Relax Please: FB page daily Posts |
- (y) Relaxplzz
- :) Relaxplzz
- உபயோகமான வரிகள். படித்து பகிருங்கள் 1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும...
- இரண்டே நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் ந...
- ஒன்லி ஃபார் லேடிஸ்.... அழகுக்குறிப்பு.... உங்கள் முகத்தை தூசு, சூரிய ஒளியில் உ...
- (y) Relaxplzz
- ஒரு நிருபர் மூணு தாத்தாக்களை அவர்களது இளமையின் ரகசியம் பற்றி பேட்டி எடுத்தார்......
- உலகில் உள்ள எல்லோருக்கும் ஏதோஒரு பிரச்சனை உண்டுயென்று சிலர் எகத்தாளமாய் பேசுவதுண...
- :) Relaxplzz
- தஞ்சை மாவட்டம் காரப்பன்காடு கிராமத்தின் இரு புறமும் மரக் கன்றுகள் வைத்திருக்கும்...
- "தினமும் கடவுளுக்கு "ஓம்" சொல்வதை காட்டிலும்" "மனைவி கிட்டட"ஆம்" சொல்லிப் பாருங...
- பயமாக இருக்கின்றதா?? தைரியம் இருந்தால் மட்டும் LIKE செய்யவும். .. (y)
- நெற்றி தொட்டுப்பார்க்கும் கைச்சூட்டினில் உள்ளன குணப்படுத்தல்கள். வெறும் களிம்புக...
- :) Relaxplzz
- உலகின் எந்த நாட்டு சூரனாக இருந்தாலும் சீறிப்பாயும் காளையை நேருக்கு நேர் எதிர்கொள...
- :) Relaxplzz
- உறவுகள் தொலைந்து போனாலும் நினைவுகளில் வாழும் உண்மை அன்பு!!
- அறிந்துகொள்வோம்...! ---►நீங்கள் ஒருத்தரை ஒரு நிமிடம் முத்தமிட்டால் அதனால் நீங்க...
- :) Relaxplzz
- ஈபிள் கோபுரத்தின் எழில்மிகு தோற்றம்... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- நாம் மறந்து போனவைகளில் ஒன்று மண் பானை .......
- அவளிடம் எனக்கிருக்கும் பிரச்சனை ஒன்றுதான் . அவளுக்கு அவள் அழகில்லையாம் அவள்போ...
- சொர்கத்திற்க்கு ஆசைபடாமல் இருந்திருந்தால்... பூமியை நரகமாக்கி இருக்கமாட்டான் மன...
- ஒரு அமைச்சரை முட்டாள் என்று ஒரு பொதுக்கூட்ட மேடையில் ஒருவன் பேசிவிட்டான். அமைச்...
- சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல்,...
- :) Relaxplzz
- ஒரு பெண்ணுக்கு தந்தை விட சிறந்த தோழன் இல்லை... <3 உணர்ந்தவர்கள் லை பண்ணுங்க......
- தன்னுடையபையனுடன் பதற்றமாக நின்று கொண்டிருந்தாள்.பக்கத்தில் உள்ளவர்கள் என்னவென்று...
Posted: 09 Dec 2014 09:30 AM PST |
Posted: 09 Dec 2014 09:30 AM PST |
Posted: 09 Dec 2014 09:10 AM PST உபயோகமான வரிகள். படித்து பகிருங்கள் 1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், "Good touch", "bad touch" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள். 2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள். 3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை. 4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட. 5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்! 6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது. 7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள் 8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம். 9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்! 10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள். 11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்! 12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ, அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம். 13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். 14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்! 15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம். 16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்! 17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம். 18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்! 19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள். 20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். "All work and no play makes Jack a dull boy" 21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள். சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம். 22. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்! 23. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்! 24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்! 25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல! Relaxplzz |
Posted: 09 Dec 2014 09:00 AM PST இரண்டே நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா? நம்புங்கள் என்கிறார் ப்ரீத்தி ஷா. சும்மா இல்லை. ஆராய்ச்சி ஆதாரங்களோடு. யார் இந்த ப்ரீத்தி ஷா? என்ன ஆராய்ச்சி அது? அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா. 'இன்சைட்' என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார். விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி ஷா. இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து இந்தத் தரச்சோதனை நடந்தது. இதில் வெளியான முடிவுகள் மூலமாகத்தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் ப்ரீத்தி ஷா. ஆய்வு சொல்லும் முடிவுகள்: சோதனை செய்யப்பட்ட எந்த முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸும் விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல ஏகப்பட்ட சத்துக்களை உள்ளடக்கியதாகவோ, குழந்தைகள் உடல் நலனுக்கு முற்றிலும் நன்மை பயப்பதாகவோ இல்லை. அனைத்து நூடுல்ஸ்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் எக்கச்சக்க மடங்கு அதிகமாக உப்பு மற்றும் கொழுப்பு உள்ளன. நூறு கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்டசோடியம் அளவாகும். ஆனால், இந்தியாவில் விற்கப்படும் வெவ்வேறு நூடுல்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மில்லி கிராம் முதல் 1943 மில்லி கிராம் வரை சோடியம் இருந்திருக்கிறது. கொழுப்பும் மிகுதி. ஆனால் தேவையான மற்ற சத்துக்களோ சொல்வதைவிடக் குறைந்த அளவில்! மிகக் குறைந்த அளவுக்கே நார்ச்சத்து, புரதம், கால்சியம் ஆகியன உள்ளன. இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும்குழந்தைகள் ஆளாக நேரிடும். ப்ரீத்தி ஷா சொல்கிறார் . ''ஆய்வு முடிவுகளைப் பார்த்தபோது அதிர்ந்துபோனேன். இது தொடர்பாக விளக்கம் கேட்டு 15 நிறுவனங்களுக்கும் ஆய்வு நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பினோம். ஆனால், இதுவரை அந்தக் கடிதங்களுக்கு எந்த நிறுவனமும் பதில் அளிக்கவில்லை. கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு என்று எவ்வளவோ சத்து மிக்க சிறுதானியங்கள் விளையும் மண் இது. ஆனால், அவற்றை எல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு, விளம்பரங்கள் மூலம் சந்தையைப் பிடிக்கும் பெருநிறுவனங்கள்இந்திய மக்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே அடிமைப்படுத்துகின்றன. பெற்றோர்கள் இந்த விஷயத்தில் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். குப்பை உணவின் மூலமாக ஏற்படும் வளர்ச்சி உண்மையானது அல்ல. நாளை நம் குழந்தைகள் நிரந்தர நோயாளிகளாக நாமே காரணம் ஆகிவிடக் கூடாது'' என்றார் அக்கறையுடன். உண்மைதான். இந்த காலகட்டத்தில் எந்த விஷயத்தையுமே விழிப்பு உணர்வுடன்தான் அணுக வேண்டும்! Relaxplzz ![]() |
Posted: 09 Dec 2014 08:50 AM PST ஒன்லி ஃபார் லேடிஸ்.... அழகுக்குறிப்பு.... உங்கள் முகத்தை தூசு, சூரிய ஒளியில் உள்ள அல்ட்ரா வயலட் கதிர்கள் போன்றவைகளில் இருந்து பாதுகாத்திட......, உடனே தடவுங்கள்... * * * * * * * * "ASIAN PAINTS" Exterior Emulsion 7yrs guarantee... :P :P Relaxplzz |
Posted: 09 Dec 2014 08:20 AM PST |
Posted: 09 Dec 2014 08:10 AM PST ஒரு நிருபர் மூணு தாத்தாக்களை அவர்களது இளமையின் ரகசியம் பற்றி பேட்டி எடுத்தார்... முதல் தாத்தா : எனக்கு மது ,புகை மாதிரி எந்த கெட்ட பழக்கமும் இல்லை...நல்ல ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுவேன்.. நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ? முதல் தாத்தா : 95 நிருபர் : வாவ் ! வெரிகுட் ! ரெண்டாவது தாத்தா : எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டு..ஆனால் மது பழக்கம் இல்லை..நானும் நல்ல ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுவேன்.. நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ? ரெண்டாவது தாத்தா : 85 நிருபர் : வாவ் ! வெரிகுட் ! மூணாவது தாத்தா : எனக்கு மது , புகை , பொண்ணுக சகவாசம்னு எல்லா பழக்கமும் இருக்கு..சாப்பிடாமகூட இருந்துருவேன் ..தண்ணி அடிக்காம இருக்க மாட்டேன்..தண்ணி அடிக்கலேன்னா கை, காலெல்லாம் அப்பிடியே உதர ஆரம்பிச்சிரும். நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ? மூணாவது தாத்தா : 25 நிருபர் : ????????? சிரித்ததுடன் சிந்திக்கவும் வேண்டும் இளைஞர்களே, 25வயதில் கிழவன் ஆக வேண்டுமா...? Relaxplzz |
Posted: 09 Dec 2014 08:05 AM PST உலகில் உள்ள எல்லோருக்கும் ஏதோஒரு பிரச்சனை உண்டுயென்று சிலர் எகத்தாளமாய் பேசுவதுண்டு ... உண்மைதான் ஆனால் ... பணக்காரனுக்கோ ... அனவசிய தேவையால் பிரச்சனை ... ஏழைக்கோ ... அத்தியாவசிய தேவைக்கே பிரச்சனை ... பணம்கொண்டு தன்னைக் கொல்கிறான் பணக்காரன் ... பணமின்றி தானே சாகிறான் ஏழை ... எது எப்படியோ கடைசியில் பணம் பாதாளம் வரை பாய்ந்து விடுகிறது ... Relaxplzz ![]() "மனம் தொட்ட வரிகள்" - 1 |
Posted: 09 Dec 2014 07:52 AM PST |
Posted: 09 Dec 2014 07:50 AM PST |
Posted: 09 Dec 2014 07:48 AM PST "தினமும் கடவுளுக்கு "ஓம்" சொல்வதை காட்டிலும்" "மனைவி கிட்டட"ஆம்" சொல்லிப் பாருங்கள்" "வாழ்க்கையை அழகாக வாழலாம்" "ஆம் ஆம்" ம்ம்ம்ம். - ஆம்பல் தமிழ் ![]() குசும்பு... 3 |
Posted: 09 Dec 2014 07:40 AM PST |
Posted: 09 Dec 2014 07:37 AM PST நெற்றி தொட்டுப்பார்க்கும் கைச்சூட்டினில் உள்ளன குணப்படுத்தல்கள். வெறும் களிம்புகளிலல்ல. - இந்திரா கிறுக்கல்கள் ![]() அன்பியல் - 1 |
Posted: 09 Dec 2014 07:25 AM PST |
Posted: 09 Dec 2014 07:00 AM PST |
Posted: 09 Dec 2014 06:57 AM PST |
Posted: 09 Dec 2014 06:38 AM PST |
Posted: 09 Dec 2014 06:30 AM PST அறிந்துகொள்வோம்...! ---►நீங்கள் ஒருத்தரை ஒரு நிமிடம் முத்தமிட்டால் அதனால் நீங்கள் இருவரும் 2.6 கலோரியை எரிக்கிறீர்கள். ---►மும்பையில் நீங்கள் ஒரு நாள் சுவாசிக்க கூடிய காற்று, 2 1/2பாக்கெட் சிகரெட் உபயோகிப்பதற்கு சமமானது. ---►இந்தியாவில் மனிதனுக்கு வேண்டிய டாய்லெட்டை விட செல்போன்கள் அதிகம். ---►நீங்கள் கொட்டாவி விடும்போது நாக்கை தொட்டால் அது கொட்டாவியை உடனே நிறுத்திவிடும். ---►பெண்கள் ஒரு நாளைக்கு 7000 வார்த்தைகள் பேசுகின்றனர் ஆண்கள் 2000 வார்த்தைகள் தான் பேசுகின்றனர். ---►இந்தியாவில் மில்லியன் மக்களுக்கு 11 ஜட்ஜ் மட்டுமே உள்ளனர்.இப்போதுவழக்கில் உள்ள எல்லா கேஸுக்களை முடிக்க 466 ஆண்டுகள் பிடிக்கும். ---►நீல நிற கண்களை உடையோற்கு மற்றவர்களை விட இரவில் பார்வை திறன் துல்லியமாக இருக்கும் ---►காகிதப் பணம் தயாரிக்கப்படுவது காகிதம்,பருத்திஆகியவற்றின் சிறப்பான கலவைகளால் தான். ---►உலகில் பயன்படுத்தப்படும் பெட்ரோலில் 29 சதவீதம் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது.அது போல் உலகின் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 33 சதவீதம் பயன்படுத்தப்படுவதும் அமெரிக்காவில்தான். ---►ஒரு முறை புன்னகை புரிவதன் மூலம் குறைந்தப் பட்சம் 30 தசைநார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது. ---►மனித உடலில் இரத்த ஓட்டம் இல்லாத பகுதி எது தெரியுமா? கண்ணின் கருவிழி.ஏனென்றால் கருவிழி அதற்கு தேவையான ஆக்ஸிஜனை காற்றிலிருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்கிறது. Relaxplzz |
Posted: 09 Dec 2014 06:23 AM PST |
Posted: 09 Dec 2014 06:20 AM PST |
Posted: 09 Dec 2014 06:10 AM PST |
Posted: 09 Dec 2014 05:58 AM PST |
Posted: 09 Dec 2014 05:51 AM PST அவளிடம் எனக்கிருக்கும் பிரச்சனை ஒன்றுதான் . அவளுக்கு அவள் அழகில்லையாம் அவள்போல் அழகில்லையாம் எனக்கு. - Joe Felix. ![]() "ரசனை துளிகள்" - 2 |
Posted: 09 Dec 2014 05:40 AM PST சொர்கத்திற்க்கு ஆசைபடாமல் இருந்திருந்தால்... பூமியை நரகமாக்கி இருக்கமாட்டான் மனிதன்... ![]() ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 2 |
Posted: 09 Dec 2014 05:30 AM PST ஒரு அமைச்சரை முட்டாள் என்று ஒரு பொதுக்கூட்ட மேடையில் ஒருவன் பேசிவிட்டான். அமைச்சர் சும்மா விடுவாரா அவன் மேல் வழக்கு போட்டார். தீர்ப்பு வந்தது அமைச்சரை அவமானப்படுத்தியதற்கு இரண்டு வருசமும், அரசாங்க இரகசியத்தை வெளிப்படுத்தியதற்கு எட்டு வருசமும் ஆகப் பத்துவருசம் சிறை தண்டனை அவனுக்கு :P :P Relaxplzz |
Posted: 09 Dec 2014 05:16 AM PST |
Posted: 09 Dec 2014 05:07 AM PST சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சரியங்களின் சில தகவல்கள். முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள்தான்." (1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ). (2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறி க்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத் தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல், புவியியல் மற் றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம். (3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக் கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உட லில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது. (4) விமானத்தின்மேல் இருக்கும் பொற்கூரை 21,600 தங்கத்தகடு களை கொண்டு வேயப்பட்டுள் ளது, இது மனிதன் ஒரு நாளை க்கு சராசரியாக 21600 தடவை கள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கி ன்றது (15*60*24 = 21,600). (5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத் தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இரு க்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது. இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்ப வையும் அடங்கும். (6) திருமந்திரத்தில் " திருமூலர்" மானுடராக்கை வடிவு சிவலிங்கம் மானுடராக்கை வடிவு சிதம்பரம் மானுடராக்கை வடிவு சதாசிவம் மானுடராக்கை வடிவு திருக்கூத்தே என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்ப ரம், அதுவே சதாசிவம், அதுவே அவரி ன் நடனம்". என்ற பொருளைக் குறிகி ன்றது. 7) "பொன்னம்பலம்" சற்று இடது புற மாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடை ய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப் படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத் தே அது. "கனகசபை" பிற கோயில் களில் இருப்பதை போன்று நேரான வழி யாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின் றது . இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக் கின்றது, (8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங் களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கி ல் செல்லும் பல பலகைகள் (CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது. (9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது. அர்த்த மண்ட பத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திர ங்களையும், அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கி ன்றது. (10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண் டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது. -Abdul Vahab. Relaxplzz ![]() "சில அதிசயங்கள் - தகவல்கள்" - 2 |
Posted: 09 Dec 2014 04:54 AM PST |
Posted: 09 Dec 2014 04:40 AM PST |
Posted: 09 Dec 2014 04:30 AM PST தன்னுடையபையனுடன் பதற்றமாக நின்று கொண்டிருந்தாள்.பக்கத்தில் உள்ளவர்கள் என்னவென்று கேட்டனர். "இவன் காசை முழுங்கிட்டான்.என்ன செய்றதுன்னுதெரியலை'' ஆளாளுக்கு மருத்துவம் சொல்ல ஆரம்பித்தார்கள். ""நாலுவாழைப் பழத்தை ஊட்டிவிடு. தானா வெளியே வந்துடும்'' "ஆஸ்பத்திரிக்குப் போய் எக்ஸ்ரே எடுத்துப் பார்... '' கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் பையனைத்தூக்கிக்குனிய வைத்து முதுகில் தட்டிக் கொடுத்தார். பையன் விழுங்கிய காசுவெளியே வரவில்லை. அப்போது டிப்டாப்பாக உடையணிந்த ஒருவர் வந்தார்.பையனைத்தூக்கி, தலைகீழாகப் பிடித்துக் குலுக்கி, ஒருதட்டுத் தட்டினார். காசு வெளியே வந்து விழுந்தது. எல்லாரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அந்தப் பெண்நன்றியுடன் அவரைப் பார்த்தாள். "சார் நீங்க டாக்டருங்களா?'' "இல்லை இன்கம்டாக்ஸ் ஆபிஸர். எங்கே, எப்படித்தட்டினால் காசு விழும்னு எனக்குத் தெரியாதா? Relaxplzz |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment