Relax Please: FB page daily Posts |
- :) Relaxplzz
- அழகு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க நமது கணிணியில் பல கோப்புகள...
- அதிகம் பகிருங்கள்-கண்ணியமிக்க சகோதரிகளே மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்...! பிரப...
- (y) Relaxplzz
- ஏய்யா மூளை இருக்கான்னு கேட்டாலும் கோபப்படாதவர் யார் தெரியுமா??? . . . . . . . ....
- அதானே கேக்குறாருல்ல சொல்லுங்கப்பா... :P :P
- தமிழர் கலை அருமை... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- எங்கே போய் ஒளிஞ்சுகிட்டாலும் மாா்கழி மாசக் குளிர் விரட்டுதே
- :) Relaxplzz
- ;-) Relaxplzz
- இறைவனுக்கு யாரைப் பிடிக்கும்? ஆலயம் ஒன்றில் இறைவனின் திருவுருவை சிறப்பாய் நிர்ம...
- நண்பர்களே FLIPKART வலைத்தளத்தில் பொருட்கள் வாங்கும்பொழுது மிகவும் கவனத்துடன் இரு...
- ஒரு பெண்ணால் அன்னை தெரசா போல் அன்பும் காட்ட முடியும் ஜான்சி ராணி போல் அநீதியை அழ...
- :) Relaxplzz
- ஹா ஹா... :P :P
- :) Relaxplzz
- கால மாற்றம்
- என்னமா மொக்க போடுறாங்க... :O :O 1. மண்புழுவுக்கு ஏன் கால் இல்லைன்னு தெரியுமா .....
- நேரத்திற்குச் சாப்பிட்டால்தான் அல்சர் வரும்! நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்...
- அனைத்து சமையலறைகளிலும் கிடைக்கக்கூடிய ஒரு வைட்டமின் நிறைந்த உணவுப் பொருள் தான் ப...
- :P :P Relaxplzz
- முதல் முதலில் கடல் நீரைக் கண்ட இ ந்த குட்டி கஜ ராஜனுக்கு என்ன ஒரு குதுகலம் !!!!...
- :) Relaxplzz
- :) Relaxplzz
- ஊரெங்கும் "லட்ச ரூபாய் கார்" நானோ பற்றியே பேச்சு. இதைப் பார்த்த நம்ம ஊர் அரசியல்...
- பிச்சயெடுக்கிறவங்க கூட சாதாரணமா 300லிருந்து 500வரைக்கும் சம்பாதிக்க முடியுது.......
- கடவுளென்பவர் அரியபெரிய வித்தைகளை நிகழ்த்துபவராகத்தானிருக்க- வேண்டுமென்பதில்லை! ,...
- வாவ் அருமையான க்ளிக் :)
- :) Relaxplzz
Posted: 21 Dec 2014 09:30 AM PST |
Posted: 21 Dec 2014 09:20 AM PST |
Posted: 21 Dec 2014 09:10 AM PST FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க நமது கணிணியில் பல கோப்புகளை வைத்திருப்போம் அவற்றில் நமக்கு தேவையான அல்லது முக்கியமான பல கோப்புகள் இருக்கும்.நமக்கே தெரியாமல் சிலர் அழிக்கவோ அல்லது நமக்கு தெரியாமல் காப்பி செய்து கொள்ளவோ முடியும்.இதை தடுக்க Prevent என்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது. இந்த மென்பொருளை நிறுவிய பின் இயக்கினால் கீழ்க்கண்ட image "1" தோன்றும். இதில் Define Hotkey என்பதில் உங்களுக்கு எளிதான அல்லது நினைவு கொள்ளகூடிய வகையில் எதாவது Key தேர்வு செய்து கொள்க. உதாரணமாக Ctrl + B அல்லது Ctrl + C என ஏதாவது தேர்வு செய்து கொள்க. தேர்வு செய்த பின் Activate என்ற பட்டனை அழுத்துக.பின் கீழ்க்கண்ட image 2 தோன்றும். இதில் OK கொடுத்த பின் நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்கவோ முடியாது.மேலும் கோப்பின் மேல் Right Click செய்து பார்த்தாலும் அனைத்து வசதிகளும் முடக்கப்பட்டிருக்கும்.image "3" உள்ள படத்தை பார்க்க. உங்களுக்கு கோப்புகளை அழிக்க வேண்டுமானால் முன்பு தேர்வு செய்த key அழுத்தினால் போதும்.அதாவது முன்னர் Ctrl +B கொடுத்திருந்தால் அதை தற்போது அழுத்தினால் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும். தற்போது நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்க முடியும். இந்த மென்பொருளை தரவிறக்க https://www.dropbox.com/s/8mjxj7pzt2oshzw/Prevent.rar?dl=0 இதை நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள் பயனடைய செய்யுங்கள்... Relaxplzz |
Posted: 21 Dec 2014 09:00 AM PST அதிகம் பகிருங்கள்-கண்ணியமிக்க சகோதரிகளே மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்...! பிரபலமான ஷாப்பிங் சென்டர்களில் உடை மாற்றும் அறைகளில் ஆங்கரில் ரகசிய கேமரா பொருத்தப் பட்டு உடல் அங்கங்களை படம் பிடிக்கிறார்கள். கழிவறைகளிலும் இதே வகையான ஆங்கர் பொருத்தப் பட்டு கயமத்தனமான வேலைகளை செய்து வருகிறார்கள் அயோக்கியர்கள் மிகவும் எச்சரிக்கை கவனமாக இருங்கள் ! நீங்கள் உடை மாற்றும் அறைகளில் ஒரு முறைக்கு இரு முறை நன்கு சோதித்து விட்டு பிறகு உடை மாற்றுங்கள் எவ்வளவு அவசரமாக இருந்தாலும் கழிவறைக்குள் சென்று ரகசிய கேமரா பொருத்தப் பட்டு இருக்கிறதா என்பதை நன்கு ஆராந்துக் கொள்ளுங்கள்! முடிந்தவரை வெளி இடங்களில் கழிப்பறையை பயன்படுத்தாதீர்கள் முற்றிலுமாக தவிற்த்துக் கொள்வதே சிறப்பு ! Relaxplzz ![]() |
Posted: 21 Dec 2014 08:55 AM PST |
Posted: 21 Dec 2014 08:50 AM PST ஏய்யா மூளை இருக்கான்னு கேட்டாலும் கோபப்படாதவர் யார் தெரியுமா??? . . . . . . . . . . வாங்க சொல்றேன் . . . . . . . . . . . . . . . . . . . . கசாப்புகடைக்காரர்தான் :P :P Relaxplzz |
Posted: 21 Dec 2014 08:45 AM PST |
Posted: 21 Dec 2014 08:40 AM PST |
Posted: 21 Dec 2014 08:35 AM PST |
Posted: 21 Dec 2014 08:30 AM PST |
