Thursday, 28 August 2014

FB Posts by Araathu அராத்து

FB Posts by Araathu அராத்து

ஃபேஸ்புக் கொஞ்சம் கொஞ்சமாக யோக்கியர்களின் கூடாரமாக மாறி மாறி , உலக நியாயமானவர்களின் குழுமமாக மாறி இருக்கிறது. ஒருவகையில் இது வியத்தகு மாற்றமே! எல்லோரும் தன்னை வெளிக்காட்டிக்கொள்ள ஒரு மீடியம் இருக்குமெனில் நல்லவர்களாகத்தான் காட்டிக்கொள்ள விரும்புகிறார்கள் என்பதே மகிழ்ச்சியளிக்கும் செய்திதான். யாரேனும் யாரையேச்சும் பாருங்களேன். யாரையேனும் எதற்காகவேனும் பாராட்டுங்களேன்.எல்லோரும் நல்லவர்களாக மாறிவிடுவார்கள். எல்லோருக்கும் நல்லவர்களாக இருப்பதாக காட்டிக்கொள்ள பிடிப்பதே நல்ல சமிக்ஞைதான்.

Posted: 27 Aug 2014 12:34 PM PDT

சயனைட் குறுங்கதைகள் - கள்ளக்காதலி அவளைப்பற்றி எனக்கு ஏதும் தெரியாது.உணர்ந்ததுதான்.அவள் வீட்டுக்கு அவள்தான் என்னை அழைத்தாள். நீண்ட யோசனைக்குப்பிறகு நான் சென்றேன். எனை வரவேற்று நாற்காலியில் உட்கார வைத்தவளை அணைத்துகொண்டேன். ஏய் என்னா பண்ற என்று விலகினாள். சங்கர் வேலைக்கு போயிருக்காரு , ஐடி கம்பனி , எப்ப வேணா வரலாம் என்றாள். அது மட்டுமில்லாமல் குழந்தைகள் 12.30 க்கு வந்து விடும் என்பதும் தெரிந்தது. என்ன செய்வது எனத் தெரியாமல் குழம்பிப்போய் , சடாரென எழுந்து , என் செல்லக்குட்டி என அவளை அணைத்துக்கொண்டேன்.என் கைகளை அவளின் பின் புறத்தில் வைத்து என்னோடு சேர்த்து இணையாக , கொஞ்சம் கீழிறங்கி அணைத்துக்கொண்டு ஐ லவ் யூ என சொன்ன படியே அவளின் உதட்டை சுவைத்தேன். முதலருவியின் ருசிபோல இருந்தது.சுவைத்துக்கொண்டேயிருந்தேன். தள்ளி விட்டு , நேரமாகியது என்றாள்.விலகினேன். எவனோ ஒருவன் , நான் முத்தம் மட்டும் தானே கொடுத்தேன் என்றும் , நீ என் முலையில் கடித்து விட்டாய் என்றும் அலைவரிசையில் இருவர் பேசிக்கொண்டிருப்பதை கேட்டேன். இது எனக்கு வழக்கம்தான்.

Posted: 27 Aug 2014 12:09 PM PDT

பெரியவர்கள் சிறுவர்களை திட்டுவார்கள்.சிறுவர்கள் பெரியவர்களை கிண்டலிடிப்பார்கள்.வெளியே இருக்கிறது உலகம்.

Posted: 27 Aug 2014 11:44 AM PDT

பெரியவர்கள் சிறுவர்களை திட்டுவார்கள்.சிறுவர்கள் பெரியவர்களை கிண்டலிடிப்பார்கள்.வெளியே இருக்கிறது உலகம்.

தற்கொலை கவிதைகள் ஒரு ஆட்டை அறுப்பது போல் ஒரு கோழியை கிழிப்பது போல் உங்களால் முயலையோ மானையோ அறுக்க முடியாது. ஆனால் முயலையும் மானையும் சாப்பிட முடியும். இல்லை, எங்களால் அறுக்க முடியும் என்கிறீர்களா? உங்களுக்கான தற்கொலை கவிதை இது இல்லை !

Posted: 27 Aug 2014 11:38 AM PDT

தற்கொலை கவிதைகள் ஒரு ஆட்டை அறுப்பது போல் ஒரு கோழியை கிழிப்பது போல் உங்களால் முயலையோ மானையோ அறுக்க முடியாது. ஆனால் முயலையும் மானையும் சாப்பிட முடியும். இல்லை, எங்களால் அறுக்க முடியும் என்கிறீர்களா? உங்களுக்கான தற்கொலை கவிதை இது இல்லை !

தற்கொலை கவிதைகள் எதிரியை நாம்தான் அங்கீகரிக்க வேண்டும். அதற்கு நம்மிடம் சில அளவுகோல்கள் உள்ளன. ஆனால் அதையும் மீறி தகுதியே இல்லாத ,அல்லது நமக்கு இணையான பின்புலம் இல்லாத எதிரிதான் நம்மை விளையாட்டாக அட்டாக் செய்கிறான். அவனிடம் என்ன செய்வது எனத் தெரியமல் தோற்றுப்போவதும் வீரம்தான்.

Posted: 27 Aug 2014 11:32 AM PDT

தற்கொலை கவிதைகள் எதிரியை நாம்தான் அங்கீகரிக்க வேண்டும். அதற்கு நம்மிடம் சில அளவுகோல்கள் உள்ளன. ஆனால் அதையும் மீறி தகுதியே இல்லாத ,அல்லது நமக்கு இணையான பின்புலம் இல்லாத எதிரிதான் நம்மை விளையாட்டாக அட்டாக் செய்கிறான். அவனிடம் என்ன செய்வது எனத் தெரியமல் தோற்றுப்போவதும் வீரம்தான்.

சாருவுக்கு கடிதம் சாரு தற்போது உங்களுடைய தொடர் கட்டுரைகளை படித்து வரும்போது ஒன்று தோன்றியது.சில நாட்களாக இணையம் வெறிச்சோடி கிடக்கிறது. இணையத்தில் சுற்றும் புரட்சியாளர்களுக்கு தானாக ஏதும் செய்யத் தெரியாது.யாரேனும் ஏதேனும் சொன்னாலோ , எழுதினாலோ தங்களின் மூளையை குறியிலிருந்து தலைக்கு இடம் மாற்றி கராங் முராங் என கத்த ஆரம்பிப்பார்கள். ஜெயமோகன் ஆடிக்கொரு முறை தைக்கு ஒருமுறை இவர்களுக்கு வாய்ப்புத் தருகிறார்.அதிலும் அவர் அவர் எழுதும் சீனப் பெருஞ்சுவர் கட்டுரைகளைப் பார்த்து மிரண்டு , ஏதேனும் ஒரு பத்தியை ஹை லைட் செய்து போட்டு எழுதும் ஃபேஸ்புக் பதிவுகளுக்கு எதிர்வினை ஆற்றுவது இவர்களுக்கு அவ்வளவு சுவாரசியமாக இல்லை. உங்கள் பதிவுகளில் ஒரு வேடிக்கை உண்டு. ஏழாம் வகுப்பு மாணவன் எழுதுவது போன்ற, மிக எளிய , புரிந்து கொள்ள கொஞ்சம் கூட மெனக்கெட வேண்டியில்லாத சில பதிவுகள் வரும். கடுமையாக புரிந்து கொள்ள வேண்டிய சில பதிவுகளும் இதே ஏழாம் வகுப்பு மாணவன் கட்டுரை தொனியிலேயே வரும். உங்கள் பதிவுகளைப் படிக்கையில் தூக்கம் வராது , போர் அடிக்காது, எங்கேனும் சொறிந்தாலும் தெரியாது :-) . எந்த வார்த்தையும் , வாக்கியமும் புரியாமல் இருக்காது.இதனால் இதுவரை வாராந்திரி ராணி மட்டுமே படித்தவனும் , ஒன்றுமே படிக்காதவனும் உங்கள் பதிவுகளை முழுமையாக படித்து விட முடிவதால் ஏற்படும் நகைச்சுவை இருக்கிறதே ! சொல்லி மாளாது. அதிலும் எனக்கென்ன வேடிக்கையாக இருக்கும் என்றால் , உங்கள் ஒருவர் விஷயத்தில் மட்டும் மெத்தப் படித்த , எழுதிக் குவித்த இலக்கியவாதியும் , ஃபேஸ்புக் ஓசியில் கிடைக்கும் ஒரே காரணத்தால் , தமிழில் எதையேனும் படித்துக்கொண்டிருக்க நேர்ந்த , முள்ளங்கி பத்தைகளும் எப்படி ஒரே புள்ளியில் இணைகிறார்கள். காரணம் என்ன என்றால் டிரான்ஸ்க்ரெஸிவ் ரைட்டர். அந்த தன்மை சமீபமாக பிறந்து வந்தவர்களுக்கு கடும் அன்னியமாகவும் , பதட்டமாகவும் உள்ளது.சமீபமாக என்றால் , 1930 ல் இருந்து எடுத்துக்கொள்ளலாம். சுதந்திரம் பெற்ற பிறகு , அரசு வேலை பெற்றவர்கள் ஒரு புது கலாச்சாரத்தை உருவாக்கினார்கள். அந்த கலாச்சாரம்தான் இப்போது 90 சதவீத மக்களை இன்ஃப்ளுயன்ஸ் செய்து கொண்டும் , தற்போதைய மெஜாரிட்டி கலாச்சாரமாகவும் உள்ளது. இந்த கலாச்சார கூறுகள் பல உள்ளன. அவற்றை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம். இந்த கலாச்சாரப்படி , சொல்லிக்கொடுத்த ஆசிரியரையே கேள்வி கேட்பது என்பது கெத்து! அதாவது கேள்விக்கு பதிலெல்லாம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரிய படிப்பு ஏதும் தேவையில்லை, புரிதல் தேவையில்லை. ஆசிரியர் சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருக்கும்போதே , ஏதேனும் கொஞ்சூண்டு கற்றுக்கொண்டு , அந்த கொஞ்சூண்டு அறிவு தந்த மமதையில் , எதிர்த்து கேள்வி கேட்க வேண்டியது. கேள்வி கேட்பவனுக்கு இருக்கும் அதே அறிவுதான் , உடன் கற்றுக்கொண்டு இருப்பவனுக்கும் இருக்கும் என்பதால் , கேள்வி கேட்பவன் கேட்ட கேள்வி மற்றவர்களுக்கும் படு புத்திசாலித்தனமாகத் தெரிந்து , கேள்வி கேட்டவன் ஹீரோ ஆகி விடுவான். இந்த கலாச்சாரத்தின் லேட்டஸ்ட் டிரெண்டுதான் , சொல்லிக்கொடுத்தவரை , சில கட்டுரைகள் மட்டும் படித்து விட்டு திட்டுவது ! போகட்டும் . இணையம் மசமச வென இருக்கிறது என்று சொன்னேனா ? நீங்கள் இப்போது தொடர் கட்டுரை எழுதி விட்டீர்களா ? அவ்வளவுதான். பிரபலமாகாத கோயில் குளத்தில் இருக்கும் மீன்கள் சோம்பலாக நீந்திக்கொண்டு இருக்கும். திருவிழா அல்லது குடும்ப மொட்டை என ஏதேனும் வருகையில் , யாரேனும் பொறி வாங்கி போடுவார்கள்.அடிக்குளத்தில் சேற்றில் உரசிக்கொண்டு நளினமாக ஆங்கில எஸ் போட்டுக்கொண்டு இருந்த மீன்களெல்லாம் , விஸ்க் விஸ்க் என மேற்குளத்தில் துள்ளி குதித்து பொறி பொறுக்கும்.உங்களின் தொடர் கட்டுரைகளையும் அப்படித்தான் இணைய மீன்கள் எடுத்துகொண்டு துள்ளிக்கொண்டு இருக்கப்போகின்றன. நல்ல எண்டர்ட்டெயின்மெண்ட். தேங்க்ஸ் சாரு !

Posted: 27 Aug 2014 09:10 AM PDT

ஆண் குழந்தையோ , பெண் குழந்தையோ எதைப் பெற்றாலும் தாயாக ஒரு பெண் முழுமையடைந்து விடுகிறாள். பெண் குழந்தை பெற்ற ஆண்கள் மட்டுமே , ஒரு அப்பாவாக முழுமையடைவதாக தோன்றுகிறது.

Posted: 27 Aug 2014 05:55 AM PDT

ஆண் குழந்தையோ , பெண் குழந்தையோ எதைப் பெற்றாலும் தாயாக ஒரு பெண் முழுமையடைந்து விடுகிறாள். பெண் குழந்தை பெற்ற ஆண்கள் மட்டுமே , ஒரு அப்பாவாக முழுமையடைவதாக தோன்றுகிறது.

ஆழி டைம்ஸ் மூன்று வயது குழந்தையின் பிஞ்சு விரலை மடக்கி எழுதச்சொல்லிக்கொடுப்பது கொடூரம்தான்.நம்மூரு பள்ளிக்கூடத்தில் சேர்த்தால் செஞ்சிதான் ஆகணும் . நிற்க ! என் மனைவி , அவனை மடியில் அமரவைத்து , ஸ்டேண்டிங்க் லைன் போடு , ஸ்லாண்டிங்க் லைன் போடு என சொல்லித்தருவது வழக்கம். இரண்டு முறை ஒழுங்காக போட்டு விட்டு , கன்னா பின்னா என கிறுக்கிவிட்டு , எழுந்து தெருவுக்கு ஓடி , அவனுடைய நண்பனோடு விளையாட பார்ப்பான். ஆழி , இன்னிக்கி நீதான் அம்மா , நாந்தான் குழந்தை. எனக்கு எழுதச்சொல்லிக்கொடு என்றாள் பொண்டாட்டி. ஆழி ஆர்வமாக ஆரம்பித்தான். பாப்பா , பென்சிலை கெட்டியா பிடிச்சிக்க பாப்பா, எழுது , ஸ்டேண்டிங்க் லைன் , போடு , ஸ்லாண்டிங்க் லைன், நீ எழுதிட்டு இரு , நான் சமைக்கணும்னு சொல்லிட்டு , எழுந்து தெருவுக்கு ஓடிட்டான்.

Posted: 27 Aug 2014 01:50 AM PDT

சமீபத்தில் ஒரு ஃப்ரெஞ்ச் எழுத்தாளரிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஃப்ராங்கொஃபீல் இலக்கியம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். அதில் ஒரு பெயர் எனக்கு மறந்து விட்டது. ஆனால் அவருடைய நாவல்களைப் படித்திருக்கிறேன். Rue de Retour என்ற அவருடைய நாவல் பெயரைச் சொன்னேன். திரும்பி வரும் வழி (வீதி) என்ற தலைப்பை Way of No Return என்று மொழிபெயர்த்து ஆங்கிலத்தில் வந்திருந்ததை நான் படித்திருக்கிறேன். ஃப்ரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் அதன் தலைப்பைச் சொன்னேன். எழுதியவர் பெயரை கூகிளில் தேடலாம் என்று பார்த்தால் என் ஃபோனில் நான் கூகிளை தரவிறக்கம் செய்திருக்கவில்லை. எழுத்தாளரின் ஃபோனில் கூகிள் இருந்தது. அதிலும் அவரால் பார்க்க முடியவில்லை. பிறகு அராத்துவைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். - சாரு வேற ஒண்ணும் இல்லை.மேற்ச்சொன்ன நாவலின் ஆங்கில பெயரைச் சொல்லி என்னை கூகிளில் தேடச்சொன்னார். ரிஸல்ட்டில் வரவில்லை. எனவே Rue de Retour என்ற ஃப்ரெஞ்சுப் பெயரையே ஒவ்வொரு எழுத்தாக உச்சரித்துத் தேடச்சொன்னார். நான் டைப் அடித்து எண்டர் அடித்தேன். பெயர் வந்து விட்டது. அவ்ளோதான் மேட்டர். அதனால் யாரும் நம்பிக்கை இழக்க வேண்டாம்.பதட்டம் அடைய வேண்டாம்.கலவரப்பட வேண்டாம்! http://charuonline.com/blog/?p=1503

Posted: 27 Aug 2014 01:38 AM PDT

0 comments:

Post a Comment