ilovemynative: Facebook page wall posts in Tamil |
- இவரு தான் இன்னைக்கு ராஜபக்சேவை பேட்டி எடுத்தவரு... முன்னாடி மக்கள் டிவியில் 'செ...
- மழை உன்னை நினைவுபடுத்துகிறது.. குளிர் உன்னை நினைத்துப் படுத்துகிறது..! @காளிமு...
- வாஜ்பாயை விட வி.பி.சிங் யாருடைய கண்களுக்கும் நல்லவராக தெரியாமல் போனது கொஞ்சம் வி...
- கடந்த காங்கிரஸ் ஆட்சியில் காப்பீட்டு துறையில் அன்னிய முதலீடு கூடாது என்று பார்லி...
- மதத்தின் அடிப்படையில் ஒரு நாட்டின் அரசு இயங்கினால் அந்த நாட்டில் வாழும் மக்கள் எ...
- இந்தியை தவிர வேறு எந்த மொழியையும் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக அறிவிக்க முடியாது...
- அமிதாப் பச்சன் ஹிந்தியில் ஆகச்சிறந்த சூப்பர் ஸ்டார். ஆனா, அந்த மாநிலத்து ரசிகர்க...
- அப்புறம் நியு இயர் எல்லாம் வருது.. கலாச்சார காவலர்கள் எல்லாம் என்ன ப்ளான் வச்சிர...
- 500 ஆண்டுகளாக தொடரும் மூட நம்பிக்கைக்கு அனுமதி . 5000 ஆண்டுகளாக தொடரும் வீர விளை...
- Ancient Tamil Civilization: Eyirpattinam (SOPATINA) Me (aravind) rob (batman)...
- சிங்கார சென்னை!
- இன்னும் எத்தனை உயிர் பலி வாங்க போகிறதோ?
Posted: 29 Dec 2014 08:31 PM PST |
Posted: 29 Dec 2014 05:51 PM PST |
Posted: 29 Dec 2014 10:14 AM PST மழை உன்னை நினைவுபடுத்துகிறது.. குளிர் உன்னை நினைத்துப் படுத்துகிறது..! @காளிமுத்து |
Posted: 29 Dec 2014 07:58 AM PST வாஜ்பாயை விட வி.பி.சிங் யாருடைய கண்களுக்கும் நல்லவராக தெரியாமல் போனது கொஞ்சம் விந்தைதான். பெரிய மன்னர் குடும்பத்தில் பிறந்து தன்னுடைய சொத்துகளை எல்லாம் பூமி தான இயக்கத்திற்கு தானம் செய்துவிட்டு ஏழைகளுக்கு சேவை செய்ய வந்தது அவருக்கு தேவையில்லாத வேலைதான். காங்கிரஸ் அல்லாத ஒரு மந்திரி சபை அமைத்து காட்டி சாதனை படைத்தவர் என்று சொன்னால் யாருக்கு தெரிய போகிறது? மண்டல் கமிஷனை அறிமுகப்படுத்தி பிற்படுத்தப்பட்டோர் என்று திரியும் நடுத்தர வர்க்கத்தை அரசு வேலைகளில் வர வைத்தவர் என்பதயெல்லாம் யாருக்கு தெரியும்? யாரோ மாளவியாவாம்! ஏதோ பாரத் ரத்னா விருதாம்! தர போறாங்களாம்! தரட்டும். @வெங்கடேசன் பாலகிருஷ்ணன் |
Posted: 29 Dec 2014 06:58 AM PST கடந்த காங்கிரஸ் ஆட்சியில் காப்பீட்டு துறையில் அன்னிய முதலீடு கூடாது என்று பார்லிமெண்டில் கும்பல் சேர்ந்து மசோதாகளை கிழித்தவர்கள் சாட்சாத் இதே பாஜகதான். சுதேசி கொள்கையில் இருந்து நழுவ மாட்டோம் என்று உரக்க பேசுவோரும் இதே பாஜக தான். இன்று காப்பீட்டு துறையில் அன்னிய முதலீட்டை அனுமதி அளிப்பதும் இதே பாஜகதான். நாட்டின் மிகப்பெரிய பொது துறை நிறுவனமான எல்ஐசி யை ஒழித்து கட்ட முடிவு செய்துவிட்டார்கள். வரப்போகின்ற வெளிநாட்டு காப்பீட்டு நிறுவனங்கள் கவர்ச்சிகளை அள்ளிவீசி மக்கள் பணத்தை சுருட்ட போவது உறுதி. @வெங்கடேசன் பாலகிருஷ்ணன் |
Posted: 29 Dec 2014 05:26 AM PST மதத்தின் அடிப்படையில் ஒரு நாட்டின் அரசு இயங்கினால் அந்த நாட்டில் வாழும் மக்கள் எவ்வளவு சீரழிவிற்கு உள்ளாவார்கள் என்பதற்கு "இலங்கையும்,பாகிஸ்தானும்" நம் கண்முன் சாட்சியாக இருக்கின்றன. இலங்கையில் பௌத்தம் தான் மத்திய அரசின் மதம். பௌத்தத்தை கடைபிடிக்கும் சிங்கள இனம் தமிழினத்தையே கொன்றழித்தது. பாகிஸ்தானில் இஸ்லாம் தான் மத்திய அரசின் மதம்.அங்கே பெரும்பான்மை மக்கள் இஸ்லாத்தை கடைபிடிப்பவர்கள். தான்.ஆனாலும் அவர்களுக்குள்ளேயும் பிளவு வந்தது. "எங்களின் மொழியை அரசு புறக்கணிக்கிறது" என்று சொல்லி "வங்காள மொழி" பேச கூடிய மக்கள் போராடி "வங்காள தேசம்" கண்டார்கள். "எப்போது வேண்டுமானாலும் குண்டு வெடிக்கலாம், கொல்லப்படலாம்" நிலையில் தான் பாகிஸ்தானில் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். எல்லாம் அறிந்தும் இந்தியாவில் "இந்துத்துவ" கொள்கையை மிக தீவிரமாக செயலபடுத்த இந்திய மோடி அரசு திட்டமிடுகிறது.இந்திய அரசு "இந்து" மத கொள்கைகளை பின்பற்றி நடந்தால் இந்தியாவிலும் இனப்படுகொலைகள் நடக்கும்,மக்கள் நிம்மதியிழந்து வாழ்வார்கள். பாகிஸ்தானில் இருந்து வங்காள தேசம் உருவானது போல் இந்தியாவிலிருந்தும் மொழி அடிப்படையில் பல நாடுகள் உருவாகும்.....! @நல்ல சிவம் ![]() |
Posted: 29 Dec 2014 04:59 AM PST இந்தியை தவிர வேறு எந்த மொழியையும் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக அறிவிக்க முடியாது - பாஜக அரசு . அப்படி என்றால் இந்தி பேசாத பகுதிகளை இந்தியாவின் அதிகாரப்பூர்வமற்ற பகுதிகளாக இந்திய அரசு அறிவிக்க வேண்டும். இப்பகுதிகளின் மீது ஆட்சி அதிகாரம் செலுத்தவோ அல்லது இப்பகுதிகளில் இருந்து எந்தவிதமான வரிகளையோ இந்தி அரசு பெறக் கூடாது. #make_tamil_official_language_of_india ![]() |
Posted: 29 Dec 2014 04:54 AM PST அமிதாப் பச்சன் ஹிந்தியில் ஆகச்சிறந்த சூப்பர் ஸ்டார். ஆனா, அந்த மாநிலத்து ரசிகர்கள் அமிதாபை பார்த்து, 'தலைவா, நாளைய மஹாராஷ்டிராவே உன் கையில் தான் இருக்கு. அரசியலுக்கு வாங்க தலைவா'னு கூச்சல் போடுறாங்களா...? ஷாருக்கான், சல்மான்கான் மற்றும் ஆமிர்கான் போன்ற ஹிந்தி சூப்பர் ஸ்டார்களுக்கு எவ்வளவு மார்க்கெட் வேல்யூ இருக்கு தெரியுமா..? அவர்களுக்கு மஹாராஷ்டிரா மட்டும் இல்லாமல் இந்தியா முழுக்க எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் தெரியுமா...? ஆனா, அந்த ரசிகர்கள் அவர்களை பார்த்து 'அரசியலில் குதியுங்கள்...இந்தியாவை காப்பாற்றுங்கள்...நீங்கள் தான் எங்கள் 'ஷாருக்காந்தி' என அடைமொழி இட்டு சுவரொட்டிகள் ஒட்டி நீங்கள் பார்த்தது உண்டா...? இல்லை, ஹிந்தி சினிமாக்காரனின் படம் வெளியே வராமல் எந்த ஹிந்தி ரசிகனாவது தூக்கு போட்டு தற்கொலை செய்திருக்கிறானா..?? எந்த ஹிந்தி ரசிகனாவது அவர்களின் நடிகர்களுக்கு கோயில் கட்டியிருக்கானா...? இப்படி எல்லா விஷயங்களையும் அவர்களோடு உங்களையும் எண்ணி பார்த்தால், நீங்கள்(தமிழக ரசிகர்கள்) எவ்வளவு மட்டமான நிலையில் (அல்லது அந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டு) இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கே புரியும்!! ஏன், நம்ம பக்கத்து மாநிலத்து கேரளாவில் இங்க நடக்கிற ரசிகர்களின் மானங்கெட்ட புரட்சிகள் ஏதாவது தினம் தினம் நடந்துக்கிட்டு இருக்கா..? மோகன்லால், மம்முட்டி எல்லாம் ஏன் ஆடாம் அலம்பல் பண்ணாம இருக்காங்க...? ஏன்னா, அவங்களுக்கு பைத்தியக்காரத்தனமான ரசிகர்கள் கூட்டம் இல்ல. இங்கே சென்னைக்கு படிக்க வந்த, இல்ல, பூர்வீகமா இருக்கிற மலையாளிகள் கூட நடிகர்கள் மேல வெறித்தனமா இருக்க மாட்டாங்க. அதுக்கு என்ன காரணம்னு யோசிங்க! அமிதாப், திலீப்குமார், மோகன்லால், மம்முட்டிக்கு இல்லாத நடிப்பு திறமையா உங்க மூத்த தளபதி, இளைய தளபதி, வளரும் தளபதிக்கெல்லாம் இருக்கு...? சிகரெட் மேல தூக்கிப்போட்டு துப்பாக்கியால் சுட்டு வாயில வெச்சி பிடிச்சா, அப்படியே கை தட்டல் பறக்கும்..சிகரெட்ட சட்டை காலரிலிருந்து வாயால் கடிச்சி இழுத்தா, அதுக்கு பேர் நடிப்பாம்...சிலை வைப்பாங்களாம்..பால் ஊத்துவாங்களாம்...அய்யோ அய்யோ!! அவ்வளவு ஏன்...ஹாருக்கானுக்கு பட்டம் ஏதாவது இருக்கா...? அமிதாப் பச்சனுக்கு பட்டம் இருக்கா...? மோகன்லால் ?? மம்முட்டி ??? ஒருத்தருக்கும் இல்ல. ஆனா, இங்க ஒரு பட்டத்துக்கு புது அரசியல்வாதி, புரட்சி அரசியல்வாதியான ஒரு நடிகர் படும் பாடு இருக்கே...அப்பப்பாஆஆ!!! இதுக்கெல்லாம் யாரு காரணம்...? இந்த மானங்கெட்ட ரசிகர்கள் தான். கொஞ்சம் வெளியே வந்து இந்த பரந்த சினிமா உலகத்தை பார்த்து சிந்திக்க ஆரம்பிச்சா போதும்...அவங்க எவ்வளவு பெரிய தவறு, சமுதாய சீர்கேட்டை செஞ்சிக்கிட்டு இருக்காங்கன்னு தெளிவா புரியும். இவ்வளவு விளங்கும்படி விளாவரியா பதிவு போட்டாலும் கொஞ்சம் கூட உறைக்காம சில மர மண்டைகள் வந்து இங்க வியாக்கியானம் பேசுவாங்க...திருந்துங்கப்ப்பாஆஆ...புன்னியமா போகும்! @பிரகாசம் பழனி ![]() |
Posted: 29 Dec 2014 04:46 AM PST அப்புறம் நியு இயர் எல்லாம் வருது.. கலாச்சார காவலர்கள் எல்லாம் என்ன ப்ளான் வச்சிருக்காங்க? மெரினா, ப்ளாசாக்கள் அங்க இங்கனு கலர் கலர் துண்டு, கலர் கலர் பொட்டுனு கெளம்பனுமே.. வருஷத்துல மத்த எந்த நாளும் red light area பத்தி எல்லாம் எதிர்த்து கேக்க மாட்டானுங்க, ஆனா நியு இயர், காதலர் தினம் அன்னைக்கு இவனுங்களுக்கு வரும் பாரு ஒரு கலாச்சார பாசம்.... - உமா மகேஷ்வரன் |
Posted: 29 Dec 2014 04:42 AM PST 500 ஆண்டுகளாக தொடரும் மூட நம்பிக்கைக்கு அனுமதி . 5000 ஆண்டுகளாக தொடரும் வீர விளையாட்டுக்கு தடை ! இது தான் இந்திய நீதி ! கர்நாடகாவில் உள்ள சுப்பிரமணியன் சுவாமி ஆலயத்தில் பிராமணர்கள் சாப்பிட்ட இலையின் மீது பிராமணர் அல்லாதவர்கள் வெறும் உடம்போடு படுத்து உருள வேண்டுமாம். அப்படி செய்தால் அவர்களை பிடித்துள்ள நோய்கள் எல்லாம் நீங்கி விடுமாம். இது தான் அந்த பகுதியை சேர்ந்த மக்களின் மதமூட நம்பிக்கையாகும். இந்த நடைமுறை காட்டுமிராண்டித்தனம், மூடநம்பிக்கை என்று கர்நாடக அரசே ஒரு காலத்தில் தடை விதித்தது. இருப்பினும் இந்த மூடநம்பிக்கை ஆதரவாளர்கள் இந்த விழா தொடர்ந்து நடைபெற வேண்டும், இது 500 ஆண்டுகளாக வழக்கத்தில் இருக்கிறது, இது மக்களின் நம்பிக்கை சார்ந்த விடயம் , இதை தடை செய்வது இந்திய அரசியல் அமைப்புக்கு எதிரானது என்று நீதி மன்றத்தில் வாதித்தனர். இந்த வாதத்தின் அடிப்படையில் நீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்து இந்த விழா தொடர அனுமதி அளித்துள்ளது. இந்த ஆண்டும் சுப்பிரமணியன் கோவிலில் இந்த இலையின் மேல் உருளும் மூடநம்பிக்கை திருவிழா காவல்துறையின் பாதுகாப்புடன் நடைபெற்றது . ஆனால் தமிழர்கள் 5000 ஆண்டுகளாக பின்பற்றி வரும் தமிழர்களின் வீர விளையாட்டான சல்லிகட்டுக்கு 2014 மே மாதத்தில் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்த விளையாட்டில் ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. எல்லா விதிமுறைகளையும் கடைபிடித்து நடத்தப்படும் ஏறு தழுவுதல் விளையாட்டின் மேல் உள்ள தடையை நீக்க வேண்டும் என்று தமிழர்கள் அனைவரும் கோரிக்கை வைத்தும் இது வரை அக்கோரிக்கையை அரசோ, நீதிமன்றமோ ஏற்கவில்லை . இன்னும் சல்லிகட்டுக்கு தடை உள்ளது. இந்த தடையை மீறி சல்லிகட்டு நடத்த முடியுமா அல்லது தமிழர்கள் நடத்தப் போகிறார்களா என்பது கேள்விக்குறி. அப்படி நடத்தினால் தமிழகக் காவல்துறை தமிழ் மக்களின் மேல் வன்முறையை ஏவி விடுவார்கள் என்பதும் நாம் அறிந்ததே. நம்முடைய கேள்வி, ஒரு மேல்சாதி இந்துக்களின் புனிதத்தன்மையை உறுதிப்படுத்தும் மூடநம்பிக்கை சார்ந்த விழாவிற்கு நீதிமன்றமும், அரசும் அனுமதி அளிக்கிறது. ஆனால் தமிழர்களின் அன்பை, பண்பை , வீரத்தை உறுதிப்படுத்தும் தமிழர்களின் பண்பாட்டு விளையாட்ட்டான சல்லிகட்டை ஏன் நீதிமன்றமும் அரசும் தடை விதிக்கிறது? மூடநம்பிக்கைக்கு அனுமதி அளிக்கும் அரசு தமிழர் பண்பாட்டிற்கு அனுமதி வழங்க ஏன் தயங்குகிறது? காரணம் நாம் தமிழர்கள் என்பதாலா ? தமிழர் பண்பாடு நீடிக்கக் கூடாது என்பதலா ? தமிழர்களின் வீரவிளையாட்டை எப்படியாயினும் தொடர்ந்து நடத்தி விட வேண்டும் என்பதே தமிழர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது . இதை கருத்தில் கொண்டு வரவிருக்கும் பொங்கல் பண்டிகையின் போது சல்லிகட்டு விளையாட்டு வழக்கம் போல நடைபெற அரசு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டுமாறு தமிழ்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். ![]() |
Ancient Tamil Civilization: Eyirpattinam (SOPATINA) Me (aravind) rob (batman)... Posted: 29 Dec 2014 04:13 AM PST Ancient Tamil Civilization: Eyirpattinam (SOPATINA) Me (aravind) rob (batman) searching for a new dive site around pondy sea ..we dive 15km away from the shore..acidently we found the wall at the depth of 32 m ..rob named for the wall is called "aravind"s wall" wall start from 32 m and end with 42 m depth and sure 2 1/2 km length and wall travel north to south..beautyful life hidding there.... A close encounter with Rome is confirmed by finds of Roman coins, Arretine ware and Greco-Roman jewelry as well as place names in Tamil Nadu: Madras - Sopatina / Masulipatam, Pondichery - Poduka, Karaikal - Camara and Cannanore - Naura. http://www.youtube.com/watch?v=Ybkau-cNpxE http://www.youtube.com/watch?v=LuR0awnJ9qM எயிற்பட்டினம் (சோபட்டினம்) எயில் = மதில், பட்டினம் = கடற்கரை நகரம். மதில் நகரம் அல்லது கோட்டை நகரம். அதாவது கோட்டைகள் சூழ்ந்த கடற்கரைப் பட்டினம் என்பது பொருள். புதுச்சேரி அருகே ஆழ்கடலில் புதையுண்டிருக்கும் சங்கத் தமிழ் சரித்திரம்! http://tnarchsites.blogspot.in/2014/01/eyirpattinam.html http://www.tamilvu.org/courses/degree/d011/d0113/html/d0113443.htm http://www.srmuniv.ac.in/tamilperayam/tamil_courses/Lessons/MA_Tamil/IV_Year/matt14/html/mat14007pp4g.htm http://tamil.thehindu.com/general/environment/ஆழ்கடலில்-புதையுண்ட-சங்கத்-தமிழ்-சரித்திரம்/article5228153.ece ![]() |
சிங்கார சென்னை! Posted: 28 Dec 2014 11:20 PM PST |
Posted: 28 Dec 2014 11:01 PM PST |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment