Relax Please: FB page daily Posts |
- மேகி நூடுல்ஸ் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு 'ஓட்ஸ்' சாப்பிட ஆரம்பித்துவிடாதீர்கள்....
- மேகி நூடுல்ஸ் மூடுவிழா: நடத்திக் காட்டிய நேர்மையான அதிகாரி பாண்டே! இந்தியா முழு...
- :) Relaxplzz
- பங்களாதேஷ்க்கு 7 நாள் அரசு முறை பயணமாக மோடி கிளம்பினார் :>>ஏண்டா .மாப்ள ,,துபா...
- "என்ன ஒரு வில்லத்தனம் ? படித்ததில் பிடித்தது ஒரு இன்டர்வியூ'வின்.. போது. . மேலா...
- தமிழக பெற்றோர்களே தயவு கூர்ந்து 2 நிமிடம் ஒதுக்கி படியுங்கள் உங்கள் பணம் உங்கள்...
- ஜெயலலிதா கையிருப்பு பணம் 39 ஆயிரம் மட்டுமே - செய்தி இனிமேல் ஹெலிகாப்டருக்கு வாட...
- "பெற்றோர்களே உங்களுக்கு ஓர் அறிவுறை" (அருமையான கருத்து) 1. பசி என்று குழந்தை ச...
- "ஆண்களின்" அன்பு..! திருமணம் ஆன புதுதம்பதினர்கள் மருத்துவமனைக்கு வரும்பொழுது ,...
- முதலமைச்சர் காமராஜரும்.. பிரதமர் நேருவும்.. பொது கூட்டமொன்றில் பங்கேற்க.. மதுர...
- :) Relaxplzz
- :) Relaxplzz
- :) Relaxplzz
- எச்சரிக்கை:- நீங்கள் தினசரி சாப்பிடும் உணவில் கலக்கப்படும் இரசாயனங்களும், அதனால...
- :) Relaxplzz
- போய் வருகிறேன் தாத்தா நான்கு சுவர் சிறைகளுக்குள்ளிருந்து கொஞ்சம் விடுதலைக் காற்ற...
- ;-) Relaxplzz
- வரப்பை வெட்டி வாழ்ந்த குடும்பங்கள், இன்று வயித்தை கட்டி வாழ்கின்றன,.. #விவசாயம்...
- :) Relaxplzz
- :) Relaxplzz
- அம்மாவின் அன்பு தோசை மாதிரி, அப்பாவின் அன்பு தோசைக் கல் மாதிரி... தோசையின் ருசி...
- பெண்ணால் முடியாதது உண்டோ...
- :) Relaxplzz
- :) Relaxplzz
- செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் 14 வயதுப் பையனாகச் சென்னை வந்தார் கவிஞ...
- :) Relaxplzz
- :) Relaxplzz
- கிழவி : ஐயோ., போச்சே.. போச்சே.. கவுண்டமணி : ஏ கிழவி அதான் ஓன் பேரன் சாகலைல.....
- :) Relaxplzz
- :) Relaxplzz
Posted: 06 Jun 2015 09:10 AM PDT மேகி நூடுல்ஸ் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு 'ஓட்ஸ்' சாப்பிட ஆரம்பித்துவிடாதீர்கள். 'ஓட்ஸ்' என்பதே ஒரு டுபாக்கூர் சமாச்சாராம்தான். # இன்றைய நவீன உணவு முறையில் ஓட்ஸ் என்பது அத்தியாவசிய உணவாகிவிட்டது. அதுவும் நீரிழிவு நோயாளிகளின் , உடல் எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள் ஓட்ஸ் சாப்பிடுவதை பெருமையாக நினைக்கிறார்கள் . 10 ஆண்டுகளுக்கு முன்வரை நம் நாட்டில் ஓட்ஸ் இல்லை.. ஆனால் இன்று ஆண்டுக்கு சில ஆயிரம் கோடிகளுக்கு விற்பனையாகிறது. இதற்குப் பின்னால் பண்ணாட்டு வணிக மோசடி உள்ளது.... ஓட்ஸ் ஆஸ்த்ரேலியாவில் பெரும்பான்மையாகவும், ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் விளையும் ஒரு பயிர். அதை அப்படியே உணவாக சாபிடமுடியது சில வழிமுறைகளை பயன்படுத்தி தட்டையாக மாற்றப்படுகிறது.. அதையும் கூட நம்ம ஊர் உணவு போல அதிக அளவில் எடுத்துக்கொள்ள முடியாது... சில கிராம் மட்டுமே (ஸ்பூன் அளவு ) எடுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடுகிறோம். அதிலும் சத்து எதுவும் கிடையாது. பசியை கட்டுபடுத்தும் குணம் மட்டுமே இதற்கு உண்டு. அதிக விலை கொடுத்து வாங்கும் ஓட்ஸை விட நம்ம ஊர் கேழ்வரகில் (Ragi ) பல மடங்கு சத்து உள்ளது. சுமார் 1 கிலோ ராகி சாப்பிடுவது 4 கிலோ ஓட்ஸ் சாப்பிடுவதற்கு சமம். 1 கிலோ ராகி மாவு வெறும் 35 ரூபாய் தான். 4 கிலோ ஓட்ஸ் 140 x 4= 560 ரூபாய். எவ்வளவு மடங்கு விலையில் வித்தியாசம் பாருங்கள்.... எங்கோ ஆஸ்த்ரேலியாவில் விளையும் (அவர்கள் அதிகம் சாப்பிடுவது கிடையாது) ஓட்ஸை நாம் சாப்பிடுவதில் MNC தொழிற்சாலைகளின் கொள்ளை அதிக அளவில் உள்ளது... சில ஆண்டுகளாக போலி விளம்பரங்கள் மூலமும்,மருத்துவர்கள் மூலம் கட்டாயப்படுத்தியும் நம்மை ஓட்ஸ் வாங்க வைத்துவிட்டனர். அந்தந்த நாடுகளிருந்து இங்கு நம் நாட்டிற்கு கொண்டுவர ஆகும் எரிபொருள் செலவு, MNC நிறுவனங்களின் கொள்ளை லாபம் அனைத்தையும் சேர்த்து பயனற்ற பொருளை அநியாய விலைக்கு நம் தலையில் கட்டுகின்றன... அதைவிட ராகி, கம்பு , சோளம் , திணை , வரகு , சாமை போன்ற நம் நாட்டு தானியங்கள் எல்லாம் பல மடங்கு சத்துள்ளவை., 'விலையும் குறைவு ' !!!! சத்து நிறைந்த நம் பாரம்பரிய உணவு இருக்க சக்கையை உண்டு நம் பணத்திற்கும் உடல் நலத்திற்கும் வேட்டு வைக்கலாமா?! Relaxplzz |
Posted: 06 Jun 2015 09:00 AM PDT மேகி நூடுல்ஸ் மூடுவிழா: நடத்திக் காட்டிய நேர்மையான அதிகாரி பாண்டே! இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை உண்டாக்கிய மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை கோரி சட்டப் போராட்டம் நடத்தி வென்று காட்டியுள்ளார் ஒரு நேர்மையான அதிகாரி. இதனால் அவருக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன. அவர் பெயர் வி.கே.பாண்டே. உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேந்தவர்.அம்மாநிலத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றிவரும் வி.கே.பாண்டே, மக்கள் நலனில் உண்மையாகவே அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறார். மேகி நூடுல்ஸ் இன்று நாடு முழுவதும் பெரும் சர்ச்சையில் சிக்கி உள்ளதால் நெஸ்லே நிறுவனம் முடங்கிக் கிடக்கிறது. பல லட்சம் குழந்தைகளின் உடல் நலனோடு விளையாடியதால் தற்போது அதற்கான விளைவை அனுபவித்து வருகிறது. ஆரோக்கிய கேடு விளைவித்த மேகி நூடுல்ஸின் அபாயகரமான முகத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த பெருமை வி.கே.பாண்டே என்பவரையே போய்ச் சேரும். டெல்லியில் மேகி முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு இந்தத் தடை தொடரும். இதே போல கேரளம் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மேகி நூடுல்ஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நூடுல்ஸ் பாக்கெட்டுகளை தீ வைத்து எரித்தும் குப்பையில் கொட்டியும் மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். மாநிலங்களில் நெஸ்லே இந்தியா நிறுவனமும் மேகியால் பெரும் சட்டச் சிக்கலில் மாட்டியுள்ளது. அநேகமாக இந்தியாவில் மாநிலங்கள் கடந்து ஒரு உணவுப்பொருளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள விகாரம் மேகி நூடுல்ஸ்தான் என்றால் அது உண்மையே. இந்த விவகாரம் இவ்வளவு பெரிய சிக்கலாக மாற வி.கே.பாண்டேதான் காரணம் என்பது பலருக்குத் தெரியாத ஒன்று. வி.கே.பாண்டே உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரி ஆவார். 40 வயதான பாண்டே, உ.பி. மாநிலம் பாரபங்கியைச் சேர்ந்தவர். இவர்தான் முதல் முறையாக நெஸ்லே மீது வழக்குப் போட்டு நாட்டின் கவனத்தை ஈர்த்தவர். சட்டப் போராட்டம் இவருக்கு ஒன்றும் புதியதில்லை. ஏன் எனில் பாண்டே, இதற்கு முன்பு வட இந்தியாவைக் கலங்கடித்த பிரிட்டானியா கேக், வாஹித் பிரியாணி ஆகியவற்றுக்கு எதிராகவும் வழக்குப் போட்டு திணறடித்தவர். இவர் போட்ட வழக்கால், தனது விளம்பரத்தில் இது அசைவ கேக் என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நிலைக்கு பிரிட்டானியா தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்பு இந்த வாசகத்தை அது கண்ணுக்குத் தெரியாத பிரவுன் நிறத்தில் போட்டு வந்தது. ஆனால் பாண்டே நடத்திய சட்ட போரட்டத்தால் சிவப்பு நிறத்தில் போட ஆரம்பித்தது. அதே போல லக்னோவைச் சேர்ந்த பிரபல பிரியாணி நிறுவனமான வாஹித் பிரியாணி மீதும் வழக்குப் போட்டவர் பாண்டே. உத்தரப் பிரதேசத்தில் பிரபலமான வாகித் பிரியாணியை வாங்க மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். பிரியாணி பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற அந்த பிரியாணி நிறுவன முதலாளிகளுக்கும் சட்டத்தின் வழியே பாடத்தைக் கற்பித்தார்.வாஹித் பிரியாணியில் சேர்க்கப்படும் நிறத்தில் சர்ச்சை இருப்பதாக பிரச்னையை கிளப்பினார் பாண்டே. தற்போது பிரியாணி நிறுவனம் கோர்ட்டுக்கு நடையாய் நடந்துகொண்டு இருக்கிறது.விரைவில் இதிலும் வெற்றியே பெறப்போகிறார் பாண்டே. அடுத்து மேகி நூடுல்ஸ். கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதிதான் மேகிக்கு பிரச்னை கிளம்பியது. சில சாம்பிள் பாக்கெட்களை வாங்கி வந்த பாண்டே, அதை சோதனை செய்தார். பின்னர் அதை மேல் சோதனைக்கு அனுப்பி வைத்தார். தயாரிப்பில், நெஸ்லே உரிய விதிமுறைகளைக் கடைப்பிடிக்காததைக் கண்டுபிடித்தார். கோரக்பூரில் நடந்த சோதனையின்போது அதிக அளவிலான எம்.எஸ்.ஜி. கலந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நெஸ்லே இந்தியா நிறுவன அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினார் பாண்டே. ஆனால் இந்த நோட்டீஸை எதிர்த்து அப்பீல் செய்தது நெஸ்லே. ஆனாலும் ஓய்ந்துவிடாமல் பாண்டே, மீண்டும் ஒரு நோட்டீஸ் விட்டார். இதனால் அதிர்ந்தது நெஸ்லே நிறுவனம். அதனையடுத்து கொல்கத்தா ஆய்வகத்தில் சோதனை செய்ய அது முன்வந்தது. இதற்காக 1000 ரூபாய் கட்டணத்தையும் கட்டியது. கொல்கத்தா ஆய்வகத்திலும் மேகியின் ரகசியம் உடைந்தது. மேலும் இந்த சோதனையின்போது எம்.எஸ்ஜி மட்டுமல்லாமல் வேறு சில அபாயகரமான பொருட்களும் இருப்பதாக அது சுட்டிக் காட்டியதால் மேகி சிக்கல் கடுமையானது. இதன் பிறகுதான் உ.பி. அரசு மேகிக்கு எதிராக நடவடிக்கையில் இறங்கியது. அதனைத் தொடர்ந்து கேரள மாநிலம்,தமிழ்நாடு என்று மேகி தடை விதிக்கும் மாநிலங்கள் வரிசையாக சேர்ந்து கொண்டிருக்கின்றன. இதனையடுத்து இன்று நெஸ்லே நிறுவனம் மேகி நூடுல்ஸ் உணவுப் பொருளை திரும்பப் பெறும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது.. Relaxplzz ![]() |
Posted: 06 Jun 2015 08:50 AM PDT |
Posted: 06 Jun 2015 08:30 AM PDT பங்களாதேஷ்க்கு 7 நாள் அரசு முறை பயணமாக மோடி கிளம்பினார் :>>ஏண்டா .மாப்ள ,,துபாய் ரோட பாத்துருக்கியாடா நீயி ... நான் எங்க பாத்துருக்கேன் ...நீருதான் ..தென்காசி போயிட்டு வர்ற மாதிரி ..பொசுக்கு ..பொசுக்குனு போயிட்டு வரீரு .. - நிக்கோலஸ் கோபர்நிக்கஸ் @ Relaxplzz ![]() |
Posted: 06 Jun 2015 08:10 AM PDT "என்ன ஒரு வில்லத்தனம் ? படித்ததில் பிடித்தது ஒரு இன்டர்வியூ'வின்.. போது. . மேலாளர்;- நான் சொல்றதுக்கு.. எதிர் வார்த்தையை சொல்லுங்க..! பையன்;- ஓகே சார்.. நீங்க சொல்லுங்க நான் ட்ரை பண்றேன்..! மேலாளர்;- நல்லது.. பையன்;- கெட்டது..! மேலாளர்;- நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை..! பையன்;- நான் இப்பொழுது தான் ஆரம்பித்தேன்..! மேலாளர்;- இல்லைங்க.. பையன்;- ஆமாங்க..! மேலாளர்;- நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க..! பையன்;- நீங்க சரியா புரிஞ்சிக்கிட்டிங்க..! மேலாளர்;- நிறுத்து உன் பேச்சை..! பையன்;- தொடங்கு உன் பேச்சை..! மேலாளர்;- இப்போ.. வாயை மூடுறியா..? இல்லையா..? பையன்;- இப்போ வாயை திறந்து பேசுகிறாயா..? இல்லையா..? மேலாளர்;- நிறுத்துடா எல்லாத்தையும்..! பையன்;- தொடங்கு டா.. எல்லாத்தையும்..!! மேலாளர்;- வெளியே போ..! பையன்;- உள்ளே வா..! மேலாளர்;- ஐயோ ஆண்டவா..! பையன்;- ஆஹா சைத்தானே..! மேலாளர்;- யு ஆர்.. ரிஜெக்டட்..! பையன்;- ஐ ஆம் செலக்டட்..!! ??? :P :P Relaxplzz |
Posted: 06 Jun 2015 08:00 AM PDT தமிழக பெற்றோர்களே தயவு கூர்ந்து 2 நிமிடம் ஒதுக்கி படியுங்கள் உங்கள் பணம் உங்கள் கல்வி மறுக்க படுவதன் உண்மை நிலை !!!!!! இன்று தமிழகத்தில் கவுரவமாக கருதபடுவது படிப்பு அதை எம் மகனையோ மகளையோ நான் பெரிய கல்வி நிறுவனத்தில் படித்தால் கவுரவம் என நினைக்கும் பெற்றோகளே சிரிது சிந்தியுங்கள் !!! உங்கள் மகன் & மகள் மழலை பள்ளி சேர்க்கும் செலவு குறைந்த பட்சம் இன்றைய கல்வி வியாபார விலை :15000.00 அடுத்த நிலை 1 ஆம் வகுப்பு விலை :25000.00 அடுத்த நிலை 2 ஆம் வகுப்பு விலை:35000.00 அடுத்த நிலை 3 ஆம் வகுப்பு விலை:37000.00 அடுத்த நிலை 4 ஆம் வகுப்பு விலை:45000.00 அடுத்த நிலை5 ஆம் வகுப்பு விலை :50000.00 அடுத்த நிலை 6 ஆம் வகுப்பு விலை:65000.00 அடுத்த நிலை7ஆம் வகுப்பு விலை :78000.00 அடுத்த நிலை 8 ஆம் வகுப்பு விலை:85000.00 அடுத்த நிலை9 ஆம் வகுப்பு விலை :95000.00 அடுத்த நிலை10ஆம் வகுப்பு விலை;150000.00 அடுத்த நிலை 11ஆம் வகுப்பு விலை:200000.00 அடுத்த நிலை 12 ஆம் வகுப்பு விலை:300000.00 உங்கள் மகனோ மகளோ பள்ளிபடிப்பை முடிக்க குறைந்த பட்சம் நீங்கள் பண்ணும் செலவு 11.80 லட்சம் தனியாரிடம் தாரை வார்குரிங்க எதற்காக இந்த இழப்பு ??? அரசு பள்ளியை நம்பாததன் விளைவு அரசுப்பள்ளியில் இதே படிப்பை உங்கள் மகனோ மகளோ படித்தால் நீங்கள் இழக்கும் பணம் எவ்வளவு ? வருமானம் மட்டும்தான் எவ்வளவும் சத்துணவு முதல் சைக்கில் & மடிகணணி செருப்பு சீருடை பேருந்து கட்டணம் என 11.80 லட்சங்களை மிச்ச படுத்த முடியும் உங்கள் மகனோ மகளோ பள்ளி படிப்பை முடித்தால் தனியார் கல்வி நிறுவனத்தை நடத்தும் வியாபாரிகளிடம் இழக்கும் 11.80 லட்சம் முதலிஈடில் ஒரு தொழிலை தொடங்கி உங்கள் மகனை மகளை முதலாளியாக்கி நாட்டையும் வல்லரசாக முடியும் சிந்தியுங்கள் மக்களே சிந்திக்கும் திறனை இழந்த தமிழக மக்களே இந்த வருடம் சாதனை புரிந்த மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு இரண்டிலும் மொத்தம் மாநில அளவில் முதல் முன்று இடங்களை பிடித்த தனியார் கல்வி நிலைய மாணவர் எண்ணிக்கை 1362 அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை 483 ஆக அரசு பள்ளியை தரம் உயர்த்த பெற்றோர்களாகிய நாம் நினைத்தால் நிச்சயம் முடியும் உங்கள் கவுரவத்தால் நீங்கள் 11.80 லச்சத்தை தனியாரிடம் இழக்க நேரிடுகிறது உங்கள் மகனை அரசு பள்ளியில் சேர்த்து அந்த பள்ளிக்கு வருடம் 2 ஆயிரம் மட்டும் செலவு செய்தால் நமது மக்களின் பொருளாதார நிலை கல்வி நிலை மாற வாய்ப்பு அதிகம்..... இந்த கட்டுரை அணைத்து பெற்றோர்களையும் சென்றடைய அதிகம் பகிருங்கள் அன்பு உறவுகளே.கனவுகளுடன் பகிர்கிறேன். இந்த நன்னாள் மெய்ப்படவேண்டும் என்று. Relaxplzz ![]() |
Posted: 06 Jun 2015 07:50 AM PDT ஜெயலலிதா கையிருப்பு பணம் 39 ஆயிரம் மட்டுமே - செய்தி இனிமேல் ஹெலிகாப்டருக்கு வாடகை எப்படி குடுக்கப்போறாங்கன்னு நெனச்சாலே நெஞ்சு பதறுது எனக்கு .. :O - சிவ சிவா சிற்றவை @ Relaxplzz |
Posted: 06 Jun 2015 07:10 AM PDT "பெற்றோர்களே உங்களுக்கு ஓர் அறிவுறை" (அருமையான கருத்து) 1. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்! 2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள். 3. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்! 4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட. 5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்! 6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது. 7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள் 8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம். 9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்! 10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள். 11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்! 12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ, அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம். 13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். 14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்! 15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம். 16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்! 17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம். 18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்! 19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள். 20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். "All work and no play makes Jack a dull boy" 21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள். சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம். 22. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை. 23. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், "Good touch", "bad touch" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள். 24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்! 25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல! பதிவிட்டவர்: வருண் சாகர் Relaxplzz |
Posted: 06 Jun 2015 07:00 AM PDT "ஆண்களின்" அன்பு..! திருமணம் ஆன புதுதம்பதினர்கள் மருத்துவமனைக்கு வரும்பொழுது , Pregnancy Confirmed ( உங்கள் மனைவியின் கர்ப்பம் உறுதி செய்யப்படுகிறது ) - என நான் சொல்லும் அந்த தருணம் பெண் சந்தோஷப்படுகிறாள் , ஆண் பெருமைப்படுகிறான் . பெண் மனதில் 9 மாதகாலம் குழந்தையை எப்படி பாதுகாப்பது என சிந்தீப்பாள் , ஆனால் ஆண் மனைவி, குழந்தை இரண்டு பேரையும் எப்படி பாதுகாப்பது என சிந்தித்து கொண்டு இருப்பான், பெண் மனதில் 10% அன்பு இருந்தால் , அதை 100 % வெளிப்படுத்துவாள் . ஆனால் ஆண் மனதில் 100% அன்பு இருக்கும் ஆனால் 10% அன்பைக்கூட வெளிப்படுத்த தெரியாது . ஆண்களுக்கு கோபத்தை வெளிப்படுத்த தெரிந்த அளவிற்க்கு அவர்கள் மனதில் இருக்கும் அன்பையும் முழுமையாக வெளிப்படுத்தி இருந்தால் பெண்களை விட ஆண்களே அன்புக்குரியவர்கள் என்ற உண்மை இந்த உலகத்திற்க்கு தெரிந்து இருக்கும் . அறிவு தளத்தில் வேண்டுமானல் சில நேரங்களில் பெண்கள் ஆண்களைவிட உயர்வாக தெரியலாம் . ஆனால் அன்பு தளத்தில் எப்பொழுதும் பெண்களை விட ஆண்களே உயர்ந்துள்ளனர் என்பதை என்னால் உறுதி பட சொல்ல முடியும் .... Dr.Rohaiyaah Bibi Relaxplzz ![]() |
Posted: 06 Jun 2015 06:03 AM PDT முதலமைச்சர் காமராஜரும்.. பிரதமர் நேருவும்.. பொது கூட்டமொன்றில் பங்கேற்க.. மதுரை அருகே.. காரில் சென்று கொண்டிருந்தார்கள்..!! உரையாடலின் நடுவே.. நினைவு வந்தவரான. நேரு. " மிஸ்டர் காமராஜ் உங்கள் சொந்த ஊர் இந்த பக்கம் தானே..? என்று கேட்கிறார்..!! "ஆமாங்க இன்னும் கொஞ்சம் தூரத்தில் தான் இருக்கிறது..!!என்கிறார் காமராஜர்..!! "அப்படியானால் உங்கள் தாயாரை பார்த்து விட்டு.. நலம் விசாரித்து விட்டு செல்ல வேண்டும் அல்லவா..? என்று நேரு அவர்கள் கேட்க.. "இப்பவே கூட்டத்திற்கு நேரம் ஆகி விட்டதே..?" என்று காமராஜர் மறுக்கிறார்..!! அதற்கு நேரு அவர்கள்... "இவ்வளவு தூரம் வந்து விட்டு.. உங்கள் தாயாரை பார்க்காமல் சென்றால்.. நன்றாக இருக்காது.. நான் பார்த்தே ஆக வேண்டும்.. என்னை அவர்களிடம் கூட்டிச் செல்லுங்கள்..!!" என்று அன்பு கட்டளையிடுகிறார் ஆமோதித்த காமராஜர்.. வண்டி சற்று தூரம் சென்றதும்.. ஓட்டுனரிடம்.." தம்பி வண்டியை இப்படி ஓரங்கட்டு..!!" என்று வண்டியை நிறுத்த சொல்கிறார்..!! அது வீடுகளே இல்லாத பகுதி.. இரு புறங்களிலும் விவசாய நிலங்கள் பகுதி..!! அந்த நிலங்களில் பெண்கள் களை பறித்து கொண்டிருந்தனர்..!! தாயாரை பார்க்க வீட்டுக்கு அழைத்து.. செல்ல சொன்னால் இப்படி அத்துவான வெயிலில்.. வண்டியை நிறுத்தியிருக்கிறாரே..! என்ற வினாவுடன் வண்டியை விட்டு இறங்குகிறார் நேரு.. காமராஜர் களை பறித்து கொண்டிருக்கும் பெண்கள்.. கூட்டத்திலிருந்து வயதான பெண்மணி.. ஒருவரை அழைக்கிறார்... "ஆத்தா நான் காமராசு வந்து இருக்கிறேன்.."!! என்று கூவுகிறார்..!! வயலில் உழைத்து வியர்வை முகத்துடன்.. "காமராசு வந்திட்டியாப்பா.. நல்லாயிருக்கியா..?" என்று தன் மகனை கண்ட மகிழ்ச்சியில்.. உள்ளம் நெகிழ.. அருகில் வருகிறார்.. காமராஜரின் தாயார்..!! தாயும் மகனும் அளவளாவிக் கொள்கிறார்கள்..!! பிறகு நேரு அவர்களை காட்டி.. அறிமுக படுத்துகிறார் காமராஜர்..!! நேருவால் தன் முன்னால் நடப்பதை பார்த்து.. நம்ப முடியாமல் சிலையாக நிற்கிறார்..!! அவர் தான் நம் கருப்பு வைரம் காமராஜர்..! Relaxplzz ![]() "காமராஜர் ஒரு சகாப்தம்" |
Posted: 06 Jun 2015 05:53 AM PDT |
Posted: 06 Jun 2015 05:43 AM PDT |
Posted: 06 Jun 2015 05:34 AM PDT |
Posted: 06 Jun 2015 05:23 AM PDT எச்சரிக்கை:- நீங்கள் தினசரி சாப்பிடும் உணவில் கலக்கப்படும் இரசாயனங்களும், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளும்:- கடந்த இரு வாரங்களாக எங்கு பார்த்தாலும் மேகி, மேகி, மேகி.... தான். டெல்லி, உத்திரப்பிரதேசம், கேரளா மற்றும் நேற்று முதல் தமிழகத்திலும் மேகி தடை செய்யப்பட்டது. மேகியில் மட்டும் தான் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் உட்பொருட்கள் உள்ளதாக நினைக்கிறீர்களா? அப்படி நினைத்தால் அது முற்றிலும் தவறு. ஆரோக்கியத்தை சீரழிக்கும் அழகு சாதனப் பொருட்கள்! நாம் தினமும் ருசித்து சாப்பிடும் பலவகை சிப்ஸ்களில் இருந்து, மாட்டினை போல நாம் அசைப் போட்டுக் கொண்டிருக்கும் சூயிங் கம் வரை அனைத்திலும் நமது உடலிற்கு கேடு விளைவிக்கும் மூலப் பொருட்களும், தீய இரசாயனங்களும் இடம்பெற்று இருக்கின்றன. ஷாப்பிங் மால்களில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!! இவ்வாறு கலக்கப்படும் இரசாயனங்களினால் நமது உடலுக்கு சிறுநீரக செயல்திறன் குறைபாடு, பசியின்மை, ஆண்மையில் குறைபாடு, புற்றுநோய் கட்டிகள் உருவாகும் வாய்ப்புகள் என பல அபாயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், இதை எல்லாம் ஏன் இதுவரை யாரும் பரிசோதிக்கவில்லை, அல்ல பரிசோதித்து தான் விற்கப்படுகின்றனவா? என்பதெல்லாம் கேள்விக்குறியாகவே இருக்கின்றன... காண்டம் பயன்படுத்துவதனால் ஏற்படும் பக்க விளைவுகள் - ஷாக் ரிப்போர்ட்!!! இனி, நீங்கள் தினசரி சாப்பிடும் உணவில் கலக்கப்படும் இரசாயனங்களும், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றியும் காணலாம்.... நீங்கள் தினசரி சாப்பிடும் உணவில் கலக்கப்படும் இரசாயனங்களும், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளும்!!! பகுதி ஹைட்ரஜன் ஏற்றிய எண்ணெய் (PARTIALLY HYDROGENATED OIL), இது இதயத்தை பாதிக்கக் கூடியது ஆகும். ட்ரான்ஸ் கொழுப்பு எனப்படும் ஓர் வகையின் முதன்மை பிரிவாக இது கருதப்படுகிறது. உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள் இது மிகவும் மலிவாகக் கிடைப்பதால் இதையே பயன்படுத்துகின்றனர். இந்த எண்ணெய், இதயத்திற்கு கேடு விளைவிக்கும் எல்.டி.எல் (LDL) கொழுப்பை அதிகரிக்க செய்கிறது. இதனால், இதய நோய்கள், நீரிழிவு, ஊட்டச்சத்து குறைப்பாடு போன்றவை ஏற்படும். ட்ரான்ஸ் கொழுப்பு உள்ள உணவுகள், வெண்ணெய், குக்கீஸ் (பிஸ்கட்), சாலட், பிரெட் மற்றும் சிப்ஸ் உணவுகளில் இதன் கலப்பு இருக்கின்றது. ARTIFICIAL SWEETENERS எனப்படும் செயற்கை இனிப்பூட்டிகள் பெரும்பாலான உணவுகளிலும், குளிர் பானங்களிலும் கலக்கப்படுகிறது. சுக்ரலோஸ் (Sucralose) என்பது சர்க்கரையில் இருந்து எடுக்கபப்டும் இயற்க்கை இனிப்பு ஆகும். ஆனால் ஆராச்சியாளர்கள் மூன்று ஹைட்ரஜன்-ஆக்சிஜன் மூலக்கூறுகளை கிளோரின் அணுக்களுடன் சேர்த்து சாச்சரின் (Saccharin -sweet'N low) எனும் இரசாயன பொருளைத் தயாரிக்கின்றனர். இது பெட்ரோலியம் பொருளில் இருந்து தயாரிக்கபடுவது ஆகும். உலக உணவுக் கட்டுப்பாடு அமைப்பினர் இதைக் குறித்து இன்னும் பல விவாதங்கள் செய்துக் கொண்டிருக்கையில். இது, நாம் பருகும் பல குளிர்பானங்களில் சேர்க்கப்பட்டு வருகிறது. இதனால் மூளைக்கட்டிகள் ஏற்படலாம் என்று செய்திகள் கசிந்து வருகின்றன. உயர் பிரக்டோஸ் கார்ன் சிரப் (HIGH FRUCTOSE CORN SYRUP), சர்கரைக்கு பதிலாக மிக மலிவாக கிடைக்கும் பொருள் இதுவாகும். இது மூளையின் தசைகளை வலுவிழக்க செய்யும் என்று கூறப்படுகிறது. இதில் மெர்குரியில் இருக்கும் நச்சுகள் கொண்டிருப்பதாகவும், இதை அதிகப்படியாக எடுத்துக் கொண்டால் நீரிழிவு நோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் எழும் என்றும் கூறப்படுகிறது. மோனோசோடியம் குளுட்டோமேட் என்று கூறப்படும் MSG, நாம் தினசரி பயன்படுத்தும் 40க்கும் மேற்பட்ட சராசரி உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது. அதிகப்படியான மோனோசோடியம் குளுட்டோமேட் நரம்பு மண்டலத்தையும், அதன் செல்களையும் வெகுவாக சேதமடைய செய்யும். இது, நீங்கள் பருகும் டயட் பானங்கள், ஃபாஸ்ட் ஃபுட், இன்ஸ்டன்ட் சூப், மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட காய்கறி உணவுகளிலும் சேர்க்கப்படுகிறது. மேகி தடை செய்யப்பட்டதற்கு இது தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. பி.எச்.எ மற்றும் பி.எச்.டி (BUTYLATED HYDROXYANISOLE & BUTYLATED HYDROXYTOLUENE), ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் பொதுவாக உடலுக்கு நன்மை விளைவிப்பது. ஆனால், பி.எச்.எ மற்றும் பி.எச்.டி போன்றவை பதப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறதாம். சூயிங் கம், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற உணவுப் பொருட்களில் இது சேர்க்கப்படுகிறது. இது பசியின்மை, சிறுநீரக செய்திறன் குறைபாடு, முடி கொட்டுதல், புற்றுநோய், கருவின் வலுக் குறைதல் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும். உணவுன் நிறத்திற்காக பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் தான் இந்த சோடியம் நைட்ரேட் மற்றும் சோடியம் நைட்ரைட். இவை, இறைச்சி, ஹாட் டாக்ஸ், மற்றும் பன்றி இறைச்சி போன்றவற்றில் சேர்க்கப்படுகிறது. இது, வயிற்றில் உருவாகும் அமிலங்களோடு கலக்கும் போது, நைற்றசமைன்களை (nitrosamines) உருவாக்குகிறது. இதனால், வயிறு, மூளை, உணவுக்குழாய் பாதிப்பு மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுவும், உணவைகளை பதப்படுத்தி வைக்க சேர்க்கப்படும் ஆன்டி- ஆக்சிடன்ட் ஆகும். முக்கியமாக கொழுப்பு மற்றும் எண்ணெய் உணவுகளை பதப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. இது புற்றுநோய் கட்டிகள் உருவாக காரணமாக இருக்கிறது. காய்கறி எண்ணெய், இன்ஸ்டன்ட் சூப் வகை உணவுகள், இறைச்சி பொருட்கள், சூயிங் கம் மற்றும் அழகு சாதனப் பொருட்களில் இது சேர்க்கபடுகிறது. நீங்கள் தினசரி சாப்பிடும் அடைக்கப்பட்ட பழரசங்கள், ஊறுகாய் போன்ற உணவுகளில் இது சேர்க்கப்படுகிறது. இந்த உணவுகளில் நுண்ணுயிர்கள் உருவாகி வளர்கிறதாம். இது, மக்களுக்கு அலர்ஜிகள் உருவாக காரணமாக இருக்கின்றது. சோடியம் பென்சோயேட் பானங்களில் சேர்க்கப்படுவதால் லூக்கிமியா, மற்றும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. பிரெட் உணவுகளில் சேர்க்கப்படும் இரசாயனம் தான் இந்த பொட்டாசியம் ப்ரோமேட், பிரெட் அளவை அதிகரிக்கஇது பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளில் இது தடைசெய்யப்பட்டிருக்கிறது. ஆய்வுக்கூடத்தில் விலங்குகளில் பரிசோதனை செய்து போது, இது புற்றுநோய் உண்டாகக் காரணமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. நாம் சாப்பிடும் பல்வேறு உணவுகளில் கவர்ச்சிக்காகவும், ஈர்ப்புக்காகவும் செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்படுகின்றன. சாக்லேட், கேக், ஐஸ் கிரீம் போன்ற அனைத்து உணவுகளிலும் இந்த செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்படுகின்றன. இதனால் குரோமோசோம் பிரச்சனைகளும், தைராய்டு கட்டிகளும் ஏற்படும் அபாயம் இருக்கின்றது. Relaxplzz ![]() "விழிப்புணர்வு" |
Posted: 06 Jun 2015 05:09 AM PDT |
Posted: 06 Jun 2015 04:58 AM PDT போய் வருகிறேன் தாத்தா நான்கு சுவர் சிறைகளுக்குள்ளிருந்து கொஞ்சம் விடுதலைக் காற்றை சுவாசித்த நினைவுகளுடன் போய் வருகிறேன் தாத்தா பரணில் தூங்கும் பூனைக் குட்டிகளையும் புறக்டையில் திரியும் கோழிகளையும் சுதந்திரமாய் வாசலில் வந்து வாலாட்டி நிற்கும் நாய்களையும் நான் விளையாடிய ஆட்டுக் குட்டியையும் பத்திரமாய் பார்த்துக் கொள் தாத்தா துரித உணவுகளுக்கும் சில்லென்ற குளிர் பானத்திற்கும் பழகிவிட்ட என் நாக்கு இளநீரையும் நுங்கினையயும் பாட்டியின் எதார்த்த சமையலையும் ஏற்க மறுத்தாலும் அதன் சுவை அன்பு சேர்த்து ஊட்டியதால் என்றும் நிலைத்திருக்கும் தாத்தா குளியலறைக் குளியலையே வெறுக்கும் நான் உன்னுடன் சேர்ந்து குளித்த வெட்டவெளிக் குளியலை மறக்க இயலாது தாத்தா அந்நிய மனிதர்கள் அத்தனை பிரியமாய் இருப்பார்கள் என்பதை அங்குதான் உணர்ந்தேன் தாத்தா நான் ரசித்த அத்தனையும் எதையும் மாற்றாமல் அப்படியே வைத்திரு தாத்தா நான் ஒரு நாள் இங்கு நிரந்தரமாய் வருவேன் என்ற நம்பிக்கையுடன் போய் வருகிறேன் தா�த்தா. புகைப்பட உதவி - மணிகண்டன் அழகர் - ராஜலக்ஷ்மி மதிவாணன் Relaxplzz ![]() "மனம் தொட்ட வரிகள்" - 2 |
Posted: 06 Jun 2015 04:42 AM PDT |
Posted: 06 Jun 2015 04:25 AM PDT வரப்பை வெட்டி வாழ்ந்த குடும்பங்கள், இன்று வயித்தை கட்டி வாழ்கின்றன,.. #விவசாயம்_காப்போம் ![]() ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 3 |
Posted: 06 Jun 2015 04:07 AM PDT |
Posted: 06 Jun 2015 03:54 AM PDT |
Posted: 06 Jun 2015 03:36 AM PDT அம்மாவின் அன்பு தோசை மாதிரி, அப்பாவின் அன்பு தோசைக் கல் மாதிரி... தோசையின் ருசி தெரியும், தோசைக்கல்லின் தியாகம் தெரியாது!!! (y) ![]() ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 2 |
Posted: 06 Jun 2015 03:28 AM PDT |
Posted: 06 Jun 2015 03:14 AM PDT |
Posted: 06 Jun 2015 03:01 AM PDT |
Posted: 06 Jun 2015 02:45 AM PDT செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் 14 வயதுப் பையனாகச் சென்னை வந்தார் கவிஞர். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர். நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. காலையில் நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும். இரவு மண்ணடி வரை நடந்து போக முடியாது. அதனால் பீச்சில் படுத்துக் கொள்ள அனுமதிகேட்ட அந்தப் பதினாறு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது. ""படு...படுக்கணும்னா நாலணா கொடு'' என்று காவல் மிரட்டியது. நாலணாவுக்கு வழியின்றி கலங்கிய கண்களுடன் காந்தி சிலையிலிருந்து நடந்திருக்கிறார் கவிஞர். அவர் வளர்ந்து கவியரசர் கண்ணதாசன் என்று பெயர் பெற்று "சுமைதாங்கி' என்ற சொந்தப்படம் எடுக்கிறார். கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்தி சிலையைத் தேர்ந்தெடுத்தார். நள்ளிரவு ஷூட்டிங். ஆனால் படத்தில் இரவு 7 மணி மாதிரி இருக்க பீச் ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும். ஏழு கார்களை நிற்க வைத்து மாறி மாறி ஒன்றன் பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள். வீட்டில் இந்தப் படத்தைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்த கவிஞர் தன் பின்ளைகளைப் பார்த்துச் சொல்லியிருக்கிறார். ""இந்தக் கார்களை கவனித்தீர்களா..? இவை எல்லாமே நம்முடைய கார்கள். வாழ முடியும் என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லை என்பதற்காகப் போலீஸ் நடக்கவிட்டது. இதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம் எடுத்திருக்கிறேன். நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது!'' என்றாராம்! எங்கு அவமதிக்கப்பட்டாரோ அங்கு கவிஞர் தம் வெற்றியை அரங்கேற்றியிருக்கிறார். அவமானம் ஒரு மூலதனம்... இது புரிந்தால் வெற்றி நிச்சயம்! ("வெற்றி நிச்சயம்' என்ற புத்தகத்தில் "அவமானம் ஒரு மூலதனம்' என்ற கட்டுரையில் சுகி.சிவம்..) Relaxplzz ![]() "சில நிகழ்வுகள்" |
Posted: 06 Jun 2015 02:25 AM PDT |
Posted: 06 Jun 2015 02:10 AM PDT |
Posted: 06 Jun 2015 01:46 AM PDT கிழவி : ஐயோ., போச்சே.. போச்சே.. கவுண்டமணி : ஏ கிழவி அதான் ஓன் பேரன் சாகலைல.. பொழைச்சுக்கிட்டான்ல .. அப்புறமென்ன..? கிழவி : அவன் சாக மாட்டான்னு தெரியும்.. 200 ரூ கதவு போச்சே.. அத யார் தருவா..? கவுண்டமணி : பேரனுக்கும்., கிழவிக்கும் 200 ரூ தான் பிரச்சினை..? நல்ல குடும்பம்டா ஏர் பூட்ன எருமை மாதிரி... ஏஹாய்.. ஏஹாய்.. ஏஹாய்... தூ..! கவுண்டர் டயலாக்ஸ் @ Relaxplzz ![]() கவுண்டர் டயலாக்ஸ் |
Posted: 06 Jun 2015 01:30 AM PDT |
Posted: 06 Jun 2015 01:16 AM PDT |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment