Thursday, 18 December 2014

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


மனதில் உறுதி இருந்தால், வாழ்வில் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த இளைஞன் சிறந்...

Posted: 18 Dec 2014 01:44 AM PST

மனதில் உறுதி இருந்தால், வாழ்வில் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த இளைஞன் சிறந்த உதாரணம்.


தொண்ணூறுகளின் தொடக்கத்தில் உலக காஸ்மெடிக் நிறுவனங்கள் இந்தியாவைக்குறிவைத்தன - உட...

Posted: 18 Dec 2014 01:16 AM PST

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் உலக காஸ்மெடிக் நிறுவனங்கள் இந்தியாவைக்குறிவைத்தன - உடனே 1994ல் ஐஸ்வர்யாவுக்கும், சுஸ்மிதாவுக்கும் உலக அழகி பட்டங்கள் கொடுத்து இந்தியப்பெண்களை கவிழ்த்தன.

1994, 1996, 1997, 1999, 2000 ம் என தொடர்ந்து லாரா தத்தா, டயான ஹெய்டன், யுக்தா, பிரியங்கா என தேர்வு செய்து இந்தியாவில் அழகுசாதனப்பொருட்களை ஆழமாக கால் ஊன்றச்செய்து இந்தியப்பெண்களை மயக்கி கோடிகளை குவித்தது.

2000த்திற்க்குப்பிறகு முதல் 20 இடங்களில் கூட இந்திய அழகிகள் வந்ததில்லை. காரணம் இனி இந்தியப்பெண்கள் அழகு சாதனப்பொருட்களை கைவிடமாட்டார்கள் என்று புரிந்துக்கொண்டதால் மற்ற நாட்டுப்பெண்களை கவர சென்றுவிட்டார்கள்.

ஆனால் தொண்ணூறுகளிலிருந்து நாம் இன்னும் ஏமாந்துக்கொண்டிருக்கிறோம். இதுவும் ஒரு உலக அரசியல் என்பதை எப்போதுதான் புரிந்துக்கொள்ளப்போகிறோம்???


ஒரு முறை ஐந்து வயது பெண் குழந்தை தன் அப்பாவின் மூக்கு கண்ணாடியை தவறுதலாக கீழே போ...

Posted: 18 Dec 2014 01:09 AM PST

ஒரு முறை ஐந்து வயது பெண் குழந்தை தன் அப்பாவின்
மூக்கு கண்ணாடியை தவறுதலாக கீழே போட்டு உடைத்து விட்டது.

அவள் அப்பா அந்த குழந்தையை கடுமையாக திட்டி விட்டார்...

அன்று இரவு முழுவதும் அந்த பெண் தன் அப்பாவுக்காக ஒரு பரிசு தயார் செய்து, அடுத்த நாள் தன் தந்தையிடம்
கொடுத்தாள். அதை பிரித்து பார்த்த அவர் அதில் ஒன்றும்
இல்லாததை பார்த்து மீண்டும் கோபமுற்றார்.

''யாருக்காவது பரிசு கொடுக்கணும்னா அதில் எதாவது பொருள் வைத்து கொடுக்கனும்மா.. நீ வெறும் பெட்டியை கொடுப்பது தவறு'' என்று கண்டித்தார்.

அந்த குழந்தை தனது மழலை குரலில் சொன்னது, ''நான் நைட் ஃபுல்லா 1000 முத்தம் அந்த பெட்டிக்குள்ள கொடுத்து, மூடி தான் உங்க கிட்ட கொடுத்தேன்''

அதைக் கேட்ட அவரது தந்தை அந்த குழந்தையை இறுக்கி அணைத்து ''மன்னிச்சிக்கோமா உன் அன்பு புரியாமல்
உன்னை திட்டிட்டேன்'' என்றார்.

அவர் தன் தலையனை அடியில் அந்த பெட்டியை வைத்து கொண்டார். எப்போது எல்லாம் அவர் மனம் வருத்தமடைகிறதோ அப்போது எல்லாம் தன் மகளின் அன்பு முத்தத்தை அந்த பெட்டியை திறந்து எடுத்து கொண்டார்.

பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு.

(நன்றி: ஜான் மார்க்)


Posted: 17 Dec 2014 10:14 PM PST


சரியா சொன்னிங்க சார்.. அரசியலுக்காக மக்கள பிரிக்க பாக்குறாங்க. #Be_Aware

Posted: 17 Dec 2014 10:06 PM PST

சரியா சொன்னிங்க சார்.. அரசியலுக்காக மக்கள பிரிக்க பாக்குறாங்க.
#Be_Aware


0 comments:

Post a Comment