Monday, 5 January 2015

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


சோமாலியாவில் கடும் பஞ்சம்: பலி எண்ணிக்கை 2 லட்சத்து 58 ஆயிரம் இதையாவது எல்லாருக...

Posted: 05 Jan 2015 08:04 AM PST

சோமாலியாவில் கடும் பஞ்சம்:
பலி எண்ணிக்கை 2 லட்சத்து 58 ஆயிரம்
இதையாவது எல்லாருக்கும் (Share)
செய்து தெரியப்படுத்துங்கள்
ஒரு நாடே வறுமையில்
தத்தளித்து கொண்டிருக்கிறது.இறப்பு எண்ணிக்கையும்
இலட்சத்தை தாண்டி விட்டது ..ஆனாலும்
இதை பற்றி எந்தவித செய்தியையும்
பத்திரிக்கைகள் வெளியிடுவதும் கிடையாது...
ஒரு வேளை அங்குள்ளவர்களை மக்கள்
என்று நமது பத்தரிக்கைகள் மற்றும் உலக
நாடுகளும் நினைக்கவில்லை போலும்..
ஈதியோப்பாவின் ,சோமாலியாவின்
வறுமை என்பது ஏதோ நிலையான்
ஆட்சி இன்மை மற்றும் ஆயுதங்களால் தான்
என்று நாம் தினம் தினம் பேசுகின்றோம் ஆனால்
நாம் அனைவரும் மறந்த மற்றும் பத்திரிக்கைகள்
மறைத்த செய்தி என்னவென்றால் அங்குள்ள
பசி பஞ்சத்திற்கும் ஆயுத கலாச்சாரத்ரிகும்
அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் தான் காரணம் என்ற உண்மையை..
காரணம் அங்குள்ள இயற்கை வளங்களை கொள்ளையிட அணு ஆயுத கழிவுகளை கொட்ட அவர்களின் கடற்பரப்பை பயன்படுத்த எனஅணைத்து அக்கிரமங்களும் அமெரிக்க மற்றும்
மேற்கத்திய நாடுகளால் நிகழ்த்தப்பட்டு வருவது தான் வேதனை...
நான் உங்களிடமிருந்து ஒரு shareஐ மட்டுமே எதிர்பார்க்கிறேன்
தயவு செய்து ஒருவரையாவது பயன்பெற செய்வோம்.


1. தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..! அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்த...

Posted: 05 Jan 2015 06:03 AM PST

1. தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..!
அவ்வாறு செய்தால் இறைவன்
உங்களை தாழ்த்தி விடுவான்..
2. தந்தையின்
கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்..!
அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்..
3. தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..!
அதனால் உங்கள் பிள்ளைகள்
உங்களுக்கு மரியாதை செய்யக் கூடும்..!
4. தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள்..!
ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும்
நிலமை வரக் கூடாது..?
5.தந்தைக்கு முன்பு பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள்..!
அதனால் இறைவன் மக்கள்
பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியம்
அளிப்பான்..!
6. தந்தையின் வாழ்க்கை; அனுபவங்கள்
நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும்..!
அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டு (பாடமாக)
பயன் அடைந்துக் கொள்ளுங்கள்..!
"தந்தை என்பவர் அனைத்தையும் விட மிக சிறந்த
முறையில் நன்மை செய்யக் கூடியவர், மிக
அழகாக பாதுகாக்க கூடியவர் ஆவார்..!
அவரின் மரணத்திற்கு முன்பே.!
அவருக்கு மரியாதை செய்வோம்.!
அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில்
குறை வைத்து விட வேண்டாம்.

நெஞ்சைத் தொட்ட குட்டிக்கதை.. ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார்...

Posted: 05 Jan 2015 06:03 AM PST

நெஞ்சைத் தொட்ட குட்டிக்கதை..
ஒருவர் எதற்கெடுத்தாலும்
மனைவியுடன்
சண்டைப் போடுவார்..
ஒருநாள் 'ஆபீஸ்' போய்
வேலை செய்து பார்..
சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம்
என்று புரியும் என்று அடிக்கடி சவால்
விடுவார்..
அவள் ஒருநாள் பொறுமை இழந்து,
ஒருநாள் நீங்க வீட்ல
இருந்து பசங்களை பார்த்துக்கோங்க..
காலைல
குளிப்பாட்டி சாப்பிட வச்சு,
வீட்டுப் பாடங்கள்
சொல்லிக்கொடுத்து
சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க..
அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும்
செஞ்சுதான் பாருங்களேன்..
என எதிர் சவால்விட்டாள்..
கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்..
அவன் வீட்டில்
இருக்க..
இவள் ஆபீஸ் போனாள்..
ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ்..
முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல்
கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள்..
வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய்
வருபவர்களை கண்டித்தாள்..
கணக்கு வழக்குகளைப் பார்த்தாள்..
மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட
நினைத்தபோது,
ஓர் அலுவலரின் மகள் திருமண
வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல,
பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண
மண்டபத்திற்கு சென்றாள்..
கணவர் வராததற்கு பொய்யான காரணம்
ஒன்றை சொல்லிவிட்டு,
மணமக்களின்
கட்டாயத்தால் சாப்பிட சென்றாள்..
பந்தியில்
உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம்
வீட்டைப் பற்றியே..
இலையில் வைத்த
'ஜாங்கிரியை' மூத்தவனுக்கு பிடிக்கும்
என்று கைப்பையில் எடுத்து வைத்தாள்..
முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும்
கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்..
அவள் சாப்பிட்டதை விட,
பிள்ளைகளுக்கும்
கணவனுக்கும் என பைக்குள்
பதுக்கியதே அதிகம்..
ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள்,
கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும்
இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள்..
இவளை பார்த்ததும்,
பிள்ளையா பெத்து வச்சிருக்க..?
அத்தனையும்
குரங்குகள்..
சொல்றதை கேட்க மாட்டேங்குது..
படின்னா படிக்க மாட்டேங்குது..
சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது..
அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல
படுக்க வச்சிருக்கேன்..
பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள
கெடுத்து வச்சிருக்கே
என்று பாய..
அவளோ,
அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா...
என்றவாறே
உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள்..
உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய்
பிள்ளைகள்..
விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன்,
'ஏங்க..
இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..?
இவன் எதிர்வீட்டு பையனாச்சே ' என்று அலற..
ஓஹோ ,
அதான் ஓடப் பார்த்தானா..! என கணவன் திகைக்க..
அந்த நிலையில் இருவருக்கும்
ஒன்று புரிந்தது..
இல்லாள் என்றும் ,
மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம்
தொடங்கி நம் மூதாதையர்கள்
சொல்வது சும்மா இல்லை...
இல்லத்தைப் பராமரிப்பதிலும்
பிள்ளைகளுக்கு வளமான
வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும்
ஒரு பெண்ணின் பங்கு தலையாயது..
அதுபோல,
பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும்
அளப்பரியது..
ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில்
இது ஆணுக்கு,
இது பெண்ணுக்கு என்று
குடும்பப் பொறுப்புகளை இனம்பிரிக்க
இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது..
இந்த சூழ்நிலையில்
ஒரு குடும்பம்
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால்
கணவன்மீது மனைவியோ,
மனைவிமீது கணவனோ ஆதிக்கம்
செலுத்தாமல்
அன்பால் சாதிக்கும்
மனநிலையை கொண்டிருந்தால்தான்
எல்லா வளமும்
பெற்று பல்லாண்டு வாழ
முடியும்...
மக்கள் இதை உணர்ந்து வாழவேண்டும்..

