Monday, 24 November 2014

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


பனி இரவில் ஜப்பான்

Posted: 24 Nov 2014 09:50 AM PST

பனி இரவில் ஜப்பான்


:) Relaxplzz

Posted: 24 Nov 2014 09:48 AM PST

:) Relaxplzz

Posted: 24 Nov 2014 09:44 AM PST

இந்த பசுமையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (Y)

Posted: 24 Nov 2014 09:38 AM PST

இந்த பசுமையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (Y)


(y) Relaxplzz

Posted: 24 Nov 2014 09:30 AM PST

குழந்தைக்கு சோறூட்டும் தாயைப்போல, விரைவாகவும், புதிது புதிதாகவும் திரைக்கதை, வசன...

Posted: 24 Nov 2014 09:27 AM PST

குழந்தைக்கு சோறூட்டும் தாயைப்போல, விரைவாகவும், புதிது புதிதாகவும் திரைக்கதை, வசனம் எழுதுவோர் யாரும் இல்லை..


ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 1

இந்த அருமையான ஓவியத்தை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 24 Nov 2014 09:25 AM PST

இந்த அருமையான ஓவியத்தை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


பா.ஜ.க வில் மிஸ்டுகால் மூலம் 1 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பு - செய்தி 1 நடிகை ....

Posted: 24 Nov 2014 09:15 AM PST

பா.ஜ.க வில் மிஸ்டுகால் மூலம் 1 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பு - செய்தி 1

நடிகை ..லக்ஷ்மி ராய் ..பேஸ்புக் மூலம் 3,108,764 உறுப்பினர்கள் சேர்ப்பு - செய்தி 2

:P :P

- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்

ATM ல 5 தடவைக்கு மேல யூஸ் பண்ணுனா 20 ருபாய் சார்ஜாம்.. அதனால நாம என்ன பண்ணனும்.....

Posted: 24 Nov 2014 09:10 AM PST

ATM ல 5 தடவைக்கு மேல யூஸ் பண்ணுனா 20 ருபாய் சார்ஜாம்.. அதனால நாம என்ன பண்ணனும்.. எல்லாருமே சிரமம் பார்க்காம ஒரு 5-6 தடவை.. ஒவ்வொருத்தரும்.. பேங்குக்கு போய் வெறும் 100- 100 ருபாயா Withdraw பண்ணனும்..!!

இப்படியே ஒவ்வொரு 100 ருபாய்க்கும் பேங்க்ல கூட்டம் கூடணும்.. பேங்க்ல வேலை செய்யுறவங்க காண்டாகி அவங்களே போராட்டம் பண்ணனும்.. அந்த லெவலுக்கு போகணும்..

அப்பதான் இந்த சட்டம் மாறும்.. நம்ம சவுகரியத்துக்கு தான் ATM மிஷின் வச்சிருக்காங்க.. ATM ல பணம் எடுக்க கூடாதுன்னா சம்பளத்தை Cash ஆ குடுக்க சொல்லுங்க..

## இந்த விஷயத்தை நாம சீரியஸா எடுத்துக்கலேன்னா.. நம்ம தலைல மிளகாய் அரைப்பது தொடரும்..!!

முடிஞ்சா நீங்களும் பார்வேர்ட் பண்ணுங்க..!!!

***SHARE *SHARE *SHARE ***

Relaxplzz


கற்றுக்கொள்ள பிறருக்கு தெரிந்ததை சொல்லிக் கொடு... பெற்றுக்கொள்ள பிறருக்கு முடிந்...

Posted: 24 Nov 2014 09:00 AM PST

கற்றுக்கொள்ள பிறருக்கு
தெரிந்ததை சொல்லிக் கொடு...
பெற்றுக்கொள்ள பிறருக்கு
முடிந்ததை அள்ளிக் கொடு...!


வாழ்வின் மொழி...

:) Relaxplzz

Posted: 24 Nov 2014 08:55 AM PST

உன் போக்கில் போ உன் வழியில் யோசி நினைத்ததை பேசு நீ விரும்புவதை செய் அப்புறம் உலக...

Posted: 24 Nov 2014 08:50 AM PST

உன் போக்கில் போ
உன் வழியில் யோசி
நினைத்ததை பேசு
நீ விரும்புவதை செய்
அப்புறம் உலகம் சொல்லும் ...
*
*
*
*
*
*
*
*
*
*
*
தறுதலை யார் பேச்சையும் கேட்காது

:P :P

Relaxplzz

இது மாதிரி விளையாடி அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 24 Nov 2014 08:40 AM PST

இது மாதிரி விளையாடி அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 24 Nov 2014 08:30 AM PST

உண்மை

Posted: 24 Nov 2014 08:20 AM PST

உண்மை


”பழுத்த காதல்” வயதான பெரியவர் ஒருவர் காலை 8.30 மணிக்கு என் மருத்துவமனைக்கு வந்த...

Posted: 24 Nov 2014 08:10 AM PST

"பழுத்த காதல்"

வயதான பெரியவர் ஒருவர் காலை 8.30 மணிக்கு என் மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவர் மணி பார்ப்பதும் பிறகு அவர் கையில் இருக்கும் டோக்கனையும் அடிக்கடி பார்த்து கொண்டே இருந்தார்.

நோயாளிகள் ஒவ்வொருவராக பார்த்தபின் அவர் டோக்கன் எடுத்து கொண்டு உள்ளே வந்தார்.என்ன பெரியவரே ஏதாவது அவசர வேலை இருக்கா அடிக்கடி மணி பார்த்துகிட்டே இருக்கீங்க என்றேன்.ஆமாம் டாக்டர் என் மனைவிக்கு நான் போய் தான் சாப்பாடு குடுக்கனும் என்றார்.

ஏன் அவங்களுக்கு உடம்பு சுகம் இல்லையா என்று கேட்டேன்.ஆமாம் டாக்டர் கடந்த மூன்று வருடமா அவளுக்கு நியாபக மறதி வந்து விட்டது.என்னையே கடந்த மூன்று வருடமா அவளுக்கு யார் என்று தெரிவதில்லை என்றார்.

கடந்த மூன்று வருடமா உங்களை யாருன்னே தெரியாமலே அவங்களுக்கு நீங்க தான் சாப்பாடு கொடுக்கறீங்களா...என்று கேட்டேன்.

நியாபக மறதி நோய் அவளுக்கு தான் டாக்டர்.

"என்னை யார் என்று அவளுக்குத்தான் தெரியாது, ஆனால் எனக்கு அவள் யார் என்ன உறவு என்பது நன்றாக தெரியும் என்றார்."

அவர் சொன்ன வார்த்தை என் கண்களை கலங்க செய்து விட்டது.இது தான் உன்மையன பாசம் .சீக்கிரம் அவருக்கு சிகிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தேன்.

"காலம் கடந்தாலும் காதல் அழிவதில்லை."

- Ilayaraja Dentist. @ Relaxplzz

படித்தபின் மனம்நெகிழ்ந்ததால், இங்கேபகிர்ந்துள்ளேன். முழுமையாகப்படியுங்கள். ஒரு...

Posted: 24 Nov 2014 08:00 AM PST

படித்தபின் மனம்நெகிழ்ந்ததால்,
இங்கேபகிர்ந்துள்ளேன்.

முழுமையாகப்படியுங்கள்.

ஒரு ரெண்டுமாசம் முன்னாடி இருக்கும்னு
நெனைக்கிறேன்.

ஞாயித்துக்கிழமை சாயந்திரம் விஜய்டிவி நீயா நானா
நிகழ்ச்சி போய்க்கிட்டுருந்தது.

அன்னைக்கு விவாதிக்கப்பட்ட தலைப்பு,

வாழ்க்கையில் முடிவுகள் எடுப்பதில்
மனதை உபயோகிப்பவர்கள்
Vs மூளையை உபயோகிப்பவர்கள்
அப்படின்னுட்டு.

