Monday, 19 January 2015

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


இதை ஷேர் செய்து உங்கள் நண்பர்களுக்கு உதவி செயுங்கள்...! ரேசன்கார்டு(குடும்ப அட்...

Posted: 19 Jan 2015 10:14 AM PST

இதை ஷேர் செய்து உங்கள் நண்பர்களுக்கு உதவி செயுங்கள்...!

ரேசன்கார்டு(குடும்ப அட்டை) விண்ணபித்து
60 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.

விண்ணப்பமனு நிராகரிக்கப்பட்டால்
அதற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்

புகார் தெரிவிக்க:

S.M.S.-9445464748
PHONE-7299008002


பொருளீட்டுவதற்கு அயல்நாடு சென்ற இந்தியர்களின் உள்ளக் குமுறல்: •வெளிநாடு சென்றால...

Posted: 19 Jan 2015 09:47 AM PST

பொருளீட்டுவதற்கு அயல்நாடு சென்ற இந்தியர்களின் உள்ளக் குமுறல்:

•வெளிநாடு சென்றால்தான் ஊரில் உள்ள கடன்களை அடைக்க முடியும்!

•காய்ச்சல் வந்ததென்றால் கஞ்சி கொடுக்க தாயில்லை.
அன்பை பகிர்வதற்கு அருகில் என் தங்கை இல்லை.
அதிகாரம் செலுத்திட அருகாமையில் அப்பா இல்லை.
சோகம் சுமந்தோமென்றால் ஆற்றுவதற்கு ஆளில்லை.
சொல்லொண்ணா துயரில் நாங்களும் அனாதைகள்தான்.
நாடுகடந்து வாழ்வதால் நாங்களும் அகதிகள்தான்..!

•அம்மா அழைக்கிறாள் உன்முகம் பார்த்து நாளாச்சு.. கண்ணுலையே நிக்குற.. வந்து காட்டிட்டு போ உன் முகத்தைன்னு..!


சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்..? தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்ம...

Posted: 18 Jan 2015 05:39 PM PST

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்..?

தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது. விருந்தினர் களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது.

முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம் ஆனால் இப்போது டைனிங் டேபிள் இது சரியா தவறா..?முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன?சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.

சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்துஅமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும். ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும்படி வலியுறுத்தபட்டது…..!

சம்மணம் இட்டு சாப்பிட்டால் கெளரவ குறைவு என்று எண்ணிவிடாதீர்கள். உங்கள் உடல் நலத்திற்கு இதுவும் ஒரு காரணமாகும்..!

சிந்தித்து செயற்பட்டால் நோயில்லாமல் வாழலாம்..!


0 comments:

Post a Comment