Monday, 28 July 2014

Relax Please: FB page daily Posts : 28/07/2014

Relax Please: FB page daily Posts


    அமெரிக்காவில் பெர்க்லி பல்கலைகழகம் ஏ.ஆர் ரகுமானுக்கு இசைத்துறையில் ஏ.ஆர். ரகுமான...
    Posted: 28 Jul 2014 09:20 AM PDT
    அமெரிக்காவில் பெர்க்லி பல்கலைகழகம் ஏ.ஆர் ரகுமானுக்கு இசைத்துறையில் ஏ.ஆர். ரகுமானின் 20 ஆண்டுகால பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது ..

    வாழ்த்துகள் தமிழா (y)

    தெரிந்து கொள்வோம்
    Posted: 28 Jul 2014 09:10 AM PDT
    தெரிந்து கொள்வோம்


    தெரிந்து கொள்வோம்
    கணவன்....மனைவி...... கணவனோ மனைவியோ ஒருவரை ஒருவர் முழுமையாக எற்றுக்கொள்ளுங்கள்.....
    Posted: 28 Jul 2014 09:00 AM PDT
    கணவன்....மனைவி......

    கணவனோ மனைவியோ ஒருவரை ஒருவர் முழுமையாக எற்றுக்கொள்ளுங்கள்...

    எற்றுக்கொள்வது எப்படி இருக்கவேண்டும்..?

    ஓரு பொருளை எலத்துக்கு விடும்போது எப்போதும் ஒரு நிபந்தனை இருக்கும்..

    பொருள் உள்ளது உள்ளபடியே இருக்கும்..ஏலம் எடுத்தவர்கள் குறை நிறையை பற்றி ஏலத்துக்கு பிறகு கோர முடியாது...

    அது போல் தான் எற்றுக்கொள்கிறவர்கள் நிறைமட்டும் எற்றுகொள்ளுதல் அர்த்தம் இல்லை..
    அவர்கள் குறையை சேர்த்து எற்று கொள்ளுதல் வேண்டும்..

    இதன் உணர்ந்து கொண்டால்.... பிறகு என்ன?
    ....எந்த பிரச்சினையும் இவர்களை ஒன்றும் செய்யாது.
    .மற்றவர்களும் இவர்களுக்குள் பிரச்சினையை எற்படுத்த முடியாது..

    - Thiyagaraja Mohan.

    ஆசிரியர் மாணவன் உரையாடலை யார் மனதையும் புண்படுத்தாத அழகான நகைச்சுவையுடன் காட்சிப...
    Posted: 28 Jul 2014 08:45 AM PDT
    ஆசிரியர் மாணவன் உரையாடலை யார் மனதையும் புண்படுத்தாத அழகான நகைச்சுவையுடன் காட்சிப்படடுத்தும் குறும்படம்.. கண்டிப்பாக பார்க்கவும்.. இதை இயக்கிய மாணவர்களுக்கு நம் வாழ்த்துக்கள் (y)

    http://www.youtube.com/watch?v=X4Sg62oQg40&feature=youtu.be


    teacher and college student argument (comedy)

    The present situation of student in college.It will be funny,U must watch it.
    :)
    Posted: 28 Jul 2014 08:30 AM PDT
    :)


    "சில உண்மைகள்" - 1
    ‘கம்டெக்ஸ்’ என்ற பெயரில் கம்ப்யூட்டர் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. அதில் பேசிய...
    Posted: 28 Jul 2014 08:15 AM PDT
    'கம்டெக்ஸ்' என்ற பெயரில் கம்ப்யூட்டர் கண்காட்சி ஒன்று நடைபெற்றது.

    அதில் பேசிய பில்கேட்ஸ், "கார் தயாரிக்கும் நிறுவனமாகிய ஜெனரல் மோட்டர்ஸ், கம்ப்யூட்டர் துறை போல் புதிய தொழில் நுட்பங்களைக் கடைப்பிடித்திருந்தால், 25 டாலர்களுக்கு கார்கள் கிடைக்கும். ஒரு கேலன் டீசலுக்கு ஆயிரம் மைல்கள் ஓட்டலாம்" என்றாராம்.