Posted: 21 Dec 2014 08:20 AM PST |
Posted: 21 Dec 2014 08:10 AM PST இறைவனுக்கு யாரைப் பிடிக்கும்? ஆலயம் ஒன்றில் இறைவனின் திருவுருவை சிறப்பாய் நிர்மாணிக்க எண்ணிய குரு ஒருவர் அதற்கு பணம் திரட்ட சீடர்களை ஊருக்குள் அனுப்பிவந்தார். அவர்கள் ஒரு சீமாட்டி வீட்டிற்குச் சென்று விவரம் கூற நிறைய தங்க நாணயங்களை அவள் நன்கொடை தந்தாள். அதைக் கண்ட வேலைக்காரச் சிறுமி தானும் ஏதாவது கொடுக்க வேண்டும் என எண்ணி பல நாட்களாக தான் வைத்திருந்த செல்லாத செம்பு நாணயம் ஒன்றை சீடர்களிடம் தந்தாள். செல்லாக் காசை கண்ட தலைமைச்சீடன் "இந்தக் காசு எதற்குமே பயன்படாது நீயே வைத்துக்கொள்" என திருப்பித்தர துயரத்துடன் வாங்கிக் கொண்டாள் சிறுமி. சில நாட்களுக்குப் பின் இறைவன் திருவுருவை உருவாக்கம் செய்தபோது சிலையில் ஒரு விரிசல் எவ்வளவு சரி செய்தும் உருவாகிக்கொண்டே இருந்தது. குரு " இன்னொரு சிலையை உருவாக்குங்கள் " எனக் கூறி தானே நேரில் பார்வையிட்டும் சிலையில் விரிசல் விழுந்தது. திகைத்துப்போன குரு சீடர்களிடம் விசாரிக்க சிறுமியின் செல்லாக்காசு விவரம் அறிந்தார். உடனே சென்று அந்த சிறுமியிடமிருந்து செல்லாக்காசை வாங்கிக்கொண்டு வாருங்கள் எனக் கட்டளையிட தலைமைச் சீடன் அவ்வாறே வாங்கி வந்தான். பிறகு அதையும் சேர்த்து உருக்கி அச்சில் ஊற்றச் சொன்னார் குரு. அதன்பின் குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் அச்சை நீக்கிப் பார்த்த அனைவருக்கும் வியப்பு. எவ்வித விரிசலும் இன்றி இறைவனின் திருவுருவச்சிலை பொன் எழில் பூத்தது. அத்துடன் இறைவனின் இதயப்பகுதியில் ஏதோ பதிந்திருப்பது போல் தெரிய எல்லோரும் உற்றுப்பார்த்தார்கள். அது அச்சிறுமி மனதார இறைவன் திருப்பணிக்கு அளித்த செல்லாக் காசு. குரு அர்த்தபுஷ்டியுடன் தலைமைச் சீடனைப் பார்க்க தலை கவிழ்ந்தான் அவன். Relaxplzz |
Posted: 21 Dec 2014 08:00 AM PST நண்பர்களே FLIPKART வலைத்தளத்தில் பொருட்கள் வாங்கும்பொழுது மிகவும் கவனத்துடன் இருங்கள்...!! எனது சொந்த அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொள்ள கடமைப்பட்டுளேன்..!! கடந்த 6ஆம் தேதி ஃப்லிப்கார்ட் வலைத்தளத்தில் சாம்சங் சார்ஜர் ஒன்று ஆர்டர் செய்திிருந்தேன். நான்கு நாட்கள் கழித்து கிடைத்தது. மிகவும் ஆவலுடன் திறந்து பார்க்கும் பொழுது போலி சார்ஜர் அதில் இருந்தது சாம்சங் என்று பொலியாக அச்சிடப்பட்டு, மிகவும் அதிர்ச்சியுடன் ஃப்லிப்கார்ட் ஆ இப்படி என்று நினைத்து வாடிக்கையாளர் சேவைமைய அதிகாரியிடம் இந்த போலியான பொருளை திரும்ப பெற்றுக்கொண்டு எனது பணத்தை திரும்ப தருமாறு கேட்டுக்கொண்டேன் ஆனால் சேவைமைய அதிகாரியோ பணத்தை திரும்பி தர முடியாது வேறு பொருளை தருகிறோம் அது உண்மையான சாம்சங் நிறுவனத்தின் பொருளாக இருக்கும் என்று உறுதி. அளித்தார். அதை நம்பி நானும் ஒரு வார காலம் காத்து இருந்தேன். 19ஆம் தேதி வந்த பொருலும் போலியாணாதே. மறுபடியும் 19ஆம் தேதி வாடிக்கையாளர் சேவைமைய அதிகாரியை தொடர்பு கொண்டு புகார் அளித்தேன் இது தொடர்பாக. ஏன் போலியான விற்பணையாளர்களை உங்கள் வலைத்தளத்தில் அனுமதித்தீர்கள் என்று கேட்டதற்கு எந்த பதிலும் இல்லை, வேறு பொருள் மாற்றி தருகிறோம் என்று கூறினார் அமைதியாக(இதை தானே போன முறையும் சேய்தனர்).. தேவை இல்லை இனி உங்கள் வலைத்தளத்தில் பொருள் வாங்க எனக்கு பொறுமை இல்லை என்று கூறியதும், பணத்தை திரும்பி தர சம்மதித்தனர்.. ஃப்லிப்கார்ட் நிறுவனம் மக்களை முட்டாள்கள் என நினைத்து போலி பொருட்களை விற்பனை செய்கிறது... 50 ரூபாய்க்கு கூட போகாத பொருளை 300, 400 என்று விற்பனை செய்கிறார்கள். குறைந்த விலை கொடுத்து வாங்கிய இந்த பொருளே போலி என்றாள் 1000 கணக்கில் பணம் செலுத்தி வாங்கிய பலரது பொருட்களில் எத்தனை பொலீகள் உள்ளதோ????????? நான் முன்பு இதே சார்ஜர் பயன்படுத்தி இருந்ததால் இது போலி என்று கண்டறிய நேர்ந்தது, முன்பு பயன்படுத்தாத பலர் இதே பொருளை வாங்கி இருக்க கூடும்.. சார்ஜர் சரி இல்லை என்றால் சாம்சங் நிறுவனத்தின் மீது குறை கூறிக்கொண்டு இருப்பார்கள். நண்பர்களே மிகவும் கவனமாக இருங்கள்.. இனி எந்த பொருள் வளைத்தலங்களில் கொள்முதல் செய்தாலும் அதன் நம்பகத்தன்மையை குறிப்பிட்ட நிறுவனத்தின் கிளைகளில் உறுதி செய்த பிறகு பயன்படுத்தவும். போலி என்று அறிந்தால் உடனே சம்பந்தப்பட்ட வளைத்தளத்தில் புகார் அளித்து திருப்பி அனுப்பி விடவும். இத்துடன் ஃப்லிப்கார்ட் வலைத்தளத்தில் வாங்கிய சார்ஜர் & சாம்சங் நிறுவனத்தின் கிளையில் வாங்கிய சார்ஜர் இணைத்துள்ளேன். Relaxplzz ![]() |
Posted: 21 Dec 2014 07:50 AM PST |
Posted: 21 Dec 2014 07:45 AM PST |
ஹா ஹா... :P :P Posted: 21 Dec 2014 07:40 AM PST |
Posted: 21 Dec 2014 07:30 AM PST |
கால மாற்றம் Posted: 21 Dec 2014 07:20 AM PST |
Posted: 21 Dec 2014 07:10 AM PST என்னமா மொக்க போடுறாங்க... :O :O 1. மண்புழுவுக்கு ஏன் கால் இல்லைன்னு தெரியுமா ..? அதுக்கு கால் போட்டா மாண்புழு ஆகிடும்ல, அதனால போடுறதில்லை...! 2. ஒரு பெரிய 'ஈ'க்கு எத்தனை இறக்கை இருக்கு ..? அது சின்ன 'ஈ' யா இருந்த போது எத்தன இறக்கை இருந்துச்சோ, அத்தனை இறக்கைதான் இருக்கும்.! 3. அரிசிய அரைச்சா அரிசி மாவு வரும், கோதுமைய அரைச்சா கோதுமை மாவு வரும், அப்படின்னா கோலத்த அரைச்சாதான் கோல மாவு வருமா ..? 4. எறும்பு ஏன் பல்லு விளக்குறது இல்லைன்னு தெரியுமா ..? ஏன்னா அதோட வாய் சைசுக்கு இன்னும் டூத்ப்ரஷ் கண்டுபிடிக்கலை..இந்த விதி யானைக்கும் பொருந்தும்.! 5. வடச் சட்டில வடை சுடுறாங்க , இட்லிச் சட்டில இட்லி சுடுறாங்க, அப்படின்னா ஓட்ட வடை எதுல சுடுறாங்க , ஓட்ட சட்டியிலையா ..? 6. மாட்ட, ஆடா மாத்த முடியுமா .? முடியும் . ஒரு பேப்பர் எடுத்து MAADU அப்படின்னு எழுதிட்டு முதல்ல இருக்குற M அடிச்சு விட்டுட்டா... AADU அப்படின்னு மாறிடும்.! 7. Dog திருப்பிப் போட்டா God வரும்னு சொன்னாங்க , நான் எங்க வீட்டுல இருக்குற Dog திருப்பிப்போட்டேன் , அது கடிக்க வருது .. அப்படின்னா ஏன் God வரல No Violence Please ;) ;-) Relaxplzz |
Posted: 21 Dec 2014 07:00 AM PST நேரத்திற்குச் சாப்பிட்டால்தான் அல்சர் வரும்! நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் என்று உங்களுக்கு இத்தனை நாளும் போதிக்கப்பட்டுள்ளது. அல்சர் பெரும்பாலும் நேரா நேரத்திற்குக் கடிகாரத்தைப் பார்த்துச் சாப்பிடுபவர்களுக்கே வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் தயிர் சாதமோ அல்லது சாம்பார் சாதமோ எடுத்து வைத்து ஒரு பத்து பதினைந்து நாட்கள் கழித்துப் பாருங்கள். இப்போது அந்தச் சாதம் கெட்டுப்போய் நாற்றம் எடுக்கும். சில சமயம் புழுக்கள்கூட வந்திருக்கலாம். மீண்டும் அந்தப் பாத்திரதை மூடி அப்படியே வைத்து விடுங்கள். மறுபடியும் ஒரு பத்து பதினைந்து நாட்கள் கழித்துப் பாருங்கள். அந்தக் கெட்டுப்போன சாதம் விஷமாக மாறி, அந்தப் பாத்திரத்தைப் பாதித்து ஓட்டை போட்டிருப்பதைப் பார்த்திருக்கலாம் (இதை வீட்டிலேயே சோதித்துப் பாருங்கள்). இப்போது அல்சர் எப்படி வந்தது என்று உங்களால் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் நினைப்பது போல் நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் என்பதெல்லாம் பொய். பசிக்காமல் நேரத்திற்குச் சாப்பிடும்போதுதான் அல்சரே வருகிறது. பசித்துச் சாப்பிடும் போதுதான் வயிற்றில் ஜீரண நீர்கள் சுரக்கின்றன. வயிற்றில் நேரத்திற்கு அலாரம் வைத்துக்கொண்டு ஜீரண நீர்கள் சுரப்பதில்லை. அந்தந்த ரேத்திற்கு வருவதற்கு இது ஒன்றும் பேருந்தோ, ரயிலோ அல்ல. என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா, நேரா நேரத்திற்குச் சுரப்பதற்கு அங்கு எந்த விதமான ஏற்பாடும் கிடையாது. மனித உடலானது முற்றிலும் உணர்வுகளால் ஆனது. உணர்வுகளே மனித உடலை வேலை செய்யத் தூண்டுகின்றன, வேலையை முடிக்கவும் தூண்டுகின்றன. செயல்படுத்தவும் வைக்கின்றன. நேரத்திற்கு ஜீரண நீர் சுரந்து விடும். அப்போது வயிற்றில் சாப்பாடு இல்லையென்னறால் அல்சர் புண் வந்துவிடும் என்பது போன்ற காமெடி வேறு எதுவும் இல்லை. நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வருகிறதென்றால், இந்தியாவில் பெரும்பாலான ஏழை மக்களுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் அல்சர் வந்திருக்க வேண்டுமே! பெரும்பாலும் அல்சர் வருவது மூன்று வேளையும் நன்கு சாப்பிடுபவர்களுக்கே என்பதைக் கவனியுங்கள். நீங்கள் பசிக்காமல் மூன்று வேலையும் சாப்பிடும் போது, ஜீரண நீர்கள் சுரக்காத நிலையில் வயிற்றில் இருக்கும் உணவு அங்கேயே தங்கி, புளித்து, கெட்டு, கெட்ட வாயுக்கள் உருவாகத் துணை புரிகிறது. தினம்தோறும் இதுபோன்ற செயல் தொடர்ந்து நடைபெறும்போது, கெட்டுப் போன உணவு விஷமாக மாறுகிறது. பாத்திரத்தில் வைத்த உணவு எப்படி விஷமாக மாறுகிறதோ.... அப்படி விஷமாக மாறிய உணவு, உங்கள் வயிற்றில் அல்சரை (புண்களை) உருவாக்குகிறது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். ஜீரணம் கெட்டால்தான் அல்சர் வருமே ஒழிய, ஜீரணிப்பதற்கு அங்கு ஒன்றுமே இல்லாத போது அல்சர் வராது. சாப்பிடாமல் இருந்தால் உடல் சோர்வடைந்து, சத்துக் குறைபாடு ஏற்பட்டு, அது சம்பந்தமாக நோய்கள் வேண்டுமானால் வரலாம். அல்சர் வயிற்றில் மட்டுமல்லாமல், உடலின் எந்தப் பாகத்தில் வேண்டுமானாலும் தோன்றலாம். நாட்பட்டு வெளியேற முடியாமல் தேங்கும் கழிவுகள் அந்த இடத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பாதிக்கப்பட்ட அந்த இடத்தில் புண்கள் உருவாகின்றன. அதையே அல்சர் என்கிறோம். அல்சர் என்ற புண்கள் குணமாக வேண்டுமானால், தேங்கியுள்ள் கழிவுகளை முதலில் வெளியேற்ற வேண்டும். கழிவுகள் வெளியேறாவிட்டால் மீண்டும் மீண்டும் அல்சர் வந்துகொண்டே தான் இருக்கும். அல்சர் வந்துவிட்டால் உங்கள் உடலில் கழிவுகளின் தேக்கம் நிறைய உள்ளது என்பதை அறிந்துகொள்ளுங்கள். Relaxplzz ![]() |
Posted: 21 Dec 2014 06:50 AM PST |
Posted: 21 Dec 2014 06:44 AM PST |
Posted: 21 Dec 2014 06:40 AM PST |
Posted: 21 Dec 2014 06:30 AM PST |
Posted: 21 Dec 2014 06:20 AM PST |