வெளிநாடுகளில் புத்தாண்டின்போது சில வினோதமான செயல்களை செய்வர் #கொலம்பியாவில் சரிய...

Posted: 05 Jan 2015 06:03 AM PST

வெளிநாடுகளில் புத்தாண்டின்போது சில வினோதமான செயல்களை செய்வர்
#கொலம்பியாவில் சரியாக 12 மணிக்கு பழய ஆடையை கலைந்து விட்டு புத்தாடை அணிவர். இதற்காகவே வீதி எங்கும் உடைமாற்றும் இடங்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும்.
#போஸ்னியாவில் தெருக்களில் மொத்தமாக தீ மூட்டி கையில் இருக்கும் ரூபாய், நாணயத்தை அதில் போடுவார்கள். மறுநாள் காலையில் சாம்பலில் கிடக்கும் நாணயத்தை எடுத்தால் அதிர்ஷ்டம் கொட்டும் என்பது நம்பிக்கை.
#திருகோணமலைவாசிகள் அன்றிரவு மட்டும் குழந்தைகள் , ஆண்கள் , பெண்கள் அனைவரும் கஞ்சா புகைப்பார். சமீபமாக கஞ்சாவை ஆம்லெட்டில் தூவி சாப்பிடும் பழக்கமும் பரவி வருகிறது. செல்வத்தின் அறிகுறியாக இது கருததப்படுகிறது,
#பட்டாயா நகர விலைமாதுக்கள் அன்றிரவு பணம் வாங்க மாட்டார்கள். அதற்கு பதிலாக வாடிக்கையாளரிடம் இருந்து புது கர்சீஃப் கேட்பார்கள்.
#தமிழ்நாட்டில் இது போன்ற புருடா போஸ்ட்டுகளை வாயை பிளந்து படித்து கொண்டிருப்பார்கள்.. அதுவே வருடம் முழுதும் தொடரும்.

சிங்கம்-ல...!!! ---------------------------- ரெண்டு பேர் காட்டு வழியா நடந்து போய...

Posted: 05 Jan 2015 06:02 AM PST

சிங்கம்-ல...!!!
----------------------------
ரெண்டு பேர் காட்டு வழியா
நடந்து போயிட்டு இருக்காங்க...,
அப்போ 500 மீட்டர் தூரத்தில
ஒரு சிங்கம் நின்னுட்டு இருக்கு..,
இவங்க சிங்கத்தை பார்க்க.,
சிங்கம் இவங்களை பார்க்க..,
ஒரே ஜாலிதான் - சிங்கத்துக்கு..
அப்புறம் என்ன..? Chasing தான்...,
இவங்க ரெண்டு பேரும் ஓடறாங்க..
திடீர்னு ஒருத்தன் மட்டும் உக்கார்ந்து
ஷூ லேசை சரி பண்றான்..
இன்னொருத்தன் கடுப்பாயிட்டான்..
" இதை Correct பண்ணி.., சிங்கத்தை விட
வேகமா ஓடப்போறியா..? "
" எதுக்கு..! உன்னை விட வேகமா ஓடுனா
போதுமே..!!! "
புரிந்தவங்க லைக் பண்ணுங்க..

காரில் பிரேக் பிடிக்காமல் போனால் செய்ய வேண்டியது என்ன? எவ்வளவு திறமை வாய்ந்த டிர...

Posted: 05 Jan 2015 06:02 AM PST

காரில் பிரேக் பிடிக்காமல் போனால் செய்ய வேண்டியது என்ன?
எவ்வளவு திறமை வாய்ந்த டிரைவராக இருந்தாலும் திடீரென பிரேக் பிடிக்காமல் போனால் காரை கன்ட்ரோல் செய்வது மிக கடினமான விஷயமாக இருக்கும். அது போன்ற அவசர சமயத்தில் மிகவும் சமயோஜிதமாக செயல்பட்டால், நிச்சயம் அசம்பாவிதங்களிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியும்.
காரில் செல்லும்போது பிரேக் பிடிக்கவில்லை என்று உணர்ந்தவுடன், முதலில் செய்ய வேண்டியது பதட்டத்தை விரட்டுவதுதான். உடனடியாக ஹெட்லைட்டை ஒளிர விட்டு எதிரே வாகனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டும்.
கியரை படிப்படியாக குறைத்து முதல் கியருக்கு கொண்டு வந்துவிடுங்கள். பின்னர் காரை மெதுவாக சாலையின் இடது புறத்திலேயே செலுத்துவதுடன் முதல் கியருக்கு வந்தவுடன் ஹேண்ட் பிரேக்கை மெதுவாக தூக்கி காரை மெதுவாக நிறுத்த முயற்சியுங்கள். பதட்டத்தில் கார் வேகமாக செல்லும்போது ஹேண்ட் பிரேக்கை பிடித்துவிட வேண்டாம்.
அவ்வாறு செய்தால், ஹேண்ட் பிரேக்கின் கேபிள் அறுந்துவிட வாய்ப்புண்டு. மேலும், காரை நிறுத்துவதற்கு ஒரே ஆயுதமாக இருக்கும் ஹேண்ட் பிரேக்கும் இல்லையென்றால், சூழ்நிலை மோசமானதாகிவிடும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஐம்பது பைசாவுக்கு பழைய சைக்கிள் டையர் வாங்கி ஓட்டும்போது தெரிந்திருக்கவில்லை......

Posted: 05 Jan 2015 06:02 AM PST

ஐம்பது பைசாவுக்கு பழைய சைக்கிள் டையர் வாங்கி ஓட்டும்போது தெரிந்திருக்கவில்லை...
இந்தியா மேட்ச் பார்க்க டீவி இல்லாமல் பக்கத்து வீட்டில் பத்து நண்பர்களுடன் அமர்ந்து ஆரவாரத்துடன் பார்க்கும்போது தெரிந்திருக்கவில்லை...
கையில் காசில்லாமல் ஒரே தட்டில் வாங்கிய உணவை நான்குபேர் உண்டு பசி மறந்த போது தெரிந்திருக்கவில்லை...
பேருந்துக்கு காசில்லாமல் ரெண்டு கிலேமீட்டர் நண்பர்களுடன் கால்வலி தெரியாமல் பேசிக்கொண்டே நடக்கும் போது தெரிந்திருக்கவில்லை...
மகிழ்ச்சி விலை மதிப்பில்லாதது என்று...!!
இப்போது புரிகின்றது...!!

வாழ்வியல் உண்மைகள் - தெரிந்துகொள்வோம் :- 1. எல்லா ஊரும் நம் ஊரே ; எல்லா நாடும் ந...

Posted: 05 Jan 2015 06:01 AM PST

வாழ்வியல் உண்மைகள் - தெரிந்துகொள்வோம் :-
1. எல்லா ஊரும் நம் ஊரே ; எல்லா நாடும் நம் நாடே.
2. அனைவரும் நம் உறவினர்.
3. தீமைக்கும் நன்மைக்கும் நாமே காரணம்.
4. பெரியோர் என யாரையும் வியந்து போற்றாதீர்.
5. சிறியோர் என யாரையும் இகழாதீர்.
6. தன்னலமாய் வாழாதீர்.
7. பிறர் நலம் பேணி வாழ்வீர்.
8. துன்பம் கண்டு துவளாதவரே வெற்றி காண்பார்.
9. உள்ளம் உயர்வானால் வாழ்வும் உயரும்.
10. வெற்றி கண்டு மயங்காதீர்.
11. வாழ்க்கைத் துணை என்றும் ஒருவரே.
12. காற்று, உணவு, மொழி முதலியவற்றில் தூய்மை பேணுவீர்.
13. சுற்றுப்புறத் தூய்மையே நலவாழ்விற்கு அடிப்படை.
14. உண்மை பேசி உள்ளத்தைத் தூய்மை ஆக்குவீர்.
15. அன்பே வாழ்வின் அடிப்படை.
16. அருள் வாழ்வே அறவாழ்வு.
17. நல்லது செய்யாவிட்டாலும் தீயது செய்யாதே.
18. சான்றோன் ஆக்குதல் பெற்றோர் கடமை.
19. நல்லொழுக்கம் தருதல் ஆளுவோர் கடமை.
20. செல்வம் அழியும் ; அறிவு அழியாது.
21. துன்புறுத்துபவர் துன்பம் காண்பார்.
22. செல்வம் பிறருக்கு உதவவே.
23. தானும் பயன்படுத்தாத பிறருக்கும் உதவாத செல்வரை விட ஏழையே
செல்வந்தன்.
24. செய்க பொருளை.
25. அறவழியில் பொருள் ஈட்டுக.
26. பிறரை உயர்த்த நீ உயர்வாய்.
27. பிறர் வாழ நீ வாழ்வாய்.
28. மறதியை மற.
29. விலையை மிகுதியாகப் பெறாமல் பொருளைக் குறைவாகக் கொடுக்காமல்
வாணிகம் செய்க.
30. குறுக்கு வழியில் பணம் தேடாதே.

ஓவராக குடித்து விட்டு இரவு வெகு நேரம் கழித்து வந்த கணவனுக்கு கதவை திறக்க மறுத்தா...

Posted: 05 Jan 2015 06:01 AM PST

ஓவராக குடித்து விட்டு இரவு வெகு நேரம் கழித்து வந்த கணவனுக்கு கதவை திறக்க மறுத்தாள் மனைவி .......
யோசித்தான் கணவன் ...
பத்து நிமிடம் கழித்து வாசல் அழைப்பு மணி அடித்தது ...
" யாரு என்று கேட்டாள் மனைவி "
" உலகின் மிகச் சிறந்த அழகிக்கு புது வருட பரிசு கொண்டு வந்திருக்கிறேன் " என்றான் அவன்.
கதவை திறந்தவள் அவன் வெறும் கையுடன் இருப்பதை பார்த்து " எங்கே புது வருட பரிசு "? என்று கேட்டாள் .
அவன் " எங்கே அந்த உலகின் மிகச் சிறந்த அழகி"? என்று கேட்டான்.
அப்புறம்....
ஸ்டார்ட் மீஜிக் .....

தெரிந்து கொள்ளுங்கள்... 1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது" 2....

Posted: 05 Jan 2015 06:01 AM PST

தெரிந்து கொள்ளுங்கள்...
1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"
2. உடலின் மிக வலிமையான சதைப்பகுதி "நாக்கு"
3. ஆங்கில கீபோர்டில் ஒரேவரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படும் ஒரு சொல் "TYPEWRITER"
4. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும்
நீண்ட வார்த்தை 'Stewardesses"
5. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் ஜீவராசி - "கொசு"
6. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"
7. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111) பெருக்கினால்
12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.
8. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"
9. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற்கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்பட்டது.
10. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"
11. உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்' நிற்குதாம்.
12. பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.

பாஸ் 2015 ல .....நம்ம என்ன பண்ண போறோம்.. . இந்த வருஷம் ..என்ன பண்ணுனோம்.. . சும்...

Posted: 05 Jan 2015 06:01 AM PST

பாஸ் 2015 ல .....நம்ம என்ன பண்ண போறோம்..
.
இந்த வருஷம் ..என்ன பண்ணுனோம்..
.
சும்மாதான் இருந்தோம்..
.
அடுத்த ...வருஷமும் அதேதான்.....

காலண்டரில் கண்ட முத்துக்கள் ******************************************* திங்கள்-...

Posted: 05 Jan 2015 06:00 AM PST

காலண்டரில் கண்ட முத்துக்கள்
*******************************************
திங்கள்- எழுதுவது அருமை. எழுதுவதை பலதடவை வாசிப்பது அதைவிட அருமை.
செவ்வாய்- திருவிளக்கு இட்டாரை தெய்வம் அறியும்.நெய் ஊற்றி உண்டாரை நெஞ்சு அறியும்.
புதன்- கடுமையாக உழைப்பதைத் தவிர வெற்றிக்கு வேறு வழியே இல்லை.
வியாழன்- எல்லோரும் பல்லக்கில் ஏறினால், பல்லக்கை யார்தான் தூக்குவது?
வெள்ளி- நல்ல அறிவு எந்த மூலையில், எவ்வளவு தூரத்திலிருந்தாலும் அதனைச் தேடிச் செல்.
சனி- நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதென்பது எளிது. ஆனால்,
உயிரைக் கொடுப்பதற்குரிய நண்பன் கிடைப்பதுதான் அரிது.
ஞாயிறு- காலத்தின் மதிப்பு உனக்குத் தெரியுமா?…அப்படியானால் வாழ்வின் மதிப்பு உனக்குத் தெரியும்.

முதலாளி வேலைக்காரனிடம் ஒரு கண்ணாடி வாங்கிவரசொன்னார். "கண்ல போடுற கண்ணாடியா.."னு...

Posted: 05 Jan 2015 06:00 AM PST

முதலாளி வேலைக்காரனிடம் ஒரு கண்ணாடி வாங்கிவரசொன்னார்.
"கண்ல போடுற கண்ணாடியா.."னு கேட்டதும் முதலாளி கோபத்தில்...
"யோவ்... ஷேவ் பண்றதுக்குய்யா... என் முகம் தெரியுறமாதிரி ஒண்ணு வாங்கிவா..." என்று அனுப்பிவைத்தார். வேலைக்காரன் திரும்பிவரவேயில்லை. நீண்டநேரத்திற்கு பின் மூச்சுவாங்க வெறுங்கையோடு வந்த வேலைக்காரனிடம் ஏன் கண்ணாடி வாங்கலன்னு கேட்டார் முதலாளி.
"பஜார் முழுக்க அலைஞ்சேன் முதலாளி.. ஆனாலும் நீங்க கேட்டமாதிரி கண்ணாடி கிடைக்கல. அதுதான் வாங்கல'
" ஏன்.. பெருசாவா இருந்துது..?"
"இல்ல... சின்னதாத்தான் இருந்துது.."
"பிறகு ஏன் வாங்கல..?"
*
*
*
*
*
*
*
*
*
*
" எல்லா கண்ணாடியிலும் என் முகம்தான் தெரிஞ்சுது. அதுதான் வாங்கல..."

நீங்கள் வாழை மரமா? சவுக்கு மரமா? - வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ் வானொலி: நியாயம...

Posted: 05 Jan 2015 06:00 AM PST

நீங்கள் வாழை மரமா? சவுக்கு மரமா?
- வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்
வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?
நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார்.
ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.
கட்டடம் முடிந்து கிரஹப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.
அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும்.
இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும்.
மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!
இந்த ஆங்கில புத்தாண்டில் இருந்து நீங்கள் அனைவரும் ஒரு உறுதி மொழி எடுத்து கொள்ளுங்கள். உங்களை பற்றி யார் என்ன? பேசினாலும் நீங்கள் கண்டு கொள்ளாதீர்கள். உங்களை ஊக்கப்படுத்தும் விதமாக யாராவது புகழ்ந்து பேசினால் அதை இந்‌பாக்ஸ்சில் வெய்யுங்கள், உங்கள் மீது அக்கரை கொண்ட யாரேனும் ஒருவர். உங்களிடம் உள்ள குறைகளை எடுத்து சொன்னால். அந்த குறைகளை எடிட் செய்யுங்கள், உங்களை மட்டம் தட்டும் விதமாக, அவமானப்படுத்தும் விதமாக யாரேனும் பேசினால் அதை டெலீட் செய்து விடுங்கள். நாம் வாழ்வில் எத்தனையோ பேரை பார்க்கிறோம், பழகுகிறோம், பேசுகிறோம். நம்மை பற்றி ஒவ்வொருவரின் கோணமும், பார்வையும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அவை அனைத்திற்கும் நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க முடியாது. உங்களை பற்றிய உங்கள் மன அபிப்ராயம் என்னவோ அதில் உறுதியாக இருங்கள். நம்மை பற்றிய நமது அபிப்ராயம் நேர்மறையாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு நம்மிடம் உள்ள திறமை என்ன?, சக்தி என்ன?, புத்தி என்ன? நமது ஆற்றல் என்ன? நம்மால் எது செய்ய முடியும், முடியாது என்று உங்களை பற்றி நீங்களே சுய அலசல், பரிசோதனை செய்து கொள்ளுதல் வாழ்வில் மிக அவசியம்.
ஒரு குடம் பாலில் ஒரு சொட்டு விஷம் கலந்தாலும் ஆபத்து தான். அதை போல் தான் எதிர்மறை எண்ணங்களும். பால் குடித்தால் உடலுக்கு நல்லது. ஆனால் ஒரு குடம் பாலை ஒரு ஆள் குடித்தால்? குடிக்க முடியாது. ஆனால், குடித்தால் என்ன ஆகும்? அதே போல் அளவுக்கு மீறிய அசட்டு தனமான தன்னம்பிக்கையும் ஆபத்தானதே. உங்கள் வாழ்க்கை பாதை இது தான் என சரியாக திட்டமிடுங்கள், அதன் படி செயல்படுங்கள்.
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இதை வாசிப்பவர்கள் பாக்கியசாலிகள் *************** *************** * *** * * * * *...

Posted: 05 Jan 2015 06:00 AM PST

இதை வாசிப்பவர்கள் பாக்கியசாலிகள்
*************** ***************
* ***
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
இதை பார்த்த பின் like and share
போடாமல்
அப்படியே திரும்பி சென்ற
காரமடை கண்ணப்பன் கால்
வழுக்கி கால்வாயில் விழுந்தார்..
இதை like and share செய்த
நந்தம்பாக்கம்
நந்தகுமாருக்கு நச்சென்ற
நாலு பிகர் Friend
request கொடுத்துள்ளது..
அது அத்தனையும்
ஒரிஜினல் ID
என்பது குறிப்பிடத்தக்கது.
எனக்கு கரு நாக்கு அப்படியே பலிக்கும்.
பிறகு உங்க இஷ்டம்.
இதுக்கு மேல் நான்
சொல்ல ஒன்றுமில்லை
[ முக்கிய குறிப்பு - நக்கலாக
கருத்து சொல்பவர்கள் நாய்
கடி வாங்குவார்கள்..
மறுத்து பேசுபவர்களுக்கு
மண்டையில் இடி விழும்..
குதர்கமாக பேசுபவர்களுக்கு
குப்பை லாரியில்
அடிபடும்
என்று தெரிவித்து கொள்கிறேன் ]
இப்படி ஏதாவது மத ரீதியிலான போஸ்ட் போட்டா உடனே லைக் போடுவோம்ல, அது உண்மைனா இதுவும் உண்மைதான்..

மூங்கில் மரங்கள் அதிகமான சுவாசக்காற்றைத்தருகின்றன.... ஒரு மூங்கில் தனது வாழ்நாளி...

Posted: 05 Jan 2015 06:00 AM PST

மூங்கில் மரங்கள் அதிகமான சுவாசக்காற்றைத்தருகின்றன....
ஒரு மூங்கில் தனது வாழ்நாளில் 450 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி ஆக்சிஜனை வெளியிடுகிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு தேவைப்படுவது 800 கிராம் எனக் கணக்கிட்டுள்ளது.
ஒரு மூங்கில் குத்து ஓர் ஆண்டில் 309 கிலோ உயிர்க் காற்றைத் தருகிறது. அதாவது நாள் ஒன்றுக்கு 850 கிராம் ஆக்சிஜனை வெளியிடுகிறது அதனால் மூங்கில் மரம் வளர்த்தால் அதிகமான ஆக்ஸிஜன் பெறலாம்...

"நீதி கதை" ஒரு விவசாயி குதிரையையும், ஆட்டையும் வளர்த்து வந்தான். குதிரையும் ஆடும...

Posted: 05 Jan 2015 05:59 AM PST

"நீதி கதை"
ஒரு விவசாயி குதிரையையும், ஆட்டையும் வளர்த்து வந்தான். குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்கள். ஒரு நாள் அந்த குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது. அதனால் அந்த விவசாயி குதிரைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து வந்தான். மருத்துவர் அந்த குதிரையின் நிலையை பார்த்து, நான் மூன்று நாட்கள் வந்து மருந்து தருகிறேன். அந்த மருந்தை சாப்பிட்டு குதிரை எழுந்து நடந்தால் சரி, இல்லையெனில் அதனை கொன்றுவிட வேண்டியது தான் என்று சொல்லி, அன்றைய மருந்தைக் கொடுத்துச் சென்றார்.
இவர்களது உரையாடலை அந்த ஆடு கேட்டுக் கொண்டிருந்தது. மறுநாள், அந்த மருத்துவர் வந்து அன்றைய மருந்தைக் கொடுத்து சென்றார். பின் அங்கிருந்த ஆடு, அந்த குதிரையிடம் வந்து, "எழுந்து நட நண்பா, இல்லாவிட்டால் அவர்கள் உன்னை கொன்று விடுவார்கள்" என்று அந்த குதிரையை ஊக்குவித்தது.
மூன்றாம் நாளும் வந்துவிட்டது, மருத்துவரும் வந்து குதிரைக்கு மருந்து கொடுத்துவிட்டு, அந்த விவசாயிடம் "நாளை குதிரை நடக்கவில்லையெனில், அதனை கொன்றுவிட வேண்டும். இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி, மற்றவர்களுக்கு பரவிவிடும்." என்று சொல்லிச் சென்றார்.
அந்த மருத்துவர் போனதும், ஆடு குதிரையிடம் வந்து, நண்பா! எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய். உன்னால் முடியும், எழுந்திரு! எழுந்திரு! என்று சொல்லியது. அந்த குதிரையும் முயற்சி செய்து எழுந்து நடந்துவிட்டது.
எதிர்பாராதவிதமாக அந்த குதிரையை விவசாயி பார்க்க வரும் போது, குதிரை ஓடியதைப் பார்த்து சந்தோஷமடைந்து, மருத்துவரை அழைத்து அவரிடம் "என்ன ஒரு ஆச்சரியம். என் குதிரை குணமடைந்துவிட்டது. இதற்கு நிச்சயம் உங்களுக்கு ஒரு விருந்து வைக்க வேண்டும். சரி, இந்த ஆட்டை வெட்டுவோமா!!!" என்று சொன்னார்"
"பார்த்தீர்களா! இந்த கதையில் உண்மையில் குதிரை குணமடைந்ததற்கு அந்த ஆடு தான் காரணம். ஆனால், மருத்துவரின் மருந்தால் தான் குதிரை குணமடைந்தது என்று எண்ணி, கடைசியில் அந்த ஆட்டையே பலி கொடுக்க நினைக்கிறார்கள்.
நீதி:- இந்த உலகில் யாரால் நன்மை கிடைத்ததோ, அவர்களை விட, அந்த நன்மைக்குத் துணையாக இருப்பவர்களுக்குத் தான் சோதனை அதிகம். இவ்வாறாக, தன்னை இழந்து மற்றவர்களை வாழ வைக்கும் தியாகச் செம்மல்கள் உள்ளவரை இந்தப் பூமியிலுள்ள உயிர்களனைத்தும் வாழும். சிறிய மண்புழு இல்லாவிடில் விவசாய நிலங்கள் வளமாகா. நிலங்கள் வளமாகாவிட்டால் நமக்குத் தரமான உணவில்லை. உயிரினங்கள் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புபட்டு, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒன்றிலொன்று தங்கியுள்ளன. ஆதலால், அனைவற்றிற்கும் நன்றியுடன் இருப்போம். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. நன்றி.

நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள் 1) ஏழ்மையிலும் நேர்மை 2) கோபத்திலும் பொறுமை 3) தோ...

Posted: 05 Jan 2015 05:59 AM PST

நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்
1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செலவத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு
வழிகாட்டும் ஏழு விஷயங்கள்
1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்
நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்
1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்ச்சி மேற்கொள்ளுங்கள்
கவனிக்க ஏழு விஷயங்கள்
1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை

பேச்சு சில உளவியல் ஆலோசனைகள்!! * மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்...

Posted: 05 Jan 2015 05:59 AM PST

பேச்சு சில உளவியல் ஆலோசனைகள்!!
* மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்.
* மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்.
* மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள்.
* நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும்.
* நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும்.
* பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்.
* நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்.
* நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்.
* குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும்.
* உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.. !!

காதலிக்க ஒரு ஆணுக்கு முக்கியமாக இருக்கவேண்டிய தகுதிகள் :- - ► நிச்சயமா நல்லவனா ந...

Posted: 05 Jan 2015 05:59 AM PST

காதலிக்க ஒரு ஆணுக்கு முக்கியமாக இருக்கவேண்டிய தகுதிகள் :-
- ► நிச்சயமா நல்லவனா நடிக்க தெரியணும்
- ► நிறைய பொய் சொல்லணும்
- ► நண்பர்களுடன் இருக்கும் நேரத்தை இழக்க தயாரா
இருக்கணும்
- ► நிறைய மொக்கை ஜோக்ஸ் தெரியணும்
- ► பொண்ணுங்க போடுற மொக்கைய தாங்கிக்கிற நல்ல மனசு வேணும்
- ► பொண்ணுங்க என்னதான் தப்பு பண்ணினாலும் கண்டுக்காத நல்ல மனசும் அவசியம்
- ► காதலிக்கும் பொண்ணுக்கு பிடிச்ச கலர் ..நடிகர் ..நடிகை .. பாட்டுஎல்லாவற்றையும் உங்களுக்கும் பிடிக்கிறது போல மனச மாத்திக்கணும்
- ► நைட்டில கண் முழிக்க தயாரா இருக்கணும் ..
- ► மொபைல்க்கு பில் கட்ட /ரீச்சார்ச் பண்ண லம்பா ஒரு அமவுண்ட்ரெடி பண்ணனும் ...
அடி வாங்கும் உடல் திறன் மிக அவசியம்
(அவளுக்கு அண்ணன் இருந்தா /அப்பா ரவுடியா இருந்தா )
- ► இத்தனையும் நாம பண்ண அவங்க லாஸ்ட்ல டாட்டா காட்டிட்டு இன்னொரு பையனை கலியாணம் பண்ணி போகும் போது
"எங்கிருந்தாலும ் வாழ்க " பாட்டு கண்டிப்பா பாடனும் ...
அந்த மனசுதான் வெரி இம்போர்டேன்ட் ...
- ► நிச்சயமா ஒரு டைலாக் மனப்பாடம் பண்ணனும் .......
- ► "திரிஷா இல்லன்னா திவ்யா..

இன்பத்தை INBOX இல் வை...........! கவலையை OUTBOX இல் வை...........! புன்னகையை SEN...

Posted: 05 Jan 2015 05:59 AM PST

இன்பத்தை INBOX இல் வை...........!
கவலையை OUTBOX இல் வை...........!
புன்னகையை SENT பண்ணு...............!
கோபத்தை DELETE பண்ணு..................!
மனதை VIBRATE செய்து பார்...................!
வாழ்கை தானாக RING TONE ஆக மாறும்.............!

படியுங்கள் : அம்மா/மனைவி யிடம் சொல்லுங்கள் : பின்பற்றுங்கள்: ஆரோக்கியமான வாழ்க்க...

Posted: 05 Jan 2015 05:58 AM PST

படியுங்கள் : அம்மா/மனைவி யிடம் சொல்லுங்கள் : பின்பற்றுங்கள்:
ஆரோக்கியமான வாழ்க்கையை கையாளுங்கள் :
*சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால்
கையில் சிறிதளவு உப்பைத்
தடவிக் கொண்டால் கையில்
சப்பாத்தி மாவு ஒட்டாது.
*உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில்
பாத்திரங்களை கழுவினால்
பாத்திரங்கள் பளபளப்பாக
இருக்கும்.
*அரிசி மற்றும் காய்கறிகள்
கழுவிய தண்ணீரை வீணாக்காமல்
செடிகளுக்கு ஊற்றினால்
செடிகள் செழிப்பாக இருக்கும்.
*வெயில் காலத்தில் பெருங்காயம்
கட்டியாகி விடும்.
அப்படி ஆகாமலிருக்க
பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல்
பெருங்காய டப்பாவில் போட்டால்
பஞ்சு போல் மிருதுவாக
இருக்கும்.
*ரவா,மைதா உள்ள டப்பாவில்
பூச்சி, புழுக்கள் வராமல்
இருப்பதற்கு கொஞ்சம்
வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி,
புழுக்கள் வராது.
தயிர் நீண்ட நேரம் புளிக்காமல்
இருக்க இஞ்சியின்
தோலை சீவி விட்டு கொஞ்சம்
தட்டி தயிரில் போட்டால்
புளிக்கவே புளிக்காது.
*காய்கறிகளை வேகவைக்கும்போது
அதிக தண்ணீர் வைத்து வேக
வைக்க கூடாது. ஏன் என்றால்
காய்கறிகளில் உள்ள வைட்டமின்
சத்துகள் போய்விடும். அதில்
உள்ள மனமும் போய்விடும்.
காய்ந்த
மிளகாயை வறுக்கும்போது நெடி வரும்.
அவை வராமல்
இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால்
நெடி வராது.
*பச்சை மிளகாயை காம்புடன்
வைக்காமல்
காம்பை எடுத்து விட்டு நிழலான
இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.
*நெய் ப்ரெஷ்ஷாக
இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால்
ப்ரெஷ்ஷாக இருக்கும்.
*காபி டிகாஷன்
போடுவதற்கு முன்
சுடு தண்ணீரில் டிகாஷன்
பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன்
போட்டால் சீக்கிரம் காப்பித்தூள்
இறங்கிவிடும்.
*சீடை செய்யும்போது அது வெடிக்காமல்
இருப்பதற்காக சீடையை ஊசியால்
குத்திய பிறகு எண்ணெய்யில்
போட்டால் வெடிக்காது.
*சப்பாத்தி போடும்போது சப்பாத்தி போடும்
கட்டையில் முதலில்
உருண்டையாக
போட்டுவிட்டு பின்பு அதனை நாலாக
மடித்து உருட்டி போட்டால்
சப்பாத்தி மிருதுவாக
இருக்கும்.
*முட்டைகோசில் உள்ள
தண்டை வீணாக்காமல் சாம்பாரில்
போட்டு சாப்பிட்டால் மிகவும்
சுவையாக இருக்கும்.
கொழுக்கட்டை மாவு பிசையும்
போது ஒரு கரண்டி பால்
சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால்
விரிந்து போகாமல் இருக்கும்.
*எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில்
வைக்கும்போது உப்பைத்
துணியில் முடிந்து வைத்தால்
காரல் வாடை வராது.
இட்லி சாம்பாரில் கடைசியாக
மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய்,
கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில்
போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில்
அரைத்து சாம்பாரில் போட்டால்
கூடுதல் சுவையாக இருக்கும்.
*சமையலில் உப்பு அதிகமாக
போய்விட்டால்
உருளைகிழங்கை அதில்
அறிந்து போட்டால்
உப்பை எடுத்துவிடும்.
*தோசை சுடும்போது தோசைக்கல்லில்
மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல்
இருந்தால் அதற்கு கொஞ்சம்
புளியை ஒரு வெள்ளைத்துணியில்
கட்டி, அதை எண்ணெய்யில்
தொட்டு கல்லில்
தேய்த்துவிட்டு தோசை சுட்டால்
நன்றாக வரும்.

உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது...? *குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்...

Posted: 05 Jan 2015 05:58 AM PST

உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது...?
*குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது...
*அடக்கி வளர்க்கபடும் குழந்தை சண்டையிடக் கற்றுக்கொள்கிறது...
*கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது...
*அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது...
*ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது. சின்ன விசயத்துக்கும் கைகொடுத்து பாராட்டுங்க...
*புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக் கொள்கிறது...
*நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது...
*பாதுகாக்கபடும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது...
*நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது...
4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும்.
தினமும் அரைமணி நேரம் தந்தை ,நண்பனை போல உரையாடுங்கள்...!

பொதுஅறிவு நம் மொபைல் போனில் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க எண்கள்! 1.அவசர உதவி...

Posted: 05 Jan 2015 05:58 AM PST

பொதுஅறிவு
நம் மொபைல் போனில் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க எண்கள்!
1.அவசர உதவி அனைத்திற்கும்————–911
2.வங்கித் திருட்டு உதவிக்கு ——————9840814100
3.மனிதஉரிமைகள் ஆணையம் ————–044-22410377
4.மாநகரபேருந்தில அத்துமீறல்————–09383337639
5.போலீஸ் SMS :- ———————————-9500099100
6.போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :——9840983832
7.போக்குவரத்து விதிமீறல் SMS : ————-98400 00103
8.போலீஸ் : —————————————–100
9.தீயணைப்புத்துறை :—————————-101
10.போக்குவரத்து விதிமீறல——————–103
11.விபத்து :——————————————–100, 103
12.ஆம்புலன்ஸ் : ———————————–102, 108
13.பெண்களுக்கான அவசர உதவி : ———–1091
14.குழந்தைகளுக்கான அவசர உதவி :——–1098
15.அவசர காலம் மற்றும் விபத்து : ————1099
16.முதியோர்களுக்கான அவசர உதவி:——1253
17.தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி:1033
18.கடலோர பகுதி அவசர உதவி : ————-1093
19.ரத்த வங்கி அவசர உதவி : ——————-1910
20.கண் வங்கி அவசர உதவி : ——————-1919
21.விலங்குகள் பாதுகாப்பு ————————044 -22354959/22300666
22.நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.. நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும்.இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.

டாக்டர்! தெனமும் எனக்கு விநோதமான கனவெல்லாம் வருது. நீங்கதான் எனக்கு உதவணும்" "என...

Posted: 05 Jan 2015 05:57 AM PST

டாக்டர்! தெனமும் எனக்கு விநோதமான கனவெல்லாம் வருது. நீங்கதான் எனக்கு உதவணும்"
"என்ன மாதிரியான கனவு ?"
"தெனமும் கழுதைகளோட நான் கால்பந்து விளையாடுறதா கனவு வருது"
"தினமுமா?"
"ஆமாம். ஆனா ஒவ்வொரு நாளும் வேற வேற கழுதை குழுவோட வெளையாடுறேன். சில சமயம் நான் ஜெயிக்கிறேன். சில சமயங்கள்ல அதுங்க ஜெயிக்குதுங்க."
டாக்டர் ஒரு பாட்டில் நிறைய மாத்திரைகளை அவரிடம் கொடுத்து,
"நாலு மணி நேரத்துக்கொருமுறை மூணு மாத்திரை வீதம் சாப்பிடுங்க. இம்மாதிரியான கனவுலேர்ந்து முற்றிலுமா உங்களுக்கு விடுதலை கிடைக்கும்" என்றார்.
"சரி டாக்டர்! நாளையிலேர்ந்து இந்த மாத்திரைகளை எடுத்துக்கறேன்"
"ஏன் நாளையிலேர்ந்து? இன்னிக்கு என்னாச்சு?"
"அது வந்து டாக்டர், இன்னிக்கு ராத்திரி 'பைனல்ஸ்' இருக்கு"

பாவம் பாய்ஸ்! (உண்மையாவேங்க) பெண்களுக்கான நகைகள் அட்டவணை. நெத்திச்சுட்டி, ஜடை வி...

Posted: 05 Jan 2015 05:57 AM PST

பாவம் பாய்ஸ்! (உண்மையாவேங்க)
பெண்களுக்கான
நகைகள் அட்டவணை.
நெத்திச்சுட்டி,
ஜடை வில்லை,
நிலா பிறை,
ஜடை பூ,
கொண்டை பில்லை,
மூக்குத்தி,
புல்லாக்கு,
காதுக்கு மட்டும்,
தொங்கல்,
ஜிமிக்கி,
மாட்டல்,
காது சுத்து மாட்டல்,
தோடு.
முகத்துக்கு கீழே
சார்ட் நெக்லஸ்,
லாங் நெக்லஸ்,
அட்டிகை,
ஆரம்,
நெக் பீஸ்,
காசு மாலை,
மாங்கா மாலை,
முல்லைப் பூ மாலை,
டாலர் செயின்,
சாதா வளையல்,
ஓப்பன் டைப் வளையல்,
மோதிரம் (ஏகப்பட்ட வகை)
சாதா ஒட்டியாணம்,
நகாசு ஒட்டியாணம்,
கல் வைத்த ஒட்டியாணம்,
கொலுசு,
மெட்டி,
தாலி,
பிரேஸ்லெட்.
அதெல்லாம் ரைட்டு.
ஆம்பளைங்களுக்கு ­ என்னனு
கேட்குறீங்களா?
செயின்,
பிரேஸ்லெட்,
மோதிரம்,
காது கடுக்கன்(இது கொஞ்சம் பேரு தான் உபயோகப் படுத்துறாங்க).
நன்றி டைம்பாஸ்.

ஒரு பள்ளிக்கூட வாசலில் பலூன்காரர் ஒருவர் பலூன்களை விற்றுக் கொண்டிருந்தார். அவை ம...

Posted: 05 Jan 2015 05:57 AM PST

ஒரு பள்ளிக்கூட வாசலில் பலூன்காரர் ஒருவர் பலூன்களை விற்றுக் கொண்டிருந்தார்.
அவை மேலே பறக்கும் பலூன்கள்.
அவர் பலூன்களில் காற்றடைத்து விற்பதை ஒரு சிறுமி கவனித்துக் கொண்டிருந்தாள்.
மெல்ல பலூன்காரரிடம் வந்தாள்.
''இந்த பலூன்கள் எல்லாமே மேலே பறக்குமா?'' என்று கேட்டாள்.
''ஓ… பறக்குமே. என்ன விஷயம்?''
''பலூன் எந்த கலர்ல இருந்தாலும் பறக்குமா?'' என்று மீண்டும் கேட்டாள் அந்தச் சிறுமி.
சிறுமி ஏன் இப்படிக் கேட்கிறாள் என்று பலூன்காரருக்கு புரியவில்லை.
''ஏம்மா கேக்குற?''
''இல்ல, பலூன் கறுப்பு கலர்ல இருந்தாகூட பறக்குமா?''
பலூன்காரருக்கு இப்போது விஷயம் புரிந்தது. அந்தச் சிறுமியின் நிறம் கறுப்பு.
''பலூன் மேல போறதுக்குக் காரணம் அதோட கலர் இல்லம்மா. உள்ள இருக்கிற வாயுதான். என்ன கலர்னாலும் உள்ள இருக்கிறது சரியா இருந்தா, யார் வேண்டுமானாலும் உயரலாம்'' என்றார்.
நீதி: வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது.

என் தெய்வம் !!! முழுகாமல் இருப்பதை முதன்முதலில் அறிகையில் முகமலர்ந்து நின்றவள் !...

Posted: 05 Jan 2015 05:57 AM PST

என் தெய்வம் !!!
முழுகாமல் இருப்பதை முதன்முதலில் அறிகையில் முகமலர்ந்து நின்றவள் !
இரவுகளின் மடியில் எண்ணற்ற நாட்கள் என்னுருவம் தேடியவள் !
கனவுகளின் வழியே காவல் காக்கும் கடமைச் செய்தவள் !
காணாமல் எனைக் காதலித்தவள் கர்ப்பத்திலேயே எனக்கு பெயர் வைத்தவள் !
என் தந்தையின் ஒருதுளி விந்தில் வந்துதித்த என்னை விரயப்படுத்தாமல் கரை சேர்க்க மேகம் பொழியும் தண்ணீரை விடவும் கண்ணீர் அதிகம் சிந்தியவள் நான் நோயுற்றுபோது மருத்துவச்சி ஆனவள் !!
காவல்துறைப் பணியை கையிலெடுத்து என் காணாமல் போன பொம்மையைக் கண்டுபிடித்துத் தந்தவள் !!
மரங்களுக்கும் குளிரும் மார்கழிக் குளிரில் முந்தானைத் தளர்த்தி என் முழுவுடலும் போர்த்தி கதகதப்புத் தந்தவள் !!
பிஞ்சுவிரல் பார்த்து பஞ்சுவிரல் என்று நெஞ்சுக் கூத்தாடி கொஞ்சி மகிழ்ந்தவள் !!
கண்களில் விளக்கேற்றி கைகளை விசிறியாக்கி கண்தூங்க வைத்தவள் !!
மழைபோல் அழுகையில் மடியில் விழுகையில் மார்போடு அனைத்து மகிழ்ச்சி அளித்தவள் !!
எட்டியவளை உதைக்கையில் என்பிள்ளை
உதைக்கிறது என்றெண்ணி மகிழ்ந்தவள் !!
நீச்சல் கற்றுத் தந்தவள் !!
கால்சட்டை போட்டு விட்டவள் !!
எண்ணெய் தேய்த்து தலைவாரி பவுடர் பூசி தன் முகத்தை என் முகத்தில் உரசித் தேய்த்து
என் கண்ணே
பட்டுடும் ன்னு பெருமூச்சி விட்டவள் !!
உறங்கிய பிறகு என் தலைமுடிக் கோதி உவகை அடைந்தவள் !!
கண்ணீரில் கவலையில் தலையணை
நனைத்தவள் !
வெந்நீரில் நான்குளிக்க விறகாக எரிந்தவள் !!
நான் படிக்க விழித்திருந்த விளக்கவள் !!
திரும்பிப் பார்க்கிறேன் ...
அவளுக்கான வாழ்க்கையில் அவளின் தேடல் அத்தனையும் எனக்கானவை;
விண்மீன் கணக்கானவை .!
ஆட்டுக்காறி எடுத்து அற்புதமாகச் சமைத்து அப்பா,தங்கையை விடவும் ஜந்தாறு துண்டுகளை அதிகமாக எனக்கு வைக்கும் அவள் அன்புக்கு என்னதான் தர இயலும் என்னைவிட பெரிதாய் !!!..
நான் உன்னை காதலிக்கிறேன் அம்மா ...
( I love you amma )

வைகைப்புயல் வடிவேலு திரைப்படங்களில் பாவித்த வார்த்தைகளை கல்லூரியில் எவ்வாறு பயன்...

Posted: 05 Jan 2015 05:57 AM PST

வைகைப்புயல் வடிவேலு திரைப்படங்களில் பாவித்த வார்த்தைகளை கல்லூரியில் எவ்வாறு பயன்படுத்துவார்கள்???
Class Test : சொல்லவே இல்ல...
Teaching : முடியல ...
Exam : உக்காந்து யோசிப்பாயிங்களோ....
Arrears : ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிற மாதிரி...
Bit : எதையும் பிளான் பண்ணி பண்ணனும்...
Result : மாப்பு..வச்சிடாண்டா ஆப்பு..
Degree : வரும்... ஆனாவராது...
Assignment: ஹா ... இது ரொம்ப புதுசா இருக்கே..
Class Attendance: அது போன மாசம் ..நான் சொன்னது இந்த மாசம்..
Professors: ஒரு குருப்பதான் அலையுறாங்க...
Lecture: இப்பவே கண்ண கட்டுதே..
Student Fight: இந்த கோட்ட தாண்டி நானும் வரமாட்டன்..நீயும் வரப்படாது..பேச்சு பேச்சா இருக்கணும்..
# வடிவேலுவின் நகைச்சுவை வசனங்கள் எங்கேயும் பொருந்தும் .

TOP 40 பொய்கள்: *************** 1.நீ தான் என் முதல் காதலி..! 2.அன்னைக்கே ஜோசிய க...

Posted: 05 Jan 2015 05:56 AM PST

TOP 40 பொய்கள்:
***************
1.நீ தான் என் முதல் காதலி..!
2.அன்னைக்கே ஜோசிய காரன் சொன்னான்..!
3.காசோ பணமோ முக்கியமில்லடா..கேரக்டர் தான் முக்கியம்..!
4.ஐ மிஸ் யூ..!
5.பரவாயில்லை விடுங்க ..!
6.ஏழே நாட்களில் சிகப்பழகு ...!
7.நான் சாதி பார்பதில்லை ..!
8.அந்த டைம்ல நான் அங்க இருந்துருந்தேன்னா..!
9.எனக்கு பொய் சொல்லறது பிடிக்காது..!
10.இப்போ தான் உன்னை பத்தி நினைச்சேன்..நீயே போன் பன்னிட்டே ...!
11.காவல்துறை உங்கள் நண்பன்
12.நான் தான் classலயே first
13.சார்.. ஒரு நாள் லீவு வேணும்.. ஊர்ல மாமா-க்கு சீரியஸ்.. ஒன் டே போதும் சார்....
14.இந்த ஹேர் ஆயில்ஸ் உபயோகிச்சா ஆறே மாசத்துல வழுக்க மண்டையில முடி மொழிக்கும்
15.இந்திய தொலைக்காட்சி வரலாற்றில்,திரைக்கு வந்து சில மாதங்களே ஆன "சூப்பர்" ஹிட் திரைப்படம்
16.சாமி கண்ண குத்திரும்
17."ஐய்யா சாப்பிட்டு நாளுநாள் ஆச்சுயா"-
" சில்ர இல்லப்பா "
18.நான் சொல்லுவதெல்லாம் உண்மை உண்மைதவிர வேறொன்றுமில்லை
19.ஐயாம் சஃபரிங் ஃபிரம் ஃபீவர்
20.பிடிக்கவில்லை என்பதால் வந்த பல வாய்ப்புகளை மறுத்துவிட்டேன்.
31. 15 நாளில் அணு உலை திறக்க படும்
32.ஜூன் மாசத்துக்கு அப்புறம் தமிழ் நாட்டுல மின் வெட்டெ இருக்காது
33.சார் இங்க பஸ் ஸ்டாண்ட் வருது, அங்க ஸ்கூல் வருது, ஒரு கிலோ மீட்டர்ல ரிங் ரோடு போடப் போறாங்க (ரியல் எஸ்டேட்)
34.நான் ஜெயிச்சா கூட இவ்ளோ சந்தோஷப்பட்டுருக்க மாட்டேன். நீங்க ஜெயிச்சது அவ்ளோ சந்தோஷம்
35.என்ன மச்சான் இப்ப வந்து கேட்ட்குற. 10 நிமிசத்துக்கு முன்னாடித்தான் இருந்ததையெல்லாம் அவன் கிட்ட குடுத்தேன், சாரிடா
36.நீதான்மா உலகத்துலேயே பெரிய அழகி
37. சனிக்கிழமை சரக்கடிக்க மாட்டேன் சத்தியமா
38.பொண்ணுங்கனாலே கடுப்பா இருக்கு
39.இனி திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை
40.தமிழினத் தலைவர்
(40 என சொல்லி பத்து விடுறதும் ஒரு பொய் தான் )

0 comments:

Post a Comment