தமிழகத்திலும் மேகி நூடுல்ஸுக்கு தடை : விற்பனையில் இருந்து உடனடியாக திரும்ப பெற ஆணை
சென்னை: தமிழகத்தில் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. காரீயம் மற்றும் வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளதால் மேகி விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் மேகி நூடுல்ஸை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. விற்பனையில் இருந்து மேகி நூடுல்ஸை உடனடியாக திரும்ப பெறவும் ஆணையிடப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட், டெல்லி, கேரளா, குஜராத், காஷ்மீர் மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகத்திலும் மேகி நூடுல்ஸ் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேகியை போன்றே வைவை எக்ஸ்பிரஸ், ரிலையன்ஸ் செலக்ட் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மற்றும் ஸ்மித் அண்ட் ஜோன்ஸ் சிக்கன் மசாலாவுக்கும் தமிழக அரசு தடை.

0 comments:
Post a Comment