Friday, 21 November 2014

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:) Relaxplzz

Posted: 21 Nov 2014 09:30 AM PST

அருமை

Posted: 21 Nov 2014 09:30 AM PST

அருமை


:P :P

Posted: 21 Nov 2014 09:20 AM PST

:P :P


ஏன் ஏன்.???

Posted: 21 Nov 2014 09:10 AM PST

ஏன் ஏன்.???


"ஆண்களின்" அன்பு..! திருமணம் ஆன புதுதம்பதினர்கள் மருத்துவமனைக்கு வரும்பொழுது ,...

Posted: 21 Nov 2014 09:05 AM PST

"ஆண்களின்" அன்பு..!

திருமணம் ஆன புதுதம்பதினர்கள் மருத்துவமனைக்கு வரும்பொழுது , Pregnancy Confirmed ( உங்கள் மனைவியின் கர்ப்பம் உறுதி செய்யப்படுகிறது ) - என நான் சொல்லும் அந்த தருணம் பெண் சந்தோஷப்படுகிறாள் , ஆண் பெருமைப்படுகிறான் .

பெண் மனதில் 9 மாதகாலம் குழந்தையை எப்படி பாதுகாப்பது என சிந்தீப்பாள் , ஆனால் ஆண் மனைவி, குழந்தை இரண்டு பேரையும் எப்படி பாதுகாப்பது என சிந்தித்து கொண்டு இருப்பான், பெண் மனதில் 10% அன்பு இருந்தால் , அதை 100 % வெளிப்படுத்துவாள் . ஆனால் ஆண் மனதில் 100% அன்பு இருக்கும் ஆனால் 10% அன்பைக்கூட வெளிப்படுத்த தெரியாது . ஆண்களுக்கு கோபத்தை வெளிப்படுத்த தெரிந்த அளவிற்க்கு அவர்கள் மனதில் இருக்கும் அன்பையும் முழுமையாக வெளிப்படுத்தி இருந்தால் பெண்களை விட ஆண்களே அன்புக்குரியவர்கள் என்ற உண்மை இந்த உலகத்திற்க்கு தெரிந்து இருக்கும் .

அறிவு தளத்தில் வேண்டுமானல் சில நேரங்களில் பெண்கள் ஆண்களைவிட உயர்வாக தெரியலாம் . ஆனால் அன்பு தளத்தில் எப்பொழுதும் பெண்களை விட ஆண்களே உயர்ந்துள்ளனர் என்பதை என்னால் உறுதி பட சொல்ல முடியும் ..

அனுபவம் பேசுகிறது !!!!

Dr.Rohaiyaah Bibi

https://www.facebook.com/photo.php?fbid=620099424767373&set=a.107922219318432.14588.100003019636902&type=1&relevant_count=1

Relaxplzz


குடும்பஸ்தன்_பாடசாலை

அருமையான க்ளிக் (y)

Posted: 21 Nov 2014 08:50 AM PST

அருமையான க்ளிக் (y)


மூளைக்கொரு வேலை If 1 1 1 1= R 2 2 2 2= T 3 3 3 3= E 4 4 4 4= N Then 5 5 5 5= ?

Posted: 21 Nov 2014 08:40 AM PST

மூளைக்கொரு வேலை

If 1 1 1 1= R
2 2 2 2= T
3 3 3 3= E
4 4 4 4= N
Then
5 5 5 5= ?

:) Relaxplzz

Posted: 21 Nov 2014 08:31 AM PST

எவரெஸ்டை எட்டிப்பிடிக்க இன்னும் ஒரே நாள்தான் உள்ளது என்ற சூழலில் ஆக்ஸிஜன் பற்றாக...

Posted: 21 Nov 2014 08:15 AM PST

எவரெஸ்டை எட்டிப்பிடிக்க இன்னும் ஒரே நாள்தான் உள்ளது என்ற சூழலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது.

பயணத்தை ரத்து செய்யலாமா? என்று எட்மண்ட் ஹிலாரி யோசிக்கிறார்.

அப்போது டென்சிங் சொன்னான், "இல்லை தொடர்வோம். ஒருவேளை நாம் வெற்றி பெற்றால், உலகத்தின் உயர்ந்த சிகரத்தில் முதலில் கால் பதித்த பெருமை நமக்கு கிடைக்கும்.

ஒரு வேளை நாம் தோல்வியுற்றால் உலகத்தின் உயர்ந்த சிகரத்தில் முதலில் உயிர்நீத்த பெருமை நமக்கு கிடைக்கும்" என்கிறான்.

சிலிர்ப்போடு பயணத்தை தொடர்ந்த இருவரும் அடுத்தநாள் அதாவது 1953ஆம் வருடம் மே மாதம் 29ம் தேதி காலை 11 மணிக்கு இருவரும் எவரெஸ்டை எட்டிப் பிடிக்கிறார்கள்.

முயற்ச்சி மற்றும் நம்பிக்கையால் தான் சிகரங்கள் ...

(y) (y)

Relaxplzz

சுட சுட வெள்ளை சோறு வடிச்சு ஆவி பறக்க இளம் பச்சை வாழை இலையுல போடும்போது அந்த சோற...

Posted: 21 Nov 2014 08:04 AM PST

சுட சுட வெள்ளை சோறு வடிச்சு ஆவி பறக்க இளம் பச்சை வாழை இலையுல போடும்போது அந்த சோறும் வாழை இலையும் சேர்ந்து ஒரு மனம் வரும் பாருங்க...தொண்ட வரைக்கும் திண்ணவன் கூட இன்னும் ஒரு பிடியேனும் சாப்பிடுவான்...அதே சோற்ற தைத்த இலை ("காய்ந்த ஆல மர இலை" அல்லது "மந்தாரை இலை") இல்லை பனம் இலை அதுல போட்டு திண்ணும்போது அது ஒரு தனி ருசி...மனம்..அட டா...

சுடு சோற்றுல மிளகு தக்காளி ரசம் போட்டு வாழை இலையோட சேத்து சுரண்டி வழிச்சு சாப்பிடும் ருசி ..."மந்தாரை இலை" இலையுல புளியோதரை வச்சு அத முன்னிரவே நூல் போட்டு கட்டி வச்சு மறு நாள் மதிய உணவுக்கு சாப்பிட்டு பாருங்க..மதிய உணவுக்கு வீட்டுல இருந்து தக்காளி சாப்பாட்ட வாழை இலையுல கட்டி கொண்டு போயி சாப்பிட்டு பாருங்க...அடடா...அந்த ருசி...வேற எந்த உணவுலங்க கிடைக்கும்...கொஞ்சம் சொல்லுங்களேன்?!.

பொதுவா எந்த உணவையும் பச்சை இலையில் இட்டு சாப்பிடுவது அவ்வளவு நல்லது...ருசியும் மருந்தும் ஒன்னா கிடைச்சா திண்ண வலிக்குமா என்ன? அதவிட வாழை..ஆலம்..மந்தாரை இலை இந்த மூணு இலைகளுமே நிறைய மருத்துவ குணம் கொண்டது. நரம்பு தொடர்புடைய வியாதிகளுக்கும் பக்கவாதம் வியாதிகளுக்கும்..வயிற்றுப்புன் தோல் வியாதி இன்னும் பல வியாதிகளுக்கும் இந்த இலைகள் மருந்தாகவே இருக்கு. கோவில் பிரசாதம் எல்லாம் இலைகள்ல பரிமாறுவதற்கும் இதான் முக்கிய காரணம்...

இந்த இலைகள் எல்லாம் பணம் கொடுத்து வாங்க வேண்டியது இல்ல வீட்டுல அக்கம் பக்கம் சாதரணம விலையர்துதான்..நகரத்துல இருக்குறவங்க இந்த இலைகளை வாங்கறது ஒன்னும் அவளோ கடினம் இல்லை விலை மிகுதியும் இல்ல...தண்ணி செலவு சோப்பு செலவு தட்டு அடுக்கி வைக்க இடம் இந்த செலவெல்லாம் விட இலை வெறும் 20% செலவு தான் ஆகும்...

இலையுல சாப்பிட்டா

-பாத்திரம் கழுவுற தண்ணி மிச்சம்

- பாத்திரம் கழுவுற சோப்பு செலவு மிச்சம்

- கொஞ்சம் தண்ணி தெளிச்சு தொடச்சாலே சுத்தம் ஆகிடும்

- உணவு ருசியா இருக்கும் தனி மனமா இருக்கும்..சாப்பிடவே உணர்வுபூர்வமா திருப்தியா இருக்கும்.

- சாப்பிட்ட பிறகும் அந்த இலைகள ஆடு மாடு தின்னும் அதுங்களுக்கும் பேப்பர் விட இலைகள் தான் விருப்பம்

- இலைகளின் குப்பைகள் பூமிக்கும் அருமையான உரமே

- எல்லாத்துக்கும் மேல இலை வாங்கி அதுல சாப்டீங்கன்னா வாழை மற்றும் மற்ற இலை விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார நன்மை (இப்படியாவது விவசாயிகள வாழ வைப்போமே?)

முடுஞ்ச வர அலுவலங்களுக்கோ பள்ளி கல்லூரிக்கோ மதிய உணவ இலைல மடிச்சு கொண்டு போயி சாப்பிட்டு பாருங்க...பிள்ளைங்களுக்கும் கட்டி கொடுங்க...

இவ்வளவு அருமையான இலை சாப்பாட்ட விட்டுட்டு....இன்னைக்கு அதிகப்படி யாரும் இலைல சாப்பிடறதும் இல்ல கல்யாணத்துல கூட விருந்தாளிக்கு பரிமாறுவதும் இல்ல...கம்ப்யூட்டர் இலை னு பேப்பர் ல இலை போலவே செஞ்சு பேப்பரை திண்றோம்.

என்ன அறிவு?

Relaxplzz


வாழ்வியல்

உண்மையான தூய்மை இந்தியா... விளக்குமாறு பிடித்துப் ‘படம்’ காட்டுபவர்கள், இப்படி ஒ...

Posted: 21 Nov 2014 07:50 AM PST

உண்மையான தூய்மை இந்தியா...
விளக்குமாறு பிடித்துப் 'படம்' காட்டுபவர்கள், இப்படி ஒரு 'போஸ்' கொடுப்பார்களா?


இந்த குழந்தையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 21 Nov 2014 07:40 AM PST

இந்த குழந்தையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 21 Nov 2014 07:31 AM PST

பாராட்டத்தக்க மனிதநேயம் மூளைச்சாவு: விவசாயியின் உடல் உறுப்புகள் கொடை............

Posted: 21 Nov 2014 07:15 AM PST

பாராட்டத்தக்க மனிதநேயம்
மூளைச்சாவு: விவசாயியின் உடல் உறுப்புகள் கொடை.........

மதுராந்த கத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (45), விவசாயி. கடந்த 9 ஆம் தேதி விபத்தில் படுகாயமடைந்த இவரை சென்னை அரசு பொது மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு, கஜேந்திரனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.

அவரது உடல் உறுப்புகளைக் கொடை யளிக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதை யடுத்து அவரது இதயம், இரு சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகியவை அகற்றப்பட்டன.

இதில், அடையாறில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு இதயமும், சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ஒரு சிறுநீரகம், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மற்றொரு சிறுநீரக மும், கிட்னி, கல்லீரலும் கொடையாக வழங் கப்பட்டன.

Relaxplzz

சில இனிய தகவல்கள் :- நாம் உண்ணும் சாதம் செரிக்க ஒரு மணி நேரம் ஆகிறது. பால் செரி...

Posted: 21 Nov 2014 07:01 AM PST

சில இனிய தகவல்கள் :-

நாம் உண்ணும் சாதம் செரிக்க ஒரு மணி நேரம் ஆகிறது. பால் செரிக்க இரண்டு மணி நேரம் ஆகிறது. நெய் ,வேக அவித்த முட்டை,மாமிசம் செரிக்க நான்கு மணி நேரம் ஆகிறது.

********
மது அருந்தினால் சிலருக்கு தைரியம் வரும். அதற்கு டச் கரேஜ் என்று பெயர்.

********
இப்போது உலகமெங்கும் உபயோகப் படுத்தப் படும் காலண்டருக்கு கிரிகேரியன் காலண்டர் என்று பெயர். இது 1582ல் இத்தாலியில் போப் கிரிகேரி13 என்பவரால் ஆரம்பித்து வைக்கப் பட்டது.

********
உலகம் தோன்றியது முதல் எந்தவித பரிணாம வளர்ச்சியும் இல்லாத உயிரினம் கரப்பான் பூச்சி.

********
நிறக்குருடு பிரச்சினை உள்ளவர்களுக்கு சிவப்பு நிறத்தையும் பச்சை நிறத்தையும் வித்தியாசப் படுத்தி சொல்ல முடியாது.

********
ஒரு பிராணியைப் பார்த்தவுடன் அதன் காது வெளியே தெரிந்தால் அது குட்டி போடும் என்றும் காது வெளியே தெரியவில்லை என்றால் அது முட்டையிடும் என்றும் அறியலாம்.

**********
கிரேக்க நாட்டில் யூரல் மலைப் பகுதியில் 'ஆஸ்பெட்டாஸ்'என்ற நகரம் உள்ளது.இந்த நகரம் கல் நார் எடுக்கும் தொழிலுக்கு பெயர் பெற்றது. இந்த நகரின் பெயராலேயே கல்நாருக்கு 'ஆஸ்பெட்டாஸ்'என்ற பெயர் வந்தது. கிரேக்க மொழியில் ஆஸ்பெட்டாஸ் என்றால் அழிக்க முடியாதது என்று பொருள்.

********
மத்தாப்பு மற்றும் வான வெடிகளில் வித விதமான வர்ணங்கள் தோன்ற வெடி மருந்துடன் பல்வேறு உலோக உப்புகளைச் சேர்க்கிறார்கள்.
நீலம்-- காப்பர்
பச்சை--பேரியம்.
மஞ்சள்--சோடியம்.
சிவப்பு--ஸ்ட்ரோண்டியம்.

********
55அடிக்குக் குறைவான எந்த அறையிலும் எதிரொலி கேட்காது. காரணம்: காற்றில் ஒலி பயணம் செய்யும் வேகம் வினாடிக்கு 1100அடி. இதில் பத்தில் ஒரு வினாடி தூரத்தில் உள்ள ஒலிகளை மட்டும் நம் காது இனம் பிரித்துக் கேட்கும் இயல்புடையது.வினாடியில் பத்தில் ஒரு பங்கு நேரத்தில் ஒலி செல்வது 110அடி. எதிரொலிக்க வேண்டும் என்றால் ஒலி அதில் பாதியில் மோதித் திரும்ப வேண்டும்.110ல் பாதி 55அடி.ஆகவேதான் அதற்குக் குறைவான நீளமுள்ள அறையில் எதிரொலி கேட்பதில்லை.

Relaxplzz


தகவல் துணுக்குகள்

என்ன தான் நீங்கள் திறம்பட ஆக்கிப் போட்டாலும் ஒரு பிரியாணி வாசத்தை கடந்து செல்வது...

Posted: 21 Nov 2014 06:50 AM PST

என்ன தான் நீங்கள் திறம்பட ஆக்கிப் போட்டாலும்
ஒரு பிரியாணி வாசத்தை கடந்து செல்வது போல்
அத்தனை எளிதில்லை ஒரு பலாப்பழ வாசத்தை
கடந்து செல்வது.

- Theepika Theepa.

பலாப்பழம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


எந்த நாட்டின் பெயர் உங்களுக்கு தெரிகிறது..???

Posted: 21 Nov 2014 06:40 AM PST

எந்த நாட்டின் பெயர் உங்களுக்கு தெரிகிறது..???


:) Relaxplzz

Posted: 21 Nov 2014 06:30 AM PST

ராஜீ(girl) : ஹலோ ரவி(boy) : என்ன செல்லம் பண்ணிகிட்டு இருக்க? ராஜீ : ஃபோன வச்சு...

Posted: 21 Nov 2014 06:15 AM PST

ராஜீ(girl) : ஹலோ

ரவி(boy) : என்ன செல்லம் பண்ணிகிட்டு இருக்க?

ராஜீ : ஃபோன வச்சு ரெண்டு நிமிசம் கூட ஆகல.. அதுக்குள்ளயா?

ரவி : உன் குரல் கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்குடா குட்டிமா..

ராஜீ : அடி வாங்கப் போற.

ரவி : எங்க.. அடி பாக்கலாம்..

ராஜீ : ----- (சிரிப்பு சத்தம்) இப்ப என்னதான் வேணும்?

ரவி : கொஞ்ச நேரம் பேசுப்பா ப்ளீஸ்ஸ்ஸ்

ராஜீ : மணி என்ன தெரியுமா?? நைட் 2 ஆகுது..

ரவி : அதுனால என்ன? என் செல்லத்துகூட நான் விடிய விடிய பேசுவேன்..

ராஜீ : ம்ம்ம்.. அப்புறம்??

ரவி : நீ தான் சொல்லனும்..

ராஜீ : என்ன சொல்லனும்?

ரவி : ஏதாவது சொல்லு..

ராஜீ : என்ன சொல்றது??

ரவி : ம்ம்.. அங்க என்ன ஸ்பெஷல்?

ராஜீ : ஒண்ணுமில்லடா.. எல்லாமே நார்மல் தான்.

ரவி : ம்ம்.. அப்புறம்..

ராஜீ : வேறென்ன??

ரவி : நீ தான் சொல்லணும்.

ராஜீ : தூக்கம் வரலயா?

ரவி : ஏன் உனக்கு வருதா?

ராஜீ : இல்லப்பா..

ரவி : பின்ன?

ராஜீ : சும்மா தான் கேட்டேன்..

ரவி : ம்ம்.. அப்புறம்??

ராஜீ : வேறென்ன??

ரவி : நாளைக்கு என்ன ஸ்பெஷல்??

ராஜீ : எப்பவும் போல தான்..

ரவி : ம்ம்..

ராஜீ : அப்புறம்??

ரவி : சொல்லு..

ராஜீ : என்ன சொல்லனும்?

ரவி : ஏதாவது சொல்லு..
.
.
அடப்பாவிகளா??? என்ன தாண்டா பேசுறீங்க?
எப்ப தாண்டா முடிப்பீங்க??
நீங்க நல்லா இருப்பீங்களா???
நாசமாப் போக..
நிம்மதியா தூங்க விட்டுத்தொலைங்களேண்டா..
.
இப்படிக்கு
லவ் பண்ணுவோருக்கு ரூம்மேட்டாக இருந்து அவதிப்படுவோர்...

:P :P

Relaxplzz

கூர்ந்து கவனியுங்கள்.. இது மொத்தமும் ஒரு ஓவியமே.. :)

Posted: 21 Nov 2014 06:11 AM PST

கூர்ந்து கவனியுங்கள்.. இது மொத்தமும் ஒரு ஓவியமே.. :)


ஓவியங்கள் - 2

உயிர் எழுத்தில் விநாயகர் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 21 Nov 2014 05:59 AM PST

உயிர் எழுத்தில் விநாயகர்

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


சும்மா... சும்மா... 3

கற்கை நன்றே.. கற்கை நன்றே.. பாலமும் சுவரும்கூட பள்ளிக்கூடமாகும்.

Posted: 21 Nov 2014 05:50 AM PST

கற்கை நன்றே.. கற்கை நன்றே..
பாலமும் சுவரும்கூட பள்ளிக்கூடமாகும்.


நீங்கள் உங்கள் வாழ்வில் பார்த்து வியந்த திரைப்படம் எது..???

Posted: 21 Nov 2014 05:40 AM PST

நீங்கள் உங்கள் வாழ்வில் பார்த்து வியந்த திரைப்படம் எது..???


" பேசுகிறேன்... பேசுகிறேன்.. என் இதயம் பேசுகிறேன்.."

:) Relaxplzz

Posted: 21 Nov 2014 05:28 AM PST

காய்கறி வாங்குவது எப்படி? இன்றைய தலை முறையினருக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும...

Posted: 21 Nov 2014 05:00 AM PST

காய்கறி வாங்குவது எப்படி?

இன்றைய தலை முறையினருக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.. உபயோகமான தகவல் என்பதால் இங்கு பகிர்கிறேன் என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்?

1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.

2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்

3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல‍ முருங்கை காய்

4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்

5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல‍ மக்காச்சோளம்.

6.தக்காளி: தக்காளி நல்ல‍ சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்).

7. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்

8. சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்

9. குடை மிளகாய் : தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங் கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்

10. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த் தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்

11. மாங்காய்- தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்

12. பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப் பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்கு மாறு பார்த்து வாங்குவது நல்லது

13. பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்

14. புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போதுதான் விதைப்பகு தி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்

15. உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறி னாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்
16. கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்

17. சேப்பங்கிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக் கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார் த்து வாங்கவும்

18. பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்

19. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்

20. கத்திரிக்காய்: தோல் softஆக இருப்பதுபோல் பார்த்து வாங்கவும்

21. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்

22. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்

23. பீன்ஸ் பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக் காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்
24. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது

25. பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையா ன நீண்ட காய் நல்லது

26. வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளி ர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்

27. மொச்சை :கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்

28. சௌசௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்

29. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்
30. வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கி னால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்

31. பச்சை மிளகாய் :நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமா க இருக்கும்.

Relaxplzz


அவன் என்னை வெறுத்த பின்னும் நான் ஏன் அவனை நேசிக்கிறேன் தெரியுமா ஏனென்றால் அவன...

Posted: 21 Nov 2014 04:45 AM PST

அவன் என்னை வெறுத்த பின்னும்
நான் ஏன் அவனை நேசிக்கிறேன் தெரியுமா
ஏனென்றால்
அவனின் தாயை விட
அவனை அதிக நாள் சுமந்தவள் நான்
♥ ♥

Relaxplzz


(y) Relaxplzz

Posted: 21 Nov 2014 04:30 AM PST

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் பருப்பு வகைகள்!!! உடலை சீராக இயக்குவதற்க...

Posted: 21 Nov 2014 04:15 AM PST

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் பருப்பு வகைகள்!!!

உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றியமையாதது. அத்தகைய புரோட்டீன்கள் நிறைய உணவுகளில் உள்ளன. அதிலும் அசைவ உணவாளர்களுக்கு என்றால், இறைச்சி, முட்டை போன்றவை உள்ளது. ஆனால் சைவ உணவாளர்களுக்கு புரோட்டீன் சிறப்பான முறையில் அமைந்திருப்பது பருப்பு வகைகளில் தான். மேலும் பருப்புக்களில் புரோட்டீன் மற்றுமின்றி, வேறு சில ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.

அந்த வகையில் இதனை உணவுகளில் அதிகம் சேர்த்து வந்தால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். அதுமட்டுமல்லாமல், பருப்புக்களிலேயே பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சத்துக்கள் நிறைந்துள்ளன. அவற்றில் பொதுவான ஒரு ஒன்று என்றால், அது குறைவான கலோரி இருப்பது தான். இதனால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கவலை இல்லாமல் இருக்கலாம். மேலும் இதனை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், புற்றுநோய், இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம், டைப்-2 நீரிழிவு போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். இப்போது பருப்புக்களின் கைகளையும், அதில் உள்ள சத்துக்களையும் பார்ப்போம்.

துவரம் பருப்பு

துவரம் பருப்பில் நல்ல அளவில் புரோட்டீன், ஃபோலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குடலியக்கம் சீராக இருந்து, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கலாம்.

பாசிப்பருப்பு

பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்தால், இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.

பச்சை பயறு

இந்த பயறு மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதிலும் புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடலில் உணவுகள் எளிதல் செரிமானமடைவதோடு, உடல் எடை மற்றும் கொலஸ்ட்ரால் குறையவும் உதவியாக இருக்கும்.

கொண்டைக்கடலை

கொண்டைக்கடலையில் ஃபோலிக் ஆசிட், மாங்கனீசு, இரும்புச்சத்து, காப்பர், மக்னீசியம் போன்றவை அதிக அளவில் இருக்கிறது. ஆகவே கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறையும். மேலும் இது உடல் சக்தியையும் அதிகரிக்கும்.

சுண்டல்

கொண்டைக்கடலையில் ஒரு வகை தான், இந்த சுண்டல். இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். புரோட்டீன், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரோட், வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், அது கருப்பைக் குழாயில் பிரச்சனை ஏற்படுவதையும், இரத்த சோகை பிரச்சனையையும் தடுக்கும்.

கடலைப் பருப்பு

கடலைப்பருப்பில் ஃபோலிக் ஆசிட், மாங்கனீசு, இரும்புச்சத்து, காப்பர் மற்றும் மக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளது. இதில் செரிலை விட, இரண்டு மடங்கு அதிகமாக புரோட்டீன் நிறைந்திருப்பதால், இதனை அதிகம் சாப்பிட உடல் வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும் கரோனரி இதய நோய் போன்றவை ஏற்படுவது குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு காராமணி

சிவப்பு காராமணியில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் பல்வேறு கனிமச்சத்துக்கள் அடங்கியுள்ளது. மேலும் வைட்டமின் பி6, இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இது புற்றுநோய், கொலஸ்ட்ரால் போன்றவை ஏற்படுவதைக் குறைக்கும். இதில் நிறைந்துள்ள வைட்டமின் கே, மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும். குறிப்பாக இது எலும்புகளை வலுவோடு வைப்பதற்கு பெரிதும் உதவியாக உள்ளது.

தட்டை பயறு

தட்டை பயறை குழம்பு வைத்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு ஈடு இணை எதுவும் இருக்க முடியாது. அத்தகைய தட்டை பயறில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், இது இதய நோய் ஏற்படுவதை தடுக்கும். மேலும் இதில் பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஜிங்க் நிறைந்துள்ளது. இதனால் தசைச் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும்

உளுத்தம் பருப்பு

இட்லிக்கும், தாளிப்பதற்கு பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில், கொழுப்பு குறைவாகவும், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் அடங்கியுள்ளது. மேலும் இதில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. சொல்லப்போனால், இது இறைச்சிக்கு பதிலாக ஒரு சிறந்த உணவுப் பொருள் என்றும் சொல்லலாம்.

மைசூர் பருப்பு

மைசூர் பருப்பின் சிறப்பு என்னவென்றால், அதில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், அது உடலில் உள்ள பித்தக்கற்களை வெளியேற்றிவிடும். மேலும் ஃப்ளேவோன்ஸை அதிகம் கொண்டதால், புற்றுநோய் தாக்கத்தில் இருந்தும் காப்பாற்றும். அதுமட்டுமின்றி, இது உடலில் இரத்தத்தை அனைத்து உறுப்புகளுக்கும் சீராக
கொண்டு செல்லும்.

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம். @ Relaxplzz

ஏழை இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் பெறும் சலுகைகள்! ............................

Posted: 21 Nov 2014 04:03 AM PST

ஏழை இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் பெறும் சலுகைகள்! ............................

இந்தியா ஒரு ஏழை நாடு என்றுதான் உலகம் அழைக்கின்றது. அந்த ஏழை நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அரசு வழங்கும் சலுகைகள் என்னென்ன தெரியுமா?

நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப்பட்ட ஒருவருக்கு மாத ஊதியம் ரூ.50 ஆயிரம். நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடக்கும் ஒவ்வொரு முறையும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்க்கு நாளொன்றுக்கு ரூ.2000 படி வழங்கப்படும்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்டுக்கு 34 முறை இலவசமாக வானூர்தியில் பயணம் செய்து கொள்ளலாம்.

அந்தப் பயணத்தின்போது மனைவியையோ, கணவரையோ, அல்லது உறவினர் ஒருவரையோ உடன் அழைத்துச் செல்லலாம். தமது தொகுதியை விட்டு டெல்லியில் தங்கியிருக்கும்போது அவரைச் சந்திப்பதற்காக அவருடைய மனைவி அல்லது உறுப்பினர் பெண்ணாக இருந்தால் அவருடைய கணவர் ஆண்டுக்கு 8 முறை இலவசமாக வானூர்திப் பயணம் மேற்கொள்ளலாம்.

நாடாளுமன்ற உறுப்பினர் தமது அடையாள அட்டையைக் காண்பித்து எந்த நேரத்திலும் எந்தத் தொடர் வண்டியிலும் ஏசி முதல் வகுப்பு அல்லது எக்சிக்யூட்டிவ் வகுப்பில் இலவசமாகப் பயணம் செய்யலாம்.

இந்தியாவுக்கு வெளியே செல்லும்போது ஓர் உறுப்பினர்க்கு முதல் வகுப்புத் தொடர்வண்டி வானூர்திப் பயணச்சீட்டு இலவசமாக வழங்கப்படும்.

வாடகைக் கட்டணம் மற்றும் பொருத்துதல் கட்டணம் இல்லாமல் தொலைப்பேசி இணைப்புகள் இலவசமாக வழங்கப்படும். மேலும், கட்டணம் எதுவும் இல்லாமல் அரசு வீடு ஒன்று டில்லியில் ஒதுக்கீடு செய்யப்படும். அந்த வீட்டில் ஆண்டுக்கு 50 ஆயிரம் யுனிட் மின்சாரம் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீரும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள் ளலாம்.

நடுவணரசின் மக்கள் நல்வாழ்வுத் திட்டத்தின்கீழ் மாதத்திற்கு ரூ.500 செலுத்தித் தமக்கும் தம் குடும்பத் திற்கும் இலவசமாக மருத்துவச் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

தமது அலுவலகச் செலவுக்காக மாதந்தோறும் ரூ.45,000 வழங்கப்படும். இதில் ரூ.15,000 எழுது பொருள் செலவுகளுக்காகவும் மீதித் தொகை மற்றச் செலவுகளுக்காகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

ஒருவர் ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிவிட்டால் அவருக்கு ஓய்வூதியம் மாதம் ரூ.20 ஆயிரம் அவரே 5 ஆண்டுக்கு மேல் உறுப்பினராக இருந்தால் கூடுதலாக ரூ.1500 ஓய்வூதியம் வழங்கப்படும்.

Relaxplzz


"தெரிந்து கொள்வோம்" - 1

தடைகள் மலை அளவு இருந்தாலும்... அதை தாண்டி விடலாம் என்ற நம்பிக்கை இருந்தாலே போதும...

Posted: 21 Nov 2014 03:45 AM PST

தடைகள் மலை அளவு இருந்தாலும்... அதை தாண்டி விடலாம் என்ற நம்பிக்கை இருந்தாலே போதும் ஜெயித்துவிடலாம்..!!!

Kali Muthu @ Relaxplzz


0 comments:

Post a Comment