Friday, 12 December 2014

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


இன்று பிறந்த நாள் விழாக் காணும் உயர்திரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு...

Posted: 12 Dec 2014 09:09 AM PST

இன்று பிறந்த நாள் விழாக் காணும் உயர்திரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..!

அவரைப்பற்றி சில ...!

1)'ஏன் இவ்வளவு சிம்பிளாக இருக்கிறீர்கள்?' என்று மகள்கள் கேட்டால், 'கண்ணா... உங்க அப்பா சூப்பர் ஸ்டார். நீங்க எப்படி வேணும்னாலும் இருக்கலாம். எங்க அப்பா சாதாரண போலீஸ்காரர். நான் இப்படித்தான் இருப்பேன்' என்பார்!

2)ரஜினி இதுவரை நடித்ததிலேயே அவருக்கு மிகவும் பிடித்த படம் 'முள்ளும் மலரும்'!

3)ஃபைன், குட்' இவைதான் ரஜினியின் உதடுகள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தைகள்!

4)யாரிடம் பேசினாலும் யாரையும் குறை சொல்லிப் பேசவே மாட்டார். சமீப காலங்களில் இதை மேலும் தீவிரமாகக் கடைப்பிடிக்கிறார்!

5)பெங்களூர் ஃப்ளாட்டில் ரஜினி தனியாகவே இருப்பார். புத்தகங்கள், டி.வி.டி-க்கள் என ரஜினியின் தனிமை தவம் பெரும்பாலும் இங்கேதான்!

6)பாலசந்தர் மீது ரஜினி வைத்திருக்கும் மரியாதை அளவிட முடியாதது. பாலசந்தர் போன் பண்ணினால்கூட எழுந்து நின்றுதான் பேசுவார் ரஜினி!

7)எந்தக் காரணத்தைக் கொண்டும் கேரவனில் ஓய்வெடுக்க மாட்டார். காலையில் வந்தவர், மாலை சூட்டிங் முடியும் வரைக்கும் செட்டுக்கு உள்ளேதான் இருப்பார். மதிய இடைவேளையில் அங்கேயே துண்டை விரித்துப்போட்டு சற்றுக் கண்ணயர்வார்!

8)ராகவேந்திரா மண்டபத்தில் வெயில் காலத்தில் மக்களுக்கு இலவசமாக மோரும், ஐஸ் வாட்டரும் வழங்குவார்கள். இதைத் தன் அறையில் அமர்ந்து பார்த்துக்கொண்டு இருப்பார் ரஜினி!

9)அடிக்கடி நண்பர்களின் வீடுகளுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடிப்பது ரஜினியின் பழக்கம். வாசலில் தலையில் மப்ளர் கட்டிக்கொண்டு நின்றபடி மலர்ந்து சிரிப்பார்!

10)தன்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ள வருபவர்களுடன் குழந்தைகள் இருந்தால், குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டு போஸ் கொடுப்பதுதான் ரஜினியின் பழக்கம்!

11)யார் தன்னைப் பார்க்க வந்தாலும், வயது குறைந்தவர்களாக இருந்தால்கூட எழுந்து நின்று வரவேற்பது ரஜினியின் வழக்கம். வந்தவர் அமர்ந்த பின்புதான் இவர் அமர்வார்!

12)ரஜினி ஒரு பாத்ரூம் பாடகர். குஷி மூடில் இருந்தால் அப்போதைய ஹிட் பாடல்களை முணுமுணுக்க ஆரம்பித்துவிடுவார். அப்படி ஒரு பாடல் மனதுக்குப் பிடித்துவிட்டால், சம்பந்தப்பட்ட இசை அமைப்பாளர், பாடகருக்கு சர்ப்ரைஸாகப் போன் போட்டுப் பாராட்டுவது ரஜினி ஸ்டைல்!

13)இமயமலை மட்டும் இல்லாமல், எந்த ஆன்மிக ஸ்பாட்டுக்குச் சென்றாலும் அங்கிருந்து ருத்ராட்சம் வாங்கி வந்து சேர்த்துவைப்பது ரஜினியின் பழக்கம். இப்படிச் சேர்த்த ருத்ராட்சங்கள் வீட்டில் எக்கச்சக்கமாகக் குவிந்துகிடக்கின்றன!

14)ரஜினி வீட்டில் இருக்கும் நேரங்களில் அவரது அறையில் 'ஓம்' என்னும் பிரணவ மந்திரம் ஒலித்துக்கொண்டே இருக்கும்!

15)ராகவேந்திரா கல்யாண மண்டபத்தின் தொலைபேசிக்கு இன்னொரு இணைப்பு உண்டு. ரஜினி மண்டபத்தில் இருக்கும்போது ரசிகர்கள் யாராவது போன் பண்ணினால், அந்த இன்னொரு இணைப்பு வழியாக எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டு இருப்பார். அந்த ரசிகருடன் பேச வேண்டும் என்று விரும்பினால் அவரே லைனில் வருவார்!

16)ரஜினிக்குப் பழக்கமான வாடகை கார் டிரைவர் இருக்கிறார். இரவு நேரங்களில் திடீரென அவருக்கு போன் செய்து வரச் சொல்லி, எங்காவது கையேந்தி பவனில் சாப்பாடு வாங்கி காருக்குள்ளேயே உட்கார்ந்து சாப்பிடுவார்!

17)ஒரு படத்தின் சூட்டிங் முடியும்போது அந்தப் படத்தில் பணிபுரிந்த உதவி இயக்குநர்களுக்கு ஒரு தொகையைப் பரிசாகத் தருவது ரஜினியின் பழக்கம். குறைந்தது 50 ஆயிரம் ரூபாய்

18)பைரவி' படத்தின்போது ரஜினிக்கு முதன்முதலில் 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தைக் கொடுத்து விளம்பரப்படுத்தியவர் கலைப்புலி தாணு!

19)ரஜினி நடித்த ஒரே ஆங்கிலப் படமான Blood stone-ல் ரஜினி பேசும் முதல் டயலாக், 'Your Problem is bloodstone whereas my problem is stomach'

20)ரஜினியின் ஆன்மிகம் பற்றிய விமர்சனங்கள் வந்தபோது அவர் சொன்னது, 'நான் ஆன்மிகவாதிதான். ஆனால், ஒரு கன்னத்தில் அறைந்தால், இன்னொரு கன்னத்தைக் காட்டும் அளவுக்கு ஆன்மிகத்தில் இன்னும் உயரவில்லை. அந்த மாதிரியான ஆன்மிகவாதியாக ஆவதற்கு எனக்கு விருப்பமும் இல்லை!'

21)எந்திரன்' படத்தில் ஒரே பாடலில் 100 விதமான ஸ்டைல்களில் தோன்றுகிறார் ரஜினி. ஒவ்வொரு தோற்றத்துக்கும் ஒவ்வொரு உடை என இந்த ஒரு பாடலில் மட்டும் மொத்தம் 100 விதமான உடைகளில் வருகிறார். ரஜினியின் விருப்பத்தின் பேரில் இந்த ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் அமைத்து இருப்பவர் பிரபுதேவா!

22)மத்திய அரசு இந்திய சினிமாவைப் பற்றி ஓர் ஆவணப் படம் தயாரிக்கிறது. தமிழில் ரஜினி, கமல் இருவரையும் தேர்ந்தெடுத்து அவரவர் பற்றிக் கருத்துக் கேட்டது. கமல் சொல்லிவிட்டார். ரஜினி மறுத்துவிட்டார். 'என்னைப்பற்றி நான் சொல்ல முடியாது. என் ரசிகர்களிடம்தான் கேட்க வேண்டும்' என்று சொன்னதால், ரஜினி ரசிகர்கள் சிலர் அந்த ஆவணப் படத்தில் பேசியிருக்கிறார்கள்!

23)ரஜினி ஃப்ரீயாக இருந்தால், அடையாளத்தை மறைக்கும் அளவுக்குச் சின்னதாக கெட்டப் சேஞ்சுடன் வெளியே கிளம்பிவிடுவார். சமீபத்தில் அப்படிப் போய் வந்த இடம்... திருப்பதி!
and last but not the least

24)இப்போதும் பேருந்தில் ஏற நேர்ந்தால், நின்றுகொண்டே போவதுதான் ரஜினியின் வழக்கம். அதுவும் கம்பியைப் பிடிக்காமல்தான் நிற்பார். கேட்டால், 'கண்டக்டர் காலப் பழக்கம்' என்பது பதிலாக வரும்

25)சினிமா நகைச்சுவையில் ரஜினிக்கு இஷ்டமானவர் வடிவேலு. அவ்வப்போது அவருடன் பேசிச் சிரிப்பார். 'உங்ககிட்ட பேசினா, எனக்குப் புதுசா ரீ-சார்ஜ் பண்ணின மாதிரி இருக்கு வேலு' என்பார்!


Posted: 12 Dec 2014 07:20 AM PST


kakki sattai download link kudunga pls !!!

Posted: 12 Dec 2014 07:11 AM PST

kakki sattai download link kudunga pls !!!

Posted: 12 Dec 2014 05:20 AM PST


Posted: 12 Dec 2014 02:20 AM PST


Posted: 11 Dec 2014 11:20 PM PST


மேனஜரிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்…??? 1. ராத்திரி 10 மணிக்கு கூட எங்கள...

Posted: 11 Dec 2014 10:07 PM PST

மேனஜரிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்…???

1. ராத்திரி 10 மணிக்கு கூட எங்களுக்கு பர்சனல் ஒர்க் வரக்கூடாதுனு எதிர்பார்க்கறீங்க ஆனா சாயந்திரம் 5 மணி ஆனவுடனே உங்களுக்கு மட்டும் எப்படி பர்சனல் ஒர்க் வந்துடுது?

2. அது எப்படி நாங்க சொல்லி உங்களுக்கு ஏதாவது புரியலைனா Dont make it too complicatedனு சொல்றீங்க. ஆனா நீங்க சொல்லி எங்களுக்கு புரியலைனா He is Dumbனு சொல்றீங்க?

3. அது எப்படி Week end எங்களுக்கு வேலை கொடுத்துட்டு வெள்ளிக்கிழமை நீங்க வீட்டுக்கு கிளம்பும் போது Happy Weekend னு கூச்சபடாம சொல்லிட்டு போக முடியுது?

4. அது எப்படி உங்களுக்கு ஒரு அப்ளிகஷேன் சரியா வேலை செய்யலைனா, அப்ளிகேஷன்ல பிரச்சனைனு சொல்றீங்க. அதே எங்களுக்கு வேலை செய்யலைனா, உனக்கு அப்ளிகேஷன் தெரியலைனு சொல்றீங்க?

5. ஏதாவது நல்ல நாள் வந்தா ஏதோ உங்க வீட்ல மட்டும் விசேஷம் மாதிரி எல்லா வேலையையும் எங்க தலைல கட்றீங்களே. ஏன் எங்க வீட்லயும் விசேஷம் இருக்கும்னு உங்களுக்கு தெரிய மாட்டீங்குது?

6. உங்களுக்கு ஊதிய உயர்வு வரலைனா மட்டும் கம்பெனி ரொம்ப மோசமாகுதுனு சொல்ற நீங்க, எங்களுக்காக மட்டும் பேச மாட்றீங்க?

7. ஏதாவது ஒரு முக்கியமான மெயில் அனுப்ப நீங்க மறந்தா மட்டும், I was very busy in some other issueனு சொல்றீங்க. அதே நாங்க மறந்தா, you should concentrate on workனு சொல்றீங்க?

8. ஆபிஸ் நேரத்துல நீங்க ஃபோன் பேசிட்டு இருந்தா மட்டும், அது ஏதோ தலை போற விஷயம் மாதிரி எடுத்துக்கறீங்க, அதே நாங்க பண்ணா வேலையை சரியா செய்ய மாட்றானு சொல்றீங்க?

9. சாயந்திரம் 5 மணிக்கு நீங்க வீட்டுக்கு போறது தப்பில்லை, ஆனா அப்ப நாங்க ஒரு டீ குடிச்சிட்டு வர போனா மட்டும் ஏதோ கொலை குத்தம் செய்யற மாதிரி பாக்கறீங்க?

10. காலைல வந்ததுல இருந்து ICICI Direct, Geogit, Sharekhanனு செக் பண்ணிட்டு இருக்கீங்க. அதே நாங்க மதியம் சாப்பிட்டு வந்து மெயில் செக் பண்ணா மட்டும் Don't use company resources for your personal workனு சொல்றீங்க?

- யாரோ

உங்க அனுபவங்கள் எப்படி.???

Posted: 11 Dec 2014 09:08 PM PST


ஒருவன் என்னதான் பெரிய படிப்பு படித்திருந்தாலும் எதிரில் இருப்பவனுக்கு புரியும்பட...

Posted: 11 Dec 2014 08:07 PM PST

ஒருவன் என்னதான் பெரிய படிப்பு படித்திருந்தாலும் எதிரில் இருப்பவனுக்கு புரியும்படி பேசவில்லையெனில் அவனும் பாமரனே...

Happy birthday to Superstar of Indian cinema and Superstar of Indian Cricket ...

Posted: 11 Dec 2014 06:56 PM PST

Happy birthday to Superstar of Indian cinema and Superstar of Indian Cricket ...


கோயிலில் பொங்கல் வாங்க வரிசையில் நிக்கும் போது நமக்கு முன்னாடி 3 பேரும் பின்னாடி...

Posted: 11 Dec 2014 06:51 PM PST

கோயிலில் பொங்கல் வாங்க
வரிசையில் நிக்கும் போது
நமக்கு முன்னாடி 3 பேரும்
பின்னாடி 30 பேரும் நிக்கும்
போது
நமக்குள் "நம்பிக்கை" தானாக
வரும்!!!

கொஞ்சம் அவசரப்பட்டுதான் சுதந்திரம் வாங்கிவிட்டோம்!! இன்னுமொரு 50 வருடங்கள் கழித...

Posted: 11 Dec 2014 09:11 AM PST

கொஞ்சம் அவசரப்பட்டுதான் சுதந்திரம் வாங்கிவிட்டோம்!!

இன்னுமொரு 50 வருடங்கள்
கழித்து வாங்கியிருக்கலாம்...

🔭அதற்குள் நாடுமுழுவதும் உள்ள
அத்தனை நதிகளையும்
இணைத்துவிட்டிருப்பான்
அந்த வெள்ளைக்காரன்,
நாம்தான் கூவத்தை கூட தூர்வாறாத கூமுட்டைகளாயிற்றே!

நாடு முழுவதும் எப்போதோ
bullet rail வந்திருக்கும்,
நாம் இப்போது தான் மீட்டர்
கேஜ்களை broad gauge களாக மாற்ற போராடிக்கொண்டு இருக்கிறோம்!

𾟠ஊட்டி ரயில்பாதையை எப்போதோ இருவழிபாதையாக மாற்றியிருப்பான் அந்த
வெள்ளைக்காரன்,
நாம் இன்னும் தண்டவாளத்தில் சரிந்த மண்ணை வாறுவதற்கு டென்டர் விட்டுக் கொண்டிருக்கிறோம்!

🏤நாடு முழுவதும் வெள்ளைக்காரனால்
கட்டப்பட்ட ஆயிரக்கணக்
கட்டிடங்களும் பாலங்களும்
அணைகளும் அப்படியே இருக்க
முந்தாநாள் கட்டிய Airport கட்டிடம் பத்துமுறை விழுந்துவிட்டது!

நாட்டிற்கு வருமானத்தை தரும்
சேதுசமுத்திர திட்டத்தை நாற்பது வருடங்களுக்கு முன்னாலேயே நிறைவேற்றி இருப்பான்
வெள்ளைக்காரன்!

பணம்பிடுங்கும் பச்சோந்தி கல்விநிறுவனங்களுக்கு பதிலாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான
கல்விமுறை வந்திருக்கும்!
நாம் இன்னும் சமச்சீர் கல்விக்கும்,
இடஒதுக்கீட்டுக்கும்
போராடிக்கொண்டு இருக்கிறோம்!

வெள்ளைக்காரனால் அடிமைப்பட்ட
அத்தனை நாடுகளும் இன்று உச்சத்தில் இருக்க நம் நாடு மட்டும் பாதுகாப்பின்றி
வயிற்று பசிக்கும் வாழ்க்கை பசிக்கும் மக்களை பலிகொடுத்துக்
கொண்டிருக்கிறது,
அடித்து வாங்க சக்தியில்லாமல்
அழுதுவாங்கிய சுதந்திரம் என்பதால் ஆளாளுக்கு விளையாடி அக்கறையின்றி தூக்கி எறிந்துகொண்டு இருக்கிறோம்!

மண்ணுக்கு மட்டுமே சுதந்திரம்
வாங்கினோம் மக்களுக்கு வாங்க
தவறிவிட்டோம் !

120 கோடி மக்கள் தொகையில்
70 கோடி வறுமைக்கு கீழ்!
பெருமையாய் சொல்லிக்கொள்கிறோம்
70 ஆண்டுகளை நெருங்கிவிட்டோம் என்று!
இன்றுவரை பிளாட்பாரங்கள் நடக்க
பயன்படுவதில்லை நம் நாட்டு ஏழைகள் அங்கு குடியேறி இருப்பதால்!

🇮𾓮எப்படி குத்திக்கொள்ளமுடியும்
கொடியை,
ஒவ்வொரு முறை குத்தும்போதும்
இடறி நெஞ்சுக்குள் குத்துகிறது!

𾓈நம்நாட்டு பெண்களை கூட்டம்
கூடி கற்பழிக்கும் வரை,
நம்நாட்டு குழந்தைகள் தெருவில்
நின்று பிச்சைகேட்கும் வரை,
நம்நாட்டு பெண்சிசுக்கள்
கள்ளிப்பாலில் சாகும்வரை
நமக்கெல்லாம் அருகதையில்லை

சுதந்திர நாடென்று சொல்லிக்கொள்ள!
ஆண்டுக்கு இரண்டு நாட்களிலும்,
அண்டை நாட்டு கிரிக்கெட்டிலும்
மட்டும் நாட்டுப்பற்று உயிர்வாழும்
என்றால் நாமதற்கு அடிமைப்பட்டே இருந்திருக்கலாம் நல்ல காலம் வரும்வரை!

0 comments:

Post a Comment