Saturday, 31 January 2015

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


சில மாதங்கள் ஓர் உயிரை சுமக்கும் பெண்மையை போற்றும் இந்த சமூகம், ஆயுள் முழுவதும்...

Posted: 30 Jan 2015 04:26 PM PST

சில மாதங்கள் ஓர்
உயிரை சுமக்கும்
பெண்மையை போற்றும் இந்த
சமூகம், ஆயுள் முழுவதும்
ஒரு குடும்பத்தையே சுமக்கும்
ஆண்களை மறந்துவிடுகிறது.

ஒரு மனுசன் நிம்மதியா தூங்க 3 அறை இருக்கு .. 1.கருவறை 2.கல்லறை . . . . . . . . ....

Posted: 30 Jan 2015 09:52 AM PST

ஒரு மனுசன் நிம்மதியா தூங்க 3
அறை இருக்கு ..
1.கருவறை
2.கல்லறை
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
3.வகுப்பறை
நமக்கு தூக்கம் தாம்லே முக்கியம :-P :-P

மதுக் கடைகளை மூடக் கோரி அமைச்சர்களுக்குக் கருப்புக் கொடி காட்டுவேன்.. மாணவி நந்த...

Posted: 30 Jan 2015 08:41 AM PST

மதுக் கடைகளை மூடக்
கோரி அமைச்சர்களுக்குக்
கருப்புக் கொடி காட்டுவேன்..
மாணவி நந்தினி அதிரடி!
share பண்ணுங்க இந்த
மாணவிக்காக
மதுபான கடைகளை மூட
வலியுறுத்தி ஸ்ரீரங்கம்
இடைத்தேர்தலில் முகாமிட்டுள்ள
தமிழக அமைச்சர்களுக்கு எதிராக
கறுப்பு கொடி காட்டப்
போவதாக டாஸ்மாக்
ஒழிப்பு படை அமைப்பாளாரும்
சட்ட கல்லூரி மாணவியுமான
நந்தினி கூறியுள்ளார். தமிழக
மக்களை நாசமாக்கும்
மதுக்கடைகளை மூட
வலியுறுத்தி டாஸ்மாக்
ஒழிப்புப்படை அமைப்பாளரும்,
மதுரை சட்டக்
கல்லூரி மாணவியுமான
நந்தினி இன்று கரூர்
பேருந்து நிலைய பகுதிகளி,
ஸ்ரீரங்கம் தொகுதியில்
முகாமிட்டுள்ள தமிழக
அமச்சர்களுக்கு எதிராக
கருப்பு கொடி காட்டும்
போராட்டத்திற்கு
பொதுமக்களிடம்
ஆதரவு கேட்டு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
இதைத்
தொடர்ந்து செய்தியாளர்களிடம்
பேசிய நந்தினி, திருச்சி,
புதுக்கோட்டை, நாமக்கல்,
திண்டுக்கல் மற்றும் கரூர்
உள்ளிட்ட பகுதிகளில் வரும்
பிபரவரி 7ம்
தேதி வரை பொதுமக்களிடம்
எங்களது போராட்டத்திற்கு
ஆதரவு கேட்டு பிரசுரங்களை வழங்க
இருக்கிறேன்.
பிப்ரவரி 8ம் தேதி முதல் 11ம்
தேதி வரை ஸ்ரீரங்கத்தில்
முகாமிட்டுள்ள தமிழக
அமைச்சர்களுக்கு எதிராக
மதுக்கடைகளை மூட
வலியுறுத்தி கருப்பு கொடி காட்டும்
போராட்டம் நடத்தப்போகிறேன்.
இந்திய தண்டனை சட்டம் 328ன்
படி போதை பொருளை ஒருவருக்கு வழங்கி தீங்கு ஏற்படுத்தினால்
அதற்கு 10 ஆண்டுகாலம்
வரை தண்டனை விதிக்க
சட்டத்தில் இடமுள்ளது. அந்த
அடிப்படையில் தமிழக
அரசே குற்றவாளிதான் என்றார்
நந்தினி.


Posted: 30 Jan 2015 05:47 AM PST


யார் இவர்..?? மற்ற எல்லா லோக்கல் ரயில் நிலையத்தை விடவும் தாம்பரம் சானிடோரியம் ஸ்...

Posted: 29 Jan 2015 05:27 PM PST

யார் இவர்..??
மற்ற எல்லா லோக்கல் ரயில்
நிலையத்தை விடவும் தாம்பரம்
சானிடோரியம் ஸ்டேஷன் மிக
சுத்தமாக இருக்கும்.
அதற்கு முக்கிய காரணம்
படத்தில் இருப்பவர்,
பெயர்: ராணி,
வயது: தெரியவில்லை.
அங்கு சுத்தபடுத்தும்
தொழிலாளியாக உள்ளார். தினம்
எட்டு மணி நேர வேலையாம்.
ரயிவே ட்ராக், பிளாட்ஃபார்ம்களில்
தூக்கி வீசி எறியபடும்
பிளாஸ்டிக்
பாட்டில்களை குப்பையோடு சேர்க்காமல்
அதை தனியொரு கோனி பையில்
சேர்ப்பது இவரது கெட்டிகார
தனத்தில் ஒன்று. சுமார்
மூன்று வருடங்களில்,
அங்குள்ள
சப்வேயை எத்தனையோ முறை மழையின்
காரணத்தால் கழிவுநீரால்
நிரம்பியுள்ளது,
அதை அதே நாளிலோ அல்லது மறுநாளே சுத்தம்
செய்துவிடுவார். அதுபோக
சப்வேயின் சுவற்றில்
எத்தனைமுறை இங்கு துப்பவேண்டாம்
என எழுதியும், அலட்சியமாக
பலர் துப்பிய
எச்சியினை பலமுறை சுத்தம்
செய்தும்,
செய்து கொண்டுயிருக்கிறார்.
இவரையும்
இவரது குழுவினர்களையும்
பாராட்ட வார்த்தைகள்
போதவில்லை.
பலமுறை அவரிடம் பேசி இந்த
பாராட்டினை கூற வேண்டும் என
நினைத்த எனக்கு இன்றுதான்
தைரியம் வந்தது.
பாராட்டினை கேட்ட
அவருக்கோ எல்லையற்ற
மகிழ்ச்சி!! **யாருக்கும்
தெரியாமல் பல
நல்லதினை நாட்டுக்கும்,
நாட்டு மக்களுக்கும் செய்யும்
இவரைபோல்
நல்லவர்களை அடையாளம் காட்ட
எண்ணிய நான் செய்யும்
சிறு முயற்சி!! #அறம்
- Mohamed K Yusuf.


உங்களை அளவுக்கதிகமாய் சிரிக்கவைப்பவர்களிடம் எச்சரிக்கையோடிருங்கள்... அதன் இன்னொர...

Posted: 29 Jan 2015 03:57 PM PST

உங்களை அளவுக்கதிகமாய்
சிரிக்கவைப்பவர்களிடம்
எச்சரிக்கையோடிருங்கள்...
அதன் இன்னொரு எல்லைக்கும்
அவர்களால் எளிதில்
கூட்டிச்செல்ல முடியும்.

0 comments:

Post a Comment