Tuesday, 18 November 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Posted: 18 Nov 2014 05:20 PM PST


தமிழகத்திற்கு கர்நாடகா தண்ணீர் தர மறுக்கிறபோது கர்நாடகா முழுக்கப் போராட்டம் நடக்...

Posted: 18 Nov 2014 09:59 AM PST

தமிழகத்திற்கு கர்நாடகா தண்ணீர்
தர
மறுக்கிறபோது கர்நாடகா முழுக்கப்
போராட்டம் நடக்கிறது.
ஆனால், தமிழகம் தண்ணீர்
கேட்டு நிற்கிறபோது போராட்டம்
சுருங்கி தஞ்சை,
திருவாரூர்,நாகை என
வெறும் 3
மாவட்டங்களில்
மட்டும்தான் நடக்கிறது.
# பாம்பாரின்
குறுக்கே அணை கட்டும்
கர்நாடக அரசைக்
கண்டித்து டெல்டா மாவட்டங்களில்
22ஆம்
தேதி முழு அடைப்பு

'அன்பு' என்பது ஒரு பெண்ணின் மீது தான் வரவேண்டுமா?ஏன் மண்ணின் மீது வரக்கூடாதா? ம...

Posted: 18 Nov 2014 08:42 AM PST

'அன்பு' என்பது ஒரு பெண்ணின் மீது தான் வரவேண்டுமா?ஏன் மண்ணின் மீது வரக்கூடாதா?

முத்தபோரட்டத்தை விட 1000 மடங்கு அதிகமான அன்பை வெளிப்படுத்துவது 'மீதேன் திட்ட எதிர்ப்பு' போராட்டம்.

அன்பை போதிக்கும் ஊடகங்கள் இதைப்பற்றியும் கொஞ்சம் செய்தி போடுங்கள்...

@பூபதி

ஆஸ்திரேலிய நாட்டில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள சுரங்கத்தை அதானி நிறுவனத்துக...

Posted: 18 Nov 2014 07:42 AM PST

ஆஸ்திரேலிய நாட்டில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள சுரங்கத்தை அதானி நிறுவனத்துக்கு ஒதுக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது!!!

### சக்ஸஸ் சக்ஸஸ் மோடிஜி யின் ஆஸ்திரேலியப் பயணம்!!... வெற்றி வெற்றி!!!

அதானி - நமக்கு வாய்த்த அடிமை மிகவும் திறமைசாலி!!!!

@Gokul Krishnan

முல்லை பெரியாறில் தமிழக அதிகாரியை தாக்கியுள்ளார் கேரள சட்டமன்ற உறுப்பினர், இத்த...

Posted: 18 Nov 2014 06:51 AM PST

முல்லை பெரியாறில் தமிழக அதிகாரியை தாக்கியுள்ளார் கேரள சட்டமன்ற உறுப்பினர்,

இத்தனைக்கும் பொதுவுடமைக் கட்சியை சேர்ந்தவர்,

பொதுவுடமை பொக்கை வாயுடன் சிரிக்குது,

இந்நேரம் தமிழகத்தில் எதிர் தாக்குதல் நடந்திருக்கனும்,

அதிகாரம் தமிழன் கையில் இருந்திருந்தால்!

"என் மீது அன்பு வைத்திருக்கும் தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம...

Posted: 18 Nov 2014 06:32 AM PST

"என் மீது அன்பு வைத்திருக்கும் தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது"
---------2004--ம் வருடம் ஆனந்த விகடனிற்கு அளித்த பேட்டியில் ரஜினி குறிப்பிட்டிருந்தார்.இப்போ 2014.....

10 வருடங்கள் கடந்த பின்பும் ரஜினிக்கு "தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்" என்று எந்த எண்ணமும் ஏனோ வரவில்லை.....?

இந்த ஒரு தகுதியே போதும் ரஜினி அரசியலுக்கு வர......

@நல்ல சிவம்

அரசியல் ஆழம் தெரிந்ததால்தான் தயங்குகிறேன், இருந்தாலும் மக்களுக்கு ஏதேனும் செய்ய...

Posted: 18 Nov 2014 06:30 AM PST

அரசியல் ஆழம் தெரிந்ததால்தான் தயங்குகிறேன், இருந்தாலும் மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இருக்கிறது - ரஜினிகாந்த்.

அரசியலுக்கு வந்து தான் ஏதாவது செய்யனும்னு அவசியம் இல்லை, பட விழாவுக்கு வந்தமா படத்தை பற்றி பேசனுமா, இமய மலைக்கு போனமான்னு இருக்கனும். எதுக்கு இந்த பில்ட் அப்... மக்களுக்கு ஏதாவது செய்யனும்.... அதான் கர்நாடக மக்களுக்கு செஞ்சுகிட்டு இருக்கீங்களே.

@இளையராஜா

முகத்திலடித்தாற் போல் பேசுபவர்களை மிகப்பிடித்துப் போகிறது... #முதுகில் குத்துபவ...

Posted: 18 Nov 2014 03:18 AM PST

முகத்திலடித்தாற் போல்
பேசுபவர்களை மிகப்பிடித்துப்
போகிறது...

#முதுகில்
குத்துபவர்களை சந்தித்தபின்..!

@Kali Muthu

ஒரு குழந்தை பாலியல் பலாத்தகாரத்துக்கு உட்படுவதை பார்த்தால் கால் இல்லாதவன், ஏன் க...

Posted: 18 Nov 2014 02:07 AM PST

ஒரு குழந்தை பாலியல்
பலாத்தகாரத்துக்கு உட்படுவதை பார்த்தால்
கால் இல்லாதவன், ஏன் கல்
நெஞ்சகாரன் கூட
வந்து தடுப்பான்...

எங்கும் இருப்பதாய்
சொல்லப்படும் இந்த
கடவுள் மட்டும் ஏன்
வருவதில்லை, தடுப்பதில்லை????

-படித்ததில் சிந்திக்க
வைத்தது...

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள் இன்று... எதிரிகளின் பொருளாதாரத...

Posted: 18 Nov 2014 01:58 AM PST

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள் இன்று...

எதிரிகளின்
பொருளாதாரத்தை வீழ்த்த
போரிட்ட தமிழர் வஉசி....


பெண்களை மட்டம் தட்டுவதை ஆண்பிள்ளைகள் தந்தையிடமிருந்தும், அதை சகஜம் என்று ஏற்றுக்...

Posted: 18 Nov 2014 01:32 AM PST

பெண்களை மட்டம்
தட்டுவதை ஆண்பிள்ளைகள்
தந்தையிடமிருந்தும்,
அதை சகஜம்
என்று ஏற்றுக்கொள்வதை பெண்குழந்தைகள்
தாயிடமிருந்தும்
கற்கின்றனர்.!

@Kali Muthu

Tamil Language Inscriptions were found about 500 miles north of Canton, in a pla...

Posted: 18 Nov 2014 12:36 AM PST

Tamil Language Inscriptions were found about 500 miles north of Canton, in a place called Chuan Chou. This is a port city. It was an important port city in the ancient times also.

Normally, the Tamils used to sail to Ta Kua Pa in the west coast of Thailand. They would then take an overland journey across the Isthmus of Kra to other ports like Nakon SiTammarat or Songkla. These ports were on the east coast of Thailand. From there they would sail on to one of the ports of present day Vietnam. Then they would sail northwards to Canton.

A straight sail would be a longer distance which would take them across the Bay of Bengal, Straits of Malacca, Gulf of Siam, and South China Sea. They would have to sail around the Malay Peninsula. This would have increased their journey by more than a thousand miles and would have taken up several more months.

Apart from Canton, the Tamils had gone to other places also and established their own colonies. The merchant guilds like 'Thisai Aayiraththu AinnuuRRuvar' was very active around this part of the world.

In Chuan Chou, there was a Sivan Temple. In that temple, an image of Siva was consecrated under the 'Firman' - royal orders of 'Sekasai Khan'. This was done for the health of Sekasai Khan. Sekasai Khan in this inscription is the name of Kublai Khan himself. His full name was Kublai Sekcen Khan. Sekcen Khan became Sekasai Khan in Tamil. The Sivan Temple was known as ThiruKathaleesvaram and the Lord of the temple was known as ThiruKathaleesvaram udaiya Nayanar. The person who executed the order was Thava ChakkaravarththikaL Sampandha PerumaL. It was done on the Chithra Paurnami day of Saka Era 1203 - 1281 AD.

This was during the rule of Kublai Khan who came to power in 1260 and ruled until 1294 AD. Kublai Khan was the grandson of Chengiz Khan. He was the third son of the fourth son of Chengiz Khan. After Chengiz Khan, the Mongolian Empire was divided into four parts of which China was one.

Kublai became the Grand Khan of all Mongols. He took China as his part of inheritance and ruled from there. He built Beijing and moved the capital there. He also had a summer capital. His country was big, wealthy, and prosperous. He was mighty and powerful. His armies were immense, powerful, and invincible.

He started an Imperial Dynasty called the Yuan Dynasty. He ruled during the time when the Imperial Pandyas were ruling Tamilnadu and Kerala. The Pandyas were on very close friendly terms with the Great Kublai Khan. At that time, Kublai Khan was very ill. Marco Polo, the Venetian traveller spent seventeen years at the court of Kublai Khan. When he found that the Great Khan was getting old and sickly, he got permission and left China.

It should be noted that he temple was consecrated according to the Firman of the Emperor. The word, 'Firman' is used in the inscription. The last line of the inscription is in Chinese characters. Chola types of statues were also found in the temple site. This is a rare inscription in Tamil which is found outside TamilNadu.

http://tamilnation.co/heritage/china.htm

http://www.chinaheritagequarterly.org/scholarship.php?searchterm=005_zayton.inc&issue=005

http://www.tnarch.gov.in/epi/ins2.htm

சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.

சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர்.

தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்லவேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.

சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

(குப்லாய் கான்)

சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப்பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.

இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.

சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான். மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.

இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.

சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ் கல்வெட்டு இதுவாகும்.


மதிய உணவு நேரம் ஒரு ஹோட்டல் முன்பு காவல்துறை வாகனம் வந்து நிற்கிறது அதில் மூன்று...

Posted: 17 Nov 2014 11:51 PM PST

மதிய உணவு நேரம் ஒரு ஹோட்டல் முன்பு காவல்துறை வாகனம் வந்து நிற்கிறது அதில் மூன்று சிறுவயது பயிற்சி காவலர்கள்! ஒருவர் வந்து பிரியாணி கடையில் நிற்கிறார் ஒரு பிரியாணி பார்சல் செய்ய படுகிறது அப்படியே பக்கத்து கடையில் ஒரு புல் மீல்ஸ் வாழை இலையுடன் பார்சல், எதிர் கடையில் ஆறு புரோட்டா பார்சல் (எல்லாம் ஒசில தான்) வண்டி கெளம்புது ட்ராபிக் இல்லாத சாலையோர மரத்தடி நிழல்யை நோக்கி ...அப்புறம் வாகனத்தில் உண்ட மயக்கதில் ஒரு உறக்கம்.., மாலை நேரத்தில் அடுத்த வேளைக்கு வேட்டை தொடரும்

சோற்றில் தொடங்குது மாமூல்!!!

அழகு தமிழ்நாடு! வால்பாறை!

Posted: 17 Nov 2014 10:31 PM PST

அழகு தமிழ்நாடு!
வால்பாறை!


0 comments:

Post a Comment