Tuesday, 27 January 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


டேய், நாதஸ், உனக்கு இதெல்லாம் தேவையா? அண்ணே, ஒரு வெளம்பரம்...

Posted: 27 Jan 2015 10:48 AM PST

டேய், நாதஸ்,
உனக்கு இதெல்லாம்
தேவையா?

அண்ணே, ஒரு வெளம்பரம்...


இதுவரை தமிழ்நாட்டு ரயில் நிலையங்களில் முதல் இடத்தில் எழுதப்பட்ட தமிழ், தற்போது இ...

Posted: 27 Jan 2015 08:27 AM PST

இதுவரை தமிழ்நாட்டு ரயில் நிலையங்களில் முதல் இடத்தில் எழுதப்பட்ட தமிழ், தற்போது இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது..

இடம்: கடலூர்


தூக்கமே வரல கதை சொல்லுமா எனக்கும் வரல, உங்கப்பனும் வரல.. வரட்டும் ஏன் லேட்டுனு...

Posted: 27 Jan 2015 08:10 AM PST

தூக்கமே வரல கதை சொல்லுமா

எனக்கும் வரல, உங்கப்பனும் வரல.. வரட்டும் ஏன் லேட்டுனு கேப்போம் அப்புறம உங்கப்பன் எத்தன கதை சொல்றானு பாரு :)

துப்பாக்கிச் சூட்டில் பலியான முதல் மாணவன் 'மொழிப் போர் ஈகி' இராசேந்திரன் நினைவு...

Posted: 27 Jan 2015 05:21 AM PST

துப்பாக்கிச் சூட்டில் பலியான முதல் மாணவன்
'மொழிப் போர் ஈகி' இராசேந்திரன் நினைவு நாள்

27.1.1965

இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்து தீக்குளித்த இளைஞர்களுக்கு வீரவணக்கம் செலுத்தவும், மதுரையில் மாணவர்கள் மீது தடியடி நடத்திய பக்தவச்சலம் அரசின் காவல் துறையை கண்டித்தும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் சனவரி 26 அன்று பேரணி நடத்த முயன்றனர். அன்று குடியரசு நாள் என்பதால் அனுமதி மறுத்த காவல் துறையினர் மறுநாள் அனுமதி தருவதாக உறுதியளித்தனர். மாணவர்களும் இதனை ஏற்றுக்கொண்டனர்.

மறுநாள் காலையில் 4000 மாணவர்கள் ஒன்று கூடி "இந்தி ஒழிக! தமிழ் வாழ்க!" என்று முழக்கம் எழுப்பிய படி பேரணியை த் தொடங்கினர். நகர எல்லையில் குவிக்கப்பட்ட காவல் துறையினர் தடையாணை இருப்பதால் அனுமதிக்க முடியாது என்று பேரணியை மறித்து நின்றனர். காவல் துறைக்கும் மாணவர்களுக்கும் வாக்குவாதம் முற்றியது. ஆத்திரமடைந்த காவல் துறை குண்டாந்தடியை பயன்படுத்தி மாணவர்களை விரட்டி விரட்டி அடித்தது. போர்க்குணம் கொண்ட மாணவர் பட்டாளமோ அங்கு கொட்டப்பட்டுக் கிடந்த கற்களை எறிந்து பதிலடி தந்தனர்.

கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைய மறுத்தது மாணவர் பட்டாளம். வெறி கொண்ட காவல்படையோ மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கியது. அதில், இராசேந்திரன், நெடுமாறன் உள்பட மேலும் இரண்டு மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். தோளில் குண்டடிபட்ட நெடுமாறன் இரத்தம் சொட்ட சொட்ட ஓடினார். துப்பாக்கி குண்டால் துளைக்கப்பட்ட இராசேந்திரன் மட்டும் தரையிலே வீழ்ந்து கிடந்தான்.

அப்போது அவன் உடலில் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. அதைக் கண்டு சில மாணவர்கள் காப்பாற்றுவதற்காக ஒரு கம்பில் வெள்ளைத் துணியைச் சுற்றி உயர்த்தியபடி முன்னே வந்தனர். அப்போது காவலர்கள் அருகே வந்தால் சுட்டு விடுவேன் என்று மிரட்டவே, வந்தவர்களும் ஒதுங்கி நிற்க வேண்டியதாயிற்று. அப்போது எந்த காவலருக்கும் இராசேந்திரனை மருத்துவமனைக்கு தூக்கி சென்று உயிரை காப்பாற்ற மனம் வரவில்லை. எல்லா மாணவர்களும் கண் கலங்கி நிற்க மாணவக்கண்மணி இராசேந்திரன் துடிதுடித்துச் செத்தான்.

1938 முதல் நடைபெற்று வரும் இந்தி எதிர்ப்புப் போரில் துப்பாக்கிச் சூட்டில் பலியான முதல் மாணவன் இராசேந்திரன் ஆவான். பி.எஸ்.சி. படித்து வந்த இராசேந்திரன் வயது 18. சிவகெங்கையைச் சேர்ந்த இவரின் தந்தையாரும் ஒரு காவலர் தான். நிகழ்ச்சி நடந்த அன்று சிவகாசி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்புப்பணிக்கு சென்றிருக்கிறார். இராசேந்திரன் படிப்பில் திறமையானவர். இவர் சாவதற்கு முன் நடைபெற்ற கணிதத் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்.

இவருக்கிருந்த தமிழ்ப்பற்றின் காரணமாக முதலில் மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் விண்ணப்பம் செய்தார். அங்கு இடம் கிடைக்காததால் அண்ணாமலையில் சேர்ந்தார். மீட்கப்பட்ட இராசேந்திரனின் உடல் சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் அடக்கம் செய்யப்பட்டது. இராசேந்திரனின் ஈகத்தை வருங்கால மாணவர் சமூகம் தெரிந்து கொள்ளும் வகையில் அவரது திருவுருவச் சிலை அண்ணாமலைப் பல்கலைக் கழக வாயிலில் நிறுவப் பட்டுள்ளது.


இந்தி எதிர்ப்புப் போரில் தீயிட்டு உயிர் நீத்த மூன்றாவது ஈகி! விருகம்பாக்கம் அரங...

Posted: 27 Jan 2015 05:16 AM PST

இந்தி எதிர்ப்புப் போரில் தீயிட்டு உயிர் நீத்த மூன்றாவது ஈகி!

விருகம்பாக்கம் அரங்க நாதன் நினைவு நாள் 27.1.1965

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை விவரம் அறியாத சிறுவர்களின் போராட்டம் என்று கேலி செய்து கொண்டிருந்த காங்கிரசுத் தலைவர்களை வாய்மூட வைத்தவர் விருகம்பாக்கம் அரங்கநாதன்.

அவர் மாணவர் அல்ல. மத்திய அரசின் தொலைப்பேசித் துறையில் பணியாற்றியவர். 27.12.1931ஆம் ஆண்டு ஒய்யாலி- முனியம்மாள் இணையருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். இளம் வயதிலேயே வீரக்கலைகளில் ஆர்வம் மிக்கவர். மான்கொம்பு சுழற்றுதல், சிலம்பாட்டம், சுருள் கத்தி வீசல் போன்ற வீர விளையாட்டுகளில் வல்லவராகத் திகழ்ந்தார். விருகம்பாக்கத்து இளைஞர்களால் 'குரு' என்று அழைக்கப்பட்டு வந்த அரங்கநாதன் விருகம்பாக்கத்திலேயே உடற்பயிற்சிக் கூடம் அமைத்தார். அங்குள்ள இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து சென்னையில் நடைபெற்று வந்த விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்பி வைப்பார். அதுபோக அந்த இளைஞர்களுக்கு தமிழுணர்வூட்டும் ஏடுகளை படிக்கச் சொல்லியும் கடமையாற்றினார்.

தமிழ்மொழி மீது தீராப்பற்று கொண்ட அரங்க நாதன் 1965 சனவரி 26ஆம் நாள் எரிந்து கிடந்த கோடம்பாக்கம் சிவலிங்கத்தின் உடலை நேரில் கண்டு மனம் கலங்கிப் போனார். அன்றிரவு உறக்கம் கொள்ள வில்லை. சனவரி 27ஆம் நாள் நள்ளிரவு 2மணிக்கு விருகம்பாக்கம் நேசனல் திரையரங்கம் அருகில் ஓர் மாமரத்தின் அடியில் நின்று கொண்டு தனக்குத் தானே தீயிட்டுக் கொண்டார். பொழுது விடிந்தது. அங்கிருந்தவர்கள் கருகிய உடலைக் கண்டனர்.

அவர் உடலின் அருகில் ஒரு அட்டையில் சுற்றபட்டுந்த நிலையில் கடிதங்கள் கிடந்தது. தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் எழுதப்பட்ட கடிதங்கள் அவை. அவற்றின் நகல்களைப் பதிவஞ்சலில் அனுப்பியதற்கான இரசீதுகளும் கைப்பற்றப்பட்டன. அன்று வீரமிக்க இளைஞனை பறிகொடுத்த சோகத்தில் விருகம்பாக்கம் ஆழ்ந்து கிடந்தது.

இறந்துபோன அரங்க நாதனின் மனைவி பெயர் மல்லிகா. அமுதவாணன் (வயது 7) அன்பழகன் (வயது 3) இரவிச்சந்திரன் (6 மாதக் கைக்குழந்தை) என்று மூன்று பச்சிளங்குழந்தைகளைச் சுமக்க வேண்டிய நிலைக்கு தான் ஆளானதைக் கண்டு மல்லிகா கடும் துயரம் அடைந்தார்.

அமெரிக்க நியூயார்க் நகரில் கூடிய உலகநாடுகள் அவைக் கூட்டத்தில் சிவலிங்கம், அரங்கநாதன் தீக்குளித்த அதிர்ச்சிப் பின்னணி விவாதிக்கப்பட்டது.

அரங்கநாதன் பெயர் தாங்கிய சுரங்கப்பாதை சென்னையில் இப்போதும் அவரை நினைவு படுத்தியபடி உள்ளது. தானுண்டு, தன் குடும்பமுண்டு, தன் பிள்ளைகளுண்டு என்று வாழாமல், தமிழுக்காகவே வாழ்ந்து மடிந்த வீரத் தமிழ்மகன் அரங்கநாதனை இந்நாளில் ஒவ்வொரு தமிழரும் நினைவில் கொள்வோம்!


தமிழர்கள் செய்த மொழிப் போராட்டத்தால் சாதித்தது என்ன? முக்கியமான ஒன்றை குறிப்பிடு...

Posted: 27 Jan 2015 05:02 AM PST

தமிழர்கள் செய்த மொழிப் போராட்டத்தால் சாதித்தது என்ன? முக்கியமான ஒன்றை குறிப்பிடுகின்றேன்.

இந்தியாவின் ஒற்றை ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்ட நிலையில் தான் மொழிப் போராட்டம் வெடித்தது. அப்போது இந்திய அரசு ஏற்கனவே இந்தியை எப்படியெல்லாம் மக்களிடம் திணிக்கலாம் என்று திட்டம் தீட்டியது. அத்திட்டங்களில் ஒன்று இந்தி எண்களை கட்டாயப்படுத்துவது. அதாவது வங்கிகளில் , தனியார் நிறுவன வருமான கணக்குகள் அனைத்திலும் இந்தி எண்களை தான் மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தது இந்தி அரசு. இவ்வாறு செய்தால் இந்தியாவில் உள்ள அனைவரும் இப்போது பயன்படுத்தும் சர்வதேச எண்களை பயன்படுத்த முடியாது. இந்திய மக்கள் அனைவரும் இந்தி எண்களை மட்டுமே எல்லா இடங்களிலும் பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்தி ஆட்சி மொழி சட்டம் உருவாகியது. தமிழ் மாணவர்களும் இந்தியில் தான் கணக்குகளை எழுத வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

ஆனால் முடிவில் தமிழர்கள் செய்த போராட்டத்தால் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்ற சட்டம் பின்வாங்கப்பட்டது. ஆங்கிலமும் துணை ஆட்சி மொழியாக நீடித்தது. இதன் காரணமாக இப்போது சர்வதேச எண்களை இந்தியாவெங்கும் உள்ள மக்களால் எளிதில் பயன்படுத்த முடிகிறது. உலகமெங்கும் இந்திய மக்கள் சென்று கணிதத்தில், வணிகத்தில் வெற்றி ஈட்டவும் முடிகிறது. இப்பொது சொல்லுங்கள் மொழிப்போர் ஈகியர்களின் தியாகம் வீணானதா?


டெல்லி குடியரசு தின விழாவில் ஆண்டுதோறும் நடைபெறும் கலாச்சார வாகன ஊர்தியில் தமிழக...

Posted: 27 Jan 2015 04:56 AM PST

டெல்லி குடியரசு தின விழாவில் ஆண்டுதோறும் நடைபெறும் கலாச்சார வாகன ஊர்தியில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் கலந்துகொள்ள அனுமதி கொடுக்கவில்லை மத்திய அரசு.
கடந்த ஆண்டு நடந்த அணிவகுப்பு ஊர்த்தி நிகழ்ச்சியில் தமிழகம் இரண்டாம் பரிசு பெற்றிருந்தது.

ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் குடியரசு தின விழாவில் அந்த நாட்டின் அங்கமாக இருக்கும் பல மாநிலங்களுக்கே பிரதிநிதித்துவம் கொடுக்காமல் நடக்கும் நிகழ்ச்சி குடியரசு தின நிகழ்ச்சியாம்.

ஏ சர்வாதிகார மன்மோகன்சிங் அரசே!
உடனே பதவி விலகு!
இங்கனம் - காங்கிரஸ் ஆட்சியாக இருந்திருந்தால் பொங்கியிருக்கும் தோசை பக்தர்கள்

# ஒரு மாநில முதலமைச்சராக இருந்த மோடி பிரதமரானால்தான் எல்லா மாநிலங்களுக்கும் போதிய மரியாதையும்,அதிகாரமும் கொடுப்பார் என சொன்னவனுகளை ரொம்ப நாளா தேடிக்கிட்டிருக்கேன்.சிக்க மாட்றானுக...

@நம்பிக்கை ராஜ்

வள்ளுவர் காலடியில் கிடக்கும் சில கோரிக்கைகள்!

Posted: 27 Jan 2015 04:56 AM PST

வள்ளுவர் காலடியில் கிடக்கும் சில கோரிக்கைகள்!


ஒபாமா பங்கேற்கும் குடியரசு நாள் அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதி இல்லை !! இந...

Posted: 27 Jan 2015 04:55 AM PST

ஒபாமா பங்கேற்கும் குடியரசு நாள் அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதி இல்லை !!

இந்த ஆண்டு 16 மாநில ஊர்திகளுக்கு மட்டும் அனுமதி வழங்கி உள்ளது பாஜக அரசு. குறிப்பாக பாஜக அரசு அல்லாத மாநிலங்களை புறக்கணித்து உள்ளது. மேலும் புறக்கணிப்பட்ட மாநிலங்கள் பெரும்பாலும் இந்தி அல்லாத தேசிய இனங்கள் வசிக்கும் மாநிலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொதுவாகவே டெல்லியில் நடைபெறும் இந்த ஊர்திகள் அணிவகுப்பில் இந்தி மொழியை தவிர வேறு எந்த மாநில மொழியிலும் பெயர் பலகை வைக்க அனுமதி தருவதில்லை இந்தி வெறி அரசு. ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை அடைந்தாலும் இந்தியர்களிடம் இருந்து விடுதலை பெறவில்லை என்பதை இந்த ஊர்திகள் அணிவகுப்பு உறுதி செய்கிறது. ஒவ்வொரு மாநில ஊர்திகளும் அந்தந்த மாநில மொழியில் தான் இருக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச மொழி சம உரிமையை கூட மறுத்து வருகிறது இந்தி அரசு.

உரிமைகள் மறுக்கப்பட்ட இப்படியான ஊர்தி அணிவகுப்பில் அனைத்து இந்தி அல்லாத மாநிலங்களும் கலந்து கொள்ளாமல் இருப்பதே நன்று. தமிழை ஆட்சி மொழியாக ஏற்காமல் தமிழகத்தை இந்தியாவின் மாநிலமாக அங்கீகரிக்காத இந்திய அரசுக்கு தமிழ் மக்கள் வரி செலுத்த வேண்டிய அவசியமும் இல்லை. அடுத்த ஆண்டு முதல் இந்தி மாநிலங்கள் மட்டுமே இந்த குடியரசு நாள் அணிவகுப்பில் கலந்து கொள்ளட்டும். இந்தி அல்லாத மாநிலங்கள் எல்லாம் இந்தியா அல்ல என்று பகிரங்கமாக அறிவிக்க முன்வர வேண்டும் இந்திப் பிரிவினைவாத அரசு.

படம் : 2009 ஆம் ஆண்டு தமிழக ஊர்தி


வீதிக்கு வீதி மதுக் கடைகளைத் திறந்து வைத்தவர்கள் இந்தப் புகைப்படத்தைத் தவறாமல் ப...

Posted: 27 Jan 2015 04:46 AM PST

வீதிக்கு வீதி மதுக் கடைகளைத் திறந்து வைத்தவர்கள் இந்தப் புகைப்படத்தைத் தவறாமல் பார்க்க வேண்டும்!

இடம் : கரூர்


Posted: 27 Jan 2015 03:16 AM PST


0 comments:

Post a Comment