ilovemynative: Facebook page wall posts in Tamil |
- இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
- #திருக்குறள் குறள் பால்: #பொருட்பால். குறள் இயல்: #நட்பியல். அதிகாரம்: #நட்பாராய...
- அமேசான் காடுகளிலிருக்கும் அரிய வகை மூலிகையை கொண்டு தைலம் தயாரிக்கும் கம்பேனி அதி...
- Ancient Tamil Civilization: The symbol looking vaguely like an ‘N' appears to...
- திருக்குறள் வள்ளுவரின் தீர்க்கதரிசனங்களையும் கொண்டடங்கியது. களப்பிரர் காலம் என்ப...
- காதலியின் முட்டாள் தனத்தை ரசிக்கும் அளவுகூட தன் பெற்றோரின் வெகுளித்தனத்தை ரசிப்ப...
- நித்யானந்தா ஆசிரமத்தில் இளம்பெண் சங்கீதா மர்ம சாவு # அதெப்படிங்க கரெக்ட்டா சாக்...
- ஒரு பெருங்கூட்டத்துக்குள் இருந்தும் நாம் தனிமையை உணர்ந்தோமேயானால் அது நமக்கான இட...
- 'மதுக் கோப்பையில் ஈ விழுந்தபோது, எடுத்துவிட்டேன்; எறும்பு விழுந்தபோது, எடுத்துவி...
Posted: 31 Dec 2014 07:29 PM PST |
Posted: 31 Dec 2014 05:51 PM PST #திருக்குறள் குறள் பால்: #பொருட்பால். குறள் இயல்: #நட்பியல். அதிகாரம்: #நட்பாராய்தல் . #உரை: ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும். #Translation: To make an untried man your friend is ruin sure; For friendship formed unbroken must endure. #Explanation: As those who are of a friendly nature will not forsake (a friend) after once loving (him), there is no evil so great as contracting a friendship without due inquiry. #TRADUIT DU #TAMOUL: Ceux qui sont lies d'amitié ne se séparent pas l'un de l'autre. Il n'y a donc pas de mal pire que se lier d'amitié sans épreuve préalable. @Puducherry * புதுச்சேரி * Pondichéry ![]() |
Posted: 31 Dec 2014 06:58 AM PST அமேசான் காடுகளிலிருக்கும் அரிய வகை மூலிகையை கொண்டு தைலம் தயாரிக்கும் கம்பேனி அதிபரை நம்ம டுபாக்கூர் நிருபர் பேட்டி எடுத்தபோது..... அமேசான் காடுகளில் இருக்கும் அரிய வகை மூலிகைகளை தேய்த்தால் முடி வளரும்ன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க? அது ரொம்ப சிம்பிள்.... அமேசான் காடுகளின் இருக்கும் கரடிகளை கவனிச்சோம்.... வழக்கமான கரடிகளுக்கு இருப்பதை விட அமேசான் காட்டு கரடிகளுக்கு முடி அதிகமா இருந்துச்சு... அந்த கரடிகளுக்கு மட்டும் முடி அதிகமா இருக்க என்ன காரணம்ன்னு ஆராய்ச்சி செஞ்சு பார்த்தோம்... அந்த கரடிகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட மூலிகை மரத்தின் மேல் படுத்துக்கிடந்தது. மூலிகை மரத்தின் மேல் படுத்துக்கிடந்த கரடிக்கே இவ்வளவு முடி வளரும்போது, அந்த மூலிகையை தலையில் தேய்த்தால் எவ்வளவு முடி வளரும்ன்னு எங்க ஃப்ராட் ஆர்கனைசேஷன் மூலமா ஆராய்ச்சி செஞ்சி இந்த முடி வளரும் ஆயிலை கண்டுபிடித்தோம். அதில் இன்னொரு சுவாரஷ்யமான சம்பவம் என்னன்னா?....... சொல்லுங்க சொல்லுங்க... அந்த மூலிகையை வச்சு தைலம் தயாரிச்சுக்கு இருந்தபோது, ஒரு பாட்டில் கை தவறி கீழே விழுந்து, தைலம் தரையில் ஊத்திடுச்சு..... ஊத்துன இடத்தில் அடுத்த நாள் பார்த்தால் சில முடிகள் வளர்ந்து இருந்தது. வெறும் தரையில் முடியா?......அதெப்படி சாத்தியம்? அதாவது அந்த தைலம் கொட்டிய இடத்தில் ஒருவரது முடி கிடந்திருக்கு.....அந்த முடியில் நம்ம தைலம் எதார்த்தமா ஊத்தியதும் முடி வளர ஆரம்பிச்சிருச்சு.... முடி வளரும் தைலம் தயாரிக்கும் இடத்திலேயே முடி கொட்டுதா? அது தைலம் தயாரிப்பதுக்கு முன்னாடி கொட்டியது.... மூலிகை தயாரிச்ச பின்னாடி எல்லோருக்கும் கொட்டுன முடில்லாம் பல மடங்கு வளர்ந்திடுச்சு.....இப்ப எங்களுக்கு ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான பிளேடு சிலவாகுது பிளேடா? ஆமாங்க.... அந்த தைலத்தின் எபெக்ட்ல முகமெல்லாம் குபீர்ன்னு முடி முளைச்சிடுது. எங்க ஸ்டாஃப் எல்லோரும் ஒரு நாளைக்கு அஞ்சு தடவை சேவிங் பண்ணிக்கறாங்கன்னா பாருங்களேன்...மூலிகை தைலத்தின் பவரை. ஒரு ஹெல்மெட் போட்டுட்டு வேலை பார்த்தால் இந்த மாதிரி சங்கடமெல்லாம் வராதுல்ல? அப்படித்தான் ஆரம்பத்தில் செஞ்சோம்..... ஆனா பாருங்க, ஹெல்மெட்டுக்கு மேலேயே முடி வளர ஆரம்பிச்சிருச்சு.....ஹெல்மெட்டை சேவிங் பன்றது ரொம்ப சிரமமா இருந்துச்சு... அதான் முகத்தையே சேவிங் செஞ்சுக்கலாம்ன்னு... இப்பக்கூட பாருங்க... இங்கே வந்த எஃபெக்ட்ல உங்க உள்ளங்கைல கூட முடி முளைச்சிருக்கு நீங்க வேற.. இது எங்க உள்ளங்கைல முளைச்ச முடி இல்லேங்க... அப்புறம்? நீங்க கொடுத்த பேட்டில நாங்க மண்டையை பிச்சுக்கிட்டு அதனால் எங்க கைல வந்த முடிங்க..... @ரஹீம் கஸாலி |
Ancient Tamil Civilization: The symbol looking vaguely like an ‘N' appears to... Posted: 31 Dec 2014 04:13 AM PST Ancient Tamil Civilization: The symbol looking vaguely like an 'N' appears to be the same as the Indus signs 47 or 48 (in Figure 3). Professor B.B. Lal, former Director-General of the Archaeological Survey of India, showed that these Indus signs have a remarkable resemblance to the megalithic symbol occurring at Sanur, near Tindivanam, and elsewhere in Tamil Nadu (Figure 2). More recently, the same symbol has turned up on two pottery fragments from Pattanam in Kerala (probably the same as Musiri of the Sangam Age). I have compared the symbols with the Indus signs depicting a seated anthropomorphic deity. http://www.thehindu.com/todays-paper/induslike-inscription-on-south-indian-pottery-from-thailand/article746147.ece 'Murukan' in the Indus Script http://murugan.org/research/mahadevan.htm http://tamilnation.co/heritage/indusscript.htm சானூர் சானூர் ஒரு பெருங்கற்கால (இம்புக்கால-வரலாற்றுத் துவக்கக்கால) ஈமச்சின்ன இடமாகும். அமைவிடம் இந்த இடம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கற்பட்டிலிருந்து, திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு சிறு மலைகள் அமைந்துள்ளன. சிறப்பு இங்கு நூற்றுக்கணக்கான இறந்தவர்களுக்காக எழுப்பப்பட ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன. அகழாய்வுகள் இந்திய அரசுத் தொல்லியல் ஆய்வுத்துறை இந்த இடத்தில் பல ஈமச்சின்னங்களை அகழாய்வு செய்துள்ளது. இந்த ஈமச்சின்னங்களிலிருந்து பல அரிய தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. இங்கு காணப்படும் கற்பதுக்கைகள், கற்பலகைகளில் உருவாக்கப் பெறவில்லை. பெரிய பாறைகள் கொண்டு அமைக்கப் பெற்றுள்ளன. எனவே, இவை சற்று கரடுமுரடாக உள்ளன. ஈமச்சின்ன வகை இங்கு கற்பதுக்கைகள் காணப்படுகின்றன. இவை நாற்புறமும் கிரானைட் கற்களைக் வைத்து ஓர் அறை போல உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றின் உள்ளே சுடுமண்ணால் செய்யப்பட்ட ஈமப் பேழைகள் கிடைத்துள்ளன. இந்த அறைகள் மூடுகற்களால் மூடப்பட்டுள்ளன. இங்கு இரும்பாலான பொருட்களும், மனித எலும்புகளும், சங்கால் செய்யப்பட்ட காதணிகளும் கிடைத்துள்ளன. பானை வகைகள் இங்கு கருப்பு-சிவப்பு, கருப்பு மற்றும் சிவப்புப் பானைகள் கிடைத்துள்ளன. பானைகளில் குறியீடுகள் கோட்டுருவங்களாக எழுதப்பட்டுள்ளன. இவை சிந்துவெளி நாகரிக முத்திரைகளில் காணப்படும் குறியீடுகளை ஒத்திருப்பதாக ஐராவதம் மகாதேவன் கருதுகிறார். http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/saa_noor.htm http://www.tamilvu.org/library/lA474/html/lA474002.htm ![]() |
Posted: 31 Dec 2014 12:53 AM PST திருக்குறள் வள்ளுவரின் தீர்க்கதரிசனங்களையும் கொண்டடங்கியது. களப்பிரர் காலம் என்பது வரலாற்றில் பெரும் தகவல்கள் பின்வந்தோரால் அழிக்கப்பட்ட காலம், தவிர இன்றைக்கு காலகட்டத்தில் எத்தனை நூல்கள் வெளியாகின்றன அத்தனையும் மதம் சார்ந்தோ பொதுவுடமை சார்ந்தோ வரலாறு/கதை/கவிதை/கட்டுரை என ஒவ்வொரு இலக்கியம் சார்ந்தது. வள்ளுவர் எதையும் சாராது அறம் பொருள் இன்பத்தை எடுத்தாண்டிருக்கிறார். உலகில் எல்லா மனிதனுக்கும் மூச்சுவிடுதல் எப்படி பொதுவானதோ அப்படி இம்மூன்றும் என்பதால் வள்ளுவம் உலகப்பொதுமறை. ஏதோ ஒன்றைச் சார்ந்து எழுதினால் அது எப்படி பொது மறை என்றாகும். வள்ளுவம் எழுதின காலகட்டத்தில் வந்த நீல கேசியையும் குண்டலகேசியையும் எடுத்துப் பாருங்கள். சமணம் பெளத்தத்தையும் பெளத்தம் சமணத்தையும் திட்டித் தீர்த்திருப்பார்கள். அதனால் தான் வள்ளுவம் பொய்யாமொழியாகிவிட்டது. @கார்த்திக் புகழேந்தி ![]() |
Posted: 31 Dec 2014 12:16 AM PST காதலியின் முட்டாள் தனத்தை ரசிக்கும் அளவுகூட தன் பெற்றோரின் வெகுளித்தனத்தை ரசிப்பதில்லை #இந்த போன எப்டிபா ஆப் பண்ணனும்?, ச்சஇது கூடதெரியாதா! @iamVariable |
Posted: 31 Dec 2014 12:01 AM PST நித்யானந்தா ஆசிரமத்தில் இளம்பெண் சங்கீதா மர்ம சாவு # அதெப்படிங்க கரெக்ட்டா சாக்கடைய தேடிப்போய் விழுறீங்க. கொஞ்சமாவது யோசனை வேண்டாம். எனக்குத் தெரிந்தவரை சாமியார்கள் ரெண்டே வகைதான். மாட்டுனவனுங்க இன்னும் மாட்டாதவனுங்க. @ஜெயந்த் |
Posted: 30 Dec 2014 11:35 PM PST ஒரு பெருங்கூட்டத்துக்குள் இருந்தும் நாம் தனிமையை உணர்ந்தோமேயானால் அது நமக்கான இடமில்லை! @காளிமுத்து |
Posted: 30 Dec 2014 11:30 PM PST |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment