Relax Please: FB page daily Posts |
- :)
- :)
- செல்போன் மூலம் “தடுப்பூசி” தகவல்கள்....!! பெற்றோர்கள் தங்கள் செல்போனில் குழந்...
- இது தான் ஒற்றுமையின் பலம்... ஒவ்வொருவராய் எழுகிறோம், விரைவில் அனைவரும் எழுவார்கள...
- அழகு
- :)
- இவ்வளவு தான் வாழ்க்கை .. :)
- நம்மூர் அரசியல்வாதிகளுக்கு அப்படியே பொருந்துதே இந்த கதை .... *******************...
- குழந்தைகளுலகத்தில் அப்பாக்கள் இரண்டுவிதம். ஒன்று: ஐ... அப்பா! இரண்டு: ஐயோ...அப...
- கோச்சடையான் மூலம் கொஞ்சம் பணத்தை இழந்தாலும் கூட, அந்தப் படத்தால கிடைச்ச அனுபவம்...
- நம்ம ஆளுங்க நிலைமையை கரெக்டா புரிஞ்சிக்கிட்டு எந்த இடத்துல பார் வச்சிருக்காங்க...
- :)
- வீட்டில் வளர்ந்த கோழிக்குஞ்சை விளையாட்டாய் அந்தச் சிறுவன் கொன்றான். அதை பார்த்த...
- நடிகன்டா ......!!
- :)
- மூணு பேரு, டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோல வேலை செய்றவங்க ஒரு ஜூவுல மீட் பண்ணாங்க,...
- ஒரு பார்வையற்ற நாயகன் ************************************* எனது சொந்த ஊர் பள்ள...
- 'மரம்' நடுவது கடினம்தான். வாங்க 'செடி' யாவது நடுவோம் !!
- :)
- தெரிந்து கொள்வோம்
- கடவுளுக்கு செய்யும் சேவை உயர்ந்தது... அதனினும் உயர்ந்தது, சக மனிதருக்கு செய்யும...
- நிம்மதியாய் இருக்கும் போது மனைவியைத் தேடுவதும், * * * * * * * * * * * * * * *...
- காலை வகுப்பிலே "வீட்டுப்பாடம் செய்யாத பிள்ளைகள் பெஞ்சில் ஏறி நில்லுங்கோ" என்று ஆ...
- (y) (y)
- ஒரு பெரிய பாக்டரி .. கிட்ட தட்ட 1000 பேருக்கு மேல வேலை பாக்குற கம்பெனி.. எல்லாம்...
- :)
- திருமணமான ஒரு ஆணின் அன்பு இரு பெண்களிடம் இருக்கும்....... ஒன்று பெற்ற தாய்... மற...
- தெரிந்து கொள்வோம்
- (y)
- இந்தியாலே கிரிகெட் = சூதாட்டம் சினிமா = விபச்சாரம் அரசியல் = அநியாயம் மீடியா...
Posted: 17 Nov 2014 09:30 AM PST |
Posted: 17 Nov 2014 09:20 AM PST |
Posted: 17 Nov 2014 09:10 AM PST செல்போன் மூலம் "தடுப்பூசி" தகவல்கள்....!! பெற்றோர்கள் தங்கள் செல்போனில் குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதியை எஸ்.எம்.எஸ். செய்தால் போதும். குழந்தைக்கு எந்தத் தேதியில் எந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற தகவல் உடனடியாக வந்துவிடும். " National Vaccine Remainder " என்று இதற்குப் பெயர். இது ஓர் இலவச சேவை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ...!! <Immunize>space<குழந்தையின் பெயர்>space<பிறந்த தேதி> என்று டைப் செய்து, 566778 எண்ணுக்குத் தகவல் அனுப்ப வேண்டும். உதாரணத்துக்கு, Immunize SWETHA 17-02-2013என்று டைப் செய்து அனுப்புங்கள். உடனே 'உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டு விட்டது' என்று முதல் கட்டத் தகவல் வரும். அடுத்து, உங்கள் குழந்தைக்கு எந்தத் தடுப்பூசி, எந்தத் தேதியில் போடப்பட வேண்டும் என்று தகவல் வரும். குழந்தைக்கு 12 வயது ஆகும் வரை இந்தத் தகவல்கள் வந்துகொண்டிருக்கும். ஒவ்வொரு முறையும் இரண்டு நாள் இடை வெளியில் மூன்று முறை நினைவூட்டுவார்கள். . வருங்காலம் நலமாகுக ..!!:) Relaxplzz |
Posted: 17 Nov 2014 09:00 AM PST |
Posted: 17 Nov 2014 08:50 AM PST |
Posted: 17 Nov 2014 08:40 AM PST |
Posted: 17 Nov 2014 08:30 AM PST |
Posted: 17 Nov 2014 08:15 AM PST நம்மூர் அரசியல்வாதிகளுக்கு அப்படியே பொருந்துதே இந்த கதை .... ********************************* பேரரசன் நெப்போலியன் பெருங் களிப்பில் இருந்தான். போரில் பெற்ற மாபெரும் வெற்றிதான் அதற்குக் காரணம். அந்த வெற்றிக்குப் பேருதவியாக இருந்த அவனது நான்கு தளபதிளையும் அழைத்து "உங்களுக்கு என்ன் வேண்டுமானாலும் கேளுங்கள்" என்று கூறினான். முதல் தளபதி ஜெர்மனியைச் சேர்ந்தவன். அவன் "மன்னா! என்க்கு பாரிஸ் நகரத்தில் ஒரு வீடு கட்டிக் கொள்ள வெகுநாளாக ஆசை" என்றான். "உனக்கு பாரிஸ் நகரத்தில் பெரிய மாளிகையே கட்டித் தரச் சொல்கிறேன்" என்றான் நெப்போலியன். அடுத்தவன் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்தவன். தனக்கு சொந்தமாக ஒரு தங்கும் விடுதி (Hotel) நடத்த ஆசை என்று மன்னனிடம் கூறினான். மாமன்னன் நெப்போலியன் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் ஏற்பாடு செய்வதாகக் கூறினான். மூன்றாம் தளபதி போலந்துக் காரன். அவன் தனக்கு திராட்சை மது செய்யும் தோட்டமும், தொழிற்சாலையும் வேண்டும் என்று கேட்டான். அதற்கும் நெப்போலியன் அதே பதில்தான் சொன்னான். கடைசி தளபதி ஒரு யூதன். அவன் நெப்போலியனிடம் இரண்டு வார விடுப்பு பரிசாக வேண்டும் என்று கேட்டான். அதற்கு மன்னன் நெப்போலியன் "உன் விடுப்பு நாளை முதல் தொடங்கும்" என்றான். அவன் பணித்தவுடன் வெளியே வந்த தளபதிகளில் முதல் மூவரும் யூதனைப் பார்த்து "சரியான முட்டாளாக இருக்கிறாயே! ஏதாவது விலை மதிப்புள்ளதாகக் கேட்காமல் விடுப்பைப் போய் கேட்டாயே?" என்று ஏளனம் செய்தார்கள். அதற்கு அவன் "நண்பர்களே! நீங்கள் கேட்டதையெல்லாம் மன்னன் ஏற்பாடு செய்து தருவதாகத்தான் கூறியிருக்கிறான். இன்னும் அவை உங்கள் கையில் கிடைக்கவில்லை. மன்னன் அவன் கொடுத்த வாக்குகளை நேரடியாகச் செயல் படுத்த அவனுக்கு நேரமிருக்கப் போவதில்லை. அவனது காரியதரிசியைத்தான் பணிக்கப் போகிறான். காரியதரிசியோ ஆயிரம் வேலை செய்பவன். அவனும் அவனுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்குத்தான் இந்த வேலைகளைக் கொடுப்பான். உங்களுக்கு அளிக்கப் பட்ட பரிசுகளுக்கான வாக்குறுதிகளின் முக்கியத்துவம் இப்படி கீழே ஆணைகள் செல்லச் செல்ல கரைந்து கொண்டே போய் மறக்கப் படும் வாய்ப்புகள் அதிகம்" என்றான். மற்ற தளபதிகள் "அப்படி நடந்தால் மன்னனிடம் போய் முறையிடலாம்தானே" என்றார்கள். யூதத் தளபதி சொன்னான் "நண்பர்களே. மன்னனுக்கு இன்றைக்கு இருக்கும் வெற்றிக் களிப்பு வெகுநேரம் நிலைக்காது. போரில் பெற்ற வெற்றியின் மதிப்பு நாளடைவில் மற்ற பிரச்சினைகளுக்கு இடையே ஒளியிழந்து போகும். அதோடல்லாமல் இந்தக் கணத்தின் உங்கள் துறையின் வெற்றி மட்டுமே அவன் கண் முன் நிற்கிறது. நாளை உங்கள் துறையில் ஏதாவது தவறு நடந்தால் நீங்கள் தலை நிமிர்ந்து அவன் முன் நின்று உங்கள் பரிசை உரிமையுடன் நினைவுறுத்த இயலாது. ஆனால் நான் கேட்ட பரிசோ இப்போது என் கையில்" இதைக் கேட்ட மற்றவர்கள் பேச்சடைத்துப் போனார்கள். யூதத் தளபதி தன் விடுமுறையைத் திட்டமிடக் கிளம்பினான். Relaxplzz |
Posted: 17 Nov 2014 08:00 AM PST குழந்தைகளுலகத்தில் அப்பாக்கள் இரண்டுவிதம். ஒன்று: ஐ... அப்பா! இரண்டு: ஐயோ...அப்பா! ஆனால் அம்மாக்கள் ஒருவிதமே! ஐ...அம்மா! #அம்மா - ஃபீனிக்ஸ் பாலா@ Relaxplzz ![]() "மனம் தொட்ட வரிகள்" - 1 |
Posted: 17 Nov 2014 07:50 AM PST கோச்சடையான் மூலம் கொஞ்சம் பணத்தை இழந்தாலும் கூட, அந்தப் படத்தால கிடைச்ச அனுபவம் மிகப்பெரிய சொத்து. ஏன்னா இனிமே என்னோட மகள்கள் சம்பாதிச்சுத்தான் அவங்களைக் காப்பாத்திக்க வேண்டிய அவசியமில்ல. நான் சம்பாதிச்சதை வேஸ்ட் பண்ணாம இருந்தாலே போதும். - ரஜினிகாந்த் :>>ரஜினி ஒரு சிறந்த தந்தை ..மற்றும் இயல்பான இந்திய நடுத்தர மனநிலையில் உள்ளவர் என்பதை இதன் மூலம் உணரலாம்...தான் பெற்றதை இழந்துவிட கூடாது என்பதில் உள்ள பயமே அவரை அரசியலை விட்டு தூரமாக ஓடசெய்கிறது .. - நிக்கோலஸ் கோபர்நிக்கஸ் @ Relaxplzz |
Posted: 17 Nov 2014 07:40 AM PST நம்ம ஆளுங்க நிலைமையை கரெக்டா புரிஞ்சிக்கிட்டு எந்த இடத்துல பார் வச்சிருக்காங்க பாருங்க...!!! ஸ்டெடியா ஏறிப் போகப் படிக்கட்டு...!!! புல் டைட்டுல எறங்கிவர சறுக்குபலகை....!!! நல்லா முன்னேறிடும் இந்த நாடு...!!! Relaxplzz ![]() |
Posted: 17 Nov 2014 07:38 AM PST |
Posted: 17 Nov 2014 07:15 AM PST வீட்டில் வளர்ந்த கோழிக்குஞ்சை விளையாட்டாய் அந்தச் சிறுவன் கொன்றான். அதை பார்த்துவிட்ட அக்கா, அம்மாவிடம் சொல்வதாய் மிரட்டியே அவனை எல்லா வேலையும் வாங்கினாள். ஒருநாள், மனம் பொறுக்காமல், அம்மாவிடம் சொல்லி அழுதான் சிறுவன். அம்மாஅவனை மன்னித்தாள் கோழிக்குஞ்சு கொலை, நாம் செய்யும் தவறுகள். மிரட்டும் அக்கா நம் குற்றவுணர்வு. மன்னிக்கும் அம்மா – சாமி கடவுள் நம்மை ஒருமுறை மன்னிப்பதே மறுமுறை தவறு செய்யாமல் இருப்பதற்குத்தான்!! :) :) Relaxplzz |
நடிகன்டா ......!! Posted: 17 Nov 2014 06:45 AM PST |
Posted: 17 Nov 2014 06:37 AM PST |
Posted: 17 Nov 2014 06:15 AM PST மூணு பேரு, டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோல வேலை செய்றவங்க ஒரு ஜூவுல மீட் பண்ணாங்க, மூணு பேரும் க்ளாஸ் மேட்ஸ்....... அப்ப ஒருத்தன் நம்மள்ல யாரு பெஸ்ட்னு ஒரு சின்ன போட்டி வெச்சுப்பார்க்கலாம்னான். மூணு பேரும் அங்க இருந்த ஒரு குரங்க சிரிக்க வெக்கிறதுன்னு முடிவாகுச்சு. மொதல்ல இன்ஃபோசிஸ்காரன். இன்ஃபோசிஸ் கல்ச்சரான பேசியே சரிக்கட்டுற டெக்னிக்க ஃபாலோ பண்ணி ஜோக்சா சொன்னான்........ குரங்கு அசையவே இல்ல....... அடுத்து விப்ரோக்காரன் அவங்க ப்ராக்டிகல் ஒரியண்டட். கோமாளி மாதிரி சேட்டை பண்ணி காட்டுனான். சைகை காட்டுனான். ம்ஹூம்.. குரங்கு கொஞ்சம் கூட ரியாக்சன் காட்டல. அடுத்து டிசிஎஸ்காரன். குரங்கு பக்கத்துல போய் காதுல என்னமோ சொன்னான். உடனே குரங்கு பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சிருச்சு. மத்த ரெண்டு பேருக்கும் ஆச்சர்யம், இருந்தாலும் தோல்விய ஒத்துக்காம, சரி இன்னொரு ரவுண்டு வெச்சுக்கலாம். பட் இந்த வாட்டி குரங்கை அழ வைக்கனும் அப்படின்னாங்க. மறுபடியும் மொதல்ல இன்ஃபோசிஸ்காரன் வந்து சோகமான உருக்கமான விஷயங்களா சொன்னான். குரங்கு கண்டுக்கவே இல்லை. அடுத்து விப்ரோக்காரன். அழுகுற மாதிரி ஆக்ட் பண்ணி காட்டுனான். அதையும் குரங்கு சட்டை பண்ணலை டிசிஎஸ்காரன், வந்து மறுபடியும் குரங்கு காதுல போய் என்னமோ சொன்னான். உடனே குரங்கு ஓன்னு அழ ஆரம்பிச்சிடுச்சு. ரெண்டு பேருக்கும் அதிர்ச்சியா போச்சு, இதையும் ஒத்துக்காம இன்னொரு டெஸ்ட் வெக்கனும்னு முடிவு பண்ணாங்க. இந்த வாட்டி குரங்கை ஓடவைக்கனும்னு சொல்லிட்டாங்க. வழக்கம் போல இன்ஃபோசிஸ்காரன் முதல்ல வந்தான். குரங்க பார்த்து குரைச்சான். பயமுறுத்துனான். எந்திரிச்சி ஓடுன்னு கெஞ்சிப்பாத்தான். வழக்கம் போல குரங்குபாட்டுக்கு பேசாம உக்காந்திருச்சு. விப்ரோக்காரன் வந்து குரங்கை புடிச்சி தள்ளிவிட்டான். வெரட்டி பார்த்தான். குரங்கு அசரவே இல்ல. டிசிஎஸ்காரன் இந்தவாட்டியும் குரங்கு காதுல போய் என்னமோ சொன்னான். அதைக் கேட்டதும் உடனே குரங்கு தலைதெறிக்க ஓடி போயிருச்சு.... கடைசியா வேறவழியில்லாம ரெண்டு பேரும் தோல்விய ஒப்புக்கிட்டாங்க. டிசிஎஸ்காரன்கிட்ட அப்படி குரங்கு காதுல என்னதான் சொன்னேன்னு கேட்டானுங்க. டிசிஎஸ்காரன் சொன்னான். ஃபர்ஸ்ட் குரங்குகிட்ட நான் டிசிஎஸ்ல வேல செய்றேன்னு சொன்னேன், உடனே சிரிக்க ஆரம்பிச்சிடுச்சு, அடுத்து என்னோட சம்பளத்த சொன்னேன், அது அழுதுடுச்சு. கடைசியா டிசிஎஸ்கு வேலைக்கு ஆள் எடுக்கதான் இங்க வந்திருக்கேன்னு சொன்னேன்........ அது ஓடியே போய்டுச்சி.... :O :O Relaxplzz |
Posted: 17 Nov 2014 06:00 AM PST ஒரு பார்வையற்ற நாயகன் ************************************* எனது சொந்த ஊர் பள்ளிக்கரணை அடுத்த ஜல்லடியன்பேட்டைதான். என் தந்தை பாலன், லாரி டிரைவராக இருந்தார். தாய் வள்ளியம்மாள். நான் ஏழாவது மகன். எனக்கு பிறந்ததில் இருந்தே கண்பார்வை கிடையாது. சிறு வயதில் எனது சகோதரர்களுடன் கிணற்றில் குளிக்க செல்வேன். எனது அண்ணன் தேவநாதன் தான் எனக்கு நீச்சல் கற்று கொடுத்தார். எனக்கு, 20 வயதாக இருந்தபோது, எங்கள், வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு கிணற்றில் ஒருவர் இறந்து மூழ்கிவிட்டார். கற்களுக்கு அடியில் சிக்கிய அவரை மீட்க முடியாமல் பலர் தவித்தனர். அப்போது, நான் தைரியமாக குதித்து அடியில் சென்று அவரது உடலை மீட்டு வந்தேன். அதை பாராட்டி, எனக்கு கணிசமான பணம் கொடுத்தனர். பார்வையற்ற எனக்கு யாரும் வேலை கொடுக்காததால் அதையே பணியாக செய்தால் என்னவென்று தோன்றியது. அதன் பிறகு அதே தொழிலாக மாறிவிட்டது. சுற்றுவட்டாரத்தில் யாராவது கிணறு, குளம், ஏரியில் விழுந்தால் காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் என்னை அழைப்பர். எவ்வளவு ஆழத்தில் இருந்தாலும் நான் உடலை மீ்ட்டு தருவேன். அதற்கு தகுந்த பணம் கொடுப்பார்கள். கடைசியாக வேளச்சேரி ஏரியில் இருந்து எடுத்த உடலுடன் சேர்த்து இதுவரை 148 உடல்களை மீட்டு வந்துவிட்டேன். நான், 60 அடி ஆழத்தில் உடல் இருந்தாலும் மூச்சை பிடித்து உள்ளே சென்று நீண்ட நேரம் தேடி உடலை கொண்டு வந்துவிடுவேன். கால்கள்தான் எனக்கு கண்கள். அதன் மூலமே உடல்களை தேடுவேன். கடந்த 20 ஆண்டுகளாக இந்த தொழிலில் இருந்தாலும் படிப்பறிவு இல்லாத எனக்கு அரசு பணி பார்க்க வேண்டும் என்ற ஆவல் உண்டு. எனது உணர்வுகளை காவல்துறை, தீயணைப்பு துறை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துளேன். ஆனால், பலன் கிடைக்கவில்லை. உடலை எடுக்கும்போது மட்டும் ஒரு தொகை கொடுத்து ஓரம் கட்டி விடுவர்.வெடிகுண்டுகளை கண்டறிய நாய்களை அரசு பணியில் வைத்துக் கொள்கின்றனர். முப்படைகளில் ஒன்றில் குதிரைகளை கூட அரசு பணியில் அமர்த்திகொள்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக காவல்துறை, தீயணைப்பு துறைக்காக நான் செய்யும் இதே தொழிலை அரசு பணியாக மேற்கொள்ள தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என்பது எனது ஒரே ஒரு கோரிக்கை. இவ்வாறு சுந்தர்ராஜன் தெரிவித்தார். நன்றி : தினமலர் Relaxplzz ![]() "முகங்கள்" |
Posted: 17 Nov 2014 05:46 AM PST |
Posted: 17 Nov 2014 05:30 AM PST |
Posted: 17 Nov 2014 05:14 AM PST |
Posted: 17 Nov 2014 04:50 AM PST |
Posted: 17 Nov 2014 04:10 AM PST நிம்மதியாய் இருக்கும் போது மனைவியைத் தேடுவதும், * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * மனைவி வந்த பிறகு நிம்மதியைத் தேடுவதுமே ஆணின் வாழ்க்கைத் தேடலாகும். Relaxplzz |
Posted: 17 Nov 2014 03:57 AM PST காலை வகுப்பிலே "வீட்டுப்பாடம் செய்யாத பிள்ளைகள் பெஞ்சில் ஏறி நில்லுங்கோ" என்று ஆசிரியர் சொல்ல, செய்யாதவர்கள் எழுந்து நின்றார்கள். அதிலே ஒரு குழந்தை மட்டும் கொஞ்சம் பாவமாய் அழுமாப்போல நின்றது. ஆசிரியர் அந்த குழந்தையை "இங்கே வாம்மா" என்று அழைத்தார். "வீட்டுப்பாடம் செய்தியா?" "இல்ல சார், எனக்கு அது விளங்க இல்ல" "வீட்டில அம்மாவிடம் கேட்டிருக்கலாமே" குழந்தை தயங்கியபடியே சொன்னது. "எனக்கு அம்மா இல்ல" ஆசிரியர் துணுக்குற்றுபோனார். அடடா அவசரப்பட்டு பெஞ்சில்ஏற்றிவிட்டோமோ என்று வருந்தினார். "அம்மா இல்லாட்டி அப்பாவிடமாவது கேட்டிருக்கலாமே கண்ணா" "எனக்கு அப்பாவும் இல்லை சேர்" குழந்தை பயந்த படியே சொல்ல ஆசிரியருக்கு தூக்கிவாரிப்போட்டது. அம்மாவும் இல்லாமல் அப்பாவும் இல்லாமல் இந்த குழந்தை என்ன பாடுபட்டிருக்கும்? ச்சே எப்படிப்பட்ட்ட கொடுமையை செய்துவிட்டோம் என்று வருந்தினார். குழந்தையை பார்க்க பார்க்க ஆசிரியரின் கண்கள் கலங்கிவிட்டது. "கண்ணம்மா .. இங்க பாரு .. அம்மாவும் அப்பாவும் இல்லையா? .. பரவாயில்ல..நாங்க எல்லாம் இருக்கிறம் தானே .. கவலைப்படாதே. அது சரி, வீட்டில நீ யாரோட இருக்கிறாய்?" குழந்தை அதே உணர்ச்சியோடு சொன்னது. "மம்மி டாடியோட" :O Relaxplzz ![]() # படித்ததில் பிடித்தது # - 4 |
Posted: 17 Nov 2014 03:39 AM PST |
Posted: 17 Nov 2014 02:58 AM PST ஒரு பெரிய பாக்டரி .. கிட்ட தட்ட 1000 பேருக்கு மேல வேலை பாக்குற கம்பெனி.. எல்லாம் நல்ல படியாதான் போய்கிட்டு இருந்துச்சி… ஒரு நாள் அந்த முதலாளி பாக்டரி குள்ள ரௌண்ட்ஸ் வந்தாராம் … அப்போ ஒருத்தன் "மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்ன சுகம் " அப்படின்னு படுத்து கிடந்தான் .. அவருக்கு வந்தது பாரு கோபம்… இருந்தாலும் அடக்கிகிட்டு, அவன எழுப்பினார் .. "தம்பி நீ மாசம் எவ்வளவு சம்பளம் வாங்குற"? அப்படின்னு கேட்டாரு… அதுக்கு அவன் ஒன்னும் புரியாம முழிச்சிக்கிட்டு "மூவாயிரம் ருபாய் சார் " அப்படின்னான். உடனே அவரு பைக்குள இருந்து பர்ச எடுத்து ஒரு பத்தாயிரம் ருபாய எடுத்து தூக்கி எரிஞ்சாறு … "இதுல உன்னோட மூணு மாச சம்பளத்துக்கு மேலே ஒரு ஆயிரம் ருபாய் அதிகமா இருக்கு .. நான் இங்க சும்மா படுத்து கிட்டு இருக்குரவனுக்கு சம்பளம் குடுக்க்ரதுக்கு இந்த பாக்டரிய நடத்தல.." அப்படின்னு சொன்னாரு.. அவன் ஒரு நிமிஷம் அவர குறு குருன்னு பார்த்தான் .. அப்புறம் அந்த பணத்த வாங்கிகிட்டு வேகமா வெளிய போய்ட்டான் … எல்லாரும் வாயடைச்சி போய் நின்னாங்க .. அப்புறம் முதலாளி எல்லாரையும் கர்வமா பார்த்து … "இனிமே எல்லாம் அப்படி தான் " (தமிழ் பட டயலாக் ;-) ) அப்படின்னாரு. அப்புறமா கணக்குபிள்ளய கூப்பிட்டு "யார்யா அவன் ??" அப்படின்னு கேட்டாரு… அதுக்கு அந்த கணக்கு பிள்ளை சொன்னான் … " டீ கொண்டு வந்த பையன் மொதலாளி .. " இது எப்படி இருக்கு … எச்சி கிளாஸ் எடுக்க வந்தவனுக்கு பத்தாயிரம் குடுத்த முதலாளிய நெனைச்சா எப்படி தெரியுமா இருக்கு தெரியுமா ??? # நீ கேளேன் … மச்சான் .. நீகேளேன் … அண்ணே .. நீங்க கேளுங்களேன் ;-) Relaxplzz ![]() குசும்பு... 3 |
Posted: 17 Nov 2014 02:29 AM PST |
Posted: 17 Nov 2014 02:02 AM PST திருமணமான ஒரு ஆணின் அன்பு இரு பெண்களிடம் இருக்கும்....... ஒன்று பெற்ற தாய்... மற்றது கட்டிய மனைவி.... ஆனால், திருமணமான ஒரு பெண்ணின் அன்பு முழுவதும் ஒரு ஆணின் மீது மட்டுமே இருக்கும்....... அது அவளைக் கரம் பிடித்த காதல் கணவனிடம் மட்டுமே! கணவனுடன் கானகம் சென்ற சீதையும் காதலனுக்காக காத்திருந்த தமயந்தியும் கதைகளில் கண்ட நிஜங்கள்.... சில சமயம் ஒரு தாயின் அன்பையும் கடந்து விடுகிறாள் ஒரு தாரம்.... பல சமயம் ஒரு தாயாகவே மாறி விடுகிறாள்..... மனைவியின் அன்பை மிஞ்சியது எதுவும் இல்லை.. ♥ #குடும்பஸ்தன்_பாடசாலை @ Relaxplzz ![]() குடும்பஸ்தன்_பாடசாலை |
Posted: 17 Nov 2014 01:46 AM PST |
Posted: 17 Nov 2014 01:30 AM PST |
Posted: 17 Nov 2014 01:10 AM PST இந்தியாலே கிரிகெட் = சூதாட்டம் சினிமா = விபச்சாரம் அரசியல் = அநியாயம் மீடியா = வெறும் விளம்பரம் கல்வி = வியாபாரம் சாராயம் = அத்தியாவசியம் நேர்மை = அனாவசியம் அரசுத்துறை = அதிகாரம் காவல்துறை = கேவலம் ரௌடிசம் = தாராளம் ஏழைகள் = ஏராளம் மக்கள் வாழ்க்கை = போர்களம். (y) (y) Relaxplzz |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment