Friday, 24 April 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


அருமையான ஓவியம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 24 Apr 2015 09:35 AM PDT

அருமையான ஓவியம்..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 24 Apr 2015 09:28 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 24 Apr 2015 09:23 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 24 Apr 2015 09:17 AM PDT

இதுக்கெல்லாம் யாராச்சும் பதில் சொல்லுங்க....? 1. யாரையாவது பிடிக்க போகும் போது...

Posted: 24 Apr 2015 09:10 AM PDT

இதுக்கெல்லாம் யாராச்சும் பதில் சொல்லுங்க....?

1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு போலீஸ் போகிறதே..
அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா....? ;-)

2. டெலிபோன்ல நம்பர்கள் மேலிருந்து கீழ இருக்கு…. கால்குலேட்டர்ல மட்டும் ஏன் கீழிருந்து மேல இருக்கு...? :O

3. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும்
போது No.ன்னு எழுதுறோம்..?
Numberல 'O'ங்கிற எழுத்தே இல்லையே..? :D

4. "அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு" எல்லாரும் சொல்றாங்களே…
நாய் என்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்… இல்லையா...? :P

5. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில்
மூச்சு விட முடியுமா...?
:D :D

Relaxplzz

ஆயிரம் மரம் வைத்த அபூர்வ திம்மக்கா! 'சாலு மரத திம்மக்கா’ என்றால், கர்நாடகாவுக்க...

Posted: 24 Apr 2015 09:00 AM PDT

ஆயிரம் மரம் வைத்த அபூர்வ திம்மக்கா!

'சாலு மரத திம்மக்கா' என்றால், கர்நாடகாவுக்கே தெரியும்! எண்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை பொட்டல் காடாக இருந்த கூதூர் கிராமத்தில்... இன்று சாலை நெடுக இருபுறங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆலமரங்கள் சலசலக்கின்றன. தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கூதூர் வரை நீளும் சுமார் 20 கிலோ மீட்டர் சாலை முழுக்க வரிசையாக (சாலுத) நின்று, ஊருக்கே நிழலாற்றும் அம்மரங்களை நட்டு வளர்த்த திம்மக்கா பாட்டிக்கு இப்போது வயது... 101!

இந்த பசுமைச் சேவைக்காக... சிறந்த தேசியக் குடிமகன் விருது, நான்கு குடியரசுத் தலைவர்களின் கையால் பெற்ற விருதுகள், மூன்று பிரதமர்களிடமிருந்து பெற்ற விருதுகள், பல முதலமைச்சர்கள் அதிசயித்து அளித்த மாநில விருதுகள், தன்னார்வ, பெண் நல நிறுவனங்கள் வழங்கிய விருதுகள், பட்டங்கள் என குவித்திருக்கும் திம்மக்கா பாட்டியின் கூதூர் கிராமம் இருப்பது... செல்போன் சிக்னல்கூட கிடைக்காத, பெங்களூரு ஊரக மாவட்டமான மாகடி தாலுகாவில்!

பயணம் நெடுகிலும் திம்மக்கா பாட்டி வளர்த்திருக்கும் ஆலமரங்கள் தலையசைத்து வரவேற்கின்றன. வாசலில் நம்மைக் கண்டவுடன், முந்தானையில் முடிந்திருந்த கசங்கிய 10 ரூபாய் நோட்டைக் கொடுத்து, டீ வாங்கிவர ஆள் அனுப்புகிறார். உடனடியாகக் குளித்து, விபூதி பூசி, பளிச்சென அணிந்து சிரிக்கிறார்... ஐந்து நிமிடங்களுக்குள்!

''ஏழைக் குடும்பத்துல பிறந்தவ நான். 16 வயசுல, என் எசமான் சிக்கையா கையில புடிச்சுக் கொடுத்துட்டாங்க. பேகூர்ல இருந்து கூதூருக்கு வந்துட்டோம். கல்யாணமாகி 10 வருஷம் ஆகியும், குழந்தை எதுவும் உண்டாகல. ஏறாத கோயில் இல்லை. விரதம் இருந்தே உடம்பு வீணா போச்சு. அக்கம்பக்கம் ஜாடை மாடையா பேசின பேச்சு, உயிரை வதைச்சுது. காலையில இருந்து சாயங்காலம் வரைக்கும் காட்டுல உழைச்சுட்டு வீடு வந்தா, சோறு இறங்காது... நிம்மதியான தூக்கமும் இருக்காது. ஒரு கட்டத்துல தூக்கு மாட்டிக்கலாம்னு நினைக்கற அளவுக்கு மனசு வெறுத்துட்டேன்''

- இதைச் சொல்லும்போது, இந்த 101 வயதிலும் கண்கள் இடுங்குகின்றன.
''வயித்துல சுமந்து வளர்க்கறது மட்டும்தான் உசுரா..? ஆண்டவன் படைப்புல ஆடு, மாடு, மரம், செடினு எல்லாமே உயிருதான்ங்கிற உண்மையை, அப்போ என் மனசு தவிச்ச தவிப்பு மூலமா உணர்ந்தேன்.

'குழி பறிச்சு, கன்று நட்டு, தண்ணிவிட்டு... அந்தச் செடியையே புள்ளையா வளர்ப்போம். ஊர்ல எல்லாரோட புள்ளைகளும் அவுங்கவங்க அப்பன், ஆத்தாவைத்தான் பார்த்துக்குவாங்க. ஆனா, என் புள்ளைங்க வளர்ந்து, இந்த ஆத்தாவுக்கு மட்டுமில்ல... ஊருக்கே நிழல் கொடுக்கும்'னு என் மனசுக்கு ஒரு தெளிவு கிடைச்சுது.

இந்த கூதூர் முழுக்க பொட்டல் காடுதான். வெக்கையா தகிக்கும். ரோட்டோர சுமைதாங்கிக் கல் பக்கத்துல ஒரு ஆலங்கன்று நட்டு வளர்த்தேன். ஆரம்பத்துல, 'இது என்னாடி கிறுக்குத்தனம்?'னு கோபப்பட்டார் என் எசமான். ஆனா... அந்தச் செடி வேர் பிடிச்சு, இலை துளிர்த்து வளர்ந்தப்போ... வயிறு குளிர்ந்து, மனசு குளிர்ந்து நான் அடைஞ்ச சந்தோஷத்தை ரசிச்சவர், அதுக்குப் பிறகு மரம் நடுற வேலைகள்ல எனக்கு உதவிகள் செய்ய ஆரம்பிச்சார்!

காடு, மேடுனு அலைஞ்சி, திரிஞ்சி நிறைய ஆலமரக் கன்றுகளா கொண்டு வந்து, பதியம் போட்டு வளர்த்து, கொஞ்சம் பெருசானதும், ரோட்டோரத்துல குழி தோண்டி நட்டோம். இப்படி ஆலமரக் கன்றுகளா நட்டுட்டே இருந்தோம். மழை வரும்போதே குழிவெட்டி சேமிச்சாதான் தண்ணி. அப்படி சேர்ந்த தண்ணியை கிணத்துல, குளத்துல இருந்து எடுத்துட்டு வந்து நானும் எசமானும் கஷ்டம் பார்க்காம ஊத்தி ஊத்தி வளர்த்தோம்.

ஒரு தடவை குடிக்கக்கூட தண்ணி இல்லாத அளவுக்கு பஞ்சம். பக்கத்து ஊர்ல இருந்து ஆளுக்கு ரெண்டு மண்பானையில தண்ணி எடுத்துட்டு வந்து செடிகளுக்கு ஊத்தினோம். சுடுவெயில்ல தலையில ஒண்ணு, இடுப்புல ஒண்ணுனு ரெண்டு பானையோட வரும்போது, கல் தடுக்கி விழுந்து, முட்டியில ரத்தம். கீழ கிடந்து அழ ஆரம்பிச்சுட்டேன். 'சரியாயிடும்'னு என் எசமான் பதறிக் கட்டுப்போட, 'தண்ணியெல்லாம் கொட்டிப் போச்சேனுதான் அழுவறேன்'னு நான் சொல்ல, கண்கலங்கிட்டார்!''

- நாமும் கலங்கித்தான் போனோம்.

''அப்படி நாங்க அரும்பாடுபட்டு வளர்த்த ஆயிரம் மரங்கள்தான், இன்னிக்கு உயர வளர்ந்து ஒய்யாரமா நிக்குது. இந்தப் பொட்டல் காட்டுக்கு வர்ற சாலையைச் சோலையாக்கித் தந்திருக்கு. தன் காலடியில கிடக்கிற அத்தனை பேருக்கும் நிழல் தருது. ஊரோட வெம்மையைத் தணிச்சு, குளிர்ந்த காத்தைக் கடத்துது. 'மரத்தை வெச்ச மகராசி, நீ நல்லா இருக்கணும்!'னு சனங்க எல்லாம் சொல்லும்போது, நல்ல புள்ளையைப் பெத்த புண்ணியவதி மனசு குளிர்ற மாதிரி, என் மனசும் குளிர்ந்து போகுது!''

- திம்மாக்காவின் வார்த்தைகளை, சுற்றி நின்ற ஊர்க்கூட்டம் நன்றியும், நெகிழ்ச்சியுமாக ஆமோதித்தது !

திம்மக்கா பாட்டியின் கணவர் 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட, இப்போது முதுமையில், தனிமையில் இருக்கிறார் பாட்டி. ஆனால்... சர்க்கரை, ரத்த அழுத்தம் என எந்த நோயும் இல்லை. கண் பார்வை அத்தனை துல்லியம். டெலிபோனில் பேசுமளவுக்கு கேட்கும் ஆற்றல்.

அவருடன் நடந்தால் மூச்சு வாங்குகிறது நமக்கு. அரசாங்கம் வழங்கும் முதியோர் நலத்திட்டத் தொகையான 500 ரூபாயை மட்டுமே ஆதார வருமானம். வாசலில் சாணி தெளிப்பது முதல் சமையல் வரை வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொள்கிறார் இந்த 101 வயதிலும்!

''ஊர்ல இருந்து டவுன் ரொம்ப தூரம்ங்கறதால, அவசர ஆத்திரத்துக்கு மருத்துவ உதவி இல்ல; பிரசவத்துக்குப் போற பொண்ணுங்க ரொம்ப சிரமப்படுறாங்க. எனக்கு பெங்களூருல, கவர்மென்ட் வீடு கொடுத்துருக்கு. ஆனா, அதை நான் பார்த்ததுகூட கிடையாது. அதெல்லாம் எனக்கு தேவையில்ல... எங்க ஊருல ஆஸ்பத்திரி கட்டிக்கொடுத்தா போதும்!'' என்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கும் இந்த 'செஞ்சுரி' பாட்டி... ஓர் ஆச்சர்யக்குறிதான்!'

( நன்றி - விகடன் இதழ் )

Relaxplzz


மகிழ்ச்சி தேடி எங்கும் செல்ல வேண்டாம் நம் மழலைகளிடமே அது நிரம்பி வழிகிறது நாமு...

Posted: 24 Apr 2015 08:50 AM PDT

மகிழ்ச்சி தேடி எங்கும் செல்ல வேண்டாம்
நம் மழலைகளிடமே அது நிரம்பி வழிகிறது
நாமும் அங்கிருந்தே பெற்று மகிழ்வோம்... :)


நின்னைச் சரண் அடைந்தேன் கண்ணம்மா.... இளையராஜா குரலில் கேட்கையில் ஏதோ செய்கிறது....

Posted: 24 Apr 2015 08:45 AM PDT

நின்னைச் சரண் அடைந்தேன் கண்ணம்மா....

இளையராஜா குரலில் கேட்கையில் ஏதோ செய்கிறது. பாவம் பாரதிக்கு கொடுத்து வைக்கவில்லை :)

- தாயுமானவன் @ Relaxplzz

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 24 Apr 2015 08:43 AM PDT

:D https://twitter.com/RelaxplzzTamil

Posted: 24 Apr 2015 08:29 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 24 Apr 2015 08:21 AM PDT

பொறுமை வாழ்க்கைல எவ்ளோ முக்கியம்ங்கறது 2ஜி ல நெட் யூஸ் பண்ணும்போதுதான் புரியும்...

Posted: 24 Apr 2015 08:15 AM PDT

பொறுமை வாழ்க்கைல எவ்ளோ முக்கியம்ங்கறது 2ஜி ல நெட் யூஸ் பண்ணும்போதுதான் புரியும் !!

- Kathirru @ Relaxplzz

தம்பதிகள் வாழ்வில் ஆனந்தமாய் வாழ வேண்டுமா? இதோ வழிகள் திருமணமான தம்பதியர்களின்...

Posted: 24 Apr 2015 08:10 AM PDT

தம்பதிகள் வாழ்வில் ஆனந்தமாய் வாழ வேண்டுமா? இதோ வழிகள்

திருமணமான தம்பதியர்களின் வாழ்வில் ஆரம்பத்தில் இனிமையான நாட்கள் நீடித்தாலும், காலப்போக்கில் அந்த நாட்கள் மெல்ல குறைய ஆரம்பிக்கின்றனர்.

இதற்கு காரணம் ஒருவருக்கொருவர் சரியாக புரிந்துகொள்ளாமையே காரணம். இனிமையான நாட்களுடன் நல்லறமாய், இல்லறம் நடக்க இதோ வழிகள்.

நம்பிக்கை:

கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். ஒருவரை மற்றவர் முழுமையாக நம்ப வேண்டும்.
வருங்காலத்தில் என்ன வெல்லாம் நடக்க போகிறதோஎன்று பயம் கொள்வதைவிட, நிகழ் கால வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவது தான் புத்திசாலித்தனம்.

பாதுகாப்பு:

ஆண்களைவிட பெண்களுக்குத் தான் அதிக பாதுகாப்பு தேவைப்படுகிறது. திருமண வயதையடையும் வரை பெண்களுக்கு பெற்றோரால் பாதுகாப்பு தரப்படுகிறது.
பெண்கள் தங்கள் தாயைக் காட்டிலும் தந்தையே அதிக பாதுகாப்பு தருவதாக எண்ணுகின்றனர். திருமணத்திற்கு பின் பாதுகாப்பிற்காக கணவனை நம்பி வாழ்கின்றனர். இந்த விடயத்தில் முரண்பாடு நிகழும் போதுதான் ஈகோ போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன. விட்டுக் கொடுக்கும் மனபான்மை இல்லாததுதான் இதற்கு காரணம்.
பெண், ஆணைவிட தான் தான் மேலானவள் என்றும், ஆண் பெண்ணை விட தானே எல்லா விதத்திலும் மேலானவன் என்றும் எண்ணுகின்றனர். இருவரும் அவரவர் தனித்தன்மைகளில் மேலானவர் தான்.

மரியாதை:

ஒரு பெண் திருமணத்திற்கு பின் தன் கணவருடைய பெருமை, மரியாதை, கவுரவம் என்று அனைத்து விடயங்களிலும் தனக்கும் பங்குண்டு என்பதைக் காட்ட வேண்டும்.
அதில் தான் பெண்ணுக்கு மரியாதை உள்ளது. அதேபோல், மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவளுடன் இணைந்து ஒற்றுமை குலையாமல் குடும்பத்தை பராமரிப்பதில் தான் கணவனுக்கு மரியாதை உள்ளது. இயல்புக்கு மீறிய நடத்தைகளில் ஈடுபடும்போது அவர்களது மரியாதைக்கு பங்கம் வந்து விடுகிறது.

அன்பு:

வாழ்க்கை பாதையை சீரமைக்கும் ஒரு கருவிதான் அன்பு. வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றும் வல்லமை அன்பிடம் மட்டுமே உள்ளது. இந்த உன்னதமான உணர்வுகள் தான் நம் வாழ்வையே அர்த்தமுள்ளதாக மாற்றக் கூடியவை.
அன்பால் மலரும் உணர்வுகளே குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் என்பதை இருவரும் உணர வேண்டும். `என்னை நல்லபடியாக வைத்துக் கொள்ளும் அன்பு உன்னிடம் இருந்து நிச்சயம் கிடைக்கும்` என்ற எண்ணம் தம்பதிகள் இருவரிடம் வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டும்.

நேர்மை:

நல்ல விடயங்களின் அடிப்படையில் உருவாக்கபடும் கூட்டுத் தொகுப்பே குடும்பம். நமக்கு நேர்மை அவசியம். "என் சிந்தனை உள்பட எனது ஒவ்வொரு வார்த்தையும், செயலும் உண்மை. அதை உன்னோடு பகிர்ந்து கொள்வேன்.
என் நோக்கம், இயல்பான முறையில் நீண்ட நாள் உறவை பேணுவது தான்" என்று இருவரும் எண்ண வேண்டும். நேர்மை இல்லாத குடும்பம் தண்டவாளத்தில் ஓடாத ரெயில் போன்றது. நேர்மைதான் குடும்பத்தின் முதுகெலும்பு.

Relaxplzz

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 24 Apr 2015 08:04 AM PDT

அமெரிக்காவில் நிறுவனங்கள் சலுகைகள் அளிக்க வரும்போது எழும் கூட்ட நெரிசல் மிக அதிக...

Posted: 24 Apr 2015 08:00 AM PDT

அமெரிக்காவில் நிறுவனங்கள் சலுகைகள் அளிக்க வரும்போது எழும் கூட்ட நெரிசல் மிக அதிகம். ( நம் ஊரில் அமெரிக்க தூதரகம், எல்.கே.ஜி அட்மிஷன், ரஜினி பட முதல் நாள் டிக்கெட் நினைவுபடுத்துக).

இந்த மாதிரி தருணங்களில் சிலர் விடியற்காலையே கியுவில் முன்னால் நின்று பின் வேறு ஒருவருக்கு இடம் கொடுத்து காசு பெற்றுக் கொள்வார்.

அமெரிக்காவின் ராபர்ட் சாமுவேல்ஸ் என்பவர் இதில் கில்லாடி. இந்த Professional stander இப்படி பிறருக்காக விடியற்காலை வரிசையில் நின்று ஏராளமான பணம் சம்பாதிக்கிறார்.

முதல் மணி நேரம் $ 25 ம் ( ரூ.1500) அடுத்தடுத்த அரை மணி நேரத்துக்கு $10 ம் (ரூ.650) வசூலிக்கிறார்.

இப்படி இவர் வாரத்துக்கு $1000 ( ரூ.65000) சம்பாதிக்கிறாராம்.

இவர் முன்பு ஏடி & டி நிறுவனத்தில் பணிபுரிந்த போது அலுவலகத்திற்கு தாமதாக சென்றதால் பணி இழந்து போனாராம். சில மாதங்கள் வேலையின்றி கடுமையாக தவித்து பின் இந்த வேலையை செய்யலாம் என்று முடிவெடுத்தாராம்.

- சாத்தப்பன் நா

Relaxplzz


"உலகம் இவ்வளவு தான்"

டிவியில் உங்களுக்கு பிடித்த விளம்பரம் எது ?

Posted: 24 Apr 2015 07:56 AM PDT

டிவியில்
உங்களுக்கு பிடித்த விளம்பரம் எது ?


" பேசுகிறேன்... பேசுகிறேன்.. என் இதயம் பேசுகிறேன்.."

புற்று நோய் சக்கர நாற்காலியில் வீழ்த்தினாலும் மனோதிடத்தால் 3 முறை தேசிய ஆணழகனான...

Posted: 24 Apr 2015 07:50 AM PDT

புற்று நோய் சக்கர நாற்காலியில் வீழ்த்தினாலும் மனோதிடத்தால் 3 முறை தேசிய ஆணழகனான ஆனந்த் அர்னால்ட்...

சல்யூட் (y) (y)


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 24 Apr 2015 07:43 AM PDT

:P https://twitter.com/RelaxplzzTamil

Posted: 24 Apr 2015 07:35 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 24 Apr 2015 07:28 AM PDT

லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் திருக்குறள்....!!! செல்போனில் சூப்பர்போன் ஸ்மார்ட்போன்,...

Posted: 24 Apr 2015 07:10 AM PDT

லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் திருக்குறள்....!!!

செல்போனில் சூப்பர்போன் ஸ்மார்ட்போன், அப்போன்
செல்போனில் எல்லாம் தலை...

தந்தை மகற்காற்றும் நன்றி, சேம்சங்கில்
ஸ்மார்ட்போன் வாங்கித் தரல்...

மகன் தந்தைக்காற்றும் உதவி, அப்பாமுன்
செல்போனை நோண்டாதிருத்தல்...

2G யினால் ஸ்லோவாகும் டேட்டா, ஆகாதே
3G யில் போட்ட டேட்டா...

உடுக்கை இழந்தவன் கைபோல, ஆங்கே
இடுக்கண் களைவதாம் சார்ஜர்...

பட்டனைத் தடவும் மணற்கேணி, மாந்தர்க்கு
டச்ஸ்க்ரீன் தூறும் அறிவு...

முகநக நட்பது நட்பன்று, வாட்ஸப்பில்
அகநக நட்பது நட்பு...

மிஸ்டு கால் செய்தாரை ஒருத்தல், அவர் நாண
கால் செய்து பேசி விடல்...

ரேட் கட்டரோடு வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லாம்
பில் கட்டியே சாவார்...

Relaxplzz

தூங்குனேன் கனவுல எரும்மாடு மேய்கிற மாதிரி இருந்தது, எழுந்துறலாமானு யோசிச்சேன் சர...

Posted: 24 Apr 2015 06:45 AM PDT

தூங்குனேன் கனவுல
எரும்மாடு மேய்கிற
மாதிரி இருந்தது,
எழுந்துறலாமானு யோசிச்சேன் சரி
கனாவுலயாச்சும்
வேலை செய்வோம்னு
தூங்கிட்டேன்...

- Ntr Dhandapani @ Relaxplzz

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:- *அருகம்புல் பொடி :- அதிக உடல் எ...

Posted: 24 Apr 2015 06:10 AM PDT

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-

*அருகம்புல் பொடி :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பொடி :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

*கடுக்காய் பொடி :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பொடி :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பொடி :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பொடி :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பொடி :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பொடி :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பொடி :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பொடி :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பொடி :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பொடி :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பொடி :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பொடி :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பொடி :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பொடி :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பொடி :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பொடி :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பொடி :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பொடி :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பொடி :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பொடி :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பொடி :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பொடி :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பொடி :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பொடி :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பொடி :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பொடி :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பொடி :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

*கோரைகிழங்கு பொடி :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பொடி :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பொடி :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பொடி :- ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பொடி :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பொடி :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பொடி :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பொடி :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பொடி :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பொடி :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பொடி :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பொடி :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பொடி :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பொடி :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பொடி :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பொடி :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பொடி :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பொடி :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பொடி :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பொடி :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பொடி :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பொடி :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பொடி :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பொடி :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

Relaxplzz

<3 நீ விரல் தொட்டு எரிய வைத்த விளக்கு வெட்கப்படுகிறது வெளிச்சம் பரவியதும்... <3...

Posted: 24 Apr 2015 06:02 AM PDT


நீ விரல் தொட்டு
எரிய வைத்த
விளக்கு
வெட்கப்படுகிறது
வெளிச்சம் பரவியதும்...
♥ ♥

~ஆதித்யா


"ரசனை துளிகள்" - 1

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 24 Apr 2015 05:56 AM PDT

பச்சை பட்டனை அழுத்தி 'கால்' மட்டுமே பேசத்தெரிந்தவர்களை பார்க்கும்போது, மீதி பட்ட...

Posted: 24 Apr 2015 05:45 AM PDT

பச்சை பட்டனை அழுத்தி
'கால்' மட்டுமே
பேசத்தெரிந்தவர்களை
பார்க்கும்போது,
மீதி பட்டன்களில் நாம்
வாழ்க்கையை
தொலைத்திருக்கிறோம்
என்பது புரிகிறது!

- சம்பத் குமார் @ Relaxplzz

அவித்த வேர்கடலை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 24 Apr 2015 05:40 AM PDT

அவித்த வேர்கடலை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


தொட்டால்சினுங்கி தொட்டுதான் பாருங்களேன்.... ;-)

Posted: 24 Apr 2015 05:33 AM PDT

தொட்டால்சினுங்கி
தொட்டுதான் பாருங்களேன்.... ;-)


என்னடா நடக்குது இஙக? :O

Posted: 24 Apr 2015 05:27 AM PDT

என்னடா நடக்குது இஙக? :O


போன்ல பேசப்பட்ட டயலாக் மனைவி: உங்க கிட்ட கொஞ்சம் பேசலாமா? கணவன்: இப்ப நான் மீட...

Posted: 24 Apr 2015 05:20 AM PDT

போன்ல பேசப்பட்ட டயலாக்

மனைவி: உங்க கிட்ட கொஞ்சம் பேசலாமா?

கணவன்: இப்ப நான் மீட்டிங்ல இருக்கேன்.

மனைவி: ஒரு குட் ந்யூஸ் ஒரு பேட் ந்யூஸ் சொல்லணும்...

கணவன்:சரி குட் ந்யூஸ் மட்டும் சொல்லு....

மனைவி: நம்ம புதுக் கார்ல ஏர் பேக் நல்லா வேலை செய்யுது....

கணவன்: அப்படீன்னா நம்ம கார்.... ஆக்ஸிடெண்ட்.... :O

மனைவி: ஆமா....

கணவன்: (கடுப்புல) கிழிஞ்சுது போ....

மனைவி: இல்ல.இல்ல... கொஞ்சம் கூடக் கிழியலை...!!!

கணவன்: :O :O

:P :P

Relaxplzz

0 comments:

Post a Comment