Thursday, 18 December 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Posted: 18 Dec 2014 05:53 PM PST


"ஆம்பளை பிள்ளை அப்படி இப்படிதான் இருப்பான்" என்று சொல்வது யாராகினும் அதே நொடியில...

Posted: 18 Dec 2014 09:13 AM PST

"ஆம்பளை பிள்ளை அப்படி இப்படிதான்
இருப்பான்"
என்று சொல்வது யாராகினும்
அதே நொடியில்
நாக்கை இழுத்து வச்சி அறுத்துப்புடணும்.. அப்போ தான்
நாடு உருப்படும்..

பெண்ணை பெத்தவங்க
நிம்மதியா நடமாட
முடியும்..

விவாதத்துக்கு பயந்து பிரதமர் மோடி பாராளுமன்றத்திற்கு வராமல் ஓடுகிறார் - சீத்தாரா...

Posted: 18 Dec 2014 08:48 AM PST

விவாதத்துக்கு பயந்து பிரதமர்
மோடி பாராளுமன்றத்திற்கு வராமல் ஓடுகிறார் -
சீத்தாராம்
யெச்சூரி சாடல்

#பாராளுமன்றத்துக்குள்ள
பத்து ஃபோட்டோகிராபர்
கேமராவோட
நிக்கிறாங்கன்னு
சொன்னா ஆளு தன்னால
உள்ளே வந்துடுவாராச்சே!

@நம்பிக்கை ராஜ்

அழகு தமிழ்நாடு! நாகர்கோவில்!

Posted: 18 Dec 2014 07:35 AM PST

அழகு தமிழ்நாடு! நாகர்கோவில்!


என்னை அசர வைத்த ரஜினி:- ஆந்திராவில் ஹூட் ஹூட் புயல் அடித்து விசாகப்பட்டினமே உரு...

Posted: 18 Dec 2014 07:30 AM PST

என்னை அசர வைத்த ரஜினி:-

ஆந்திராவில் ஹூட் ஹூட் புயல் அடித்து விசாகப்பட்டினமே உருக்குலைந்து போனது. நகரத்தை சீரமைக்க நிவராண பணிகளுக்கு நிதியுதவி நாடெங்கும் திரட்டப்பட்டது. இந்தியாவின் அனைத்து பிரபலங்களும் கொடுத்து உதவினார்கள். ரஜினி எதுவும் உதவ வில்லை.

இது அவரின் தனிப்பட்ட விருப்பமே. அவர் தராமல் போனாலும் தவறில்லை. இத்தனை நாட்கள் கண்டும் காணாமலும் இருந்தவர் இன்றைய லிங்கா திரைப்படத்திற்கு ஆந்திராவில் விளம்பரம் தேட வசூலை தேற்ற புயல் நிவராண நிதி தான் உதவிட முடியாமைக்கு பகிரங்க மன்னிப்பு கோருவதாகவும் விரைவில் அதற்கு நிவராண தொகை அறிவிப்பதாக தெலுங்கில் பாடலை வெளியிடும் போது அறிவிக்கிறார்.

தனது பட வியாபரம் படுத்துவிட கூடாது என்று திடிரென்று கருணையாய் உதவும் அவரின் குணம் என்னை அசர வைக்கிறது.

@வெங்கடேசன் பாலகிருஷ்ணன்

நல்லெண்ண அடிப்படையில் தான் மீத்தேன் திட்டத்தில் கையெழுத்திட்டோம் - கலைஞர் :>- உ...

Posted: 18 Dec 2014 07:29 AM PST

நல்லெண்ண
அடிப்படையில் தான்
மீத்தேன் திட்டத்தில்
கையெழுத்திட்டோம் -
கலைஞர்

:>- உங்க
நல்லெண்ணத்துல
தீய வைக்க...!!

என்னை வியக்க வைத்த ரஜினி:- லிங்கா படம் முதலில் கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தி...

Posted: 18 Dec 2014 06:54 AM PST

என்னை வியக்க வைத்த ரஜினி:-

லிங்கா படம் முதலில் கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் எடுக்க திட்டமிட்டார்கள். மாண்டி வாசிகளுக்கும் தமிழகத்திற்கும் காவேரி பிரச்சனையில் தீராத பகையுண்டு. இங்கிருந்து யார் படம் எடுக்க போனாலும் அடித்து விரட்டுவார்கள். இதற்கு முன்பு பாண்டவர் பூமி படம் எடுக்க போனபோது இயக்குனர் சேரனை மிரட்டி அனுப்பினார்கள். சேரனும் இனி கன்னட மண்ணில் படமே எடுக்க மாட்டேன் என்றும் பேட்டிளித்தார்.

இப்போது லிங்கா படக்குழுவினருக்கும் அதே பிரச்சனை வந்தது. பின்பு நடிகர் அம்பரீஷ் மூலம் பஞ்சாயத்து செய்து சில காட்சிகளை எடுத்து விட்டு கர்நாடகாவின் ஷிமோக மாவட்டத்திற்கு ஷிப்ட் ஆனார்கள். அங்கே எடியூரப்பாவின் ஆசியில் சுபமாய் படப்பிடிப்பு முடிந்தது.

தன்னுடைய படபிடிப்பிற்கு அனுமதித்த கன்னடர்களை குளிர வைப்பதற்கு எனக்கு வாழ்நாளில் பிடித்த நடிகர் ராஜ்குமார்தான். அவரிடம் தவிர வேறு எவரிடம் நான் ஆட்டோகிராப் வாங்கியதே இல்லை என்று ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாள் முன்னர் அறிவித்தார்.

இப்படி தன்னுடைய வியாபாரத்திற்கு யாரை வேண்டுமானாலும் உசத்தி பேசுவார். அவரின் பல பல்டிகளை தமிழ்நாட்டிலே பார்த்து இருக்கலாம்.

என்னை மிகவும் வியக்க வைத்த நடிகர் ரஜினி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

@வெங்கடேசன் பாலகிருஷ்ணன்

பாகிஸ்தான்ல பள்ளிக் குழந்தைகள் சாகடிக்கப்பட்ட விசயத்துல பாகிஸ்தானுக்கு புத்திமதி...

Posted: 18 Dec 2014 04:13 AM PST

பாகிஸ்தான்ல பள்ளிக் குழந்தைகள் சாகடிக்கப்பட்ட விசயத்துல பாகிஸ்தானுக்கு புத்திமதி சொல்றதெல்லாம் இருக்கட்டும் ஆப்பீசர்ஸ்… மொதல்ல நீங்க திருந்துங்க

எக்கச்சக்கமான நைஜீரியாக் காரனுக எங்க ஊருக்குள்ள சுத்திக்கிட்டு இருக்கானுக. கஞ்சா, ஹெராயின் எல்லாம் சர்வசாதாரணமா வித்திக்கிட்டு திரியுறானுக. அவனுக கிட்ட எந்த ஆவணங்களும் இருக்கிற மாதிரி தெரியல.

சுற்றுலா விசாவுல வர்றவனுக எந்த வியாபார நடவடிக்கைகள்லயும் ஈடுபடக் கூடாதுங்கிறது தான் சட்டம். ஆனா அதை எந்த ஆப்பீசரும் கண்டுக்கிறதில்லை. விசா முடிஞ்சு சட்டவிரோதமா இங்க எத்தனை பேர் தங்கியிருக்காங்கங்கிற தகவல்கள் அரசுத் துறைகள் கிட்ட இருக்குமான்னு கேட்டா சந்தேகம் தான்.

மாலைச் சிற்றுண்டிக்கே ஒரு கிலோ மாட்டுக்கறியும், ஒரு டஜன் வாழைப் பழமும் தின்னுட்டு; ஒருத்தனே பத்துப் பேரை அடிக்கிற அளவுக்கு பல்க் பல்க்கா இருக்கிற அந்தக் கூட்டம் வன்முறைல இறங்கினா என்ன நடக்கும்னு நினைச்சாலே பக்குனு இருக்கு…. அதனால மறுபடியும் சொல்றேன்.

பாகிஸ்தான்ல பள்ளிக் குழந்தைகள் சாகடிக்கப்பட்ட விசயத்துல பாகிஸ்தானுக்கு புத்திமதி சொல்றதெல்லாம் இருக்கட்டும் ஆப்பீசர்ஸ்… மொதல்ல நீங்க திருந்துங்க..

@RAju Mariappan


நல்லெண்ண அடிப்படையிலேயே மீத்தேனுக்கு கையெழுத்து இட்டோம் - கருணாநிதி... நல்ல எண்...

Posted: 18 Dec 2014 03:45 AM PST

நல்லெண்ண
அடிப்படையிலேயே மீத்தேனுக்கு கையெழுத்து இட்டோம்
- கருணாநிதி...

நல்ல எண்ணம்
தலைவரே உங்களுக்கு...

Posted: 18 Dec 2014 03:27 AM PST


வேலை விதிகள்: பகுதி- 2 1.மேனஜர் கையில் தொட்டு நீட்டினால் நல்ல தங்கம் கூட தகரம்...

Posted: 18 Dec 2014 01:31 AM PST

வேலை விதிகள்: பகுதி- 2

1.மேனஜர் கையில் தொட்டு நீட்டினால் நல்ல தங்கம் கூட தகரம் தான்.

2.நாம தப்பு பண்ணா இரத்தம். இதே மேனஜர் பண்ணா தக்காளி சட்னி என கொள்க

3.அல்லக்கைகள் ஆதிக்கத்தில் இருக்கும் போது அடக்கிவாசித்தலே நலம்

4.மேலதிகாரியை விட நன்றாக உடை உடுத்தாதே.

5. மேனஜர் சொல்லும் தத்துவங்களும், அறிவுரைகளும் கேட்பதற்கும், சொல்வதற்கு மட்டுமே, பின்பற்றுவதற்கு அல்ல

6.மேனேஜர் எந்த வேலை சொன்னாலும் 80 சதவீதம் நிறைவேத்துனாப் போதும்.கேட்டதுக்கப்புறம் மீதி 20 கொடுக்கலாம்

7.மேனஜர் எல்லாமே முட்டாள்களாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத நியூட்டன் விதி.

8.தோல்வியை கண்டு துவண்டு விடக்கூடாது,தோல்விக்கான காரணத்தை கூட இருக்கிறவன் மேல போட்டுவிட்டுடனும்.!

9.மேனேஜருக்கு ஒரு விஷயத்தை தெளிவாய் புரிய வைக்கும் வரை அலுவலகத்தில் நீங்கள் மடையரே தான்

10.மானம் மரியாதை சூடு சொரணை இவைகளை அலுவலக வளாகத்திற்கு வெளியே வைத்துவிட்டு செல்பவனே புத்திசாலி

11.மேனேஜர் இல்லை என்பதற்காக வேலை பாக்காமல் இருக்க கூடாது!.க்ளைமாக்ஸ்ல பொதுமக்கள் போல வந்து கும்முவாங்க

12.குழுவில் ஒரு வேலையைச் செய்ய எவன் முதல் அடியை எடுத்து வைக்கிறானோ அவனே தனியாய் மொத்த வேலையையும் செய்ய வேண்டும்

13.எவன் நமக்கு அலுவலகத்தில் தலைவலி தர்றானோ, அவன்தான் முதல்ல நம்மைபார்த்து "கூல் கூல்"ங்கறான்

14.டாக்டர்கிட்டயும், வக்கீல்கிட்டயும் பொய் சொல்லக்கூடாது.மேனேஜர்கிட்ட உண்மை சொல்லக்கூடாது.

15.தமிழன் சக தமிழனிடம் ஆபீஸில் English- பேசினால் அது official, தமிழில் பேசினால் அது unofficial.

16.பிடிக்காத மேனஜர்கிட்ட வேலை பாத்தாலும் குட் மார்னிங் சொல்ல வேண்டியது நம்ம கடமை

17.உலகின் 25% சோம்பேறிகள் பேஸ்புக்கிலும் , 25% சோம்பேறிகள் டுவிட்டரிலும் , 50% சோம்பேறிகள் ஆபீசிஸ் மேனஜராகவும் இருக்கின்றனர் ...!

18.மேனஜர் சொல்வது மொக்கை ஜோக்காக இருந்தாலும் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும்

19.மேனேஜர் இல்லாதப்ப ஹாயா வேலை செய்யணும் அப்ரெய்சல் டைம்ல நாயா வேலை செய்யணும்.

இதையெல்லாம் அனுசரித்து வேலை செய்பவர்களுக்கு இந்த நாள் மட்டுமல்ல வருடத்தின் அனைத்து நாட்களும் சிறப்பாக அமையும் .


நாடு முழுவதும் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு விரைவில் மூடுவிழா # உணவுக்கான...

Posted: 18 Dec 2014 12:08 AM PST

நாடு முழுவதும் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு விரைவில் மூடுவிழா

# உணவுக்கான மானியம் ரத்து, காங்கிரஸ் ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட உர மானியம் ரத்தை தொடர்வது,சமையல் எரிவாயு மானியம் ரத்து,நூறு நாள் வேலை வாய்ப்பு உறுதி திட்டம் ரத்து,விதவை மற்றும் ஊனமுற்றோர் உதவி தொகை விரைவில் ரத்து,தற்போது மகளிர் சுய உதவி குழுக்களுக்கான மானியம் ரத்து.
குஜராத்தில் ஆரம்பமான ரத்த சர்க்கார் இந்தியாவில் ரத்து சர்க்காராக விஸ்வரூபம்.

இந்தியா முழுமையாக விற்பனை செய்யப்படும்வரை வியாபாரம் தொடரும்...

@நம்பிக்கை ராஜ்

நேற்று தமிழகமெங்கும் உள்ள பள்ளிகளில் பாகிஸ்தானில் கொல்லப்பட்ட மாணவர்களுக்காக கண்...

Posted: 18 Dec 2014 12:06 AM PST

நேற்று தமிழகமெங்கும் உள்ள பள்ளிகளில் பாகிஸ்தானில் கொல்லப்பட்ட மாணவர்களுக்காக கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது. இந்திய மக்கள் எவ்வாறு இந்த படுகொலைக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர் என்பது உலகிற்கு சொல்லப்பட்டது.

ஆனால் 2009 ஆம் ஆண்டு 1,50,000 உயிர்கள் சிங்கள பேரினவாத அரசால் கொல்லப்பட்ட போது தமிழர்கள் ஒன்று கூடி அழுவதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டது. எந்த பள்ளிகளிலும் மாணவர்கள் அஞ்சலி செலுத்தவில்லை. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விடவில்லை. அதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இனப்படுகொலை செய்யப்பட்ட நாளை நினைவு கூர்வதற்கும் தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டு தான் வருகிறது. தமிழர்கள் எங்கெல்லாம் கூடுகிறார்களோ அங்கெல்லாம் காவல்துறையின் ஒடுக்குமுறையை காணலாம். தமிழர்கள் ஒன்று கூடி அழுதாலும் அது அரசுக்கு எதிரான செயலாகவே இன்று வரை பார்க்கப்படுகிறது.

நாம் எந்த நிகழ்விற்கு கூடி அழ வேண்டும், எந்த நிகழ்விற்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதையும் அரசே தான் முடிவு செய்கிறது என்பது தான் இக்காலத்தின் கொடுமை. மனிதத்தின் வீழ்ச்சி!!


புதுவையில் அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரில்...

Posted: 17 Dec 2014 10:17 PM PST

புதுவையில்
அரவிந்தர் ஆசிரமத்தில்
தங்கியிருந்த ஒரே
குடும்பத்தைச் சேர்ந்த
7 பேரில் கடலில்
குதித்து தற்கொலைக்கு முயன்ற
3 பேர் உயிரிழந்தனர். 4
பேர்
மருத்துவமனையில்
அனுமதி!

0 comments:

Post a Comment