Relax Please: FB page daily Posts |
- இன்று இந்தியா நேபாளத்துக்கு உதவி செய்வதனால் ஆயிரக்கணக்கான மக்கள் காப்பாற்றப்படு...
- நேதாஜி அவர்கள் முதல் முறையாக ஹிட்லரை சந்திக்க சென்ற போது ஹிட்லருடைய ஆட்கள் நேதாஜ...
- :) https://twitter.com/RelaxplzzTamil
- கணவன் மனைவி படிக்க வேண்டிய அழகான குட்டிக்கதை.. ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுட...
- இந்த இயற்கையின் அழகை ஒரு வார்த்தையில் வர்ணிங்க.....
- தோல்விகள் என்னை துரத்த.. வெற்றிகள் நோக்கி நான் ஒட... களத்தில் நிற்கின்றேன் நம்பி...
- உலகில் மிகவும் ஆபத்தான மனிதன் பசியுடன் இருக்கும், குழந்தையின் தந்தை, ,
- பெண்கள் கவனத்திற்கு...! நண்பர் ஒருவர் பேருந்தில் பயணம் செய்யும் செய்யும் போது அ...
- பணம் சம்பாதிக்க ஆயிரம் தொழில் இருக்கு... உணவைச் சம்பாதிக்க விவசாயம்மட்டும் தானே...
- எவ்வளவு தான் ஐஸ்பெட்டியில் வைத்து தண்ணீர் அருந்தினாலும் இதற்கு ஈடாகுமா?
- தன் தாயை இலவச அரிசிக்கு கியூவில் விட்டு விட்டு கியூபா சுதந்திரத்திற்க்கு போரோடி...
- ஆஹா இப்படித்தான் நாம்... :D :D 1. ATM மெஷின்-ல கார்டு சொருவி பேலன்ஸ் பாத்துட்டு...
- இந்த குழந்தையின் பெயர் தான் 'இந்தியா' - தென்ஆப்ரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான...
- சேலை கட்டிய வெள்ளைக்கார பெண்களை நாம பெருமையா பார்ப்பது போல எந்த வெளிநாட்டுக் கார...
- கிராமத்தில் உள்ள மக்கள் வாழ்கிறார்கள்; நகரத்தில் உள்ள மக்கள் பிழைக்கிறார்கள்..
- ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? 1.அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும்...
- சந்தேகமே இல்லை "இந்தியா" வல்லரசு ஆகிடும்...
- கண் தெரியாதவர் - நான் தோற்றத்தை பார்த்து ஏமாந்தது கிடையாது.. காது கேளாதவர் - நா...
- :) Relaxplzz
- விளையாட்டில் விருதுகளைக் குவிக்கும் சென்னை கூலித்தொழிலாளி மகள் இவர்..!!! மென்ம...
- "முடியாதது எதுவுமில்லை!!" (Y)
- உபுண்டு [UBUNTU] ஒரு அழகான கதை : ஒரு மானுடவியலாளர் [anthropologist] ஆப்ரிக்க பழ...
- அடுத்த நிமிடத்தைக்கூட நாம் ஆள முடியாதென்பதே நிஜம் . இதில் தேவையற்ற திமிர், வெறுப...
- இனிய காலை வணக்கம் நண்பர்களே.. :)
- அழகிய சிவப்பு ரோஜாக்கள்.. <3
- அழகிய செர்ரி பழங்கள்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- ஒரு விளையாட்டு மைதானம்... சிறுவர்கள் ஓட தயாராக வரிசையில் நிற்கிறார்கள்... "ரெட...
- அரசுக்கு ஒரு சவால்..!!! எதிர்வரும் காலத்திற்கான ஒரு அவசியமான தகவல் நண்பர்களே..ப...
Posted: 27 Apr 2015 04:08 AM PDT இன்று இந்தியா நேபாளத்துக்கு உதவி செய்வதனால் ஆயிரக்கணக்கான மக்கள் காப்பாற்றப்படுகின்றனர்...மகிழ்ச்சி. இதே இந்தியா அன்று இலங்கைக்கு உதவி செய்யாமல் இருந்திருந்தாலே லட்சக்கணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள்...வருத்தம். - Boopathy Murugesh @ Relaxplzz |
Posted: 26 Apr 2015 11:15 PM PDT நேதாஜி அவர்கள் முதல் முறையாக ஹிட்லரை சந்திக்க சென்ற போது ஹிட்லருடைய ஆட்கள் நேதாஜியை ஒரு அறையில் உட்கார வைத்தனர் . நேதாஜி அவர்கள் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டார் . ஹிட்லருடைய ஆட்கள் ஹிட்லருக்கு தெரிவிக்க சென்றனர் . ஹிட்லர் போன்ற வேடமணிந்த பலர் வந்தபோதும் நேதாஜி கண்டுகொள்ளாமல் படிப்பதை தொடர்ந்தார் . இதில் என்ன விஷயம் என்றால் பல சமயங்களில் ஹிட்லர் போன்ற வேடமணிந்தவர்களை கண்டு பல மனிதர்கள் தாங்கள் ஹிட்லரை சந்தித்தாக சொல்லியிருக்கிறார்கள்.. கடைசியில் ஹிட்லரே வந்து நேதாஜியின் தோளில் கை வைத்தவுடனே நேதாஜி அவர்கள் "ஹிட்லர்" என்றார் . ஹிட்லருக்கு ஒரே வியப்பு… ஹிட்லர் நேதாஜியிடம் " எப்படி நீங்கள் என்னை கண்டுபிடித்தீர்கள் இதற்கு முன் நீங்கள் என்னை சந்தித்தது கிடையாது " என்று கேட்டார். நேதாஜி அவர்கள் "இந்த உலகத்தில் சுபாஷ் சந்திர போசின் தோளில் கை வைக்க ஹிட்லரை தவிர வேறு யாருக்கும் தைரியம் கிடையாது" என்றார்…! (எத்தனைமுறை படித்தாலும் மறுபடியும் படிக்கத்தூண்டுகிற ஒரு சரித்திர நிகழ்வு) Relaxplzz |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 26 Apr 2015 11:04 PM PDT |
Posted: 26 Apr 2015 10:15 PM PDT கணவன் மனைவி படிக்க வேண்டிய அழகான குட்டிக்கதை.. ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார். ஒருநாள் 'ஆபீஸ்' போய் வேலை செய்து பார்.. சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்.. அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க.. காலைல குளிப்பாட்டி சாப்பிட வச்சு, வீட்டுப் பாடங்கள் சொல்லிக்கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க.. அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும் செஞ்சுதான் பாருங்களேன்.. என எதிர் சவால்விட்டாள். கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்.. அவன் வீட்டில் இருக்க.. இவள் ஆபீஸ் போனாள்.. ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ். முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல்கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள். வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய் வருபவர்களை கண்டித்தாள்.. கணக்கு வழக்குகளைப் பார்த்தாள். மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட நினைத்தபோது, ஓர் அலுவலரின் மகள் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல, பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண மண்டபத்திற்கு சென்றாள். கணவர் வராததற்கு பொய்யான காரணம் ஒன்றை சொல்லிவிட்டு, மணமக்களின் கட்டாயத்தால் சாப்பிட சென்றாள்.. பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம் வீட்டைப் பற்றியே! இலையில் வைத்த 'ஜாங்கிரியை' மூத்தவனுக்கு பிடிக்கும்என்று கைப்பையில் எடுத்து வைத்தாள்..முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும் கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்..அவள் சாப்பிட்டதை விட, பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் என பைக்குள் பதுக்கியதே அதிகம். ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள்,கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும்இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள். இவளை பார்த்ததும், பிள்ளையா பெத்து வச்சிருக்க..? எல்லாம் கியா முய என்று கத்தி தொலையுதுங்க அத்தனையும் குரங்குகள்.! சொல்றதை கேட்க மாட்டேங்குது.. படின்னா படிக்க மாட்டேங்குது.. சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது.. அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல படுக்க வச்சிருக்கேன்.. பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள கெடுத்து வச்சிருக்கே... என்று பாய.... அவளோ, அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா... என்றவாறே உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள். உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய் பிள்ளைகள்.! விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன், 'ஏங்க.. இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..? இவன் எதிர்வீட்டு பையனாச்சே ' என்று அலற.. ஓஹோ, அதான் ஓடப் பார்த்தானா..! என கணவன் திகைக்க... அந்த நிலையில் இருவருக்கும் ஒன்று புரிந்தது.. இல்லாள் என்றும், மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம் தொடங்கி நம் மூதாதையர்கள் சொல்வது சும்மா இல்லை. இல்லத்தைப் பராமரிப்பதிலும் பிள்ளைகளுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும்ஒரு பெண்ணின் பங்கு தலையாயது. அதுபோல, பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும் அளப்பரியது..ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில் இது ஆணுக்கு, இது பெண்ணுக்கு என்று குடும்பப் பொறுப்புகளை இனம்பிரிக்க இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது.. இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் கணவன்மீது மனைவியோ, மனைவிமீது கணவனோ ஆதிக்கம் செலுத்தாமல் அன்பால் சாதிக்கும் மனநிலையை கொண்டிருந்தால் தான் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ முடியும்... :) :) Relaxplzz |
Posted: 26 Apr 2015 10:00 PM PDT |
Posted: 26 Apr 2015 09:45 PM PDT |
Posted: 26 Apr 2015 09:30 PM PDT |
Posted: 26 Apr 2015 09:10 PM PDT பெண்கள் கவனத்திற்கு...! நண்பர் ஒருவர் பேருந்தில் பயணம் செய்யும் செய்யும் போது அவருக்கு ஒரு மெமரி கார்டு காலருகே கிடந்துள்ளது, அந்த மெமரி கார்டை எடுத்து அவரின் கைப்பேசியில் போட்டு பார்த்துள்ளார் அது ஒரு கல்லூரி மாணவியினுடையது என்பது அதிலிருந்த புகைப்படத்திலேயே அவருக்கு தெரிந்துள்ளது. அதில் அதிர்ச்சி என்னவென்றால் அதில் பல படங்கள் அவரே சுயமாக (செல்ஃபி) உடையின்றி புகைப்படமாகவும் வீடியோ என எடுத்துள்ளார்... அதை பார்த்தவர் சற்று அதிர்ச்சியில் எழுதிய பதிவுதான் இது அவர் தமிழில் எழுதமுடியாத காரணத்தால் தான் நான் இந்த பதிவை தமிழில் பதிவிடுகிறேன். சில பெண்கள் விளையாட்டாக செய்யும் இது போன்ற செயல்களால் பல சிக்கல் வர வாய்ப்புள்ளது... அதுவே அவர் கையில் கிடைக்காமல் வேறு தவறான நபரின் கையில் சிக்கி இருந்தால் இவ்வளவு நேரம் அதிலிருந்த படங்களும் வீடியோக்களும் முகநூல் மற்றும் வாட்ஆப் என பல இணயங்களில் பரபரப்பாக பறந்திருக்கும்... பிறகு அந்த பெண்ணின் வாழ்க்கையை நினைத்துப்பாருங்கள் எப்படியிருக்கும் மானம் மட்டுமல்ல உயிரையும் இழக்க நேரிடும் என்பதே உண்மை... இன்னொரு முக்கியமான விஷயமும் உள்ளது...கைப்பேசியில் ஆபாசமாக எடுத்த வீடியோக்கள் மற்றும் படங்கள் அழித்துவிட்டாலும் அதை இப்போதுள்ள தொழில்நுட்பத்தால் மீண்டும் அவற்றை எடுக்கும் வழிமுறையும் வந்துவிட்டது... ஆகையால் இது போன்ற அபாயங்கள் உங்கள் வாழ்க்கையை சீரழிக்கும் என்பது நிதர்சனமான உண்மை... ஆகையால் விளையாட்டாக ஆபாசமான புகைபடம் மற்றும் வீடியோக்கள் எடுப்பது முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள்... இந்த பதிவை ஷேர் செய்தால் பலருக்கு உதவியாக இருக்கும். நன்றி... Aadhi karthick nellai... சுதர்சன் சேகுவேரா... Relaxplzz |
Posted: 26 Apr 2015 09:00 PM PDT |
Posted: 26 Apr 2015 08:45 PM PDT |
Posted: 26 Apr 2015 08:30 PM PDT தன் தாயை இலவச அரிசிக்கு கியூவில் விட்டு விட்டு கியூபா சுதந்திரத்திற்க்கு போரோடிய சேகுவேரா படம் பொரித்த பனியனை அனிபவனும்... 60 வயதாகியும் பணிக்கு செல்லும் தந்தையை பற்றி கவலை படாமல் 37 வயதில் ஓய்வு பெறும் சச்சினுக்காக வருந்துபவனும்... தன் வீட்டில் பழய கஞ்சி குடித்து விட்டு நடிகனின் கட்டவுட்'க்கு பாலாபிஷேகம் செய்பவனும்... இந்த மண்ணுக்கு கிடைத்த சாபங்கள்.. Relaxplzz ![]() |
Posted: 26 Apr 2015 08:15 PM PDT ஆஹா இப்படித்தான் நாம்... :D :D 1. ATM மெஷின்-ல கார்டு சொருவி பேலன்ஸ் பாத்துட்டு, அப்றோம் பணம் எடுத்துட்டு மறுபடியும் பேலன்ஸ் பார்போம் . . . 2.சேர்த்து வெக்கிறேன் பேர்வழின்னு, எவங்கிட்ட வேணாலும் சீட்டுப் போட்டு கோட்டைய விடுவோம் . . . 3.கெத்துகாக குழந்தைகள இங்கிலீஷ் மீடீயத்துல சேத்துவிட்டுட்டு பீஸ் கட்டும் போது அலுத்துகிறது . . . 4.கேஸ் சிலிண்டர்ல காலண்டர் தேதிய கிழிச்சி ஒட்டி வைப்போம் . . . 5.எலெக்ட்ரிக் பில் தொடங்கி எல்லா பில்லையும் கடைசி நாள் கட்டுவது . . 6.கால் லிட்டர் பால்ல அரை லிட்டர் தண்ணி ஊத்தி டீ குடிக்கறது ,பால் கவர் எல்லாத்தையும் சேத்து வச்சு மொத்தமா எடைக்கு போட்டு காசு பாக்குறது. . . 7.தீபாவளிக்கு வாங்குன வெடிய கொஞ்சம் வச்சு கார்த்திகைக்கு வெடி.ப்போம் . . 8.50 ரூபாய்க்கு ரீசார்ஞ் பண்ணி, எல்லாருக்கும் மிஸ்டு கால் கொடுப்போம் . . . 9.கரண்ட் இல்லனா பக்கத்து வீட்ல எட்டி பாக்குறது . . 10.தங்கம் விலை எறும்போதெல்லாம் ரொம்ப வருத்தப் படுவோம். . . 11.அஞ்சு ரூவா பேலன்ஸ் குறைஞ்சா கஸ்டமர் கேர்க்கு போன் பண்ணி கழுவி கழுவி திட்றது. . . 12.செல்ஃபோன்ல எவ்ளொ பேலன்ஸ் இருக்குன்னு அப்ப அப்போ செக் பண்ணிக்கிறது.. . . 13.கல்யாணம் முடிச்சிட்டு, ஒரு வார சட்னிக்கு தேவையான தேங்காய சின்ன புள்ளல்லாம் அனுப்பி பை வாங்குறது . . 14.தெருவில் காய்கறிகள் விற்க்கும் வயதான பாட்டியிடம் பேரம் பேசுவது ,சூப்பர் மார்கட்களில் மௌனமாக இருப்பது.. . . 15.ஊருல எவன் ஓசில காலண்டர் கொடுத்தாலும் தேடி போய் வாங்குவம்ல.. . . 16.மூனுநாளு டூருக்கு போனாலும், ரெண்டுநாளைக்கு உண்டான புளியோதரை,பொங்கசோறு கட்டிக்கிட்டு போவோம்.. . . 17.நள்ளிரவில் இருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 2ரூ ஏறுதுன்னு தெரிஞ்ச உடனே போய் 2 லிட்டர் பெட்ரோல் போடுவோம். . . 18. புதுசா வாங்கின டிவி மேல டவல் போட்டு போர்த்தி வைப்போம். . . 19.பர்சில் இருக்கும் ரூபாயிலேயே பழைய நோட்டாகப் பார்த்து முதலில் செலவு செய்வது.. . . 20. பிரபு ,சூர்யா, மாதவன் சொன்ன கடைல நகை வாங்கி, விக்ரம் சொன்ன கடைல அடமானம் வைப்போம்.. Relaxplzz |
Posted: 26 Apr 2015 08:00 PM PDT |
Posted: 26 Apr 2015 07:45 PM PDT |
Posted: 26 Apr 2015 07:30 PM PDT |
Posted: 26 Apr 2015 07:10 PM PDT ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? 1.அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் போது. 2.தாவணிக் கோலத்தில் சுப நிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வளம் வரும்போது. 3.பேச்சில் ஆங்கிலம் கலக்காமல், படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது. 4.அழகை திமிராக காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது. 5.யார் மனதையும் புண் படுத்தாமல்,தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக் கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது. 6.அச்சப் பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க வேண்டிய இடங்களில் கம்பீரமாய் இருக்கும் போது. 7.காதில் இருக்கும் கம்மல் தன் பேச்சுக்கு தாளம் போடும் படி, தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது. 8.தம்பி தங்கைகளுக்கு இன்னொரு தாயாய் இருக்கும் போது. 9.தந்தையின் குடும்ப கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் போது. 10.ஆபாசமில்லாத உடையணிந்து அழகை எப்போதும் மறைத்தே வைத்திருக்கும் போது. 11.ஆண்கள் கூட்டத்தை கடக்கும் போது,நம்மை ஏதேனும் சொல்லி கிண்டலடித்து விடுவார்களோ என்று மனதில் ஆயிரம் கேள்விகளை சுமந்த படியே செல்லும் போது. 12.சமைக்கத் தெரியாது என்பதை பெருமையாக சொல்லாமல், அன்னமிடுவதில் அன்னையாய் இருக்கும் போது .# தன்னலமில்லாத, செயற்கைத் தனமில்லாத எல்லா பெண்களுமே அழகு தான்….!!! Relaxplzz |
Posted: 26 Apr 2015 07:00 PM PDT |
Posted: 26 Apr 2015 06:45 PM PDT கண் தெரியாதவர் - நான் தோற்றத்தை பார்த்து ஏமாந்தது கிடையாது.. காது கேளாதவர் - நான் ஒட்டு கேட்டதே கிடையாது... வாய் பேசாதவர் - நான் பொய் பேசியதே கிடையாது.. குள்ளமானவர் - நான் யார் முன்னும் தலை குனித்து நின்றது கிடையாது.. கை இல்லாதவர் - நான் யார் குறையையும் பார்த்து கை கொட்டி சிரித்தது கிடையாது.. கால் இல்லாதவர் - நான் காசு பணம் வந்ததும் கால் மேல் கால் போடுவது இல்லை... அதனால் தான் எங்களை மாற்றுத்திறனாளி என்கிறார்கள்.. நீயோ ஊனம் என்கிறாய்.. Relaxplzz ![]() |
Posted: 26 Apr 2015 06:30 PM PDT |
Posted: 26 Apr 2015 06:20 PM PDT |
Posted: 26 Apr 2015 06:10 PM PDT |
Posted: 26 Apr 2015 06:00 PM PDT உபுண்டு [UBUNTU] ஒரு அழகான கதை : ஒரு மானுடவியலாளர் [anthropologist] ஆப்ரிக்க பழங்குடியின சிறுவர்களுக்காக ஒரு போட்டி நடத்தினார். அவர் ஒரு கூடை நிறைய பழங்களை நிரப்பி ஒரு மரத்தின் கீழ் வைத்தார். அந்தச் சிறுவர்களை அந்த மரத்திலிருந்து ஒரு நூறு மீட்டர் தள்ளி வரிசையாக நிற்க வைத்தார். யார் முதலில் அந்த மரத்தை தொடுகிறாரோ அவர்களுக்கு அந்த கூடை பழம் முழுவதும் பரிசாகத் தரப்படும் என்று அறிவித்தார். அவர் அந்த சிறுவர்களை தயார் நிலையில் வைத்து விசில் ஊதினார். அப்பொழுது அந்தச் சிறுவர்கள் என்ன செய்தனர் தெரியுமா? அவர்கள் அனைவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு ஒன்றாக ஓடி மரத்தை அடைந்து, அந்தப் பழங்களை பகிர்ந்து கொண்டு சாப்பிடத் தொடங்கினர். அந்த மானுடவியலாளர் ஆச்சரியத்துடன் அவர்களைப் பார்த்து ஏன் அவ்வாறு செய்தீர்கள்? என வினவினார். அவர்கள் எல்லோரும் ஒரே குரலில் "உபுண்டு எனக் குரல் எழுப்பினர். அதற்கு அர்த்தம் "பிறர் சோகத்துடன் இருக்கும்போது எப்படி ஒருவர் மட்டும் சந்தோஷமாக இருக்க முடியும்? "உபுண்டு" என்பதன் பொருள் "நான் என்றால் அது நானல்ல! நாங்கள்!! [ I AM BECAUSE, WE ARE !"] நாமும் அந்த ஆப்ரிக்க சிறுவர்களிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள இடமிருக்கிறது.!! -கணபதி சுப்பிரமணியன் http://en.wikipedia.org/wiki/Ubuntu_%28philosophy%29 Relaxplzz |
Posted: 26 Apr 2015 05:45 PM PDT |
Posted: 26 Apr 2015 05:30 PM PDT |
Posted: 26 Apr 2015 11:05 AM PDT |
Posted: 26 Apr 2015 10:53 AM PDT |
Posted: 26 Apr 2015 10:23 AM PDT |
Posted: 26 Apr 2015 10:10 AM PDT ஒரு விளையாட்டு மைதானம்... சிறுவர்கள் ஓட தயாராக வரிசையில் நிற்கிறார்கள்... "ரெடி..." "ஸ்டார்ட்..." "கோ..." துப்பாக்கி சத்தம் கேட்டதும் சிறுவர்கள் ஓட ஆரம்பிக்கிறார்கள்... கொஞ்ச தூரம் ஓடியிருக்க, திடீரென ஒரு சிறுவன் கிழே விழுந்து விடுகிறான்... வலியில் துடித்த சிறுவன் அழ, மற்ற சிறுவர்கள் சட்டென்று தங்களது ஓட்டத்தை நிறுத்தி விடுகிறார்கள்... விழுந்த சிறுவனை நோக்கி வந்து... அத்தனை சிறுவர்களும் ஒன்று சேர்ந்து, அவனை தூக்கி... மெதுவாக நடத்தி கொண்டு வந்து... வெற்றி கம்பத்தை தொட செய்கிறார்கள்... தேர்வாளர்கள் அதிர்ச்சியில் உறைகிறார்கள்... பார்வையாளர்கள் கண்களில் கண்ணீர்... இது புனேயில் நடந்த உண்மை சம்பவம்... பந்தயம் நடத்தியது, "தேசிய மனநல பயிற்சி நிறுவனம்" அனைத்து சிறுவர்களும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்... அந்த சிறுவர்கள், நமக்கு கற்றுக் கொடுத்த பாடம்... "ஒற்றுமை" "ஒத்துழைப்பு" "மனித நேயம்" "அக்கறை" "ஆபத்தில் உதவுதல்" "நேர்மறை சிந்தனை" "சமத்துவம்" "விட்டு கொடுத்தல்" மற்றும் "மற்றவர்களை சந்தோஷப்படுத்தி, மனநிறைவு அடைதல்" நல்ல மனநலத்தோடு இருப்பதாக நினைத்து கொள்ளும் நம்மால் இவ்வாறு நடந்திருக்க முடியுமா? சந்தேகம் தான்... ஏனென்றால், நமக்கு தான் "தான்" என்கிற அகந்தை இருக்கிறது... ஆத்ம ரீதியான வெற்றியை உணராமல், உணர்த்தாமல்... உலகியல் வெற்றி மட்டுமே அடைய போதிக்க பட்டிருக்கிறோம்... மற்றவர்களை ஜெயிக்க வைத்து, ஜெயிக்காமல்... தோற்க வைத்தால் தான் ஜெயிக்க முடியும் என்ற குறுகிய சிந்தனையில் சிந்திக்க பழக்க படுத்தபட்டிருக்கிறோம்... அதாவது, மற்றவர்களை ஆனந்தபடுத்துவதே பேரானந்தம் என்பதை நாம் உணர்ந்திருக்கவில்லை... (y) (y) Relaxplzz |
Posted: 26 Apr 2015 10:00 AM PDT அரசுக்கு ஒரு சவால்..!!! எதிர்வரும் காலத்திற்கான ஒரு அவசியமான தகவல் நண்பர்களே..படித்துவிட்டு பகிருங்கள்..!! இதுவும் ஒரு புரட்சியே! இயற்கை புரட்சி!! நம் கையில் பழத்தை வைத்துகொண்டு (இயற்கை எரிவாயு), ஏன் அடுத்த நாட்டிடம் ஏன் கையேந்த வேண்டும்(கச்சா எண்ணை) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை: (Rs)75.00 ரூபாய்: இயற்கை எறிவாயு (எத்தனால்) தயாரித்தால் -1 லிட்டர் 13.00ரூபாய் எரிபொருளின் விலை குறைவதால் – சரக்கு போக்குவரத்து எளிதாகும் – மலிவாகும். எனவே, தரை வழியாக கொண்டு வரப்படும், காய்கறி,மளிகை சாமான்கள், பால் – அத்தியாவசிய பொருட்களின் விலை பெருமளவில் குறையும்.எத்தனால் கலந்த புதிய, மலிவான, எரிபொருளை பயன்படுத்துவதால் ஆட்டோ, பஸ், லாரி போக்குவரத்து செலவு குறையும்.டாலரின் மதிப்பு ரூபாய் விட குறையும்!!! ஒரு கிலோ சர்க்கரைக்கு பதிலாக 11 லிட்டர் எத்தனால் தயாரிக்கலாம். உலகிலேயே கரும்பு உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்திலும் இந்தியா 2-ம் இடத்திலும் உள்ளன. பெட்ரோலுடன் 24 சதவீதம் எத்தனால் கலந்து ஓட்டலாம். இதற்கு வாகனத்தில் எந்த மாற்றமும் செய்யவேண்டியதில்லை. இதேபோல் எத்தனால் 85 சதவிதமும், பெட்ரோல் 15 சதவீதமும் கலந்து பயன்படுத்தலாம். எத்தனால் செய்யும் முறை!! எத்தனால் என்பது – விவசாயப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் – எரிபொருளாகப் பயன்படுத்தக்கூடிய,ஆக்சிஜனை உள்ளடக்கிய,ஒரு நிறமற்ற திரவம். (CH3CH2OH ) இதை பஸ், கார் போன்ற வாகனங்களில் எரிபொருளாகப் பயன்படுத்தலாம். வழக்கமாக பெட்ரோல் மற்றும் டீசலை பயன்படுத்தும் போது, கார்பன் வெளியேறி, சுற்றுப்புறசூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கிறது. ஆனால் எதனாலை எரிபொருளாக பயன்படுத்தும்போது, கரும் புகை வெளிப்பாடு குறைந்து,ஆக்சிஜன் அதிக அளவில் வெளியேறி, சுற்றுப்புறத்தை சுத்தம் செய்கிறது. உலக பொருளாதாரத்தில் மிக வேகமாக முன்னேறி வரும்பிரேசில் நாடு பெட்ரோல் மற்றும் டீசலுடன் 85 % எத்தனாலை கலந்து பயன்படுத்துவதை கட்டாயமாக்கி இருக்கிறது.பிரேசிலில்1980க்குப் பிறகு வடிவமைக்கப்பட்டஅனைத்து எஞ்ஜின்களும் 85 % எத்தனாலை கலந்துபயன்படுத்த தகுதியுள்ளவாறு தான் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. நம்ம கடிச்சி துப்புற கரும்பு சக்கையிலருந்தும், அப்பறம் சோளத்தை எடுத்துட்டு தூக்கிப்போடற கதிரு கச்சையிலிருந்தும் இந்த பெட்ரோல் எரி பொருள் தயாரிக்கலாம் கரும்பின் கழிவுப்பொருளாகக் கருதப்படும் கரும்புச்சக்கையிலிருந்து எத்தனால் தயாரிக்கவும், அந்த எத்தனாலை பெட்ரோல் மற்றும் டீசல் போன்றஎரிபொருட்களுடன் கலந்து வாகனங்களுக்கு பயன்படுத்தவும் துவங்கினால் -உற்பத்தியாகும் கரும்புக்கு நல்ல விலை கிடைக்கும். இவ்வளவு நாட்களாக கழிவுப் பொருளாக கருதப்பட்டகரும்புச்சக்கை இதன் மூலம் நல்ல விலை போகும் என்பதால் – சர்க்கரை விலை கணிசமாக குறையும். கரும்பு உற்பத்தியாகும் நிலங்களின் அளவு அதிகரிக்கும்.இன்னும் அதிக அளவு விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். ஒரு கேலன் என்பது மூன்றரை லிட்டருக்குச் சமம். ஒரு கேலன் எத்தனால் தயாரிக்க 40 ரூபாய்க்கும் குறைவாகத்தான் செலவாகிறது இன்றுள்ள கரும்பு உற்பத்தியாகும் நில அளவை வைத்தே ஏக்கருக்கான உற்பத்தித் திறனைப் பெருக்கி 40 லட்சம் டன் எத்தனாலை 5 ஆண்டுகளில் உற்பத்தி செய்ய இயலும். இதற்கான முடிவை அரசு உடனே எடுக்குமானால், பெட்ரோல், டீசல் விலையை வெகுவாகக் குறைத்துவிட முடியும். ஒரு டன் மக்காச்சோளத்திலிருந்து உற்பத்தியாகும் பொருள்கள் (ஒரு டன் மக்காச்சோளத்தின் விலை ரூ. 12,000) எத்தனால் 360 லிட்டர்; மக்காச்சோள எண்ணெய் – 25 கிலோ; கழிவு (தீவனம்) – 330 கிலோ. தமிழகத்தில் ஒரு லட்சம் ஏக்கர் மக்காச்சோளம் விளைவிக்கப்படுகிறது. சராசரியாக 4 லட்சம் டன் உற்பத்தியாகிறது. உற்பத்தியாகும் பொருள்களின் விலைகளையும் வெகுவாகக் குறைக்க இயலும். குறிப்பாக, பிளாஸ்டிக் பொருள். எத்தனால் உற்பத்தியைக் கரும்பிலிருந்து நேரடியாக உற்பத்தி செய்து கொள்ளலாம். கரும்பு உற்பத்தியை இப்பொழுது விளைவதைவிட இரு மடங்காக நிச்சயம் உயர்த்த வாய்ப்பு உள்ளது. வாய்ப்புகள் இருந்தும் அவைகளைப் பயன்படுத்தாமல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதிலேயே அரசு ஆர்வம் காட்டி வருகிறது … Relaxplzz ![]() |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment