Thursday, 31 July 2014

FB Posts by Araathu அராத்து

FB Posts by Araathu அராத்து

பல் தேய்க்கிறது , ஆய் போறதுன்னு எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்து தொலையணும் போல இருக்கு. அராத்து சொல்லிக் கொடுத்தல் சீரிஸ்னு ஒண்ணு ஆரம்பிச்சிடறேன். அப்பதான் நாம நிம்மதியா வாழ முடியும் :-) சொல்லிக்கொடுத்தல் - மொபைல் பேசுதல் ஒருவர் உங்களுக்கு கால் பண்ணா , பேசி முடிச்சிட்டு , அவரே கட் செய்யும் வரை காத்திருங்கள். பை / வச்சிடறேன் என எதுவும் சொல்லாமல் இருக்கையிலேயே அவசரக்குடுக்கை போல கட் செய்வது என்னா பழக்கம் ? எதிர் முனையில் பேசுபவர் உயரதிகாரியாக இருந்தால் , அவர் பை சொன்னாலுமே , அவர் கட் செய்யும் வரை காத்திருங்கள். ஒருத்தருக்கு கால் பண்ணும்போது பிஸி டோன் வந்தா , அவருக்கு திரும்ப கால் செய்வதை விட்டு விட்டு ஒரு கிளாஸ் தண்ணி குடிக்கலாம். காதுல வந்து கொசு பாட்டு பாடற மாதிர் ங்கொய்யி ங்கொய்யின்னு தொடர்ந்து கால் பண்ணிட்டே இருப்பது , ஐந்தரை அறிவுதான் இருக்குன்னு நீங்களே ஓப்பனா டிக்ளேர் பண்ற மாதிரி. ஒருத்தருக்கு கால் பண்ணி ஃபுல் ரிங்க் போச்சின்னா , விட்டுடுங்க. அவரே கூப்பிடட்டும். 10 தடவையா திரும்ப திரும்ப கூப்பிடுவீங்க? வெட்கம் மானம் சூடு சொரணைல்லாம் , மொபைல் விஷயத்தில மட்டும் பறந்து போயிடுதே ஏன் ? ஒரு தடவை ஹலோ சொல்லலாம் , பதிலுக்கு ஹலோ சொன்னதும் மேட்டருக்கு வாங்க. நூறு தடவை ஹலோ , ஹல்லோ , ஹால்லோஓஓஓஓ , ஹெல்லோ , ஹலொ ஹலோ , ஹலோ ஹலோ ஹலோன்னு மந்திரமா ஓதிட்டு இருக்கீங்க ? லவ்வர் கிட்ட கூட மொக்கை போட நேரம் காலம் இருக்கு. வெட்டி மொக்கை போட ரெண்டு பேருக்கும் மைன்ட் செட் ஆகணும். அவ பரபரப்பா ,பிரச்சனையில இருக்குறப்ப , பொறுக்க , அப்புறம் , அப்புறம் , பிஸியா , ஏன் ஒரு மாதிரியா பேசறன்னு டென்ஷன் ஏத்தக்கூடாது. சில நேரங்களில் எதிர் முனையில் பேசுபவர் பேசுவது உங்களுக்குக் கேட்காது. கேட்காதுன்னா எவ்ளோ கத்தினாலும் கேட்காதுதான் :-) ஹலோ ஹல்ல்ல்ல்ல்ல்ல்ல்லோஓஓஓஓஓஒ ஹால்ல்ல்ல்ல்ல்லோஓஓஓ நாஆஆஆஆஆஆன் பேஏஏஏஏசறாது கேஏஏஏஎக்குதான்னு தொண்டை கிழிய கத்தினாலும் , நீங்க பேசறதுதான் அவருக்கு கேட்கும். அவர் பேசறது உங்களுக்கு கேட்காது ! ரொம்ப பழக்கம் இல்லாதவர்களுக்கு காலை 10 மணிக்கு முன்போ இரவு 7 மணிக்கு பின்போ கால் செய்வதை தவிர்க்கவும். பெண்கள் வீட்டில் இருக்கையில் மெசேஜ் அனுப்புவதை தவிர்க்கவும். ஒருவரிடம் கால் செய்ய மொபைலை வாங்கினால் ஓசியில் கால் பேசிவிட்டு மொபைலை திரும்ப கொடுத்து விட வேண்டும். உள்ளே போய் உங்களோட மர பீரோ போல நோண்டிப் பாத்துகிட்டே இருக்கக் கூடாது. என்னதான் நெருங்கிய நண்பனாக இருந்தாலும் , குடும்பஸ்தனாக இருக்கையில் , சரக்கு போட்டு நள்ளிரவு 2 மணிக்கு அழைத்து , மாப்ழ ....ழீ ழீ ழீ , செழ கூழ்த்து . நீ இழ்ழா , போழா , வழியா ...ழேழ்ய் , தாழ்ஸ்தாவறிக்கி என உச்ச போதையில் உளறிக்கொட்டினால், அவன் மனைவியும் உங்களை வீட்டில் சேர்க்க மாட்டாள். நீங்கள் உயிர் போகும் பிரச்சனையில் நைட் போன் அடித்தாலும் நண்பன் எடுக்க மாட்டான். காதல் நிமித்தம் நீண்ட நேரம் மொக்கை போட்டுக் கொண்டு இருக்கையில் , கால் வெயிட்டிங்க் நூறு வந்தாலும் ஹீ ஹீ , ஹீ ஹீ ந்னு மொக்கை போட்டுகிட்டே இருக்கக்கூடாது. கட் பண்ணி விட்டு பேசும் கேப்பில் உங்கள் துணை அடுத்தவரோடு ஓடிப்போய்விட மாட்டார்கள். கடைசியாக , டிவியில் லைவ் ஷோவில் உங்கள் நண்பர் பேசிக்கொண்டு இருந்தால் , உடனே உணர்ச்சி வசப்பட்டு அவருக்கு கால் செய்யக்கூடாது . இன்னும் நிறைய இருக்கு. கண்டினியூ ரீடிங்க் போய்டக்கூடாதுன்னு , இத்தோட ..........

Posted: 30 Jul 2014 11:14 PM PDT

கைகளால் அணைத்துக்கொண்டாய். விரைவில் கால்களாலும் , ப்ளீஸ் !

Posted: 30 Jul 2014 05:04 AM PDT

கைகளால் அணைத்துக்கொண்டாய். விரைவில் கால்களாலும் , ப்ளீஸ் !

0 comments:

Post a Comment