Tuesday, 5 August 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


#திருக்குறள் குறள் பால்: #பொருட்பால் . குறள் இயல்: #குடியியல் . அதிகாரம்: #சான்ற...

Posted: 05 Aug 2014 06:45 PM PDT

#திருக்குறள்
குறள் பால்: #பொருட்பால் . குறள் இயல்: #குடியியல் . அதிகாரம்: #சான்றாண்மை.

#உரை:
சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவறுடைய பண்புகளின் நலமே, மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று..

#Translation:
The good of inward excellence they claim,
The perfect men; all other good is only good in name

#Explanation:
The only delight of the perfect is that of their goodness; all other (sensual) delights are not to be included among any (true) delights.

@Puducherry * புதுச்சேரி * Pondichéry


கடந்த மாதம் சென்றிருந்த போது கருமேகங்கள் சூழ அழகாக காட்சியளித்தது. ராஜேந்திர சோ...

Posted: 05 Aug 2014 06:07 AM PDT

கடந்த மாதம் சென்றிருந்த போது கருமேகங்கள் சூழ அழகாக காட்சியளித்தது.

ராஜேந்திர சோழனின் தரைப் படையில் மட்டும் பத்து லட்சம் வீரர்கள் இருந்ததாக நம்பப்படுகின்றது.கிழக்கிலும் மேற்கிலும் இருந்த வலுவான சாளுக்கிய படையை வெற்றி கொண்ட பின் சோழர்களின் படை நேராக கலிங்கம் (ஒரிசா) வழியாக கங்கை நோக்கி செல்கிறது.

ராஜேந்திர சோழன் அவர்களே எதிரிகளின் படையை தடுக்க கோதாவரி கரையில் முன் நின்றுருக்கிறார். அப்படியே முன்னேறிய சோழர்களின் படை வங்காளத்தில் ஆண்டுகொண்டிருந்த பால அரசாங்கத்தை நோக்கி சென்றது அங்கே "மகிபலா" என்கிற அரசனை எதிர் கொண்டு வெற்றி கொண்டது.

ராஜேந்திர சோழனின் திருவாலங்காடு செப்பேட்டில் கங்கை வரை சென்று போர் புரிந்தது இரண்டு வருடங்களுக்கு குறைந்ததாக இருந்ததாகவும், வடக்கே ஆண்டுகொண்டிருந்த பல அரசாங்கங்கள் சோழர் படைக்கு வீழ்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த செப்பேட்டில் ரணசுரனின் படைகளை வென்று தர்மபாலா என்ற இடத்தை கைப்பற்றி, அங்கிருந்து கங்கை சென்று தோற்ற அரசர்களை வைத்தே கங்கை நீரை சோழ தேசம் வரை கொண்டு வர செய்திருக்கிறார்கள். அப்படி வெற்றி கொண்டதன் அடையாளமாய் உருவானது தான் இந்த "கங்கை கொண்ட சோழபுரம்". ஒரு வேல இந்த பாவம் எல்லாம் தான் இப்போ சுத்தி சுத்தி அடிக்கிதோ!.


சில நாட்களுக்கு முன் அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய போது, எங்க வீட்டு நாய் பக்...

Posted: 05 Aug 2014 03:45 AM PDT

சில நாட்களுக்கு முன் அலுவலகம் முடிந்து
வீடு திரும்பிய போது,
எங்க வீட்டு நாய் பக்கத்து வீட்டு முயலை
வாயில் கவ்வி ஓடி வருவதைப் பார்த்து
அதிர்ச்சியாக இருந்தது.

நாயின் வாயிலிருந்த முயல் இறந்துவிட்டது தெரிந்தது.
என் நாய்தான் முயலை கொன்றுவிட்டது
என்ற உண்மை பக்கத்து வீட்டுக்காரருக்குத் தெரிந்தால்....?....
நெஞ்சம் பதறியது. என்ன செய்வது என சற்று சிந்தித்தபின் ...
நாயின் வாயில் இருந்த முயலை பிடுங்கி,
வீட்டுக்குள் எடுத்துச் சென்று நன்றாக அதை குளிப்பாட்டி,
பின் யாருக்கும் தெரியாமல் சத்தமில்லாமல்
பக்கத்து வீட்டு கூண்டில் போட்டு விட்டேன்.

ஈரமான முயலைப் பார்த்ததும்
"அதிக குளிர் தாங்காமல் முயல் இயற்கையாக
இறந்ததாக எண்ணி பக்கத்து வீட்டார் ஏமாந்து போவார்கள்'
என மனதிற்குள் நினைத்து
என் சாமர்த்தியத்தை மெச்சிக் கொண்டேன்.

நேற்று எதேச்சையாக என்னைப் பார்த்துவிட்ட
பக்கத்து வீட்டுக்காரர்,
"உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா" என்று கேட்டார்.

எனக்குக் கால்கள் நடுங்க ஆரம்பித்தன.
எனினும் ஒன்றும் தெரியாதவன் போல்,
"தெரியாதே என்ன விஷயம்...?" என நான் சொல்ல,
ப‌க்கத்து வீட்டுக்காரர்,

"கடந்த சில நாட்களுக்கு முன்னாடி
எங்கள் வீட்டு முயல் உடல் நிலை சரியில்லாமல்
இறந்து விட்டது."என்றார்

"அப்படியா...!!!??"

"ஆமாம்.
இதில் ஆச்சர்யமான விஷயம் என்னன்னா,
எவனோ ஒரு லூசுப்பய ...
நாங்கள் புதைத்த முயலை தோண்டி யெடுத்து
குளிக்கவச்சி எங்கள் வீட்டுக்ள்ள போட்டிருக்கான்" ....

- சரவணன் ஜெயன்


0 comments:

Post a Comment