Posted: 21 Dec 2014 06:11 AM PST ஊரெங்கும் "லட்ச ரூபாய் கார்" நானோ பற்றியே பேச்சு. இதைப் பார்த்த நம்ம ஊர் அரசியல் கட்சித்தலைவருக்கு திடீரென ஐடியா. தனது பி.ஏ.விடம் சொல்ல, அவர் உடனே "ரத்தன் டாடா'வை செல்ஃபோனில் பிடிக்கிறார். "" ஹலோ "டாடாஜி' நமஸ்தே. நான்....'' "" தமிழ்நாட்டுல இருந்து பேசறீங்களா ? '' "" ஆமா'' "" ஒரு கட்சித்தலைவரோட பி.ஏ தானே ?'' "" கரெக்ட் ! '' "" அடுத்த எலக்ஷ்ன்ல இலவசமா வீட்டுக்கு ஒரு கார் கொடுக்கற ஐடியாவுல இருக்கீங்களா ?'' "" அட'' "" அதுக்காக என்னோட லட்ச ரூபாய் காருக்கு அக்ரிமெண்ட் போட நினைக்கிறீங்க ? '' "" ஐயோ ! எப்படி "ஜீ' இப்படி புட்டு புட்டு வைக்கிறீங்க ?'' "" புட்டும் வைக்கலை. பணியாரமும் வைக்கலை. நீங்க ரொம்ப லேட். ஏற்கனவே உங்க ஊர்ல இருந்து நாலு கட்சிக்காரங்க ஃபோன் பண்ணிப் பேசிட்டாங்க. '' "" அடடா ! எப்போ ? '' "" காரை அறிமுகம் செய்தேனே .... அன்னிக்கு நைட்டே.'' "" அடச்சே !'' "" இன்னும் கேளுங்க. இந்தக் காரை தயாரிக்கணும்னு எனக்கு எப்போ தோணுச்சு தெரியுமா ?'' "" பேட்டியில படிச்சேன். நாலு வருஷத்துக்கு முன்னாடி மழை ரோட்டுல நீங்க கார்ல போய்ட்டிருந்தீங்க. அப்போ டூ வீலர்ல ஒரு ஃபேமிலி போறதைப் பார்த்தீங்க. தவறி விழுந்தா என்ன ஆகறதுன்னு வருத்தப்பட்டீங்க. அப்போ ஏழை மக்களுக்கு கார் தயாரிக்கிற எண்ணம் வந்தது.'' "" கரெக்ட். அப்படி நான் நினைச்சு முடிச்ச மூணாவது நிமிஷம் ஒரு ஃபோன். உங்க ஊர் தலைவர் பேசினார். அடுத்த எலக்ஷன்ல அந்தக் காரை இலவசமா கொடுக்கறதா சொன்னார்.'' "" ஆ ! அப்போ அக்ரிமெண்ட் முடிஞ்சு போச்சா ? '' "" கவலைப்படாதீங்க. அதைவிட குறைஞ்ச விலையில ஹெலிகாப்டர் செய்து தரேன். நீங்க அதை இலவசமா கொடுங்க. காலை நீட்டிப் படுக்கக் கூட இடம் இல்லாத ஜனங்க, காரைக் கொடுத்தா எங்கே பார்க் பண்ணுவாங்க ?'' "" ஹலிகாப்டரை பார்க் பண்றதுக்கு மட்டும் இடம் வேண்டாமா ? '' "" அதுக்கு வேற ஐடியா இருக்கு. ஒரு பட்டனைத் தட்டினா இருபதடி உயரத்துல ஹெலிகாப்டர் அந்தரத்துல லேண்ட் ஆகற மாதிரி தயாரிக்கப்போறேன். ஓ.கே.வா ?'' "" தலைவர்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டேச் சொல்றேன் '' "" சீக்கிரம் சொல்லுங்க. என்னோட இன்னொரு செல்ஃபோன் ரொம்ப நேரமா அடிக்குது. நம்பரைப் பார்த்தா உங்க ஊருதான்னு தெரியுது. அப்புறம் அவங்களுக்கு ஹெலிகாப்டரைக் கொடுத்துடுவேன்.'' "" அவசரப்படாதீங்க. லைன்லயே இருங்க. தலைவர்கிட்டே பேசிட்டு உடனே சொல்றேன்.'' "" சீக்கிரம் ! சீக்கிரம் ! '' "" ஜீ, தலைவர் ஓ.கே. சொல்லிட்டார். அந்த ஹெலிகாப்டர் எவ்வளவு ஆகும் ? '' "" எழுபதாயிரத்துக்குத் தர்றேன் ''. "" ஜீ ! இப்ப உங்களுக்குப் பக்கத்துல யாருமில்லைதானே ?'' "" இல்லை. ஏன் ? '' "" எழுபதாயிரம்னு அக்ரிமெண்ட் போட்டுக்குவோம். ஆனா ஐம்பதாயிரத்துல தயாரிக்கறாங்க. மிச்சம் இருபதுல பத்து உங்களுக்கு, பத்து எங்களுக்குன்னு பிரிச்சுப்போம்.'' " ஐம்பதாயிரத்துல எப்படி ஜீ தயாரிக்கறது ? " ஒரு சக்கரத்தைக் குறைச்சுடுங்க. மேலே வேஸ்டா சுத்தற ஃபேனை சின்ன சைஸ்ல பண்ணிடுங்க. சீட்டுங்க உள்ளே பஞ்சுக்குப் பதிலா பழைய துணிகளை வெச்சுத் தச்சுடலாம்.பட்டன்கள் சைஸையும் சின்னதாக்கிடலாம்.எப்படி ஐடியா ? '' "" அடேங்கப்பா ! எல்லாரும் லட்ச ரூபாய் காரைத் தயாரிச்சுட்டேன்னு என்னைப் பாராட்டினப்ப கொஞ்சம் கர்வப்பட்டுட்டேன். ஆனா, உங்க ஊர் அரசியல்வாதிங்ககிட்டே பேசினதும் கர்வம் தூள் தூளாயிடுச்சு. நீங்க நினைச்சா ஆயிரம் ரூபாய்ல ஏரோப்ளேனே செய்வீங்க. உங்களை ஜெயிக்க என்னால முடியாது. ஆளை விடுங்க சாமி.'' - நன்றி கல்கி. Relaxplzz |
Posted: 21 Dec 2014 06:03 AM PST பிச்சயெடுக்கிறவங்க கூட சாதாரணமா 300லிருந்து 500வரைக்கும் சம்பாதிக்க முடியுது.... ஆனா இவங்கள கவனிச்சிருக்கலாம். பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், கடைவீதி இது மாதிரி இடத்துங்கள வாங்குவார் யாருமில்லாம பசிச்ச வயிறோடு கைக்குட்டை, ஊதுபத்தி, ஸ்டிக்கர் வித்திட்டு இருப்பாங்க. நேத்து மார்க்கெட் விட்டு வெளியே வரும்போது ஒரு பெரியவர், கம்ப்யூட்டர் சாம்பிராணி வித்துட்டு இருந்தார். வாங்க சொல்லி இரண்டு மூணு தடவை சொல்லி கேட்டார். ஊதுபத்தி, சாம்பிராணி கொளுத்தும் பழக்கம் இல்லாததால வேண்டாம்ன்னு சொல்லிட்டேன். அவர் கடைசியா , ' காலையிலருந்து ஒண்ணும் சாப்பிடல.பசிக்குது. ஒரு பாக்கெட்டாவது வாங்கிக்கோங்க சார்.' சொல்லிட்டு இருக்கும்போதே அவரறியமா கண் கலங்கிட்டார். 20 ரூபாய் கொடுத்து ஏதாச்சும் சாப்பிட சொன்னதுக்கு, காசு வாங்க மறுத்திட்டார்.... # கெட்டாலும் மேன்மக்கள்.... :( - சுகன் என்கிற சுகுணசீலன் Relaxplzz ![]() "நெகிழ வைத்த நிஜங்கள்" |
Posted: 21 Dec 2014 05:50 AM PST கடவுளென்பவர் அரியபெரிய வித்தைகளை நிகழ்த்துபவராகத்தானிருக்க- வேண்டுமென்பதில்லை! , , , , , , , , குழந்தையுடன் பைக்கில்போகும்போது "சைட்ஸ்டேண்ட் எடுக்காமப்போறீங்க பாருங்க" என்று எச்சரிப்பவராகவுமிருக்கலாம்! - ஃபீனிக்ஸ் பாலா ![]() "மனம் தொட்ட வரிகள்" - 1 |
Posted: 21 Dec 2014 05:40 AM PST |
Posted: 21 Dec 2014 05:30 AM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment