Sunday, 19 October 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


அரசியல்வாதிக்காக தீ குளித்தவன், அதிகாரியின் தற்காப்புக்காய் சுடப்பட்டவன், என ஒவ்...

Posted: 19 Oct 2014 10:28 AM PDT

அரசியல்வாதிக்காக தீ
குளித்தவன், அதிகாரியின்
தற்காப்புக்காய்
சுடப்பட்டவன், என
ஒவ்வொரு உயிருக்கும்
ஓர் விலை நிர்ணயம்
செய்யப்படுவது நமது நாட்டில்
மட்டும் தான்.

@கனா காண்கிறேன்

"இந்தியாவை தூய்மைப் படுத்துவோம்!!" - பிரதமர். மோடி # முதல்ல உங்க ஹிந்திக்காரனுங...

Posted: 19 Oct 2014 10:21 AM PDT

"இந்தியாவை தூய்மைப்
படுத்துவோம்!!" -
பிரதமர். மோடி

# முதல்ல உங்க
ஹிந்திக்காரனுங்க
பான்பராக்
போடுறதை நிறுத்தச்
சொல்லுங்க.
பத்தடிக்கு ஒரு எடத்தில்ல
துப்பி வைக்குறானுங்க.

@சிவ கணேஷ்

இந்திய அரசியலில் காங்கிரஸ், திமுக நிலைமை நாளுக்கு நாள் மோசமகிட்டு வருது, உதயநிதி...

Posted: 19 Oct 2014 10:19 AM PDT

இந்திய அரசியலில்
காங்கிரஸ், திமுக
நிலைமை நாளுக்கு நாள்
மோசமகிட்டு வருது, உதயநிதி ஸ்டாலினுக்காவது
கொஞ்சம் நடிக்க வருது,
பொழச்சுகுவாரு.

பாவம் ராகுல்காந்தி!

@பூபதி

பக்கத்தில் ஒரு சேர் கூட இல்லை பாருங்க.. இதே போல தான் தொடக்கூடாது என்பதற்காக இளை...

Posted: 19 Oct 2014 10:00 AM PDT

பக்கத்தில் ஒரு சேர் கூட
இல்லை பாருங்க..

இதே போல தான் தொடக்கூடாது என்பதற்காக
இளையராஜாக்கும் விருதை தனது உதவியாளர்
மூலம் கொடுத்தார் இவர்.


கோவத்தில் சமைத்தாலும் அம்மாவின் சாப்பாட்டில் ருசி குறைவதில்லை. ஆனால் மனைவிக்கு க...

Posted: 19 Oct 2014 08:38 AM PDT

கோவத்தில் சமைத்தாலும்
அம்மாவின் சாப்பாட்டில்
ருசி குறைவதில்லை.
ஆனால்
மனைவிக்கு கோவமென்றால்
சாப்பாட்டில்
அது தெரிகிறது..

இது என்ன மாயமோ :(

@அசோக்குமார்

நீதிபதி : தினமும் காலையும்,மாலையும் வந்து ஸ்டேசன்ல கையெழுத்து போட்டுட்டு போகணும்...

Posted: 19 Oct 2014 08:33 AM PDT

நீதிபதி : தினமும்
காலையும்,மாலையும்
வந்து ஸ்டேசன்ல
கையெழுத்து போட்டுட்டு போகணும்
தெரியுதா?

திருடன் : சரிங்கய்யா,
வெளிய
விட்டுடீங்க.. அப்புறம்
வழக்கம் போலத் திருடப்
போகலாமில்லே ஐயா?

#இது
அரசியல்பதிவு அல்ல....

- காளிமுத்து

சு.சாமி புரோக்கரா இருந்தாலும் எதிரில் சரிக்கு சமமாக அமர சேர் போடுவாய்ங்க..... ஆ...

Posted: 19 Oct 2014 07:53 AM PDT

சு.சாமி புரோக்கரா இருந்தாலும்
எதிரில் சரிக்கு சமமாக
அமர சேர்
போடுவாய்ங்க.....

ஆனா பொன்னார் மத்திய
அமைச்சரா இருந்தாலும்
தர டிக்கெட் தான்....


வீதிக்கு வீதி KFC கடைகளை அனுமதித்துவிட்டு வலுப்பூர் அம்மனுக்கு கோழி அறுக்கக் கூட...

Posted: 19 Oct 2014 07:40 AM PDT

வீதிக்கு வீதி KFC
கடைகளை அனுமதித்துவிட்டு வலுப்பூர்
அம்மனுக்கு கோழி அறுக்கக்
கூடாது என்று சொல்வதில்
எந்த நியாமும்
இருப்பதாகத்
தெரியவில்லை. KFCயில்
மட்டும்
அனஸ்தீசியா கொடுத்துவிட்டு கோழியை அறுக்கிறார்களா என்ன?
நாமக்கல்லில்
வளர்க்கப்படும் பண்ணைக்
கோழிகள்
பெங்களூருக்கும்
சென்னைக்கும்
வந்து சேர்ந்து உயிரை இழப்பது வரையிலும்
அனுபவிக்கும்
வதையில்
முப்பது சதவீதத்தைக்
கூட கோவில்களில்
வெட்டப்படும்
விலங்குகள்
அனுபவிப்பதில்லை
என்றுதான்
நினைக்கிறேன்.

@வா.மணிகண்டன்

தண்டட்டி : அந்த காலத்தில் வயதான பாட்டிகளின் காதில் இந்த தண்டட்டியை காணலாம். தற்...

Posted: 19 Oct 2014 06:05 AM PDT

தண்டட்டி :

அந்த காலத்தில் வயதான பாட்டிகளின் காதில் இந்த தண்டட்டியை காணலாம். தற்போது தண்டட்டி அணிந்த பெண்களை காண்பது அரிதாகிவிட்டது. தண்டட்டி அணிவதர்க்காகவே காதுகளை வளர்த்தால் தான் இந்த தண்டட்டியை அணியமுடியும். காது வளர்த்து தண்டட்டி அணியவேண்டும் என்றால் இறைவனிடம் வேண்டிக்கொண்டு ஒரு ஆட்டை பலிகொடுத்து காதுளில் துளையிட்டு இந்த தண்டட்டியை அணிவர்.

இந்த தண்டட்டி தங்கம் அல்லது வெங்களத்தில் செய்யப்பட்டிருக்கும். இதை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பாப்படம் அல்லது பாம்படம் என்று அழைக்கின்றனர்.

நவநாகரீகத்தின் மீது அடிமையாகாமல் இருக்கும் மக்கள் வசிக்கும் பகுதியில் தண்டட்டி அணிந்த பெண்களை பார்க்கலாம்.

- பா விவேக்


சென்னை மழை!

Posted: 19 Oct 2014 04:44 AM PDT

சென்னை மழை!


இரண்டு நாட்களுக்கு முன் ஒரு செய்தித்தாளில் ”காவிரி ஆற்றில் மணல் திருட்டு” என்று...

Posted: 19 Oct 2014 03:45 AM PDT

இரண்டு நாட்களுக்கு முன் ஒரு செய்தித்தாளில் "காவிரி ஆற்றில் மணல் திருட்டு" என்று படத்துடன் பெரிதாகப் போட்டிருந்தார்கள்..

அதில் ஒரு ஆள் காவிரி ஆற்றின் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் நெஞ்சு உயரத் தண்ணீரில், செவ்வக வடிவில் மூங்கில்களை இணத்துக்கட்டி, அதன் மேல் பெரிய தகரத் தட்டை விரித்து வைத்திருக்கிறார்.. எடையைத் தாங்கும் அளவிற்கு அதில் டியூப்பும் கட்டப்பட்டிருக்கிறது.. தண்ணீருக்குள் மூழ்கி ஒரு தட்டில் மணலை கொஞ்சம் கொஞ்சமாக அள்ளி, அதை அந்த தகரத்தட்டில் போடுகிறார்.. அதாவது கடலுக்குள் முத்துக்குளிப்பது போல்.. பின் ஓரளவு மணல் சேர்ந்ததும், அதை இழுத்துக்கொண்டு வந்து, கரையில் இருக்கும் ஒரு மாட்டு வண்டியில் கொட்டுகிறார்..

இதை அழகாகப் படம் பிடித்து, வரிசையாக இந்தக் காட்சிகளின் ஃபோட்டோவைப் போட்டு இதைத் தான் மணல் திருட்டு என்று சுட்டிக்காட்டுகிறது அந்த செய்தித்தாள்.. அவனின் அன்றாடப்பிழைப்பை கெடுக்கும் செய்தி இது.. அதற்காக அவன் செய்வது ஒன்றும் சரி என்று நான் கூறவரவில்லை.. ஆனால் அவன் இப்படி மணலைத் திருடி அந்த ஆற்று வளத்தையேவா அழித்துவிடப்போகிறான்? உண்மையிலேயே மணல் திருட்டின் மேல், இயற்கை வளத்தின் மேல் அக்கறை இருக்கும் அந்த செய்தித்தாள், பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு நீர் சொட்டச்சொட்ட மணலை அள்ளி, அதை எண்ணிலடங்கா டிப்பர் லாரிகளில் மரண வேகத்தில் கொண்டு செல்வதைப் பற்றி இவ்வளவு பகிரங்கமாக படத்துடன் செய்தி போடலாமே?

