Saturday, 16 August 2014

FB Posts by Araathu அராத்து

FB Posts by Araathu அராத்து

ஒழுங்கான உள்ளாடை போடாதது , பராமரிப்பில் சுணக்கம் போன்ற காரணங்களால் அந்த இடத்தில் அரிக்கும்தான். என்னதான் சுதந்திர நாடு எனினும் எங்காவது மறைவான இடத்தில் போய் அரித்துக்கொள்வதே நாகரீக தொட்டிலில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்குப் பொருத்தமானது. பொது இடங்களில் பலர் பார்க்க , நாசூக்காக சொறிந்து கொள்கிறோம் பேர்விழி என்ற நினைப்பில் சிலர் சுண்டு விரலால் அந்த இடத்தில் விசுக்கென ஜெண்டிலாக சொறிந்து கொள்கின்றனர். இருபாலாரும் இதில் சளைத்தவர்கள் அல்லர். சுண்டு விரலால் நீவி விட்டால் தெரியாதா? ஆள்காட்டி விரலால் நீவினாலும் சுண்டு விரலால் சுரண்டினாலும் ஆபாசம் தான் ! அட்லீஸ்ட் காலை மாத்தி மாத்தி வச்சாவது அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் :-)

Posted: 15 Aug 2014 05:40 AM PDT

தமிழ் சினிமா - தொப்பை - தொப்புள் - கலைக் கழுகுப்பார்வை தமிழ் சினிமாவின் வரலாற்றுப் போக்குகளை(!) ஆழ்ந்து பார்த்தால் ஹீரோயினின் தொப்பையை காட்ட மாட்டார்கள். புடவையை சற்றே மேலே தூக்கி ஜாக்கெட்டோடு பின் போட்டு மறைத்து விடுவார்கள். நவீன கால கட்டத்தில் தொப்புளை மட்டும் மறைத்து 15 செண்டிமீட்டருக்கு தொப்பை காட்ட ஆரம்பித்தார்கள்.அதைப்பார்த்து புளகாங்கிதப்பட்டுகொண்டிருந்தான் தமிழ் சினிமா ரசிகன். அதே சமயத்தில் அதை திரையில் பார்த்து மிரள ஆரம்பித்தனர் ஹீரோயின்கள். நாம் தொப்பையை குறைக்க வேண்டும் , அது தமிழ் கலையுலகத்திற்கு செய்யும் தொண்டு என முடிவுக்கு வந்து உணவுக்கட்டுப்பாடு , யோகா , வொர்க் அவுட் மூலம் தொப்பையைக் குறைத்து , அதை அழகான கலை வடிவமாக ஆக்கினார்கள். அதற்குப் பின் வந்த பின் நவீனத்துவ கால கட்டங்களில் , தமிழ் சினிமாவின் பின் நவீனப் போக்குகளில் ஹீரோயினின் தொப்புளை காட்டுவதில் கலையின் உச்சத்தைத் தொட்டனர் இயக்குனர்கள். இவர்கள் உச்சத்தைத் தொட்டாலும் , இவர்களுக்கு முன்னோடியாக தொப்புளின் ....சாரி ,கலையின் உச்சத்தில் திளைத்துக்கொண்டு இருந்தவர்கள் தெலுங்கு சினிமாக்காரர்கள். தொப்புளுக்கு தனி மேக்கப் மேன் வைத்து ,லைட்டிங்கில் கவனம் செலுத்து , தொப்புள் சினிமாட்டோகிராஃபிக்கு தனி டிப்ளமா கோர்ஸ் வைத்து கலக்கினார்கள். 70 எம் எம் ஸ்க்ரீனில் அனுஷ்கா , த்ரிஷா , தமன்னா , இலியானா தொப்புள்கள் க்ளோஸ் அப்பில் தெரிந்து புரட்சி படைத்தன.ரசிகர்களுக்கு சாமி வந்து விட்டது. அடுத்த கட்டமாக , தொப்புளில் திராட்சைப் பழத்தை போடுவது , தேன் ஊற்றுவது , பாலாபிஷேகம் செய்வது , எறும்பை தூக்கி தொப்புளில் போடுவது என தொப்புள் கலையை மென்மேலும் செதுக்கினார்கள். ஒரு கட்டத்தில் சன்னதம் வந்து சிரஞ்சீவி , பிரபாஸ் ,பாலகிருஷ்ணா போன்றோர் ஆப்பிள் , சாத்துக்கொடி எடுத்து வெறி கொண்டு ஹீரோயின் தொப்புளை குறி பார்த்து அடித்தனர். இந்த போக்கின் உச்சகட்டமாக பலாப்பழத்தை எடுத்து அடிக்கப்போகிறார்கள் என ரசிகர்கள் ஆவலுடனும் , ஹீரோயின்கள் வயிறு கலங்கவும் எதிர்பார்த்துக்காத்துக்கொண்டிருக்க , பி.வாசு ஆம்லெட் போட்டு தமிழன் அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்க் காரண்டா என பறை சாற்றினார். தமிழர்களுக்கு கவுண்ட்டர் கொடுக்க தெலுங்கர்கள் தொப்புளில் ஆந்திரா குண்டூர் சிக்கன் ஃபிரை போடுவார்களோ என ஹீரோயின்கள் மிரண்டு போய் காத்திருக்க , பி.வாசு அடுத்த படத்தில் தொப்புளில் கொத்து பரோட்டா போடுவதாக சீன் வைக்க , படம் டிராப் ஆகி அவர் கலையுலக வாழ்க்கை முடிவுக்கு வந்தது. முதன் முதலில் தொப்புளில் பம்பரம் விட்ட கமலின் சாதனையை விஞ்சி , தொப்புள் பம்பரம் என்றால் விஜயகாந்த் என்று அனைவரும் நினைக்கும் அளவுக்கு செய்து வரலாற்றிர்கு துரோகம் செய்து விட்டவர் விஜயகாந்த். இந்தப் பின்னணியில் யூ ட்யூபில் அஞ்சான் படத்தின் ஏக் தோ தீன் பாடல் காட்சி காணக்கிடைத்தது. அதில் சமந்தா தொப்புளை காட்டிக்கொண்டு குத்தாட்டம் போடுகிறார். தொப்புளுக்கு இவ்வளவு நீண்ட பாரம்பரியம் இருப்பதை ஹீரோயின் ,இயக்குநர் இருவரும் மறந்து விட்டு பழங்காலத்துக்கு திரும்புவது போல இருக்கிறது. ஒரு ரசனை இல்லை , அழகியல் இல்லை , கிரியேட்டிவிட்டி இல்லை, நவீன சிந்தனை இல்லை ,அவ்வளவு ஏன் ? சமந்தா தொப்புளில் ஒரு சமுதாயப் பார்வை கூட இல்லை.பழங்கால காமடி ஹீரோயின் தொப்பையைக் காட்டிக்கொண்டு ஆடுவது போல உள்ளது. தொப்புள் கலாச்சாரத்தை பின்னுக்கு இழுத்துச்செல்ல முயலும் சமந்தாவை கண்டிப்பதோடு இந்த ஆராய்ச்சிக்கட்டுரை முடிவு பெறப்போகும் முன்னால் , இந்த கட்டுரை எழுத உந்து சக்தியாக இருந்த சமந்தா தொப்புளுக்கு நன்றி!

Posted: 15 Aug 2014 02:05 AM PDT

அஞ்சான் அஞ்சான் மரண மொக்கைன்னு ஸ்டேட்டஸ் மழை பொழியிது. தமிழ் சினிமாவின் வியாபாரத்தை காத்தருளுங்கள் என பலரும் மண்டியிட்டு கண்ணீர் மல்க வேண்டிக்கொண்டதால் நான் இன்னும் படம் பார்க்கவில்லை. தெலுங்குல ஹிட்டுன்னு ஸ்டேட்மெண்ட் குடுப்பாங்கன்னு நினைக்கிறேன். அவங்க நோக்கமும் அதுவாகவே இருக்கக்கூடும்.

Posted: 15 Aug 2014 01:36 AM PDT

அஞ்சான் அஞ்சான் மரண மொக்கைன்னு ஸ்டேட்டஸ் மழை பொழியிது. தமிழ் சினிமாவின் வியாபாரத்தை காத்தருளுங்கள் என பலரும் மண்டியிட்டு கண்ணீர் மல்க வேண்டிக்கொண்டதால் நான் இன்னும் படம் பார்க்கவில்லை. தெலுங்குல ஹிட்டுன்னு ஸ்டேட்மெண்ட் குடுப்பாங்கன்னு நினைக்கிறேன். அவங்க நோக்கமும் அதுவாகவே இருக்கக்கூடும்.

0 comments:

Post a Comment