Friday, 24 October 2014

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


படித்ததில் பிடித்தது... என்னா ஒரு வில்லத்தனம்... கணவன் - செல்லம் எந்திாிடா நம்...

Posted: 24 Oct 2014 02:23 AM PDT

படித்ததில் பிடித்தது...

என்னா ஒரு வில்லத்தனம்...

கணவன் - செல்லம் எந்திாிடா நம்பள பாக்க அப்பா அம்மா வந்திருக்காங்க

மனைவி - கடுப்புடன் கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் வந்து ஒரு மாசம் கூட ஆகுல அதுக்குள்ள வந்துட்டாங்களா ? வா்றவங்க ஒரு போன் பண்ணிட்டாவது வர மாட்டாங்க, இனி காலையில டிபன், மதியம் சாப்பாடுன்னு மூணு நேரமும் வடிச்சி கொட்றத்துகுள்ள என் உசுரு போயிடும்

கணவன் - ஏய் கொஞ்சம் மெதுவா பேசு நீ பேசுறத கேட்டு கோவிச்சிகிட்டு அவங்க போயிடப் போறாங்க...
மனைவி - போனா போவட்டும் அப்டியாவது புத்தி வருதான்னு பாக்கலாம்

ஐந்து நிடங்கள் கழித்து...

கணவன் - உண்மையாலுமே அவங்க போயிட்டாங்கடி.
.
மனைவி - ஐயா....! ஜாலி

கணவன் - போறப்ப அத்தையையும் மாமாவையும் பாக்கவே ரோம்ப கஷ்டமா இருந்தது

மனைவி (சற்று அதிா்ச்சியுடன்) - வந்தது எங்க அப்பா அம்மாவா ?

கணவன் (மனதிற்குள் சிாித்தி கொண்டே ) - ஆமா

கடவுள் உருவத்தை லெக்கின்ஸில் அச்சிட்டதை கண்டித்தவர்கள் தான்,லஷ்மி வெடி வாங்கி வெ...

Posted: 24 Oct 2014 01:55 AM PDT

கடவுள் உருவத்தை லெக்கின்ஸில் அச்சிட்டதை கண்டித்தவர்கள் தான்,லஷ்மி வெடி வாங்கி வெடிக்கிறார்கள்...

உபயோகமான வரிகள். படித்து பகிருங்கள் 1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலு...

Posted: 23 Oct 2014 11:21 PM PDT

உபயோகமான வரிகள். படித்து பகிருங்கள்

1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், "Good touch", "bad touch" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.

2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.

3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.

4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.

5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!

6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.

7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்

8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.

9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!

10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.

11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!

12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ, அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.

13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.

14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்!

15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.

16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!

17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.

18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!

19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.

20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். "All work and no play makes Jack a dull boy"

21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள்.

சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.

22. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!

23. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!

25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல!

தனி கட்சி ஆரம்பிக்கப் போறார்னு சொன்னாங்க, பிஜேபி னு சொன்னாங்க,அதிமுக னு கூட சொன்...

Posted: 23 Oct 2014 09:59 PM PDT

தனி கட்சி ஆரம்பிக்கப் போறார்னு சொன்னாங்க, பிஜேபி னு சொன்னாங்க,அதிமுக னு கூட சொன்னாங்க... கடைசியில கம்யூணிஸ்ட்ல இல்ல சேர்ந்திருக்காரு.
#நீ_நடிகண்டா

போஸ்டர்ர்ர்: விஜய் முதல்வரா... விஜய் ரசிகர்கள் விஜய்க்கு நல்லது செய்யறாங்களா? இ...

Posted: 23 Oct 2014 09:19 PM PDT

போஸ்டர்ர்ர்: விஜய் முதல்வரா...

விஜய் ரசிகர்கள் விஜய்க்கு நல்லது செய்யறாங்களா? இல்லை கெட்டது செய்யறாங்களா? ஒண்ணும் புரியமாட்டேங்குது.கத்தி படத்தை வெளியே கொண்டுவருவதற்குள் படாதபாடு பட்டுட்டார்.இந்த நிலையில் திருச்சியில் கத்தி பட போஸ்டரில் முதல்வரே வருக என்று போட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர் விஜய்யின் விசிறிகள்.....


0 comments:

Post a Comment