Thursday, 22 January 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


அழகிய ஈழம்! யாழ்ப்பாணம்!

Posted: 22 Jan 2015 07:38 AM PST

அழகிய ஈழம்! யாழ்ப்பாணம்!


தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் மாணவப் பருவத்தில் நடந்த நிகழ்ச்சி இது. அவருடைய...

Posted: 22 Jan 2015 03:31 AM PST

தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் மாணவப் பருவத்தில் நடந்த நிகழ்ச்சி இது.
அவருடைய தாத்தா, ""சாமிநாதா, நீ ஆங்கிலம் படிக்க விரும்புகிறாயா, சமஸ்கிருதம் படிக்க விரும்புகிறாயா?'' என்று கேட்டார்.
அதற்கு சுவாமிநாதர், ""நான் தமிழ் படிக்க விரும்புகிறேன்..'' என்றார்.
தாத்தா உடனே, ""நீ ஆங்கிலம் படித்தால் பூலோகத்தில் பெருமையுடன் வாழலாம். சமஸ்கிருதம் படித்தால் மேலோகத்தில் பெருமையுடன் வாழலாம். இரண்டும் இல்லாமல் தமிழ் படிக்கப் போகிறேன் என்று சொல்கிறாயே?'' என்று கேட்டார்.
சுவாமிநாதரிடமிருந்து உடனடியாக பதில் வந்தது, ""தாத்தா, ஆங்கிலம் படித்தால் பூலோகத்தில் பெருமையுடன் வாழலாம். சமஸ்கிருதம் படித்தால் மேலோகத்தில் பெருமையுடன் வாழலாம். தமிழ் படித்தால் இரண்டு லோகங்களிலும் பெருமையுடன் வாழலாம்!'' என்று கூறினார்.
இந்தத் தமிழ்ப்பற்றினால்தான் அழியும் நிலையில் இருந்த எண்ணற்ற சாகாவரம் பெற்ற நூல்களை அச்சுப் பதிப்பேற்றி அழியாமல் காப்பாற்றினார் உ.வே.சாமிநாதய்யர்

- தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு


வெற்றிகரமான திருமண வாழ்க்கை ரகசியத்தை உணர்த்தும் கதை.....! திருமண வாழ்க்கையை எந்...

Posted: 22 Jan 2015 02:34 AM PST

வெற்றிகரமான திருமண வாழ்க்கை ரகசியத்தை உணர்த்தும் கதை.....!
திருமண வாழ்க்கையை எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்த ஜோடிகள் தங்களது 25வது திருமண நாளைக்
கொண்டாடினார்கள். ஊரையேக் கூட்டி விருந்து வைத்து தங்களது திருமண நாளைக் கொண்டாடிய தம்பதியினரைப் பற்றி அறிந்த அந்த ஊர் செய்தியாளர் ஒருவர், அவர்களைப் பேட்டிக் கண்டு பத்திரிக்கையில் போட விரும்பினார்.
நேராக அந்த தம்பதிகளிடம் சென்று, 25ஆம் திருமண நாளை ஒற்றுமையாகக் கொண்டாடுவது என்பது பெரிய விஷயம். இது உங்களால் எப்படி முடிந்தது. உங்களது திருமண வாழ்வின் வெற்றி ரகசியம் என்ன என்று கேட்டார்.
இந்த கேள்வியை கேட்டதும், அந்த கணவருக்கு தனது பழைய தேனிலவு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தது.
"நாங்கள் திருமணம் முடிந்ததும் தேனிலவுக்காக சிம்லா சென்றோம். அங்கு எங்களது பயணம் சிறப்பாக அமைந்தது.
அப்பகுதியை சுற்றிப் பார்க்க நாங்கள் குதிரை ஏற்றம் செல்வது என்று தீர்மானித்தோம். அதற்காக இரண்டு குதிரைகளைத் தேர்ந்தெடுத்து, இருவரும் ஒவ்வொரு குதிரையில் ஏறிக் கொண்டோம்.
எனது குதிரை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருந்தது. ஆனால் என் மனைவி சென்ற குதிரை மிகவும் குறும்புத்தனமானதாக இருந்தது. திடீரென ஒரு துள்ளலில் என் மனைவியை அது கீழேத் தள்ளியது.
அவள் கீழே இருந்து எழுந்து சுதாரித்துக் கொண்டு அந்த குதிரையின் மீது மீண்டும் ஏறி அமர்ந்து கொண்டு, "இது தான் உனக்கு முதல் முறை" என்று அமைதியாகக் கூறினாள்.
சிறிது தூரம் சென்றதும் மீண்டும் அந்த குதிரை அவ்வாறே செய்தது. அப்போதும் என் மனைவி மிக அமைதியாக எழுந்து குதிரையின் மீது அமர்ந்து கொண்டு "இது தான் உனக்கு இரண்டாம் முறை" என்று கூறியவாறு பயணிக்கத் தொடங்கினாள்.
மூன்றாம் முறையும் குதிரை அவ்வாறு செய்ததும், அவள் வேகமாக அவளது கைத்துப்பாக்கியை எடுத்து அந்த குதிரையை சுட்டுக் கொன்றுவிட்டாள்!!!
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. நான் அவளை திட்டினேன். "ஏன் இப்படி செய்தாய்? நீ என்ன முட்டாளா? ஒரு விலங்கைக் கொன்று விட்டாயே? அறிவில்லையா?" என்று கேட்டேன்.
அவள் மிகவும் அமைதியாக என்னைப் பார்த்து, "இதுதான் உங்களுக்கு முதல் முறை" என்றாள். அவ்வளவு தான். அதன் பிறகு எங்களது வாழ்க்கை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது என்றார் கணவர்.
இப்படி தான் பலரது வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. உண்மை தானே..!

- மாலைமலர்


0 comments:

Post a Comment