Relax Please: FB page daily Posts |
- சுமைதாங்கி மரம். ஒரு ஊரில் ஒரு தச்சர் இருந்தார்.காலையிலே அவருடைய தொழிலுக்கு தேவ...
- உனக்கு “சரி” என்று படுவதையே, “சரி” என்று பிறரிடம் சாதிக்காதே... இன்று “சரி” என...
- ப்ளிப்கார்ட்(Flipkart.com) பக்கமே போவல.நமக்கும் மன்னிப்பு கேட்டு மெயில் அனுப்பிச...
- தேவதைகள் பூமியில் பிறக்கிறார்கள் <3
- :)
- ரெண்டு பெண்கள் பேசிட்டு இருந்தாங்க. என் கணவர் தினமும் ராத்திரி லேட்டா தான் வீட்ட...
- குழந்தை ஆரோக்கியமாகவும் புத்திக் கூர்மையுடனும் பிறக்க‌…. முதலில் குழந்தைக்கு ஏத...
- பண்டிகை நாள் நெருங்க நெருங்க, பிள்ளைகளுக்கு புத்தாடை எடுத்துத் தர முடியாமல் தவிக...
- நானும் கொஞ்ச நாளா "AXE" (Body spray)அ உடம்பெல்லாம் ஊத்திக்கொண்டு தெருத் தெருவா ச...
- :)
- இதை எழுதிய புண்ணியவான் யாருங்க ..சிரிச்சு சிரிச்சு வயறு வலிக்குது :P :P :P தமிழ...
- ஒரு நண்டு கடற்கரை ஓரத்தில் ஓடி ஓடி தன்னுடைய காலடிகளை தானே ரசித்து கொண்டு விளையாட...
- என்னவனே.. உன் வார்த்தைகளின் இடையே பிறக்கும் இடைவெளிகளை வைத்தே அறிந்து விடுவேன்,...
- :)
- ரெண்டு நாளா கடுமையான பல் வலி.....நேத்து லைட்டா கன்னம் வீங்கி இருந்துச்சு.... ஆபீ...
- கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை!!!! உடல் நலமின்றி அமெரிக்கா மருத்துவமனையில...
- காலைல கீரைக்கார அம்மாவிடம் கீரை வாங்கிவிட்டு வரும்போது எதிர் வந்த நண்பர் ஒருவர்,...
- :)
- ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்? 4 வயதில்- என் அப்பா தான் பெஸ்ட்...
- ஏன் வேடிக்கை பார்க்குறாங்க...? பொது இடங்களில் ஆண் அடிபடும்போது சிரிக்கும் மக்கள...
- பாடசாலைக்கு முதல் நாள் போகும்போதும் அழுகிறோம்... பாடசாலை வாழ்க்கை முடியும் போது...
- :)
- எல்லோர் மொபைலிலும் ஏராளமான,விதவிதமான பெயர்கள்.. ஆனால் அனைவர் மொபைலிலும் அம்மாவின...
- ஒரு நாள் இரவு நாராயணசாமி வெகு நேரம் கழித்து வீட்டுக்கு வந்தார். கதவைத் தட்டினார...
- ஒரு பெண்ணான ஒருவள் தன் கணவனை இழந்துவிட்டால், அவளை ஓர் ஆணானவன் மறுமணம் புரிகிறான்...
- வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே. என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய். செய்வதை...
- :)
- கொஞ்சம் சிரிங்க பாஸ்... ;-) ரெண்டு மணிக்கு வீட்டில் நுழைந்த திருடனை அடித்து உதை...
- சுத்தமான இல்லமே சுகம் தரும் இல்லம்; சுத்தமான இல்லமே சுகம் தரும் இல்லம். நாம் வச...
- உறவுகள் மனதில் சில உறுத்தல்களோடு சேர்ந்திருப்பதை விட சில நல்ல நினைவுகளோடு பிர...
