Relax Please: FB page daily Posts |
- ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம் தெரியாத உண்மை உபயோகமான தகவல்கள் !!! வாகனங்களை ஓட்டத...
- படுக்கையில் ஸ்மார்ட்போன் உபயோகிப்பவர் கவனத்திற்கு!ஒரு எச்சரிக்கை தகவல்! ஸ்மார்ட...
- :) Relaxplzz
- மம்மி...எனக்கு ஒரு டவுட்டு...(நியாயம்தானே....) அப்பு என்ற 7 வயது சிறுவன் (உங்கள...
- இவை பூக்கள் அல்ல... உற்று பாருங்கள் ... மனிதர்கள் தான்... பிடித்தவர்கள் லைக் பண...
- (y) Relaxplzz
- :P :P
- ஹிட்லரின் சில உபதேசங்கள்….. மடையனுடன் விவாதிக்காதே..! மக்கள் உங்கள் இருவரையும்...
- இளைஞர்கள் அந்தப் படகில் ஏறினார்கள். படகோட்டி மண்டியிட்டு வழிபாடு செய்வதைக் கண்...
- வாரக்கடைசி வந்தா...ஆடு, மாடு, கோழியின் கழுத்துல கத்திய வைக்கிறான் மனுசன். * * *...
- நினைவிருந்தால் like பண்ணுங்க (y)
- :) Relaxplzz
- :P :P Relaxplzz
- எது. நாகரீகம்...? .... - நம்ம தாத்தாவும் பாட்டியும் எந்த தோனி ,கோஹ்லி சொல்லி பூஸ...
- அன்பு எப்பேற்பட்ட உயரங்களையும் வெல்லும்.. கென்யா நாட்டு வீராங்கனை ஓட்டப்பந்தயத்...
- இங்கிலீஷ் என்கிற வார்த்தைக்கே 'ஆங்கிலம்' என்று பெயர் வைத்தவன் தமிழன்... அது தமிழ...
- லொம்பார்ட் வீதி, சான் பிரான்சிஸ்கோ Lombard Street -San Francisco பிடித்தவர்கள்...
- :) Relaxplzz
- ஏன்..???
- ஆண்களே! தாடி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா...? சரும புற்றுநோயைத் தடு...
- # படித்ததில் பிடித்தது # மனைவி எனும் பெண்ணுக்குள், ஒரு பர்சனல் செக்ரடரி, ஒரு...
- உலகிற்கே படியளக்கும் விவசாயிகள் உழைப்பின் இடைவெளியில்... படம்: நா.வசந்தகுமார்.
- உக்காந்து யோசிப்பாய்களோ...?!!
- :) Relaxplzz
- 1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக க...
- களவாணியின் காதல் கவிதைகள் 1.நீ எனக்காக சிந்திய கண்ணீர் தித்தித்த போதுதான் உணர்ந...
- வாழ்க்கைல சந்தோசம் வந்தா சீக்கிரம் அனுபவிச்சிரனும்... கஷ்டம் வந்தா சீக்கிரம் அ...
- ஐரோப்பாவிலுள்ள ஏகியன் கடல், கொரிந் கால்வாயூடாக கடக்கும் ஓர் கப்பல்... பிடித்தவர...
- :) Relaxplzz
- ;-) Relaxplzz
Posted: 07 Dec 2014 09:10 AM PST ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம் தெரியாத உண்மை உபயோகமான தகவல்கள் !!! வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை. * பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம். * சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லதுவாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும். * சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது. * ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள். * ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருதவேண்டும். * ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்தஅழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது. * கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும். * நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும். * வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும். * கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும். * நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளிவராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் "அப்சர்வ்'செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை. * நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் "சிக்னல்' இல்லாத இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு' இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம். மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும் Relaxplzz |
Posted: 07 Dec 2014 09:00 AM PST படுக்கையில் ஸ்மார்ட்போன் உபயோகிப்பவர் கவனத்திற்கு!ஒரு எச்சரிக்கை தகவல்! ஸ்மார்ட்போன் சிலருக்கு ஆறாவது விரல்... சில மணித் துளிகள் கூட அதைப் பிரிந்திருக்க முடியாது அவர்களால். எது இருக்கிறதோ, இல்லையோ, பக்கத்தில் போன் இருந்தாக வேண்டும் என்கிற இந்தப் பழக்கத்தை மிகத் தவறானதென எச்சரிக்கிறது அமெரிக்காவின் ஆய்விதழ் ஒன்று. 53 சதவிகிதம் பேர் தூங்க செல்லும் போது கூட ஸ்மார்ட் போனை விட்டுப் பிரிவதில்லை என்கிறது அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை. இதனால் அடுத்தவருடன் பேசுவதைக்கூட குறைத்துக் கொள்கிறார்களாம். இதில் 5 சதவிகிதம் பேர் போன் கையில் இருப்பதால் முழுமையாகத் தூங்குவதே இல்லையாம். யாருக்காவது குறுஞ் செய்தி அனுப்பியே, தங்களது இரவைக் கழிப்பவர்கள் 2 சதவிகிதமாம். ஸ்மார்ட்போனில் இருந்து வெளிப்படும் நீல நிற ஒளியானது மெலட்டோனின் என்னும் ஹார்மோன் சுரப்பதை குறைக்கிறது. தூக்கத்துக்கு மெலட்டோனின் ஹார்மோன் இன்றியமையாதது. மெலட்டோனின் இரவில்தான் சுரந்து தூக்கத்தை வரவழைக்கும். ஸ்மார்ட்போனில் இருக்கும் எல்இடி லைட் நீல நிற ஒளியை அதிக அளவில் வெளிப்படுத்தி உடலுக்கு பகல் போல காண்பித்து ஏமாற்றிவிடுகிறது. இதனால் உடலின் தூக்க சுழற்சி பாதிப்படைகிறது. உறக்கம் அவர்களை விட்டு மெதுவாக நழுவும். இந்த செயல்பாடு தொடர்ந்தால் 'இன்சோம்னியா' என்னும் தூக்கமின்மை நோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. ஸ்மார்ட்போன், லேப்டாப், எல்இடி டி.வி. போன்றவற்றைப் படுக்கையறையில் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் எச்சரித்து இருக்கிறது அந்த ஆய்வு. ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்ற சாதனங்களை படுக்கையில் வைத்துக்கொள்வதால் வேறு சில பயங்கர விளைவுகளையும் தவிர்க்க முடிவதில்லை. எல்இடி லைட் வெளிச்சம் உங்களது கண்களில் உள்ள ரெட்டினாவை பாதிப்பதால் பார்வைக் குறைபாடு ஏற்படும். மெலட்டோனின் ஹார்மோன் அளவு குறைவதால் தூக்கம் கெடுவது மட்டுமல்ல... பெண்களுக்கு மார்பகம், சினைப்பை புற்றுநோயும், ஆண்களுக்கு விந்துப்பை புற்றுநோயும் வரும் அபாயத்தையும் ஏற்படுத்தலாம். லெப்டின் என்னும் வேதிப்பொருள் சுரப்பதும் குறைகிறது. உணவு சாப்பிட்ட பிறகு திருப்தி உணர்வை ஏற்படுத்துவது இதன் வேலை. இது குறைவதால் பசி உணர்வு இருந்து கொண்டே இருக்கும். அதிகம் சாப்பிடத் தூண்டி, பருமன் நோய்க்கு வழி வகுக்கும். சரியான நேரத்துக்கு உணவுகளை எடுத்துக் கொள்ளத் தவறுவதால் நீரிழிவு தாக்கும் அபாயம் அதிகரிக்கும் Relaxplzz ![]() |
Posted: 07 Dec 2014 08:55 AM PST |
Posted: 07 Dec 2014 08:45 AM PST மம்மி...எனக்கு ஒரு டவுட்டு...(நியாயம்தானே....) அப்பு என்ற 7 வயது சிறுவன் (உங்கள் வீட்டு வாண்டு மாதிரி) படுக்கையில் படுத்துக் கொண்டே தன் தாயிடம் பேசிக்கொண்டிருக்கிறான். இனி.....சீனுக்கு வாருங்கள்... அப்பு : ஏன் அம்மா கொசு ராத்திரில மட்டும் நிறைய கடிக்கவருது....அது எப்ப அம்மா தூங்கும்? அம்மா : அது தூக்கம் வரும்போது தூங்கும்... அப்பு : எப்ப தூக்கம் வரும்மா? அம்மா : அது சாப்பிட்டவுடன் தூங்கும்... அப்பு : கொசுக்கு வீடு எங்கம்மா? அம்மா : அதுக்கு வீடே இல்லை... அப்பு : ஏம்மா அதுக்கு வீடே இல்லை? அம்மா : அது ரொம்ப சின்னதா இருக்க அதான் வீடு ... இல்ல... அப்பு : நான் ரொம்ப சின்ன பிள்ளைதானே எனக்கு வீடு ... இருக்கே ..... அம்மா : இது அப்பா அம்மா உனக்கு கட்டி தந்தது... அப்பு : அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா இல்லையா அம்மா.. அம்மா : அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப சின்னதா இருக்குமா அதான் அதுக்கு வீடு.. இல்ல... அப்பு : கொசுவுக்கு கொசுன்னு யாரும்மா பேர் வைச்சது? அம்மா : கடவுள்... அப்பு : கடவுளைக் கொசு கடிக்குமா அம்மா ? அம்மா : கடிக்காது... அப்பு : ஏன்மா.... கடிக்காது? அம்மா : கடிச்சா.... கடவுள் தண்டிச்சிடுவார்... அப்பு : அப்போ கடவுளுக்கு கோவம் வருமா அம்மா ? அம்மா : வரும். தப்பு செய்தா கடவுள் அடிப்பாரு... அப்பு :நாம..எதுக்குமே...கோப பட.. கூடாது தப்புன்னு அன்னைக்கு சொன்னியே... அம்மா : சரி..நீ..தூங்கு... அப்பு : கடவுள் நல்லவராம்மா? அம்மா : ரொம்ப நல்லவர்.... அப்பு : அப்புறம் ஏம்மா கொசுவை அடிக்கிறாரு? அம்மா : அது அப்படித்தான் நீ தூங்கு... அப்பு : கொசு ஏன்...மா நம்மளைக் கடிக்குது? அம்மா : ஆகா...அப்பனுக்கு மேலே கடிக்கிறானே...அதுக்கு பசிக்குது....ல்ல அதுதான் கடிக்குது.... அப்பு : கொசு இட்லி சாப்பிடுமா ? சாம்பார் வெச்சுக்குமா..சட்னி தொட்டுக்குமா.....? அம்மா : அதெல்லாம் அதுக்கு ...பிடிக்காது... அப்பு : கொசு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்குமா? அம்மா : வாயை மூடிட்டு தூங்குடா அப்பு... அப்பு : ஒரே ஒரு கேள்வி மம்மி? அம்மா : கேட்டுத் தொலை... அப்பு : கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்? அம்மா : அதுக்கு பல்லே இல்லை... அப்பு : பிறகு எப்படி கடிக்கும்? அம்மா : அய்யோ ஏண்டா உசுர வாங்குற? இப்ப நீ வாய மூடாட்டி பேய்கிட்ட புடிச்சுக் கொடுத்திடுவேன்... அப்பு : பேயைக் கொசு கடிக்குமா மம்மி? அம்மா : அப்பு வாயை மூடிட்டு தூங்கு... அப்பு : நாம தூங்கும் போது வாயும் தூங்குமா மம்மி.. அம்மா : அய்யய்யோ ..இவன் தொல்லை தாங்கலையே...அப்புடியே...அப்பன் மாதிரி...தான் படவா ...108 கேள்வி...கேக்க வேண்டியது...இப்போ தூங்க போறீயா..இல்லியா...?? அப்பு :அம்மா..கடைசி ரெண்டு கேள்விக்கு பதில் சொல்லவே இல்லையே... அம்மா : சரி..சரி...பேயை...கொசு கடிக்காது....தூங்கு...போ... அப்பு : ஆனா...கொசு உன்ன கடிக்குதேம்மா... அம்மா : ஆமா..என்னையும்தான் கடிக்கும்... அப்பு : இப்போ.... பேயை...கொசு கடிக்காதுன்னியே...முந்தாநாள்...அப்பா...எதிர்வீட்டு ரங்குடு மாமா கிட்டே...பேசிக்கிட்டு இருக்கச்சே....என் தலைஎழுத்து...பொண்டாட்டிங்கர பேர்ல...ஒரு பேயை கட்டி வெச்சுட்டாங்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தாரே.... அம்மா : அப்புடியா...சேதி...இந்தோ...வர்றேன்...நீ தூங்கு...எங்கே...அந்த...நீட்டு கரண்டி.... பத்த வச்சிட்டியே பரட்ட :P :P Relaxplzz |
Posted: 07 Dec 2014 08:40 AM PST |
Posted: 07 Dec 2014 08:30 AM PST |
Posted: 07 Dec 2014 08:20 AM PST |
Posted: 07 Dec 2014 08:10 AM PST ஹிட்லரின் சில உபதேசங்கள்….. மடையனுடன் விவாதிக்காதே..! மக்கள் உங்கள் இருவரையும் பிரித்தறிவதில் தவறிழைத்துவிடலாம். தோற்றவன் புன்னகைத்தால் வெற்றியாளன் வெற்றியின் சுவை இழக்கிறான். இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்றிருக்கின்ற மனிதனிடம், நீ சவால்விடாதே! ஒரு மனிதன் அவனது தாய் மரணிக்கும் வரை குழந்தையாகவே இருக்கிறான். அவள் மரணித்த அடுத்த கணம் அவன் முதுமையடைந்து விடுகிறான். பின்னாலிருந்து நீ விமர்சிக்கப்பட்டால் நினைத்துக் கொள்: நீ முன்னால் இருக்கிறாய் என்று. நீ நண்பனாக இரு. உனக்கு நண்பன் இருக்க வேண்டும் என ஆசைகொள்ளாதே! நீ உன் எதிரியை விரும்பும்போது அவனது அற்பத்தனத்தை உணர்ந்து கொள்கிறாய். நாம் எல்லோரும் நிலவைப் போன்றவர்கள். அதற்கு இருளான ஒரு பக்கமும் உண்டு. உனது மனைவியின் ரசனையில் நீ குறைகாணாதே. ஏனென்றால் உன்னையும் அவள்தான் தெரிவுசெய்தாள். Relaxplzz |