மனதை உபயோகிப்பவர்கள்
என்ற தரப்பில் பேசியவர்கள்
உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களாம்.
அந்தநேரத்தில் அவர்களுக்கு எது சரியென்று படுகிறதோ
அதை செய்து விடுவார்களாம்.

நல்லது செய்ய போய் ஏமாந்து போன
அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள்.

மூளையை உபயோகிப்பவர்கள் என்ற
தரப்பில் பேசியவர்கள் எதையும் தீர்க்கமாக ஆய்ந்து
முடிவெடுப்பார்களாம்.

உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க
மாட்டார்களாம்.

ஒரு விஷயத்தில் இருக்கிற லாஜிக்கைத்
தவறாமல் பார்த்து ஆராய்ந்து
முடிவெடுப்பார்களாம்.

இரு தரப்பினருக்கும் இடையே விவாதம்
நடைபெற்று சூடு பற்றிக் கொண்டிருந்தது.

மனதை உபயோகிப்பவர்கள்
Vs மூளையை உபயோகிப்பவர்கள் என்ற
தலைப்பே தவறு என்று என்
தந்தையார் கூறினார்.

அதை பற்றிய விவாதம் இப்போது நமக்கு
வேண்டாம்.

மனதை உபயோகித்து முடிவெடுப்பதாகச்
சொல்லிய அணியினர் மூளையை உபயோகித்து
முடிவெடுப்பதாகச் சொல்லிய அணியினரைப்
பார்த்து "நீங்கள் ஒரு நெடுஞ்சாலையில்
உங்கள் காரில் அதிவேகமாகச் சென்று
கொண்டிருக்கிறீர்கள்,
அப்போது உங்கள் பாதையின்
குறுக்கே ஒரு மாடோ அல்லது ஒரு நாயோ
குறுக்கிடுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

வண்டியை அபாயமில்லாமல் நிறுத்துமளவுக்கு
உங்களிடம் நேரமில்லை. அப்போது நீங்கள் என்ன
செய்வீர்கள்?" என்று கேட்டார்கள்.

அப்போது மூளை அணியினைச் சேர்ந்த
ஒரு பெண்மணி " நெடுஞ்சாலையில்
அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கும் போது என்னால்
வண்டியை நிறுத்த முடியாத போது அந்த
நாயின் மீது ஏற்றி விட்டுச் சென்று விடுவேன்.

அந்நேரத்தில் என்னுயிரையும் எந்நலனைப் பற்றி மட்டும்
தான் சிந்திப்பேன்" என்றார்.

உடனே மனது அணியில் இருந்தவர்கள் நாங்களாக
இருந்தால் எங்கள் உயிருக்கு ஆபத்து வந்தாலும் நாயைக்
காப்பாற்றவே கடைசி வரை முயல்வோம் என்றனர்.

அதன் பின்னர் மனது அணியில் இருந்தவர்கள்
"நாயோ மாடோ சாலையைக் கடப்பதாக
நினைக்க வேண்டாம். நீங்கள் பெற்ற உங்களுடைய
குழந்தை நெடுஞ்சாலையில் அவசரமாகக்
குறுக்கே வந்து விடுகிறது, நீங்கள்
வேகமாக வண்டியை ஓட்டிக் கொண்டு வந்து
விடுகிறீர்கள், இப்போது என்ன செய்வீர்கள்"
என்று கேட்டனர்.

அதற்கு மூளை அணியில் முன்னர் பதில் சொன்ன
அதே பெண் சொன்னார்.

"நாயாக இருந்தாலும், மாடாக இருந்தாலும்,
நான் பெற்ற என் குழந்தையாக இருந்தாலும்
எனக்கு ஆபத்து ஏற்படுகிறது என்ற சூழ்நிலை ஏற்படும்
போது நான் நிற்காமல், குறுக்கே வருபவர்கள்
மீது ஏற்றிக் கொண்டு சென்று கொண்டே இருப்பேன்"
என்றார்.

அது வரை அவர் பேசியது ஒரு மாற்று
கருத்து என்ற அளவில் ஓரளவு ஏற்றுக்
கொள்ளும்படியானது என்று வைத்துக் கொண்டாலும் அதற்குப் பின் அவர்
சொல்லியது தான் என்னை மிகுந்த
அதிர்ச்சியும் வேதனையும் கொள்ளச் செய்தது.

"குழந்தை வேண்டுமானால் இன்னொன்று பெற்றுக்
கொள்ளலாம். நம்முயிருக்கே ஆபத்து
எனும் போது இவ்வாறு செய்வதில்
தவறொன்றுமில்லை" என்றார்.

இதை கேட்டதும் எனக்கு ரத்தம் கொதிக்கத்
தொடங்கியது. அவர் கடைசியில் சொல்லிய
கருத்து மிகவும் ஆபாசமானது என்பது என்
எண்ணம்.

ஆணும் பெண்ணும் இணைந்து துய்க்கும்
இன்பத்தின் உபரி (by-product) தான் குழந்தை என்ற
ஒரு எண்ணம் கொண்டவரால் மட்டும்
தான் இவ்வாறு பேச முடியும் என்பது என்
கருத்து.

ஒரு வேளை உண்மையில் அத்தகைய சூழ்நிலையில்
அப்பெண் அவ்வாறு செய்யக் கூடியவராக இல்லாமலும்
இருக்கலாம். நாம் சொல்லிய கருத்தில்
இருந்து எந்நிலையிலும் பின்வாங்கக்
கூடாது என்ற ஒரு வைராக்கியத்திலும் அவ்வாறு பேசி
இருக்கலாம்.

அப்பெண்ணே தான் பேசியதைப் பின்னாளில்
பார்த்தால் கண்டிப்பாக வருந்தலாம்.

கேவலம் ஒரு விவாதத்தில் ஜெயிப்பதற்காக என்ன
வேண்டுமானாலும் பேசலாமா?
இவ்வாறு பேசி ஜெயித்து யாருக்கு எதை நிரூபிக்கப்
போகிறோம் என ஒரு கணம் மனதை உபயோகித்து
வேண்டாம், மூளையை உபயோகித்தாவது ஒரு
முடிவுக்கு வந்திருக்கலாம்
இல்லையா?

இதே போல் தான் நீயா நானா நிகழ்ச்சியில்
நான் பார்த்த வேறு சில பாகங்களில் பங்கு பெற்ற
கணவன்-மனைவியர் சிலர் பேசிய பேச்சுக்களும்.

எதிர் அணியில் இருந்த கணவனைப் பற்றி "என்
கணவர் இந்த மாதிரி" என்று கணவரின் சில
குறைகளைப் பற்றி மனைவியும், "என்
மனைவி இந்த மாதிரி" என்று மனைவியின் சில
குறைகளைப் பற்றி கணவரும் கூறுவதைப்
பார்த்திருக்கிறேன்.

ரெண்டு பேர் தனியாக உட்கார்ந்து பேசிக்
கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தை ஒரு
அரங்கத்தில் எல்லோர் முன்னிலையிலும்
கூறுவதை என்னால் ஏனோ sportiveஆக எடுத்துக்
கொள்ள முடியவில்லை.

தன்னுடைய வாழ்க்கைத்துணை
தன்னுடைய குறைகளைப் பற்றி ஒரு
பொதுவிடத்தில் வேற்று மனிதர்களிடம்
கூறுவதைப் பார்த்து "நீ என்னிடம் இதை முன்பே
சொல்லியிருக்கலாமே" என்ற பார்வை பார்த்த
ஒரு சிலரையும் அந்நிகழ்ச்சியில் கண்டிருக்கிறேன்.

தன்னுடைய வாழ்க்கைத் துணையின்
குறைகளைப்பற்றி வேற்று மனிதர்களிடம்
பகிர்ந்து கொண்டுவிட்டு நாளை தன் கணவரையோ
மனைவியையோ எவ்வாறு கண்ணோடு கண்
வைத்து நேருக்கு நேராகப் பார்த்து பேசுவார்கள்
என்பதும் எனக்கு இன்னும் விளங்கவில்லை.

விஜய் டிவிக்கு அது வியாபாரம்
, சம்பந்தப்பட்டவர்களுக்கு அது
வாழ்க்கையில்லையா?

ஏன் அதை உணர மறுக்கிறார்கள்?

நான்கு நாட்களுக்கு முன் அனிமல் ப்ளானெட் (Animal
Planet) அலைவரிசையில் ஒரு நிகழ்ச்சியைக்
கண்டேன். 'Heart of a Lioness' என்பது அந்நிகழ்ச்சியின்
தலைப்பு.

சபா டக்ளஸ் ஹாமில்டன்(Saba Douglas
Hamilton) என்பவர் வனவிலங்குகளைப்
பற்றி ஆய்வு மேற்கொள்பவரும்,
தொலைக்காட்சித் தொகுப்பாளரும் ஆவார்.

கிழக்காப்பிரிக்க நாடானகீனியாவில்
பிறந்து வளர்ந்தவரான அவர் இங்கிலாந்தை மூலமாகக்
கொண்டவர்.

சம்புரு வனவிலங்கு சரணாலயத்தில் (Samburu
Wildlife Reserve) தாங்கள் கண்ட ஒரு விநோதமான
காட்சியைப் பற்றி சபாவிற்குத்
தெரியப் படுத்துகின்றனர் வனவிலங்கு
பாதுகாவலர்கள்.

ஒரிக்ஸ் (Oryx) எனும் வகை மானின் குட்டி ஒன்றை ஒரு பெண் சிங்கம் வளர்ப்பதைப் பற்றிய செய்தி தான் அது.

அதை நம்ப முடியாமல் தானே கண்டறிவதற்காக
சபா காட்டுக்குள் பயணித்து ஒரு ஆவணப்
படத்தை எடுத்திருக்கிறார்
.
அப்படம் தான் "Heart of a Lioness". முதன் முதலில்
மான் குட்டியின் பின்னே அப்பெண் சிங்கம்
மெல்ல நடந்து செல்வதைப் பார்த்து நான் அடைந்த
ஆச்சரியத்திற்கு அளவே இல்லை.

ஆப்பிரிக்க காடுகளில் மிகுந்த
அனுபவம் கொண்ட சபாவும் தான் இது போல
ஒரு நிகழ்வை அது வரை கண்டதே இல்லை என்கிறார்.

அச்சிங்கத்திற்கு அங்கிருந்த மக்கள் 'Kamunyak'
என்று பெயர் சூட்டியிருந்தனர்.

அப்பெயருக்கு அவர்களுடைய மொழியில்
'ஆசிர்வதிக்கப்பட்டவள் - Blessed One'
என்று பொருளாம்.

தன்னுடைய உணவாகக் கூடிய ஒரு பிராணியை கமுன்யாக், பேணி வளர்ப்பதற்கான
காரணத்தை அறிய முற்படுகிறார் சபா.

சிங்கங்களைப் பற்றிய ஆய்வாளர் ஒருவரின்
மூலம் கமுன்யாக்கின் இவ்விசித்திர
குணத்திற்கான காரணம் ஒரளவுக்குத் தெரிய
வருகிறது.

அது சிங்கங்கள் எப்போதும் ஒரு சமூகமாக(Pride)
வாழ்வன. மற்ற கொடிய விலங்குகளைப் போல்
அல்லாமல் சிங்கங்கள் ஆண் சிங்கம், சில பெண்
சிங்கங்கள், அதன் குட்டிகள் என்று எப்போதும்
ஒரு கூட்டமாகவே வாழும் தன்மையுடையவை.

காடுகளில் மனிதர்களின் குறுக்கீட்டால், காடுகள்
சுருங்கி அதன் காரணமாக சிங்கங்களின்
வாழும் முறைமையில் பல மாற்றங்கள்
ஏற்பட்டுவிடுகின்றன.

கிழக்கு ஆப்பிரிக்க பழங்குடியினரான மசாய்
இன மக்கள் சிங்கங்களைத் தங்களுடைய மிகப்பெரும்
எதிரிகளாகக் கருதுகின்றனர்.

அத்தோடு சிங்கங்களை வேட்டையாடுதல் வீரத்தின்
அடையாளமாகக் கருதப்படுகிறது.
இவ்வாறு பல்வேறு காரணங்களினால்,
தன்னுடைய இயல்பான குடும்ப
நிலை பாதிக்கப்பட்டு தன் சொந்தங்களை எல்லாம்
இழந்து ஒரு சிங்கம் அனாதையாவதற்கு
சாத்தியக்கூறுகள் உள்ளனவாம்.

அவ்வாறு கமுன்யாக் எனும் அச்சிங்கம்
தனிமை படுத்தப்பட்டிருக்கலாம்.
அதனுடைய குட்டிகளை அது பறிகொடுத்திருக்கலாம்.

அதன் காரணமாக, தன்குட்டியை ஒத்த மான்
குட்டியைத் தன்னுடைய குட்டியாகப்
பாவித்து அன்பாய் நடத்துகிறது. மான்
குட்டி சிங்கத்திடம் வந்து சேர்ந்த
நாளிலிருந்து இமை பொழுதும்அக்குட்டியை விட்டுப்
பிரியாமல் தன்கண்காணிப்பிலேயே
வைத்துக் கொண்டதாம்
கமுன்யாக்.

கிட்டத்தட்ட 15 நாட்கள் இரவும் பகலும்
சிங்கத்தையும், மான் குட்டியையும் பின்
தொடர்கிறார் சபா.

அக்காலக் கட்டத்தில் கமுன்யாக் வேட்டையாடச்
செல்லவில்லையாம். ஒன்றும் சாப்பிடவும்
இல்லையாம். மான் குட்டியைக் கொன்று தின்று வரும்
மற்ற விலங்குகளையும் கமுன்யாக்
விரட்டி விடுமாம்.

தன் குட்டியைத் தன்னொடு கொண்டு
செல்ல வந்த தாய் மானையும் கமுன்யாக்
விரட்டி விட்டதாம். பதினைந்து நாட்கள்
கண்ணும் கருத்துமாக மான் குட்டியைத் தன்
கண்காணிப்பிலேயே வைத்துக் கொண்டது அச்சிங்கம்.

மான்குட்டியும் சரியாக உணவு உட்கொள்ளவில்லை என்ற
போதிலும், அவ்வப்போது புல் மேயும்.
சிங்கங்களை எதிரிகளாகக் கருதும் மசாய் இன
மக்களாலேயே, இச்சிங்கம் கடவுளால்
அனுப்பி வைக்கப்பட்ட தூதர் என்ற ரீதியில்
போற்றப் பெற்றது.

சிங்கம் ஆகாரம் ஏதும் உட்கொள்ளாமல்
வாடுவதைக் கண்ட வனவிலங்கு சரணாலயத்தின் வார்டனும் சிங்கத்துக்கு மாமிசம் தரச்
செய்கிறார்.

கமுன்யாக் அதையும் சாப்பிட மறுக்கிறது.
பதினாறாம் நாள், கமுன்யாக்கும் அம்மான்
குட்டியும் ஒரு குட்டையில் சிறிது நீரருந்துகின்றன.
அதன் பின்னர் சிங்கம் அயர்ந்து கொஞ்சம்
இளைப்பாறுகிறது.

