Relax Please: FB page daily Posts |
- மூளைக்கொரு வேலை
- :)
- பிறந்ததைக் கொன்றால் என்ன? பிறக்கப் போவதைக் கொன்றாலென்ன? ஒரு நடுத்தர வயதுப் பெண...
- India's another BIG achievement - World's BIGGEST telescope செவ்வாய்க்கு ராக்க...
- :P
- ரவா தோசை இப்படி ஆகிடுச்ச.. 󾰕󾰮 #வூட்டம்மா வர்ரதுக்குள்ள தடயத்தை அழிக்கனும்... :P :P
- :(
- நான் அவளிடம் என்னுடைய காதலை சொல்ல ரொம்ப நாட்களாக தயங்கிகொண்டிருந்தேன். இன்று எ...
- அறியாதவர்கள் அறிந்து கொள்ள...! நீங்கள் குதிரையில் வீரன் செல்வது போன்ற சிலைகளை...
- எனக்கு டாக்டர் பட்டமா.??? நான் என்ன பெருசா சாதிச்சுட்டேன்..! இப்படியும் ஒரு தலை...
- எது..???
- :)
- "ஹலோ ரேடியோ மிர்ச்சி தானே.." "ஆமா சொல்லுங்க சார்..." " நான் பேசுறது தெளிவா கேக...
- அம்மா, அப்பா: கூலி வேலை - - மகள் : எம்எல்ஏ -------------------------------------...
- உலகத்தையே செல்போனுக்குள் கொண்டுவர முயற்ச்சி செய்துகொண்டு இருக்கிறார்கள்... நாம...
- காவல்துறை உங்கள் நண்பன்...இவருக்கு ஒரு like போடலாமே.. (y)
- :)
- :)
- நம் தாய் நம்மை கருவில் சுமந்தார் தந்தை நம்மை தோளில் சுமந்தார் ஆனால் நாம் வளர...
- அடிக்கடி ஒலிக்கும் அழைப்பு மணி, அவப்போது அடிக்கும் அலைபேசி, நீ பேசிப்போன சில வா...
- எதிர்பார்ப்புக்கள் இல்லா மனம் ஒன்று வேண்டும்...! இனியேனும்.... ஏமாற்றங்கள் இல்லா...
- (y)
- தயவுசெய்து இதனை SHARE செய்யுங்கள்.. இன்று உலகிலேயே மிக அதிகமான உயிர் இழப்பை உண்...
- குழந்தைகள் நடைபழகும் வரை கைகொடுங்கள்... நடக்கத்தொடங்கிய பின் நம்பிக்கை கொடுங்கள்...
- :)
- மிகவும் பேர் பெற்ற ஒரு மதத் தலைவர், மன நல மருத்துவ மனை ஒன்றினைப் பார்வையிட வந்தா...
- ''முன்பு ஒருமுறை எம்.ஜி.ஆர். பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது, 'நான் ஆண...
- ஷொப்பிங் மால்களில் சேமித்த ''கெளரவம்'' ஒரு சாலையோரத்து ஏழை வியாபரியிடம் விற்கப...
- :)
- உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம் 1.ஒரு கப் தயிரை தவறாமல்...