Posted: 09 Oct 2014 09:15 AM PDT சுமைதாங்கி மரம். ஒரு ஊரில் ஒரு தச்சர் இருந்தார்.காலையிலே அவருடைய தொழிலுக்கு தேவையான பொருட்களை எல்லம் எடுத்துகொண்டு இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு கிளம்பினார். போகும் வழியில் அவருடைய வாகனம் ரிப்பேராகி நின்றது. அதை தள்ளிக்கொண்டே பொய் மெக்கானிக் கடையில் பழுதுபார்த்து ,ஒரு மணி நேரம் தாமதமாக வேலைக்கு போய் சேர்ந்தார்.முதலாளி கடுமையாக அவரை திட்டினார். மிகுந்த வேதணையுடன் அவர் வேலைகளை ஆரம்பித்தார்.சுத்தியலால் அடிக்கும் போது கை தவறி அவர் விரலில் காயம் பட்டது.காயத்துக்கு துணியால் கட்டு போடுகொண்டு மீண்டும் வேலையை தொடர ஆரம்பித்தார்.சிறிது நேரம் கழித்து அவருடைய உளி உடைந்து விட்டது. என்னடா இது காலையில் இருந்து நமக்கு நேரமே சரி இல்லையே என்று முனுமுனுத்துக்கொண்டே மீதி வேலைகளையும் முடித்தார்.முதலாளியிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு புறப்பட தயாரானார். வண்டியை கிளப்ப தயாரானார் ஆனால் வண்டி கிளம்ப மறுத்து விட்டது.இருட்டி போய் விட்டது இனி உன் வண்டியை ரிப்பேர் பண்ணி எப்படி எடுத்து போவாய், வா என் வண்டியில் உன்னை வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன் என்று சொன்னதும் முதலாளியுடன் கிளம்பினார். போகும்வழியில் பாவம்யா நீ காலையில் இருந்து உனக்கு சோதனையாகவே நடந்துகிட்டு இருக்கு என்று ஆறுதல் சொல்லிக்கொண்டே கூட்டிகிட்டு போனார். தச்சர் வீடு வந்ததும் யோவ்! தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வாயா என்று முதலாளி சொன்னார்.வீட்டுக்குள்ள வாங்க முதலாளி என்று அவரை உள்ளே அழைத்தார்,முதலாளியும் அவர் பின்னாடியே சென்றார்.தச்சர் வீட்டு வாசலில் இருக்கும் மரத்தின் மீது சிறிது நேரம் கை வைத்திருந்துவிட்டு உள்ளே சென்றார்.முதலாளிக்கு ஒன்றும் புரியவில்லை. தச்சர் உள்ளே நுழைந்தவுடன் அவருடைய குழந்தை ஓடி வந்தது,குழந்தையை பார்த்தவுடன் தூக்கி அனைத்து முத்தம் கொடுத்தார்.தன் மனைவியை பார்த்ததும் புன்முறுவலுடன் தன் முதலாளியை அறிமுகபடுத்திவிட்டு தண்ணீர் எடுத்து வரச் சொன்னார்.காலையில் நடந்த எந்த பிரிச்சணையையும் நினைத்து பார்க்காமல் எப்படி இவரால் சகஜமாக இருக்கமுடிகிறது என்று முதலாளி வியந்தார்.தச்சர் எந்த வித கவலையும் இல்லாமல் குழந்தையுடன் விளையாடிகொண்டு இருந்தார்.தண்ணீர் குடித்து விட்டு முதலாளி கிளம்ப தயாரானார். வீட்டிற்கு வெளியே வந்தவுடன் தச்சரிடம் கேட்டார் இந்த மரத்தை தொட்டுவிட்டு போனவுடன் காலையில் நடந்த எதை பற்றியும் கவலை படாமல் எப்படி உன்னால் இருக்க முடிந்தது என்றார்.அதுவா முதலாளி இது என்னுடைய சுமைதாங்கி மரம். ஒவ்வொரு நாளும் நான் வேலை முடித்து வந்தவுடன் இந்த மரத்தை தொட்டு என் பாரத்தை இறக்கி வைத்துவிட்டு தான் செல்வேன்.வேலை செய்யும் இடத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடக்கும் அதை எல்லாம் வீட்டிற்குள் எடுத்துகொண்டு போக கூடாது காலையில் வண்டி பழுதானதற்கும் நான் லேட்டாக வந்ததற்கும்,என் கையில் காயம் ஆனதற்கும்,உளி உடைந்து போனதற்கும் என் குடும்பத்தார் எப்படி பொறுப்பாக முடியும்.நான் அவர்கள் மேல் கோவப்படுவது எந்த விதத்தில் நியாயம். காலையில் நான் போகும்போது இந்த மரத்திடம் இருந்து என் பிரச்சனைகளை எடுத்து கொண்டு போவேன் .ஆனால் என்ன ஆச்சரியம் என்றால் நான் மாலை கொண்டு வந்து வைத்து விட்டு போன பிரச்சனைகள் அடுத்த நாள் காலை பாதி அளவு குறைந்து போய் இருக்கும்.தச்சர் சொல்வதை கேட்டு முதலாளி ஆச்சரியப்பட்டு நின்றிருந்தார். நண்பர்களே நீங்களும் நாளையில் இருந்து இதை கடைபிடித்து பாருங்கள்.பிரச்சனைகள் உங்களை கண்டு அஞ்சி ஓடும்... Relaxplzz |
Posted: 09 Oct 2014 09:00 AM PDT உனக்கு "சரி" என்று படுவதையே, "சரி" என்று பிறரிடம் சாதிக்காதே... இன்று "சரி" என்று உனக்கு தோன்றிய ஒன்றே, நாளை "தவறு" என்று மாறிவிடக்கூடும். Relaxplzz ![]() வாழ்வின் மொழி... |
Posted: 09 Oct 2014 08:50 AM PDT ப்ளிப்கார்ட்(Flipkart.com) பக்கமே போவல.நமக்கும் மன்னிப்பு கேட்டு மெயில் அனுப்பிச்சிருக்கானுவ.. #கிறுக்குபயவுள்ளைகளா,எந்திரிங்கடா அண்ணன் மன்னிச்சிட்டேன்... :P :P :P - Kalimuthu |
Posted: 09 Oct 2014 08:40 AM PDT |
Posted: 09 Oct 2014 08:30 AM PDT |
Posted: 09 Oct 2014 08:15 AM PDT ரெண்டு பெண்கள் பேசிட்டு இருந்தாங்க. என் கணவர் தினமும் ராத்திரி லேட்டா தான் வீட்டுக்கு வர்றார். என்ன பண்றதுன்னே தெரியலே-னு சொன்னா முதல் பெண். அதுக்கு ரெண்டாவது பெண் என் கணவர் கூட லேட்டாதான் வந்திட்டிருந்தார். இப்பல்லாம் ஆபீஸ் அஞ்சு மணிக்கு விட்டா, டாண்ணு அஞ்சரைக்கு வீட்டில் இருக்கிறார்-னா முதல் பெண்ணுக்கு செம ஆச்சரியம் அப்படி என்னதான் பண்ணினே ?-னு கேட்டா. ஒரு நாள் வழக்கம் போல அவர் லேட்டா வந்தார். நான் தூக்கக் கலக்கத்துல வேணும்னே, யாரு .. .. முரளியா?-னு கேட்டேன். அவளோ தான் என்னோட ட்ரீட்மெண்ட்னு சொன்னா ரெண்டாவது பெண். முதல் பெண் புரியலையே இதுல அப்படி என்ன இருக்கு?-னு கேட்டதுக்கு ரெண்டாவது பெண் சொன்னாள் வேறொண்ணும் இல்லை. என் கணவரோட பெயர் முரளி கிடையாது .. .கார்த்திக் :P :P Relaxplzz |
Posted: 09 Oct 2014 08:04 AM PDT குழந்தை ஆரோக்கியமாகவும் புத்திக் கூர்மையுடனும் பிறக்க…. முதலில் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லக் பெயரை வைத்து பேசலாம். நிறைய பெற்றோர்களுக்கு என்ன குழந்தை என்று தெரியாமல் எப்படி பெயர் வைப்பதென்று ஒரு சந்தேகம் வரும். ஆனால் இதற்கு ஒரு வழி இருக்கிறது. அது தான் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லப் பெயரை,அதாவது இரு பாலினத்திற்கும் பொதுவான ஏதேனும் ஒரு செல்லப் பெயரை வைத்து அழைக்கலாம். வேண்டுமென்றால் இந்த பெயரை பிறந்த பிறகு மாற்றிக் கொள்ளலாம். * தாயானவள் முதலில் குழந்தையிடம் பேச வேண்டும். இது ஒரு பழைய நம்பிக்கை தான், இருப்பினும் குழந்தைக்கு தாயின் குரலானது மிகவும் பிடிக்கும். அப்படி பேசுவதால் குழந்தையானது அமைதியுடன், தாயின் குரலைக் கேட்டுக் கொண்டு நிம்மதியாக இருக்கும். மேலும் இப்படி பேசுவதால் பிறக்கும் போது அழும் குழந்தை கூட தாயின் குரலை கேட்டதும் அழுகாமல் இருக்கும். * கர்ப்பமாக இருக்கும் பெண் பாட்டு கேட்டால் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் கருவில் இருக்கும் குழந்தைக்கு மென்மையான பாட்டுக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே வீட்டில் ஏதேனும் ஒரு மென்மையான பாட்டை ப்ளேயரில் போட்டு, ஹெட் செட்டை வயிற்றில் வைக்கலாம். அப்படி பாட்டுக்களை கேட்கும் போது குழந்தை வயிற்றில் உதைத்தால் அது சந்தோஷத்தில் நடனம் ஆடுகிறது என்று அர்த்தம் ஆகும். * மேலும் குழந்தை கருவில் இருக்கும் போது எப்போதும் பாசிடிவ்-ஆகவே யோசித்து பேச வேண்டும். இதனால் குழந்தையானது பிறந்த பின்னும் எப்போதும் பாசிட்டிவ்-ஆகவே யோசிக்கும். மேலும் தாயானவள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அதனால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும். * அனைத்து தாய்க்கும் குழந்தை வயிற்றில் உதைக்கும் போது கணவர் அதை உணர வேண்டும் என்று நினைப்பர். அப்படியே அவர்களது கணவரும் ஆசைபடுவர். ஆகவே அப்படி உதைக்கும் போது,குழந்தையின் தந்தையும் குழந்தையிடம் அடிக்கடி பேச வேண்டும். அப்போது தான் தாய்க்குப் பின் தந்தை தூக்கினாலும் குழந்தை இது தான் தந்தை என்பதையும் புரிந்து கொள்ளும். மேலும் இவ்வாறு அந்த குழந்தை உதைக்கும் போது தந்தை அதை நன்கு உணர, அவருக்கும் அந்த பிரசவத்தின் அற்புதமும் நன்கு புரியும். எனவே, இப்படியெல்லாம் நடந்து பாருங்கள், குழந்தை ஆரோக்கியமாக புத்திக்கூர்மையுடன் பிறக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். Relaxplzz ![]() "சுட்டீஸ் பக்கம்" |
Posted: 09 Oct 2014 07:48 AM PDT பண்டிகை நாள் நெருங்க நெருங்க, பிள்ளைகளுக்கு புத்தாடை எடுத்துத் தர முடியாமல் தவிக்கும் ஒரு ஏழையின் வலிதான், ஒரு ஆணின் பிரசவ வலி.. - Kali Muthu ![]() "மனம் தொட்ட வரிகள்" - 2 |
Posted: 09 Oct 2014 07:40 AM PDT நானும் கொஞ்ச நாளா "AXE" (Body spray)அ உடம்பெல்லாம் ஊத்திக்கொண்டு தெருத் தெருவா சுத்தி திரியிறன் விளம்பரத்துல காட்ற மாதிரியெல்லம் ஒரு சம்பவமும் நடக்கலீயே! :P :P :P - Kalimuthu |
Posted: 09 Oct 2014 07:30 AM PDT |
Posted: 09 Oct 2014 07:15 AM PDT இதை எழுதிய புண்ணியவான் யாருங்க ..சிரிச்சு சிரிச்சு வயறு வலிக்குது :P :P :P தமிழகத்தில் புதிய வேலைவாய்ப்பு....தங்களது பகுதியில் உள்ள அஇஅதிமுக நிர்வாகிகள் மற்றும் கழக செயலாளர்களை தொடர்பு கொள்ளுங்கள்...தினமும் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் உண்ணாநோன்பில் கலந்துகொள்பவர்களுக்கான கட்டண விபரம் :- 1.general participent 10am to 5 pm - Rs. 300 + 1 பிரியாணி 2.காலை 7மணி முதல் மாலை வரை - Rs. 500+ 1 பிரியாணி 3. உண்ணாவிரதப் பந்தலில் media முன்பு அழுபவர்களுக்கு தனியாக 200 ரூபாயும் மொட்டை அடித்துகொள்பவர்களுக்கு Rs.1000 மறவாதீர் மறந்தும் இருந்து விடாதீர்... இச்சலுகை இதயதெய்வம்,டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் விடுதலை ஆகும் வரை மட்டுமே!! :P :P Relaxplzz |
Posted: 09 Oct 2014 07:00 AM PDT ஒரு நண்டு கடற்கரை ஓரத்தில் ஓடி ஓடி தன்னுடைய காலடிகளை தானே ரசித்து கொண்டு விளையாடி கொண்டு இருந்தது.... திடீரென்று ஒரு மிக பெரிய அலை உருண்டு வந்து அந்த நண்டின் காலடி தடயங்களை அழித்து சென்று விட்டது . இதை பார்த்து வருத்தம் கொண்ட நண்டு அந்த அலையிடம் கேட்டது ., நான் உன்னை இவ்வளவு நாளாக என்னுடைய மிக நெருங்கிய நண்பன் என நினைத்து கொண்டு இருந்தேன் ,பிறகு ஏன் இப்படி செய்தாய் ? என்று ... அதற்க்கு அந்த அலை பதில் சொன்னது ....... . . . . . . . .ஒரு மீனவன் உன் காலடி தடயத்தை தொடர்ந்து உன் குடும்பத்தை பிடிக்க வருகிறான் ..அதனால் தான் நான் அப்படி செய்தேன் என்றது !!!!!! கதையின் நீதி. நல்ல நட்பை எடைபோட்டு மதிக்க,காப்பாற்ற கற்றுக்கொள்ளவேண்டும்!!! Relaxplzz ![]() "நீதி கதை" |
Posted: 09 Oct 2014 06:45 AM PDT |
Posted: 09 Oct 2014 06:30 AM PDT |
Posted: 09 Oct 2014 06:15 AM PDT ரெண்டு நாளா கடுமையான பல் வலி.....நேத்து லைட்டா கன்னம் வீங்கி இருந்துச்சு.... ஆபீஸ் போன உடன ஒரு நண்பர்...... "என்ன ரவி.....வீட்டுல ஊருல இருந்து வரதுக்குள்ள அடி பலம் போல..." நான் கடுப்பாயி..... "என்ன ஜி.....எங்க வீட்டைப் பத்தி என்ன நினைச்சுகிட்டு இப்படி பேசறீங்க....." "இல்லை......சும்மா ஜோக்குக்குத்தான்......" "என்ன ஜோக்குங்க........ என் wife அப்படிப்பட்டவங்க கிடையாது....எல்லாத்துக்கும் தெரியற மாதிரி எல்லாம் அவ பண்ண மாட்டா....எல்லாம் ஊமைக்காயம்தான்...... "@#%&%#@@%&" நாங்க எல்லாம் யாரு..... பட்டினத்தாரோட சீடர்கள்....அவர்தான் சொல்லியிருக்காரே....... "காயமே இது பொய்யடா......." :P :P - Ravi Swaminathan Relaxplzz |
Posted: 09 Oct 2014 06:00 AM PDT கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை!!!! உடல் நலமின்றி அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார் கவியரசர்.அப்போது அமெரிக்க வாழ் தமிழர்கள் கவியரசைப் பார்க்க வந்தனர். அவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் பேசத்தெரி்யாது என்பதைக் கேள்விப் பட்ட கவியரசர் உடனே ஒரு கவிதை எழுதினார்.அக்கவிதையே அக்கவி எழுதிய கடைசி கவிதை. மனிதரில் ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர் -இங்கு மழலைகள் தமிழ் பேச செய்துவைப்பீர் தமக்கென கொண்டு வந்ததேதுமில்லை -பெற்ற தமிழையும் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை!!! நன்றி : தாரை கிட்டு Relaxplzz ![]() |
Posted: 09 Oct 2014 05:45 AM PDT காலைல கீரைக்கார அம்மாவிடம் கீரை வாங்கிவிட்டு வரும்போது எதிர் வந்த நண்பர் ஒருவர், என்னங்க இவங்ககிட்டயா கீர வாங்குவீங்க, Reliancefreshல வாங்க வேண்டியது தான, இங்க கட்டு 10ரூபா , அங்க 9ரூபா தாங்க அப்படின்னார்.. சரி இதுல என்னங்க இருக்கு 1ரூபா தான்னு சொன்னதுக்கு, என்னமோங்க எனக்கு பிடிக்காது, இவங்க காலைல குளிக்கவும் எடுக்கவும் மாட்டாங்க, ஒரு சுத்தமும் இல்ல, இவுங்ககிட்ட போய் வாங்கிகிட்டு, உங்க இஷ்டம்னார்.. # அட பாவமே, அப்ப அம்பானி மட்டும் என்ன, காலைலயே குளிச்சிட்டு, துண்ட கட்டிகிட்டு, கீர வெட்ட போறாரா.. அட போங்கப்பா நீங்களும் உங்க logicக்கும்.. :: அட்மின் :: Relaxplzz ![]() |
Posted: 09 Oct 2014 05:30 AM PDT |
Posted: 09 Oct 2014 05:15 AM PDT ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்? 4 வயதில்- என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை. 6 வயதில்- என் அப்பாவுக்கு எல்லோரையுமே தெரியும். 10 வயதில்- என் அப்ப நல்ல அப்பாதான். ஆனால் அவருக்கு அடிக்கடி கோபம் வருகிறது.. 12 வயதில்- ஹும்! நான் சின்னவனாக இருந்தபோது அப்பா என் மீது பாசமாக இருந்தார். 14 வயதில்- என் அப்பா தான் எல்லா விஷயத்தையும் சரியாகச் செய்வதாக நினைத்துக்கொண்டிருக்கிறார். 16 வயதில்- அப்பா அந்த காலத்து மனிதர். லேட்டஸ்ட் விஷயங்களே தெரிவதில்லை. 18 வயதில்- அப்பா ஏன் இப்படி பல சமயங்களிலும் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கிறார்? 20 வயதில்- அப்பாவுடன் இருப்பதே கஷ்டமாக இருக்கிறது. அம்மா எப்படித்தான் இவரை சகித்துக்கொள்கிறாரோ? 25 வயதில்- என் அப்பாவுக்கு என்ன ஆச்சு? நான் என்ன செய்தாலும் அதை எதிர்ப்பதையே முதல் காரியமாகச் செய்கிறாரே? 30 வயதில்- என் மகனை சமாளிப்பது பெரிய கஷ்டம்! நான் சின்னவனாக இருந்தபோது அப்பாவுக்கு எத்தனை பயந்து நடந்தேன். 40 வயதில்- ஹும்! அந்த காலத்தில் என் அப்பா என்னை அத்தனை ஒழுக்கத்தோடு வளர்த்தார். நானும் என் மகனை அப்படித்தான் வளர்க்க வேண்டும்! 45 வயதில்- குழந்தைகளை- அதுவும் டீன் ஏஜ் குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கஷ்டம். என்னை அப்பா எப்படித்தான் சமாளித்தாரோ... 50 வயதில்- எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் என் அப்பா எங்கள் எல்லோரையும் நன்றாக வளர்த்தார். எனக்கு ஒரு மகனையே ஒழுங்காக வளர்க்கத் தெரியவில்லை. 55 வயதில்- என் அப்பா ஒரு தீர்க்கதரிசி. தனித்துவம் மிக்கவர். 60 வயதில்- என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச்சிறந்த அப்பா ஒருவரும் இல்லை! முதல் நிலைக்கு திரும்பவும் வருவதற்கு ஒரு மகனுக்கு 56 வருடங்கள் பிடித்திருக்கிறது. நல்ல வேளையாக உங்களுக்கு அத்தனை வயது ஆகவில்லை. ஏன் தாமதிக்கிறீர்கள்? உடனடியாக உங்கள் அப்பாவுக்கு ஒரு ஃபோன் செய்து/அவரிடம் சென்று அவரை நீங்கள் மிகவும் நேசிப்பதாகச் சொல்லுங்கள்..! Relaxplzz |
Posted: 09 Oct 2014 05:00 AM PDT ஏன் வேடிக்கை பார்க்குறாங்க...? பொது இடங்களில் ஆண் அடிபடும்போது சிரிக்கும் மக்கள், பெண்களுக்கு மட்டும் சிபாரிசுக்கு வருகிறார்கள், இது என்ன நியாயம் என்று வீடியோ ஆதாரத்துடன் லண்டன் நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது. லண்டனில் உள்ள டேர் லண்டன் என்ற விளம்பர நிறுவனம் பொது இடங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கிடைக்கும் நியாயம் குறித்து ஒரு வீடியோ ஆல்பம் தயாரித்துள்ளது. லண்டனில் உள்ள ஹடு பார்க் பகுதியில் கிரிஸி மற்றும் லிவியூ ஆகிய இளம்காதலர்கள் மோதி கொண்டனர். இதைத் தொடர்ந்து, இளம்பெண் ஒருவரை ஒரு ஆண் அடித்தால் அங்கிருந்த ஆண்களும் பெண்களும் கூடினர். அடிக்கும் ஆணிடம் ஏன் அந்த பெண்ணை அடிக்கின்றாய் என்று கேட்ட்டனர். அத்துடன், மேலும் தொடர்ந்து அடித்தால் காவல்துறையினரிடம் புகார் செய்வதாக அந்த ஆணை மிரட்டினர். ஆனால் அதே இடத்தில் ஒரு பெண் ஒரு ஆணை அடித்தபோது அதை பார்த்த சிலர் ரசித்து சிரித்தனர். ஆனால் அந்த ஆணுக்கு யாரும் துணைவரவில்லை. லண்டனின் விளம்பர நிறுவனம், அந்த நிகழ்வுகளை பதிவு செய்தது, பின்னர் அந்த வீடியோவை யூடியூப் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. வெளியிட்ட ஒரே வாரத்தில் இந்த வீடியோவை லட்சகணக்கான இணையதள ரசிகர்கள் பார்த்துள்ளனர். ஒரு ஆண், ஒரு பெண்ணை அடிக்கும்போது உடனடியாக நியாயம் கேட்கும் மக்கள், ஒரு ஆணை, ஒரு பெண் அடிக்கும்போது மட்டும் ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டு சிரிக்கின்றனர் என்று அந்த நிறுவனம் கேள்வி எழுப்பி உள்ளது. நன்றி-webduniya.com Relaxplzz ![]() |
Posted: 09 Oct 2014 04:45 AM PDT |
Posted: 09 Oct 2014 04:39 AM PDT |
Posted: 09 Oct 2014 04:22 AM PDT எல்லோர் மொபைலிலும் ஏராளமான,விதவிதமான பெயர்கள்.. ஆனால் அனைவர் மொபைலிலும் அம்மாவின் மொபைல் எண் மட்டும் ♥ 'அம்மா' ♥ என்றே பதிவாகி இருக்கும்! ஆமாவா ??? :) Relaxplzz |
Posted: 09 Oct 2014 04:15 AM PDT ஒரு நாள் இரவு நாராயணசாமி வெகு நேரம் கழித்து வீட்டுக்கு வந்தார். கதவைத் தட்டினார்.அவர் மனைவிக்கு ஒரே எரிச்சல். மனைவியின் கோபத்தைக் கண்ட நாராயணசாமி, ''பொறு, பொறு. ஒரு நிமிடம்.விளக்கிச்சொல்லி விடுகிறேன். அப்புறம் ஆரம்பித்துக்கொள். நான் நோய் வாய்ப்பட்ட ஒரு நண்பனுடன் இருக்க வேண்டியதாயிற்று. ''என்றார். ''நல்ல கதை.சரி,அவர் பேர் என்ன?'' என்றாள் மனைவி. நாராயணசாமி தடுமாறிப் போனார்.யோசித்து யோசித்துப் பார்க்கிறார். ஒன்றும் சொல்ல முடியவில்லை. கடைசியில் உற்சாகத்தோடு, ''தன பேரைச் சொல்ல முடியாத அளவுக்கு அவனுக்கு வேதனை,'' என்றார்.. :P :P Relaxplzz |
Posted: 09 Oct 2014 04:00 AM PDT ஒரு பெண்ணான ஒருவள் தன் கணவனை இழந்துவிட்டால், அவளை ஓர் ஆணானவன் மறுமணம் புரிகிறான்...! இதை இந்த சமுதாயம் "வாழ்க்கை கொடுக்கின்றான் " என்று அவனைப் பெருமைப்படுத்துகிறது..!!! இதுவே ஓர் ஆணானவன் தன் மனைவியை இழந்துவிட்டால்.., அவனை மறுமணம் செய்யும் அந்தப் பெண்ணை இந்த சமுதாயம் எப்படி அழைக்கிறது...??? "இரண்டாம்தாரம்"...!!!??? நல்ல சமுதாயம்..!!! ஒவ்வொரு தனி மனிதனின் விழிப்புணர்ச்சியே... சிறந்தச் சமுதாயம் உருவாக்குவதற்கானக் கிடைக்கபெறும் புத்துணர்ச்சி..!!! - Nancy Jeyakumar Relaxplzz ![]() "மனம் தொட்ட வரிகள்" - 2 |
Posted: 09 Oct 2014 03:44 AM PDT வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே. என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய். செய்வதை விரும்பிச் செய். செய்வதை நம்பிக்கையோடு செய். (y) (y) - Will Rogers ![]() "இவர்கள் சொன்னவை" |
Posted: 09 Oct 2014 03:31 AM PDT |
Posted: 09 Oct 2014 03:15 AM PDT கொஞ்சம் சிரிங்க பாஸ்... ;-) ரெண்டு மணிக்கு வீட்டில் நுழைந்த திருடனை அடித்து உதைத்துவிட்டாள். இன்ஸ்பெக்டர் : வெரிகுட்மா ..எப்படி உங்களால முடிஞ்சது.. லேட்டா வந்த எம்புருசன்னு நெனச்சு சாத்திப் புட்டேனுங்க... :O :O #### "உங்க கணவருக்கு தலையில ஆபரேஷன் பண்ணா, எல்லாம் மறந்துடும்... பரவாயில்லையா?" "பரவாயில்லை டாக்டர்... ஆனா சமையல் பண்றது மட்டும் ஞாபகம் இருக்கறா மாதிரி பண்ணுங்களேன்!" டாக்டர்: :O #### கணவன்: கசப்பான மருந்து கூட உன் கையால கொடுக்கறப்போ ஸ்வீட்டா இருக்கு செல்லம்…! மனைவி: கர்மம்… கர்மம்… நான் உண்மையிலேயே ஸ்வீட்தான் கொடுத்தேன்…இன்னைக்கு எனக்கு பர்த்டே..! கணவன்: ..!!!! :OOO #### நேயாளியின் மனைவியைத் தனியே அழைத்த மருத்துவர், "உங்க கணவருக்கு 'ஹார்ட்அட்டாக்' ஆயிருக்கு, இனிமே ரெம்பக் கவனமா பார்த்துக்கணும், குறிப்பா அதிர்ச்சி தரும் விசயங்களைச் சொல்லக் கூடாது, இனி அவர் அதிக நாள் உயிர் வாழறது உங்க கையிலதான் இருக்கு" என்றார். போகும்போது கணவன் கோட்டான், ஆமா, "டாக்டர் உன்கிட்ட தனியா ஏதோ சொன்னாரே அது என்னது? கண்டிப்பா ஏதோ சீரியஸ் விசயமாத்தான் இருக்கும், மறைக்காம சொல்லு" "ஒண்ணுமில்ல, நீங்க சாகப்போறீங்களாம்" :O #### மனைவி - ஏன் மாமா, என்னைப் பத்தி நீங்க நாலு வார்த்தை பாராட்டுதலா சொல்லுங்களேன்...! கணவர் - "ABCDEFGHIJK." மனைவி - அப்டீன்னா என்ன மாமா...? கணவர் - "Adorable, beautiful, cute, delightful, elegant, fashionable, gorgeous, and hot." மனைவி - வாவ்.. சூப்பர்.. தேங்க்யூ.... ஆனா, IJK சொல்லவே இல்லை...! கணவர் - அதுவா.. "I'm just kidding!"! :P #### நீதிபதி: பட்டப் பகல்ல ஏன் திருடினே? திருடன்: தொழில்னு வந்துட்டா ராத்திரி, பகல்னு பார்க்க முடியுமா.. எஜமான்! #### பாட சாலைக்கும்,சிறைச்சாலைக்கும் உள்ள ஒற்றுமை என்ன? பாடசாலைல பாடபுத்தகம் படிக்கலாம் சிறைச்சாலைல கதைபுத்தகம் படிக்கலாம். #### "டாக்டர் தெரியாம.. காசை முழுங்கிட்டேன்'' "என்ன காசு? ஒரு ரூபாயா... ரெண்டு ரூபாயா... அஞ்சு ரூபாயா?'' "அதான் தெரியாம முழுங்கிட்டேன்னு சொன்னேனே டாக்டர்'' #### நீதிபதி: இனியொரு முறை இங்கு உன்னை பார்க்க விரும்பவில்லை என்று போன தடவையே கூறினேன், இல்லையா? குற்றவாளி: இதைத்தான் எஜமான், காலையிலிருந்து நான் சொல்லிக்கிட்டு இருக்கேன். இந்தப் போலீஸ்காரங்க அதை கேட்காமல், உங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டாங்க!! :P :P Relaxplzz ![]() நகைச்சுவை துணுக்ஸ் |
Posted: 09 Oct 2014 02:59 AM PDT சுத்தமான இல்லமே சுகம் தரும் இல்லம்; சுத்தமான இல்லமே சுகம் தரும் இல்லம். நாம் வசிக்கும் இல்லத்தை தூய்மையாய் வைத்துக் கொள்ள சில ஆலோசனைகள்: *பொருட்களை,தேவைக்கு மேல், அவை எவ்வளவு மலிவாகக் கிடைத்தாலும் வாங்கி சேர்க்காதீர்கள்.அவை வீணே இடத்தை அடித்துக் கொள்ளும். *பயனற்ற பொருட்களைக் கழிப்பதில் தயக்கம் வேண்டாம். பின்னால் எதற்காகவேனும் பயன்படும் என்று குப்பை சேர்க்காதீர்கள். *மூதாதையர் மீது பற்றும் பாசமும்வைக்க வேண்டியது தான். அதற்காக அவர்கள் உபயோகித்த பழைய பொருட்களை சேர்த்து வைக்காதீர்கள். அவர்கள் கூறிய அறிவுரைகளைக் கடைப் பிடிப்பதே நாம் அவர்கள் மீது வைத்திருக்கும் மரியாதை. *அதிக கடவுள் படம் இருந்தால்தான் அதிக பக்தி உடையவர் என்று பொருள் அல்ல. கரப்பான்களும், பல்லிகளும் சூழ,துடைத்து வைக்க இயலாமல் வைத்திருப்பதைக் காட்டிலும் சிறிய படங்களை சுத்தமாக வைத்துக் கொள்வது நல்லது. *வீட்டை போட்டோ ஸ்டுடியோ ஆக்கி விடாதீர்கள் ஆல்பம் வைத்துக் கொள்ளுங்கள். *இலவசமாகக் கிடைக்கிறது என்று வீடு முழுவதும் காலண்டர்களை மாட்டி வைக்காதீர்கள். *பால் கணக்கு,டெலிபோன் நம்பர் ஆகியவற்றை சுவற்றில் எழுதி வைக்காதீர்கள். சிறிய டயரியில் குறிக்கப் பழகுங்கள். *குறைந்த எண்ணிக்கையில் பாத்திரங்கள் புழங்கப் பழகுங்கள். *கொடியில் துணிகளைத் தோரணமாக தொங்க விடாதீர்கள். பார்க்க சகிக்காது. *தேவைக்கு உணவு தயாரித்து சமையல் அறையில் பழைய உணவுகளின் வாசனை இருந்தால் நன்றாக இருக்காது. *தலையணை சிக்குப் பிடிக்காமல் அடிக்கடி துவைத்து உபயோகிக்க வேண்டும். *ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு இடம்,அந்தந்த இடத்தில் அந்தந்த பொருட்கள் (A place for everything and everything in its place.) என்ற பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். Relaxplzz ![]() "வீட்டு டிப்ஸ்" - "HOME TIPS" |
Posted: 09 Oct 2014 02:45 AM PDT உறவுகள் மனதில் சில உறுத்தல்களோடு சேர்ந்திருப்பதை விட சில நல்ல நினைவுகளோடு பிரிதலே சிறந்தது.....!!! ![]() "சில நியாயங்கள் - யதார்த்தங்கள்" - 2 |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment