Sunday, 3 August 2014

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


இனிய இரவு வணக்கம்....

Posted: 03 Aug 2014 09:15 AM PDT

இனிய இரவு வணக்கம்....


தங்கம் கடந்து வந்த பாதை........

Posted: 03 Aug 2014 05:30 AM PDT

தங்கம் கடந்து வந்த பாதை........


கோயிலில் உள்ள பலி பீடம் என்பது, உயிர் பலி கொடுக்கப்படும் இடமல்ல. நம் மனதுள் நமக்...

Posted: 03 Aug 2014 05:30 AM PDT

கோயிலில் உள்ள பலி பீடம் என்பது, உயிர் பலி கொடுக்கப்படும் இடமல்ல. நம் மனதுள் நமக்கு
தெரியாது ஒளிந்திருக்கும்.....
காமம்,
ஆசை,
குரோதம் (சினம்),
லோபம் (கடும்பற்று),
மோகம் (கற்பு நெறி பிறழ்வு),
பேராசை,
மதம் (உயர்வு தாழ்வு மனப்பான்மை),
மாச்சர்யம் (வஞ்சம்),
எனும் எட்டு தீய குணங்களையும் பலி கொடுக்க உறுதி செய்துக்கொள்ளுமிடம்.
வெறுமனே வீழ்ந்து வணங்குவதால் நலன் ஒன்றும் வந்துவிடாது. வீழ்ந்து வணங்கும்போது தனது கீழான இயல்புகளெல்லாம் அந்த இடத்திலே பலி கொடுக்க வேண்டும். மனிதனிடத்துள்ள கீழ்மையெல்லாம் அங்கு பலியிட வேண்டும்.மனதின் ஆணவம் பலியிடப்படுகிறது. மேலான எண்ணங்கள் மட்டும் எஞ்சியிருக்க வேண்டும்.

நன்றி : Famous Temples In Tamilnadu


தெரிந்துகொள்வோம் : பணத்தை அச்சடிப்பதற்கு ஆகும் செலவு பற்றி நம்மில் பலருக்குத் த...

Posted: 03 Aug 2014 04:30 AM PDT

தெரிந்துகொள்வோம் :

பணத்தை அச்சடிப்பதற்கு ஆகும் செலவு பற்றி நம்மில் பலருக்குத் தெரியாது. அதுபற்றிய விபரங்களை அறிந்து கொள்வோம்.

* ஐந்து ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா? 47 பைசா

* பத்து ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா? 96 பைசா

* இருபது ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா? 1 ரூபாய் 46 பைசா

* ஐம்பது ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகு்செலவு எவ்வளவு தெரியுமா ? 1 ரூபாய் 81 பைசா

* நூறு ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா? 1 ரூபாய் 79 பைசா

* 500 ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா? 3 ரூபாய் 58 பைசா

* ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா? 4 ரூபாய் 6 பைசா

ஆச்சர்யமான தகவல் என்னவென்றால் 100 ரூபாய் தாளை அச்சிடுவதற்கு ஆகும் செலவிடை 50 ரூபாய் தாள் அச்சிட ஆகும் செலவு அதிகம்..


குல தெய்வ வழிபாடு: குலதெய்வம் வழிபாடு மிக முக்கியமான ஒரு வழிபாடாகும். பலர் தங்க...

Posted: 03 Aug 2014 03:30 AM PDT

குல தெய்வ வழிபாடு:

குலதெய்வம் வழிபாடு மிக முக்கியமான ஒரு வழிபாடாகும். பலர் தங்களுக்கு விருப்பமான தெய்வம் (இஷ்ட தெய்வம்) ஒன்றை தொடர்ந்து வழிபட்டு வருவார்கள். உதாரணமாக திருப்பதி வெங்கடாசலபதி கோவில் போன்ற பிரபல கோவில்களுக்கு மட்டுமே செல்வது பலர் வழக்கம். இவர்களில் சிலர் வேறு கோவில்களுக்கு செல்வதும் கிடையாது.

எது எப்படி இருந்தாலும் குலதெய்வத்தை வழிபடாமல் எத்தனை கோவில்களுக்கு சென்றாலும் பலன் குறைவு தான். மூலவரை வழிபடாமல் அங்கிருக்கும் சுவர் சித்திரங்களை வழிபட்டு வருவது போல் தான் பிற வழிபாடுகள் மட்டும் செய்வது. குலதெய்வம் என்பது வாழையடி வாழையாக தலைமுறை தலைமுறையாக நம் முன்னோர்கள் வழிபட்டு வருவது.

அய்யனார், கடலைமாடன் என்று பல (கிராம) தெய்வங்கள் உண்டு. பல ஊர்களில் அங்கு வலுவான ஒரு காரணத்தால் மரணமடைந்தவரின் பெயரில் கோவில் ஒன்றை எழுப்பி அதை அவ்வூரின் ஒரு சாரார் குலதெய்வமாக ஏற்று வழிபடுகின்றனர்.

(உதாரணமாக ஊரைக் காக்க கள்ளர் அல்லது எதிரிகளுக்கு எதிராக சண்டையிட்டு வீரமரணம் அடைந்தவர்கள் பெரும்பாலான குல தெய்வங்களுக்கு பின் இம்மாதிரி ஒரு நிகழ்வு இருக்கும். சில இடங்களில் அம்மாதிரி இன்றி பெருமாள் போன்றவர்களையும் குலதெய்வமாக வணங்குவதும் உண்டு.

ஆயிரம் பெருமாள் கோவில் இருந்தாலும் அம்மாதிரி குலதெய்வ கோவில்களுக்கு சென்று வணங்குவது முதல் சிறப்பு. சில இடங்களில் அம்மாதிரி இன்றி பெருமாள் போன்றவர்களையும் குலதெய்வமாக வணங்குவதும் உண்டு. பெருங்கோவில்களுக்கும் இவற்றுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்னவென்றால், இம்மாதிரி குலதெய்வ கோவில்கள் குறிப்பிட்ட சில சமூகம் அல்லது குடும்பங்களின் பராமரிப்பில் அவர்களுக்காகவே நிர்மாணிக்கப்பட்டு இயங்கும்.

பங்குனி உத்திரம் போன்ற முக்கிய நாட்களில் மட்டுமே களை கட்டி பொங்கல், கிடா வெட்டு, பலி என்று அமர்க்களப்படும். மற்ற நாட்களில் கேட்பாரின்றி இருக்கும். ஆனாலும் அந்த சாமியை குலதெய்வமாகக் கொண்டவர்கள் எந்த முக்கிய நிகழ்வாக இருந்தாலும் குலதெய்வ கோவில் பூசாரியைத் தேடிப்பிடித்து கோவிலைத் திறந்து வழிபட்டு அதன் பின்னரே அந்த வேலையைத் துவங்குவார்கள்.

அதுவே முறையானதாகும். உங்கள் குலதெய்வத்தை வழிபடாதிருந்தால், உடன் வழிபடத் தொடங்குங்கள். குலதெய்வம் தெரியாதிருந்தால் ஊரில் வயதான பெரியவர்களிடம் கேளுங்கள். சொல்லி விடுவார்கள். உங்க தாத்தா ஒங்கு குலச்சாமி வெட்டேரி கோவிலுக்கு போகாம எந்த காரியத்தை செஞ்சாரு அந்த காலத்துல என்று பெரும்பாலும் பட்டென்று பதில் வந்து விடும்.

தெரியவில்லை என்றாலும், பலரிடம் விசாரித்தால் எப்படியாவது தெரிந்து விடும். இல்லாவிடில் உங்கள் ஜாதகத்தை அல்லது உங்கள் தந்தை ஜாதகத்தை ஜோதிடர் யாரிடமாவது காட்டி கேட்டால் உத்தேசமாக சொல்லி விடுவார்கள். ஐந்தாமிடம் அதன் அதிபதியை வைத்து திசை, குறிகளை சொல்லி விடுவார்கள். அதை வைத்து அடையாளம் கண்டு கொள்ளலாம்.

அந்த தெய்வத்திற்கென்று மாதத்தில் ஒரு நாளும், வருடத்தில் ஒரு நாளும் சிறப்பாக வழிபாடு நடக்கும். குல தெய்வத்திற்கென உள்ள வழிபாட்டு முறை மற்றும் முக்கிய வழிபாட்டு பொருளையும் தெரிந்து கொள்ளுங்கள். அங்கு செல்லும் போது மறக்காமல் அந்த பொருளை வாங்கிச் செல்லுங்கள்.

உதாரணமாக ஒரு சில கோவில்களில் தீபத்திற்கு நல்லெண்ணை, ஏன் சாராயம் கூட இருக்கலாம். தவறாது வாங்கிச் சென்று படையுங்கள். குலத்தைக் காப்பதால் தான் குலக்கடவுள். மற்ற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு பெயர் குலதெய்வத்திற்கு மட்டும் தான் உண்டு. குலம் தழைக்க வேண்டும். முன்னோர் சாந்தி அடையவேண்டும்.

பின்னோர் செழிக்க வேண்டும் என்று நம் முன்னோர்களால் வழிபடப்பட்ட குல தெய்வத்தின் அருள் நம் மீது பட்டால் துன்பங்கள் பறந்திடும். பல பிரச்சினைகளில் சிக்கி உள்ளவர்கள் பரிகாரம் போன்ற முயற்சிகளில் இறங்கும் முன் குலதெய்வத்தை நேரில் சென்று வழிபட்டு அதன் பின்னர் தொடங்கவும்.

கட்டுரை நன்றி : Famous Temples In Tamilnadu

படம் : அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோவில் (அம்மன்புரம் - திருச்செந்தூர்)


பிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..! மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில்...

Posted: 03 Aug 2014 02:45 AM PDT

பிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..!

மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்
த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

நன்றி : Famous Temples In Tamilnadu


இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்...

Posted: 02 Aug 2014 10:36 PM PDT

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்...

0 comments:

Post a Comment