ஆற்றில் மணல் அள்ளும் போது பொக்லைன் போன்ற இயந்திரத்தைப் பயன்படுத்தக்கூடாது என்பது சட்டம்.. இதை ஒருவரும் பின்பற்றுவது கிடையாது.. இது அந்த செய்தித்தாளுக்குத் தெரியாதா? அட, ஆத்துக்குள்ள தார் ரோடு போட்டு மணல் அள்ளுறான் சார்.. அதையெல்லாம் படத்தோட நியூஸா போடுங்களேன் பாப்போம்.. மாட்டீர்கள், ஏனென்றால் உயிர் பயம். அந்தச்செய்தி வந்த மறுநாள், எழுதிய அந்த நிருபரின் உயிர் சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ என்ட்ரன்ஸ் டிக்கெட் எடுத்துக்கொண்டிருக்கோம்.. அன்றாடங்காய்ச்சி ஒருவன், ஒரு ஓரமாக இப்படி உடலையும், உயிரையும் வருத்தி தன் பிழைப்பைப் பார்க்கும் போது தான் உங்கள் சமூக அக்கறை பொத்துக்கொண்டு வருமோ? நான்காம் தூணின் நெற்றிக்கண் எல்லாம் திறக்குமா? போங்கய்யா நீங்களும் உங்க பத்திரிகை தர்மமும்.

@ராம் குமார்


தமிழ் படித்தால் சென்னையை தாண்டிக் கூட போக முடியாது, உலகில் எங்கேயும் போக முடியாத...

Posted: 19 Oct 2014 01:40 AM PDT

தமிழ் படித்தால் சென்னையை தாண்டிக் கூட போக முடியாது, உலகில் எங்கேயும் போக முடியாது என்று சொல்பவர்கள்,ஏனோ அன்றே தமிழ் சீனா வரை சென்றுள்ளது என்பதை மறந்து விடுகிறார்கள்

சீனாவில் உள்ள ஓர் தமிழ் கல்வெட்டு. சீன எழுத்துருக்களும் இதில் காணலாம்.
------------------------------------
சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.

இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.

சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.

இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.

சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்.


எப்பொழுது கைப்பிள்ளை ராகுல்ஜி பிரச்சாரத்துக்கு கிளம்பினாரோ அப்பொழுதே பா.ஜ.க வெற்...

Posted: 19 Oct 2014 01:30 AM PDT

எப்பொழுது கைப்பிள்ளை ராகுல்ஜி பிரச்சாரத்துக்கு கிளம்பினாரோ அப்பொழுதே பா.ஜ.க
வெற்றி உறுதி செய்யப்பட்டது.

@பாஸ்கர்

நாங்களே கேஃஎப்சி போஸ்டர பாத்துக்கிட்டே பழைய சோத்த தின்னுக்கிட்டு கிடக்கோம்... எ...

Posted: 19 Oct 2014 12:55 AM PDT

நாங்களே கேஃஎப்சி போஸ்டர
பாத்துக்கிட்டே பழைய
சோத்த
தின்னுக்கிட்டு கிடக்கோம்...

எங்க கிட்ட
வந்து கேலக்சி போன்
வேணும்னு கேட்டா என்னாங்கடா நியாயம்??

எல்லா வெளிநாட்டு வேலைக்காரர்களுக்கும் சமர்ப்பணம்.

-Jaleel Sulaikha


'தலைவா', "TIME TO LEAD" நாங்கள் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என எதிரியே முடிவு ச...

Posted: 18 Oct 2014 11:17 PM PDT

'தலைவா', "TIME TO LEAD"

நாங்கள் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என எதிரியே முடிவு செய்கிறான்.

//கத்தி டா, துப்பாக்கி டா, தலைவன் டா.

முடிந்தால் மோதிபார்!


காலைல செம மழை,ரோடெல்லாம் தண்ணி...பைக்ல வேகமா போய் ஸ்கூட்டில போற பொண்ணு மேல தண்ணி...

Posted: 18 Oct 2014 10:59 PM PDT

காலைல செம
மழை,ரோடெல்லாம்
தண்ணி...பைக்ல
வேகமா போய்
ஸ்கூட்டில போற
பொண்ணு மேல
தண்ணி அடிச்சேன்... அவ
திரும்ப
வேகமா வந்து என் மேல
தண்ணி அடிச்சா...
கிராமங்களில் முறைப்
பொண்ணு மேல மஞ்சள்
தண்ணி ஊத்துறத விட
இந்த விளையாட்டு நல்லாருக்கு...

@பூபதி

தமிழர்களுக்கு என இருந்த அடையாளங்களில் ஒன்றான அலங்கு இன நாய்கள் !!!! சோழர்களின் ப...

Posted: 18 Oct 2014 10:55 PM PDT

தமிழர்களுக்கு என இருந்த அடையாளங்களில் ஒன்றான அலங்கு இன நாய்கள் !!!! சோழர்களின் படைகளில் இவைகள் காவல்,மற்றும் வேட்டைக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது....
தற்பொழுது இந்த இன நாய்கள் அழிந்துவிட்டது...
நமக்கென இருக்கும் இதுபோன்ற அடையாளங்கள் காக்கப்படவேண்டும்....!!!!!

தற்பொழுது உள்ள கோம்பை, சிப்பிப்பாறை போன்ற நாய்களை தமிழ் மக்கள் வளர்க்க வேண்டும்...
நாம் தான் அவற்றை அழிவில் இருந்து காக்க வேண்டும்.


பறக்கும் ரயில் மாதிரி சென்னையில் புதுசா விடப்பட்ட மிதக்கும் பஸ் போல... எவன்டா அ...

Posted: 18 Oct 2014 10:52 PM PDT

பறக்கும் ரயில்
மாதிரி சென்னையில்
புதுசா விடப்பட்ட
மிதக்கும் பஸ் போல...

எவன்டா அங்க
சென்னையை சிங்கப்பூரா மாத்துவேன்னு இன்னும்
கூவுறது...

@Austin


திருமணத்திற்கு முன் அவளைக் காதலிக்கிறேன் என ஊர் முழுக்க பறைசாற்றிய ஆணின் மனது த...

Posted: 18 Oct 2014 09:53 PM PDT

திருமணத்திற்கு முன்
அவளைக்
காதலிக்கிறேன் என ஊர்
முழுக்க பறைசாற்றிய
ஆணின் மனது

திருமணத்திற்குப் பின்
அதே காதலை காதலியிடம்
கூட கூற
மறுப்பது புரியாத
புதிர்...

@சதீஷ் குமார்
தேவகோட்டை

ஆங்கிலேய கல்விமுறை தான் இந்திய கலாச்சாரத்தை கெடுத்து விட்டது- ராஜ்நாத்தம் சிங்.....

Posted: 18 Oct 2014 09:42 PM PDT

ஆங்கிலேய
கல்விமுறை தான்
இந்திய
கலாச்சாரத்தை கெடுத்து விட்டது-
ராஜ்நாத்தம் சிங்...

>< இவுரோட
இளையமகன் பிரிட்டன்ல
படிக்கிறான்....

@வீரமணி

&#xb9a;&#xbc1;&#xba4;&#xbcd;&#xba4;&#xbae;&#xbbe;&#xba9; &#xb9a;&#xbc0;&#xbb0;&#xbc1;&#xb9f;&#xbc8; &#xb85;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbbe;&#xbb5;&#xbbf;&#xba9;&#xbcd; &#xbb5;&#xbbf;&#xbb0;&#xbb2;&#xbcd; &#xbaa;&#xbbf;&#xb9f;&#xbbf;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1; &#xbaa;&#xbb3;&#xbcd;&#xbb3;&#xbbf;&#xbaa;&#xbcd; &#xbaa;&#xbc7;&#xbb0;&#xbc1;&#xba8;&#xbcd;&#xba4;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbbe;&#xb95; &#xbb5;&#xbb0;&#xbbf;&#xb9a;&#xbc8;&#xbaf;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xba8;&#xbbf;&#xbb1;&#xbcd;&#xb95;&#xbc1;&#xbae;...

Posted: 18 Oct 2014 09:33 PM PDT

சுத்தமான
சீருடை அப்பாவின் விரல்
பிடித்து பள்ளிப்
பேருந்துக்காக
வரிசையில் நிற்கும்
தனியார் பள்ளிக்
குழந்தைகளின்
உலகத்தை விட...

கசங்கிய சீருடையுடன்
தோளில்
கைபோட்டு துள்ளலாய்
சிரித்தபடி செல்லும்
அரசுப்
பள்ளி குழந்தைகளின்
உலகத்தில்
மகிழ்ச்சி அதிகம் தான்.

@நிவந்திகா தேவி

0 comments:

Post a Comment