Relax Please: FB page daily Posts |
- விஜயகாந்த் கடற்கரையில் படுத்திருந்தார்...... அமெரிக்கன் :are u relaxing? விஜயகா...
- லக்னோவில் லஞ்சம் கேட்ட அரசு அதிகாரிகள் அலுவலகத்தில் நாற்பது பாம்புகளை அவிழ்த்து...
- விஸ்வரூபத்த தடுக்க 35 அமைப்பு, கத்திய தடுக்க 25 அமைப்பு, 20 பேர Encounterல கொண...
- உலகிலே மிக நீளமான train 3km நீளம் கொண்டது.....!
- குழந்தையின் அனுமதியின்றி நாம் ஆயிரம் முத்தங்கள் கொடுத்து விடலாம். ஆனால் ஒரு குழ...
- :) https://twitter.com/RelaxplzzTamil
- பிரபாகரன் பற்றிய சுவாரஸ்யமான முக்கிய குறிப்புக்கள், அனைவரும் அறிய பகிரவும்.. --...
- (வெளிநாட்டு வேதனை) நாளைய தேவைகளிற்காக இன்றைய தன் விருப்பங்களை வாழ்க்கைப் பக்கத்...
- தைராய்டை சரிசெய்யும் 15 ஆரோக்கிய உணவுகள்!!! 1) ஸ்ட்ராபெர்ரி : உடலில் போதிய அயோ...
- வெயில் காலத்துல மார்க்கெட்டிங், சிவில், தள்ளுவண்டி கடைகாரர்கள், கூரியர், ட்ராபிக...
- மசால் வடை, டீ காம்பினேஷன் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- இயற்கை வீடு வேண்டுமா ...? * சுத்தமான காற்று இலவசம் ..
- முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள் * முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை தடவ...
- இவர்களது தியாகங்களையும் சற்று நினைவில் நிறுத்துவோம். (y) (Y)
- உடல் வருத்த #உழைத்தால் நம்மை நோய் அணுகாது..
- பிள்ளைகளை கூட்டியாந்து பாட,ஆட வைக்கிறேன் னு டிவி ஷோல விடுற பெத்தவங்களை விட ஆடு...
- மதுரை மல்லி வாசம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) https://twitter.com/RelaxplzzTamil
- :D :D :P
- நல்ல முன் உதாரணம்,, வாழ்த்துக்கள் சகோதரா.. (y) (y)
- கொஞ்சம் சிரிங்க பாஸ்... --- டாக்டர்! எனக்கு பல் ஆடுது! ----எந்த பாட்டுக்கு? *ஆ...
- ஒரு குடும்பம் நல்ல குடும்பமாக திகழ சில அவசியமான அறிவுரைகள் : 1. நாம் பெற்ற ஞானத...
- என் மனைவி போல என்னை யாராலும் கடுப்பேத்த முடியாது: நடிகர் (இம்ரான் கான்) 'ஓபன் டா...
- :) https://twitter.com/RelaxplzzTamil
- :) https://twitter.com/RelaxplzzTamil
- :) https://twitter.com/RelaxplzzTamil
- :) https://twitter.com/RelaxplzzTamil
- அண்ட்ராயுடுகள் வராமல் போயிருந்தால் தென்னை மட்டைகள் இன்னும் சில நாட்கள் உயிரோடு இ...
Posted: 26 Apr 2015 09:10 AM PDT விஜயகாந்த் கடற்கரையில் படுத்திருந்தார்...... அமெரிக்கன் :are u relaxing? விஜயகாந்த்:no iam vijayakanth மற்றொரு அமெரிக்கன் :are urelaxing? விஜயகாந்த்:no iam vijayakanth இங்கிலாந்துக்காரன்:are u relaxing? விஜயகாந்த்:(சத்தமா)no no no iam vijayakanth... (கோவத்துடன் விஜயகாந்த் அங்கிருந்து கேளம்பிவிட்டார்) கடற்கரையில் படுத்திருந்த ஒரு சர்தாரை பார்த்து விஜயகாந்த் கேட்டார். விஜயகாந்த்:are u relaxing சர்தார்:yes iam relaxing.. (விஜயகாந்த் ஓங்கி ஒரு அரைவிட்டு சொன்னார் ஒன்ன தாண்டா எல்லோரும் தேடுறாங்க....) :P :P Relaxplzz |
Posted: 26 Apr 2015 08:50 AM PDT |
Posted: 26 Apr 2015 08:45 AM PDT விஸ்வரூபத்த தடுக்க 35 அமைப்பு, கத்திய தடுக்க 25 அமைப்பு, 20 பேர Encounterல கொண்ணதுக்கு 4 அமைப்பு கூட வரல!! - sudhanks @ Relaxplzz |
Posted: 26 Apr 2015 08:40 AM PDT |
Posted: 26 Apr 2015 07:50 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 26 Apr 2015 07:18 AM PDT |
Posted: 26 Apr 2015 07:10 AM PDT பிரபாகரன் பற்றிய சுவாரஸ்யமான முக்கிய குறிப்புக்கள், அனைவரும் அறிய பகிரவும்.. ------- அரிகரன் – இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா! வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், 'தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்! ------------------ 1.பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். "போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்" என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, "எடுத்தால் எங்கே வைப்பது" என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க… அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்! 2.பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் – அலெக்ஸ் ஹேவியின் 'ஏழு தலைமுறைகள்'. அதில் 'இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார். 3.மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது! 4."ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?" என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, "யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்." 5."பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை" என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்! 6.அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை! 7.எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. 'தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை! 8.ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்! 9.'இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்! 10.போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், 'பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்! 11.ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்! 12.பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்! 13.பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். "தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்" என்பார்! 14.தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்! 15.பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்! 16.அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்! 17.உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்! 18.பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்! 19.பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்! 20.தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், "நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!" "ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?" என்றுஅடக்க மாகச் சொல்வார்! 21.மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்! 22.'தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர் பிரபாகரன்! - அகல்வன் Relaxplzz |
Posted: 26 Apr 2015 07:10 AM PDT (வெளிநாட்டு வேதனை) நாளைய தேவைகளிற்காக இன்றைய தன் விருப்பங்களை வாழ்க்கைப் பக்கத்தில் வெறும் வெற்றிடங்களாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் பெற்றோரின் பேரன்பிற்கு இவ்வுலகில் ஈடுண்டோ....? காணி நிலம் வேண்டாம் கட்டுக் கட்டாய் காசு பணம் வேண்டாம்..... கட்டில் மேலே கெஞ்சிக் கேட்கும் தூக்கமும் வேண்டாம்.....என் பிள்ளை கண்ணில் ஒரு துளி கண்ணீர் இல்லா வாழ்வு போதுமென்று நினைக்கும் நிகழ்கால ஆதாரங்கள் நம் பெற்றோர்.....! தன் வலி மறைத்து உன் வலியை தீர்க்கும் கைராசி வைத்தியனும் பெற்றோரே...! சிரம்சீவியாய் நீ என்றும் வாழச் சொல்லி..... தலை வாரி தட்டிக் கொடுத்து அனுப்பும் அந்த நாட்கள்..... தொலைவில் போனாலும் இன்னும் தொலையாமல் வருடுகிறது மனதை......! காலங்கள் ஓடி மறைந்தாலும் சில ஞாபகங்கள் இன்னும் மறந்துவிட முடியாமல் தாய் தந்தை நினைவுகொண்டு இன்னும் என்னுள் வாழுதே......! ஒரு கிளையில் பூத்த மலர்கள்.....ஒவ்வொன்றாய் உதிர்ந்து போனோம்.....வேர்கள் அங்கே அழுவது தெரியாமல்......! வாழ்க்கையில் மாற்றம் இப்படி வெளி நாட்டில் மாற்றிப் பார்க்குமென்று எண்ணாமல் தோற்றுப் போனேன்.....ஏமாற்றமுடன்.....! Relaxplzz |
Posted: 26 Apr 2015 05:10 AM PDT தைராய்டை சரிசெய்யும் 15 ஆரோக்கிய உணவுகள்!!! 1) ஸ்ட்ராபெர்ரி : உடலில் போதிய அயோடின் இல்லாவிட்டால், தைராய்டு சுரப்பியினால் எதையும் சரியாக செய்ய முடியாது. எனவே ஸ்ட்ராபெர்ரியை அதிகம் சாப்பிட்டால், தைராய்டில் இருந்து குணமாகலாம். ஏனெனில் அதில் அயோடின் அதிக அளவில் உள்ளது. 2) காளான் : செலினியம் குறைபாடும் தைராய்டு ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம். எனவே செலினியம் அதிகம் உள்ள காளானை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். 3) பூண்டு : செலினியம் அதிகம் உள்ள உணவுகளில் பூண்டும் ஒன்று. இந்த பூண்டு தைராய்டு உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளுக்கும் சிறந்தது. 4) பசலைக் கீரை : பச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின், புரோட்டீன், கனிமங்கள் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. எனவே அவற்றில் ஒன்றான பசலைக் கீரையை அதிகம் சாப்பிட்டால், நல்லது. 5) மாட்டிறைச்சி : மாட்டிறைச்சியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எனவே தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள், கொழுப்பு குறைவாக உள்ள மாட்டிறைச்சியை சாப்பிடுவது சிறந்தது. 6) முட்டை : முட்டை மற்றும் பால் பொருட்கள் தைராய்டு சுரப்பிக்கு மிகவும் ஆரோக்கியமானது. இத்தகைய உணவுகளல் கால்சியம் மட்டுமின்றி, அதிகப்படியான அளவில் இரும்புச்சத்து மற்றும் அயோடின் உள்ளது. 7) தானியங்கள் : தானியங்களில் ப்ரௌன் அரிசி, ஓட்ஸ் மற்றும் பார்லி போன்றவற்றில் வைட்டமின் பி மற்றும் ஊட்டச்சத்துக்கள் பல உள்ளன. இந்த சத்துக்களை அதிகம் சேர்த்தால், அவை உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். இதனால் தைராய்டு சுரப்பி சீராக இயங்கி, உடலுக்குத் தேவையான தைராய்டு ஹார்மோனை சுரக்கும். 8) ப்ராக்கோலி : இந்த காய்கறியை தினமும் சாப்பிட்டால், தைராய்டு சுரப்பியில் ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம். இதனால் தைராய்டு சுரப்பியானது சீராக இயங்கும். 9) மாட்டின் கல்லீரல் : மாட்டிறைச்சி என்றாலே சிலர் அறவெறுப்பாக நினைப்பார்கள். ஆனால் அத்தகைய மாட்டின் ஈரலில் வைட்டமின் பி12 மற்றும் செலினியம் அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், செலினியம் குறைபாடு இருந்தால் குணமாக்கலாம். 10) தக்காளி : தக்காளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. முக்கியமாக இந்த உணவை தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலில் இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு பெரிதும் உதவுகிறது. 11) தேங்காய் எண்ணெய் : தேங்காய் எண்ணெயில் உடலுக்கு தேவையான ஃபேட்டி ஆசிட்கள் உள்ளன. அத்தகைய ஃபேட்டி ஆசிட்கள் தைராய்டு சுரப்பியின் இயக்கத்தை சீராக வைப்பதற்கு உதவுகிறது. 12) கடல் சிப்பி : தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள், காப்பர் அதிகம் உள்ள உணவுகளை நிச்சயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய காப்பர் கடல் சிப்பியில் அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், தைராய்டு சுரப்பி சீராக இயங்குவதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும். 13) உருளைக்கிழங்கு : உருளைக்கிழங்கு அதிகம் சாப்பிட்டால், வாயுத் தொல்லை ஏற்படும் என்று பலர் தவிர்க்கின்றனர். ஆனால் இந்த உருளைக்கிழங்கை சாப்பிட்டால், இதிலுள்ள அயோடின் தைராய்டு சுரப்பியை சீராக இயங்க வைக்கும். 14) கொள்ளு : அன்றாட உணவில் கொள்ளு சேர்த்துக் கொண்டாலே தைராய்டு பிரச்சனை வெகுவாக குறையும். 15) கடல் பாசி தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் கடல் பாசிகளை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவது சிறந்தது. Relaxplzz |
Posted: 26 Apr 2015 04:45 AM PDT வெயில் காலத்துல மார்க்கெட்டிங், சிவில், தள்ளுவண்டி கடைகாரர்கள், கூரியர், ட்ராபிக் போலீஸ் போன்றோர் படும் கஷ்டத்தைவிட நாம் அதிகம்படப்போவதில்லை.. karunaiimalar @ Relaxplzz |
Posted: 26 Apr 2015 04:40 AM PDT |
Posted: 26 Apr 2015 04:30 AM PDT |
Posted: 26 Apr 2015 04:20 AM PDT |
Posted: 26 Apr 2015 04:10 AM PDT முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள் * முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை தடவினால் முடி வளரும் * கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்க்கும். * நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும். * சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது. * செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும். * முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும். * வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பர்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும். Relaxplzz |
Posted: 26 Apr 2015 04:00 AM PDT |
Posted: 26 Apr 2015 03:50 AM PDT |
Posted: 26 Apr 2015 03:45 AM PDT பிள்ளைகளை கூட்டியாந்து பாட,ஆட வைக்கிறேன் னு டிவி ஷோல விடுற பெத்தவங்களை விட ஆடு மாடுகளை வச்சி படம் எடுத்த ராமநாராயணன் சார் உயர்ந்தவர்! - நுண்மதியோன் @ Relaxplzz |
Posted: 26 Apr 2015 03:40 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 26 Apr 2015 03:30 AM PDT |
Posted: 26 Apr 2015 03:20 AM PDT |
Posted: 26 Apr 2015 03:10 AM PDT |
Posted: 26 Apr 2015 03:00 AM PDT கொஞ்சம் சிரிங்க பாஸ்... --- டாக்டர்! எனக்கு பல் ஆடுது! ----எந்த பாட்டுக்கு? *ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்? நோயோடதான்! *தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்! அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா? *டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! நீயும் வந்துவிடு! கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா? *டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய? *என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்! பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்? *படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே? புக்கை மூடிடுவேன்! *காலில் என்ன காயம்? செருப்பு கடித்து விட்டது! பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா? *குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்? தெரியல! குளிக்கும் போதே துவட்ட முடியாதே! *இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..!!? என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது! புட்டு புட்டுதான் சாப்பிடனும்! *டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு! என்னிடம் சுத்தமா இல்ல! பரவாயில்லை! கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்! *இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..? கிடைக்காது! கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்! *சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க? பையன்: பி.எ. சர்தார்: அடப்பாவி! படிச்சதே ரெண்டு எழுத்து! அதையும் தலை கீழா படிச்சிருக்கே! *சேல்ஸ் மேனேஜர்: உங்களுக்கு எதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா? இன்டெர்வியுக்கு சென்றவர்: ஒ! நிறைய! என் வீடு, கார் மற்றும் என்னுடைய மனைவியின் அனைத்து நகைகளுமே விற்றிருக்கிறேன்! *மனைவி: ஏங்க! நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா? அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல! கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா? Relaxplzz |
Posted: 26 Apr 2015 02:50 AM PDT ஒரு குடும்பம் நல்ல குடும்பமாக திகழ சில அவசியமான அறிவுரைகள் : 1. நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே. 2. கணவன்-மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது. 3. குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்தநிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது. 4. வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அது குடும்ப அமைதியை சீர்குலைக்கும். 5. ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது, பெரும்பாலானோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும். சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம். சிலர் குறைவாக சம்பாதிக்கலாம். எப்படி இருந்தாலும் அதை காப்பது, கவர்வது, பிறருக்கு இடுவது ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும். 6. கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிரச்சினைகளுக்கு இடம் தரும். மனதில் ஒளிவு மறைவு வைத்துக்கொண்டிருந்தால் தெய்வீக உறவு இருக்காது. 7. குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம் ஆகியனவற்றையும் கடைப்பிடித்து வரவேண்டும். 8. பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழி வகுக்கும். 9. தனக்கு கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி யாரும் குறை கொள்ளத் தேவையில்லை. அவரவர் அடிமனமே இதை தேர்ந்தெடுத்துக் கொள்ளும். 10. நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி அவசியம்.. இல்லறமே நல்லறம் :) Relaxplzz ![]() குடும்பஸ்தன்_பாடசாலை |
Posted: 26 Apr 2015 02:45 AM PDT என் மனைவி போல என்னை யாராலும் கடுப்பேத்த முடியாது: நடிகர் (இம்ரான் கான்) 'ஓபன் டாக்' #யார் சாமி இவன்...புலம்புறதுல நம்மல மிஞ்சிடுவான் போல.. - விவிகா சுரேஷ் @ Relaxplzz |
Posted: 26 Apr 2015 02:43 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 26 Apr 2015 02:42 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 26 Apr 2015 02:28 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 26 Apr 2015 02:21 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 26 Apr 2015 02:08 AM PDT |
Posted: 26 Apr 2015 02:00 AM PDT அண்ட்ராயுடுகள் வராமல் போயிருந்தால் தென்னை மட்டைகள் இன்னும் சில நாட்கள் உயிரோடு இருந்திருக்கக்கூடும்... ![]() சும்மா... சும்மா... 1 |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment