Sunday, 3 August 2014

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


நேற்று இரவு பேஸ்புக் வேலை செய்யாததால் போலீசுக்கு போன் செய்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மக...

Posted: 03 Aug 2014 09:20 AM PDT

நேற்று இரவு பேஸ்புக் வேலை செய்யாததால் போலீசுக்கு போன் செய்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மக்கள் !!!

#நம்மள விட கொடுரமானவனுங்க போல !!! போராளி பிரபலம்ன்னு சொல்லிட்டு திரியிரிங்களே .. இவுங்க தான் உண்மையான போராளி !!

;-)


ஒரு பணக்காரனுக்கு ஏழை நண்பன் ஒருவன் இருந்தான். ஒரு சமயம் பணக்கார நண்பனுக்கு கொஞ்...

Posted: 03 Aug 2014 09:15 AM PDT

ஒரு பணக்காரனுக்கு ஏழை நண்பன் ஒருவன் இருந்தான்.
ஒரு சமயம் பணக்கார நண்பனுக்கு கொஞ்சம் பணத்தட்டுபாடு நிலவியது.

அந்நேரம் அங்கு வந்த ஏழை நண்பன் அவன் எரிச்சலும், கவலையோடும் இருக்கும் தன் நண்பனை பார்த்து "எப்பிடி டா இருக்கே?" என்று வழக்கம் போல கேட்டான்.

"சும்மா இரு, எனக்கு உடனே இருபது லட்சம் ரூபாய் தேவை. உன்னால் முடியுமா?" என்று கோபமாக கேட்டு விட்டு தன் அறைக்குள் சென்றான் .

அவன் பின்னால் சென்ற ஏழை நண்பன் "அரை மணி நேரத்தில் பணம் கிடைத்தால் பரவாயில்லையா?" என்று ஏழை நண்பன் நிதானமாக கேட்டான்.

பணக்கார நண்பனுக்கு ஒரே அதிர்ச்சி.ஏழை நண்பனை ஏளனமாக பார்த்தான்.
அரைமணி நேரத்தில் பணம் வந்தது.
பணக்கார நண்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

பணத்தை கொடுத்தவாறு ஏழை நண்பன் சொன்னான்.
"நீ எப்போ பார்த்தாலும் அதிகமா பணத்தை தான் சேர்த்தாய் நண்பா..நல்ல நண்பர்களை சேர்க்க மறந்திட்டாய். நான் அவைகளை சம்பாதித்து கொண்டேன் டா" என்றான்.

இருவரும் ஆரத்தழுவி கட்டி கொண்டார்கள்.
இந்த உலகத்திலே எதை சேர்ப்பதை பார்க்கிலும் உண்மை பலமும், உயிருள்ள பலமும் கண்டிப்பாக நண்பர்களை சேர்ப்பது தான்..........

நல்ல நண்பர்கள் வாழ்வின் பலம் :)


"தள்ளாத 80 வயதிலும் தன்னம்பிக்கையுடன் வாழும் முதியவர் " தமிழ்நாட்டில் மதுரை மாவ...

Posted: 03 Aug 2014 09:00 AM PDT

"தள்ளாத 80 வயதிலும் தன்னம்பிக்கையுடன் வாழும் முதியவர் "

தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் கோவிந்த மூர்த்தி (வயது 80) என்ற முதியவர், தன்னுடைய வயது முதிர்விலும் ஊதுவர்த்தி வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்துவது நம்மிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றது.
மதுரை மாவட்டத்தில் அண்ணாநகர் கடைதெருக்களில் நடைபயணமாக மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த முதியவர் வியாபாரம் செய்கிறார்.

ஒவ்வொரு நபராக சென்று அவர்களிடம் ஊதுவர்த்தி விலைகளை சொல்லி கோவிந்த மூர்த்தி விற்பார்.

கடந்த 4 ஆண்டுகளாக ஊதுவர்த்தி வியாபாரம் செய்யும் முதியவருக்கு ஒரு மகன், அவருடைய மனைவி, இவர்களுக்கு ஒரு மகள் இருக்கின்றனர்.

மகன் சம்பாதித்தாலும், தன்னுடைய சொந்த உழைப்பால் வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கும் இந்த முதியவரின் உழைப்பு, வேலை பார்க்காமல் சோம்பேறியாக தெருக்களில் சுற்றித்திரியும் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக அமையும் என்பதில் ஐயமில்லை..


முளைக்கு ஒரு வேலை

Posted: 03 Aug 2014 08:45 AM PDT

முளைக்கு ஒரு வேலை


அனுபவமே சிறந்த பாடம்.

Posted: 03 Aug 2014 08:30 AM PDT

அனுபவமே சிறந்த பாடம்.


"அருமையான கிளிக் "

Posted: 03 Aug 2014 08:20 AM PDT

"அருமையான கிளிக் "


பக்கத்து கிராமத்தில் நடந்த தீமிதி திருவிழாவிற்கு நானும் என் அக்காவும் போகலாமென ந...

Posted: 03 Aug 2014 08:05 AM PDT

பக்கத்து கிராமத்தில் நடந்த தீமிதி திருவிழாவிற்கு நானும் என் அக்காவும் போகலாமென நினைத்து வீட்டிலிருந்து கிளம்பினோம்.

கிட்டதட்ட இரண்டுகிலோமீட்டர்களுக்கு தார்சாலையில் நடக்கவேண்டும்.

என்னிடம் செருப்பில்லை.
அக்கா, தன்னுடைய செருப்பைக்கொடுத்து போட்டுக்கொள்ளசொல்ல
நானும் போட்டுக்கொண்டேன்.

அந்தவூரிலிருந்த என் பள்ளிநண்பர்கள் என்னடா பொம்பள செருப்பு போட்டிருக்கே என்று கிண்டலடிக்க,
நான் வெட்கப்பட்டுக்கொண்டு அக்காவை தேடிப்பிடித்து செருப்பை மீண்டும் தந்துவிட்டேன்.

வீட்டிற்கு திரும்பவரும்போது மீண்டும் போட்டுக்கொண்டேன்.

வீட்டிற்கு வந்துபார்த்தால் அக்காவின் கால்கள் கொப்புளித்துவிட்டன.

அம்மா கேட்டபோது தீக்குழிக்கருகிலிருந்த கரியில் கால்வைத்துவிட்டேனென அக்கா சொன்னார்கள்.

அப்போது நான் சிறுவனென்பதால் அக்காவின் பாசம் விளங்கவில்லை.

ஆனால் பின்னர்தான் தெரிந்தது.
கால் கொப்புளித்ததன் காரணம்,
அக்கா வெறுங்கால்களுடன் தார் சாலையில் நடந்ததுதானென்று.

அக்காவோ அண்ணனோ..!

உறவுகளின் பாசம் உன்னதமானது. ♥

- ஃபீனிக்ஸ் பாலா.


உங்களுக்கு மிகவும் பிடித்த எப்போதும் முணுமுணுக்கும் பாடல் எது..?

Posted: 03 Aug 2014 07:55 AM PDT

உங்களுக்கு மிகவும் பிடித்த எப்போதும் முணுமுணுக்கும் பாடல் எது..?

குழந்தைகளை தூக்கும்போது மிகவும் கவனிக்க வேண்டியது...

Posted: 03 Aug 2014 07:45 AM PDT

குழந்தைகளை தூக்கும்போது மிகவும் கவனிக்க வேண்டியது...


:)

Posted: 03 Aug 2014 07:30 AM PDT

:)


காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் !! ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலு...

Posted: 03 Aug 2014 07:15 AM PDT

காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் !!

ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.

சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."

புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்...!".
பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா..? "
சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".

இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்...!".

:) :)

பிளாஸ்டிக் அரிசி” சீனர்களின் அடுத்த டூப்ளிகேட்....! Please Share ஆட்ட கடிச்சி ம...

Posted: 03 Aug 2014 07:01 AM PDT

பிளாஸ்டிக் அரிசி" சீனர்களின் அடுத்த டூப்ளிகேட்....!
Please Share

ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடைசியில
மனுசனயும் கடிக்க போரானுங்க இந்த
சீனர்கள், மார்கெட்ல புதுசா ஒரு பொருள்
வந்துருச்சுன்னா அது கம்யூட்டரிலயிருந்து
கக்கூஸ் கழுவுர ஆசிட் வரைக்கும்
டூப்ளிகெட் செஞ்சு விக்கிறதுல
சீனாக்காரனுகள அடிச்சிக்க
ஆளே இல்லங்கிறது நமக்கு தெரியும்.

இன்னைக்கு நாம அன்றாடம் பயன் படுத்தும்
அரிசியைகூட விடடுவைக்கவில்லை இந்த
அறிவு ஜீவிகள், அதுலையும்
போலியை கண்டு பிடிச்சு எல்லோரோட
உயிருக்கும் ஆப்பு வைக்க
காத்துகிட்டு இருக்கானுங்க இந்த பாவிகள்.
கலப்படம் பண்ணுவதே பெரிய தவறாக
இருக்கும் போது முழுக்க முழுக்க
பிளாஸ்டிக் மற்றும்
உருளைக்கிழங்கையே மூலப்பொருட்களாக
கொண்டு இந்த அரிசியை சீனாவில்
உருவாக்கி மிகவும் மலிவான விலையில்
இதை விற்பனைக்கும்
வைத்து இருக்கிறார்கள்..!
விலை குறைவு காரணமாக வழக்கம்
போலவே மக்கள் இந்த
அரிசியையே விரும்பி வாங்க..! இந்த
அரிசிக்கான தேவையும்
அதிகரித்து இருக்கிறது..!

மேலும் மூன்று கப் இந்த அரிசி சாதம்
சாப்பிட்டால்.. ரெண்டு முழு பாலிதீன்
பைகளை விழுங்கியதற்கு சமமாம்..!
மீண்டும்
ஒரு உலக போர்வந்தால் சீனா முக்கிய
பங்கு வகிக்கும் என்று கருதிவரும்
நிலையில் அவர்கள் எடுத்திருக்கும் ஆயதம்
மிகவும் பயங்கரமான ஒன்றாக உணவுக்கான
அரிசியிலேயே காட்ட
தொடங்கிவிட்டார்கள்.
இதுலவேற நம்ம
கவர்மென்டு சில்லரைவர்தகத்தில் அந்நிய
முதலீடுன்னுங்கிற பேர்ல
எல்லா நாட்டுகாரனுங்களையும்
இந்தியாவுக்குள்ள
விட்டு கொஞ்சநாளைக்கு நம்ம பொருள
வாங்கிட்டு அப்புறம் அவன்
நாட்டிலிருந்து அப்புறம் பிளாஸ்டிக்
அரிசியைதான் கொண்டு வந்து விப்பான்.

நம்ப மக்களும்
விலை குறைவா இருக்கேன்னு வாங்கிதின்னு
சீக்கிறத்தல போய்சேர போறான். 1940 களில்
உள்ளமாதிரி அந்நிய
பொருளை வாங்கமாட்டோம்ன்னு கோசம்
போட்டு இன்னொரு சுதந்திர போராட்டத்த
நடத்த வேண்டிய நிலமைக்கு
ஆளாகபோகிறோம்.
இதைகண்டுபிடித்து
செய்தி வெளியிட்டது கொரியாவிலிருந்து
வெளியாகும் வீக்லிஹாங்காங் எனும்
பத்திரிக்கைதான்.

என்ன ஒரு கொடூர மனம் படைத்தவர்களாக
இருக்க கூடும் இது போன்ற
போலிகளை தயாரிப்பவர்கள்??
இதை மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள்
தோழர்களே..

http://www.ibtimes.com/china-makes-fake-rice-plastic-report-263027


அழகிய படைப்பு..

Posted: 03 Aug 2014 06:45 AM PDT

அழகிய படைப்பு..


:P

Posted: 03 Aug 2014 06:30 AM PDT

:P


நேற்று ஆபிஸ் முடிந்ததும் வீட்டுக்குப் போனேன். நல்ல பசி.... சாப்பிட உட்கார்ந்தா...

Posted: 03 Aug 2014 06:15 AM PDT

நேற்று ஆபிஸ் முடிந்ததும் வீட்டுக்குப் போனேன்.

நல்ல பசி....

சாப்பிட உட்கார்ந்தால் ... உணவு தயாராகவில்லை.

எனக்கு வந்ததே கோபம்....

"பளார்" என என மனைவியின் கன்னத்தில் அறைந்து விட்டேன்.

அவள் அழ ஆரம்பிக்க ...

பக்கத்து வீட்டுக்காரகளெல்லாம் என் வீட்டை எட்டிப் பார்க்கும் படி ஆயிற்று.

விளைவு ... பசியுடனேயே தூக்கம்....

இன்று காலை 6 மணி இருக்கும்...

என் மனைவியும், பக்கத்து வீட்டுக்காரியும் பேசும் சத்தம் என் தூக்கத்தைக் கலைத்தது.

"ஏண்டி...இப்படி மாட்டை அடிச்ச மாதிரி அடிக்கிறாரு ... இவர்கூடல்லாம் எப்படி குடும்பம் நடத்துற? ... போ... போய் போலிஸ் ஸ்டேடன்ல கம்ப்ளெய்ண்ட் குடுத்து நாலு சாத்து சாத்த சொல்லு ... அப்பதான் இந்த மாதிரி ஆளுங்கல்லாம் திருந்துவாங்க"

சிறிது நேர மவுனத்திற்கும் பின் என் மனைவி சொன்னாள்,

" நானும் அப்படித்தான் நெனச்சேன் ... ஆனா, நான் பூரிக்கட்டையால அடிச்சதுல அவரு உடம்பெல்லாம் வீங்கியிருக்கே ... அதை போலிஸ்காரங்க பார்த்தாங்கன்னா ... நானும்ல மாட்டிப்பேன்"

#ரொம்ப பாசக்காரியா இருக்காளேய்யா!!

- Jayant Prabhakar.

ஆசையே துன்பத்திற்கு காரணமாம் . புழுவிற்கு மீன் ஆசைப்பட்டது . மீனுக்கு மனிதன் ஆச...

Posted: 03 Aug 2014 06:00 AM PDT

ஆசையே துன்பத்திற்கு காரணமாம் .

புழுவிற்கு மீன் ஆசைப்பட்டது .
மீனுக்கு மனிதன் ஆசைப்பட்டான் .

மீனுக்கு சிக்கியது புழு .
மனிதனுக்கு சிக்கியது மீன் .
புழுவிற்கு ?

ஆனாலும் காத்திருந்தது
புழு,
மனிதன் மண்ணுக்குள் வரும் வரை .

# எல்லா தவறுகளும்
ஒரு நாள் தண்டிக்கப்படும்

# படித்ததில் பிடித்தது #


ரஷ்ய நாட்டு ஓவியர் ஒல்கா மிளாமொரி அவர்களின் பென்சில் ஓவியம்! Pencil sketch by R...

Posted: 03 Aug 2014 05:45 AM PDT

ரஷ்ய நாட்டு ஓவியர் ஒல்கா மிளாமொரி அவர்களின் பென்சில் ஓவியம்!

Pencil sketch by Russian artist Olga Melamory


:)

Posted: 03 Aug 2014 05:30 AM PDT

:)


விமானம் பறப்பது பற்றிய தகவல்... ...................................................

Posted: 03 Aug 2014 05:15 AM PDT

விமானம் பறப்பது பற்றிய தகவல்...
....................................................

இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்

பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்

சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…

இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.

ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு.

A ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift).

B முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust.

C கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight.

D பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag.

ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்

Weight=Lift

Drag=Thrust

த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்.

டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்.

விமானத்தின் எடை 'லிப்ட்' விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்.

விமானத்தின் 'லிப்ட்' விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்.

சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும்.விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று. அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்.

அதே போல விமானத்தில் 'டிராக் விசையை கொடுப்பது' காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள். இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே காரணம் (அதாவது வானத்தில்).

ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால்,

இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.

(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது).

விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது விமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்.

பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான்.

இது சற்று சுவாரஸ்யமானது.

ஹலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேகிருக்கும் விசிரியால் வருகிரது என பலர் சொல்லிவிடுவார்கள்,

விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்.

உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சின்தான் .சற்று மறைமுகமாக விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் .

இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது .விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது.

விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது,.காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது.

விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும்.(மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்).

விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும்.

இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது.அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்.

இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக?

இங்குதான் விஷயம் உள்ளது.

காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது.

கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது,

குறைந்த காற்றுழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்).

விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும்.

அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்.

இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மானிக்கிறது?

சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் .

எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?

அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (ஹலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் எலிகாப்டருக்கு வராது).

இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது...

விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும்.

கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா...?

அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது.

அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும்.

மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது

ஒரு டெயில் பீஸ்....

இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான்.

பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது...!

-உடுமலை.சு.தண்டபாணி

தம்பி இந்த வண்டில, முதுமலைக்கு எனக்கு ஒரு லிப்ட் தரலாமா...?

Posted: 03 Aug 2014 05:00 AM PDT

தம்பி இந்த வண்டில, முதுமலைக்கு எனக்கு ஒரு லிப்ட் தரலாமா...?


தினமும் ஒரே ஒருவரிடம் மட்டும் போட்டியிட்டாலே போதும், தலைசிறந்த மனிதராக மாறி விடல...

Posted: 03 Aug 2014 04:45 AM PDT

தினமும் ஒரே ஒருவரிடம் மட்டும் போட்டியிட்டாலே போதும், தலைசிறந்த மனிதராக மாறி விடலாம். அவர் தான் -'நேற்றைய நீங்கள்'.

பிறர் நம்மகிடும் மதிப்பெண்கள் எல்லாம் வெறும் எண்களே. அதற்கு மேல் அதைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. (y)


யதார்த்தம்

Posted: 03 Aug 2014 04:30 AM PDT

யதார்த்தம்


சர்க்கஸ் முதலாளியிடம் இளைஞன் ஒருவன் வந்தான். ஐயா நான் ஏழை. வேலை இல்லாமல் தவிக்கி...

Posted: 03 Aug 2014 04:15 AM PDT

சர்க்கஸ் முதலாளியிடம் இளைஞன் ஒருவன் வந்தான். ஐயா நான் ஏழை. வேலை இல்லாமல் தவிக்கிறேன். எந்த வேலை கொடுத்தாலும் செய்கிறேன். ஏதேனும் வேலை கொடுங்கள் என்று கெஞ்சினான்.

இரக்கப்பட்ட முதலாளி, இங்கு உனக்குத் தருவது போல வேலை எதுவும் இல்லை. சர்க்கசில் இருந்த கொரில்லா குரங்கு ஒன்று இறந்து விட்டது.

அந்தக் கொரில்லாவின் தோலை போர்த்திக் கொண்டு நீ கொரில்லா போல நடி சர்க்கசைப் பார்க்கும் எல்லாரும் உன்னை உண்மையான கொரில்லா என்றே நினைத்துக் கொள்வார்கள்.

நான் உனக்கு சம்பளம் தருகிறேன். நீ என்ன சொல்கிறாய்? என்று கேட்டார்.

அவனும் ஒப்புக் கொண்டான்.

சர்க்கஸ் நடந்து கொண்டிருந்தது. கொரில்லாவைப் போல வந்த அவன் கம்பிகளில் தாவி விளையாடினான்.
பிடி தவறிய அவன் சிங்கத்தின் கூண்டருகே விழுந்தான். சிங்கம் அவனை நெருங்கியது.
பயந்து போன அவன், ஐயோ! சிங்கம்! என்னைக் காப்பாற்றுங்கள் என்று அலறினான்.

உடனே அந்தச் சிங்கம், முட்டாளே! வாயை மூடு. இப்படி நீ அலறினால் நாம் எல்லோரும் வேலையை இழக்க வேண்டி இருக்கும் என்று மெல்லிய குரலில் சொன்னது...

ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் Relaxplzz

கணவன் உண்ட அதே இலையிலோ அல்லது தட்டிலோ மனைவி உண்ண #காரணம்!! திருமணம் ஆன பெண்களை...

Posted: 03 Aug 2014 03:56 AM PDT

கணவன் உண்ட அதே இலையிலோ அல்லது தட்டிலோ மனைவி உண்ண #காரணம்!!

திருமணம் ஆன பெண்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச் சொல்லுவார்கள் அது ஏன் என்று தெரியுமா?

கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான்,
அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம்,பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.

கணவனில் எச்சிலில் இருக்கும் புதிய ஜீன்கள் சாப்பாட்டின் மூலம் மனைவியின் உடலில் கலந்து அது அவள் பாலூட்டும் குழந்தைக்கு கிடைக்கவே (ஜீன் அப்டேசன்) இந்த ஏற்பாடு.
என்ன தான் கணவனின் ஜீன் குழந்தைக்குள் இருந்தாலும் அது லேட்டஸ்டாக அப்டேட் ஆகவே இந்த ஏற்பாடு. மேலும் இது வயிற்றிற்குள் இருக்கும் குழந்தையின் முதல் ஆறு மாதத்திற்குள் உண்டாகும் வளர்சிதை மாற்றங்களுக்கும், பிறந்தபின் முதல் ஆறு மாதங்களுக்கு ஏற்படும் வளர்ச்சிக்கும் மிக மிக அத்தியாவசமாகிறது என்று மேல்நாட்டு அறிவியல் வல்லுனர்கள் கண்டறிந்து ஆச்சரியப்படுகின்றனர்...


"தெரிந்து கொள்வோம்" - 2

மூளைக்கு ஒரு வேலை.. இரண்டில் எது நீளமானது..?

Posted: 03 Aug 2014 03:45 AM PDT

மூளைக்கு ஒரு வேலை..

இரண்டில் எது நீளமானது..?


:)

Posted: 03 Aug 2014 03:30 AM PDT

:)


குட்டிக்கதை: ஓர் ஆற்றின் இந்தக் கரையில் இருந்து அந்தக் கரையைக் கடக்க இரண்டு ஆண்...

Posted: 03 Aug 2014 03:15 AM PDT

குட்டிக்கதை:

ஓர் ஆற்றின் இந்தக் கரையில் இருந்து அந்தக் கரையைக் கடக்க இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் நின்றிருந்தனர்.

முதல்நபர், 'இந்த ஆற்றை நீந்திக் கடக்கத் தேவையான உடல் பலத்தைக் கொடு' என்று கடவுளிடம் கேட்டார். உடல் பலத்தைக் கொடுத்தார் கடவுள். ஆனால் அந்த ஆளுக்கு நீந்தத் தெரியவில்லை. நீச்சல் பயிற்சி இல்லாமல் வெறும் உடல்பலத்தை மட்டும் வைத்துக்கொண்டு என்ன பயன்? தண்ணீரில் மூழ்கித் தத்தளித்தார்.

இரண்டாவது நபர், 'ஆற்றைக் கடந்து போவதற்கு எனக்கு ஒரு படகு தா' என்று கடவுளிடம் கேட்டார். படகு வந்தது. அதில் ஏறிப் பயணத்தைத் தொடங்கினார். ஆனால் அந்தப் படகில் ஒரு பொத்தல் இருந்தது. தண்ணீர் உள்ளே வந்து, படகு கவிழ்ந்து, தண்ணீரில் மூழ்கி விட்டார்.

மூன்றாவதாக அந்தப் பெண், 'நான் அந்தக் கரைக்குச் செல்ல வசதியாக தண்ணீரே இல்லாமல் செய்துவிடு' என்று சொன்னாள். தண்ணீர் வற்றிவிட்டது. நடந்து சென்று கரையைத் தாண்டினாள்.

இதைக் கவனித்த பெரியவர் ஒருவர், 'எப்படியம்மா நீ மட்டும் புத்திசாலித்தனமாக இப்படி நடந்துகொண்டாய்?' என்று கேட்டார்.

அந்த அம்மா சொன்னார்,
"எனக்கு முன்னால் இரண்டு பேர் செய்த தவறுகளில் இருந்து நான் படித்த பாடம் இது. அந்த அனுபவம்தான் இப்படிப் புத்திசாலித்தனமாக என்னை செயல்பட வைத்தது"

இந்த கம்பீரம் வேறு எந்த தமிழனுக்கு இருக்கும் (y)

Posted: 03 Aug 2014 02:45 AM PDT

இந்த கம்பீரம் வேறு எந்த தமிழனுக்கு இருக்கும் (y)


மறுக்க முடியாத உண்மை

Posted: 03 Aug 2014 02:30 AM PDT

மறுக்க முடியாத உண்மை


செக்கு மாடும்., MBA படித்தவனும்..! MBA படிச்ச ஒருத்தன் கிராமத்துக்கு போறான்..,...

Posted: 03 Aug 2014 02:15 AM PDT

செக்கு மாடும்., MBA படித்தவனும்..!

MBA படிச்ச ஒருத்தன் கிராமத்துக்கு
போறான்..,

அங்கே ஒரு செக்கு மாடு மட்டும்
தனியா செக்கு சுத்திட்டு இருக்கு..

அவனுக்கு ஆச்சரியமா இருக்கு..,

பக்கத்தில ஒரு குடிசைக்குள்ள
ஒரு விவசாயி சாப்பிட்டுட்டு
இருந்தாரு.. அவர்கிட்ட கேட்டான்...

" மாடு மட்டும் தனியா செக்கு
சுத்திட்டு இருக்கே..? "

" அது பழகின மாடு தம்பி.., அதுவே
சுத்திக்கும்..! "

" நீங்க உள்ளே வந்த உடனே
அது சுத்தறத நிறுத்திட்டா...!
எப்படி கண்டுபிடிப்பீங்க..? "

" அது கழுத்தில ஒரு சலங்கை
இருக்கு தம்பி.., சுத்தறதை நிறுத்திட்டா
அந்த சலங்கை சத்தம் வராது..
அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்.. "

" அது சுத்தறதை நிறுத்திட்டு.,
ஒரே இடத்துல நின்னு..,
தலைய மட்டும் ஆட்டினா..
அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க..? "

" இதுக்குதான் தம்பி., நான் என் மாட்டை
காலேஜூக்கெல்லாம் படிக்க அனுப்பலை..! "

" ?!?!!?!? "

ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் Relaxplzz

0 comments:

Post a Comment