Friday, 21 November 2014

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


#நன்றி facebook நண்பர்களே .. நீங்கள் சாதித்தீர்கள் #படித்து# பகிரவும் உங்களால்...

Posted: 21 Nov 2014 08:25 AM PST

#நன்றி facebook
நண்பர்களே ..

நீங்கள் சாதித்தீர்கள்
#படித்து# பகிரவும்

உங்களால் கை இழந்த ஒருவருக்கு கையும் , கால் இழந்த ஒருவருக்கு காலும்
#ஈரநெஞ்சம்.குழு
சார்பாக இலவசமாக
கிடைக்கப்பட உள்ளது.

ஆம் முன்னர்
நாங்கள் பதிவிட்டிருந்த
கோவை ஈர நெஞ்சம்
சேவை மையத்தினைப்
பற்றி நீங்கள் பகிர்ந்ததில்
இரண்டு மாற்றுத்திறனாளியின்
வாழ்வில் புது வெளிச்சத்தை
ஏற்றி விட்டீர்கள்.

#நேற்று
ஒருவர் ஊட்டியில் இருந்து அழைத்தார் , மற்றொருவர் நாளை மறுநாள் வருகிறார் . இருவரையும் பற்றி தகவல் பிறகு தருகிறேன் .

வயதானவர்கள் ஆதரவற்று இருந்தால் அவர்களுக்கு யாருமே இல்லாத நிலையில் ,
அவர்களைப் பற்றி
எங்களிடம் தெரிவிக்கவும்.
நாங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்.

#மகேந்திரன் ( ஈரம் மகி ) 9080131500

பகிரவும் ஏழை எளியோர்
பயன்படட்டும்..!
ஈரநெஞ்சம் குழுவிற்கு
என் சிரம் தாழ்ந்த
வணக்கங்கள்.
தொடரட்டும்
உங்கள் சேவை.,!

மேலும் தகவலுக்கு...

" தீமைக்கும் நன்மை செய் "
பொது நல மையம் ..
கமல் ; 7639532370
ராம் ; 9629429139


இந்தியா மூன்று பக்கம் ஊழலாலும், ஒரு பக்கம் கடனாலும் சூழப்பட்ட நாடு... தோசை கல்ல...

Posted: 21 Nov 2014 06:14 AM PST

இந்தியா மூன்று பக்கம் ஊழலாலும்,
ஒரு பக்கம் கடனாலும் சூழப்பட்ட
நாடு...

தோசை கல்லு உள்ளே இருந்தால்
உயர்தர ஹோட்டல்..
வெளியே இருந்தால்
சாதா ஹோட்டல்..

வாக்கிங்
போறது எளிதானது தான்...
வாக்கிங் போக
எந்திரிக்கிறது தான்
கஸ்டமானது..

உலகத்துலயே ஸ்பீட் பிரேக்
ஓரத்துல
ஒரு பாதையை உருவாக்கி அதுல
வண்டி ஓட்டுற டெக்னிக் நம்மள
தவிர யாருக்கும் வராது..

கீழே விழுந்ததும்
அடிபடவில்லை என்பதை விட,
யாரும்
பார்க்கவில்லை என்பதே நிம்மதி..

மதம் மாறினால் தான் கடவுள்
ஆசீர்வதிப்பார் என்றால்
உண்மையில் அவர் கடவுள்
இல்லை, கட்சித் தலைவர்..

ப்யூட்டி பார்லர் போன
மறுநாளே ஐஸ்வர்யா ராய் போல
ஃபீல் பன்னுவாங்க பெண்கள்..
ஜிம்முக்கு போன
அன்னிக்கே அர்னால்டு போல ஃபீல்
பன்னுவாங்க ஆண்கள்..

இந்த ஜெனரேஷன்ல
ஆல்கஹாலுக்கு அடிமையானவன
விட ஆன்ட்ராய்டுக்கு
அடிமையானவன்தான் ஜாஸ்த்தி.

பால்விலை கூடுனது கூட
கவலயா தெரில...டீக்கடைல டீ
விலைய எப்ப கூட்ட
போறாங்கேனுதான் திக்
திக்குனு இருக்கு ...
# டெய்லி நாலு டீ குடிப்போர்
சங்கம

ஃபேஸ்புக் டுவிட்டர் பக்கமெல்லாம்
வராதவர்கள் தன் வாழ்க்கையில் முன்னேறிக்
கொண்டிருக்கிறார்கள்
என்று அர்த்தம

இப்பெல்லாம் ஏ.டி.எம்-இல் பணம்
எடுத்தவுடன் பணத்தை எண்ணுவதற்கு முன்பு,
இது எத்தனையாவது முறை பணம் எடுக்கிறோம்
என்று தான் எண்ணுகிறோம

ATM - Anju Time Mattum
(அஞ்சு டைம் மட்டும்)

குழந்தைங்க நம்மகிட்ட
கதை கேட்டதெல்லாம் அந்தக்காலம்..
இப்பல்லாம், 'ஏன் ஹோம்வொர்க்
செய்யல?'னு கேட்டா அதுங்களே கதைகதையா சொல்லுதுங்க..

கிணத்த
தூர்வாருவோம்னு கெளம்புனாங்கெ!!
இப்ப
கெணத்தகாணோம்னு சொல்றாங்கெ!!
இவனுகளே மண்ண
போட்டு மெத்திருப்பானுகளோ!!
# 300பேரின் சுவிஸ் பணம் மாயம்!!

காய்கறி விலை மளமளவென
உயர்ந்துவரும் நிலையில்,
கீரை விலை ஏறாமல் சில்லறயில்
கிடைப்பது, நம் உடல்
ஆரோக்கியத்துக்க
ு கொடுக்கப்பட்டிருக்கும்
கடைசி வாய்ப்பு..

ஆபிஸ் போற அன்னைக்குலாம் 9
மணி வரைக்கும் தூக்கம் வரும்
சண்டே மட்டும் ஏழு மணிக்கு மேல
வராது # விதி

பியூட்டி பார்லர்க்கும்
ஃபுல்லா மேக்அப் போட்டு தான்
போகனுமா?
என்னம்மா இப்படி பண்றிங்களேமா

தூய்மை இந்தியாதிட்டம்!!
தேவையான பொருட்கள்:
வெளக்கமாறு 1
கேமரா 4

மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது
என சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவு
# அப்டியே நெட் கட்டணத்தயும்
உயர்த்தகூடாதுன்
னு உத்தரவு போட்ருங்கயா.....

via-mohan kumar

என் தெய்வம் !!! முழுகாமல் இருப்பதை முதன்முதலில் அறிகையில் முகமலர்ந்து நின்றவள்...

Posted: 21 Nov 2014 12:53 AM PST

என் தெய்வம் !!!

முழுகாமல் இருப்பதை முதன்முதலில் அறிகையில் முகமலர்ந்து நின்றவள் !

இரவுகளின் மடியில் எண்ணற்ற நாட்கள் என்னுருவம் தேடியவள் !

கனவுகளின் வழியே காவல் காக்கும் கடமைச் செய்தவள் !

காணாமல் எனைக் காதலித்தவள் கர்ப்பத்திலேயே எனக்கு பெயர் வைத்தவள் !

என் தந்தையின் ஒருதுளி விந்தில் வந்துதித்த என்னை விரயப்படுத்தாமல் கரை சேர்க்க மேகம் பொழியும் தண்ணீரை விடவும் கண்ணீர் அதிகம் சிந்தியவள் நான் நோயுற்றுபோது மருத்துவச்சி ஆனவள் !!

காவல்துறைப் பணியை கையிலெடுத்து என் காணாமல் போன பொம்மையைக் கண்டுபிடித்துத் தந்தவள் !!

மரங்களுக்கும் குளிரும் மார்கழிக் குளிரில் முந்தானைத் தளர்த்தி என் முழுவுடலும் போர்த்தி கதகதப்புத் தந்தவள் !!

பிஞ்சுவிரல் பார்த்து பஞ்சுவிரல் என்று நெஞ்சுக் கூத்தாடி கொஞ்சி மகிழ்ந்தவள் !!

கண்களில் விளக்கேற்றி கைகளை விசிறியாக்கி கண்தூங்க வைத்தவள் !!

மழைபோல் அழுகையில் மடியில் விழுகையில் மார்போடு அனைத்து மகிழ்ச்சி அளித்தவள் !!

எட்டியவளை உதைக்கையில் என்பிள்ளை
உதைக்கிறது என்றெண்ணி மகிழ்ந்தவள் !!

நீச்சல் கற்றுத் தந்தவள் !!
கால்சட்டை போட்டு விட்டவள் !!

எண்ணெய் தேய்த்து தலைவாரி பவுடர் பூசி தன் முகத்தை என் முகத்தில் உரசித் தேய்த்து
என் கண்ணே
பட்டுடும் ன்னு பெருமூச்சி விட்டவள் !!

உறங்கிய பிறகு என் தலைமுடிக் கோதி உவகை அடைந்தவள் !!

கண்ணீரில் கவலையில் தலையணை
நனைத்தவள் !
வெந்நீரில் நான்குளிக்க விறகாக எரிந்தவள் !!
நான் படிக்க விழித்திருந்த விளக்கவள் !!

திரும்பிப் பார்க்கிறேன் ...

அவளுக்கான வாழ்க்கையில் அவளின் தேடல் அத்தனையும் எனக்கானவை;
விண்மீன் கணக்கானவை .!

ஆட்டுக்காறி எடுத்து அற்புதமாகச் சமைத்து அப்பா,தங்கையை விடவும் ஜந்தாறு துண்டுகளை அதிகமாக எனக்கு வைக்கும் அவள் அன்புக்கு என்னதான் தர இயலும் என்னைவிட பெரிதாய் !!!..

நான் உன்னை காதலிக்கிறேன் அம்மா ...
( I love you amma )

இனிய மாலை வணக்கம் ..

இவண்
- கமல்


20 உயிர்கள் உணவின்றி தவிக்கிறது .. உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் .. கண்...

Posted: 21 Nov 2014 12:40 AM PST

20 உயிர்கள் உணவின்றி தவிக்கிறது ..

உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் ..

கண்டிப்பாக படிக்கவும்..
share பன்னவும் ....

அன்பு நண்பர்களே.!
தருமபுரி மாவட்டம்
ஊத்தங்கரை எனும்
ஊரில்.,
தீமைக்கும் நன்மை செய்
அன்பு இல்லம் தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு
குழந்தைகளும்
முதியவர்களும்
தத்து எடுக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு
உங்கள் வீட்டில்
இருக்கும் பயன்படுத்தாத
பழைய துணிகள்
பள்ளிக் குழந்தைகளுக்கு
பாட புத்தகங்கள்
மீதமாகும் விழாக்கால உணவுகள்
வயிராற உணவருந்திடவும்
சில அடிப்படை வசதியின்றி
சிரமப்படும் ஆசிரமத்திற்கு
உதவுங்கள்.

நம் கண்முன்னே
பசியாலும் வறுமையிலும்
உயிர்கள் துடிக்கிறது
நாம் ஏதேனும் உதவலாமே.

ரூ.1000 இருந்தால் போதும்
ஒரு வேளை வயிராற உணவு உண்பார்கள்..!

நம் முன்
ஆதவரற்று அனாதையாய்
நிற்கின்றனர்.
மனித நேயம் அழியவில்லை என்று
உணர்த்துவோம் உலகிற்கு,

அன்புக் கரம் நீட்டி
அரவணைப்போம் நம்
சொந்தங்களை.

உங்களால் முடிந்த பண உதவியோ அல்லது பொருளாகவோ,
நேரிலோ ,வங்கி முலமாகவோ உதவுங்கள் .

சக உயிர்கள் உணவின்றி தவிக்கிறது இதை படித்து பகிருங்கள் உலகம் அறியட்டும் உதவும் எண்ணம் கொண்டோருக்கு போய் சேர வேண்டுகிறோம்..

நண்பர்களே இணையுங்கள் இந்த ஆசரமத்தை காப்போம் ...

இவர்களுக்கு ஏதேனும் உதவ விரும்பினால் ..
1) ரேஷன் அரிசி
2) காய்கறிகள்
3 ) மளிகை பொருட்கள்
4) பழைய துணிகள்..
உங்களால் முடிந்ததை கொடுத்து உதவுங்கள் ..

இவர்களை நம் அரசும் கண்டுக்கொள்ள வில்லை
வேளி நாட்டு நண்பர்களின் உதவியும் இல்லை ..

உதவிகள் இன்றி தவித்து வருகிறது ..

## முகவரி ...##

C.sivakumar 26/35 bharathipuram uthangarai krishnagiri Dt
635207.

# bank account ; #

C.sivakumar
Ac no ; 708380125.
IFSC CODE ; IDIB000U005.
MICR CODE ; 635019094 UTHANGARAI BRANCH INDIAN BANK

TNS social service
நிர்வாக இயக்குனர்கள் ;
1 ) C . சிவக்குமார்
்cell ; 9894229155..

2 ) கமல்
7639532370..

3) ராம்
9629429139

வாழ்க. !!! வளமுடன் !!!


0 comments:

Post a Comment