மான்குட்டி சிங்கத்தின் பார்வையிலிருந்து சற்றே
விலகிச் செல்லுகிறது. கமுன்யாக்கும் அதை பின்
தொடராமல் அமர்ந்திருக்கிறது.

அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு பெரிய ஆண்
சிங்கம் மான்குட்டியைத் தூக்கிக்
கொண்டு சென்று விடுகிறது.

இதை நேரடியாகப் படம் பிடித்துக் கொண்டிருந்த
சபா நாதழுதழுக்கப் பேசியதை என்னால்
இன்னும் மறக்க முடியவில்லை.

அதன் பின்னர் நடந்தது எந்தக்
கல்லையும் கரையச் செய்வது.

தான் பெற்ற தன் குட்டியைப் பறிகொடுத்தது போல
கமுன்யாக் செய்வதறியாது திகைக்கிறது. ஆண்
சிங்கம் மான் குட்டியைத் தூக்கிச் சென்ற
இடத்திற்கு கமுன்யாக் பின்
தொடர்ந்து செல்கிறது. ஆனால்
வலிமை பொருந்திய பெரிய சிங்கத்தை எதிர்த்து போராடும்
சக்தியில்லாமல் தான் பதினைந்து நாட்களாகப்
பார்த்து பார்த்து வளர்த்த மான்குட்டி
கொல்லப்படுவதை பார்க்கிறது.

கமுன்யாக் என்ற அந்த சிங்கம்
அந்நேரத்தில் எப்படி நடந்து கொண்டது
என்பதை அந்நிகழ்ச்சியைப் பார்த்தால் மட்டுமே உணர
முடியும்.

இது எல்லாம் நடந்தது 2001 ஆம்
ஆண்டு ஜனவரி மாதத்தில்.

அதன் பின்னர் கமுன்யாக் மேலும் 5 மான்
குட்டிகளை வளர்த்ததாம். ஆனால் முதல்
மான்குட்டியைப் போல மற்ற குட்டிகளால் நீண்ட
நாட்கள் தாக்குப் பிடிக்க முடியவில்லையாம்.

2004ஆம் ஆண்டுக்குப் பின்னர்
கமுன்யாக்கை யாரும் பார்க்கவில்லையாம்.

ஆனால் அச்சிங்கத்திற்கு ஒரு தேவதைக்குரிய
மதிப்பினையும் மரியாதையையும் தந்திருக்கின்றனர்
அங்குள்ள மக்கள்.

இந்நிகழ்ச்சிக்குத் தொடர்புடைய சுட்டிகள்
சில:

அனிமல் ப்ளானெட் காணொளிகள்

http://www.lewa.org/oryx-lioness.php

http://www.douglas-hamilton.com/Site/HolFAQ.html

மான்குட்டியை வளர்க்கும் சிங்கத்தினைப் பற்றிய
நிகழ்ச்சியினை அனிமல் ப்ளானெட்டில் கண்டதும்
எனக்கு விஜய் டிவியில் நான் இரு மாதங்களுக்கு
முன்னர் கண்டிருந்த நீயா நானா நிகழ்ச்சியில்
அப்பெண் பேசிய பேச்சு நினைவுக்கு வந்தது.

தன்னுடைய உணவாகக் கூடிய ஒரு உயிரிடம்
அன்பு செலுத்தும் ஒரு கொடிய
விலங்கையும், வறட்டு வாதத்துக்காகத்
தான் பெற்ற பிள்ளையானாலும் பலி கொடுப்பதைப்
பற்றி சிறிதும் கூச்சமின்றி பேசும் பெண்ணையும் பார்த்தது
உண்மையிலேயே விந்தையிலும் விந்தை தான்.

அனிமல் ப்ளானெட்டில் கண்டநிகழ்ச்சியைப்
பற்றி கூகிளில் தேடிக் கொண்டிருந்த போது,
அந்நிகழ்ச்சியை ஏற்கனவே பார்த்திருந்தவர்கள் சிலர்,

விவிலியத்தில்(Bible) இருந்து சில வரிகளை மேற்கோள்
காட்டியிருந்தனர்.

அது -
"The wolf also shall dwell with the lamb, The leopard shall lie down
with the young goat, The calf and the young lion and the
fatling together; And a little child shall lead them."
Isaiah 11:6

ஓநாயோடு செம்மறி ஆட்டுக்குட்டியும், சிறுத்தையோடு ஆடும், சிங்கத்தோடு கன்றுக்குட்டியும் அன்போடு தன்
இயல்பை மாற்றிக் கொண்டு உறவாடும் காலத்தில்,
இவ்விலங்குகளை விட உயர்ந்த மதி கொண்ட மனிதன் தன்னுடைய இயல்பினை மறந்து விலங்கினின்றும்
தாழ்ந்து கொண்டே செல்கிறான் என்பதறிந்து வேதனையே
மிஞ்சுகிறது.

இது, ப்ளாக்கரில், கைப்புள்ள என்பவரது ப்ளாக்கில் படித்தது. 30-9-2009தேதியிட்டது.

via ஃபீனிக்ஸ் பாலா

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 5

அழகை குறித்து எந்த அக்கறையும் இல்லாததாலேயே குழந்தைகள் அழகாக இருக்கிறார்கள்..

Posted: 24 Nov 2014 07:50 AM PST

அழகை குறித்து எந்த அக்கறையும் இல்லாததாலேயே குழந்தைகள் அழகாக இருக்கிறார்கள்..


இரவு நேரத்தில் பரோட்டா சிக்கன் சாப்பிட பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 24 Nov 2014 07:40 AM PST

இரவு நேரத்தில் பரோட்டா சிக்கன் சாப்பிட பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 24 Nov 2014 07:30 AM PST

பஞ்சு மெத்தையில் வராத தூக்கம் இந்த கீற்று பாயில் சுகமாக வரும்...

Posted: 24 Nov 2014 07:20 AM PST

பஞ்சு மெத்தையில் வராத தூக்கம் இந்த கீற்று பாயில் சுகமாக வரும்...


துறவி ஒருவர் மரத்தின் அடியில் அமர்ந்து தியானத்தில் இருந்தார். ஒரு பெண், தினமும்...

Posted: 24 Nov 2014 07:10 AM PST

துறவி ஒருவர் மரத்தின் அடியில் அமர்ந்து தியானத்தில் இருந்தார். ஒரு பெண், தினமும் அருகில் இருந்த பாதையில் அவரை கடந்து செல்வாள்.
இது அவரருக்கு சற்று தொந்தரவாக இருந்தது.

மறுநாள், அவர் அந்தப் பெண்ணை பார்க்காமல் இருக்க இரண்டு கண்களையும் துணியால் கட்டிக் கொண்டு தியானத்தில் அமர்ந்தார்.
அந்தப் பெண் மீண்டும் அவரை கடந்து சென்ற போது அவளின் கொலுசு சத்தம் அவரருக்கு தொந்தரவாக இருந்தது.

மறுநாள், அவர் இரண்டு காதுகளையும் சேர்த்து துணியால் கட்டிக்கொண்டு தியானத்தில் அமர்ந்தார்.
அந்தப் பெண் மீண்டும் அவரை கடந்து சென்ற போது அவள் வைத்து இருந்த மல்லிகை பூவின் வாசம் அவரருக்கு தொந்தரவாக இருந்தது.

மறுநாள், அவர் கண், காது மற்றும் மூக்கு என்று அனைத்தையும் துணியால் கட்டிக்கொண்டு தியானத்தில் அமர்ந்தார்.
அந்தப் பெண் வரும் நேரம் வந்தது, ஆனால்அன்று அப்பெண் வரவில்லை. இவருக்கு சந்தேகம் வந்தது.

மூக்கின் மேல் கட்டியிருந்த துணியை சற்று கழற்றி விட்டு நுகர்ந்து பார்த்தார்.
மல்லிகை பூ வாசம் வரவில்லை,

பிறகு,
காதுகளை கட்டியிருந்த துணியை எடுத்து விட்டு உன்னிப்பாய் கவனித்தார்.
கொலுசு சத்தமும் கேக்கவில்லை.

உடனே,
கண்களை கட்டியிருந்த துணியையும் எடுத்து விட்டு பார்த்தார்.
அந்த பெண்ணும் வரவில்லை.

ஏன் அந்த பெண் இன்று வரவில்லை..?
(அப்படியே யோசனையில் மூழ்கினார்)

சற்று நேரம் கழித்து தான் அவருக்கே புரிந்தது.
மனதை கட்டுப் படுத்தாவிட்டால் எங்கு இருந்தாலும் என்ன செய்தாலும் பயனில்லை என்று...!

Relaxplzz

வாழ்க்கை இன்பமும் துன்பமும் இரு சக்கரம் சமமாய் சுழன்றால் பயணம் இனிதாய் வெற்றிய...

Posted: 24 Nov 2014 07:01 AM PST

வாழ்க்கை

இன்பமும் துன்பமும் இரு சக்கரம்
சமமாய் சுழன்றால் பயணம் இனிதாய்

வெற்றியும் தோல்வியும்
சேர்ந்தே ரசித்தால் போட்டி எளிதாய்

நட்பாய் எதிரியாய்
அன்பாய் எதிர் கொண்டால் அழகிய உறவாய்

சுடும் சூரியனா குளிர் நிலவா
ரசிக்க பழகினால் வாழ்கை அழகிய கவியாய்

நிமிர்ந்து நடை போடு வானம்
உன் வசம் நில்லாமலே ஓடு பூமி உயரம் தாண்டு

முயன்றால் முடியாததில்லை
முயன்று கொண்டே இரு உன்னால்
முடிந்ததை தவிர வேறொன்றுமே இல்லை

ஏன் என்ற கேள்வி தோல்வி தரும்
எப்படி என்று கேட்டுப்பார் வெற்றி தரும்

தொட்டு விடும் தூரம் மரணம் உண்டென்றால்
எட்டி தொடும் தூரம் தான் வாழ்கையும் உண்டு

வாழ்ந்து கொண்டே மரிப்பவனை விட
மரித்தாலும் வாழ்பவனே உலகம் நினைவில் வைக்கும்

நினைத்து நடக்கவில்லையென்பதை விட
நடந்ததை நான் நினைக்கவில்லை என்றால்
உன் மனம் உன் வசம்.

Relaxplzz


"சிந்தனைகள்"

இது மாதிரி பசங்க செல்பி போஸ் குடுத்தா எப்படி இருக்கும், கொஞ்சம் கற்பனை பண்ணி பார...

Posted: 24 Nov 2014 06:51 AM PST

இது மாதிரி பசங்க செல்பி போஸ் குடுத்தா எப்படி இருக்கும், கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்க... :P :P


சும்மா... சும்மா... 4

மாம்பழம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 24 Nov 2014 06:45 AM PST

மாம்பழம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


ராஜ்கிரண் தன் குடும்பத்தினருடன்.. அரிய புகைப்படம்..

Posted: 24 Nov 2014 06:40 AM PST

ராஜ்கிரண் தன் குடும்பத்தினருடன்.. அரிய புகைப்படம்..


"அரிய புகைப்படங்கள்"

:) Relaxplzz

Posted: 24 Nov 2014 06:30 AM PST

Why boys is God.. :D 1.சொத்தெல்லாம் மனைவி பேரில் வாங்கிவிட்டு LIC மட்டும் தன் ப...

Posted: 24 Nov 2014 06:19 AM PST

Why boys is God.. :D

1.சொத்தெல்லாம் மனைவி பேரில் வாங்கிவிட்டு LIC மட்டும் தன் பெயரில் போட்டுக்கொள்வதால்..

2.ஆயாவா , ஆண்ட்டியா ன்னெல்லாம் பார்க்காம எத்தின பேரு வந்து லவ்வ சொன்னாலும் ஏத்துக்குவோம்.. :P

3.பஸ்ல ஆண்கள் சீட்டுல பொண்ணுக உக்காந்திருந்தா கண்டக்டர்கிட்ட போய் கம்ப்ளைன்ட் தரமாட்டோம்..

4.மனைவி எம்புட்டு அடிச்சாலும் எந்த ஆணும் வெளியே காட்டிக்கிறதில்ல.. :O

5.கைக்குழந்தையுடன் ஏறும் பெண்களுக்கு இடம் கொடுப்போம்.

6.எல்லா ஆணின் வெற்றிக்கு பின் ஒரு பெண் இருக்கிறாளோ தெரியாது ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னும் ஒரு ஆண் இருக்கிறார்.. :)

7.லிப்ட் கேக்கற பொன்னுகள திட்டினது கெடையாது..

8.எந்த‌ அப்ப‌னும் ம‌க‌னைத் த‌னியாக‌ அழைத்துக் கேட்ப‌தில்லை ''ம‌ரும‌க‌ள் உன்னை ந‌ல்ல‌ப‌டியா பாத்துக்கிறாளாப்பா..?'' :D

9.படித்து முடித்தவுடன் வெளிநாட்டு வாழ் பெண்களை தேடுவதில்லை !

10.சாப்ட்டு இருக்கும் போது, அடுத்த தோசைக்கு சீரியல்க்கு இடையே காத்திருப்போம். :(

11.பஸ்ல எங்க பக்கத்துல வந்து உட்காந்தா முறைக்க மாட்டோம்..

12.மாமனார் கொடுமையால செத்த மருமகனே கிடையாது. ;)

13.தன் மொபைலுக்கு தானே ரீச்சார்ஜ் செய்துகொள்வதால் :D

14.எல்லா கெட்ட பழக்கத்தையும் ஒருத்திகாக நிப்பாட்டறது ..

15.அமேசான் காடு வரை போய், பெண்களுக்கு முடிவளர மூலிகை எடுத்து வந்து தருவதால்.. :P :P

களவாணி பய

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 2

பாம்புக்கடி வைத்திய முறைகள் ! கட்டுரை சற்று பெரியதாக இருந்தாலும், இது தேவையான ஒ...

Posted: 24 Nov 2014 05:58 AM PST

பாம்புக்கடி வைத்திய முறைகள் !

கட்டுரை சற்று பெரியதாக இருந்தாலும், இது தேவையான ஒன்றுதான், படித்த பின் மட்ட்ரவருக்கும் தெரிய படுத்துங்கள்.

நம்மிடையே பல காலங்களாக இருந்து வந்த நாட்டுப்புற வைத்தியர்கள் (சித்த வைத்தியர்கள்) இப்போது குறைந்து போனதால் நாட்டு மருந்துகளை பற்றிய விசயங்களும் மறைந்து வருகின்றன. முன்பெல்லாம் பாம்பு கடியை பற்றி அவ்வளவாக பயப்பட மாட்டார்கள். கடித்த பாம்பு எதுவென்று தெரிந்து கொண்டால் எளிதாக வைத்தியம் பார்த்து பிழைத்துக்கொள்ளலாம் என்பதை உறுதியாக நம்புவார்கள்.

பொதுவாக கிராமங்களில் வயல்வரப்புகளில் எலிகளை தேடி வரும் பாம்புகள் அங்கு வேலை செய்யும் விவசாயிகளை கடித்து விடுவதண்டு. என்ன கடித்தது என்றே தெரியாமல் ஏதோ கடித்து விட்டது என்ற எண்ணிக் கொண்டு மந்திரித்தால் சரியாகி விடும் என்று விட்டு விடுபவர்கள் தான் பெரும்பாலும் இறந்து போகிறார்கள். இன்றைக்கு அரசாங்கம் மக்களுக்கான பாம்பு கடி மருந்துகள் கூட பற்றாக்குறையில் இருக்குமளவுக்கு தான் அரசை நடத்துகிறது. நகரங்களில் நாய் கடித்தவர்களின் புள்ளி விவரம் இருக்கும் அளவுக்கு கூட இந்தியாவில் பாம்பு கடித்து இறப்பவர்களின் எண்ணிக்கை சரியாக இல்லை.

பாம்புகளில் ஏராளமான வகைகள் இருக்கின்றன. நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், ஊது சுருட்டை, வளனை, சாரை, தண்ணீர் பாம்பு( டிஸ்கவரி சேனலில் அவ்வப்போது பசிக்கு பியர் கிரில்ஸ் பிடித்து சாப்பிடுவது), கொம்பேறி மூக்கன், மலைப்பாம்பு, கருநாகம், சுண்டக்கருவினை, சாரை என்று பல வகை இருக்கின்றன.ஆனால் இவற்றில் மனிதனை கொல்லக்கூடிய அளவுக்கு விஷமுள்ளவை குறைவே. ஆனால் கடுமையான விஷமுள்ளவை என்று கருநாக வகை பாம்புகளின் கடி தான் ஆபத்தானவை. ஆனாலும் பாம்பு கடித்த அடுத்த நிமிடம் முதலுதவி கிடைத்து விட்டால் கடி பட்ட நபரை பிழைக்க வைத்து விடலாம் என்பது தான் அனுபவத்தில் கண்ட உண்மை.

இது தவிர கடிபட்ட நபர்கள் தன்னை கடித்தது என்ன பாம்பு என்று அடையாளத்தை சரியாக சொல்ல தெரிந்தால் அந்த நபருக்கு நச்சு முறிவு மருந்தை உடனடியாக தேர்வு செய்ய முடியும். பொதுவாக இப்படி அடையாளம் காண தெரியாமல் விடும் போது தரப்படும் தடுப்பு மருந்துகள் ஒருவரின் உயிரை பிழைக்க வைத்து விட்டாலும், கடி பட்ட இடத்தில் இருக்கும் தசை அணுக்கள் செயலற்று போய்விடுகின்றன.

எனவே பாம்பு கடித்து விட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். நோயாளி சுயநினைவுடன் இருக்கும் போதே பாம்பின் அடையாளத்தை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் இருக்கும் சில பாம்பு பிடிக்கும் குழு மக்களுக்கு பாம்புகள் கடித்தால் விஷம் ஏறுவதில்லை என்று சமீபத்தில் டிஸ்கவரி சேனலில் சொல்வதை பார்க்க முடிந்தது. காரணம், காலம் காலமாக இந்த இனத்து மக்கள் பாம்பு பிடிப்பதும், அவர்கள் பாம்பு கடிபடும் போது அது அவர்கள் உடலில் நாளாவட்டத்தில் பாம்பு விஷத்தை முறித்துக்கொள்ளும் அளவு வலிமை பெற்றிருப்பதும் தெரியவந்தது. ஆனால் சாதாரண நபர்கள் பாம்புகளிடம் கடி பட்டால் பதறிவிடுகிறார்கள்.

பாம்பு கடித்ததும் ஐயோ....பாம்பு கடித்து விட்டதே என்று அதிர்ச்சியடைகிறார்கள். இப்படி ஏற்படும் அதிர்ச்சியும் பயமும் தான் அந்த நபரை மரணத்தின் விளிம்புக்கு அழைத்து சென்று விடுகிறது. பாம்பு கடித்து விட்டால் பதறக்கூடாது. இது தான் மிக முக்கியமானது. கடித்த பாம்பு தப்பித்து விட்டாலும் அதன் தோற்றத்தை நினைவில் கொள்ள வேண்டும். அப்போது தான் மருத்துவர்கள் சரியான விஷ முறிவு மருந்தை தேர்வு செய்ய முடியும்.

பொதுவாக கடிபட்ட இடத்தில் பாம்பின் ஒரு பல் பதிந்திருந்தால் அது தோலை மட்டும் தான் பாதித்திருக்கிறது என்றும், இரண்டு பல்லும் பதிந்திருந்தால் அது சதையை பாதிக்கும் என்றும், மூன்று பல் பட்டால் அது எலும்பை பாதிக்கும் என்றும், நான்கு பல் பட்டால் மூளையை பாதிக்கும் என்றும் சொல்வார்கள். பொதுவாக பற்குறி அழுத்தமாக தெரிந்தாலோ, கடிபட்ட இடம் கூர்மையான தீக்கனலில் காட்டிய ஊசியை இறக்கியது போல் எரிச்சலாக இருந்தாலே கடியின் வேகம் அதிகம் என்று தெரிந்து கொள்ளலாம்.

இப்படி இருக்கும் நிலையில் கிராமப்புறங்களில் விரலி மஞ்சளை நெருப்பில் காட்டி அது தணலாக இருக்கும் போது இந்த மஞ்சளின் எரிந்து கொண்டிருக்கும் பகுதியை வைத்து கடிவாயில் அழுத்துவார்கள். இதனால் பாம்பின் நஞ்சு முறிந்து விடும் என்கிறார்கள் அனுபவ வைத்தியர்கள்.

மருத்துவர்கள் இல்லாத பல கிராமங்களில் இன்றும் இது நடைமுறையில் இருக்கிறது. இது தவிர பாம்பு கடி பட்ட நபர்களுக்கு வாழை மட்டையை திருகினால் வரும் சாற்றை எடுத்து குடிக்க கொடுப்பதுண்டு. இந்த வாழைப்பட்டை சாறு பாம்பின் விஷத்தை முறிக்கிறது என்பது கைகண்ட வைத்திய முறை.

நாகப்பாம்பு அல்லது கருநாகம் கடித்திருந்தால் கடித்த இடத்தில் ஒரு பல்லுக்கும் இன்னொரு பல்லுக்கும் ஒரு அங்குல இடைவெளி தென்படும்.

விரியன் பாம்பு கடித்திருந்தால் இரண்டிற்கும் மேற்பட்ட பற்குறிகள் காணப்படும்.

நல்ல பாம்பு கடித்தால் ரத்தம் வேகமாக உறையும். மற்ற பாம்புகள் கடித்தால் ரத்தம் உறையாமல் கடி இடத்திலிருந்து ரத்த ஒழுக்கு இருக்கும்.

பாம்பு கடிபட்டவருக்கு ஆமணக்கு இலைகளுடன், ஏழு மிளகை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து உள்ளுக்குள் கொடுத்தால் பாம்பின் நஞ்சு ஏறாது. மணிக்கு ஒரு தடவை இந்த மருந்தை கொடுத்து வரவேண்டும். இந்த பச்சிலை மருந்து வாந்தியை ஏற்படுத்தி நச்சை நீங்க செய்யும்.

பாம்பு கடித்த நபரை எக்காரணம் கொண்டும் தூங்க விடக்கூடாது. உப்பு, புளி, காரம், எண்ணெய் நீக்கிய வெறும் பச்சரிசியும், பாசிப்பயறும் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிட தரவேண்டும். பாம்பு கடி பட்டவர் மூர்ச்சையாகி விட்டால் தும்பை செடியை கசக்கி பிழிந்து சாறு எடுத்து அவரது மூக்கினுள் சிறிது விட வேண்டும். இதனால் மூர்ச்சை தெளிந்து விடும். இது தவிர அருகம் புல்லை வெண்ணெய் போல் அரைத்து கடிபட்ட இடத்தில் வைத்து கட்டினால் பாம்பின் நஞ்சு இறங்கி விடும். அருகம்புல்லின் வாசனை மூர்ச்சையை தெளிய வைக்கும்.

நஞ்சு இறங்கி கடிபட்டவர் ஒரளவு தெளிவான நிலையில் இருந்தால் அவருக்கு வேப்பிலையை வாயில் போட்டு மெல்ல சொல்ல வேண்டும். அப்போது கசப்பு தெரிந்தால் நஞ்சு வெளியாகி விட்டது என்று தெரிந்து கொள்ளலாம். இந்த நிலையில் தும்பை இலை, தும்பை பூ ஆகிய இரண்டையும இடித்து சாற்றை குடிக்க தரவேண்டும். இப்படியான நாட்டு வைத்திய முறையில் பாம்பு கடிபட்டவரை முதலுதவி செய்து காப்பாற்றி விடலாம்.

சில பாம்புகள் கடித்தால் அறிகுறிகள். . .
நல்ல பாம்பு கடித்தால், கடிபட்ட இடத்தில் வலி இருக்கும். சிலருக்கு வலி தெரியாது. பார்வை மங்கும். கண் இமை சுருங்கும். நாக்கு தடிக்கும். பேச்சு குளறும். வாயில் எச்சில் வடியும். மூச்சு திணறும். நினைவு குறையும்.

கட்டு விரியன் கடித்தால் இந்த அறிகுறியுடன் வயிற்று வலியும் இருக்கும். கண்ணாடி விரியன் கடித்தால் கடிபட்ட இடத்தில் வலி கடுமையாக இருக்கும். கடிபட்ட இடத்தில் வீக்கம், மூச்சுதிணறல், வாந்தி, சோர்வு, சிறுநீர், மலம் ஆகியவற்றுடன் ரத்தம் வரும்.

1. கடித்த இடம், மனிதன் கடித்தது போல் அனைத்து பற்களும் வரிசையாக பதிந்து காணப்படுகிறதா....???

இந்த அறிகுறி விஷப்பாம்பு கடி அல்ல...

2. கடித்த இடம், இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதித்து காணப்படுகிறதா....??? கடித்த இடம் சற்று தடித்து(வீங்கி)
காணப்படுகிறதா..?? கடுமையான வலி இருக்கிறதா..???

இந்த அறிகுறி விஷப்பாம்பு கடித்ததாகத்தான் இருக்கக்கூடும்...

முதலுதவி:-

1.இறுக்கி கட்டுப் போடவேண்டாம். இறுக்கி கட்டுப் போடுவதன் மூலம், சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்தப்பகுதி அழுகிபோகும். லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது.

2.காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும்.

3.பாம்பு கடிபட்டவர் பதற்றமடையகூடாது. அவர் பதற்றமடையும்போதும் ரத்தஓட்டம் அதிகரிக்கும்.

4.பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்க கூடாது. ஏனெனில் நாம் வேகமாக நடக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் நம் ரத்தத்தில் கலந்துள்ள விஷம் விரைவில் நம் உடல் முழுவதும் பரவி உயிரிழப்பை விரைவுபடுத்துகிறது

4.இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தைரியமூட்டவும். எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ, அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம்.

5.பாம்பு கொத்திய இடத்தை, இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.

6.பாம்பு கடித்துவிட்டால், பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை "அட்மிட்" செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.

7.இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால், பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம். ஏனென்றால் தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம். கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை.

பாம்பு கடித்தால்.. கிட்னியையும், கண்களையும் உடன் பாதிக்ககூடும். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்...

எனவே பாம்பு கடித்தால் அலட்சியம் வேண்டாம். காரணம், சில நேரங்களில் அது மரணத்தை ஏற்படுத்தாவிட்டாலும் உடலின் முக்கிய பாகங்களில் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தி விடும். உங்கள் கிராமங்கள் அவசர மருத்துவத்திற்கு எட்டாத இடத்தில் இருந்தால் இது போன்ற முதலுதவிகளை உடனே செய்ய அறிவுறுத்துங்கள்.

உலகில் ஆயிரக்கணக்கான பாம்பு வகைகள் உள்ளன. அதில் 246 வகை பாம்புகள் இந்தியாவில் உள்ளன. அயர்லாந்து, நியூசிலாந்து, ஆர்ட்டிக் போன்ற பகுதிகளைத் தவிர உலகின் அனைத்து பகுதிகளிலும் பாம்புகள் காணப்படுகின்றன.

பாம்புகள் அனைத்தும் விஷமுள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது சில வகைப் பாம்புகளைத் தவிர பெரும்பான்மையான பாம்புகள் விஷ மற்றவையே. இந்தியாவில் வாழக்கூடிய நச்சுப் பாம்புகளில் ஆறு வகைப் பாம்புகள் தான் மிகவும் அபயமளிக்கக் கூடியவை அவை,

1.நல்ல பாம்பு
2.கட்டு வீரியன்
3.கண்ணாடி வீரியன்,
4.சுருட்டை பாம்பு
5.கரு நாகம்
6. ராஜ நாகம்.

மேற்கூறிய ஆறு வகைகளில் முதல் நான்கு வகைகளே நம் நாட்டில் பெருமளவு காணப்படுகின்றன. பாம்பு விஷக் கடிக்கான முறிவு மருந்து"சீர நஞ்சு" (anti -venum) இந்த நான்கு வகை பாம்பு விஷத்தை சேகரித்து கலந்து அதைக் குதிரைக்கு சிறிது சிறிதாக ஊசி மூலம் செலுத்தி பிறகு அதன் இரத்தத்தில் இருந்து சீரம் பிரித்து எடுக்கின்றனர்.

இதுவே அலோபதி மருத்துவத்தில் அனைத்து பாம்பு கடிக்கும் விஷ முறிவு மருந்தாக பயன் படுத்தப் படுகின்றது. ஒருவருக்கு பாம்பு கடித்துவிஷம் ஏறிய நிலையில் இந்த "சீர நஞ்சு" நல்ல குணமளிக்கும் மருந்து தான் ஆனால் பாம்பு கடிக்காத நிலையில் இந்த ஊசி மருந்தைப் போட்டால் இதுவே விஷமாகி அந்த மனிதர் இறந்துவிடக்கூடும்.

பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள் நல்லபாம்பு கடித்து விட்டால் மருந்து :-

கடிவாய் எரியும், வாந்தி வரும், நடை தளரும், மயக்கம் வரும், மூக்கில் நுரை வரும், உயிர்ப்பு தடை படும், இறப்பு நேரிடும், வேப்பிலை கசக்காது,மிளகு காரம் இருக்காது, ஆடு தீண்டாப்பாளை வேர் இனிக்கும், இரு பற்கள் தடம் இருக்கும் குருதி பெரும்பாலும் வராது இதற்க்கு அரை மணி நேரத்தில் மருந்து கொடுத்து விட வேண்டும் .

வாழை மட்டையைப் பிழிந்து அதன் சாற்றை 200 மி.லி.கொடுக்க வேண்டும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம். நினை வற்று இருந்தால் உடைகளைக் களைந்து வாழை மட்டையில் படுக்க வைக்கவும் , வாய் திறக்கும் , வாழைப் பட்டை சாற்றை ஊற்றலாம். விஷம் முறிந்து பிழைத்துக் கொள்வார்கள்.

வீரியன் பாம்பு கடித்து விட்டால் மருந்து :-

இது கடித்து விட்டால் கடி வாய் தொடர்ந்து எரியும், குருதி தொடர்ந்து வரும், கடி வாய் சதை வீங்கி நீல நிறமாக மாறும், வாயில், மூக்கில் குருதி வரும், சிறு நீரும் குருதியாகும், ஆடு தீண்டாப் பாளை வேர் உப்புக்கரிக்கும் சிரியா நங்கை, வேம்பு கசக்காது. இது கடித்த அரை மணி நேரத்தில் சிரியா நங்கையை அரைத்து நெல்லி அளவு கொடுத்தால் விஷம் இறங்கி வரும் ,10 நிமிடம் கழித்துக் சிறிது கொடுத்தால் கசக்காத மூலிகை சிறிது கசக்கும், மீண்டும் பத்து நிமிடம் கழித்துக் கொடுத்தால் கசப்பு நன்றாகத் தெரியும் விஷம் படிப் படியாக இறங்குவது தெரியும்.

ஆங்கில மருத்துவம் நம் பூமியில் கால் பதிக்கும் முன் இது போன்ற சித்த பாரம்பரிய மூலிகை மருந்துகள் தான் பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றி வந்துள்ளது.

இரவில் நச்சுப் பூச்சி ஏதேனும் கடித்து விட்டால் என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம். இந்நிலையில் கடி பட்டவருக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால்
Ø இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்லபாம்பு என்றும்,
Ø புளிப்புச் சுவையாக இருந்தால் கட்டுவிரியன் பாம்பு என்றும்
Ø வாய் வழவழப்பாக இருந்தால் நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு, நீர் பிரட்டை போன்றவை என்றும்,
Ø கசப்புச் சுவையாக இருந்தால் பாம்பு வகைகள் அல்லாத வேறு பூச்சிகள் என்றும்
அறிந்து உணரலாம்.

தேள்கடி மருந்துகள் :
ü எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள்கடி நஞ்சு இறங்கி விடும். கடிவாயில் எலுமிச்சைப் பழ இரசத்தையும் உப்பையும் கலந்து தடவினால் நலம் கொடுக்கும்.
ü கல்லில் சில சொட்டுத் தண்ணீரைத் தெளித்து அதில் புளியங் கொட்டையைச் சூடு உண்டாகும்படி தேய்த்துத் தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும்; நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்துவிடும்.
ü சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும். கண்ணாடி இலையின் பால் எடுத்துத் தேள் கடித்த இடத்தில் வைத்தால் நஞ்சு இறங்கும். பட்டு ரோஜா (டேபிள் ரோஜா) செடியின் இலையின் நான்கை எடுத்து வெற்றிலையில் மடித்துத் தின்றால் நஞ்சு இறங்கும்.
ü குப்பை மேனி இலையைப் பறித்து நன்றாக நீரில் கழுவி விட்டுப் பின்பு கசக்கிச் சாறு எடுத்துத் தேள் கடித்த இடத்தில் தடவ வேண்டும். அத்துடன் கசக்கிய இலையைக் கடிவாயில் வைத்துக் கட்டி விட்டால் நஞ்சு இறங்கும்.

ஒற்றை மருத்துவம்:-
சித்த மருத்துவத்தில் ஒரு பொருளை மட்டும் மருந்தாகப் பயன்படுத்தும் முறைக்கு ஒற்றை மருத்துவம் என்று பெயர்.
v நட்டுவாய்க்காலி கொட்டினால் கொப்பரைத் தேங்காயை வாயில் போட்டு மென்று தின்றால் உடன் நஞ்சு நீங்கும்.
v பூரான் கடித்தால் பனை வெல்லத்தை (கருப்பட்டி) தின்னத் தடிப்பு, அரிப்பு உடனே மாறும்.

வெறிநாய்க்கடி மருந்து :
v வெறிநாய் கடித்து விட்டால் நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சம பாகமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதில் எலுமிச்சைப் பழம் அளவிற்குக் காலையிலும் மாலையிலும் ஒரு உருண்டை வீதம் பத்து நாள் உட்கொண்டால் வெறிநாய்க்கடி குணமாகும்.

பாம்புக்கடி மருந்து :
ü பாம்பு கடித்து விட்டால் உடன் வாழை மரம் ஒன்றை அடியிலும் நுனியிலும் வெட்டி ஆறு அடி நீளத் துண்டிட்டுக் கொண்டு வரவேண்டும். பாம்புக்கடி பட்டவன் பல் கட்டி வாய் திறக்க முடியாமலிருப்பான். அதனால் வாழைப்பட்டையை உரித்துப் பாயாகப் பரப்பிக் கடிபட்டவனை அதில் படுக்கவைக்க வேண்டும். பின் வாழைப்பட்டைச் சாறு 1 லிட்டர் பிழிய வேண்டும். சாறு பிழிவதற்குள் வாழைப்பட்டையில் படுக்கவைத்தவன் பல்கட்டு நீங்கி வாய் இயல்பாகத் திறக்கும். உடன் ஒரு லிட்டர் வாழைப்பட்டைச் சாறையும் பாம்புக் கடிபட்டவனைக் குடிக்கச் செய்ய வேண்டும். 15 நிமிடத்தில் பாம்புக் கடிபட்டவன் நஞ்சு நீங்கி எழுந்து நடப்பான்.

நஞ்சு முறிப்பு
Ø எலி, பெருச்சாளி, மூஞ்சுறு, தேள், பூரான் போன்றவைகளின் நஞ்சை நீக்க, நாயுருவியின் விதையை வீசும்படி எடுத்து வெய்யலில் காயவைத்துப் பொடி செய்ய வேண்டும். இந்தப் பொடியை நல்ல மூடியுள்ள பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். நஞ்சு நீங்கத் தேவையான காலத்தில் இந்தப் பொடியில் மூக்குப் பொடி அளவு எடுத்துத் தேனில் குழைத்துக் காலையிலும், மாலையிலும் 25 நாட்கள் சாப்பிட வேண்டும். இப்படிச் சாப்பிட்டால் நஞ்சு நீங்கும்.

Ø உடலுக்குள் சென்ற எந்த நஞ்சாக இருந்தாலும் வாந்தி ஏற்படுத்துவதன் மூலம் நஞ்சை வெளியேற்றலாம். வாந்தி ஏற்படுத்துவதற்கு நஞ்சிலைப் பறிச்சான் என்ற செடியின் வேருடன், தலைச்சுருளி என்ற பெரு மருந்து இலையைச் சேர்த்து நன்றாக அரைத்து எலுமிச்சைப்பழம் அளவு உருண்டை எடுத்து வெந்நீரில் கலந்து குடித்தால் உடனே வாந்தி ஏற்பட்டு அனைத்து நஞ்சும் அதன் மூலம் வெளியேறிவிடும். வாந்தி ஏற்பட்ட பின்பு எலுமிச்சைப் பழத்தைத் தண்ணீரில் பிழிந்து குடித்துவிட்டால் நஞ்சு முறிந்து போகும்.

சித்த மருத்துவம் ஏராளமான மூலிகைகளை நமக்குக் கூறுகின்றது. நஞ்சு நீக்கத்திற்கு மட்டுமன்றி, மனிதனின் அகப்புற உறுப்புக்களைத் தாக்கும் எல்லாவிதமான சிறு, பெரு நோய்களுக்கும் மருந்துண்டு. ஆனால் சித்த மருத்துவத்தின் பயன்பாடுதான் இப்போது குறைந்து வருகிறது.

கவனிக்க
பல நாட்டு வைத்திய முறைகள் இருந்தாலும், இப்போது நவீன மருத்துவமுறைகள் வந்துவிட்டதால் தாமதிக்காமல் முதலுதவி செய்து கடிபட்டவரை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லுதல் நல்லது.

நீங்கள் தெறித்துகொண்டதை மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள்.... இந்த செய்தி பகிருங்கள்.

Relaxplzz


"அன்றாட தேவைகள் - தெரிந்து கொள்ள" - 2

புன்னகை தவழும் முகத்திற்கு ஒப்பனை தேவையில்லை.....!

Posted: 24 Nov 2014 05:50 AM PST

புன்னகை தவழும் முகத்திற்கு
ஒப்பனை தேவையில்லை.....!


0 comments:

Post a Comment