Tuesday, 2 September 2014

FB Posts by Araathu அராத்து

FB Posts by Araathu அராத்து

ஆண்ட்டி க்ரஷ் என்று ஏதேனும் புது விளையாட்டு வந்திருக்கிறதா? சமீப காலமாக நிறைய இன்வைட்ஸ் !

Posted: 01 Sep 2014 08:20 AM PDT

ஆண்ட்டி க்ரஷ் என்று ஏதேனும் புது விளையாட்டு வந்திருக்கிறதா? சமீப காலமாக நிறைய இன்வைட்ஸ் !

கவுண்டமணி - சகிப்புத்தன்மை கவுண்டமணியின் பல ஜோக்குகளை இப்போது காண்கையில் பகீரென்று இருக்கிறது.அதே சமயம் சமீபத்தில் பத்துப்பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு வரை எவ்வளவு நகைச்சுவை உணர்வோடும் , சகிப்புத்தன்மையோடும் இருந்திருக்கிறோம் என்பதை எண்ணிப்பார்த்தால் ஏக்கம் கலந்த சோகம்தான் மேலிடுகிறது ( லவ்வுக்கு மட்டும்தான் இந்த ஃபீலிங்க் சொந்தமா ?) பொலிட்டிகல் கரக்டன்ஸாவது மயிராவது என அடி அடின்னு அடிச்சிருக்கார். பொலிட்டிகல் கரக்ட்னஸ் முகமூடி போட்டு ஃபேச்புக்கில் குந்தியிருக்கும் தொடை நடுங்கி நீதிமான்களால் , கவுண்டர் தொட்ட ஒரு சப்ஜக்டை கூட தொட முடியாது.கவுண்டமணி அன்று நடித்த ஜோக்குகளை இன்று யாரேனும் செய்தால் கலவரம் வெடிக்கும்.அவர் நடித்த ஜோக்குகளை இன்று நடிக்கப்படுமாயின் குறைந்த பட்சம் கீழக்கண்ட கலவரங்கள் போராட்டங்கள் நிச்சயம். 1)மதக் கலவரம் ( அந்த அளவுக்கு அனைத்து மதங்களையும் பிரி கட்டி அடித்திருக்கிறார்) 2) பெண்ணியப் போராளிகளின் கலவரம். 3) மாற்றுத்திறனாளிகளின் போராட்டம். 4)ஜாதிக் கலவரம். 5)அரசியல் போராட்டம். அப்போது நகைச்சுவை உணர்ச்சி அதிகமாக இருந்து விட்டுவிட்டார்களா ? இல்லை கவுண்டரின் அமானுஷ்ய பவரா எனத் தெரியவில்லை.கவுண்டர் ராக்ஸ் !

Posted: 01 Sep 2014 08:17 AM PDT

செக்ஸுவல் ஹாரஸ்மெண்ட். இதில் பல வகைகள் உள்ளன. ஒரு ஆண் ஒரு பெண்ணை செக்ஸுவல் நோக்கத்தோடு உடல் ரீதியாக தீண்டுவது மட்டுமே , புகார் அளிக்கப்படுகிறது அல்லது எதிர்வினை பப்ளிக்காக செய்யப்பட்டுகிறது. தற்போது ஹோமோசெக்ஸில் நாட்டமுள்ள ஆண்கள் மற்ற ஆண்களை தைரியமாக சீண்ட ஆரம்பித்து உள்ளனர்.ஆண்கள் இதை வெளியே சொல்லவோ , புகார் அளிக்கவோ வெட்கப்பட்டு அமைதியாகி விடுகின்றனர். லெஸ்பியனாக இருக்கும் ஒரு பெண் இன்னொரு பெண்ணை உடல் ரீதியாக தொடும்போது , அது செக்ஸ் சார்ந்த சீண்டல்தான் என தீண்டப்படும் பெண்களுக்கு தெரியவே சில நாட்கள் ஆகிவிடுகின்றன. ஆண் நண்பர்கள் போல அல்லாமல் , பெண் நண்பர்கள் பழகும் விதம் வேறு மாதிரியானது என்பதே காரணம். பெண் தோழிகளுக்குள் , கட்டிப்பிடித்துக்கொள்வது , முத்தம் கொடுத்துக்கொள்வது எல்லாம் நட்பு சார்ந்த விஷயங்களாக இருக்கின்றன். ஒரே ஹாஸ்டலில் சாதாரணமாக கட்டிப்பிடித்து தூங்கம் பெண்கள் இருக்கிறார்கள். அதனால் ஒரு பெண் செக்ஸ் நோக்கத்தோடு சீண்டுகிறாள் என்பது தெரியவே நாட்களாகின்றன , தெரிந்தாலும் ஏதும் புகாரோ , திட்டுவதோ இல்லை. நாகரீகமான மறுத்தலோடு முடிந்து விடுகிறது. பெண் ஆணை செக்ஸுவல் ஹாரஸ்மெண்ட் செய்தால் , ஒன்று ஜாலியாக எடுத்துக்கொள்கிறான் , அடிச்சாச்சி லக்கி ப்ரைஸ் என குதூகலிக்கிறான்.பெண்ணை பிடிக்கவில்லையெனில் , சிம்பிளாக விலகி விடுகிறான்.இந்த போஸ்டில் வன்புணர்ச்சியை போட்டு குழப்ப வேண்டாம். அது தனி . கடுமையான தண்டனை வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. செக்ஸுவல் ஹாரஸ்மெண்ட் என்பது எந்த ஜெண்டர் யாருக்கு தொல்லை கொடுத்தாலும் ,அதை ஒரே மாதிரியாகத்தான் அணுக வேண்டும். அதற்கான மனநிலை நமக்கு வர வேண்டிய காலகட்டமாக மாறிக்கொண்டு இருக்கிறது. இந்த விஷயத்தில் சாஃப்ட் கார்னர் யாராக இருந்தாலும் கூடாது.குறிப்பாக ஒரு பெண்ணுக்கு , தன்னை உடல் ரீதியாக ஆண் சீண்டினாலும் , பெண் சீண்டினாலும் ஒரே அளவு கோபம் வர வேண்டும். ஆண்களும் அசிங்கம் பார்க்காமல் , வெட்கப்படாமல் ஒன்றிரண்டு புகாராவது அளித்தால்தான் சரிப்பட்டு வரும் போலிருக்க்கிறது :-)

Posted: 01 Sep 2014 01:54 AM PDT

0 comments:

Post a Comment