Posted: 07 Dec 2014 08:00 AM PST இளைஞர்கள் அந்தப் படகில் ஏறினார்கள். படகோட்டி மண்டியிட்டு வழிபாடு செய்வதைக் கண்டு சிரித்தார்கள் "காற்றில்லை, கடல் அமைதியாயிருக்கிறது" என்று கேலி செய்தார்கள். படகோட்டி வந்து படகை இயக்கினார். சிறிது தூரம் போனதும் காற்று பலமாக வீசியது. அனைவரும் பிரார்த்திக்கத் துவங்கினார்கள். படகோட்டி எச்சரிக்கையாய் இயக்கி படகைக் கரை சேர்த்தார். "நீங்கள் எங்கள் பிரார்த்தனையில் பங்கெடுக்கவிலையே? வியப்புடன் கேட்டவர்களுக்குச் சொன்னார். "கடல் அமைதியாய் இருக்கையில் நான் பிரார்த்திக்கிறேன் . கொந்தளிக்கும் போது படகைக் கையாள்கிறேன்". இதுதானே நமக்கும் வேண்டும்.. Relaxplzz ![]() |
Posted: 07 Dec 2014 07:50 AM PST |
Posted: 07 Dec 2014 07:40 AM PST |
Posted: 07 Dec 2014 07:30 AM PST |
Posted: 07 Dec 2014 07:20 AM PST |
Posted: 07 Dec 2014 07:10 AM PST எது. நாகரீகம்...? .... - நம்ம தாத்தாவும் பாட்டியும் எந்த தோனி ,கோஹ்லி சொல்லி பூஸ்ட் குடிச்சிட்டு போய் தோட்டத்தில நாள் முழுக்க வேலை செஞ்சாங்க ???? ..... - எந்த டூத் பேஸ்ட் ல உப்பு இருக்குனு பாத்து பல்லு விளக்கணங்க ??? ..... - அமேஜான் காட்டுல மட்டுமே கிடைக்கிற எண்ணைய வச்சுதான் தலையில தேச்சு முடிய வளாத்த்தங்கலா??? ... - எந்த காஃபீ /டீ குடிச்சுட்டு அவங்கங்க வீட்டுக்காரம்மாவ புரிஞ்சிக்கிட்டாங்க ??? .... - எந்த இந்ஸ்டிட்யூட்ல 10 லட்சம் செலவு பண்ணி படிச்சிட்டு ,தலப்பாகட்டு பிரியாணி கடை சமையல் மாஸ்டர் பிரியாணி செய்யிறாரு ???? ..... வாழ்க்கை தரத்தை உயர்த்திடோம்னு நினைச்சு ,நம்ம உடம்பு தரத்தை கீழ போட்டுட்டோமே .... நாகரீகம் நாகரீகம் னு சொல்லி கடைசியா நம்ம நாசமா போனதுதான் மிச்சம் .... ...... " ஏன்டா படிச்சோம்னு இருக்கு .... பேசாம படிக்கலன்னா எந்தவித எதிர்பார்ப்பு இல்லாம , காலையில ஏந்திரிச்சு, பழைய கஞ்சிய குடிச்சுட்டு, தோட்டத்தில வேர்வை வர அளவு உழைச்சு , அப்படியே சாயந்திரம் ஊர் பசங்க கூட கொஞ்ச நேரம் கம்மா கரைக்கு போய் அரட்டை அடிச்சிட்டு, ராத்திரி படுத்த உடனே தூக்கம் வர்ற வாழ்க்கை வாழ முடியாத படி , இந்த கருமம் பிடிச்ச படிப்பு தந்த வெட்டி கௌரவம் தடுக்குது நாசமா போக......... Relaxplzz |
Posted: 07 Dec 2014 07:00 AM PST அன்பு எப்பேற்பட்ட உயரங்களையும் வெல்லும்.. கென்யா நாட்டு வீராங்கனை ஓட்டப்பந்தயத்தில் தன்னுடன் ஓடி வந்த சீனா நாட்டு மாற்று திறனாளி தாகத்தால் தவிப்பதை பார்த்து அவருக்கு தண்ணீர் குடிக்க உதவி செய்து விட்டு ஓடினார். இதனால் அவருக்கு இரண்டாம் இடமே கிடைத்தது அது மட்டும் இல்லாமல் US $ 10,000 பணத்தையும் இழந்தார்.போட்டியில் ஜெயிப்பது மட்டுமே வெற்றி இல்லை. தங்கம் மட்டுமே அப்ரிக்காவில் கிடைப்பதில்லை.சில தங்கமான மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை நிருபித்து விட்டார் இந்த பெண்.இவர் போட்டியில் ஜெயிக்கவில்லை ஆனார் எல்லார் மனதையும் ஜெயித்துவிட்டார்.!!!! Relaxplzz ![]() |
Posted: 07 Dec 2014 06:50 AM PST இங்கிலீஷ் என்கிற வார்த்தைக்கே 'ஆங்கிலம்' என்று பெயர் வைத்தவன் தமிழன்... அது தமிழ் மொழியின் புலமை.. தமிழ் என்ற வார்த்தைக்கு எல்லா மொழியிலும் 'தமிழ்' தான் அது தமிழ் மொழியின் வலிமை.. நேற்றுவரை உருவாக்கப்பட்ட வார்த்தைக்கும் அழகுதமிழில் அர்த்தம் உண்டு.. அது தமிழ் மொழியின் பெருமை.. Relaxplzz ![]() |
Posted: 07 Dec 2014 06:40 AM PST |
Posted: 07 Dec 2014 06:30 AM PST |
Posted: 07 Dec 2014 06:20 AM PST |
Posted: 07 Dec 2014 06:10 AM PST ஆண்களே! தாடி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா...? சரும புற்றுநோயைத் தடுக்கும் சமீபத்திய ஆய்வின்படி, சூரியனிலிருந்து வரும் 95 சதவீத புறஊதாக் கதிர்கள் நம் சருமத்தை நேரடியாகத் தாக்காதவாறு நம் தாடி பாதுகாக்கிறதாம். இதனால் தான் தாடி வைத்திருக்கும் ஆண்களுக்கு சரும புற்றுநோயின் தாக்கம் குறைவாக உள்ளதாம். ஆஸ்துமா, அலர்ஜிக்கு... தூசி உள்ளிட்ட பல அலர்ஜிகளைத் தடுப்பதில் அல்லது ஃபில்ட்டர் செய்வதில் தாடியின் பங்கு முக்கியமானதாக உள்ளது. இதனால் ஆஸ்துமாவையும் தவிர்க்க முடிகிறதாம்! இளமையாக இருக்க... தாடி வளர்த்திருப்பதால், சூரியனின் தாக்கம் மிக குறைவாக இருப்பதால், தாடி இல்லாதவர்களை நீண்ட ஆண்டுகளுக்கு இளமை தோற்றத்துடனே இருக்க தாடி ஒரு வயோதிகத் தோற்றத்தை வேண்டும கொடுக்கலாம்; ஆனால், உண்மையில் தாடி வைத்திருப்பவர்கள் இளந்தாரிகள் குளிரைத் தாங்க... தாடி வைத்திருப்பதால் குளிரை அதிகம் தாங்கிக் கொள்ள முடியுமாம். எவ்வளவுக்கு எவ்வளவு தாடி அ உள்ளதோ, அந்த அளவுக்கு அது குளிருக்கு இதமா இருக்குமாம். நோய்த் தொற்றுக்கள் குறைய... பாக்டீரியா உள்ளிட்ட நோய்த் தொற்றுக்களைக் குறைப்பதற்கு தாடி மிகவும் உபயோகமாக இருக்கிறது. சுத்தமாக ஷேவ் செய்திருப்பவர்களை இந்த நோய்த் தொற்றுக்கள் எளிதாகத் தொற்றிக் கொள்ளுமாம். குறைகளில்லா சருமத்திற்கு... ஷேவிங்கின் போது ஏற்படும் வெட்டுக் காயங்கள், பருக்கள் உள்ளிட்ட சருமக் குறைபாடுகள் தாடி வைத்திருப்பவர்களுக்குக் கிடையாது. அவை இருந்தாலும் தாடிக்குள் ஒளிந்து தான் கிடக்கும்! இயற்கையான ஈரப்பதத்திற்கு... தாடி வைத்திருப்பதால் உலர்ந்த சருமம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அது குளிர்ந்த காற்றையே எப்போதும் தக்க வைத்துக் கொண்டிருப்பதால், சருமம் பாதுகாக்கப்படுகிறத Relaxplzz |
Posted: 07 Dec 2014 06:00 AM PST # படித்ததில் பிடித்தது # மனைவி எனும் பெண்ணுக்குள், ஒரு பர்சனல் செக்ரடரி, ஒரு குக், ஒரு வேலைக்காரி, ஒரு படுக்கைத் துணை, ஒரு நிர்வாகி, ஒரு கணக்குப்பிள்ளை, ஒரு நீதிமன்றம், ஒரு ஹாஸ்டல், ஒரு சினிமா தியேட்டர், ஒரு மினி பார், ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல், இத்தனையும் அடங்கிஇருக்கிறது >எழுத்தாளர் அனுராதா ரமணன்< Relaxplzz ![]() |
Posted: 07 Dec 2014 05:50 AM PST |
Posted: 07 Dec 2014 05:40 AM PST |
Posted: 07 Dec 2014 05:30 AM PST |
Posted: 07 Dec 2014 05:10 AM PST 1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும். 2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும். 3. மிகத்தொலைவிலிரு ந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள். 4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும். 5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும். 6. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும். 7.நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும். 8.நம்பிக்கையோடுகூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும். 9.குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும். 10.உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும். Relaxplzz |
Posted: 07 Dec 2014 05:02 AM PST களவாணியின் காதல் கவிதைகள் 1.நீ எனக்காக சிந்திய கண்ணீர் தித்தித்த போதுதான் உணர்ந்தேன் உன் பரம்பரைக்கே சர்க்கரை வியாதியென.! 2.முதன்முதலில் உன்னை பார்க்கும்போது பத்திக்கொண்டது, இப்ப உன்னை பார்த்தாலே எரியுது 3.உன் மெல்லிதழை திறக்கும் வரை எனக்கு தெரியவில்லை , நீ ஜென்மத்திலும் பல் விளக்கியதில்லை என்று 4.உனக்கு ஒரு டாப்ஸ் எடுப்பதற்காக கடைகடையாய் ஏறி இறங்கியதில் என் டங்குவாரு அறுந்துவிட்டது 5.அன்பே, உன்னைப் பார்க்காத இந்த நாளும் எனக்கு இனிய நாள்தான். 6.உருப்படாத கவிதைகளுக்கு நீ என்று பெயர் 7.முத்தம் தந்தா கிரக்கமா இருக்கும்னு பாத்தா மயக்கமா வருது!!! பல்ல வெளக்கித் தொளடி பக்கி 8.என் சுவாசத்தில், உன் வாசம் வீசினாலே போதும்!! சேகர் வில் டெஃபனெட்லி டை 9.உன்ன நினைக்கும் போது எல்லாம் என்ன சுத்தி பட்டாம்பூச்சிக்கு பதிலா கரப்பான்பூச்சி தான் பறக்குது 10.காலையில் எழுந்து அவளை ஏழு மணிக்கு பார்க்க சென்றேன்... ஆனால் வருவது ஏழரை என்று அறியவில்லை! 11.நான் வாயை ஆவென்று திறந்து கொட்டாவி விட்டேன் அந்த சமயத்தில் நீ என் இதயத்திற்குள் புகுந்து கொண்டாய் 12.அவள் என் கண்ணுக்குள் தான் இருக்கிறாள் கனவாக அல்ல கண்ணீராக 13.என் காதலின் அளவை காட்ட கடலை காட்டினேன் அவளோ தன காதலை உணர்த்த தன புருவத்தை உயர்த்தி வானத்தை காட்டினாள் 14.அவள் குளித்து முடித்தப்பின் சோப்பு அழுக்காகிவிட்டது.! 15.நீ குளத்தினுள் கால் வைத்து சென்றாய்... அங்குள்ள மீனெல்லாம் செத்து விட்டது 16.உயிரோடு இருக்கும் போதே பேயாய் அலைகிறாய், நீ பேயாக மாறினால் 17.உன் தலையும் பொடுகும் போல.. எப்போதும் ஒன்றாகவே இருப்போம் நாம்! 18.உன் ஓர பார்வையில் உனக்கு இருப்பது கிட்ட பார்வையா தூர பார்வையா என்பதில் குழம்பி போகிறேன். 19.நீ வீட்டில் இருக்கிறாய் என்பதை குறிப்பால் உணர்த்தியது உன் தெரு. ஒரு பையனை கூட காணோம்..மயான அமைதி மேலிருப்பவை எல்லாம் உன்னிடம் காட்டி இதெல்லாம் உன்னை நினைத்து நான் எழுதிய கவிதைகள் என்றேன் .நீ சிரித்தாய். என் கவிதையை விட பயங்கரமாய் இருந்தது. @களவாணி பய Relaxplzz ![]() குசும்பு... 2 |
Posted: 07 Dec 2014 04:44 AM PST வாழ்க்கைல சந்தோசம் வந்தா சீக்கிரம் அனுபவிச்சிரனும்... கஷ்டம் வந்தா சீக்கிரம் அனுப்பி வச்சிரனும்... ![]() "யதார்த்தங்கள் - தத்துவங்கள்" |
Posted: 07 Dec 2014 04:40 AM PST |
Posted: 07 Dec 2014 04:29 AM PST |
Posted: 07 Dec 2014 04:20 AM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment