Relax Please: FB page daily Posts |
- ஆண்களை பற்றி எவரோ எழுதியது ======== ஆண் என்பவன்... கடவுளின் உன்னதமான படைப்பு...
- கலர்கலரான மிட்டாய் சாப்பிடும் பருவத்தில் தொடங்கி, கலர்கலரான மாத்திரை சாப்பிடும்...
- ஒரு பெண், திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது குத்து விளக்கை ஏற்றச்சொல்...
- சொந்த நாட்டுக்கு போகப்போகிற சந்தோஷம் வீட்டில எல்லோருக்கும் தேவையானதை எல்லாம் வாங...
- #திருநெல்வேலி..... தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் வாழ்பவர்களில் 40% திருநெல...
- ரூபாய் நோட்டுகள் சொல்லும் இந்திய வரலாறு இந்திய ரூபாய் நோட்டுக்களில் 5, 10 என ஒவ...
- அன்பு நண்பர்களே ஒரு இனிய வேண்டுக்கோள் .... தயவு செய்து இனிமேல் யாரும் சன்டிவி ப...
- ஒரு உண்மை நிகழ்வு:- நான் ஒரு கண்ணாடி கடை நடத்துனர். ஒரு வாரம் முன்பு என்னிடம் ஒ...
- ஒன்பதரை மணி காலேஜிக்கு ஒவ்வொருத்தனா கெளம்பும் போது ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டி...
- காதல்னா என்ன...??? ஒரு பொண்ணு ரொம்ப அழகா இருக்கா...அதனால நான் அவள காதலிக்கிறேன்...
- இம்சை அரசனும், Facebook-ம்..!!! ------------------------------------------ " மன்...
- யானைகள் வாழும் பூமியில் தான் எறும்புகளும் வாழ்கின்றன.. பூனைகள் வாழும் வீடுகளில...
- வீடு வீடாகப் பொருட்களை வினியோகிக்கும் அந்தச் சிறுவனுக்கு ரொம்பப் பசித்தது. எதையா...
Posted: 20 May 2015 08:10 AM PDT ஆண்களை பற்றி எவரோ எழுதியது ======== ஆண் என்பவன்... கடவுளின் உன்னதமான படைப்பு சகோதரிகளுக்காக, இனிப்புகளை தியாகம் செய்பவன் பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளை 💭 தியாகம் செய்பவன் காதலிக்கு பரிசளிக்க, தன் பர்ஸை காலி செய்பவன் மனைவி குழந்தைகளுக்காக , தன் இளமையை அடகுவைத்து அலட்டிக்கொள்ளாமல் அயராது உழைப்பவன் எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு, அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் லோ லோ என்று அலைபவன் இந்த போராட்டங்களுக்கு இடையில், மனைவி-தாய்-முதலாளிகளின் திட்டுகளை வாங்கி, தாங்கிக்கொண்டே ஓடுபவன் அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன் அவன் வெளியில் சுற்றினால், 'உதவாக்கரை' என்போம் வீட்டிலேயே இருந்தால், 'சோம்பேறி' என்போம் குழந்தைகளை கண்டித்தால், 'கோபக்காரன்' என்போம், கண்டிக்கவில்லை எனில், 'பொறுப்பற்றவன்' என்போம் மனைவியை வேலைக்கு செல்ல, அனுமதிக்காவிடில் 'நம்பிக்கையற்றவன்' என்போம், அனுமதித்தால் 'பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்' என்போம் தாய் சொல்வதை கேட்டால், 'அம்மா பையன்' என்போம்; மனைவி சொல்வதை கேட்டால், 'பொண்டாட்டி தாசன்' என்போம் ஆண்களின் உலகம், தியாகங்களாலும் வியர்வையாலும் சூழப்பட்டது. இதனை பகிர்ந்து, ஆண்களுக்கு புன்னகையை ஏற்படுத்தலாம்.... Relaxplzz |
Posted: 20 May 2015 06:50 AM PDT |
Posted: 20 May 2015 06:10 AM PDT ஒரு பெண், திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது குத்து விளக்கை ஏற்றச்சொல்வது ஏன் ? ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய ஐந்து நற்குணங்கள், இந்த குத்துவிளக்கில் உள்ள ஐந்து முகங்ககளை ஏற்றுவதன் மூலம் உறுதி அளிப்பதாக அர்த்தம்! என்ன இது, குத்துவிளக்குக்கும் பெண்ணுக்கும் என்ன சம்பந்தம் என்று தானே யோசிக்கிறீர்கள். இதற்கு விளக்கம் உண்டு முதலில் இந்த குத்துவிளக்கின் பாகங்களைப்பற்றி பார்ப்போம். குத்துவிளக்கின் தாமரைப்போன்ற பீடம் – பிரம்மாவையும் குத்துவிளக்கின் நடுத்தண்டு – விஷ்ணுவையும் நெய் எறியும் அகல் – சிவனையும் திரி – தியாகம் தீபம் – திருமகளையும் சுடர் – கலைமகளையும் குறிக்கிறது குத்துவிளக்கில் உள்ள ஐந்து முகங்களும், பெண்ணுக்கு வேண் டிய அன்பு, அறிவு, உறுதி, நிதானம், பொறுமை போன்ற ஐந்து நற்குணங்களை குறிப்பதாகும். அதனால்தான் ஒரு பெண் திருமணமாகி முதல் முறையாக தனது கணவன் வீட்டிற்கு அதாவது புகுந்த வீட்டிற்கு வரும்போது முதல் வேலையாக அப்பெண்ணைக் குத்துவிளக்கை ஏற்றச் சொல்லி, அந்த குத்து விளக்கில் ஏற்றப்பட்ட தீபம் மூலமாக வீடுமுழுக்க ஒளிபரவச் செய்கின்றனர். Relaxplzz |
Posted: 20 May 2015 05:10 AM PDT சொந்த நாட்டுக்கு போகப்போகிற சந்தோஷம் வீட்டில எல்லோருக்கும் தேவையானதை எல்லாம் வாங்கி மூட்டை கட்டி விமானத்தில் ஏத்தியாச்சு.. இது தான் நான் கடைசியா ஏறும் விமானம் ஊருக்கு போய் விவசாயம் செய்து குடும்பத்தை பாத்துக்கலாம் நினைத்துக்கொண்டு வெளிநாட்டில் இருந்து வீடு வரும் மூத்த பையன் பக்கவாதத்தால் அவதிபடும் அப்பா இன்னமும் காலேஜ் முடிக்காத தங்கச்சி பள்ளிக்கூடம் படிக்கும் தம்பி சீதன பாக்கியால் தாய்வீட்டில் இரண்டு பிள்ளைகளுடன் வந்து இருக்கும் அக்கா வயசான காலத்தில் ஒரு கால் ஊனத்தோடு தினக் கூழி வேலைக்கு போகும் அம்மா எல்லாம் பார்த்து ஒரே கிழமையில் மீண்டும் விமானம் ஏறுகிறான் #மூத்த_பிள்ளை via KG Relaxplzz |
Posted: 20 May 2015 04:10 AM PDT #திருநெல்வேலி..... தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் வாழ்பவர்களில் 40% திருநெல்வேலி,தூத்துக்குடியை சேர்ந்தவர்களே. சென்னையின் பெருமைக்கு காரணம் நாங்களே, தமிழ்நாட்டின் பள்ளி ஆசிரியர்களில் 40% பேரும், கல்லூரி ஆசிரியர்களில் 30% பேரும் நெல்லையையும், அதன் சகோதர மாவட்டமான தூத்துக்குடியை சார்ந்தவர்களே, தமிழ்நாட்டின் இரண்டாவது நெற்களஞ்சியம் நெல்லை தான்...எனவே எங்கள் தேவை எங்களாலே பூர்த்தி செய்யபடுகிறது, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் ஒரு திருநெல்வேலியை சேர்ந்த நபர் தெரிந்தவராக கண்டிப்பாக இருப்பர், இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் இருப்பவர்களில் தமிழர் இருந்தால் அவர் நெல்லையை சேர்ந்தவராகவே இருப்பார், Familiar Industriallists from Nellai are T V Sundram Iyengar ( TVS Group ), S Anatharamakrishnan ( Amalgamations Group ), Padma Bhushan Shiv Nadar ( Founder Chairman, HCL Technologies ), AD Padmasingh Issac ( Chairman & MD, Aachi Masala Group ), V G Paneer Das ( Founder, VGP Group ), M G Muthu ( Founder, MGM Group ),Dr.Sivanthi Adhiththanar ( Dina thanthi daily ). தமிழ்நாட்டில் உள்ள ஒரேஒரு வற்றாத் ஜீவநதி எங்கள் தாமிரபரணி தான்...தென் இந்திய 8 ஜீவநதிகளில் தமிழகத்தின் ஒரே நதி எங்கள் தாமிரபரணி தான். எங்கள் தாமிரபரணி தான் நெல்லை, மற்றும் சகோதர' மாவட்டங்களான தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியின் தாகம் தீர்க்கிறது. தமிழக நதிகளில், தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டில் பயணித்து தமிழ்நாட்டில் கடலில் கலக்கும் ஒரே தமிழக நதி எங்கள் தாமிரபரணி தாய் தான், தமிழ்நாட்டின் அழகான தைரியமான பெண்கள் என்றால் எங்கள் நெல்லை, தூத்துக்குடி சகோதரிகள் தான்...சான்று: தமிழ்நாட்டின் பெண் போலீஸ் எண்ணிகையில் 25% பேர் எங்கள் சகோதரிகள் தான். பெண்கள் அதிகமாக கைத்தொழிலில் ஈடுபடும் மாவட்டங்களில் நெல்லை முதலிடம், தமிழக புவியியல் அமைப்பில் கடல்,மலை,காடு,வயல்,பாலைவனம் என அனைத்தும் உள்ள ஒரே மாவட்டம் எங்கள் நெல்லை தான். எனவே நெல்லையை குட்டி தமிழ்நாடு என்று கூட சொல்லாம். ஏனென்றால் நெல்லையின் சில ஊர்கள் ஊட்டி, கொடைக்கானல் போலவும், சில ஊர்கள் ராமநாதபுரம் போலவும், சில ஊர்கள் தஞ்சாவூர் போலவும், சில ஊர்கள் நாகப்பட்டினம் போலவும், சில ஊர்கள் அதிக காடுகள் கொண்ட ஈரோடு போலவும் இருக்கிறது. இப்படி ஒரு புவியியல் அமைப்பு உலகில் எந்த நிலப்பரப்பிலும் இல்லை, தமிழ்நாட்டின் எல்லா மாவட்டத்திற்கும் நிலம் வழியாக செல்ல வேண்டுமானால் பல வழிகளில் செல்லலாம். உதரணமாக சென்னை செல்ல வேண்டுமானால் திருச்சி வழியாகவும் செல்லலாம். கோவை சென்று சேலம் மற்றும் தருமபுரி வேலூர் வழியாக திருச்சி யை தொடாமலே போகலாம். இப்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பல வழிகளில் அதன் அண்டை மாவட்டம் வழியாக செல்லாமல் செல்லலாம். ஆனால் கன்னியாகுமரி மாவட்டம் செல்ல வேண்டுமானால் நெல்லை மாவட்டத்தில் நுழையாமல் செல்லவே முடியாது, தமிழில் எங்கள் நெல்லை தமிழ்க்கு இணை எங்கள் நெல்லை தமிழ் தான்... "ஏலே, சவுக்கியமா ஏலே" திருநெல்வேலி,தூத்துக்குடி என நிர்வாக ரீதியாக பிரிந்து இருந்தாலும் எங்கள் இரு மாவட்ட மக்களுக்கும் பின்னி பிணைந்து வாழ்கிறோம். தமிழ்நாட்டில் இப்படி சகோதரத்துவமாக இதுவரை எந்த இரு மாவட்டங்களும் இருக்க வாய்ப்பு கிடைக்கவும் இல்லை. இனிமேல் இருக்கபோவதும் இல்லை, ஒவ்வொரு வருடமும் பள்ளி கல்வி தேர்ச்சியில் நாங்களே அதிக சதவிகிதம் தேர்ச்சி பெருவோம். சென்னை,கோவை.திருச்சி. மற்றும் மதுரை யை விட. முதல் முன்று இடங்களில் நெல்லை பிராந்திய பள்ளி மாணவர்கள் இல்லாமல் இதுவரை வந்தது இல்லை, தமிழக 10th & +2 முடிவுகள், பாண்டிய மன்னர்களின் முற்கால தலை நகரம் நெல்லை தான்.. இன்னும் 100 வருடங்களுக்கு பிறகு தமிழ் நாட்டில் தண்ணீர் இருக்கும் இடங்கள் என்று ஒன்று இருக்குமானால் அது நெல்லை மற்றும் கன்னியாகுமரி மட்டும் தான், உலக சுகாதார நிறுவனம் கணக்கு படி, இந்தியாவில் வாழ தகுதியான நகரங்கள் என்ற வரிசையில் தமிழ்நாட்டின் இருந்து தேர்வு செய்யப்பட்ட இரண்டு மாவட்டத்தில் ஒன்று நெல்லை இன்னொன்று கன்னியாகுமரி. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளை. பாரதியார், சுப்பிரமணிய சிவா, புலித் தேவன், வீர பாண்டிய கட்டபொம்மன், மாவீரன் சுந்தரலிங்கம், வாஞ்சிநாதன், வீரன் அழகுமுத்துகோன், ஒண்டி வீரன், மார்ஷால் நேசமணி, தோழர் ஜீவா, வீரமாமுனிவர், முஹமது இஸ்மாயில், போன்ற பல சுதந்திர போராட்ட வீரர்கள் பிறந்த புண்ணிய பூமி..தமிழ்நாட்டில் அதிக சுதந்திர போராட்ட வீரர்கள் பிறந்த பூமி எங்கள் நெல்லை.கர்ம வீரர் காமராஜர் விருதுநகரில் பிறந்திருந்தாலும் அவருக்கு நெல்லை,தூத்துக்குடி மற்றும் குமரி மக்கள் மீது அன்பு அதிகம். நெல்லைகார்களின் அன்புக்கும் எல்லை கிடையாது. கோபத்திற்கும் எல்லை கிடையாது. இயல்பாகவே நெல்லை மக்களுக்கு பிட்யுட்டரி சுரப்பி செயல்பாடு அதிகம்.. மதச்சார்பின்மைக்கு சான்று நாங்கள் தான். நெல்லையில் கோவில்கள் அருகில் மசூதி யை பார்க்கலாம், மசூதி அருகில் சர்ச் யை பார்க்கலாம்.. தமிழ்நாட்டில் இதுவரையில் மதகலவரங்கள் நடைபெறாத மாவட்டங்களில் நெல்லையும் ஒன்று. Tirunelveli Medical College( govt ) TMC, Govt College of Engg Tirunelveli, Tirunelvili Law College, Govt agricultural college, Govt Siddha Medical College, Govt Veterinary College, என தமிழ்நாட்டின் உயர்கல்வி மையமாக திகழ்கிறது நெல்லை.... தமிழ்நாட்டில் அப்பாவுக்கு அதிக மரியாதை தரும் பசங்க நெல்லை பசங்க தான். பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறைவாக பதிவாகும் மாவட்டங்களில் நெல்லை மற்றும் தூத்துக்குடி முதலிடம். பதிவு திருமணங்கள் குறைவாக நடக்கும் மாவட்டங்களில் திருநெல்வேலியும் ஒன்று. விவாகரத்து குறைவாக நடக்கும் மாவட்டங்களில் நெல்லை முதலிடம். முதியோர் காப்பகங்கள் குறைவாக உள்ள மாவட்டமும் எங்கள் திருநெல்வேலி தான். தமிழ்நாட்டில் சென்னை,கோவைக்கு பிறகு அதிக இளைஞர்கள் உள்ள மாவட்டம் நெல்லை தான். " District of Youth " ஒரு ஆண்டில் வெளியாகும் தமிழ் படங்களில் 50% படங்கள் திருநெல்வேலியை மையமாக கொண்டே வெளிவருகிறது... Relaxplzz |
Posted: 20 May 2015 02:10 AM PDT ரூபாய் நோட்டுகள் சொல்லும் இந்திய வரலாறு இந்திய ரூபாய் நோட்டுக்களில் 5, 10 என ஒவ்வொரு நோட்டிலும் ஒவ்வொரு புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு இந்திய வரலாற்றை பறைசாற்றுகின்றன. அதாவது, ரூபாய் 5 – விவசாயத்தின் பெருமை5rupee ரூபாய் 10 – விலங்குகள் பாதுகாப்பு (புலி, யானை, காண்டாமிருகம்). ரூபாய் 20 – கடற்கரை அழகு (கோவளம்) ரூபாய் 50 – அரசியல் பெருமை (இந்திய நாடாளுமன்றம்) ரூபாய் 100 – இயற்கையின் சிறப்பு (இமயமலை) ரூபாய் 500 – சுதந்திரத்தின் பெருமை (தண்டி யாத்திரை) ரூபாய் 1000 – இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாடு. Relaxplzz |
Posted: 20 May 2015 01:10 AM PDT அன்பு நண்பர்களே ஒரு இனிய வேண்டுக்கோள் .... தயவு செய்து இனிமேல் யாரும் சன்டிவி பார்க்க வேண்டாம் .. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்கள் உங்கள்வீட்டை கண்காணிக்கிறார்கள் ...!! அவர்கள் எங்கு கேமராவை வைத்து நம்மை பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை ...!! முதலில்இதை நான் நம்பவில்லை ..... என் வீட்டில் சன் டிவி பார்த்தஅனுபவத்தால்இதை கூறுகிறேன் .... ஜாக்கிரதை .... இதை நான் எப்படி கண்டுபிடித்தேன் தெரியுமா ?! . . . . . . . . . . . . . . . . சன் டிவி பார்க்கும்போது அவன் சரியாய் சொன்னான் நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் டிவி இன்னு .....!! அவனுக்கு எப்படி தெரியும் நான் அதைத்தான் பார்க்கிறேன் என்று ..!? அப்போ எங்கேயோ கேமராவை வைத்து பார்க்கிறான் . :P :P Relaxplzz |
Posted: 20 May 2015 12:10 AM PDT ஒரு உண்மை நிகழ்வு:- நான் ஒரு கண்ணாடி கடை நடத்துனர். ஒரு வாரம் முன்பு என்னிடம் ஒருவர் தன் இல்லத்துக்கு கண்ணாடி பொருத்த வேண்டும் என வந்து இருந்தார்.. சரி நான் உங்க இல்லம் வந்து சந்தித்து அளவு எடுத்து கொள்கிறேன் என்றேன்.. ஒரு வழியாக முகவரி அறிந்து அவர் இல்லம் சென்றேன்.. அட அவ்வளவு நேர்த்தியான இல்லம். அழகான வடிவமைப்பு. அப்ப அவரிடம் நான் கேட்டேன் ரொம்பவே செலவு ஆகி இருக்கும் போல. நீங்க ரொம்பவே வசதி படைத்தவர்ங்க. அப்படி என்ன வேலை பாக்கறிங்க ஐயா நீங்க.. அதர்கு அவர் நான் சாதாரண பழ வியாபாரிங்க. என்னோட சொந்த ஊர் திருநெல்வேலி பக்கதுல ஒரு சின்ன கிராமம். 17 வயசுல சென்னைக்கு வந்த.. என்ன செய்யர்துனு புரியாம ஊர சுத்திட்டு இருந்தன். உணவுக்கு மட்டும் பஞ்சம் இல்ல. கொத்தவார்சாவடில மண்ணுல விழுந்த பழத்த திரும்ப எடுக்க மாட்டாங்க. அங்க அங்க சிதறி விழர பழம் சாப்பிட்டு பொழுத கழிச்ச. ஒரு கட்டத்துல அந்த பழத்த எல்லாம் எடுத்து சின்னதா ஒரு துணி போட்டு விக்க ஆரம்பிச்சன். முதலீடு இல்லா வருமானமாக எனக்கு 50 ருபாய் கிடச்சுது.. அதையே படி படியா சொஞ்சம் பெருசாக்கின.. அப்பறம் வந்த வருமானத்துல ஒரு தெருவோர பழ கடை ஆரம்பிச்சன்.. இப்ப சொந்தமா 4 பழ கடை வச்சி இருக்கேன். இது எங்க அம்மாவுக்காக நான் கட்டிய வீடு. இந்நாள் வரை அவங்க நாளு பக்கம் சுவர் வச்ச வீட்டில கூட இருந்நது இல்ல. எனக்கு மூல தனமா இருந்தது சிலர் வேண்டானு விட்ட விஷயம். 20 வருட உழைப்பை பத்து நொடியில் முடித்து விட்டார். சாதிக்க வேண்டும் என எண்ணம் இருந்தால் போதும்.வாழ ஆயிரம் வழிகள் உண்டு. --ஸ்வப்னா ஸ்ரீனிவாசன் Relaxplzz |
Posted: 19 May 2015 11:16 PM PDT ஒன்பதரை மணி காலேஜிக்கு ஒவ்வொருத்தனா கெளம்பும் போது ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான் ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்... அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ அரை குறையா குளிச்சதுண்டு பத்து நிமிஷ பந்தயத்துல பட படன்னு சாப்டதுண்டு பதட்டதோட சாப்பிட்டாலும் பந்தயத்துல தோத்ததில்ல, லேட்டா வர்ற நண்பனுக்கு பார்சல் மட்டும் மறந்ததில்ல! கேலி கிண்டல் பஞ்சமில்ல, கூத்து கும்மாள குறையுமில்ல, எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா H.O.Dய கூட விட்டதில்ல! ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா அத அடிப்பான் காபி அந்தபக்கம்... ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு! பசியில யாரும் தவிச்சதில்ல காரணம் - தவிக்க விட்டதில்ல... டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும் சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல! அம்மா ஆசையா போட்ட செயினும் மாமா முறையா போட்ட மோதிரமும் Fees கட்ட முடியாத நண்பனுக்காக அடகு கடை படியேற அழுததில்ல... சட்டைய மாத்தி போட்டுக்குவோம் சாதி சமயம் பாத்ததில்ல, மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும் முகவரி என்னன்னு கேட்டதில்ல! படிச்சாலும் படிக்கலன்னாலும் பிரிச்சி வச்சி பாத்ததில்ல... அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும் அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல! வேல தேடி அலையுறப்போ வேதனைய பாத்துப்புட்டோம் 'வெட்டி ஆபிஸர்'னு நெஜமாவே மாறி மாறி சிரிச்சிகிட்டோம்! ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்... பக்குவமா இத கண்டும் காணாம நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ 'சாப்பாட்ல காரம்டா மச்சான்'னு சமாளிச்சி எழுந்து போவோம்... நாட்கள் நகர, வருஷங்கள் ஓடுது, எப்போதாவது மட்டுந்தான் இ- மெயிலும் வருகுது "Hi da machan... how are you?" வுன்னு... தங்கச்சி கல்யாணம், தம்பி காலேஜி, அக்காவோட சீமந்தம், அம்மாவோட ஆஸ்த்துமா, Personal loan interest, Housing loan EMI, Share market சருக்கல், Appraisal டென்ஷன், இந்த கொடுமையெல்லாம் பத்தாம 'இன்னிக்காவது பேச மாட்டாளா?' ன்னு இஞ்சிமறப்பா போல ஒரு காதல், . எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா, நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா! இ-மெயில் இருந்தாலும் இண்டர்னெட் இருந்தாலும் கம்பெனியில ஓசி phone இருந்தாலும் நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல நண்பனோட குரல கேக்க நெனச்சாலும் முடியறதில்ல பழையபடி வாழ்ந்து பாக்க! அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும் Orkut இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும் 'Available' ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும் 'ஏண்டா பேசல?' ன்னு கோச்சிக்க தெரியல... இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல! கல்யாணத்துக்கு கூப்பிட்டு வரமுடியாமா போனாலும், அம்மா தவறின சேதி கேட்டதும் கூட்டமா வந்தெறங்கி, தோள் குடுத்து தூக்கி நிறுத்தி பால் எடுத்தவரை கூட இருந்து சொல்லாம போக வேண்டிய இடத்துல செதுக்கிவச்சிட்டு போன என் தோழர்கள் தேசம் கடந்து போனாலும் பாசம் மறந்து போகாது! பேசக் கூட மறந்தாலும் வாசம் மாறி போகாது! வருஷம் பல கழிஞ்சாலும் வரவேற்பு குறையாது! வசதி வாய்ப்பு வந்தாலும் 'மாமா' 'மச்சான்' மாறாது.. Relaxplzz |
Posted: 19 May 2015 10:10 PM PDT காதல்னா என்ன...??? ஒரு பொண்ணு ரொம்ப அழகா இருக்கா...அதனால நான் அவள காதலிக்கிறேன்னு நீங்க நெனச்சா, அது காதல் இல்ல... Infatuation நாம விலகி போயிட்டா அந்தபொண்ணு மனசு காயம் ஆயிடுமேனு நீங்க அவள காதலிக்கிறேன்னு நெனச்சா, அது காதல் இல்ல.. Charity எல்லா விஷயத்தையும் அவகிட்ட பகிர்ந்துக்கிறேன்... அதனால அவள நான் காதலிக்கிறேன்னு நீங்க நெனச்சா, அது காதல் இல்ல... Pure Friendship ஆனா.... அவளோட துக்கங்கள் அவள விடவும் உங்கள அதிகமா பாதிச்சு அவளுக்காக நீங்க கண்ணீர்விட்டா... அது தான் காதல்... வேற பொண்ணுங்க உங்கள கவர்ந்தாலும்... எந்த காரணமும் இல்லாம நீங்க அவ கூடவே இருந்தீங்கன்னா ... அது தாங்க தெய்வீக காதல்.. Relaxplzz |
Posted: 19 May 2015 09:10 PM PDT இம்சை அரசனும், Facebook-ம்..!!! ------------------------------------------ " மன்னா.. ஆபத்து.., ஆபத்து.... " " என்னய்யா ஆபத்து... என் அக்கவுண்ட்டை யாராவது ஹேக் செய்து விட்டார்களா..? " " இல்லை மன்னா.. பக்கத்து நாட்டு மன்னன் நம்மீது போர் தொடுக்க போகிறானாம்.. ஸ்டேடஸ் போட்டு இருக்கிறான்... " " என்னாது போரா..? நாம் தான் அவன் போடும் எல்லா மொக்கை ஸ்டேடசுக்கும் லைக் போடுகிறோமே... பிறகு எதற்கய்யா போருக்கு வருகிறான்.. " " அவர் அந்தபுரத்தில் இருக்கும் இரண்டு ராணிகளுக்கு நீங்கள் ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பினீர்களாமே... " " ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பினதுக்கு எல்லாமா போர்.. பெரிய அக்கப்போராய் அல்லவா இருக்கிறது.. அவ்வ்வ்..!! " ;-) ;-) Relaxplzz |
Posted: 19 May 2015 07:26 PM PDT யானைகள் வாழும் பூமியில் தான் எறும்புகளும் வாழ்கின்றன.. பூனைகள் வாழும் வீடுகளில் தான் எலிகளும் வாழ்கின்றன.. சிறுத்தைகள் வாழும் காடுகளில் தான் மான்களும் வாழ்கின்றன.. சுறாக்கள் வாழும் கடலில் தான் சிறு மீன்களும் வாழ்கின்றன.. பாம்புகள் வாழும் வயல்களில் தான் தவளைகளும் வாழ்கின்றன... வாழ்க்கை என்பது ஏய்த்து பிழைப்பதல்ல...போராடி ஜெயிப்பது... (y) (y) Relaxplzz |
Posted: 19 May 2015 06:00 PM PDT வீடு வீடாகப் பொருட்களை வினியோகிக்கும் அந்தச் சிறுவனுக்கு ரொம்பப் பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் அவனிடம் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிடக் கேட்கலாம் என நினைத்தான். கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். அவனுக்கோ சாப்பாடு கேட்க ரொம்பக் கூச்சம்.'கொ… கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?' தயக்கத்துடன் கேட்டான். அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியைக் கவனித்தாள். உள்ளே போய் ஒரு கப் பால் கொண்டு வந்து கொடுத்தாள்.பாலைக் குடித்துப் பசியாற்றிய சிறுவன் கேட்டான், `நான் எவ்வளவு கடன்பட்டிருக்கேன்?'`கடனா? அப்படியொன்றுமில்லை. அன்பான செயலுக்கு விலை இல்லை என அம்மா சொல்லியிருக்கிறார்…', அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள்.' ரொம்ப ரொம்ப நன்றி…' சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான். ஆண்டுகள் கழிந்தன. அந்த சிறுவன் நகரிலேயே பெரிய டாக்டர் ஆனான். அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது. அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனை வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்தப் பெண்ணின் ஊரைப் படித்ததும் அவருக்குள் சின்ன மின்னல். விரைவாக அறைக்குப் போய் அந்தப் பெண்ணைப் பார்த்தார். அவளேதான். தனது பசியாற்றிய நல்ல உள்ளம் படைத்தவள். அன்று முதல் தனது அத்தனை உழைப்பையும் செலுத்தி அவளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்குப் பின் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்தப் பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படிக் கட்டப் போகிறேனோ எனும் பதற்றத்துடன் அதைப் பிரித்த அவள் திகைத்துப் போனாள். அந்த பில்லின் கடைசியில் எழுதப்பட்டிருந்தது, `ஒரு கப் பாலில் உங்கள் கடன் எல்லாம் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்.' அவளுடைய கண்கள் கசிந்தன. மனிதனுக்கு இருக்க வேண்டிய மகத்தான குணாதிசயங்களில் ஒன்று நன்றி.... :) :) Relaxplzz |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment