Tuesday, 23 December 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


டிசம்பர் 24: தந்தை பெரியார் அவர்களின் நினைவு தினம் இன்று..

Posted: 23 Dec 2014 07:32 PM PST

டிசம்பர் 24:
தந்தை பெரியார்
அவர்களின்
நினைவு தினம் இன்று..


Posted: 23 Dec 2014 05:53 PM PST


#பெண்மை..! இயற்கையால் கூட ஈடுகட்ட முடியாத பாலின உயிரிதான் #பெண். ஆனால், நாமோ ஆண...

Posted: 23 Dec 2014 06:20 AM PST

#பெண்மை..!

இயற்கையால் கூட ஈடுகட்ட முடியாத பாலின உயிரிதான் #பெண். ஆனால், நாமோ ஆண் தான் சமூகத்தை படைத்தான், ஆண் வழிச்சமூகம் என்றெல்லாம் ஊருக்குள் பெருமை பீற்றிக் கொண்டு திமிருடன் பேசிக் கொண்டு திரிகிறோம். ஆண்களுக்கு பெண்களின் மீதான ஓர் உளவியல் சார்ந்த பயமே அதற்குக் காரணம்.

ஆண்தான் வீரம், திமிர், செறுக்கு என்றெல்லாம் பீற்றிக் கொண்டு திரியும் நாம், பெண்மையின் திமிர், வீரம், செறுக்கு பற்றி எண்ணிப் பார்க்க தவறிவிடுகிறோம். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் பெண்ணின் திமிரை அடக்க ஆணுக்கு பலமே கிடையாது .. இதை பலரும் வெளிப்படையாக ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பது வேறு விடையம்..!

சும்மா, வெற்று வீராப்பு பேசிக் கொண்டு பெண்ணிடம் சவடால் விடுவதில் இல்லை வீரம், திமிர், செறுக்கு எல்லாம்..! பெண்மையை ஆண்மைக்கு சரி சமமாக மட்டுமல்லாமல் அவளை தெய்வமாக வணங்கவும் செய்தல் உள்ளது ஆண்மையின் சிறப்பு..!

@க. சத்தியசீலன்


உயிர் பெறும் ஓலைச்சுவடிகள்: மீட்டெடுக்க ஒரு நூலகம் ! பல நூற்றாண்டுகளுக்கு முந்த...

Posted: 23 Dec 2014 04:13 AM PST

உயிர் பெறும் ஓலைச்சுவடிகள்: மீட்டெடுக்க ஒரு நூலகம் !

பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஓலைச்சுவடிகளைப் பாதுகாப்பதோடு, அவற்றைப் புதுப்பித்தும், நகலெடுத்தும் தருகிறது ஓர் நூலகம்

சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறையின்கீழ் இயங்கும் 'கீழ்த்திசை நூலகம்' மற்றும் ஆய்வு மையம், அரிதான பழமை வாய்ந்த ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடிகளால் நிரம்பி வழிகிறது. தமிழ் மொழியின் ஆரம்பகால ஊடக சாதனமாகப் பயன்பட்ட ஓலைச் சுவடிகளைப் பாதுகாப்பதும் அவ்வப்போது கிடைக்கிற சுவடிகளை ரசாயன முறையில் புதுப்பிப்பதையும் மிகவும் நேர்த்தியாகச் செய்து வருகிறது, இந்த நூலகம். இலக்கியம், வரலாறு, தத்துவம், அறிவியல், வட்டார வரலாறுகள், கல்வெட்டுகள் உள்ளிட்ட தலைப்புகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, உருது, அரபு, பாரசீகம் உள்ளிட்ட மொழிகளில் சேகரிக்கப்பட்ட 72 ஆயிரத்து 314 ஓலைச்சுடிகள் இங்கே கணக்கில் வரவு வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மிகவும் பழமை வாய்ந்த இந்த கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தின் தோற்றத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தவர்கள் இரண்டு பேர். ஒருவர், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த காலின் மெக்கன்சி. மற்றவர், இந்தியாவில் பிறந்த ஆங்கிலேயேரான பிரௌன். காலின் மெக்கன்சி 1783ல் இந்தியாவிற்கு வந்து, கிழக்கிந்தியக் கம்பெனியின் பொறியியல் பிரிவில் பணியாற்றியவர். பழமையான கணக்குகள், இந்திய வரலாறுகள், கீழ்த்திசை மொழிகள் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவராக இருந்திருக்கிறார். இதனால், அவர் ஏராளமான சுவடிகள், வரைபடங்கள், மற்றும் நாணயங்களை சேகரிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்.

மொழியியல் அறிஞரான பேராசிரியர் லேடன் என்பவர், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது சேகரித்த பல தொகுப்பினை லண்டனில் உள்ள இந்திய அலுவலகத்தில் பார்த்த பிரௌன், பல முயற்சிகளுக்குப் பிறகு கிழக்கிந்தியக் கம்பெனி மூலம் 10,000 பவுண்டுகளுக்கு அந்த ஓலைச்சுவடிகளை விலைக்கு வாங்கி, அதில் ஒரு பகுதியை சென்னைக்கு கொண்டு வந்திருக்கிறார். மெக்கன்சியால் சேகரித்த சுவடிகள் உட்பட அனைத்தையும் இப்போது எங்கள் நூலகத்தில் வைத்து பாதுகாத்து வருகிறோம்" என்கிறார், இந்த நூலகத்தின் காப்பாட்சியர் சந்திரமோகன்.

1870ல் சென்னை மாநிலக் கல்லூரியில் தொடங்கப்பட்ட இந்த நூலகம், இப்போது சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது. இங்குள்ள முக்கியமான ஓலைச்சுவடிகள், தாள் சுவடிகளாக மாற்றம் செய்யப்படுகின்றன. மேலும் சிதைந்த தாள், சுவடிகள் மற்றும் அச்சு நூற்களை, சிப்பான் துணிகளைக் கொண்டு சீரமைக்கிறார்கள். இங்குள்ள சுவடிகளிலிருந்து இதுவரை 200 புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆராய்ச்சி மாணவர்கள் பலர் இங்கு வந்து தங்களுக்குத் தேவையான விஷயங்களை சேகரித்துச் செல்கின்றனர். மேலும் வெளிநாட்டினரும் இங்கு உள்ள ஓலைச்சுவடிகளை பார்த்துச் செல்கின்றனர். ஓலைச்சுவடிகளை இங்கு விலை கொடுத்தும் வாங்கிக் கொள்கிறோம். நூலகத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறோம். அப்படி வாங்கிய ஓலைச்சுவடிகள், ரசாயனப் பொருட்கள் இட்டு பாதுகாக்கப்படுகின்றன" என்கிறார் சந்திரமோகன்.

தமிழகத்தில் உள்ள 12,617 ஓலைச்சுவடிகளின் அடிப்படை விவரங்களைத் திரட்டி, அதில் 1,862 சித்த மருத்துவ சுவடிகளை இவர்கள் சி.டி.யில் பதிவு செய்திருக்கிறார்கள். இதனால், குறுந்தகடு மூலம் சித்த மருத்துவ ஆய்வாளர்கள் தகவல்களை எளிதாகப் பெறமுடிகிறது.

பழமையான ஓலைச்சுவடிகளை சேகரித்து வைத்திருப்பவர்கள் இங்கு வந்து அவற்றைக் கொடுத்தால், சென்னை அருங்காட்சியகத்திலுள்ள சுவடிப் பாதுகாப்பு மையம் மூலம் எவ்விதக் கட்டணமும் இன்றி உரிய வேதிப் பொருட்கள் இட்டு, ஓலைச்சுவடிகளை சீரமைத்தும் தருகிறார்கள்.

ஓலைச்சுவடிகள் மூலம் தகவல்களைத் திரட்டவும், சுவடிகளைச் சீரமைக்கவும் தொடர்பு எண்: 044-2536 5130

நன்றி : முத்தமிழ் வேந்தன்


தொல்காப்பியம் காட்டும் உணவு! தொல்காப்பியர் ஐந்துவகை நிலங்களுக்கும் கருப்பொருள்...

Posted: 23 Dec 2014 03:12 AM PST

தொல்காப்பியம் காட்டும் உணவு!

தொல்காப்பியர் ஐந்துவகை நிலங்களுக்கும் கருப்பொருள் கூறும்பேது உணவு பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு நச்சினார்கினியர் தரும் விளக்கத்தைக் கீழே காண்போம் இதுவும் நமக்குப் புதிதல்ல.

1. முல்லை நிலமக்களுக்கு உணவு-வரகு, சாமை நீர் - கான்யாறு

2. குறிஞ்சி நில மக்களுக்கு உணவு - ஐவென நெல்லும் தேன்திணையும், மூங்கிலரிசியும் நீர் - அருவி நீர், சுனை நீர்

3. மருதநில மக்களுக்கு உணவு - செந்நெல் - வெண்ணெல் நீர் - ஆற்றுநீர், மனைக்கிணற்றுநீர், பொய்கை நீர்

4. நெய்தல் நிலமக்களுக்கு உணவு - உப்புக்கு விலைமாறிய பண்டமும், மீனுக்கு விலைமாறிய பண்டமும் நீர் - மணற்கிணறு, உவற்குரிநீர்

5. பாலை நில மக்களுக்கு உணவு - ஆறலைத்த பொருளும், சூறை கொண்ட பொருளும் நீர் - அறுநீர் கூவலும், சுனை நீரும்.

தொல்காப்பியர் காலச் சமுதாயத்திற்கும் சங்ககாலச் சமுதாயத்திற்கும் மிகுந்த வேறுபாடு இல்லாத நிலையில், சங்கால மக்கள் கொண்ட உணவு வகை அனைத்தும் தொல்காப்பியர் கால மக்களும் கொண்டிருப்பர் என்று கொள்ள இடமுண்டாகிறது. இந்நிலையில் சங்ககால மக்கள் உணவு வகைகளே தொல்காப்பியர் காட்டும் உணவாகக் கொள்ள வாய்ப்பாக அமைகிறது. எனவே அவற்றை கீழ்கண்டவாறு சற்று விளக்கமாகக் காண்போம்.

உணவு சமைக்கும் அடுப்பு வகைகள்

உணவு என்றால் உணவு அப்படியே வானத்திலிருந்து வந்துவிடாது. அதைச் சமைப்பதற்கு உரிய கருவியாக அடுப்பு வேண்டும். இந்த அடுப்புப் பற்றிய செய்திகளை பல சங்க இலக்கியங்கள் சுட்டி நிற்கின்றன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.

1. முடித்தலை அடுப்பு (புறம்.28.6)

2. ஆண்டலை அணங்கடுப்பு (மது.காஞ்.29)

3. ஆடுநனிமறந்த கோடுயர் அடுப்பு (புறம்.164)

4. முரியடுப்பு (பெரும்பாணாற்றுப்படை)

இவ்வாறு அடுப்புப் பற்றி நிலையப் பேசுகின்ற இலக்கியங்கள் சமைக்கும் இடமான சமையல் இடம் பற்றியும் பேசுகின்றன. . அவை பின்வருமாறு.

அட்டில்

உணவு தயாரிக்கப்படும் இடங்கள் பற்றி அகநானூறு, நற்றிணை, சிறுபாணாற்றுப்படை, பட்டினப்பாலை போன்ற பிற சங்க இலக்கியங்களிலும் காணக்கிடக்கின்றன. சான்றுக்குச் சில.

1. அகநானூறு - உதியனட்டில் போல ஒலியெழுத்து அருவியார்க்கும்
2. சிறுபாணாற்றுப்படை - புளிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில்
3. பட்டினப்பாலை - அறநிலை இய அகனட்டில்

சமையல் செய்யும் பாண்டம்

சமையல் செய்யவும், பரிமாறவும் பயன்படும் பாத்திரங்கள் பற்றியும், சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. சிலவற்றைக் காண்போம்.

1. இருங்கட் குழிசி (புறம்.65-2)
2. மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி (புறம்-168-9)
3. அட்டகுழிசி அழற்பயந்தாங்கு (புறம்-23)
4. வெண்கோடு தோன்றாக் குழிசி (புறம்-251)
5. முரவு வாய் ஆடுறு குழிசி (புறம்-371)
6. மேலும் புகர்வாய்க் குழிசி, சோறடு குழிசி

போன்ற பாண்டங்களை மக்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தியதை உணர முடிகின்றது.

உணவு வகை

பண்டைத் தமிழ் மக்கள் இறைச்சியை விரும்பி உண்டனர். அதன் பல்வேறு பெயர்கள் பின்வருமாறு.

ஊன், இறைச்சி, புலால், ஊழ்ததல், தசை, தடி, புன், புரளி, புலவு முதலியன.

இவற்றோடு மிளகுப் பொடி தூவி, கடுகிட்டுத் தாளித்து உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

தமிழர் விரும்பி உண்ட உணவு நெல உணவாகும். அதன் பல்வேறு பெயர்களாவன.

வரி செஞ்சாலி, செந்நெல், சொல், இயவை, ஐவனம் முதலியன. மேலும் புழுங்கலரிசியே தலையாய உணவாக இருந்து வந்திருக்கிறது.

அதற்று அடிசில், அமலை, அமிழ்து, அயினி, அவி, உணா, உண், தோரி பருக்கை, பிசி, மிசை, வல்சி போன்ற பல பெயர்கள் உண்டு.

பலவகையான பலகார வகைகளையும் விரும்பி உண்டதற்கான சான்றுகள் பல உள்ளன.

பலவகையான கள் அருந்தி மகிழும் பழக்கமும் இருந்ததை சங்க இலக்கியங்கள் பலவும் உணர்த்தி நிற்கும்.

தானிய வகை உணவுக்கு பக்க உணவாக மாமிச உணவையும், காய்கறி உணவையும் வைத்து, சுவை மிகுந்த குழம்பு, பொரியல் கூட்டு, அவியல் போன்றவற்றையும் சேர்த்து உண்ணும் பழக்கம் உடையவராகத் தமிழர் இருந்துள்ளனர்.

பால் பொருட்கள்

மேலும் பால்படு பொருட்களும் பெருமளவில் உட்கொண்டு வந்துள்ளனர். ஏடு, தயிர், மோர், வெண்ணிற நெய், வெண்கட்டி முதலியனவும் இலக்கியங்களில் சுட்டப்படுகின்றன.

பெருஞ்சோற்று நிலை என்ற தொடர் காணப்படுகிறது. சிறு சோற்றுநிலை இருந்திருக்கக் கூடும். இல்லங்களில் உள்ளவர் சேர்ந்து உண்ணுவது சிறுசோற்று நிலையாகவும், போர்க்குச் சென்று வந்த பிறகும், போர்க்குச் செல்வதற்கு, முன்னரும் அரசன் வீரர்களுக்குக் கொடுக்கும் உணவு பெருஞ்சோற்று நிலையாகவும் இருந்திருக்கலாம். மேலும் அரசன் பிறந்தநாள்விழா, திருமணநிகழ்ச்சியில் அளிக்கப்படும் உணவு, இன்னும் முக்கிய நிகழ்ச்சிகளில் பலர் சேர்ந்து உண்ணும் நிலைக்குக் கூட இப்பெயர் இருந்திருக்கலாம்.

இதுகாறும் பார்த்தபோது சங்ககால உணவுமுறையும் தொல்காப்பியர் காட்டும் உணவும் பெரிதும் வேறுபாடு உடையதில்லை என்று புலனாகிறது. பக்க எல்லை கருதி பெரிய அளவில் சான்றுகள் தர இயலவில்லை என்று கூறுவதற்கும் கடப்பாடுடையேன்.

@ஐந்தாம் தமிழ் சங்கம்


அழகு தமிழ்நாடு! அருணை நகரம்!

Posted: 23 Dec 2014 01:36 AM PST

அழகு தமிழ்நாடு! அருணை நகரம்!


இன்று விவசாயிகள் தினம்! உழவர்களை வாழ்த்துவோம்! வணங்குவோம்!!

Posted: 22 Dec 2014 09:59 PM PST

இன்று விவசாயிகள்
தினம்!

உழவர்களை வாழ்த்துவோம்!
வணங்குவோம்!!


Posted: 22 Dec 2014 09:48 PM PST


பிள்ளைகள் தன் கைபிடித்து நடப்பதை ரசிப்பவள் அம்மா... கையை எடுத்து விட்டு பிள்ளைக...

Posted: 22 Dec 2014 09:34 PM PST

பிள்ளைகள் தன்
கைபிடித்து நடப்பதை ரசிப்பவள்
அம்மா...

கையை எடுத்து விட்டு பிள்ளைகளை தனித்து நடக்கவிட்டு அந்த
தைரியத்தை ரசிப்பவர் தான்
அப்பா!!.

@காளிமுத்து


0 comments:

Post a Comment