Wednesday, 22 April 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


குட்நைட் செல்லம்ஸ் <3

Posted: 21 Apr 2015 11:00 AM PDT

குட்நைட் செல்லம்ஸ் ♥


அருமையான ஓவியம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 21 Apr 2015 10:53 AM PDT

அருமையான ஓவியம்..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 21 Apr 2015 10:46 AM PDT

'அவதார்' படத்தை 3Dல பார்த்தா தான் நல்லாருக்கும்ன்னு சொன்னாங்க.படத்துக்கு போனா தி...

Posted: 21 Apr 2015 10:42 AM PDT

'அவதார்' படத்தை 3Dல பார்த்தா தான் நல்லாருக்கும்ன்னு சொன்னாங்க.படத்துக்கு போனா தியேட்டரிலேயே 3D கிளாஸ் கொடுத்தாங்க.

இப்ப 'OK கண்மணி' படத்தை லவ்வரோட பார்த்தா தான் நல்லாருக்கும்ன்னு சொல்றாங்க.அப்ப தியேட்டரிலேயே ஒரு லவ்வர் தரனும் தானே?

அதான முறை? :( :O

- Boopathy Murugesh @ Relaxplzz

திறமையான கேப்டன் நல்ல தகப்பன் அழகான குடும்பஸ்தன்

Posted: 21 Apr 2015 10:38 AM PDT

திறமையான கேப்டன்

நல்ல தகப்பன்

அழகான குடும்பஸ்தன்


:P https://twitter.com/RelaxplzzTamil

Posted: 21 Apr 2015 10:29 AM PDT

இயற்கையின் அழகிய வண்ண மலர்கள் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 21 Apr 2015 10:23 AM PDT

இயற்கையின் அழகிய வண்ண மலர்கள்

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 21 Apr 2015 10:17 AM PDT

கார்கில் போரின் போது இரண்டு நண்பர்கள் களத்தில் இருந்தனர். எதிரிகள் சுற்றி வளைத்த...

Posted: 21 Apr 2015 10:10 AM PDT

கார்கில் போரின் போது இரண்டு
நண்பர்கள் களத்தில் இருந்தனர்.
எதிரிகள்
சுற்றி வளைத்து சுடும்போது
ஒருவன் மட்டும் குண்டடி பட்டு
விழுந்து கிடந்தான்.

நான் என் நண்பனை எப்படியாவது
தூக்கி வந்து விடுகிறேன் எனக்கு
உத்தரவு கொடுங்கள் கமேண்டர்
என்றான்.

மறைந்து இருந்து
தாக்குவது தான் சரியான வழி ,நீ
அங்கு போவதால் உன் உயிர்க்கு தான்
ஆபத்து என்றார் கமேண்டர்.
நீ போவது என்றால் போ, ஆனால் நீ
போவதால் எதுவும் நடந்துவிட
போவதில்லை என்று கமெண்டர்
சொன்னார்.

அதையும் மீறி தன்
நண்பனை காப்பாற்ற ஓடினான்,
அவனை
தோளில் தூக்கி கொண்டு
வரும்போது எதிரிகள் சுட்டனர்.
இவனுக்கும் அடிப்பட்டது, அதையும்
மீறி அவனை தூக்கி கொண்டு
வந்தான்.

கமேண்டர் அவனை பரிசோதித்து
பார்த்தார் அவன் நண்பன் இறந்து போய்
இருந்தான்.
நான் அப்போழுதே
சொன்னேன் நீ அவனை
காப்பாற்றப்போவதால் எந்த
உபயோகமும் இல்லை ,இப்போது பார்
நீயும் அடிப்பட்டு கிடக்கிறாய் என்றார்
கமேண்டர்.

நான் போனது தான் சார் சரி
என்றான்.
என்ன சொல்கிறாய் உன் நண்பன்
இறந்து கிடந்தான் நீ சொல்வது எப்படி
சரியாகும் என்று கேட்டார் கமேண்டர்.
நான் அங்கு போகும்போது என் நண்பன்
உயிருடன் தான் சார்
இருந்தான்.

"என்னை காப்பாற்ற நீ
வருவாய் என்று எனக்கு தெரியும்
நண்பா" என்று சொல்லிவிட்டு தான்
சார் இறந்தான் .அந்த ஒரு வார்த்தை
எனக்கு போதும் சார் இந்த காயம்
எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே
இல்லை என்றான்.

#இதுதான் உண்மையான நட்பு

(y) (y)

Relaxplzz

ஊழல் செய்த மருமகனின்தலையை துண்டித்த மன்னர்: ஊழல் செய்த தனது மருமகனின் தலையை வெட...

Posted: 21 Apr 2015 10:02 AM PDT

ஊழல் செய்த மருமகனின்தலையை துண்டித்த மன்னர்:

ஊழல் செய்த தனது மருமகனின் தலையை வெட்டி நல்லாட்சிக்கு 16 ம் நூற்றாண்டில் வித்திட்டவராக திகழ்கிறார் "மன்னர் விஜயரகுநாத சேதுபதி".

தமிழகத்து மூவேந்தர்களுக்கு பின் சுதந்திர காலம் வரை தமிழ், இறையாண்மை, தர்மங்களை பண்பாடு மாறாமல் பாதுகாத்து வந்தவர்கள் சேதுபதிகள். ராமர் தனக்கு உதவி செய்த மறவர்களை ராமர் பாலம், சீதாபிராட்டியால் உருவாக்கப்பட்ட ராமேஸ்வரம் ராமலிங்கத்தையும் பாதுகாக்கும்படி கட்டளையிட்டார் "பாலத்துக்கு பாதுகாப்பாளர் அல்லது உரிமையாளர் என்ற பொருள் படும்படி சேதுபதி என்ற பட்டம்" கொடுத்தார். உலகெங்கிலும் இருந்து வரும் யாத்திரிகர்களை ராமேஸ்வரம் தீவுக்கு தோணிக்கரை( மண்டபம்) வழியாக படகுகளில் அழைத்து சென்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி தரிசனத்திற்குபின்பு மீண்டும் பாதுகாப்பாக அழைத்து வருவது இவர்களின் தலையாய கடமையாக இருந்து வந்தது. 1674 முதல் 1710 வரை ஆண்ட கிழவன் சேதுபதிக்கு ஆண் வாரிசு இல்லாததால் அவரது மருமகன் 'விஜயரகுநாத சேதுபதி' என்ற பெயருடன் பட்டத்துக்கு வந்தார்.இவர் தோணித்துறையிலிருந்து யாத்திரிகர்களை அழைத்து செல்லும் பொறுப்புகளை தனது இரண்டு மகள்களான சீனிநாச்சியார், லட்சுமிநாச்சியார்களின் கணவரானதண்டபாணியிடம் ஒப்படைத்திருந்தார்.
பாம்பனில் இருந்து ராமேஸ்வரத்துக்கு 9 கி.மீ., தூரத்துக்கு சாலை அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தண்டபாணி யாத்திரிகர்களிடம் தலா ஒரு பணம் (தற்போதைய மதிப்பு 96 காசு) கட்டணமாக வசூலித்து வந்தார்.

இமயமலையிலிருந்து நடந்து வந்த பைராகியிடம் (நிர்வாண சாமியார்) பணம் கொடுத்தால்தான் படகில் ஏற்றுவேன் என்று தகராறு செய்தார். இதனால் விரக்தியடைந்தபைராகி, ராமநாதபுரம் அரண்மனைக்கு சென்று அங்கிருந்த மன்னனிடம்" இறைவனை தரிசிக்க விடாத நீயும் ஒரு அரசனா? என தூற்றினார். கட்டணம் வசூல் செய்யும் தகவல் விஜயரகுநாத சேதுபதிக்கு தெரியவர அதை மாறுவேடத்தில் சென்று உறுதி செய்தார்.
தனது இரண்டு மகள்களையும் அழைத்து விஷயத்தை கூறாமல் "அம்மா சிவதுரோகம் செய்தவருக்கு என்ன தண்டனை தரலாம் என கேட்க, அவர்களோ "சிரச்சேதம் (தலைமை துண்டித்தல்) செய்வதுதான் சரியான தண்டனை' என்றனர்.மன்னரோ "மிக வேண்டியவராக இருந்தால்' என்ன செய்வது என கேட்க "யாராக இருந்தாலும் தண்டனை வழங்க வேண்டும்' என மகள்கள் கூறினர்.இதன்பின் மன்னர் விஷயத்தை கூறியதும் பதறிய மகள்கள் ,"தாங்களும் கணவரோடு உடன்கட்டை ஏற அனுமதிக்க வேண்டும்' என கேட்டனர்.
மன்னர் உத்தரவுப்படி மருமகன் தண்டபாணி தலை துண்டிக்கப்பட்டு இரண்டு மகள்களும் உடன்கட்டை ஏறினர். இறுகிய மனதோடு கடமையை நிறைவேற்றிய மன்னர் மருமகன் சேர்த்து வைத்திருந்த சொந்த நிதியிலிருந்து தனது மகள்களின் நினைவாக பாம்பனிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் தங்கச்சிமடம் மற்றும் அக்காள்மடத்தில் யாத்திரிகர்கள் தங்கி செல்லும் வகையில் மடங்களை உருவாக்கினார்.தற்போது சாலை விரிவாக்கம் என்ற பெயரில் அக்காள்மடத்தில் உள்ள மடம் இடிக்கப்பட்டுவிட்டது. தங்கச்சிமடத்தில் உள்ள மடம் மட்டும் சிறிது சிறிதாக அழிந்துவருகிறது. ஊழலே இருக்க கூடாது என நினைத்த மன்னர் வாழ்ந்த பூமியில் தற்போது ஊழலுக்கு பஞ்சமில்லை என்பதுதான் வேதனையான விஷயம்

Relaxplzz


"வரலாற்றுப் பதிவுகள்"

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 21 Apr 2015 09:55 AM PDT

"மேடம்... ஒரு 'ஜாயிண்ட் அக்கவுண்ட்' தொடங்கணும்." அதுக்கு ரெண்டு பேரு வேணுமே " சர...

Posted: 21 Apr 2015 09:50 AM PDT

"மேடம்... ஒரு 'ஜாயிண்ட் அக்கவுண்ட்' தொடங்கணும்."
அதுக்கு ரெண்டு பேரு வேணுமே
" சரி.. ஒண்ணு நீங்க... இன்னொரு ஆள் யாருங்க ...?
*
*
*
*
*
*
*
.
.
.
.
.
.
" உங்க பேங்க்ல பெரிய தொகை வச்சிருக்கிறவங்க யாரோடாவது சேர்த்து விடுங்க..."

:P :P

ஒப்பற்ற கலைஞர் .. ஓடுகிற இந்த உலகத்தில் வண்ணங்களை கண்டு ரசிக்க யாரும் இல்லாததால...

Posted: 21 Apr 2015 09:45 AM PDT

ஒப்பற்ற கலைஞர் ..

ஓடுகிற இந்த உலகத்தில்
வண்ணங்களை கண்டு ரசிக்க
யாரும் இல்லாததால்..
இவரை கண்டுகொள்ளவும் யாரும் இல்லை...


பெண்களே,ஆண்களை நம்பி போட்டோ எடுத்துக் கொள்ளாதீர்கள்! ஆண்களே,நேசித்தவள் துரோகமே...

Posted: 21 Apr 2015 09:40 AM PDT

பெண்களே,ஆண்களை நம்பி போட்டோ எடுத்துக் கொள்ளாதீர்கள்!

ஆண்களே,நேசித்தவள் துரோகமே செய்தாலும் போட்டோக்களை வெளியிடாதீர்கள்!

#வாட்சப் வருத்தங்கள்

- RavikumarMGR @ Relaxplzz

சுண்டல் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 21 Apr 2015 09:35 AM PDT

சுண்டல் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 21 Apr 2015 09:29 AM PDT

:P https://twitter.com/RelaxplzzTamil

Posted: 21 Apr 2015 09:22 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 21 Apr 2015 09:16 AM PDT

ஓரு பெண்ணிடம் நாம் எப்படி பழக வேண்டும்? தன்னில் விழுந்த மழைத்துளியைக் கொண்டு உய...

Posted: 21 Apr 2015 09:10 AM PDT

ஓரு பெண்ணிடம் நாம் எப்படி பழக வேண்டும்?

தன்னில் விழுந்த மழைத்துளியைக் கொண்டு உயிர்களை உருவாக்குபவள் பூமித்தாய். அதேபோல், தன்னில் சேர்ந்த உயிர்த்துளியைக் கொண்டு மனித இனத்தை விருத்தி செய்பவள் பெண்.

அதே பெண்தான் தோழியாய், காதலியாய், மனைவியாய், தாயாய்… என்று பல அவதாரங்கள் எடுக்கிறாள். ஒட்டுமொத்தமாக இவள் பெண் என்ற வட்டத்திற்குள் வந்தாலும், அவளது ஒவ்வொரு நிலையிலும் உயரியச் சிறப்பைப் பெறுகிறாள்.

அப்படிப்பட்ட பெண்ணிடம் நாம் எப்படி பழக வேண்டும்?

பாய் ப்ரண்ட், ஹேர்ள் ப்ரண்ட் என்றெல்லாம் இன்று பரிணாமம் பெற்றிருக்கும் நட்பு ஒரு காயாத பூவாகும். பள்ளிப்பருவத்தில் நம்முடன் படித்தவர், இடையில் காலத்தின் மாற்றத்தால் எங்கோ, எப்படியோ வாழும் சூழ்நிலையில், திடீரென்று ஒரு நாள் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்போது அங்கே கிடைக்கும் ஆனந்த பரவசம் இருக்கிறதே; அதை வர்ணிக்கத்தான் வார்த்தைகள் உடனே கிடைக்குமா?

இதே நட்பில் சுயநலத்துடன் ஒரு வழிப்பாதையில் பயணிக்கும்போது, அந்த பெண் காதலியாகி விடுகிறாள் அவனுக்கு! அந்த ஆண் காதலனாகி விடுகிறான் அவளுக்கு!

"நான் செடியில் பூத்துக் குலுங்கும் ரோஜாவை தேடித்தான் வந்தேன். அந்த ரோஜாவே என்னெதிரே நடந்துவரும்போது, ரோஜாப்பூவை மட்டும் பறிக்கவா? அல்லது அந்த செடிக்கே நான் சொந்தக்காரனாகி விடவா? என்று குழப்பம் வந்துவிட்டது. அதனால் உன் மீது எனக்கு காதலும் வந்துவிட்டது" என்று காதலன் கவிதையாய் உருகும்போது அந்த காதல் இன்னும் கொஞ்சம் ஆழமாக வேர்விட்டு விடுகிறது.

அவர்களது காதலுக்கு அவர்களே ஒரு அங்கீகாரம் கொடுக்கும்போது, அங்கே காதல் ஆலமரமாய், ஆழமாய் வேரூன்றி விடுகிறது. இருவரும் தங்களுக்குள் அங்கீகாரம் கொடுத்தபிறகு அந்த காதல் ரெயில் வேகத்தில் பயணிக்கிறது.

அவர்களது காதல் பயணத்தில் பெற்றோர்கள் சிக்னல்களாக வருகிறார்கள்.

அவர்கள் கிரீன் சிக்னல் கொடுத்தால் அந்த காதல் ரெயில் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும். ரெட் சிக்னல் கிடைத்தால் அவர்களது பயணத்தில் திடீர் பிரேக் விழுந்து விடுகிறது. கிரீன் சிக்னலுக்காக போராடி வேண்டியிருக்கிறது.

பல்வேறு முயற்சிகளுக்கு பின்பு அவர்களுக்கு கிரீன் சிக்னல் கிடைக்கலாம். அல்லது, எவ்வளவுதான் முயன்றும் ரெட் சிக்னலே தொடரலாம். இருந்தாலும், அவர்களுக்குள் காதல் வாழ்கிறது. அது தொடர்ந்து வாழ வழி தேடுகிறார்கள்.

போராட்டம் என்றால் ஒரு முடிவு நிச்சயம் இருக்கும்தானே? அவர்களது காதலுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது; அல்லது, இன்னொரு வாழ்க்கைக்குள் வலுக்கட்டாயமாக தள்ளப்படுகிறார்கள்.
அங்கே வாழ்க்கையின் இன்னொரு அத்தியாயம் தொடங்குகிறது. காதலில் வெற்றிப்பெற்றுவிட்டால் அங்கே காதலனுக்கு காதலி மனைவியாகிறாள். இல்லையென்றால், புதுப்பெண் ஒருத்தி மனைவியாகிறாள்.

இதுபோல்தான் பெண்ணுக்கும்!

திருமணத்திற்கு பின்பு அவளது பொறுப்பு இன்னும் அதிகமாகி விடுகிறது. தாரத்திற்குப் பின்னர் தாய் என்ற நிலையை அடைகிறாள். அதன்பிறகும் அவளது பிறவிப்பயன் இன்னும் நீண்டு கொண்டே போகிறது, அவளது சேவை இந்த மனிதகுலத்திற்கு கண்டிப்பாக தேவை என்பதால்!

எடுக்கும் ஒரு பிறவியிலேயே தோழியாய், காதலியாய், மனைவியாய், தாயாய் திகழும் அந்த பெண்ணிடம் எப்படி பழக வேண்டும்?

முதலில் தோழி…

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். இதேபோல், நல்ல தோழி அமைவதும் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்லலாம்.

ஒன்றும் தெரியாத முட்டாளையும்கூட முதல்வனாக்கிவிடும் பவர் தோழிக்கு உண்டு. அப்படிப்பட்ட தோழியிடம் நாம் எப்படி பழகலாம்?

* நமது சமுதாயச்சூழலில் பெண்ணுக்கு ஆணைப் போன்ற முழு சுதந்திரம் இன்னும் வழங்கப்படவில்லை. தோழியாக பழக வேண்டும் என்றால்கூட ஒரு பெண் சமுதாய கட்டுப்பாடுகளைப் பற்றியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கிறது. வாலிப பிரச்சினை என்று ஒன்று வரும்போது மிகுந்த பாதிப்புக்கு ஆளாகுபவள் பெண்ணே! அதனால், அவளது பெண்மைக்கு இழுக்கு ஏற்படாத வகையில் பழக வேண்டும்.

* நட்பு காதலாக மாறலாம். ஆனால், காதல் நட்பு ஆக மாறுவது பெரும்பாலும் முடியாத செயல்தான். அதனால், தோழியை நீங்கள் காதலிக்கும்பட்சத்தில், அவளும் உங்களை விரும்புகிறாளா என்பதை அறிந்து, அதன்பின் மேற்கொண்டு அதுபற்றி பேசவும்.

* உங்களுக்கும், தோழிக்கும் திருமணம் ஆன நிலையில், தோழியின் கணவர் அனுமதிக்கும்பட்சத்தில் மட்டுமே உங்கள் நட்பை தொடரலாம். அதுவும், ஒரு குடும்ப நண்பராக!

* திருமணத்திற்கு பிறகு, நேரில் பார்த்தால் மட்டும் நட்பை புதுப்பித்துக் கொள்வோம். மற்ற சூழ்நிலைகளில் வேண்டாம் என்று உங்கள் தோழி கூறினால், அதை பெருந்தன்மையோடு ஏற்று செயல்படுத்துங்கள். எங்கள் நட்பை எப்படி கொச்சைப்படுத்தலாம்? என்று கேட்டு, உங்கள் தோழி வாழ்க்கையை பாழாக்கிவிடாதீர்கள்.

* கடைசியாக ஒன்று, உங்கள் தோழியையும் உங்கள் சகோதரிபோல் பாவித்து பழகுங்கள். அப்போது, உங்கள் நட்புக்கு நிச்சயம் களங்கம் வராது என்று சர்டிபிகேட் கொடுக்கலாம்.

அடுத்து காதலி…

இன்று காதலிக்காதவர்களே கிடையாது. ஆணும், பெண்ணும் கண்களால் மோதிக்கொண்டாலே அங்கே யாராவது ஒருவரிடத்தில் காதல் தீ பற்றிக்கொண்டு விடுகிறது.

இன்னொரு மறுக்க முடியாத உண்மை; டைம் பாஸாக வேண்டும் என்பதற்காகவும் சிலர் காதலிக்கிறார்கள். இருவருக்கும் திருமணம் ஆகும்வரை பேசுவோம், பழகுவோம், ஊர் சுற்றுவோம். திருமணம் ஆகிவிட்டால் நீ யாரோ, நான் யாரோ என்று போய்விடுவோம் என்று தங்களுக்குள் அக்ரிமென்டே போட்டுக்கொள்கிறார்கள். சென்னை போன்ற மெட்ரோ சிட்டிகளின் லேட்டஸ்ட் கலாச்சாரம் இந்த வகை காதல்(?!).

உங்கள் காதலி உண்மையான காதலியாக இருந்தால், அவளிடம் எப்படி பழகலாம்?

* அவள் உங்களின் வருங்கால மனைவி என்பது உறுதியாக தெரிந்தால் மாத்திரமே காதலியுங்கள். இல்லையென்றால், பழகியவை எல்லாம் கனவென்று நினைத்து ஒதுங்கிவிடுங்கள். இதில் தப்பே இல்லை. காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, கடைசியில் கழற்றிவிட்டு ஒரு பெண்ணின் சாபத்தை சம்பாதித்துக் கொள்ளாதீர்கள்.

* உங்கள் காதல் சைவக் காதலாக இருக்கட்டும். தவறான எண்ணத்தில் கை வைத்து விடாதீர்கள். நாளை, நீங்கள் கணவன்-மனைவி ஆகும்போது, "ச்ச்ச்சீசீ! அப்படியா நடந்து கொண்டோம்?" என்று அருவெறுப்பாக யோசிக்க வேண்டியது இருக்கும்.

* காதலியுடன் மனம் விட்டு பேசுங்கள். எதிர்காலம் பற்றி திட்டமிடுங்கள். முறையாக, இருவர் வீட்டிலும் காதலுக்கு ஒப்புதல் வாங்கிக்கொள்ளுங்கள். காலாகாலத்தில் திருமணம் செய்துகொள்ளுங்கள்.

* மொத்தத்தில் உங்களுக்காக அவள் என்றும், அவளுக்காகவே நீங்கள் என்றும் எப்போதும் நினைத்திருங்கள்.

அடுத்ததாக மனைவி…

பிறந்த சொந்தங்களை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு நம்மோடு, நமக்காக வாழ வருபவள். அவளை மகாலெட்சுமி என்றே போற்றுங்கள். அதில் தவறே இல்லை.

உங்களில் ஒருத்தி, உங்களுக்காக ஒருத்தியாக இருக்கும் அவளிடம் எப்படி பழகுகிறோம் என்பது முக்கியமல்ல. எல்லா விஷயங்களிலும் எந்த அளவுக்கு அவளை சந்தோஷமாக வைத்திருக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

அதை புரிந்துகொண்டு நீங்கள் செயல்பட்டால் அவள் உங்களுக்கு நல்ல மனைவிதான். நீங்களும் அவளுக்கு நல்ல கணவன்தான்!

- நெல்லை விவேகநந்தா

Relaxplzz

0 comments:

Post a Comment