    'ஜிவ்'வென்று ஏறிவிட்டது ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்திற்கு. மைக்ரோசாப்ட் போன்ற தொழில்நுட்பம் கார் களுக்கு வந்திருந்தால் என்ன ஆகுமென்ற கற்பனையை டாப் கியரில் ஓடவிட்டு, பில்கேட்ஸை கொஞ்சம் போட்டுப் பார்த்து விட்டார்கள். ஜெனரல் மோட்டர்ஸின் கற்பனை இது…

    காரணமே தெரியாமல் கார்கள் அடிக்கடி க்ராஷ் ஆகும்.

    நடுவழியில் கார் நின்றால், காரின் விண்டோஸை மூட வேண்டும். மீண்டும் விண்டோஸைத் திறந்து மறுபடி இயக்க வேண்டி வரும்.

    சில நேரம் கார்களின் என்ஜின்களை ரீ ஸ்டார்ட் செய்ய வேண்டி வரலாம்.

    விபத்து ஏற்பட்ட விநாடி, ஏர் பலூன் பொத்தானை அழுத்தினால் இதை கண்டிப்பாக உபயோகிக்க வேண்டுமா ? confirm ?என்று கேட்கும். அதற்குள் காரியம் மிதமிஞ்சிப் போகும்.

    என்ஜினை அணைக்க ஸ்டார்ட் பட்டனை அழுத்த வேண்டியிருக்கும்.

    கட்டுப்பாட்டு முறைகள் காருக்குக் கார் மாறும் என்பதால், புதிய கார் வாங்கும் போதெல்லாம் வாடிக்கையாளர்கள் புதிதாக கார் ஓட்டிப் பழக வேண்டி வரும்.

    கம்ப்யூட்டர் துறையை கார்க்காரர்கள் கலாய்த்த முறை இது.
    தந்தை <3 என் ஒவ்வொரு பருக்கை சோறும் சொல்லும் அதற்குபின் ஒளிந்திருக்கும் நம் தந்...
    Posted: 28 Jul 2014 07:54 AM PDT
    தந்தை ♥

    என் ஒவ்வொரு பருக்கை சோறும் சொல்லும் அதற்குபின் ஒளிந்திருக்கும் நம் தந்தையின் ஓயாத உழைப்பை

    நான் பொய் சொல்லி பணம் கேட்கும்போது உறுத்தவில்லை, ஆனால் நான் கேட்டதற்கு அதிகமாக நீ கொடுத்தபோது வலித்து

    உன் தோள்களில் என்னோடு சேர்த்து எவ்வளவு பாரம் இருந்தாலும் நீ சோர்வுற்றதில்லை

    நீ என்னை பற்றி அதிகமாகவே மற்றவர்களிடம் புகழும்போதுதான் தெரிந்தது என் மீது நீ கொண்ட நம்பிக்கை

    மோசமாக சண்டையிட்டு கோபித்து பேசாமல் இருந்தாலும், நான் சாப்பிடேனா என்று வாய் தவறி கேட்டுவிடும் குழந்தைதான் நம் அப்பா!

    பலர் நாத்திகன் ஆனதற்கு இரண்டு காரணங்கள்!
    ஒன்று கடவுள் இல்லையென்பது
    இரண்டு தன் தந்தை இருக்கிறார் என்று...

    தந்தைமை ♥


    # படித்ததில் பிடித்தது #- 2
    :)
    Posted: 28 Jul 2014 07:32 AM PDT
    :)


    "சில உண்மைகள்" - 2
    "இவர்கள் சொன்னவை" நாங்கள் தீவிரவாதிகளா, அயோக்கியர்களா என்பதைக் குறித்து பரீசிலன...
    Posted: 28 Jul 2014 07:20 AM PDT
    "இவர்கள் சொன்னவை"

    நாங்கள் தீவிரவாதிகளா, அயோக்கியர்களா என்பதைக் குறித்து பரீசிலனை செய்யும் அதிகாரம் அமெரிக்காவுக்கு இல்லை !!!

    எல்லாக் காலங்களிலும் மக்களுக்காக பேசுபவர்களையும் அவர்களுக்காக போராடுபவர்களையும் வல்லரசு நாடுகள் "தீவிரவாதிகள்" என்கிறது. ஆனால், அவர்களின் நாட்டு சுதந்திரத்திற்காக போராடியவர்களை மட்டும் "தியாகிகள்" என்றார்களே ஏன்?

    - தோழர் சே குவேரா
    அம்மா இல்லாத சமயத்தில், குழந்தை அம்மாவாகவும், பொம்மை குழந்தையாகவும், அவதாரமெடுக...
    Posted: 28 Jul 2014 07:01 AM PDT
    அம்மா இல்லாத சமயத்தில்,
    குழந்தை அம்மாவாகவும்,
    பொம்மை குழந்தையாகவும்,
    அவதாரமெடுக்கின்றன...!!

    - ராஜசேகரன்


    "மழலை கவிதைகள்"
    மனிப்பூரைச் சேர்ந்த மனைவியை இழந்த இந்த விவசாயி கஷ்டப்பட்டு தன் மகனை படிக்க வைத்த...
    Posted: 28 Jul 2014 06:47 AM PDT
    மனிப்பூரைச் சேர்ந்த மனைவியை இழந்த இந்த விவசாயி கஷ்டப்பட்டு தன் மகனை படிக்க வைத்தார்.. மாநிலத்தில் முதல் மாணவனாக தேர்ச்சியுற்ற அந்த மாணவன் தன் பட்டமளிப்பு விழாவில் தன் தந்தை தான் தன் மிகப்பெரிய கவுரவம் என்றான்...

    உலகம் அறியாத எத்தனையோ தந்தையரின் தியாகங்கள் இன்னும் இன்னும் ♥ ♥

    :)
    Posted: 28 Jul 2014 06:30 AM PDT
    :)

    ஆசிரியர்: இந்தியாவில் எங்கெல்லாம் பெட்ரோல் கிடைக்கும்? * * * * * * * * * * * மா...
    Posted: 28 Jul 2014 06:10 AM PDT
    ஆசிரியர்: இந்தியாவில் எங்கெல்லாம் பெட்ரோல் கிடைக்கும்?
    *
    *
    *
    *
    *
    *
    *
    *
    *
    *
    *
    மாணவன்: எல்லா பெட்ரோல் பங்கிலும் கிடைக்கும்.
    எதிர் நீச்சல் எளிது! - இவரின் சாதனையை வாழ்த்துவோம்.. நடிகைகள் மட்டுமின்றி, நடிக...
    Posted: 28 Jul 2014 05:50 AM PDT
    எதிர் நீச்சல் எளிது! - இவரின் சாதனையை வாழ்த்துவோம்..

    நடிகைகள் மட்டுமின்றி, நடிகர்களும் தமது வாரிசு களை சினிமாவில் களமிறக்கும் காலமிது. நடிகர் 'தலைவாசல்' விஜய்யும் அப்படி நினைத்திருந்தால் இன்று நாம் ஒரு உலக சாதனையாளரை இழந்திருப்போம். யெஸ்... தலைவாசல் விஜய்யின் மகள் ஜெயவீணா, உலகமே கவனிக்கும் இடத்தில் இருக்கும் நீச்சல் சாம்பியன்! செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிற ஜெயவீணாவுக்கு ஒவ்வொரு விடியலிலும் வெற்றி! 2012 டிசம்பரில் இஸ்தான்புல்லில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியா சார்பாக பங்குகொண்ட இளவயது சாதனையாளர் என்பது இவரது லேட்டஸ்ட் அடையாளம்! ''எங்கண்ணா ஜெயவந்த், ஸ்விம்மிங் ப்ராக்டீஸ் பண்ணப் போகும்போது நானும் வேடிக்கைப் பார்க்கப் போவேனாம்.

    எனக்கு ரெண்டரை வயசிருக்கும்... 'அண்ணாகூட நானும் ஸ்விம் பண்ணணும், இறக்கி விடுங்க'ன்னு அடம் பிடிச்சேனாம். அண்ணா ப்ராக்டீஸ் பண்ணினது பெரிய நீச்சல் குளம். 6 அடி, 9 அடி ஆழமிருக்கும். அதுக்குப் பக்கத்துல குழந்தைங்களுக்கான சின்ன நீச்சல் குளம் ஒண்ணு இருக்கும். அதுல என்னை இறக்கி விட்டிருக்காங்க. நான் 'முடியாது, அண்ணன் இருக்கிற நீச்சல் குளம்தான் வேணும்'னு அடம் பிடிச்சேனாம். எங்களைக் கூட்டிட்டுப் போன எங்க தாத்தா, அவுட்டோர் ஷூட்டிங்ல இருந்த எங்கப்பாக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொல்லியிருக்கார்.

    'ரொம்ப அடம் பண்றான்னா, பெரிய ஸ்விம்மிங் பூல்லயே இறக்கி விட்டுட்டு பக்கத்துலயே நின்னுப் பார்த்துக்கோங்க... ஒருவாட்டி தண்ணி குடிச்சான்னா, அந்த பயத்துல மறுபடி அந்தப் பக்கமே போக மாட்டா'ன்னு சொல்லிருக்கார் அப்பா. 'தண்ணி குடிப்பேன்'னு நினைச்சு என்னை இறக்கி விட்டா, நானோ, ஸ்விம் பண்ணி மேலே வந்தேனாம். அந்த நிமிஷத்துலேருந்தே ஆரம்பிச்சது என்னோட நீச்சல் பயணம்...'' - சாகசக் கதையை சாதாரணமாகச் சொல்கிற ஜெயவீணாவுக்கு முதல் போட்டியே வெற்றியை வசப்படுத்தியிருக்கிறது!

    ''2008ல சென்னையில நடந்த மாநில போட்டியில ஜெயிச்சதுதான் முதல் வெற்றி. மெடல் வாங்கினப்ப, அது என்ன, ஏதுன்னுகூட எனக்குப் புரியலை... அதுக்கப்புறம் நேஷனல்ஸுக்கு செலக்ட் ஆகி மெடல் வாங்கினேன். 2011ல ராஞ்சியில நடந்த நேஷனல்ஸ்ல 5 மெடல் வாங்கினேன். நேஷனல்ஸ்ல அவ்ளோ சின்ன வயசுல (12 வயது) மெடல் வாங்கினதுக்காக 'யங்கெஸ்ட் ஸ்விம்மர்' என்ற பெருமையும் பாராட்டும் எனக்குக் கிடைச்சது'' என்கிற ஜெயவீணா, படிப்பிலும் சுட்டி. விசில் அடித்தபடியே பாடல் பாடுவதிலும் நிபுணி.

    ''ஸ்விம்மிங் ப்ராக்டீஸுக்கு போக மிச்சமாகிற ஒவ்வொரு நிமிஷத்தையும் படிக்க உபயோகப்படுத்திக்குவேன். ஸ்போர்ட்ஸ் மெடிசின் படிக்கணுங்கிறதுதான் என்னோட லட்சியம்'' என்கிறவர், 2016ல் நடக்கவுள்ள ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்று பதக்கங்களையும் பெருமையையும் தட்டிவர இப்போதிலிருந்தே பயிற்சிகளை ஆரம்பித்திருக்கிறார்!

    - வி.லஷ்மி

    :)
    Posted: 28 Jul 2014 05:30 AM PDT
    :)

    பக்கத்து வீட்டு பையன் பரிட்சைக்கு படித்துக் கொண்டிருந்தான். "தம்பி ... உனக்கு ப...
    Posted: 28 Jul 2014 05:15 AM PDT
    பக்கத்து வீட்டு பையன் பரிட்சைக்கு படித்துக் கொண்டிருந்தான்.

    "தம்பி ... உனக்கு பரிட்சை எப்படி எழுதணும்னு தெரியுமா?"ன்னு கேட்டேன் நான்.

    "சொல்லுங்க ... தெரிஞ்சிக்கிறேன்"

    "தம்பி, பரிட்சைக்கு மொத்தம் 3 மணி நேரம் கொடுப்பாங்க ..."
    "ம்ம்ம்ம்"

    "முதல் 1 மணி நேரத்துல 10 மார்க் கேள்விய எழுதணும்"
    "ம்ம்ம்"

    "இரண்டாவது 1 மணி நேரத்துல 5 மார்க் கேள்விய எழுதணும்"
    "ம்ம்ம்"

    "அப்புறம் அரை மணி நேரத்துல் 2 மார்க் கேள்விய எழுதணும்"
    "ம்ம்ம்"

    "கடைசி அரை மணி நேரத்துல 1 மார்க் கேள்விய எழுதணும் ...

    இதுல ஏதாவது உனக்கு சந்தேகம் இருந்தா கேளு"..

    "ஒரே ஒரு சந்தேகம் தான் இருக்கு"
    "என்ன?"
    .
    .
    .
    "மூணு மணி நேரமும் கேள்வியயே எழுதிகிட்டிருந்தா பதில் எப்போ எழுதுறது??"....

    :O :P
    அழகு
    Posted: 28 Jul 2014 05:00 AM PDT
    அழகு

    மறைந்த நடிகர் ரகுவரனுக்கு தனுஷ் செலுத்திய அஞ்சலி சில வருடங்களுக்கு முன்னர் மறைந...
    Posted: 28 Jul 2014 04:45 AM PDT
    மறைந்த நடிகர் ரகுவரனுக்கு தனுஷ் செலுத்திய அஞ்சலி

    சில வருடங்களுக்கு முன்னர் மறைந்த நடிகர் ரகுவரன் தனது வில்லத்தனமான நடிப்பிற்கு தமிழ்த் திரையுலகில் தனி இடத்தைப் பெற்றிருந்தவர் ஆவார். இவர் நடிகர் தனுஷின் தந்தையாக 'யாரடி நீ மோகினி' படத்தில் நடித்திருந்தார். அப்போது இருவருக்குள்ளும் நல்ல பிணைப்பு ஏற்பட்டிருந்தது.

    இவருக்கு மரியாதை செலுத்தும்விதமாக தனுஷ், அமலா பால் நடிப்பில் வேல்ராஜ் இயக்கத்தில் வெளிவந்து தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படத்தில் நாயகனின் பெயரை ரகுவரன் என்று வைத்துள்ளனர்.

    ரகுவரனுடன் இணைந்து நடித்த நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கூறிய தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ், இந்தப் படத்தில் கதாநாயகனின் பெயரை மையமாக வைத்து பிரபலமாகியுள்ள ஒரு வசனத்தையும் குறிப்பிட்டார். 'அமுல் பேபி, ரகுவரனை நீ வில்லனாகத்தானே பார்த்திருக்க. ஹீரோவாப் பார்த்ததில்லையே. இனிமே பார்ப்பே' என்ற வசனம் மறைந்த நடிகரான ரகுவரனுக்கான அஞ்சலி என்பதையும் அவர் தெரிவித்தார்.....

    உண்மை
    Posted: 28 Jul 2014 04:30 AM PDT
    உண்மை

    இந்த குழந்தைகளின் சிரிப்பு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க...
    Posted: 28 Jul 2014 04:15 AM PDT
    இந்த குழந்தைகளின் சிரிப்பு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க...

    அன்பை விற்கவோ, வாங்கவோ முடியாது. அன்பிற்கு அன்பே விலை. - ஜான்கீட்ஸ்
    Posted: 28 Jul 2014 04:00 AM PDT
    அன்பை விற்கவோ, வாங்கவோ முடியாது. அன்பிற்கு அன்பே விலை.

    - ஜான்கீட்ஸ்

    இவர் பெயர் நாகராஜன், கட்லூரை சேர்ந்த இவர் சிதம்பரதுல MSC., Software Engineering...
    Posted: 28 Jul 2014 03:45 AM PDT
    இவர் பெயர் நாகராஜன், கட்லூரை சேர்ந்த இவர் சிதம்பரதுல MSC., Software Engineering final year படிக்கறாரு,

    இவருடைய கண்டுபிடிப்பு ஒரு மகத்தான வெற்றிய தந்துருக்கு. தவுட்ல இருந்து எரிவாயு (gas) கண்டுபிடிச்சிருக்காரு, இரண்டு பக்கம் அடைக்கப் பட்ட தகர டப்பாவில் தவிடு போட்டு மூடி அத சூடு படுத்தினா, காஸ் உருவாகி அந்த டப்பால செட் பன்ன சின்ன குழாய் மூலமா வெலியெற்ற படுது, அதை தீக்குச்சியால் கொளுத்தியபோது நீல நிரத்துல எரிந்தது.

    இந்த எரிவாயுவை சிலிண்டர்ல அடைத்து அடுப்பெரிக்க பயன்படுத்த முடியும்னு நாகராஜன் தெரிவித்தாரு. ஒரு முக்கியமான தகவல் இந்த புதிய எரிவாயுவ கண்டுப்பிடிச்ச நாகராஜன் ஒரு மாற்றுத்திறனாலி (ஊனம்முற்றவர்).

    நம் வாழ்த்துக்களை பகிர்வோம் (Y)

    :)
    Posted: 28 Jul 2014 03:30 AM PDT
    :)

    ஒரு ஆளுக்கு லாட்டரியில பரிசு விழுந்தது. அந்த பணத்தில் கார் வாங்கி கொண்டு கிராம...
    Posted: 28 Jul 2014 03:10 AM PDT
    ஒரு ஆளுக்கு லாட்டரியில பரிசு விழுந்தது. அந்த

    பணத்தில் கார் வாங்கி கொண்டு கிராமத்திற்கு வந்தார்.

    கிராமத்தில் யாரும் காரையே பார்த்தது இல்லை.இவர்

    எல்லோரையும் பார்த்து கையை அசைத்து கொண்டே

    சென்றார்.அந்த கிராமத்தையே சுற்றி வந்தார் ஆனால்

    ஒருவரை கூட அவர் இடிக்கவில்லை.ஏன்னா அந்த

    காருக்கு முன்னாடி இரண்டு குதிரையை கட்டி

    ஓட்டிக்கொண்டு இருந்தார்.

    அவருக்கு கார் இஞ்சின் ஸ்டார்ட் பண்ண தெரியாது.

    காருக்குள்ளே 100 குதிரைகளின் ஆற்றல் இருக்கிறது.

    ஆனால் இவர் வெளியே 2 குதிரையை கட்டி ஓட்டிக்

    கொண்டு இருந்தார்.

    # நாம் எல்லோரும் இவரைப் போலத்தான்.நமக்குள்ளே

    எவ்வளவோ ஆற்றல் இருக்கிறது ஆனால் யாரும் அதை

    பயன்படுத்தாமல் இருக்கிறோம்.#
    மூச்சு நிற்கும் இந்தக் கணம் எந்தன் மரணம் நிகழவில்லை, மகனே! முன்பே உன்னால் மு...
    Posted: 28 Jul 2014 02:48 AM PDT
    மூச்சு நிற்கும்
    இந்தக் கணம்
    எந்தன் மரணம்
    நிகழவில்லை, மகனே!

    முன்பே உன்னால்
    முதியோர் இல்லத்தில்
    மனம் ரணமாக
    முதலடி வைத்த போதே
    நிஜ மரணம் எனக்கு
    நிகழ்ந்து விட்டது.

    எனவே என் மரண நாளாக
    அதையே நீ குறித்துக் கொள்!


    "மனம் தொட்ட வரிகள்" - 1
    :)
    Posted: 28 Jul 2014 02:31 AM PDT
    :)


    "சில யதார்த்தங்கள்" - 2
    ஒரு கடை திறக்கப்படுகிறது....அங்கு கல்லாவில் முதலாளி இல்லை....தேவையான எல்லா பொருட...
    Posted: 28 Jul 2014 02:15 AM PDT
    ஒரு கடை திறக்கப்படுகிறது....அங்கு கல்லாவில் முதலாளி இல்லை....தேவையான எல்லா பொருட்களும் அந்த கடையில் நிறைக்கப்பட்டுள்ளது.ஆனால் அங்கு ஒரு சிறிய அறிவிப்பு பலகை மட்டும் உள்ளது.அதில் கீழ்கண்டவாறு எழுதப்பட்டுள்ளது...

    "உங்களுக்கு வேண்டிய பொருளை எடுத்துக்கொண்டு அந்த பொருளின் மீது ஒட்டப்பட்டுள்ள விலையை கல்லாவில் போட்டுவிட்டு செல்லவும்"

    #நேர்மையான பதில் தேவை....

    பொருளை எடுத்துக்கொண்டு கல்லாவில் காசு போடுவீர்களா இல்லையா....????? ;-)
    பெண்களில் அழகு .... நம் தமிழ் பெண்கள் ..!!! நம் தமிழ் பெண்களில் அழகு .... அவர்க...
    Posted: 28 Jul 2014 02:00 AM PDT
    பெண்களில் அழகு ....
    நம் தமிழ் பெண்கள் ..!!!

    நம் தமிழ் பெண்களில் அழகு ....
    அவர்கள் அழகை விட அழகான அந்த "வெட்கம்"...!! :)


    "சில நியாயங்கள் - யதார்த்தங்கள்" - 3
    புத்தருக்கு மரம் ஒன்று... ஆசையை துறக்கக் கற்று தந்தது ! நியூட்டனுக்கு ஆப்பிள்...
    Posted: 28 Jul 2014 01:46 AM PDT
    புத்தருக்கு மரம் ஒன்று...
    ஆசையை துறக்கக் கற்று தந்தது !
    நியூட்டனுக்கு ஆப்பிள் மரம் ஒன்று...
    ஈர்ப்பு விசையை கற்று தந்தது !

    எந்த மரத்தையும் வெட்டாதீர்கள்,
    எதாவது ஒன்று கற்று தரும்..! (y)

    - Kali Muthu.


    "சில நியாயங்கள் - யதார்த்தங்கள்" - 2
    Relax Please: FB page daily Posts : 28/07/2014

    0 comments:

    Post a Comment