மூளைக்கொரு வேலை Posted: 17 Oct 2014 09:40 AM PDT |
Posted: 17 Oct 2014 09:30 AM PDT |
Posted: 17 Oct 2014 09:15 AM PDT பிறந்ததைக் கொன்றால் என்ன? பிறக்கப் போவதைக் கொன்றாலென்ன? ஒரு நடுத்தர வயதுப் பெண் கவலையுடன் தனக்குத் தெரிந்த மகப்பேறு மருத்துவரிடம் சென்று, "டாக்டர், எனக்கு ஒரு பிரச்னை, அதை தீர்க்க உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன்" என்றாள். "என் கைக்குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட முடியவில்லை. அதற்குள் மறுபடியும் கர்ப்பமாயிருக்கிறேன். அடுத்த குழந்தை இப்போது வேண்டாமென்று நினைக்கிறன்" என்றாள். டாக்டர், " அது சரி, அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?" என்றார். அவள், "நீங்கள் என் கருவைக் கலைத்து விட வேண்டும், உங்களைத்தான் மலை போல் நம்பியிருக்கிறேன்" என்றாள். டாக்டர் சற்று நேரம் யோசித்தார். சில நிமிட மௌனத்திற்குப் பின் அந்தப் பெண்ணிடம் சொன்னார், "உன் பிரச்னைக்கு என் மனதில் ஒரு நல்ல தீர்வு இருக்கிறதென்று நினைக்கிறேன். இதில் உனக்கும் எந்த ஆபத்துமில்லை " என்றார். "தன் வேண்டுதலை டாக்டர் ஒத்துக் கொள்கிறார்" என்று அந்த பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. டாக்டர், "இதோ பாரம்மா, ஒரே நேரத்தில் உன்னால் இரண்டு குழந்தைகளைக் கவனிக்க முடியவில்லை என்றால், இப்போது உன் கையிலிருக்கும் ஒரு குழந்தையைக் கொன்று விடுவோம். இப்படிச் செய்வதனால், கருவிலிருக்கும் அடுத்த குழந்தை பிறப்பதற்கு முன் நீ நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளலாம்" என்றார். "உன் கையிலிருக்கும் குழந்தையைக் கொல்லலாம் என்று முடிவெடுத்தால் உன் உயிருக்கும் ஒன்றும் ஆபத்தில்லை, என்ன செய்யலாம் நீயே சொல்" என்றார். அந்தப் பெண் மிகவும் அரண்டுபோய், "வேண்டாம் டாக்டர், வேண்டாம் ! நினைக்கவே பயங்கரம். ஒரு குழந்தையைக் கொல்வது பெருங்குற்றம்" என்றாள். "ஒத்துக் கொள்கிறேன், ஒரு குழந்தையைக் கொல்ல முடிவெடுத்தபின் பிறந்ததைக் கொன்றால் என்ன? பிறக்கப் போவதைக் கொன்றாலென்ன? இது உனக்குச் சரியாகத் தோன்றினால் இது ஒன்றுதான் ஒரேவழி" என்றார். அந்தப்பெண் "இரண்டு குழந்தையும் வேண்டும்" என்று மனம் திருந்தி டாக்டருக்கு நன்றி சொல்லி வீட்டுக்குச் சென்றாள். Relaxplzz |
Posted: 17 Oct 2014 09:00 AM PDT India's another BIG achievement - World's BIGGEST telescope செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்பி ஒரு சாதனை செய்த கையோடு அடுத்த சாதனைக்கு இந்தியா ரெடியாயிடுச்சு. TMT (Thirty Meter Telescope) என்னும் 100 அடிக்கும் அகலமான - உலகத்திலே பெரிய டெலஸ்கோப் ஒன்றை அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் நிறுவ போறாங்க ஐந்து நாட்டு காரங்க. அதில் இந்தியா, ஜப்பான், சைனா , கனடா மற்றூம் அமெரிக்கா இனைந்து இந்த பெரிய டெலஸ்கோப்பை 2022 ஆம் ஆண்டுக்குள் செயல்பட இப்பவே வேலையை ஆரம்பிச்சிட்டாங்க. அக்டோபர் 7 ஆம் தெதி பூமிப்பூஜை போட்டு ஆரம்பிக்கபட்ட இந்த டெலஸ்கோப் பல சிறப்பு வகையை கொண்டது. adaptive optics (AO) என்னும் டெக்னாலஜியை கொண்ட முதல் தரை வழி டெலஸ்கோப் ஆகும். இதன் மூலம் வான் சாஸ்திரத்தை மிக மிக துள்ளியமாக கணிக்க மட்டுமில்லமல் ஸ்பேஸ் ஸ்டேஷனில் நிகழும் நிகழ்வுகளை கூட இங்கிருந்து சர்வ சாதாரணமாய் காண முடியும். நமது பிரதமர் நரேந்திர மோடி 1299.8 கோடிகளை இதற்காக ஒதுக்கயுள்ளார் என்பது கூடுதல தகவல்.இன்னைக்கு லான்ச் பண்ணீன மூனாவது நேவிகேஷனல் ராக்கெட் மற்றூம் சாட்டிலைட் சக்ஸச் என்பதும் கூடுதல் தகவல் - Ravi Nag Relaxplzz ![]() |
Posted: 17 Oct 2014 08:50 AM PDT |
Posted: 17 Oct 2014 08:40 AM PDT |
Posted: 17 Oct 2014 08:30 AM PDT |
Posted: 17 Oct 2014 08:15 AM PDT நான் அவளிடம் என்னுடைய காதலை சொல்ல ரொம்ப நாட்களாக தயங்கிகொண்டிருந்தேன். இன்று என்னவானாலும் பரவாயில்லையென்று அவள் மொபைலுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் "I Love You" என்று தட்டி விட்டேன். அனுப்பியவுடன் மனதில் ஒரு கலவரம் - அவள் இதை எப்படி எடுத்துக் கொள்வாள்? ஆச்சரியம்!!! சில நொடிகளில பதில் எஸ்.எம்.எஸ். வந்தது. என்ன அனுப்பியிருப்பாள்? "சம்மதம்" என்றா? அல்லது "நல்ல நட்பை கொச்சை படுத்திய நீயும் ஒரு மனுஷனா" என்றா? மனம் பரபரத்தது. . ஒருவேளை பதில் எதிர்மறையாய் இருந்தால்..? இதயம் திக் திக் என்றது.. மனதிற்குள் ஆண்டவனை மனமுருக வேண்டினேன். (கடைசியாய் இப்படியெல்லாம் வேண்டியது தேர்வின் போது). எப்படியோ தைரியத்தை வரவழைத்து மொபைல்-ஐ ஓபன் செய்தேன். அழகிய ஆங்கிலத்தில் ஒரு மெசேஜ் கீழ்க்கண்டவாறு இருந்தது. . . . . . . . . . . . . . . . . . . . . . . . "YOUR BALANCE IS TOO LOW. MESSAGE SENDING FAILED." :P :P Relaxplzz |
Posted: 17 Oct 2014 08:00 AM PDT அறியாதவர்கள் அறிந்து கொள்ள...! நீங்கள் குதிரையில் வீரன் செல்வது போன்ற சிலைகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் அதற்கு பின்னே பல இரகசியங்கள் மறைந்து காணப்படுகிறது...! அந்த இரகசியங்கள் இதுதான்.... • • ► அக்குதிரையின் இரண்டு முன்னங்கால்களும் நிலத்தில் இருந்து எழுந்து நின்றால், அவ்வீரன் போர்களத்தில் இறந்திருக்கிறான் என அர்த்தம். ► அக்குதிரையின் ஒரு முன்னங்கால் நிலத்திலிருந்து உயர்ந்து நின்றால், அவ்வீரன் போர்க்களத்தில் காயப்பட்டு பின்னர் இறந்து இருக்கிறான் என அர்த்தம். ► அக்குதிரையின் இரண்டு முன்னங்கால்களும் நிலத்தில் பதிந்து இருந்தால், அவ்வீரன் இயற்கை நோயால் இறந்து இருக்கிறான் என அர்த்தம். Relaxplzz ![]() |
Posted: 17 Oct 2014 07:50 AM PDT |
Posted: 17 Oct 2014 07:40 AM PDT |
Posted: 17 Oct 2014 07:30 AM PDT |
Posted: 17 Oct 2014 07:15 AM PDT "ஹலோ ரேடியோ மிர்ச்சி தானே.." "ஆமா சொல்லுங்க சார்..." " நான் பேசுறது தெளிவா கேக்குதா..?'' " ஆமா சார்.. நல்லாவே கேக்குது..." " என் பொண்டாட்டியும் இப்போ ரேடியோ மிர்ச்சி கேக்கிறா சார்..." "நல்லது... சொல்லுங்கள்..." "நான் போன் பண்ணினா எடுக்கல சார்.." "அதனாலென்ன விஷயத்திற்கு வாருங்கள்.." * * * * * "அடியே காமாட்சி.... நான் சொல்றது கேக்குதா... சீக்கிரமா மோட்டார் போடுமா. நம்ம வெளிவீட்டு பாத்ரூம்ல தண்ணியில்ல... நான் உள்ளே இருக்கேன்... சீக்கிரம்..." :P :P Relaxplzz |
Posted: 17 Oct 2014 07:00 AM PDT அம்மா, அப்பா: கூலி வேலை - - மகள் : எம்எல்ஏ --------------------------------------------------------------------- முன்னாள் சட்டமன்ற தொகுதி, திருவட்டார் முன்னாள் எம்.எல்.ஏ லீமாரோஸ். அவரைத் தேடிச் சென்றபோது ஒரு டீக்கடையில் தனியாக நின்று டீ குடித் துக் கொண்டிருந்தார். யாரும் அவருடன் இல்லை. தனி மனுஷி! "ஒருமுறை மக்கள் பிரச்சனைக்காக அரசு அலுவலகத்திற்குப் போன போது உள்ளே விட மறுத்துட்டாங்க. எம்எல்ஏன்னா ஆடம்பரமாக பெரிய படையோட வரணும்னு எதிர்பார்க்குறாங்க அதிகாரிங்க. என்னோட அடையாள அட்டையைக் காட்டினதற்கு அப்புறம்தான் உள்ளேயே விட்டாங்க" என்கிறார். இந்தக் காலத்திலும் எம்எல்ஏவுக்கான எந்த அடையாளமும் இல்லாமல் இருப்பவர். 'எங்க போனாலும் பஸ்தாங்க. பலமுறை எம்எல்ஏன்னு நடத்துனர் கிட்ட சொன்னாக் கூட நம்ப மறுக்கிறாங்க. சாதாரண குடும்பத்துல இருந்து வந்தவள் நான். ஊர்ல என் அம்மாவும், அப்பாவும் கூலி வேலைக்குப் போறாங்க. இந்த மக்கள் என்னை மாதிரியான ஒரு ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவளை ஏற்றுக் கொண்டாங்க இல்லையா? அவங்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும்' என்று சொல்லும் லீமாரோஸ் பணபலம் இல்லாமல் வெற்றி பெற்ற எம்எல்ஏ. 'உங்களுக்கு என்று உள்ள சொத்து என்ன?' என்றால், பெரியதாக சிரித்த வர்… 'ஒன்றுமில்ல. 2002ல் இருந்து மூன்று மாசத்துக்கு ஒருமுறை 359 ரூபாய் பிரீமியம் கட்டுற மாதிரி ஒரு எல்ஐசி பாலிசி போட்டேன். அதான் என் சொத்து' என்று நம்மை பதற்றப் பட வைக்கிறார். கட்சி இவருக்கு சம்பளமாக கொடுப்பது மாதம் 4 ஆயிரம்! "சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு வரும்போது கூட ரயிலில் இரண்டாம் வகுப்புலதான் வருகிறேன். ஏ.சி. கோச்ல வரலாமே என்று ரயில் பரிசோதனை அதிகாரிகள் கேட்கிறார்கள். எந்த கிளாஸ்ல வந்தா என்ன சார்? எல்லா ரயிலும் சென்னைக்குதானே வருகிறது?" என்று சொல்கிறார் திருமதி. லீமா ரோஸ் அவர்கள். இது நடந்தது அவர் எம்.எல்.ஏவாக இருந்தபோது. காமராஜரின் வாரிசுகள் என்று சொல்லத்தகுதியான ஆட்களில் இவரும் ஒருவர். (ஜாதியை வைத்து இல்லை நேர்மையை வைத்து). கம்முநிஷ்ட்களில் இன்று இவர்களைப்போன்ற நல்லவர்களை பார்ப்பது அரிதாகிக்கொண்டே வருகிறது. இப்படியும் சில உண்மையான அரசியல்வாதிகள், மக்களால் மறைக்கபட்ட அரசியல்வாதிகள். நல்லவர்களை கோட்டைவிட்டுவிட்டு ஊழல்வதிகளையும், ஜாதி தீவிரவாதிகளையும் கோட்டைக்கு அனுப்பிவிட்டு அரசியல்வாதிகளையே குற்றம் சொல்லும் கூட்டத்தில் நானும் ஒருவன் என்று நினைக்கும் போது கேவலமாய் இருக்கிறது. - Balasubramanian Saraswathy Relaxplzz ![]() |
Posted: 17 Oct 2014 06:50 AM PDT |
Posted: 17 Oct 2014 06:40 AM PDT |
Posted: 17 Oct 2014 06:30 AM PDT |
Posted: 17 Oct 2014 06:30 AM PDT |
Posted: 17 Oct 2014 06:15 AM PDT நம் தாய் நம்மை கருவில் சுமந்தார் தந்தை நம்மை தோளில் சுமந்தார் ஆனால் நாம் வளர்ந்த பிறகு அவர்களை தோளில் சுமக்க வேண்டாம் நம் வீட்டில் சரி ஒரு இடம் கொடுக்கலாமே.. அப்படி கொடுக்காததால் தான் பல பெற்றோர்கள் முதுமை வந்ததும் முதியோர் இல்லத்தில் அனாதையாக வாழ்கின்றார்கள்.......... முதியோர் இல்லத்தில் பெற்றோரை தவிக்க விடுபவர்களே பெற்றோரை சேர்க்கும் போதே உங்களுக்கான இடத்தையும் பதிவு செய்யுங்கள் நாளை உங்கள் நிலையும் இதுவாகத்தான் இருக்கும்.. Relaxplzz |
Posted: 17 Oct 2014 06:00 AM PDT அடிக்கடி ஒலிக்கும் அழைப்பு மணி, அவப்போது அடிக்கும் அலைபேசி, நீ பேசிப்போன சில வார்த்தைகள், நீ எழுதி அனுப்பிய கடிதம், மறந்து விட்டுச்சென்ற சில பொருட்கள், உன் முகம் காட்டிய கண்ணாடி, இவை அனைத்தும் உன்னை எனக்கு நினைவூட்டிகொண்டே இருக்கிறது. நாம் வாழ பணம் சேகரிக்க சென்றுவிட்டாய், நாம் வாழ்ந்த நாட்களின் நினைவுகளை நான் சேகரித்துக்கொண்டிருக்கிறேன். #நந்தமீனாள் Relaxplzz ![]() "மனம் தொட்ட வரிகள்" - 1 |
Posted: 17 Oct 2014 05:45 AM PDT எதிர்பார்ப்புக்கள் இல்லா மனம் ஒன்று வேண்டும்...! இனியேனும்.... ஏமாற்றங்கள் இல்லாமல் வாழ்வதற்கு .... Relaxplzz ![]() |
Posted: 17 Oct 2014 05:30 AM PDT |
Posted: 17 Oct 2014 05:00 AM PDT தயவுசெய்து இதனை SHARE செய்யுங்கள்.. இன்று உலகிலேயே மிக அதிகமான உயிர் இழப்பை உண்டாக்குகின்ற முக்கிய காரணம், சாலை விபத்து... 1.2 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் சாலை விபத்தால் உயிர் இழக்கின்றார்கள்... இதனால் தனி மனித இழப்பு, அவரைச் சார்ந்த குடும்பத்தினருக்கு பேரிழப்பு, பொருளாதார இழப்பு போன்றவைகள் மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கானோர் உடல் ஊனமுற்றவராகின்றார்கள்... இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று... நாம் ஒவ்வொருவரும் அக்கரை எடுத்து செயல்பட்டால் இதை மாற்றியமைக்க முடியும்... * மிக அதிக வேகம்..... * தலைக்கவசம் அணியாமல் செல்வது.... * மது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டுதல்... * செல் போனில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுவது... * சரியான ஓய்வின்றி, உறக்கமின்றி வாகனத்தை ஓட்டுவது... * போக்குவரத்து வாகன விதிமுறைகளை மதிக்காமல் வாகனத்தை ஓட்டுவது... இவைகள் தான், பெரும்பாலான விபத்துகளுக்கு முக்கிய காரணமாகின்றது... இரத்த தானம் செய்யுங்கள்...! சாலைகளில் சிந்தாதீர்கள்...! உங்கள் உயிரும், உங்களது இரத்தமும், உங்களது உடற்பாகங்களும் விலைமதிப்பற்றது என்பதை உணருங்கள்... * பசித்தவனுக்கு தான் தெரியும் பசியின் கொடுமை... * விழுந்தவனுக்குத்தான் தெரியும் வலியின் வேதனை... * இழந்தவனுக்குத்தான் தெரியும் உறவின் பெருமை...! Relaxplzz ![]() |
Posted: 17 Oct 2014 04:45 AM PDT |
Posted: 17 Oct 2014 04:30 AM PDT |
Posted: 17 Oct 2014 04:15 AM PDT மிகவும் பேர் பெற்ற ஒரு மதத் தலைவர், மன நல மருத்துவ மனை ஒன்றினைப் பார்வையிட வந்தார். அங்கிருந்த நோயாளிகள் அனைவரையும் ஓரிடத்தில் உட்கார வைத்திருந்தனர். மதத் தலைவர் அவர்களிடம் பேச விரும்பினார். அங்கிருந்த அதிகாரிகள் மகிழ்வுடன் சம்மதித்தனர். அவரும் பேச ஆரம்பித்தார்.மன நலம் அற்ற அந்த நோயாளிகள் ஒவ்வொருவரும் ஒரு திசையைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஒரே ஒரு நோயாளி மட்டும் அவர் பேசுவதை மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார். அவருடைய இமைகள் கூட அசையவில்லை.மதத் தலைவரின் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.மன நல மருத்துவ மனை என்பதால் மதத் தலைவர் எதையும் எதிர் பார்க்கவில்லை. ஆனால் அந்த ஆள் தீவிரமாகக் கவனித்தது குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்தார். பேச்சு முடிவுற்றதும் அந்த ஆள் எழுந்து போய் அங்கிருந்த வார்டனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். மதத் தலைவரும் தன்னுடைய பேச்சுக் குறித்து அவர் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பதை புரிந்து கொண்டார். பின்னர் வார்டனிடம், "அந்த ஆள் என்ன சொன்னார்" என்று வினவ, வார்டன் சிறிது தயங்கிவிட்டு சொன்னார், ''என்ன கொடுமையடா சாமி, இவனெல்லாம் வெளியே இருக்கிறான், நான் உள்ளே இருக்கிறேன்' என்கிறான் அய்யா" :P :P Relaxplzz |
Posted: 17 Oct 2014 04:00 AM PDT ''முன்பு ஒருமுறை எம்.ஜி.ஆர். பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது, 'நான் ஆண்களிடம் தனியாகப் பேச வேண்டும். ஆகவே, பெண்கள் எல்லோரும் சென்று விடுங்கள்' என்றாராம். பெண்கள் சென்றவுடன் எம்.ஜி.ஆர். ஆண்களிடம், 'விஷயம் ஒன்றுமில்லை. இங்கு கூட்டம் அதிகம். எல்லோரும் ஒரே நேரத்தில் கலைந்து சென்றால் நெரிசல் அதிகம் இருக்கும். அதனால்தான் முதலில் பெண்களை போகச் சொன்னேன். இனி நீங்களும் செல்லலாம்' என்றாராம்!' # இப்படியும் மக்கள் நலனில் அக்கரை கொண்ட தலைவர்கள் இருந்தனர் :) Relaxplzz ![]() |
Posted: 17 Oct 2014 03:45 AM PDT |
Posted: 17 Oct 2014 03:30 AM PDT |
Posted: 17 Oct 2014 03:15 AM PDT உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம் 1.ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் வரவே வராது.......! 2.தினமும் ஒரு ஏலக்காயை தேனோடு உண்பது கண் பார்வைக்கும், நரம்பு மண்டலத்திற்கும்மிகவும் நல்லது.......! 3.தினமும் இரண்டு அல்லது மூன்று ஓமம் சாப்பிட்டால் ஒரு மனிதனுக்கு தேவையான இரும்புச் சத்தில் பத்து சதவீதம் கிடைக்கிறது.......! 4.குழந்தைகளுக்கு முகத்தில் பாலுண்ணி தோன்றியதும், வெங்காயத்தை வெட்டி அதன் மேல் தேய்த்துவிட்டால் இரண்டு மூன்று தினங்களில் உதிர்ந்து விடும்.......! 5.மஞ்சள், பூண்டு இவை இரண்டையும் பால் விட்டு அரைத்து தலைக்கு பற்றுப் போட்டால், தலைவலி நீங்கும்.......! Relaxplzz |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment