொய்யாப்பழம் #H Hanepoot ------ அரபுக் கொடிமுந்திரி Harfarowrie ------ அரைநெல்லி Honeydew melon ------ தேன் முழாம்பழம் Huckle berry ------ (ஒரு வித) நெல்லி #I....... #J Jack fruit ------ பலாப்பழம் jambu fruit ------ நாவல்பழம் Jamun fruit ------ நாகப்பழம் Jumbu fruit ------ சம்புப் பழம் #K Kiwi fruit ------ பசலிப்பழம் Kumquat ------ (பாலைப்பழம் போன்ற ஒரு பழம்) Kundang ------ மஞ்சல் நிற சிறிய பழம் #L Lychee ------ 'லைச்சி' Lansium ------ அத்திப்பழம் Lemon ------ வர்க்கப்பழம், எலுமிச்சை Lime ------ தேசிக்காய் Loganberry ------ 'லோகன் பெறி' Longan ------ கடுகுடாப் பழம், முதளிப்பழம் Louvi fruit ------ 'லொவிப்பழம்' #M Mandarin ------ 'மண்டரின்' நாரந்தை Mango ------ மாம்பழம் Mangosteen ------ 'மெங்கூஸ்' பழம் Melon ------ வெள்ளரிப்பழம், முழாம்பழம், இன்னீர்ப் பழம் Mulberry ------ முசுக்கட்டைப் பழம் Muscat Grape ------ அரபுக் கொடிமுந்திரி Morus macroura ------ மசுக்குட்டிப்பழம் #N.......... #O Orange (bitter) ------ நாரந்தை , தோடைப்பழம், நரந்தம்பழம் Orange (sweet) ------ சாத்துக்கொடி, தோடம்பழம், நாரங்கை Orange (Loose Jacket) ------ கமலாப்பழம் #P Pair ------ பேரிக்காய் Papaya ------ பப்பாளிப் பழம் Passionfruit ------ கொடித்தோடைப்பழம் Peach ------ குழிப்பேரி Persimmon ------ சீமைப் பனிச்சை Phyllanthus Distichus ------ அரைநெல்லி Plum ------ 'ஆல்பக்கோடா' Pomelo ------ பம்பரமாசு Prune ------ உலர்த்தியப் பழம் Palm fruit ------ பனம் பழம் Passion fruit ------ கொடித்தோடை Pear ------ பேரி Pine apple ------ 'அன்னாசி'ப் பழம் Pomegranate ------ மாதுளம் பழம், மாதுளை Pulasan ------ (ஒரு வகை)'றம்புட்டான்' #Q #Quince ------ சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம் #R Raisin ------ உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை Rasberry ------ புற்றுப்பழம் Red banana ------ செவ்வாழைப்பழம் Red currant ------ செந்திராட்சை, செங்கொடிமுந்திரி Rambutan ------ 'றம்புட்டான்' #S Sapodilla(zapota) ------ சீமையிலுப்பை Star fruit ------ விளிம்பிப்பழம் Satsuma ------ நாரத்தை Sour sop/ Guanabana ------ சீத்தாப்பழம் Strawberry ------ செம்புற்றுப்பழம் Syzygium ------ சம்புப்பழம், சம்புநாவல் #T Tamarillo ------ குறுந்தக்காளி Tangerine ------ தேனரந்தம்பழம், தேன் நாரந்தை Tamarind ------ புளியம்பழம் Tomato ------ தக்காளிப்பழம் #U Ugli Fruit ------ முரட்டுத் தோடை, உக்குளிப்பழம் (உக்குளி - ugly) #V............. #W Watermelon ------ வத்தகைப்பழம், குமட்டிப்பழம், தருபூசணி Wood Apple ------ விளாம்பழம் Wax jambu ------ நீர்குமளிப்பழம் Relaxplzz ![]() |
Posted: 14 Jan 2015 08:55 AM PST |
Posted: 14 Jan 2015 08:50 AM PST |
Posted: 14 Jan 2015 08:45 AM PST |
Posted: 14 Jan 2015 08:40 AM PST |
Posted: 14 Jan 2015 08:35 AM PST #கஸ்டமர்: இந்தக் கண்ணாடிக்கு கியாரண்டி உண்டா..? ஓ! இந்தக் கண்ணாடிய 100 அடி உயரத்தில இருந்து போட்டாக்கூட 99 அடி வரைக்கும் உடையாது. அதுக்கு நான் கியாரண்டி.! :P :P |
Posted: 14 Jan 2015 08:30 AM PST |
Posted: 14 Jan 2015 08:24 AM PST |
Posted: 14 Jan 2015 08:21 AM PST |
Posted: 14 Jan 2015 08:18 AM PST |
Posted: 14 Jan 2015 08:11 AM PST #வெற்றிலை!!! மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் தாவரங்களில் வெற்றிலையும் ஒன்றாகும். இந்தியாவில் மிதவெப்ப மற்றும் குளிர்ச்சியான பகுதிகளில் வெற்றிலை வளர்க்கப்படுகிறது. வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு மும்பை போன்ற இடங்களில் இதன் இலைக்காக பயிரிடப்படுகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். கெடினின், சாவிகால், பைரோ கெடிசால், யூஜினால், எக்ஸ்ட்ராகால், ஆக்சாலிக் அமிலம் போன்ற பல வேதிப்பொருள் வெற்றிலையின் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாக உள்ளது. இலைகளும், வேர்களும் மருத்துவ பயன் உடையவை. இலைகளில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய் மூச்சுக்குழல் நோய்களுக்கு மருந்தாகிறது. இலையின் சாறு ஜீரணத்திற்கு உதவுகிறது. வேர்பகுதி பெண்களின் மலட்டுத்தன்மையை போக்குகிறது. அரை டம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி,சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும். வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும். இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும். அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்... Relaxplzz ![]() "நலமுடன் வாழ" - 2 |
Posted: 14 Jan 2015 08:07 AM PST நம் நாட்டுக்காக ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்வீர்களா...? .......PLEASE SHARE THIS நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது...... சமீப காலமாக விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக் குறைக்கூறுவது நாம் செய...்யும் தவறு... விலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம்... கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா....?? கீழே படியுங்கள்...... ஒரு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 45. இன்று 1 US $ = ரூ 66. அமெரிக்க பொருளாதாரம் உயர்கின்றதா....??? அதுதான் இல்லை.. இந்தியாவின் பொருளாதாரம் வீழ்கிறது....!!! நாம் குடிக்கும் ஒவ்வொரு குளிர்பானத்தின் தயாரிப்பு செலவு 70-80 பைசா மட்டுமே... ஆனால் விற்கப்படும் விலை ரூ 9 -10... அதாவது ஒரு குளிர்பானத்தின் ஒன்பது ருபாய் வெளிநாட்டிற்கு செல்கிறது... இதை தடுக்கவே முடியாதா...??? முடியும். நாம் மனசு வைத்தால்...!!! நாம் என்ன செய்ய வேண்டும்...??? 1 ) ஆயிரக்கணக்கான இந்திய நிறுவனங்களின் பொருட்கள், வாங்குவதற்கு ஆள் இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன... அவற்றை வாங்குவதற்கு நாம் முன் வரவேண்டும். 2 ) ஒவ்வொரு இந்தியனும் இதில் கலந்து கொண்டால் தான், நம் இந்தியாவை நாம் காப்பாற்றமுடியும்.. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் இந்திய பொருள்களை வாங்கவும், வெளி நாட்டு பொருள்களை வாங்குவதை தவிர்க்கவும் முயற்சி செய்வோம்... LIST OF PRODUCTS:-- COLD DRINKS:- வாங்கவும்:- DRINK LEMON JUICE, FRESH FRUIT JUICES, CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK, COCONUT WATER, JAL JEERA, ENERJEE,and MASALA MILK... தவிர்க்கவும்:- INSTEAD OF COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE BATHING SOAP:- வாங்கவும்:- USE CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA தவிர்க்கவும்:- INSTEAD OF LUX, LIFEBUOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE TOOTH PASTE:- வாங்கவும்:- USE NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK. தவிர்க்கவும்:- INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT. TOOTH BRUSH:- வாங்கவும்:- USE PRUDENT, AJANTA , PROMISE. தவிர்க்கவும்:- INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B SHAVING CREAM:- வாங்கவும்:- USE GODREJ, EMAMI. தவிர்க்கவும்:- INSTEAD OF PALMOLIVE, OLD SPICE, GILLETE. BLADE:- வாங்கவும்:- USE SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA. தவிர்க்கவும்:- INSTEAD OF SEVEN-O -CLOCK, 365, GILLETTE. TALCUM POWDER:- வாங்கவும்:- USE SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS. தவிர்க்கவும்:- INSTEAD OF PONDS, OLD SPICE, JOHNSON'S BABY POWDER, SHOWER TO SHOWER. MILK POWDER:- வாங்கவும்:- USE INDIANA, AMUL, AMULYA. தவிர்க்கவும்:- INSTEAD OF ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID. SHAMPOO:- வாங்கவும்:- USE NIRMA, VELVETTE. தவிர்க்கவும்:- INSTEAD OF HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE. MOBILE CONNECTIONS:- வாங்கவும்:- USE BSNL, AIRTEL. தவிர்க்கவும்:- INSTEAD OF VODAFONE. Food Items:- வாங்கவும்:- Eat Tandoori chicken, Vada Pav, Idli, Dosa, Puri, Uppuma. தவிர்க்கவும்:- INSTEAD OF KFC, MACDONALD'S, PIZZA HUT, A&W. BUY INDIAN TO BE INDIAN... நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது.. நன்றி Relaxplzz |
Posted: 14 Jan 2015 08:01 AM PST என்னை இஷ்டம் போல திட்டிவிட்டு கடைசியாக உன்னை ரொம்ப பிடிக்கும் என்பாள்! அதுதான் அறுந்து விழக்கூடிய காதலை நூலிழையில் இழுத்து பிடித்துக் கொள்ளும். . .!!! உன்னிடம் பேசணும் போல தோணுச்சி இடைவிடாத தொடர்ச்சியான மெளனத்தை தாண்டி வரும் இந்த வார்த்தையானது உள்ளுக்குள் மொத்த காதலையும் தூசு தட்டி புதுப்பித்து விடுகிறது. . .!!! # வெங்கடேசன் பாலகிருஷ்ணன் # ![]() "காதல் கவிதைகள்" - 3 |
Posted: 14 Jan 2015 07:50 AM PST பொதுவாக அவசர உதவிக்கு நாம் அழைப்பது ஆம்புலன்ஸ் வண்டிகளைத் தான். ஆனால், சற்றுப் புதுமையாக ஆம்புலன்ஸ் மூலம் செய்யப்படும் அதே சேவையைப் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு முதியவர் தான் வைத்திருக்கும் ஒரு கார் மூலமாக ஏழை எளியவர்களுக்கு இலவசமாகச் செய்து வருகிறார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனது சொந்த காரில் வாடகை எதுவும் வாங்காமல் மருத்துவமனையிலிருந்து சடலங்களை வீட்டுக்குக் கொண்டு செல்லுதல், பிரசவத்திற்கு உதவி செய்தல் என ஓயாது சேவை செய்து வருகிறார் புதுக்கோட்டையை சேர்ந்த முதியவர் கணேசன். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த இவர், இரும்பு வியாபாரம் மூலம் சேர்த்து வைத்திருந்த 17 ஆயிரம் ரூபாயைக் கொண்டு 515 எண் கொண்ட காரை வாங்கியிருக்கிறார். இன்று வரை தொடரும் அவரது இலவச கார் சேவையால், இவரது பெயருடன் கார் எண்ணை சேர்த்தே புதுக்கோட்டை பகுதி மக்கள் அழைக்கின்றனர். கேட்பாரற்றுக் கிடந்த எண்ணற்ற சடலங்களை தானே அடக்கம் செய்துள்ளதாகக் கூறும் கணேசன், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் தனது செல்பேசி எண் இருப்பதாகக் கூறுகிறார். இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சடலங்களை தனது காரில் கொண்டுச் சென்றிருப்பதாகவும், மருத்துவமனையில் கொண்டு போய்ச்சேர்த்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பிழைத்திருப்பதாகவும் கூறுகிறார். இரும்பு வியாபாரம் மூலம் கிடைக்கும் வருமானத்தில் காரைப் பராமரிப்பதாகச் சொல்லும் கணேசன், கடைசி வரை ஏழை மக்களுக்கு உதவுவதே தனது லட்சியம் என்றும் கூறுகிறார். Relaxplzz ![]() "உயர்ந்த மனிதர்கள் - நல்ல உள்ளங்கள்" |
Posted: 14 Jan 2015 07:44 AM PST |
Posted: 14 Jan 2015 07:30 AM PST |
Posted: 14 Jan 2015 07:24 AM PST |
Posted: 14 Jan 2015 07:17 AM PST |
Posted: 14 Jan 2015 07:10 AM PST "ஹலோ, பேஸ்புக் ஓனரா? எப்ப சார் கடைய(Facebook) மூடுவீங்க. உங்களால எங்க நிம்மதி போச்சு. ஒரு பொண்ணு "good morning"னு ஸ்டேட்டஸ் போட்டுச்சுனா 150 லைக்கு போடுறாங்ய சார். இதுவே நாங்க எதாவது ஸ்டேட்டஸ் போட்டா வெரும் 7 லைக்கு தான் சார் வருது. இதனை கண்டித்து நாங்க பேஸ்புக்ல போராட்டம் நடத்த போறோம். மரியாதையா பொண்ணுகள பேஸ்புக்ல இருந்து தூக்குங்க. இல்லனா பேஸ்புக்ல கலவரம் நடக்கும். (நான் சொன்னது உண்மை.) Note: ஒரு பொண்ணு "ஹாய்"னு ஸ்டேட்டஸ் போட்டுச்சு. அதுக்கு 368 லைக்கு பா. like பண்ணுனிங்க பராவாயில்ல நு விட்டுடோம், கமெண்ட் பண்ணுனிங்க இது கூட பராவாயில்ல, இத போய் 257 share . இத தான் என்னால தாங்க முடியல :O :O Relaxplzz |
Posted: 14 Jan 2015 07:00 AM PST குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள். 1. குழந்தையிடம் நீங்கள் உண்மையே பேச வேண்டும். அதன் முன்னிலையில் யாரிடமும் பொய் சொல்லாதீர்கள். 2. அதற்கு நீங்களே பொய் சொல்லக் கற்றுக் கொடுக்கக் கூடாது. வேண்டாத விருந்தாளிகள் யாராவது அப்பா இருக்காரா"னு கேக்கும்போது,இல்லைனு சொல்லு என்று உங்கள் குழந்தையை விட்டுச் சொல்லக் கூடாது. இது தவறு. 3. உங்கள் குழந்தையைக் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்காதீர்கள். (அதன் பயமே அதற்குப் பொய் சொல்லத் தூண்டுமாம்). 4. அதன் கற்பனை சக்தியை வளர்ப்பது நல்லதுதான். அதிலேயே அதிக கவனம் செலுத்தி உண்மைக்கும், கற்பனைக்கும் வேறுபாடு தெரியாமல் செய்துவிடாதீர்கள். 5. இதைச் செய்யாதே, அதைத் தொடாதே என்று பல கட்டுப்பாடுகளைக் குழந்தை மீது சுமத்தாதீர்கள். கூடியவரை குறைத்துக் கொள்ளுங்கள். (அதிகத் தடைகள் ஏற்பட்டால் அவற்றைக் கடைபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுப் பொய் சொல்ல நேரிடலாம்). 6. குழந்தையிடம் திருப்பித் திருப்பிச் சாமர்த்தியமான கேள்விகளை கேட்காதீர்கள். அவற்றால் கலக்கமடைந்து பொய் சொல்ல ஆரம்பிக்கும். பிறகு அது தெரிந்தே பொய் சொல்ல இது வழிகாட்டும். 7. பொய் சொல்வதால் ஏற்படும் தீமைகள் பற்றி மிகைப்படுத்தி அதற்கு உபதேசம் செய்யாதீர்கள். சிறிய தவறுகள் நேரிட்டால் என்ன கெடுதல் வந்து விடுமோ என்று அது பயந்து பலவகையான மனக்குழப்பங்களுக்கு ஆளாக நேரிடும். மாறாக, உண்மையாக இருப்பதால் ஏற்படும் நன்மை பற்றி எடுத்துக் கூறுங்கள். 8. உண்மை பேசும்போது நீங்கள் அதற்காக உற்சாக மூட்டுங்கள். உண்மை பேசுவதைப் பலவகையிலும் ஆதரியுங்கள். தவறு செய்தபின் உண்மையை உங்களிடம் ஒளிக்காமல் சொல்லும் போது, செய்த தவறுக்காகக் கடிந்து கொள்ளாதீர்கள். உண்மை சொன்னதற்காகப் பாராட்டுங்கள். பிறகு இனிமேல் இப்படிச் செய்யாதே என்ற வார்த்தையே அதைத் திருத்தப் போதுமானது. தண்டனையால் பெற முயன்ற பலனை இம்முறையால் நிச்சயமாகப் பெறலாம். - இந்திரா கிறுக்கல்கள் @ Relaxplzz ![]() |
Posted: 14 Jan 2015 06:55 AM PST |
Posted: 14 Jan 2015 06:50 AM PST |
Posted: 14 Jan 2015 06:45 AM PST தீபாவளிக்கு ட்ரெஸ் எடுத்த அதே இடத்துலயே பொங்கலுக்கும் ட்ரெஸ் எடுக்கலாம்னு இருக்கேன்.. பக்கத்து வீட்டு கொடியிலிருந்து. :P - களவாணி பய. |
Posted: 14 Jan 2015 06:40 AM PST |
Posted: 14 Jan 2015 06:30 AM PST |
Posted: 14 Jan 2015 06:23 AM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment