Facebook Tamil pesum Sangam: FB page posts |
Posted: 28 Jan 2015 05:25 AM PST மெச்சூரிட்டி"இல்லையென திட்டாதீர்கள் உங்களை நேசிப்பவர் உங்களிடம் குழந்தையாக இருந்துவிட்டு போகட்டுமே... |
Posted: 27 Jan 2015 06:41 PM PST இன்றைய சமூகத்தில் அவலம்..!! * அடுத்து வரப்போறவங்களை நினைச்சு கழிவறையில் தண்ணீர் ஊத்தாத சமூகம்தான் அடுத்த தலைமுறைக்காக இயற்கையை காப்பாத்த போகுதா? * பணக்காரன் தப்பு செய்து மாட்டிக்கொண்டால் கடந்துவிடும் இதே சமூகம் தான் ஏழையாக இருந்தால் பேசியே அவனை தற்கொலையின் விளிம்புவரை தள்ளிவிடும். * டவுசர் மட்டும் போட்டு நடிச்ச காரணத்துக்காக சமந்தாவை கொண்டாடுற இந்த சமூகம்தான் பட்டாபட்டியை போடுறகிராமத்தானை கிண்டல் செய்யுது. * வத்தல் காய வைக்கும் போது காக்காவ தொரத்துற இதே சமூகம்தான், சாமிக்கு படைச்சா காக்காவ முதல்ல திங்க சொல்லி கத்துது. * வெளிநாட்டில் தமிழ் பேசுவதை கௌரவமாக நினைக்கும் அதே சமூகம்தான் தமிழ்நாட்டில் தமிழ் பேசுவதை கேவலமாக நினைக்கிறது. * குளிரும் போது ஸ்வெட்டர் போட்டுக்க சொல்லி கொடுத்த இதே சமுகம் தான் வெயிலில் சட்டை பட்டனை திறந்து விட்டு போகும் போது பொறுக்கினும் சொல்லுது... * ஒரு ஏழையின் நேர்மையை அவன் இயலாமையாகப்பார்க்கும் அதே சமூகம் தான் ஒரு பணக்காரனின் போலியான பணிவை கண்டு சிலிர்க்கும். * ஒருவனை வசைபாடும் போது சற்றும் சம்மந்தமே இல்லாமல் அவனது அம்மாவின் ஒழுக்கத்தை சாடும் கேடுகெட்ட சமூகம் தானே இது.. * கத்தி படம் பார்க்கும் போது விவாசாயிக்காக உச்சு கொட்டுற சமுகம் தான் படம் முடிஞ்சி வெளிய வந்ததும் கோக்க கோலா வாங்கி குடிக்குது . Via Boovarahavan |
You are subscribed to email updates from பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment